Pages

Wednesday, March 17, 2010

யோவ்.. நீங்களேல்லாம்?...போய்யா..போ..

சனிக்கிழமை..சிராங்கூன் பெருமால் கோயில்..   
வழக்கம்போல , நானும் சின்ராசும் சாமி கும்பிடப்போனோம்.. ( யோவ்.. சத்தியமாயா.. உண்டகட்டிக்காக போகல..   ' மக்களை காப்பாத்து'னு ரெண்டு கையையும் ஏந்தியபடி கடவுளை
கும்பிட்டோம்.. தீடீர்னு கையில உண்டகட்டி.. நம்புங்க மக்கா..)

சாப்பிட்டதும் , வாகிங் போகனுமுனு சின்ராசு ஒரே அடம்..
நாதாரி பய சார்.. உண்டமயக்கம் தொண்டனுக்கும் உண்டு..
ஆனா, குண்டனுக்கு இல்லனு தெளிவா புரிஞ்சிகிட்ட நாள் சார் அது..

சரின்னு , ஆடி அசைஞ்சு போயிட்டேயிருக்கோம்..
வழியில , பாரதியார்கள், அவ்வையார்கள், நடன மங்கைகள்,மன்னர்கள், மன்னிகள் ( மகாராணிகள் சார்.),  என மாறுவேடமிட்டு , மழலைகள்
ரோட்டை கடக்கின்றனர்..   நாம வாகிங்க் போயி ,என்ன  ம&^%ர புடுங்கப்போறோமுனு, என்னோட மனசுல தோணுது..

சின்ராசு, என்னோட மனச் படிச்சிட்டான் சார்..
சரி வா.. போயி குழந்தைகள் என்ன பண்ணுதுனு பார்ப்போமுனு சொல்றான்.

போட்டி ஆரம்பிச்சது சார்..
ஒவ்வொரு குழந்தைகளின் திறமையும் அருவியா கொட்டுது..நான் 'ஆ'னு வாயப்பொழந்து பார்த்திட்டிருப்பதை பார்த்து, நச்சுனு காலால ஒரேமிதி
மிதிச்சான் பாருங்க சின்ராசு.. பக்கத்திலிருந்த மாமி குய்யோ..முய்யோ
னு, கத்த ஆரம்பிச்சுடுச்சு..
( நாங்க விவரமில்ல.. எந்த காலத்தில கால கீழ வெச்சு உக்காந்திருக்கோம்..)
அப்புறம் சாரி.. மன்னிப்பு..தெரியாமா..விஜயகாண்டுக்கு பிடிக்காத வார்த்தைகளை போட்டுட்டு,  பின்னாடி 'ரோ'க்கு போயிட்டோம்..

அன்னைக்குதான் சார் விதி மேல நம்பிக்கை வந்துச்சு..

ஒரு 'குழந்தை மன்னரோட',  அம்பு உடைந்து விட்டது.. அந்த பையனின் அம்மா, கணவரை பார்த்து கத்திகிட்டே, அதை ஒட்ட வெச்சுட்டு இருக்காங்க..


சின்ராசு மெதுவா போயி, 'எம்மா, ஊட்டுக்காரரு அம்பை கைதவறி ஒடச்சுட்டாரா'னு கேட்க,
அது, இல்லை..  மன்னரா நடிக்க............,3 மாசமா ,  

காலை 4 மணிக்கு அலாரம் வெச்சு , 
வசனத்த மனப்பாடம் பண்ண வெச்சு..
அதை திருப்ப சொல்ல வெச்சு..
நடிக்க வெச்சு.. 
கூட்டிகிட்டு வந்தா
அம்பை ஒடச்சுட்டு நிக்கிறான்...பையனுக்கு அப்படியே அப்பன் புத்தி சார்...  .எப்படி சார் உருப்படுவானு?'னு சொல்லிட்டு கணவரை பார்த்து கத்த ஆரம்பித்துவிட்டார்கள்.

இது வேலைக்கு ஆகாதுனு, கணவரை பரிதாபமா பார்த்துட்டு ( நாங்க வேற என்னா சார் பண்ணமுடியும்?) வெளிய வந்துட்டோம்..

என்னோட டவுட் என்னான..
 

*  குழந்தைகளை,நாம்  குழந்தைகளாக வளர்கிறோமா?

* குழந்தைகளின் நடிப்பில், அவர்களூடைய ,  'தாய், தந்தையின் திறமை'தான் தெரிகிறது..
 

* குழந்தைகளை படிக்கும் அளவிற்கு,  நாம் படித்தவர்களா?.

* இதை செய்யாதே.. சாமி கண்ண குத்தும்.. குறும்பு பண்ணினா, போலீசை கூப்பிட்டுவேன் என்ற வார்த்தைகள்.......   அவர்களுடைய , தன்னம்பிக்கையை வளர்க்குமா?..இல்லை கோழைத் தனத்தை வளர்க்குமா?..


* நம்மால் முடியாத காரியத்தை , குழந்தைகள் மீது திணிக்கிறோமே.
.( 100 மார்க் வாங்கலேனா.. அப்புறம்.... ?)


இதைப்பற்றி..நீங்க இங்க  குமறுலாம் சாமிகளா ( கெட்ட வார்த்தைய தவிர )..
அதுக்கு முன்னாடி அந்த கணவருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்..

