Pages

Sunday, January 3, 2010

இங்க நான் பேசறேன். அங்க யாரு கேப்டனா ?


ஹல்லோ.. ஹல்லோ .. கேப்டன் இருக்காருங்களா?..
யாரு.. நானுங்களா...சிங்கபூர்ல இருந்து பட்டாபட்டிங்க.....
...
...

...
...
ஆமாங்க.. ஆமா..ப.மு.க தலைவருதாங்க...
நல்லாயிருக்கேனுங்க.. ஏதோ உங்க புண்ணியத்திலே நல்லா "பிக்-அப்" ஆயி போயிட்டுயிருங்க..
...
...

இல்லைங்கண்ணா...வெளியூர்காரனப் பார்த்து ரொம்ம நாளாச்சு..போன டிசம்பர் 31-ல புது வருடத்திற்க்கு,  "எங்க போனா நல்லாயிருக்கும்" னு கேட்டாரு. அதுக்கு பின்னாடி சப்தமே காணம்..
...
...

இல்லைங்க ..உள்ளேயெல்லாம் போகலீங்க.. வெளியதான் இருப்பாங்க.. பேப்பரெல்லாம் பார்த்துட்டேங்க..யாரையும் உள்ளே போடலீங்க...
எதுக்கும் நேராப் போயி போலீஸ் ஸ்டேசன்-ல பார்க்குரேன்..
...
...

நம்ம வசந்த் தம்பிங்களா.. ஆமாங்க கடைசியா பம்பரம் உட்டுட்டு இருந்தாருங்க.. நான் சத்தம்போட்ட பின்னாடி , யாரோ அருக்காணியாமா.. அது
பின்னாடி சுத்திகிட்டுருக்காரு...
...
....

இல்லைங்க சார்.. நல்ல பையனுகதான். என்ன அப்பப்போ எப்படி எடக்குமடக்கா எதாவது பண்ணிப்போடறாங்க..
....
...

நான் பார்த்துக்கிறேங்க...அப்புறம், முக்கியமா நான் கூப்பிட்டதுக்கு காரணம் இருக்குங்க...
போன இடைத்தேர்தலிலே ப்யூஸ் புடிங்கியுட்டுடாங்கலாமா.. கேட்டதும் மனசு கஸ்டமாயிருச்சுங்க...
தப்பா நெனைச்சுகாதீங்க.. தாத்தா அண்டர்வேர்ல இருந்து முந்துன எலெக்சனுக்கு "50 கோடி" கொடுத்தாராம்மா..
அத யூஸ் பண்ணியிருக்கலாமில்ல..
...
...

என்னது?????????.. அக்கா வாங்கி லாக்கர்ல வெச்சுடுச்சா.. போங்க தலைவா.. நீங்க எதுக்கு அக்காகிட்ட சொன்னீங்க...
நம்ம தாத்தா பண்ணினதப் பாருங்க.....
எப்பவும் மனைவி , துணைவி-னு தனித்தனி அக்கவுண்ட் வெச்சுகோங்க.. அவசரத்துக்கு உதவும்...
...
...

சரி உடுங்க தல.. உங்க படத்த பார்த்து வளந்த பயங்க நாங்க...உங்களுக்கு பண்ணாமா வேற யாருக்கு பண்ணப்போறோம்..
...
...

கிண்டலா..இல்ல தல.. மனசத் தொட்டு சொல்றேன்..குண்டு சட்டிக்குள்ளே குதிரை ஓடிட்டுருந்த எங்களுக்கு , உங்க படத்தப் பார்த்த பின் தான் , பக்கத்திலேருக்குற " பாம்பே , டெல்லி , பாகிஸ்தான் " எல்லாம், தமிழில பேசராங்கனு தெரியும்..
...
...


உடுங்க தலை..அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா.. இதுக்குப் போயி தேம்பிக்கிட்டு... நாங்க உங்கள சும்மா உட்டுருவோமா? .
...
...

