Pages

Wednesday, February 3, 2010

ப.மு.க வில் திடீர் திருப்பம்..

கடந்த இரண்டு நாட்களாக , ப.மு.க ஏற்பட்ட உட்கட்சி பூசலினால் , தமிழகமே இருண்டது...

சாலைகள் வெறிச்சோடிக்கிடந்தன..மக்கள் வீதிகளுக்கு வர
அஞ்சி , சீரியலே கதி என இருந்தனர்..  சிறையில் இருந்து தப்பிய பட்டாபட்டியார் , மீண்டும் அரியணை ஏறினார்..

அவர் , தினக்குசும்பு நிருபருக்கு அளித்த பேட்டியில்,
'எதிர் கட்சிக்காரர்களின் சதியினால் , வெளியூரான் மற்றும் ரெட்டைவால் மனம் மாறி , உட்டாலங்கடி வேலை செய்துவிட்டனர்.. கட்சியில் உள்ள களர்களை வெட்டியெடுக்க ,  மீண்டும் உயிர்தெரிந்ததாகவும்..இனி மக்கள் பயப்படத் தேவையில்லை' என கண்ணீர் மல்க உரையாற்றினார்..

மேலும் அவர் கூறுகையில் ,'வெளியூரான் மற்றும் ரெட்டைவால்' பிடிக்க
தமிழ் நாட்டிலிருந்து சிறப்பு காவல் படை அமைக்கப்பட்டுள்ளதாக
தெரிவித்தார்..

நமது நிருபர் தலைவரை பார்த்து ' அந்த இருவரையும் பிடித்து தூக்கிலிடுவீர்களா? அல்லது  நாடு கடத்த திட்டமா ?; என்று வினவிய போது,  'பொறுத்திருந்து பாருங்கள்...காலம் பதில் சொல்லும் ' என கூறினார்...

இங்கு நடந்த அமளி அமெரிக்காவிலும் எதிரொலித்தது.. அதை கட்டுப்படுத்த திணறிய 'ஓபாமா'  பட்டாபட்டியாரை தொலைபேசியில் அழைத்து 'கலவரத்தை ஒடுக்க , அமெரிக்கா வர முடியுமா?' என் கெஞ்சியதாக
உளவுத்துறை செய்தி அறிக்கை கூறுகிறது...

பட்டாபட்டியார் நாற்காலியை இறுக்க பற்றியபடி , 'தாம் அயல் நாட்டு விவகாரங்களில் தலையிடுவதில்லை என்ற கொள்கை வைத்துள்ளதாக பதிலளித்தார்.

கிளின்டனும்,மற்றும் மோனிகா இருவரும் நியூயார்க் டைம்ஸ்-க்கு அளித்த பேட்டியில்,
Such a great person , who was survey from the great local politics...
I still remember, ' When i was struggle with Monica law suit , I follow and implement his advice
to bring back my reputation.. Even Monica is keen interested to visit pattapatti palace



கடைசியா வந்த தகவல்களின்படி , ,'வெளியூரான் மற்றும் ரெட்டைவால்' திருப்பதியில் உண்டகட்டி வாங்க க்யூவில் நின்றபோது , காவல் துறையினரால் சுற்றி வளைக்கப்பட்டனர்.

அதைபற்றி காவல் துறை அதிகாரி 'குத்து கருப்பன் ' கூறியது....
இருவரையும் பிடிக்க இந்தியா முழுவதும் வலைவீசலாமா.. அல்லது எலிப்பொறி வைத்துப் 'கப்' என பிடிக்கலாமா?  என ஆலேசனை செய்து கொண்டிருந்த போது , தலைவர் தொலைபேசியில் அழைத்து , ' அரசாங்க பணத்தை வீண் செலவு செய்யாமல்  உடனடியாக ரயில் ஏறி திருப்பதி செல்லுமாறு கூறினார் ...

தலைவர் சொன்னால் அதில் உட்கருத்துதிருக்கும் என ஊகித்து , விரைந்து திருப்பதி சென்றோம்  (ஹி..ஹி.. டிக்கெட் எடுக்காமல்தான்)..

மிகவும் பசியாக இருந்தனால் உண்டகட்டி வாங்க 'க்யூ'வில் நின்றோம்...
அப்போது சந்தேகத்துகிடமான வகையில் இருவர் உண்டகட்டியை கைகளில் ஏந்தியபடி  படிக்கட்டில் அமர்திருந்தனர் ..அதில் ஒருவர், முகத்தை தொப்பியால் மூடியபடி குனிந்து  அவரது பட்டாபட்டியப் பார்த்தவாரு கண்ணீர் விட்டு அழுதுகொண்டிருந்தார்..