 
( எதுக்கா.?. அடுத்த ஜென்மத்திலயாவது , விளையாட்டில,  படிப்புல , போட்டிகள்ல முதலிடம் பெற்று..
குழந்தைகளுக்கு 'நல்ல தகப்பன்' என்ற உதாரணமாக,  திகழ...)
.
.

.

60 comments:

  1. பட்டாபட்டி!

    உங்க டவுட் மொத தடவையா ரொம்ப நியாயமா, நச்சுனு இருக்கு....

    பிரபாகர்.

    ReplyDelete
  2. @பிரபாகர் said...
    பட்டாபட்டி!
    உங்க டவுட் மொத தடவையா ரொம்ப நியாயமா, நச்சுனு இருக்கு....
    பிரபாகர்.
    //

    சார்.. வணக்கம்.. நான் இவ்வளவு நாளா கத்திட்டு இருந்தது மக்கள் பிரச்சனைய..

    ஆனா.. இது எல்லோர் வீட்டிலும் நடக்கும் பிரச்சனை..
    ஜாக்கிரதையா கேண்டில் பண்ணனும் சார்..
    ( முதல் கோணல் முற்றிலும் கோணல் ஆகிவிடக்கூடாது.. அதற்குத்தான்..)

    ReplyDelete
  3. ஆளு ரொம்ப தெளிவாத்தான் இருக்கீரு நண்பா! தூங்கலையா? நாங்கதான் நைட் ஷிஃப்ட் பாக்கறோம்(ரோஸ்விக்கயும் சேர்த்துக்கறேன், துணைக்கு)... உமக்கு காலையில வேலதானே?

    நிஜமா உங்க கேள்விங்க அருமை...

    பிரபாகர்...

    ReplyDelete
  4. We need to discuss, more about this post..
    ( b'cause , they are our future
    pillars )..
    see you tomorrow buddy.. good night..

    ReplyDelete
  5. "காலை 4 மணிக்கு அலாரம் வெச்சு ,
    வசனத்த மனப்பாடம் பண்ண வெச்சு..
    அதை திருப்ப சொல்ல வெச்சு..
    நடிக்க வெச்சு..
    கூட்டிகிட்டு வந்தா,"

    பாவம் அந்த பயபுள்ள.

    ReplyDelete
  6. என்னத்தைச் சொல்லுறது, அந்தக் கணவருக்கு நானும் அனுதாபத்தைத் தெரிவிக்கிறேண்ணே! பாவம்!!

    ReplyDelete
  7. //என்னத்தைச் சொல்லுறது, அந்தக் கணவருக்கு நானும் அனுதாபத்தைத் தெரிவிக்கிறேண்ணே! பாவம்!!//

    யோவ் என்னையா அனுதாபம் ! வெளியூர்காரனின் சமீபத்திய பதிவ படிக்க சொல்லுங்க , 4 லிட்டராவது கொட்டும்.

    ReplyDelete
  8. நாம் குழந்தைகளை குழந்தைகளாக இருக்க விட்டால் போதும். படிக்கவேண்டுமென்ற போது அவர்களாக படிப்பார்கள். படிக்க பிடிக்கவில்லையா, அவர்களுக்கு ஆர்வமுள்ள துறையில் விடவேண்டும். அதுதான் எதிர்காலத்தூண்களை உண்மையான தூண்களாக மாற்றும்.

    ReplyDelete
  9. குழந்தைகள பொதுவா எல்லாரும் சர்க்கஸ் கோமாளிகளாத்தான் வளக்குறாங்க.. நல்லா சொன்னீங்க பட்டா பட்டி சார்... வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  10. நான் புளியம்பட்டி'யில் உள்ள விழுதுகள் அமைப்பிற்காக குழந்தைகளுக்கு தன்னம்பிக்கை வகுப்பு எடுக்கும்போது சொன்னேன்.. "நான் எதையும் புதிதாகச் சொல்லி உள்ளே புகுத்தவில்லை, உள்ளே இருப்பதை கிளறி வெளியே கொண்டு வருகிறேன் என்று.." குழந்தைகளுக்கு நாம் அதிகமாகச் சொல்லச் சொல்ல அவர்கள் கேட்கிறார்கள்.. ஆனால் அதில் எத்துனை அவர்களின் மனதில் பதிகிறது.. மாறாக குறைவாகச் சொல்லிக் கொடுத்து அவர்களுக்கு கொஞ்சம் அவகாசம் கொடுத்து பின்னர் அவர்களைச் சுயமாக சிந்திக்க விட வேண்டும். முதலில் வெளிவருபவை நிச்சயமாக சரியாக இருக்காது. போகப் போக மெருகேறி பின்னர் நம்மையே அசத்துவார்கள்..

    ReplyDelete
  11. நான் மனதில் தோன்றியவற்றை வெளிப்படையாக சொல்லுகிறேன்.. உங்களின் இந்தப் பதிவிற்கு பின்னூட்டம் போட்டது என் மனதிற்கு மிக நிறைவாக இருக்கிறது...

    ReplyDelete
  12. நண்பரே உங்களது பதிவில் உள்ள கருத்து முழுக்க உண்மை.
    இப்போதைய குழந்தைகள் யாரும் குழந்தைகளாய் வளர்க்கப்பட வில்லை என்பதுவே வருத்தம் தரும் விஷயம்.

    இன்றைய குழந்தைகள் வளரும் சூழல் அவர்கள் எல்லோரும் பெரிதும் போட்டியில் வெள்ளவல்லவர்களாய் அவர்களை உருவாக்கப்படுகிறார்கள்.

