Pages

Friday, January 22, 2010

மேடம் ஜெயலலிதா .. போர் பிரகடனம்...



செல்வி: ஜெ.ஜெயலிலதா  வெளியிட்டுள்ள அறிக்கையில்.....
நான் வணக்கம் தெரிவித்தால், கருணாநிதிக்கு அஞ்சி பதில் வணக்கம் தெரிவிக்கக்கூட பேரவைத் தலைவர் மறுக்கிறார் என்று 13.1.2010 அன்று ஓர் அறிக்கை வெளியிட்டு இருந்தேன். எனது அறிக்கைக்கு பதில் அளிக்கும் வகையில்,  கருணாநிதி ஒரு வண்ணப் புகைப்படத்தை வெளியிட வைத்துள்ளார்.

வண்ண புகைப்படத்தில் நான் அணிந்திருக்கும் புடவையின் நிறம் கருஞ் சிவப்பு.   ஆனால், 11.1.2010 அன்று நான் சட்டமன்றப் பேரவையில் விவாதத்தில் கலந்து கொள்ளும் போது கருநீல நிறம் கொண்ட புடவை அணிந்திருந்தேன்.  இதிலிருந்து கருணாநிதியின் மிகப் பெரிய மோசடி வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது.

இது போன்ற மலிவான மோசடிக்கு கருணாநிதி வெட்கித் தலைகுனிய வேண்டும்.  இது போன்ற அற்ப விஷயங்களில் கூட மோசடி செய்து பொய் சொல்லும் முதலமைச்சர் நமக்கு  வாய்த்திருக்கிறாரே என்று நினைத்து தமிழக மக்கள் வெட்கப்படுகிறார்கள்....

 .
 .
 .


மேடம்.. நேற்று பத்திரிக்கையில் உங்க மேட்டரப் பாத்ததுமே  என் உச்சி மண்டையிலே சுர்ன்னுச்சு..

அது எப்படிங்க..  நீங்க வணக்கம் சொல்லியும் , சலாம் போடாம இருந்த
சபாநாயகரை  சும்மா விடலாம்...இதுல சால்சாப்பு வேற.....
"வெந்த புண்ணுல வேலப் பாய்ச்சுற மாறி............... படத்தவேற போடராங்கோ..."

தாத்தாவ விட உங்களுக்கு வயசு கம்மியாச்சே..........ஆனா அவரு  "கன்" -னு மாறி இன்னும்  வேலை செய்யறாரு.. நீங்கமட்டும்  அடிக்கடி ஓய்வெடுக்கப் போயிடரறீங்களே..என்ன விசயம்?-னு  இந்த மரமண்டைக்கு புரியாம இருந்துச்சு...

அப்புறம் உக்காந்து யோசிச்சுப் பார்த்தா.......  நல்லாப்புரிஞ்சிடுச்சுங்கோ...

 தாத்தாவுக்கு  கதை எழுதி , கதை எழுதி  கை மட்டும் தான் வலிக்கும்..கை அமுக்க துணை(கள்)யிருக்கு..  பாவம் ... உங்களுக்கு யார் இருக்கா...  

ஆனா , அதுக்கெல்லாம் அசராம   திருப்பு உட்டீங்க பாருங்க பாயிண்டை.........
அதுலயே  தாத்தா ஆடியிருப்பாருங்க...( ஏன் நாங்களும் தான் )

  • நான் அன்னைக்கு கட்டிட்டு இருந்தது கருநீல நிறம் ..
  • போட்டோவில இருப்பது  கருஞ் சிவப்பு. 
  • கருநீல நிறம் கட்டுன தேதி  இது இது..
  • கருஞ் சிவப்பு கட்டுனது  தேதி  அது..அது...
  • இந்த பத்திரிக்கையில என்னோட போட்டோ வந்த தேதி இது..
  • அந்த பத்திரிக்கையில என்னோட போட்டோ வந்த தேதி அது..

இந்தமாறி  புள்ளிவிபரம் கொடுக்க.......... ங்கொய்யாலே... உலகத்திலேயே எனக்கு தெரிஞ்சு இரண்டே பேருதான்  இருக்கீங்க..

