Pages

Saturday, January 16, 2010

சேரனுடன் ஒரு நேர்காணல்..(கற்பனை)

நம்ம நடிகர் கம் டைரக்டர் சேரனுடன் நேர்காணல்..
எதைப்பற்றியா?.. ஹல்லோ சார்.. டமாசு பண்ணாதீங்க.. பேட்டியப் படிங்க..


சார்... வணக்கம்..நான் பட்டாபட்டியில இருந்து பேட்டிக்கா வந்திருக்கேன்...

வணக்கம்.. பேட்டிக்கு முன்னாடி ஏதாவது சாப்பிடறீங்களா.. ஏன்னா நான் பத்திரிக்கை நிருபர்களை   என் கண்களா மதிக்கிறவன்..

இல்ல சார்.. வேளை நேரத்தில எதுவும் சாப்பிடரதுல்லைன்னு பாலிசி வெச்சுருக்கேன்..(ங்க்கொய்யாலே.. விஷம் வெச்சாலும் வெச்சுடுவாங்க...)
சரி சார்.. நேரா கேள்விகளுக்குப் போயிடலாமா?..

அதுக்கு முன்னாடி, "போன பேட்டிக்கு சிவப்பா, அழகா ஒரு பொண்ணு வந்துச்சே.. அது வரவில்லையா...?"

இல்ல சார்.. அது ஒரு தொழிலதிபர பேட்டி கண்டு   "பிக்அப்" -யி போயிடுச்சுங்க...அதனாலே அசினொட கஸின் மாறி ஒரு
சப்ப பிகர்   கிடைத்தாலும் வேலைக்கு சேத்திக்கலாமுனு பாத்துட்டு இருக்கோம்...


அப்படினா சரி.. ஓகே.. உங்க கேள்விகளை கேளுங்க...

சார்.. சமீபத்திலே ராதிகா பிரச்சனையில , அடிக்கனும், குத்தனுமுனு சொன்னீங்களே..ஏன் சார்????

பின்ன என்னங்க.. நாங்க கஷ்டப்பட்டு படம் எடுத்தா, பன்னாடப் பயலுக , படம் வரதுக்கு முன்னாடி   நெட்ல ரிலீஸ் பண்ணீடராங்க..அதுல பாருங்க இன்னும் பின்னணி இசையுங்கூட சேர்க்கலை..   ஆனா படம் வந்திருச்சு.. அப்புறம் நாங்க எப்படிங்க பொழைக்கிறது...

ஏன் சார் பின்னணி இசையில ஏதாவது கமிஷன்.. கிமிஷனு.... கிடைக்கலையா?..

சேரன் கோபமாக... சே.. அந்தப் பொண்ணுனுதான் பேட்டிக்கே சம்மதிச்சேன்............இப்படியெல்லாம்   கேட்டா நான் பேட்டி குடுக்கமாட்டேன்..

சாரி சார்..நான் கேட்கலை.. நீங்க கேட்டிங்களானு தான் கேட்டேன்..

புரியாமல்.. நான் என்ன சொன்னேனா , மாவட்டத்துக்கு 10 தொண்டர்களை வைத்து இதை தடுக்கனுமுனுதான் சொல்கிறேன்..
 
ஏன் சார்.. படத்த பிட்டு பிட்டா ஒவ்வொரு மாவட்டதிலும் உள்ள லேப்-ல வைத்திருந்தீங்களா?..

ஊகூம்.. அடுத்த கேள்வி..


பொக்கிஷம் னு படம் எடுத்தீங்களே..அது தியேட்டரவிட்டு ஓடிடுச்சாமா?... அதைப்பற்றி...