    ReplyDelete
  13. பட்டு ஸ்டைலுல பதிவ ஆரம்பிச்சு.... பட்டு பட்டுன்னு கேள்விய கேட்டுபோட்டிகளே ராசா... :-)

    இன்னைக்கு பெரும்பாலும் எல்லா பெற்றோர்களும் தங்களின் ஆசைகளை தங்கள் பிள்ளைகளின் மேல் திணித்து தான் வளர்க்கிறார்கள்.

    உறவினர் வீட்டு குழந்தைகள், உடன் பயிலும் குழந்தைகள், பக்கத்து வீட்டுக்காரன் குழந்தைகள் என ஒவ்வொன்றோடும் போட்டியிட வைத்து அவர்களோடு ஒப்பிட்டு பார்த்தே குழந்தைகளை இவர்கள் விரும்பிய வழியில் வரவைத்து... வெற்றி பெற்றால்... அனைத்தும் தங்களின் வெற்றி என மார் தட்டி கொள்கிறார்கள்.

    நீங்கள் சொல்வது போல், தங்களால் முடியாத காரியத்தையும் பிள்ளைகளின் மேல் திணித்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

    ReplyDelete
  14. ஆனால், நமது ஒட்டு மொத்த சமுதாயமும், அவ்வாறே தான் ஓடிக்கொண்டிருக்கிறது...

    பணம், பணம், பணம்...

    அதை, நன்றாகப் படித்தால் (மட்டுமே) நிறைய சம்பாதிக்க முடியும் என்று படிப்பையும் திணித்துக் கொண்டே தான் இருக்கிறார்கள்.

    ஒரு வகையில் நாமும் இது போல் திணித்தே வளர்க்கப்பட்டோம். அதனால் தான் நாம் (பெரும்பாலானோர்) நம் பெற்றோர்களை விட பொருளாதாரத்தில் நன்றாக இருப்பதாக நம்புகிறோம்.

    குழந்தைகளுக்கு தன்னம்பிக்கையை வளர்க்கவேண்டும்... எந்த விதத்தில்...??

    குறிப்பிட்ட வயதுவரை அவர்களை கண்டித்து வளர்க்க வேண்டியதாக இருக்கிறது... எந்த வயதுவரை??

    குறிப்பிட்ட விஷயங்களில் பயமுறுத்தி தான் வளர்க்க வேண்டும்... எந்த விஷயத்தில்??

    இவற்றை பெற்றோர் தெரிந்துகொள்ள வேண்டும்... எங்கிருந்து??


    உங்கள் கருத்துக்களில் / எண்ணங்களில் எனக்கு எந்த மாற்று கருத்தும் கிடையாது...

    ஆனால், எப்படி அதை சாத்தியமாக்குவது என்று தேட ஆரம்பிக்கிறேன்... உங்களோடு சேர்ந்து...

    ReplyDelete
  15. //...பையனுக்கு அப்படியே அப்பன் புத்தி சார்... .எப்படி சார் உருப்படுவானு?'னு சொல்லிட்டு கணவரை பார்த்து கத்த ஆரம்பித்துவிட்டார்கள் //

    அந்த கணவருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களும்...

    ReplyDelete
  16. நெறய பேரு சின்ன வயசில தாங்க அனுபவிக்காததெ, தங்கள் குளந்தெக மூலமா அனுபவிக்க நெனக்கிறாங்க. அதனோட வெளவுதான் இது.

    ReplyDelete
  17. @ஜீவன்பென்னி said...
    பாவம் அந்த பயபுள்ள.
    //

    உண்மைதான் ..

    March 17, 2010 11:54 PM
    @சேட்டைக்காரன் said...
    என்னத்தைச் சொல்லுறது, அந்தக் கணவருக்கு நானும் அனுதாபத்தைத் தெரிவிக்கிறேண்ணே! பாவம்!!
    //

    அனுதாபம் உதவாது சேட்டை.. முடிஞ்சா, பழனியில 10 தேங்காய் உடைப்பதாய் வேண்டிக்கொள்ளுங்கள்..



    @ஜெய்லானி said...
    யோவ் என்னையா அனுதாபம் ! வெளியூர்காரனின் சமீபத்திய பதிவ படிக்க சொல்லுங்க , 4 லிட்டராவது கொட்டும்.
    //
    யாருக்கு சாமி..அம்மணிக்கா.. இல்ல அய்யாவுக்கா?

    ReplyDelete
  18. @முகிலன் said...
    நாம் குழந்தைகளை குழந்தைகளாக இருக்க விட்டால் போதும். படிக்கவேண்டுமென்ற போது அவர்களாக படிப்பார்கள். படிக்க பிடிக்கவில்லையா, அவர்களுக்கு ஆர்வமுள்ள துறையில் விடவேண்டும். அதுதான் எதிர்காலத்தூண்களை உண்மையான தூண்களாக மாற்றும்.
    //
    சரியா சொன்னீஙக தல...

    @அண்ணாமலையான் said...
    குழந்தைகள பொதுவா எல்லாரும் சர்க்கஸ் கோமாளிகளாத்தான் வளக்குறாங்க.. நல்லா சொன்னீங்க பட்டா பட்டி சார்... வாழ்த்துக்கள்..
    //
    தன்னம்பிக்கைய ஊட்டினா போதும் சார்.. நம்மள விட நல்லா வருவாஙக..


