பட்டாபட்டியாரே..
நாங்கள் புதியதாக திருமணம் செய்துகொண்டவர்கள்..
எனது கணவர் ,சீக்கிரம், குழந்தைகள் வேண்டுமென நச்சரிக்கிறார்..
ஆனால் எனக்கு குழந்தைகள் வேண்டாம் என நினைக்கிறேன்.
எவ்வளவோ சொல்லியும் , எனது கணவர் விடாப்பிடியாக இருக்கிறார்.
உங்கள் கருத்துக்கள் என்ன?
- பெயர் சொல்ல விருப்பவில்லை.
மேடம் "பெயர் சொல்ல விருப்பவில்லை."..
ராணியில் "அல்லி பதில்" -களுக்கு அனுப்பு வேண்டிய கேள்வி...
சரி.. பட்டாபட்டிக்கு தெரியாதது உலகத்திலே உண்டா?.
நீங்கள் உங்கள் கணவரின் ஆபிஸ் முகவரி , மற்றும் ஒரு சிறு கவரில் ரூ 1 லட்சம் வைத்து , உங்கள் வீட்டிலிருந்து மூன்று தெரு தள்ளியுள்ள பொது கழிப்பிடத்தில் வத்துவிடுங்கள்..
நாங்கள் நம்பிக்கையான எங்கள் கம்பெனி ஆட்களை அனுப்பி, உங்கள் கணவருடன் ( எங்கள் பாஷயில் ) பேசுகிறோம்.
அதற்குப்பின் , உங்கள் கணவருக்கு குழந்தை ஆசையிருக்காது..
அப்படியே ஆசை வந்தாலும் , அவரால் முடியாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்
அடுத்த முறை , உங்கள் பிரச்சனைக்கு , 10 % கழிவு உண்டு என்பதை நிர்வாகம் இந்த நேரத்தில் சொல்லிக்கொள்ள விருப்புகிறது...
ரோஸ்விக்..
ReplyDeleteவெளியூரான் பிரச்சனைக்கு தீர்வு கண்டுபுடுச்சுட்டேன்..
அடுத்த பதிவில் பார்க்கவும்
//அப்படியே ஆசை வந்தாலும் , அவரால் முடியாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்//
ReplyDelete//அடுத்த முறை , உங்கள் பிரச்சனைக்கு , 10 % கழிவு உண்டு//
அதுக்கப்புறம் எப்படி பிரச்னை வரும் ? அதான் கழிச்சிடுவீங்கலே!
///உங்கள் வீட்டிலிருந்து மூன்று தெரு தள்ளியுள்ள பொது கழிப்பிடத்தில் வத்துவிடுங்கள்..///
ReplyDeleteஅதே பாத்ரூம் ஐடியா.விரைவில் நீங்களும் கோடிஸ்வரர் ஆகிடுவீங்க.
//ஆதி மனிதன் said...
ReplyDeleteஅதுக்கப்புறம் எப்படி பிரச்னை வரும் ? அதான் கழிச்சிடுவீங்கலே!
//
பிரச்சனைய முளையிலே கிள்ளியெறியனுமுனு பெரியவங்க சொல்லியிருங்காங்க சார்..
//ஜெய்லானி said...
ReplyDeleteஅதே பாத்ரூம் ஐடியா.விரைவில் நீங்களும் கோடிஸ்வரர் ஆகிடுவீங்க.
//
காலையில் போவது கழிப்பிடம்
கடைசியில் போவது கல்லறை..
ஹி..ஹி..
ஆ'பாசக்கார பயபுள்ளை'யாத்தான் இருக்கீங்க....மன்னிக்கவும்...
ReplyDeleteஆ...! பாசக்கார பயபுள்ளையாதான் இருக்கீங்க ...
//ஸ்ரீராம். said...
ReplyDeleteஆ'பாசக்கார பயபுள்ளை'யாத்தான் இருக்கீங்க....மன்னிக்கவும்...
ஆ...! பாசக்கார பயபுள்ளையாதான் இருக்கீங்க ...
//
பச்ச மண்ணு சார் நானு...