இங்க பாருங்க..ஒரு சாதாரண கடிதம் அப்படினு தாட் வைத்து ஒரு அழகான காவியத்தை வடித்தேன்...  அந்தமாறி ஒரு படத்த எவனாலும் எடுக்கமுடியாது..
( ஆமா..உண்மைதான்..... எவனாலும் எடுக்கமுடியாது)

நான் எடுக்கற படம் ஸ்பில்பெர்க் படத்தோட ஒப்பிடலாம்.. அந்தளவுக்கு ஒரு தரமான படம்..எங்க இந்த தமிழனுகளுக்குப் புரியுது...( ஆமா.. ஈ மெயில் காலத்திலே , கடுதாசிய வெச்சு படம் எடுத்தா விளங்கும்)

சார்.. அந்தப் படத்த நீங்க ஹாலிவுட்-ல ரிலீஸ் பண்ணியிருக்கனும் சார்..

பாத்தீங்களா...உங்களுக்குப் புரியுது..தயாரிப்பாளருக்கு சொன்னா புரியலை..

உடுங்க சார்.. எதுக்கும், அடுத்த படத்திலே "இந்த எழுத்தாணி , ஓலை "அது மாறி யூஸ் பண்ணியெடுங்க சார்...   படம் பின்னியெடுக்கும்...

சேரன் முகம் பிரகாசமாகிறது.....

சார்.. ஒரு பர்சனல் கேள்வி.. நீங்க இந்தத் துறைக்கு வருவதற்க்கு முன்னாடி, ஏதோ கடன் பிரச்சனையினாலே   மாட்டிட்டிங்களாமே? அது உண்மைங்களா?

கடன் வாங்கினது உண்மைதான்.. ஒரு நாள் பெரியவனாகி அதை திருப்பிக்கொடுத்திடலாமுனு இருந்தா,  அதுக்குள்ள கடன் கொடுத்தவாங்க நெருக்க ஆரம்பிச்சுட்டானுக...போங்கடா முடிவு பண்ணி ஊரவிட்டு ஓடிட்டேன்..
எனக்கு அதனாலதான் பைனான்ஸ்காரங்களப் புடிக்காது...

ஆமா சார்.. மடையனுக சார் இவனுக... பணத்தக் கொடுத்துட்டு நொய்..நொய்யினா யாருக்குத்தான் எரிச்சல் வராது..   நீங்க பண்ணுனது சரிதாங்க..

சரிங்க.. எனக்கு ஷுட்டிங்க் டைம் ஆச்சு.. வேற ஏதாவது கேள்விகள் இருக்கா?

கடைசியா ஒரு கேள்விங்க.. நம்ம ராதிகா பிரச்சனைக்கு திரையுலகமே திரண்டு வந்து  கூட்டமெல்லாம் போட்டிங்களே..
சேரன் இடைமறித்து.." நாங்க ஒரு பிரச்சனைனா ஒரே குழுவா சேர்ந்து குரல் எழுப்புவோம் ஏன்னா நாங்க ஒரே குடும்பம் போல"
சார்.. இன்னும் என்னோட கேள்வியை முடிக்கலை..இங்க பக்கத்திலே தமிழனக் கொன்றுகொண்டிருந்தபோது ஏன் சார் உங்க குடும்பமெல்லாம்..........................

 
சேரன் சடாரென மீட்டிங்க முறித்துவிட்டு , ஷூட்டிங்க சென்றுவிட்டார்...

சார்.. அந்த தாடியக் கொஞ்சம் வழிச்சு வீசுங்க சார்.. பார்க்க பர$@#% மாறியே இருக்கு..

அடுத்த வாரம் ராதிகாவுடன் பேட்டி..
நன்றி .. பட்டாபட்டி பிரஸ்

14 comments:

 1. சேரன் பாவம் :-)

  //அடுத்த வாரம் ராதிகாவுடன் பேட்டி.. //

  அடுத்த வாரம் ராதிகாவும் பா...வம் !!
  (வெந்த புண்ணுல வேலை பாச்சரதையே வேலையா வச்சிக்கிட்டு திரியராங்கையா... :- )

  ReplyDelete
 2. //கடைசியா ஒரு கேள்விங்க..///


  Question for everybody not only for cine people. :(

  ReplyDelete
 3. " நாங்க ஒரு பிரச்சனைனா ஒரே குழுவா சேர்ந்து குரல் எழுப்புவோம் ஏன்னா நாங்க ஒரே குடும்பம் போல".....