    @அரைகிறுக்கன் said...
    நண்பரே உங்களது பதிவில் உள்ள கருத்து முழுக்க உண்மை.
    இப்போதைய குழந்தைகள் யாரும் குழந்தைகளாய் வளர்க்கப்பட வில்லை என்பதுவே வருத்தம் தரும் விஷயம்.
    இன்றைய குழந்தைகள் வளரும் சூழல் அவர்கள் எல்லோரும் பெரிதும் போட்டியில் வெள்ளவல்லவர்களாய் அவர்களை உருவாக்கப்படுகிறார்கள்.
    //
    பந்தயத்துக்கு பயிற்சி அளிக்கும் பாடசாலைகள்.. இதை பற்றி விரிவா எழுதனும் சார்

    @மசக்கவுண்டன் said...
    நெறய பேரு சின்ன வயசில தாங்க அனுபவிக்காததெ, தங்கள் குளந்தெக மூலமா அனுபவிக்க நெனக்கிறாங்க. அதனோட வெளவுதான் இது.
    //
    நம்முடைய இயலாமைய, அவர்கள் மேல் திணிக்கிறோம் கவுண்டரே..

    ReplyDelete
  19. @பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...
    நான் புளியம்பட்டி'யில் உள்ள விழுதுகள் அமைப்பிற்காக குழந்தைகளுக்கு தன்னம்பிக்கை வகுப்பு எடுக்கும்போது சொன்னேன்.. "நான் எதையும் புதிதாகச் சொல்லி உள்ளே புகுத்தவில்லை, உள்ளே இருப்பதை கிளறி வெளியே கொண்டு வருகிறேன் என்று.." குழந்தைகளுக்கு நாம் அதிகமாகச் சொல்லச் சொல்ல அவர்கள் கேட்கிறார்கள்.. ஆனால் அதில் எத்துனை அவர்களின் மனதில் பதிகிறது.. மாறாக குறைவாகச் சொல்லிக் கொடுத்து அவர்களுக்கு கொஞ்சம் அவகாசம் கொடுத்து பின்னர் அவர்களைச் சுயமாக சிந்திக்க விட வேண்டும். முதலில் வெளிவருபவை நிச்சயமாக சரியாக இருக்காது. போகப் போக மெருகேறி பின்னர் நம்மையே அசத்துவார்கள்..
    //

    ஒன்று போல சிந்திக்கிறோம்..ஒரு வேளை சிறுவாணி தண்ணியோ?..
    விழுதுகள் அமைப்பிற்காக வகுப்பு எடுப்பதாக கூறியுள்ளீர்கள்.. நல்ல பணி.. தொடரட்டும்..
    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  20. @ரோஸ்விக் said...
    பட்டு ஸ்டைலுல பதிவ ஆரம்பிச்சு.... பட்டு பட்டுன்னு கேள்விய கேட்டுபோட்டிகளே ராசா... :-)
    இன்னைக்கு பெரும்பாலும் எல்லா பெற்றோர்களும் தங்களின் ஆசைகளை தங்கள் பிள்ளைகளின் மேல் திணித்து தான் வளர்க்கிறார்கள்.
    உறவினர் வீட்டு குழந்தைகள், உடன் பயிலும் குழந்தைகள், பக்கத்து வீட்டுக்காரன் குழந்தைகள் என ஒவ்வொன்றோடும் போட்டியிட வைத்து உங்கள் கருத்துக்களில் / எண்ணங்களில் எனக்கு எந்த மாற்று கருத்தும் கிடையாது...
    ஆனால், எப்படி அதை சாத்தியமாக்குவது என்று தேட ஆரம்பிக்கிறேன்... உங்களோடு சேர்ந்து...
    //
    ரோஸ்விக்கு.. ஒரு மினி பதிவே போட்டுவிட்டீர்கள்..
    ஓ.கே.. தேட ஆரம்பித்துவிடுவோம்..

    ReplyDelete
  21. அண்ணே! பெருமாள் கோவிலுக்கு வந்து விட்டு, கோவிலுக்குப் பின்னால் வசிக்கும் என்னைக் கூப்பிடாமல் விட்டு விட்டீர்களே. கூப்பிட்டால் வந்துருப்பேன். இனிமேல் அழைக்கவும்.
    ஒவ்வெரு வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் நான் பெருமாள் கோவிலுக்கு வருவேன்(உண்டகட்டிக்காத்தான்).

    குழந்தைகளைக் குழந்தைகளாகத்தான் வளர்க்க வேண்டும். அவர்களிடம் நம் எதிர்பார்ப்பைத் திணிப்பது நண்மை பயக்காது.

    ரோஸ்விக்கின் கருத்து சிறிது தவறு. நாம் நம் பெற்றெரை வீட பொருளாதாரத்தில் அதிகமாக இருப்பதுக்கு காரணம், அவர்களை வீட நமக்கு வசதிகள் குறைவு. படிப்பு,போக்குவரத்து,தகவல்கள் மற்றும் கல்வி நிலையங்கள் ஆகியன நம் காலத்தில் சிறப்பாக இருந்ததும், அவார்னஸ் அதிகமாக இருந்ததும் காரணம். நன்றி.

    ReplyDelete
  22. குழந்தைகளை குழந்தைகளாகவே வளர விடுங்கள் பெற்றோரே! நெத்தியடியா சொல்லிட்டீங்க.