ஒண்ணு  - " நீங்க.."
இரண்டாவது  " கேப்டனு.  ". ( யாருன்னு .. தெரியாதா?......   அதுதாங்க நம்ம சதீஸ் -ங்க மாமன் )

ஏம்மா தாயே.. இவ்வளவு புள்ளிவிவரங்களை வைத்திருக்கனுமுனா..? எவ்வளவு வேலை செய்யனும்..  அது புரியாம , என்னமோ நீங்க சசி அக்காகூட அடிக்கடி கொட நாடு போயிடிறீங்கன்னு   நக்கலா பேசராங்க....

அப்பப்ப்ப்ப்ப்ப்பா....தலைவியா இருக்குறது எவ்வளவு கஷ்டம்- னு  இப்ப புரிஞ்சுபோச்சு...

O.K -ங்க.. எங்க  மரமண்டைக்கு தோணின விசயத்தை உங்களுக்கு சொல்லலாமுனு வந்தா..  எதை எதையோ பேசிட்டு இருக்கேன்...

அன்னைக்கு துரைமுருகன் உங்க சேலையை உருவ வந்தபோது,
" நீங்க மட்டும் பதிலுக்கு ,  அவரு வேட்டிய உருவியிருந்தா.................... , "
 .... ங்கொய்யாலே..   வணக்கத்துக்கு ,  பதில்  வணக்கம் போடாம ருப்பாங்களா?

( முதல்ல இந்தப் முக்கிய பிரச்சனைய,  எல்லோரும் சேர்ந்து முடிங்க.. எங்க பிரச்சனைய மெதுவா பார்க்கலாம்...

அதுவரைக்கும்
நீங்க குடுத்த  இலவச வேட்டியக் கட்டிகிட்டு , 
வாழும் வள்ளுவர் குடுத்த , ஒரு ரூபா அரிசியில சமையல பண்ணிட்டு ,
டாஸ்மார்க் சரக்கப் போட்டுட்டு ,
இனப்பெருக்கம் பண்ணிட்டு இருக்கோம்...)


நன்றி மேடம்............
 
இப்படிக்கு
இரத்ததின் ரத்தம்..
.
.
.

18 comments:

  1. //அன்னைக்கு துரைமுருகன் உங்க சேலையை உருவ வந்தபோது,
    " நீங்க மட்டும் பதிலுக்கு , அவரு வேட்டிய உருவியிருந்தா.................... , "
    .... ங்கொய்யாலே.. வணக்கத்துக்கு , பதில் வணக்கம் போடாம இருப்பாங்களா?//

    அதானே...அந்தம்மாவுக்கு ஐடியா குடுக்குற ஆள் சரியில்லைங்க...நீங்க கொடநாட்டுக்கு ஒருரவுண்ட் விடுங்க...

    ReplyDelete
  2. //க.பாலாசி said...
    அதானே...அந்தம்மாவுக்கு ஐடியா குடுக்குற ஆள் சரியில்லைங்க...நீங்க கொடநாட்டுக்கு ஒருரவுண்ட் விடுங்க...//



    இல்லைங்கணா..
    அப்புறம் சசி அக்கா கோவிச்சுக்கும்...

    ReplyDelete
  3. //இந்தமாறி புள்ளிவிபரம் கொடுக்க.......... ங்கொய்யாலே... உலகத்திலேயே எனக்கு தெரிஞ்சு இரண்டே பேருதான் இருக்கீங்க//Avuru relax pannatthum(keptan_migha viraivil)...ammavukku varuvum.....

    oru rooba kodutha pothum nan makkalukkaga paadupaduven..nnu..arikkai utta aalu ungga "AMMA"
    appa khatta mudiyatha kanakka, ippa "seelay" molama katrhaga.....

    Ithukkellam pulli vivaram katringgo...
    நான் அன்னைக்கு கட்டிட்டு இருந்தது கருநீல நிறம்
    போட்டோவில இருப்பது கருஞ் சிவப்பு.
    கருநீல நிறம் கட்டுன தேதி இது இது..
    கருஞ் சிவப்பு கட்டுனது தேதி அது..அது...

    Oorla "seelai" yellam rombha malivho?..Aana onnu,satta sabaikku important Mhetru ithu...

    ReplyDelete
  4. உடன்பிறப்புக்களே..
    வீட்டிலிருக்கும் சட்டி, பானைகளை விற்றுவிட்டு ,
    சிங்காரச்சென்னைக்கு சீறிப் பறப்படு...

    எம் அன்னைக்கு , வணக்கம் சொல்ல மறுத்த கைகளை,
    வளைக்கமுடியாமல் செய்திடுவோம்..

