Pages

Wednesday, January 6, 2010

தலைமைச்செயலகம்.( கோவை )

இடம் : கோவை
காலம் : 2015

நல்ல அதிகாலையில் , கனவு கலைந்ததுபோல் , திடீரென்று விழிப்பு  வந்துவிட்டது.. கை கடிகாரத்தைத் திருப்பிப்பார்த்தால் , காலை 5 மணி...

சே..இவ்வளவு சீக்கிரமாக எழுந்து என்ன செய்வது என அயர்சி...மெதுவாக எழுந்து பால்கனிக்கு வந்து சோம்பல் முறித்தேன்.. பைபர் நெடுஞ்சாலை டோல் கேட்டில், வெளி நாட்டு வாகனங்கள் உள்ளேவர அணிவகுத்து நிற்கின்றன்..
பாவம், தினக்கூலிக்காக நாடுவிட்டு நாடு வந்து வேலை செய்யவேண்டிய நிர்பந்தம்..

முதுகுக்குப்பின்னால் "பாஸ்" என்று அழைக்கும் சத்தம்..திருப்பினால், மண்டியிட்டபடி கையில் காப்பியுடன் ரோபோ.. காபியின் சுவை நாசியில் நெருட ,மெதுவாக எனது இருக்கையில் அம்ர்ந்து மடிக்கணினியய் திறக்கிறேன்.

எனது எண்ணங்கள் பின்னோக்கி செல்லகிறது..


 • வெளி நாட்டினர் கொல்லைப்புறவழியாக வந்து இந்தியாவைப் பிடித்ததும்,
 • சுதந்திரத்துக்காக ஒரு மகான்ன்ன்ன்ன்ன், அகிம்சை என்ற ஆயுத்தை கையிலெடுத்து கெஞ்சியதும்,
 • அவ்ருக்கு ஆதரவு தருகிறோம் என கோட், சூட் போட்ட குடும்பம் களத்திலிறங்கியதும்,
 • நேதாஜியின் எழுச்சியால் வெள்ளையைர் , சுத்ந்திரத்தைக் கொடுத்து ஓடியதும்,
 • மன்னராட்சியை ஒழித்து , நேரு குடும்ப ஆட்சியை கொண்டுவந்ததும்,
 • இந்துவாக இருந்து முஸ்லீமாக மதம்மாறி , மீண்டும் இந்துவாகி , கொள்ளுப்பேரனால் கிறிஸ்டியனாகி மீண்டும் இந்துவாகி, மத நல்லினக்கத்துக்காக பாடுபட்டதும்,
 • செல்வம் கொழித்த நாட்டை, ஏழை நாடாக்க அயராது பாடுபட்ட காங்கிரஸ் குடும்பத்தாரும்,
 • காங்கிரஸின் குடும்ப அரசியிலை பார்த்து ,அதை அப்படியே தமிழகத்தில் அமுல்படுத்திய அரசியல்வாதிகளும், • பாலும் தேனும் ஓடிய தமிழகத்தில் , கூவத்தை மணக்கவைத்த வாழும் வள்ளுவரும்,
 • எல்லாமே இலவசம் எனக்கூறி , மக்களை பிச்சைக்காரராக்கிய வேகமும்,
 • குடி நீருக்காக மா நிலங்களிடையே நடந்த பனிப்போர் மற்றும் மேடை நாடகங்களும்,
 • மக்கள் தங்க இடமில்லாமல் ,சுற்றி சுற்றி நிலங்களை வளைத்த கழகங்களும்,
 • தொலை, தொல்லை நிறுவனங்களை கைப்பிடித்து , மக்களை மழுங்கடித்த சாதுரியமும்,
 • பத்திரிக்கை , திரைப்படத் துறையை தங்கள் ஆளுமைக்கு கீழே கொண்டுவந்த நிர்வாகத்திறமையும்,


 • அடுத்த ஏழு தலைமுறைக்கும் சொத்து சேர்க்க, ஆலாப் பறந்த வருங்கால முதல்வர்களும் மற்றும் நடிகர்களும்,
 • வாரிசுக்கு ஒரு மாவட்டம் என் நிர்ணயித்த அரசியல் சாகாசங்களும்,


 • வாரிசு இல்லாத்தால், " நாம் இருவர், நமக்கெதற்கு மற்றொருவர் " என உலா வந்த உடன்பிறவா சகோதரிகளும்,
 • உடம்பெல்லாம் தங்க நகையணிந்து , கும்பமேளாவிற்க்கு விஜயம்செய்த குத்துவிளக்குகளும்,
 • சுடுகாட்டிலும் ஊழல் செய்யமுடியும் என நிருபித்த செல்வ கணபதிகளும்,