    எனக்கு இன்னொரு விஷயத்திலும் தெளிவு கிடச்சிடுச்சு உங்கள் பதிவு மூலமா. சிங்கப்பூர் கோவில்களில் கூட்டம் அதிகமா இருக்கே(குறிப்பா உண்டக்கட்டி போடற நேரத்துல) மக்களுக்கு பக்தி அதிகமாயிடுச்சுன்னு நினைச்சேன். இப்பல்ல புரியுது எல்லாம் உண்டக்கட்டிக்குத்தான்னு :).

    ReplyDelete
  23. @பித்தனின் வாக்கு said...
    அண்ணே! பெருமாள் கோவிலுக்கு வந்து விட்டு, கோவிலுக்குப் பின்னால் வசிக்கும் என்னைக் கூப்பிடாமல் விட்டு விட்டீர்களே. கூப்பிட்டால் வந்துருப்பேன். இனிமேல் அழைக்கவும்.
    ஒவ்வெரு வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் நான் பெருமாள் கோவிலுக்கு வருவேன்(உண்டகட்டிக்காத்தான்).
    குழந்தைகளைக் குழந்தைகளாகத்தான் வளர்க்க வேண்டும். அவர்களிடம் நம் எதிர்பார்ப்பைத் திணிப்பது நண்மை பயக்காது.
    ரோஸ்விக்கின் கருத்து சிறிது தவறு. நாம் நம் பெற்றெரை வீட பொருளாதாரத்தில் அதிகமாக இருப்பதுக்கு காரணம், அவர்களை வீட நமக்கு வசதிகள் குறைவு. படிப்பு,போக்குவரத்து,தகவல்கள் மற்றும் கல்வி நிலையங்கள் ஆகியன நம் காலத்தில் சிறப்பாக இருந்ததும், அவார்னஸ் அதிகமாக இருந்ததும் காரணம். நன்றி.
    //

    சார்.. உண்டகட்டி சாப்பிட்டா, அப்புறம் நீஙக, சிக்கன் பிரியாணி வாங்கித்தரமாட்டீங்களே.
    அதனாலே.. உண்டகட்டி கொடுக்காதா நாளாப் பார்த்து, நம்ம பதிவர் சந்திப்பை வெச்சுகிடுவோம்..
    .
    .
    அந்த காலத்தில் நாம் மனிதனாயிருந்தோம்..இப்ப டெக்னாலஷியின் அடிமைகளாயிட்டோம் சார்..

    ReplyDelete
  24. @kavisiva said...
    குழந்தைகளை குழந்தைகளாகவே வளர விடுங்கள் பெற்றோரே! நெத்தியடியா சொல்லிட்டீங்க.
    எனக்கு இன்னொரு விஷயத்திலும் தெளிவு கிடச்சிடுச்சு உங்கள் பதிவு மூலமா. சிங்கப்பூர் கோவில்களில் கூட்டம் அதிகமா இருக்கே(குறிப்பா உண்டக்கட்டி போடற நேரத்துல) மக்களுக்கு பக்தி அதிகமாயிடுச்சுன்னு நினைச்சேன். இப்பல்ல புரியுது எல்லாம் உண்டக்கட்டிக்குத்தான்னு :).

    நாங்க ரெண்டு விசயத்துக்கு வெக்கபடாம க்யூவில நிற்போம்..
    1.. உண்டகட்டிக்கு
    2.. லாட்டரி சீட் வாங்க..( குறுக்கு வழியில பணம் பண்ணுவது எவ்வளவு கஷ்டமுனு அப்போதுதான் தெரியும்..

    :-)

    ReplyDelete
  25. சூப்பர் மெசேஜ் .... மிஸ்டர் பட்டாப்பட்டி ..!!


    இத அப்படியே நீங்க அடுத்த பாராளுமன்ற கூட்டத்துல பேசறீங்க .....
    இந்தியால இருக்கும் எல்லா அப்பாக்களின் வோட்டையும் அள்ளுறீங்க...

    ReplyDelete
  26. // ஒன்று போல சிந்திக்கிறோம்..ஒரு வேளை சிறுவாணி தண்ணியோ?.. //
    அப்படின்னா பட்டாபட்டி கோவையா? சரி கொஞ்சம் பக்கத்தூருல வந்துட்டேம்.

    ReplyDelete
  27. @யூர்கன் க்ருகியர் said...
    சூப்பர் மெசேஜ் .... மிஸ்டர் பட்டாப்பட்டி ..!!
    இத அப்படியே நீங்க அடுத்த பாராளுமன்ற கூட்டத்துல பேசறீங்க .....
    இந்தியால இருக்கும் எல்லா அப்பாக்களின் வோட்டையும் அள்ளுறீங்க...
    //

    எங்கப்பு.. கொஞ்ச நாளா.. ஆளைக் காணலே..
    அப்பா ஓட்ட அள்ளிடலாம்.. அம்மாக்கள் ஓட்டு?

    ReplyDelete
  28. @பித்தனின் வாக்கு said...
    அப்படின்னா பட்டாபட்டி கோவையா? சரி கொஞ்சம் பக்கத்தூருல வந்துட்டேம்.
    //

    என்னா சார்..,’இந்தியாவுக்கு சுதந்திரம் கிடச்சாச்சா’னு , கேக்கிற மாறி, மெதுவா
    கேக்குறீஙக..

    கோவைக்கு என்னோட பேர வையுங்குடானு போராட்டம்மெல்லாம் பண்ணுனம் சார்..
    பய புள்ளைக கேக்கிற மாறியில்ல..
    வெறுப்புல, சிங்கப்பூர் வந்திட்டேனுங்கோ...