எதாவது பண்ணனுமா?.. எதுக்கும் எங்க R & D -ய ஒரு வார்த்த கேட்டுக்கிறேன்..ஒரு நிமிசம் லைனில இருங்க..போன கீன கட் பண்ணிடாதீங்க...
...
...

ஓகே தல.. உங்க பிரச்சனை சால்வு... நம்ம R & D என்ன சொல்றாங்கன,     " முள்ல முள்ளாத்தான் எடுக்கனுமாம்"..
...
...

லுள்ளூ இல்ல.. முள்ளு.. முள்ளு................
...
...

ஆமா.. அக்காகிட்ட இருந்து பணத்த வாங்கனுமுனா ஒரே வழி... புதுசா
அந்த 50 கோடிய வெச்சு , நாமளே படம் எடுக்கனும்..
....
...

என்னது,, " உங்கள வெச்சு படம் எடுக்க நானென்ன கேனக்கிறுக்கியா?" சொல்லுதா அக்கா...
இதெல்லாம் நமக்கு ஜூஜுபி மேட்டரு..
உங்கள வெச்சு எவன் படம் எடுக்கிறான்.. நம்ம  " மச்சான் சதீஸ் " வெச்சுல்ல இங்கிலீஸ் படம் பண்றோம்..
...
...

பாத்தீங்ககில்லே.. அக்கா மூஞ்சியில சிரிப்ப.. எங்க R & D -ய சும்மா சொல்லகூடாது.. கத்திமாறி வேலை செய்வாங்க...
எங்க முள்ளைப் போட்டா எங்க மீன் மாட்டுமுனு தெரிங்கவங்க...
...
...

ஹீரோயினியா.. அதுக்கு நம்ம போலீஸ் ஜெயலட்சுமி-ய போட்டுக்கலாம்...அதுவும் கொஞ்ச நாளா சும்மாத்தான் சுத்திகிட்டிருக்கு..
...
..

சே சே.. அது காசெல்லாம் வாங்காது.. பப்ளிசிட்டி கெடச்சா போதும்.
...
...

மச்சானுக்கும் உங்களுக்கும் இங்கிலீஸ் தெரியாதா?.. நீங்க எதுக்கும் நாளைக்கு நம்ம அஞ்சா நெஞ்சனப்பாருங்க.. அவரு
அமைச்சரானதும் , ஆங்கிலம் படிக்க ஆரம்பிச்சுட்டார்..எந்த டுட்டோரியில கேட்டுகிட்டு , அதுல போயி படிங்க..
...
...

படம் ஊத்திகிச்சுனா என்ன பண்றதா?... தலைவா.... இந்த பட்டாபட்டி ஒரு விசயத்த ஆரம்பிச்சா பின்வாங்க மாட்டான். ஆங்...
அதுக்கும் ஒரு ப்ளான் இருக்குது..
அப்படி எதாவது நடந்துருச்சுனா, பேசாம உங்க கட்சிக்கு ஷட்டரப் போட்டுட்டு, மதுரையில நம்ம ரைஸ் மில்லு ஓட்ட போயிடலாம்..
...
...

என்ன தலைவா இதுக்கு போயி பீல் பண்ணிகிட்டிடு?..ஒரு ரூபா அரிசி கொடுக்கறதாலே எவனும் வேலைக்கு வரமாட்டானா?..
....
...

தல.. திருப்பி திருப்பி சொல்றேன்.. உங்க படத்த பாத்து வளந்த பயபுள்ளைக நாங்க.எவ்வளவோ பண்ணீட்டோம்..இதைப்
பண்ணமாட்டமா?

.எலெக்சனுக்கு எலெக்சன் கறியும் சோறும் போட்டு , வெள்ள வேட்டி வெள்ள சட்டை எடுத்து கொடுத்தா, உங்க காலடியிலே கெடப்போம்...
...
உங்களுக்கு அம்மா லைன்ல ( Line ) வராங்களா..