    ReplyDelete
  5. //RAMS said...//
    யாரு சொன்னா இந்தியா ஏழை நாடென்று?
    ஒரு ரூபாய் சம்பளதிலேயே , 100 கோடி
    சம்பாரிக்கிற திறமை வேற யாருக்கு வரும்..



    // Manithan said...
    உடன்பிறப்புக்களே..
    வீட்டிலிருக்கும் சட்டி, பானைகளை விற்றுவிட்டு ,
    சிங்காரச்சென்னைக்கு சீறிப் பறப்படு...//

    ஆகா.. இந்தியாவை , இத்தாலி ஆக்கி
    இத்தாலிய சோமாலிய ஆக்காம
    ஓயப் போவதில்லை நம்ம இரத்ததின் ரத்தங்கள் ....

    ReplyDelete
  6. //அப்புறம் முக்கியமா , நல்ல பயபுள்ளைக , இளகின மனசுக்காரங்க , அப்படிக்கா பக்கத்தில வேற ஏதாவது பொட்டியடிக்கிற ப்ளாக்குக்கு போயிட்டேயிருங்க.. இது, நொண்ன பேச்சு பேசறவங்களையெல்லாம் போட்டுத்தள்ளற இடங்கண்ணா.. // இதுவரை நான் மேய்ந்த பிளாக்குகளில் நீங்கள்தான் உண்மையை சொல்லி இருக்கிறீர்கள்.

    மேடம் ஜெயலலிதா .. போர் பிரகடனம்... & என்னாது...கலைஞர் வேலை செய்யறாரா?..(ஆனா வேற வேலை செய்பவர்கள், அரசாங்கத்துக்கு உதவலாம்.ஹி..ஹி..ஹி) படித்துவிட்டு என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

    ReplyDelete
  7. //ஆதி மனிதன் said...
    இதுவரை நான் மேய்ந்த பிளாக்குகளில் நீங்கள்தான் உண்மையை சொல்லி இருக்கிறீர்கள்.

    மேடம் ஜெயலலிதா .. போர் பிரகடனம்... & என்னாது...கலைஞர் வேலை செய்யறாரா?..(ஆனா வேற வேலை செய்பவர்கள், அரசாங்கத்துக்கு உதவலாம்.ஹி..ஹி..ஹி) படித்துவிட்டு என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை.//

    அண்ணே.. இவங்க பண்றதப் அலும்பை பார்த்து முடியாமதான் , இந்த ப்ளாக்- ய ஆரம்பிச்சேன்..

    கூடிய விரைவில் , நான் சொல்ற மாறி நடந்தாலும் நடக்கும்..
    அப்ப தயவு செய்து எனக்கு கோயில்
    கட்டிடாதீங்க .. சாமிகளோ...

    ஹி...ஹி..ஹி..

    ReplyDelete
  8. சார்...ஏன் சார்...சட்டசபைல எப்பவோ புடவைய இழுத்து அடிச்சு வெரட்டி விட்டதெல்லாம் இப்போ பேசறீங்க...என்ன திராவிட முன்னேற்ற கழகத்துக்கு மக்கள் மத்தியில களங்கம் கற்பிக்க பார்கறீங்களா..நாகரீகமா அரசியல் பண்ணிகிற்றுக்கோம்..எங்கள விட்ருங்க சார்...(ஆமாம்...யாரோ ஜெயலலிதா ஜெயலலிதான்னு போற்றுகீங்களே...யாரு சார் அந்த பிகரு....சீரியல் ஆர்டிஸ்டா...?.) :)

    ReplyDelete
  9. //வெளியூர்க்காரன் said...
    ஆமாம்...யாரோ ஜெயலலிதா ஜெயலலிதான்னு போற்றுகீங்களே...யாரு சார் அந்த பிகரு....சீரியல் ஆர்டிஸ்டா...?.//

    ஆகா.. கண்டுபுடுச்சுட்டேன்..
    வெளியூர்காரன் வெளி உலகத்துக்கு கொண்டுவரனுமுனா ,
    " சீரியல் ஆர்டிஸ் ஜெயலலிதா " முன்னாடி நாலு காலத் தூக்கனும்..
    ஹா..ஹா.ஹா..