    ReplyDelete
  29. சாரி பா...மாத்தி மாத்தி சொல்றானுக பா... ஃபிரண்ட் ஒருத்தன் சொல்லிதான் ஷேர் பண்ணிக்கிட்டேன். வதந்தியா இல்லையான்னு கன்ஃபர்ம் பண்ணலாம்...வெய்டீஸ்!

    ReplyDelete
  30. Friends,Gounder is fine it seems....refer here....

    http://cinema.dinamalar.com/tamil-news/1895/cinema/Kollywood/rumours-about-goundamani.htm

    ReplyDelete
  31. //Friends,Gounder is fine it seems....refer here....

    http://cinema.dinamalar.com/tamil-news/1895/cinema/Kollywood/rumours-about-goundamani.htm//


    don't read dinamalar.
    they are A** *****.
    I get rid of that since last one and half years.

    ReplyDelete
  32. \\அடுத்த ஜென்மத்திலயாவது , விளையாட்டில, படிப்புல , போட்டிகள்ல முதலிடம் பெற்று..
    குழந்தைகளுக்கு 'நல்ல தகப்பன்' என்ற உதாரணமாக, திகழ...\\

    தல நீங்க எப்படி

    ---சிவா---

    ReplyDelete
  33. @ சிவா said...

    \\அடுத்த ஜென்மத்திலயாவது , விளையாட்டில, படிப்புல , போட்டிகள்ல முதலிடம் பெற்று..
    குழந்தைகளுக்கு 'நல்ல தகப்பன்' என்ற உதாரணமாக, திகழ...\\

    தல நீங்க எப்படி

    ---சிவா---
    //

    நானா?..
    சார்.. காலேஸ் செகண்ட்..
    கோவை பீளமேடு போனிங்கினா..
    என்னோட பெருமை தெரியும் சாரே..

    ( நம்ம பாலிசி.. யாரையும் போர்ஸ் பண்ணக்கூடாது..
    ஆலோசனை வேண்டுமென்றால் கொடுக்கலாம்..
    ஆனா , டிசிஷன் அவர்களுடையது...)

    ReplyDelete
  34. //யாரையும் போர்ஸ் பண்ணக்கூடாது..
    ஆலோசனை வேண்டுமென்றால் கொடுக்கலாம்..
    ஆனா , டிசிஷன் அவர்களுடையது...//

    இதுக்கு உடன்படுகிறேன்...

    ReplyDelete
  35. ஆமாம் முருகன் சார்..
    பழைய கமென்ஸ்ச டெலிட் பண்ணிட்டு இருக்கேன்..
    தகவலுக்கு நன்றி சார்..

    ReplyDelete
  36. பட்டாபட்டி சார், உண்மையான அக்கறையுள்ள கேள்விகள். இதே கேள்விகளை என்னை நோக்கிக் கேட்டேன். என் குழந்தைகளை வளர்க்க, நான் இன்னும் வளர வேண்டும் என்று உணர்கிறேன்.

    ReplyDelete
  37. பித்தனின் வாக்கு said...

    // ஒன்று போல சிந்திக்கிறோம்..ஒரு வேளை சிறுவாணி தண்ணியோ?.. //
    அப்படின்னா பட்டாபட்டி கோவையா? சரி கொஞ்சம் பக்கத்தூருல வந்துட்டேம்.

    சார்.. நீங்க எந்த ஊருன்னு சொல்லவே இல்லையே..

    ReplyDelete
  38. //
    நானா?..
    சார்.. காலேஸ் செகண்ட்..
    கோவை பீளமேடு போனிங்கினா..
    என்னோட பெருமை தெரியும் சாரே..
    //

    பீளமேடு போய் என்னன்னு விசாரிக்கணும்..?(இது சீரியஸ் கேள்வி..)

    நீங்க சொல்றத பாத்தா.. நீங்க பெரிய ஆளு போல இருக்கே..

    ReplyDelete
  39. சனி, ஞாயிறு, நண்பர்களோட கேரளா - குமரகம் போகிறோம்.... நாளை இரவே நண்பன் ரூம்ல தங்கப் போறேன்.. அதனால ஒரு மூணு நாளைக்கு ப்ளாக் பக்கம் வரமாட்டேன்..

    திங்கள் இரவு சந்திப்போம்..

    ReplyDelete
  40. @Vikram. R said...
    பட்டாபட்டி சார், உண்மையான அக்கறையுள்ள கேள்விகள். இதே கேள்விகளை என்னை நோக்கிக் கேட்டேன். என் குழந்தைகளை வளர்க்க, நான் இன்னும் வளர வேண்டும் என்று உணர்கிறேன்.
    //

    கரெக்ட்..
    குழந்தைகளை அதட்டும்போதோ, இல்லை.. அன்பு காட்டும்போதோ..
    அவர்கள் நிலையில்.. உங்களை நிறுத்தி, ஒரு நிமிடம் யோசனை செய்யுங்கள்..

    போதும்...

    ReplyDelete
  41. @பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...
    சனி, ஞாயிறு, நண்பர்களோட கேரளா - குமரகம் போகிறோம்.... நாளை இரவே நண்பன் ரூம்ல தங்கப் போறேன்.. அதனால ஒரு மூணு நாளைக்கு ப்ளாக் பக்கம் வரமாட்டேன்..
    திங்கள் இரவு சந்திப்போம்..
    //

    அய்.. ஜாலி..ஜாலி..
    சார்.. எனக்கு சொல்லல.. உங்களுக்கு சொன்னேன்..
    Enjoy buddy..

