Pages

Saturday, January 23, 2010

அட.. நாதாரிப் பயபுள்ளைகளா !!!!....


அண்ணா  .. வணக்கம்...
நான் கடந்த 5 வருடங்களாக சிங்கையிலே பணிபுரிகிறேன்..
எனது வீட்டிலிருந்து ,  வேலை இடத்துக்கும், தினமும்  M.R.T-யில் ( Mass Rapid Train ) செல்ல வேண்டியுள்ளது.. உங்களுக்கே தெரியும் , அது முழுக்க மூடிய குளிர் சாதனப்  பெட்டியென்று.. மேலும்   காலை வேளை , எங்கும் நகரமுடியாத அளவு கூட்ட நெரிசல் வேறு..

பிரச்சனை என்னவென்றால் , கூட்ட நெரிசலில் யாராவது "Gas Chamber" -ய் திறந்துவிட்டால்,  ( தமிழில் சரியான சொல் தெரியவில்லை.. மன்னிக்கவும் ) கூடியுள்ள சீன/மலாய்  குடிமகன்கள் , ஒரு கையால் அவர்களுடைய மூக்கை மூடிக்கொண்டு அருகில் உள்ள எங்களை  கேவலமாகப் பார்க்கின்றனர்..

ஏன் ?... அவர்களிடமிருந்து கேஸ் ரிலீஸ் ஆகாதா? ..
ஏமாளி இந்தியன் என்பதால் , அவர்கள் விட்ட பாவத்திற்க்கு நாங்கள் பொறுப்பேற்க வேண்டுமா?

உடனடியாக இந்தப் பிரச்சனைக்கு  உங்கள் ஆலோசனை  வேண்டியுள்ளது.  தவறாக நினைத்துக்கொள்ளாதீர்கள்..
 

- சிங்கை வாழ் தமிழர்கள்..( சிங்கை )


பதில்   : 

ஆகா.. அண்ணாயென்று சொல்லி என் நெஞ்சைத் தொட்டுவிட்டீர்கள்..



 உங்கள் கேள்வியை தவறாக நினைத்துக்கொள்ள  நான் என்ன தாத்தாவா ?...


உள்ளூர் பிரச்சனைகளுக்கு ஆலோசனை கூறிவந்த
என்னை வெளி நாட்டுப் பிரச்சனைக்காக அழைத்ததிற்க்கு நன்றி...

தமிழ் மொழியில் எப்படி குறிப்பிடுவதென தெரியவில்லை எனக் கூறியுள்ளீர்..இந்த ப்ளாக்கை ஆண்/பெண்   இருபாலரும் படிப்பதால்,  நேரடியாக அந்த சொல்லைக் குறிப்பிடமுடியாது..
ஆனால் உங்களுக்காக..... நாசுக்கா கூறுகிறேன்... புரிந்துகொள்ளுங்கள்..


அது இரண்டெழுத்து வார்த்தை...அந்த  சொல்லின் முதல் எழுத்து "கு"  -வில்  தொடங்கி ,  கடைசியில்    "சு" -ல் முடியும்..


ஓ.கே.... உங்கள் பிரச்சனைக்கு வருவோம்...அங்கு நம்மூர் ரயில்போல  , "Open Window System "  கொண்டுவரமுடியாது.. அதனாலே ,  இதை வேறவிதமாகத்தான் அணுகவேண்டும்.. பண்ணாத பாவத்திற்க்கு  பொறுப்பேற்று,   நடைபிணமாக அலைகின்றீர்கள்...பாவம்தான் நீங்கள்....


அப்பூ...  பணத்தை ,   காரமடையில தொலைத்துவிட்டு,   காந்திபுரத்திலே தேடுவீங்களா? .. முடியாதுதானே...
அதுபோல  " முள்ளை முள்ளால் தான் எடுக்கமுடியும் "..
" பிரச்சனைக்கு , பிரச்சனைதான் தீர்வு  "....புரியவில்லையா?

சரி..நாளையிலிருந்து இரண்டு அல்லது மூன்று நாளைக்கு ஒருமுறை காலை கடனைக் கழிக்கவும்..  (1 வாரமென்றால் கூடுதல் பலன்.... முதலில் கொஞ்சம் கஷ்டமாயிருக்கும்.. பின்னால் பழகிவிடும் )
முடிந்தால் நம்ம பயபுள்ளைகளை ஒரே பெட்டியில் ஏறச்சொல்லி , குறிப்பிட்ட நேரத்தில்  அனைவரும்
ன்றாக ரிலீஸ் செய்யவும்..

 
ங்கொய்யாலே.. எல்லாப் பயலுகளும் , மூக்கப் பொத்திட்டு சாகட்டும்..