அவசரமா?..
போனை வைக்கறதுக்கு முன்னாடி ஒரு முக்கியமான மேட்டர சொல்லிறேன்..
நீங்க அம்மாகூட எந்த கருமாந்திர கூட்டணியோ என்னமோ, வெச்சுக்கோங்க..
ஆனா, படத்துல்ல அம்மா சான்ஸ் கேட்டாவெல்லாம் குடுக்கமுடியாது..அத கண்டிசனா சொல்லிப்போடுங்க..
சரிங்க போனை வெச்சுடறேன்..
.
.
.
பார்த்தீங்களா..எங்க தல இங்கிலீசு பேசறத..

All supportu.. massaan sathisus.. goodu nightu...
.
.
.
.
 15 comments:

 1. அடுத்த போனு யாருக்கு தல..?

  ReplyDelete
 2. ஆமா போன் வொர்க் ஆகுமுள்ள... என்னது அரசியல்ல இதெல்லாம் சர்வ சாதாரணமா?...

  ReplyDelete
 3. //அள்ளி விட்டான் said... தூள் பறக்குது..//

  போனைப் கீழ வெச்சவுடன் அள்ளிவிட்டான் கமென்ஸ் போட்டுட்டாரு..
  ஒரு வேளை ஒட்டுக்கேக்கறாறோ?..
  சும்மா டமாசு..
  நன்றி.. அள்ளிவிட்டான்

  ReplyDelete
 4. // said...

  ha ha ha .... //

  நன்றி.அண்ணாமலையான்

  ReplyDelete
 5. // manithan said...

  அடுத்த போனு யாருக்கு தல..? //

  நன்றி.மனிதன்..இன்னும் பேரு வைக்கில்லையா,,?

  ReplyDelete
 6. //அண்ணாமலையான் said...

  ha ha ha .... //

  வாத்தியாரய்யா..
  நல்லா இருக்கீங்களா?..
  படிக்கற பயபுள்ளைகளுக்கு நம்மளப்பத்தி
  "நல்லவரு , வல்லவரு" னு சொல்லிக்கொடுங்க..

  ReplyDelete
 7. அல்லக்கைJanuary 4, 2010 at 8:19 AM

  எங்கண்ணன் "Good morning" ,"Good afternoon" எல்லாம் முடிச்சு , "Good night"
  "Switch off the light.. Save the power" வரைக்கும் போயிட்டாரு.. உங்க கேப்டனால் , எங்க அண்ணனைப் புடிக்க முடியாது வோய்...

  ReplyDelete
 8. பட்டபட்டியாரே....வணக்கம் சாமி...யாருயா அது விஜயகாந்த்....(நாங்களே அவன ஒழிக்க போராடிகிற்றுக்கோம்...நீங்க வேற ஏன் ஒய் அவன பெரிய ஆள் ஆக்கி விடறீங்க...)....ஆனா,நக்கல் நல்லா இருந்துசுங்கானும்... :)

  ReplyDelete
 9. அப்பு..இருக்கீங்களா..?
  சரி.. ரைஸ் - மில்லு வேலைய நான் ரிசைன் பண்ணீடறேன்...

  ReplyDelete
 10. gud. continue

  regards
  ram

  www.hayyram.blogspot.com

  ReplyDelete
 11. இங்க நான் பேசறேன். அங்க யாரு கேப்டனா ?????????
  பார்த்து பேசுங்க. யார்கிட்டயாவது வாங்கி கட்டிக்க போறிங்க

  ReplyDelete
 12. // hayyram said...//
  நன்றி ஹேராம்..

  //தியாவின் பேனா said... //
  நன்றி தியாவின் பேனா....

  //tamiluthayam said... //
  இதெல்லாம் சுஜூபி மேட்டர்...பூனைக்கு யார் மணி கட்டுவது நண்பரே?>

  ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!