 • தமிழர் என்றால் கழக கண்மணிகள்தான் , மற்றவரெல்லாம் மயிருக்குச் சமம் என நினைத்த அரசியல் காளான் களும்,
 • ஓட்டு அரசியலுக்காக , ஈழத்தமிழருக்கு வடித்த நீலிக் கண்ணீரும்,
 • மக்கள் பணத்தை , மக்களுக்கே "ஓட்டுக்கு இவ்வளவு" என அளித்த வள்ளல்களும்,
 • அதையும் ஆ என்று வாய்பிளந்து வாங்கிய மக்களின் மடத்தனமும்,
 • அந்த மக்களுக்குக்கா கல்யாணமே பண்ணிக்கொள்ளாமல் , உழைக்கத்தாயாராக இருந்த அரிதாரம் பூசிய  அம்மணிகளும்


 • காடு வா..வா. என்றபோதும் , உடன்பிறந்த தம்பிக்காக, உல்லாசம இருந்த திவாரிகளும்,
 • மாட்டிக்கொண்டவுடன் " I am a தேசத் தியாகி , I know காந்தி , நேரு " என்று சொன்ன பிதா மகன் களும், • கடவுளுக்கே கலவி சொல்லிக் கொடுத்த தேவ நாதாரிகளும்,
 • கலையை வளர்க்க , கன்னி மொழி பேசிவந்த காரிகைகளும்,


 • கண்ணகிக்கு அடுத்து , மதுரையில் நீதியை நிலை நாட்ட புறப்பட்ட மதுரை மைந்தன் களும்,
 • பாத்திமா -வை ஒலிம்பிக் ஓட்டப்பந்தய வீராங்கனையாக்கிய சின்ன வள்ளுவரும்,
 • இவர்களைப் பார்த்து அரசியலுக்கு வர முயற்சித்த Dr. S/O சந்துவும் ,
 • நானும் "வாழும் காமராசர்" எனக்கூறி மக்களை முட்டாளாக்கிய ஜான்சிராணியின் வீட்டுக்காரரும்,


 • அப்பப்பா.. சாமி.. போதும்.. கலியுகமடா..... எனப் வீறுகொண்டு புறப்பட்ட "Nano Technology"-யும்


அப்பா.. ஓருவழியா தப்பிச்சாச்சு.....Ok.. Back to நிகழ்காலம்.....மேசைமேல் உள்ள தொலைபேசி கிணிகிணிக்கிறது.. அடுத்த முனையில் ரோபோ    "சார்..உங்களுக்காக வெளி நாட்டு நிருபர்களெல்லாம் கூடியிருக்கின்றனர்"

எனது மடிக்கணினியை மூடிவிட்டு நிருபர்கள் கூட்டத்திற்க்கு செல்கிறேன்..
என்னைப் பார்த்ததுமும் , நிருபர்களிடமிருந்து கேள்விக்கணைகள்  புறப்படுகின்றன..

கே: குறுகிய கால கட்டதில் எப்படி உங்களால் சரித்திரத்தை மாற்றமுடிந்தது ?.
ப: எல்லாப் பெருமைகளும் "Nano Technology"-யே சேரும்..
இதைப் பாருங்க.. இதனுடைய பெயர் "Nano Strap".. எல்லா மக்களுடைய கைகளிலும் "Implant" செய்யப்பட்டுள்ளது..  இது Wireless மூலமா மெயின் கம்யூட்டருடன் கனெக்ட் ஆகியிருக்கிறது..
கலிகாலத்திலே புழக்கத்திலிருந்த கரன்சி.. தங்கம் , நிலஆளுமை எல்லாம் ஒழிச்சாச்சு...
எல்லாமே எல்லாருக்கும் சொந்தம்..  உணவு , உடை , மருத்துவம், கல்வி மற்றும் வீடு, எல்லாமே இலவசமாக அனுபவிக்கிறோம்.


கே: அப்படியென்றால் மக்கள் சோம்பேறியாகத் திரிய வாய்ப்புள்ளதே?
ப:  இல்லை.. நீங்கள் இன்னும் சரியாகப்புரிந்துகொள்ளவில்லை..
மக்கள் வேலை செய்யும் அளவைப் பொறுத்து , "Nano Strap"-ந் மதிப்பு குறையவோ அல்லது கூடவோ செய்யும்.  உதாரணமாக , யாராவது வேலை செய்யாமல் வெட்டியா சுற்றிக்கொண்டிருந்தால் , அன்றைக்கு கிடைக்கவேண்டிய  உணவு பகல்கனவா மாறிவிடும்..