    ReplyDelete
  42. @பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...
    சார்.. நீங்க எந்த ஊருன்னு சொல்லவே இல்லையே..
    பீளமேடு போய் என்னன்னு விசாரிக்கணும்..?(இது சீரியஸ் கேள்வி..)
    நீங்க சொல்றத பாத்தா.. நீங்க பெரிய ஆளு போல இருக்கே..
    //

    ஆமா சார்.. நாலு கப்பல், நாலு பங்களா, நாலு பொண்டாட்டி..
    சே.. ஒரு ப்ளோல சொல்லிட்டேன்..
    நீங்க வேற சார்..நானும் சாதாரண மனுஷந்தான்..படிச்சது PSG Tech-ல..
    நிசமாவே , நல்லா படிச்சேன்.. ( படிப்பையும் , மனிதர்களையும்...)

    எந்த ஊரு?.. check your Email.. ஹா.ஹா..

    ReplyDelete
  43. யோவ் பட்டாப்பட்டி..ராஜனோட ஆள் இன் ஆள் அழகுராஜா ப்ளாக்ல நெறைய அனானி சிக்குரானுகையா...ஒரு நாள் கூட்டமா போய் குமுறிட்டு வந்தர்லாமா..நம்ப ப்ளாக்லயும் எந்த அனானியும் பயந்துகிட்டு இப்பல்லாம் வரமாட்ராணுக..அங்க போய் ஆனந்தமா குமுறுவோம்.ஏன்னா சொல்ற..??

    ReplyDelete
  44. எங்க வெளியூரு , யாராவது அனானிமஸ் வந்தா நாம தான் கொலைவெறி தாண்டவம் ஆடுறோம் , பின்ன எப்படி மறுபடியும் வரும், (இனி வந்தா அரவணைச்சு போய் அப்புறம் பளிகுடுக்கணும் )

    ReplyDelete
  45. @Veliyoorkaran said...
    யோவ் பட்டாப்பட்டி..ராஜனோட ஆள் இன் ஆள் அழகுராஜா ப்ளாக்ல நெறைய அனானி சிக்குரானுகையா...ஒரு நாள் கூட்டமா போய் குமுறிட்டு வந்தர்லாமா..நம்ப ப்ளாக்லயும் எந்த அனானியும் பயந்துகிட்டு இப்பல்லாம் வரமாட்ராணுக..அங்க போய் ஆனந்தமா குமுறுவோம்.ஏன்னா சொல்ற..??

    @மங்குனி அமைச்சர் said...
    எங்க வெளியூரு , யாராவது அனானிமஸ் வந்தா நாம தான் கொலைவெறி தாண்டவம் ஆடுறோம் , பின்ன எப்படி மறுபடியும் வரும், (இனி வந்தா அரவணைச்சு போய் அப்புறம் பளிகுடுக்கணும் )
    //

    யோவ் வெளியூரு.. மங்குனி சொல்றதில ஏதோ, பாயிண்ட் இருக்கிற மாறி தோணுது ..
    என்னா நினைக்கிறே?

    ReplyDelete
  46. நம்மல்ல எவனுக்குமே பாசமா பேச வராதேயா..அப்டியே பேசினாலும் திடீர்னு எவனாச்சும் குறுக்க பொருள தூக்கிட்டு பாய்ஞ்சுருவாங்கே...அனானி நாய்ங்க பயந்து ஓடி போயிருவானுக..எனகென்னமோ இந்த ஐடியா வொர்க் அவுட் ஆகும்னு தோணல..அதுவும் இந்த கொலைகார கூட்டத்த வெச்சுகிட்டு..!!

    ReplyDelete
  47. பித்தன் நம்மள வெச்சி காமடி பதிவ போட்டுட்டாரு..
    சைக்கிள் இல்ல டேங்கர்.. எது அனுப்பலாம்?

    ReplyDelete
  48. @@@@பட்டாபட்டி.. said...
    பித்தன் நம்மள வெச்சி காமடி பதிவ போட்டுட்டாரு../////////////////

    அதுதான் பித்தன அல்ரெடி கலாசிட்டீரும் போலவே ...அப்பறம் என்னா...?

    ReplyDelete
  49. எலோய் மங்குனி நீ இங்கன தான் இருக்கிய. உன் பேரு எல்லா இடத்துலையும் பீஸாகுது.

    ReplyDelete
  50. // சார்.. நீங்க எந்த ஊருன்னு சொல்லவே இல்லையே.. //
    நமக்கு சொந்த ஊரு தாராபுரம், பட்ச்ச ஊரும் அதுதான். பொழப்பு எல்லாம் கோவை,சென்னை, தென்னியந்தியாவின் அனைத்துப் பகுதிகளும். கொளவரமா சொன்னா ஊர் சுத்தி. இப்ப உலகம் சுத்தி.

    ReplyDelete
  51. ஏம்பா பட்டா அவரே பாவம் ரொம்ப சீரியஸ் ஆனா ஆளு அவர்ட போய் காமெடி, கீமேடின்டு பேசாம வா நாம போய் அந்த சைனீஸ் லேடி டிரைவர்ட சமையல் குறிப்பு கேட்கலாம்

    ReplyDelete
  52. @பித்தனின் வாக்கு said...
    நமக்கு சொந்த ஊரு தாராபுரம், பட்ச்ச ஊரும் அதுதான். பொழப்பு எல்லாம் கோவை,சென்னை, தென்னியந்தியாவின் அனைத்துப் பகுதிகளும். கொளவரமா சொன்னா ஊர் சுத்தி. இப்ப உலகம் சுத்தி.
    //


    சார்.. எனக்கு மதுரைப் பக்கம் உள்ள கோயமுத்தூர் சார்..
    எஙக அப்பாவை, எல்லோரும் அஞ்சா நெஞ்சனு சொல்லுவாஙக..