 
இந்தப் ப்ளான் மட்டும் சக்ஸஸ் ஆயிடுச்சுனா ,
1. உங்களை எந்த நாயும் கேவலமா பார்க்கமாட்டார்கள்  ( பயப்படுவானுக அப்பு..)
2. கூட்ட நெரிசல் இருக்கவே இருக்காது..சத்தியம்..( ப்ரீ- யா Travel பண்ணலாங்க.. )

..
இந்த உதவி பண்ணின எனக்கு ஏதாவது பண்ணனுமுனு உங்க மனசு துடிப்பது எனக்கு புரிகிறது..
சரி..சரி..பாசக்கார பயபுள்ளைகளா....
நம்ம ப்ளாக்குக்கு வர சில பயபுள்ளைக , படிச்சுட்டு பின்னூட்டம் போடாம போயிருராங்க..    சனி , ஞாயிறு லீவு நாள்ல  ,உங்க படையக் கூட்டிட்டு போயி  ,அவிங்களுக்கு புகையடிச்சுட்டு  போயிடுங்க..



- அன்புடன் பட்டாபட்டி
.
.
.

17 comments:

  1. இந்த கேள்வி கேட்கிறாரே அவர் உண்மையாகவே சொல்கிறாரா? உண்மை என்றால் இந்த பதில் உண்மையாக கடைபிடிக்கவேண்டிய ஒன்று. அப்புறம் பின்னூட்டமிடாமல் போவோருக்கு கொஞ்சம் கருணை மனுவை பரிசீலிக்கவும்.

    ReplyDelete
  2. வெட்டி வேந்தன், அமைப்பாளர்,அகில உலக பட்டாப்பட்டி பேரவைJanuary 23, 2010 at 1:43 PM

    ஐ நா வுக்கே ஆலோசனை சொல்லும் தலைவர் பட்டாப்பட்டி வாழ்க ....
    வெட்டி வேந்தன்
    அமைப்பாளர்
    அகில உலக பட்டாப்பட்டி பேரவை ( மகளிர் அணி மெயின்டென் பண்ணும் பொறுப்பும் இனைத்து)
    எங்கும் கிளைகள் இல்லாததால் , எல்லா ஊருக்கும் ஆட்கள் தேவை
    கொள்கை விரைவில் அறிவிக்கப்படும் .
    முதல் நோக்கம்
    - ஒருத்தவன் கோமனதிலும் ஒரு ரூபா இருக்க கூடாது .( இப்போது உள்ளவர்களை காப்பி அடித்தது இல்லை )

    ReplyDelete
  3. //அரைகிறுக்கன் said...
    அப்புறம் பின்னூட்டமிடாமல் போவோருக்கு கொஞ்சம் கருணை மனுவை பரிசீலிக்கவும்.//
    இது உண்மைதான்..
    .
    .

    முதன்முதலில் பின்னூட்டம் இட்டதனால் ,உங்களுக்கு புகையடிக்கமாட்டோம்
    என உறுதியளிக்கிறேன்...

    ReplyDelete
  4. //வெட்டி வேந்தன், அமைப்பாளர்,அகில உலக பட்டாப்பட்டி பேரவை said... //

    வாங்கப்பு....
    மகளிர் அணி தவிர எதைவேண்டுமானாலும் கேளுங்கள்..ஏன்னா
    அதுமட்டும் தலைவர்( அட நாந்தாங்க...) மேற்பார்வையில் செயல்படும்..

    ReplyDelete
  5. அட சாமிகளா...இப்படியா சிரிக்க வைப்பிங்க,இத படிச்சு தனியா சிரிச்சு என்ன ஒரு 'மாதிரி' மத்தவங்க பார்க்கவச்சிட்டீகளே,,
    (நம்மள வந்து பார்த்ததுக்கு நன்றி தல)

    ReplyDelete
  6. //இளமுருகன் said...
    அட சாமிகளா...இப்படியா சிரிக்க வைப்பிங்க,இத படிச்சு தனியா சிரிச்சு என்ன ஒரு 'மாதிரி' மத்தவங்க பார்க்கவச்சிட்டீகளே//

    மத்திய அரசே குழம்பிப்போயிருக்கிறது ....
    என்னாது.. உங்களுக்கும் குழப்பமாயிருக்குதுங்களா?
    .
    .
    அடுத்த பதிவப் போட்டுட்டு , உங்களுக்கு "மறு கமெண்ஸ்" போட்டதால,
    எனக்கு கொஞ்சம் குழம்பிருச்சு..

    வருகைக்கு நன்றி இளமுருகன்..
    ( அடிக்கடி வாங்க..)