கே: அப்படியென்றால் நன்றாக உழைப்பவர்களுக்கு என்னென்ன சலுகைகள் கிடைக்கும்?.
ப: சரியான கேள்வி..சற்றே திரும்பி சன்னலுக்கு வெளியே பாருங்கள்..சிலர் வான ஊர்த்திகளில் பறந்துகொண்டுள்ளனர் அல்லவா?..  அவர்கள் கடின உழைப்பாளிகள். உழைப்புக்கு தகுந்த பலனை அவர்கள் அனுபவிக்கின்றனர்.. உல்லாசபுரி , தரமான உணவு, தரமான காற்று என அவர்கள் வாழ்க்கை சூழல் தனியானது.....

கே: அதை தட்டிப்பறிக்க முயன்றால்?
ப:  தவறு நண்பரே... அப்படி நினைத்தாலே , உங்கள் உடம்பில் தாள முடியாத வலி உணரப்படும்...எல்லாம் "Nano" வின் சாதனை..

கே: இந்த டெக்னாலஜி யை ஏன் மற்ற நாடுகளுக்கு கொடுக்ககூடாது?.
ப:  தயவு செய்து , கடந்த கால சரித்திரத்தை புரட்டிப்பாருங்கள்..  ஈழத்திலே தமிழர்கள் கொன்றபோது எந்த நாடு உதவிக்கு வந்தது..இப்போது தமிழனின் தலை நிமிர்ந்தவுடன்
வருகின்றனர் கரங்களை கூப்பிக்கொண்டு...


கே: சிங்களவர்களைத் தவிர , மற்ற நாட்டு பிரஜைகளுக்கு இங்கு உள்ளே வரவோ / வேலை செய்யவோ அனுமதி அளிக்கிறீர்களே?..
ஏன் இந்தப் பாகுபாடு?.

ப:  நான் அவர்களை மனிதர்களாக கூட நினைப்பதில்லை..தமிழர்களை கொன்றுகுவித்து, நாடாள நினைத்தார்களே.. இப்போது ஓஸோன் பிரச்சனையில் மாட்டிக்கொண்டு , உயிருக்குப் போராடிக்கொண்டுள்ளனர்..எம் தமிழர்கள் தனி நாடு உருவாக்கிகொண்டு
யாரயும் அண்டவிடாமல் வாழ்க்கையய் அனுபவிக்கிறோம்


கே: அப்படியென்றால் , சில தமிழர்களே தமிழனுக்கு எதிராக களம் இறங்கினார்களே..?
ப: கணனி யுகத்தில் , செய்த பாவங்களுக்கு , அனுபவித்துவிட்டுதான் உயிர் பிரியும்.. இதுவும் மருந்துவ சாதனை.. மேலும் அவர்கள் கணனி யுகத்தில் வாழ்ந்தாலும் , அவர்களுடைய மூளையின் சிந்திக்கும் சக்தி , கடந்த காலத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

கே: அப்படியென்றால் அவர்கள் பாவப்பட்டவர்களா?
ப: ஆம்..

கே: உங்கள் பதில் புரியவில்லை..இரண்டு காலங்களுக்கான இடைவெளி மிக அதிகம்.   அவர்களுடைய நிலை கற்கால மனிதனைப் போலாகிவிடுமே?
ப: இதற்கு நான் பதில் சொல்வதைவிட நீங்களே வாருங்கள்... நேரில் பார்க்கலாம்..

கடைவீதியின் நுழைவாயில்..
சுறுசுறுப்பான வீதியிலே , ஒருவர் சாலையய் துப்புரவு செய்துகொண்டிருக்கிறார்.
அப்போது , கைகளை ஏந்தியபடி உணவுக்காக , உடம்பு மூட தங்க நகைகள் அணிந்து கொண்டு இருவர் அந்த ஊழியரை  அணுகின்றனர்..
 

"தூத்தேறி.. இதுகளுக்கு வேற வேலையே கிடையாது.. எப்பப் பார்த்தாலும் , ரோட்ல கிடைக்கிற குப்பைகளை உடம்புல போட்டுட்டு பிச்சை
எடுப்பதே பொழப்பா போச்சு.. சாவு கிராக்கிக.. போ.. அந்தாண்ட
"


வீதியின் கடைக்கோடியில்......
ஒரு பெரிய பாரவண்டியை ,15 -ம் மேலான உறுப்பினர்கள் கொண்ட குடும்பம், வேர்க்க விறுவிறுக்க தள்ளிக் கொண்டுசெல்கிறது..  மிகவும் களைப்பாகவும் + பசியாகவும் இருப்பதால், ஒரு மரத்தடியில் குடுப்பமே அமர்ந்து இளைப்பாறுகிறது...