  "தமிழனக் கொன்றுகொண்டிருந்தபோது "
  ungga kudumbathila ellarum "eelhatthil sandai" engira padatthai jaliya rasitthu paarthagalo.....

  ReplyDelete
 4. //யூர்கன் க்ருகியர் said...//
  வாருங்கள் யூர்கன் க்ருகியர் ....
  எங்க புண்ணு-ல தானே !!!!

  // rams said... //
  உண்மை ரமேஸ்..

  ReplyDelete
 5. யோவ் சேரனுக்கு என்னையா அது
  கருப்பா மூஞ்சியிலே?

  ReplyDelete
 6. யோவ் சேரனுக்கு என்னையா அது
  கருப்பா மூஞ்சியிலே?
  அனேகமா உங்கிட்ட இருந்து
  தப்பிக்கவாயிருக்கும்..
  போட்டுத் தாக்குயா...

  ReplyDelete
 7. அல்லக்கைJanuary 16, 2010 at 9:47 PM

  பார்த்துங்க.. சேரன் அய்யா பழைய ஞாபகத்திலே
  கடுதாசி போட்டுடப்போறாரு...

  ReplyDelete
 8. yov patta patti, nee enga tamil naattula irukkiya? illa kadal kadandhu poi kaari moonjikinu irukkiya? பக்கத்திலே தமிழனக் கொன்றுகொண்டிருந்தபோது cheran matrum palarum unmailiye porattam nadathikondirundhargal.

  ReplyDelete
 9. ஆஹா..
  இந்த ஆட்டத்துக்கு நான் வரலையா..
  காலையில டிபனுக்கும், மதிய உணவுக்கும்
  இடைப்பட்ட காலத்திலேயே உண்ணாவிரதம் இருந்ததையே
  ஏத்துக்கிட்ட மக்களய்யா நாம்..

  உங்க கணக்குப்படி, சேரன் ?????????????

  ReplyDelete
 10. //cheran matrum palarum unmailiye porattam nadathikondirundhargal.//

  Ayya Sethu,
  oru 3 naalu unnaviratham iruntha..odambula ulla thanni ellam vatthi....hospitalla cheranukku vera thanni yetthi iruppanngo...

  //காலையில டிபனுக்கும், மதிய உணவுக்கும்// nalla oru kattu katravangala nangga romba mathikirom samiyoo!!!

  ReplyDelete
 11. //( ஆமா.. ஈ மெயில் காலத்திலே , கடுதாசிய வெச்சு படம் எடுத்தா விளங்கும்)//

  உண்மைய யார் சொன்னாலும் கேட்டுக்கனும்.

  ReplyDelete
 12. //சார்.. இன்னும் என்னோட கேள்வியை முடிக்கலை..இங்க பக்கத்திலே தமிழனக் கொன்றுகொண்டிருந்தபோது ஏன் சார் உங்க குடும்பமெல்லாம்..........................//

  இப்ப ஒப்பேரி வச்சு என்ன பலன்:(

  ReplyDelete
 13. அதான், மொத்த திரை உலகத்தையும் கொண்டு போய் ஆளும்கட்சியின் காலில் போட்டு விட்டீர்களே.. இனி சன்டிவியின் முன் அனுமதி பெறாமல் எந்த தியேட்டரிலும் எவனும் படம் வெளியிட முடியாது. அவன் படம் வெளியிடும்போது மற்ற அனைவரும் வாய்மூடி இருக்க வேண்டும். அவன் எடுத்த படம் என்றால் ப்ரிவியு கூட காட்டாமல் அவன் கூறும் காசைக் கொடுத்து வாங்கிக் கொள்ள வேண்டும்..

  ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!