    சும்மா டமாசு..
    நானு கோவை சிட்டியில, நடு செண்டருங்கோ

    ReplyDelete
  53. @வெளியூரு..
    நான் இவ்வளவு டீடெய்ஸ் கொடுத்திருக்கேனே..
    அண்ணன் , நாந்தான் ஜக்கி வாசு தேவர் முதலியாருனு கண்டிபிடிச்சுடுவாரா?..
    நான் ஈசாக்குல்ல இருப்பதை மட்டும் யாருகிட்ட சொல்லாதையா ப்ளீஸ்..

    ReplyDelete
  54. அப்பாவிMarch 19, 2010 at 11:09 PM

    பட்டாபட்டியின் இந்த சமுக பொறுப்பை பாராட்டி, " சிறந்த சமுக பொறுப்பாளி மற்றும் துடைப்பாளி" என்ற பட்டத்தை, பட்டாபட்டியின் பேரன்புக்கும், பெருமதிப்புக்கும் உரிய தலைவர் நொந்தபாலு (பட்டாபட்டியாலே அந்த ஆளு நொந்து போயிட்டாரு) தலைமையில் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏதோ எழுதியாச்சி, அதான் உடனே ஒரு அவார்ட். பட்டாப்பட்டி நாம இங்க இருக்கறதே, பல அரசியல் நாதாரிங்களோட பட்டாபட்டிய உருவத்தான். இதெல்லாம் எழுத " பிரபல பதிவர்கள்" இருக்காங்க, நம்பலாம் நாதாரி பதிவர்கள்.
    ஒ.கே ... கமிங் டு தி பாயிண்ட்.
    எழுதப்பட்ட பதிவு,மிக பொறுப்புள்ள ஒன்று.
    இதன் முழு காரணம் டிவியில் வரும் ரியாலிட்டி ஷோக்கள். அளவுக்கு மீறிய திறமையை, குழந்தைகள் மீது திணிப்பதில் பெண்களின் பங்கு மிக அதிகம். தன் முகம்,மிக பிரகாசமாய் சபையில் தெரியவேண்டும் என்பதில் இவர்கள் எதிர்பார்ப்பு மிக அதிகம். தான் புகழ் பெற, ஒரே ஆயுதமாக தன் குழந்தையை பயன் படுத்துகிறார்கள். இதை பல குடும்பங்களில் நேரடியாக கண்டேன். இதன் பின்னணியில், அந்த புகழுக்கு பின் வரும் பணமும் ஒரு காரணம்.
    ஆண்களிடம் இது இல்லை, ஏன் என்றால், " தன் அப்பா சொன்னது, சரின்னு புரிஞ்சிக்கற வயசுல, தான் செய்யறது தப்பு சொல்ல ஒரு பிள்ள இருக்கும் அவனுக்கு ." very slow in understanding the reality. ஏற்கனவே அவனக்கு இருக்கும், பல பிரச்சனைகளில், அவன் குழந்தையை பயன் படுத்தி புகழ் பெற அவ்வளவு நாட்டம் இருக்காது.

    ReplyDelete
  55. @அப்பாவி
    " தன் அப்பா சொன்னது, சரின்னு புரிஞ்சிக்கற வயசுல, தான் செய்யறது தப்பு சொல்ல ஒரு பிள்ள இருக்கும் அவனுக்கு .
    //


    சத்தியமான வார்த்தை..அப்பாவி சார்..
    எங்க ரொம்ப நாளா ஆளக்காணோம்?

    ReplyDelete
  56. அப்பாவிMarch 19, 2010 at 11:45 PM

    பட்டாபட்டியின் இந்த பதிவிற்காக http://www.pattu.tk/ டொமைன் இலவசமாக வாங்கி, இலவசமாக வழங்கபடுகிறது.... இனி பதிவுலகில் பட்டாபட்டியை தேடுவோர், தயவு செய்து அந்த டொமைனை உபயோக படுத்தவும்.

    ReplyDelete
  57. //பட்டாபட்டியின் இந்த பதிவிற்காக http://www.pattu.tk/ டொமைன் இலவசமாக வாங்கி, இலவசமாக வழங்கபடுகிறது.... இனி பதிவுலகில் பட்டாபட்டியை தேடுவோர், தயவு செய்து அந்த டொமைனை உபயோக படுத்தவும்.//

    super

    ReplyDelete
  58. @அப்பாவி said...
    பட்டாபட்டியின் இந்த பதிவிற்காக http://www.pattu.tk/ டொமைன் இலவசமாக வாங்கி, இலவசமாக வழங்கபடுகிறது.... இனி பதிவுலகில் பட்டாபட்டியை தேடுவோர், தயவு செய்து அந்த டொமைனை உபயோக படுத்தவும்.
    //

    @யூர்கன் க்ருகியர் said...
    super
    //


    இது சூப்பரு... நன்றி அப்பு..

    ஆமா..யாராவது ’பட்டு’-வ பார்கலாமுனு வந்தா,
    அவங்களுக்கு, பட்டாபட்டிய கொடுத்திடுவோம்..

    ரைட்.. ஸ்டார்ட் மீசிக்..

    ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!