ஒரு பெரியவர் மஞ்சத்துண்டை எடுத்து முகம் துடைத்தபடி, அருகிலுள்ள மனிதர்களை அணுகி ,
கரகரத்த குரலில் 

" உடன்பிறப்பே.. 
தள்ளுவண்டியில் உள்ள தங்கத்தை எடுத்திடு..
தவிர்கின்ற வாயிக்கு தண்ணீரை கொடுத்திடு ..
 

பணக்கட்டை எடுத்திடு.. பழங்களை கொடித்திடு.. 
பகலவன் இருக்கும்வரை பாவங்கள் செய்யமாட்டோம்..
மன்னித்து மறந்துவிடு மதியுள்ள கோமானே

என இறைஞ்சுகிறார்..

கூட்டம் அவர்களை ஒரு கேனப்பார்வை பார்த்துவிட்டு, 

"செய்த பாவத்துக்கு , சிறை தண்டனை கிடைக்காது..
சில்லரையாய் சேர்த்திட்ட சீமான் பெருமானே..
கல் உடைக்க தெரிந்திருந்தால் கால் கஞ்சி கிடைத்திருக்கும்..


தங்கத்தை கொண்டுபோய் தலையடியில் வைத்துக்கொள்..
கரண்சியை கொண்டுபோய் காலடியில் வைத்துக்கொள்" 

என எதிர் பாட்டுப்பாடி துரத்துகின்றனர்.நிருபர்களே.. வேறு ஏதாவது கேள்விகள் உள்ளதா?

ஆம்.. மனிதர்களின் சிந்தனைய் மாற்றவேண்டும் என் உங்களுக்கு எப்படி தோன்றியது?.
அரசியல் வாதிகளின் அராஜகத்தை நேரில் அனுபவித்த்வன் நான்..
படிப்பறிவே இல்லாத தற்குறியின் சொல்கேட்டு மக்கள் நடக்கவேண்டுமாம்..
இல்லாவிட்டால் அடிதடி , கொலை வரை செல்வார்களாம்..

அரசியலுக்கு வருவது நாட்டு நலனை கருத்தில் கொண்டா?. இல்லவே இல்லை..
ஆகவே இவர்களை திருத்துவதைவிட , மக்களை மாற்றுவது எளிது...
அவ்ர்களின் செல்-ல் சில மாற்றங்களை செய்து , ப்ணம், தங்கம், இடம் ஆகியவற்றை
மறக்கச்செய்துவிட்டோம்.. மேலும் மக்களுக்கு என்ன அடிப்படை வசதிகள் வேண்டுமோ,
அதை திறம்படச்செய்கிறோம்.. எனவே மக்கள் மனிதர்களாகிவிட்டார்கள்.
வெள்ளை வேட்டிகள் , செல்லா காசுகள் ஆகிவிட்டனர்...உங்கள் " Cell modification technology " எவராவது கையில் கிடைத்து
மனிதர்களை மீண்டும் ஆட்டு மந்தைகளாக்கிவிட்டால்?

மறந்துவிடுங்கள் நண்பர்களே..அதை அழித்துவிட்டோம்.. இந்த யுகத்திலிருந்து , மனிதனை மந்தையாக்க முடியாது..இதற்கு தூண்டுகோல் என யாரை நினைக்கிறீர்கள்..
எங்கள் முன்னாள் ஜனாதிபதி கலாம் அவர்கள்..  அவர்தான் எங்களை கனவு காணச்சொன்னார்.. நாங்கள் ஒரு படி முன்னேறி கனவை நனவாக்கிவிட்டோம்..
.
.
.

4 comments:

 1. Very nice..

  நடந்தால் நல்லாருக்கும்

  ReplyDelete
 2. //குரு said...
  Very nice..
  நடந்தால் நல்லாருக்கும் //

  சீக்கிரம் நடக்கும் குரு...

  ReplyDelete
 3. thala,
  sema soopparu......idhu namakku venum.....namba
  makkal ellarum nalla irukkanum...makkale ippayavathu braina activate pannunggo........
  idhuthan aarambham.......

  ReplyDelete
 4. தினசரி 10 இணையதலங்களை பார்பதான் மூலம் இணையதளத்தில் 5$ சம்பாதிக்கலாம். நன் இந்த இனையதளம் மூலம் 5$ பெற்றேன். அதற்கான ஆதாரம் இந்த தலத்தில் உள்ளது. http://simplygetit.blogspot.com/2009/12/make-money-online-100-orginal-ptc-site.html

  ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!