    ReplyDelete
  10. //வெளியூர்க்காரன் said...//
    ஆஹா.. கழக கண்மணியே.. எங்க கொஞ்ச நாளா பதிவுலகப் பக்கமே காணோம்..
    தாலைவர் கிட்ட சொல்லி கொஞ்ச நாளைக்கு நமீதா மறந்துட்டு ,

    பாட்டி நமீதாவை, அதுதாங்க உங்க " சீரியல் ஆர்டிஸ் ஜெயலலிதா " பிரச்சனைய முடிக்கசொல்லுங்க...

    ReplyDelete
  11. அன்னைக்கு துரைமுருகன் உங்க சேலையை உருவ வந்தபோது,
    " நீங்க மட்டும் பதிலுக்கு , அவரு வேட்டிய உருவியிருந்தா.................... , "
    .... ங்கொய்யாலே.. வணக்கத்துக்கு , பதில் வணக்கம் போடாம இருப்பாங்களா?


    அட நீங்க வேற அப்போ அம்மா அதை சினிமா சூட்டிங்குன்ன்ள்ள நேனைச்சுப்புட்டாங்க அப்புறம் வெளிய வந்ததும்தான் தெரிஞ்சுது அதை வச்சு அரசியல் பண்ணலாம்னு. அப்படி முன்னாடியே அது சினிமா இல்லன்னு தெரிஞ்சுருந்தா இந்நேரம் அவங்க வரும்போது பதில் வணக்கமல்ல முதல் வணக்கமே போட்டிருப்பாங்கோ. வேட்டிய மட்டுமல்ல அல்லாத்தையும் உருவி.

    ReplyDelete
  12. //அரைகிறுக்கன் said... //
    அண்ணே.. நீங்க சீரியஸ் கில்லர்-னு நெனைச்சுட்டிருந்தேன்.

    ஆனா , படா காமடி பண்ணீட்டிங்க.. நல்ல கமெண்ட்..சூப்பரா போட்டிருக்கீங்க...

    ReplyDelete
  13. ஜெயலிதா அம்மையாரை பற்றி நிறைய விசயங்கள்
    தெரிந்து வைத்திருக்கிறீர்கள்.
    அதை எல்லாம் ஒரு பதிவாக எழுதினால்
    நாங்களெல்லாம் தெரிந்து கொள்ள உதவும்.

    தொடரட்டும் உங்கள் பணி.

    ReplyDelete
  14. //அபுல் பசர் said...
    ஜெயலிதா அம்மையாரை பற்றி நிறைய விசயங்கள் தெரிந்து வைத்திருக்கிறீர்கள்.
    அதை எல்லாம் ஒரு பதிவாக எழுதினால்
    நாங்களெல்லாம் தெரிந்து கொள்ள உதவும்.

    தொடரட்டும் உங்கள் பணி.//

    நன்றி அய்யா..( வருகைக்கும் , வாழ்த்துக்கும்...)
    உங்கள் "ஆட்டோ சங்கர்" பதிவு நன்றாக வந்திருக்கிறது..

    அடுத்த பதிவு எப்பொழுது ?

    அன்புடன் பட்டாபட்டி...

    ReplyDelete
  15. //அன்னைக்கு துரைமுருகன் உங்க சேலையை உருவ வந்தபோது,
    " நீங்க மட்டும் பதிலுக்கு , அவரு வேட்டிய உருவியிருந்தா.................... , "
    .... ங்கொய்யாலே.. வணக்கத்துக்கு , பதில் வணக்கம் போடாம இருப்பாங்களா?//

    ReplyDelete
  16. //அன்னைக்கு துரைமுருகன் உங்க சேலையை உருவ வந்தபோது,
    " நீங்க மட்டும் பதிலுக்கு , அவரு வேட்டிய உருவியிருந்தா.................... , "
    .... ங்கொய்யாலே.. வணக்கத்துக்கு , பதில் வணக்கம் போடாம இருப்பாங்களா?//

    Not in good taste Mr.Pattapatti

    ReplyDelete
  17. //சவுக்கு said... //
    சவுக்கு சார்..
    மக்களுக்கு நல்லது பண்ண சட்டசபையக் கூட்டினால் ,
    இது ஒரு பிரச்சனை என்று "Time Waste " பண்ணிக்கொண்டுள்ளனர்..

    தாங்க முடியல சார்..
    ( உங்கள் கருத்துக்கு நன்றி..புரிந்து கொண்டேன்)

    ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!