    ReplyDelete
  7. இவ்ளோ சொன்னீங்களே..அப்படியே மேட்டர் முடிச்சதும் நம்மாளுங்களையும் மூக்க பொத்திகிட்டு அவனுங்கள கேவலமா பாக்க சொல்லுங்க..

    மொச்ச கொட்டய வெறும் வயித்துல கண்டிப்பா சாப்ட்டுட்டுதான் ரெயில் ஏறோனும்..ஆங்.

    ReplyDelete
  8. //பலா பட்டறை said...
    இவ்ளோ சொன்னீங்களே..அப்படியே மேட்டர் முடிச்சதும் நம்மாளுங்களையும் மூக்க பொத்திகிட்டு அவனுங்கள கேவலமா பாக்க சொல்லுங்க..

    மொச்ச கொட்டய வெறும் வயித்துல கண்டிப்பா சாப்ட்டுட்டுதான் ரெயில் ஏறோனும்..ஆங். //


    பாலா பட்டறை சார்..உங்க கமெண்ட்
    படித்ததும் எனக்கே சிரிப்பு வந்துவிட்டது...

    ஆனாலும் நீரு ரொம்ப நக்கல் புடுச்ச ஆளூதாங்க..

    ReplyDelete
  9. அய்யா, M.R.T-ணா Mass Rapid Train இல்லைங்க, Mass Rapid Transit. அப்புடித்தாணே?

    ReplyDelete
  10. //Swaminathan said...
    அய்யா, M.R.T-ணா Mass Rapid Train இல்லைங்க, Mass Rapid Transit. அப்புடித்தாணே?//

    ஆகா.. Train-னொ ....இல்ல... Transit- ஒ..

    ஆனா கண்டிப்பா நாறுங்கோ...

    ReplyDelete
  11. உங்கள் கமெண்ட்ஸ்க்கு நன்றி.நான் இப்போதுதான் ஆரம்பிக்கிறேன்.உங்கள் ஆலோசனைகளை தொடர்ந்து கூறி அரவணைத்து கொள்ளுங்கள்.
    மிக்க நன்றி

    ReplyDelete
  12. இதுக்கு என்ன சொல்றதுன்னே தெரியல... சரி உடுங்க நாறித் தொலையட்டும் பய புள்ளைக..
    உங்க ப்ளாக் ரைட் கார்னர்'ல இருக்குரவூர் நெலமைல தான் நானும்.. அப்புறம் என் ப்ளாக்'க்கு லிங்க் கொடுத்தமைக்கு நன்றிகள்...

    ReplyDelete
  13. ஆ.. அப்புறம் லாஸ்ட் டைம் நான் துப்புனது உங்க மூஞ்சியில படலையே...? மாட்ரிக்ஸ் படத்துல வர்ற மாறி தப்பிச்சிட்டீங்க தானே?

    ReplyDelete
  14. //பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...
    ஆ.. அப்புறம் லாஸ்ட் டைம் நான் துப்புனது உங்க மூஞ்சியில படலையே...? மாட்ரிக்ஸ் படத்துல வர்ற மாறி தப்பிச்சிட்டீங்க தானே?//

    நாங்கெல்லாம் "சன்-னுக்கே டார்ஸ் அடிக்கறவங்க"..
    நீங்க பாட்டுக்கு துப்பிட்டு போயிட்டேயிருக்க,, மீதியெல்லாம் நாங்க பாத்துக்குறோம் அப்பு...

    ReplyDelete
  15. நாங்கெல்லாம் "சன்-னுக்கே டார்ஸ் அடிக்கறவங்க"..
    நீங்க பாட்டுக்கு துப்பிட்டு போயிட்டேயிருக்க,, மீதியெல்லாம் நாங்க பாத்துக்குறோம் அப்பு...

    மக்கா.. உங்களுக்கு ஒரு வேண்டுகோள்..
    தயவு செய்தி நம்ம பயபுள்ள "பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி" எழுதுதற ப்ளாக்-கை படிங்க.. நாம தான் வீணாப்போயிட்டோம்..
    அடுத்த ஜெனரேசனாவது நல்லாயிருக்கட்டும்.
    link :
    http://saamakodangi.blogspot.com/2010/01/3.html

    ReplyDelete
  16. //அப்பூ... பணத்தை , காரமடையில தொலைத்துவிட்டு, காந்திபுரத்திலே தேடுவீங்களா? .. முடியாதுதானே...//
    அண்ணா... எங்க ஊரு காரமடை பக்கத்துல மேட்டுப்பாளையம். தினமும் காந்திபுரத்தில் இருந்து காரமடை வழியா தான் வீட்டுக்கு வரேன்.. காரமடை'ல தொலைச்ச அப்புறம் அங்க தேடனாலே கெடைக்காது.. இது எப்படி...

    ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!