மற்றொருவர் , மொட்டை அடித்துக்கொண்டு , முகத்தில் சந்தனம் பூச முயற்சித்து கொண்டிருந்தார்..

எங்களுக்கு சந்தேகம் வந்ததால் , ஏட்டு ஒருவரை அனுப்பி என்ன பேசுகிறார்கள் என் ஒட்டுகேட்க   அனுப்பினோம்..
"சே.. ஏரோப்ளேன் பெட் ரோல் ஊத்தி கொழுத்தியிருந்தால் , நாமே ராஜாவாக இருந்திருக்கலாம்"  எனப் பேசிக்கொண்டு இருந்தனர்..

நாங்கள் உடனடியாக இருவரையும் கைது செய்து டெல்லிக்கு அனுப்பிவிட்டோம்..  இனி தலைவர் பார்த்துக்கொள்வார்..

மேலும் அவர் கூறுகையில் , 'தமிழகத்தில் இருள் நீங்கி .... புத்தொளி பிறக்க தலைவர் ஆவன செய்வார் என் நம்புகிறேன்..
அப்படியே அடுத்த முறை எனக்கு, பதவி உயர்வு கிடைக்க ஏழு மலையாண்டவருக்கு மொட்டை போடப் போவதாக கூறியுள்ளார்...

.
.

14 comments:

  1. ஆகா.. ஆரம்பிசிட்டுனுகளா?..

    ReplyDelete
  2. அமெரிக்காவின் வருங்கால முதல்வரும் ஐ நா சபையின் கௌரவ தலைவருமான திரு பட்டாபி அவர்களுக்கு வணக்கம்..திகார் சிறையிலிருந்து உங்கள் அன்பு தம்பி வெளியூர்காரன் எழுதி கொள்வது...தகவலறிந்தேன்...துணுக்குற்றேன்..என்னை கொலை செய்ய நானே சதி திட்டம் தீட்டி இருப்பேனா என நீங்கள் ஆலோசித்து பார்க்க வேண்டும்...நீங்கள் வேறு நான் வேறா..நீங்கள் எப்படி உங்கள் அன்பு தம்பியை தவறாக நினைக்கலாம்...நீங்கள் அப்படி நினைத்த அந்த கணமே என் உயிர் பிரிந்து விட்டது.ஆகையினாலே தயவு செய்து என்னை தூக்கில் போடுமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...(இல்லாங்காட்டி..உம்னு சொல்லு இங்க ரெட்டைய ஜெயில்லையே வெச்சு போட்டு தள்ளிடறேன்..என்ன வெளில விட்ரு..உன் காலடிலையே கெடந்து என் சொச்ச காலத்த கழிச்சுடறேன்..என்ன சொல்ற..ரெட்டைய போட்ரவா....)

    ReplyDelete
  3. பட்டாபி மறுபடியும் சொல்றேன்...என்ன வெளில விட்ரு...என்ன ராணுவ அமைச்சராக்கு...ரெண்டே வருசத்துல காஷ்மிர பாகிஸ்தான்கிட்ட குடுத்துட்டு நாம பாகிஸ்தான புடிச்சர்லாம்..அதுக்கப்றம் ஹாங்காங்..அப்பறம் சிங்கப்பூர்..மறு வருஷம் மலேசியா...கடைசியா சீனா..எல்லா நாட்டையும் சூழ்ச்சி பண்ணி உன் காலடில கொண்டு வந்து நான் போடறேன்...யோசிச்சு பாரு பட்டாபி...ஆசியா துணை கண்டத்துக்கே தலைவர் பட்டாபி..எப்டி இருக்கு கேக்கறதுக்கு...யோசிச்சு சொல்லு...என்ன ராணுவ அமைச்சர மட்டும் ஆக்கு...மிச்சத்த நான் பார்த்துக்கறேன்....

    ReplyDelete
  4. செல்லமே.. என் உடன் பிறவா தம்பியை தூக்கில் போட விடுவேனா?..
    பல உயிர்கள் பலியாக விட மாட்டேன்...

    உனக்காக ஆப்கானிஷ்தான் என்ற நாட்டை ஒதுக்கியுள்ளேன்..

    பாலும் தேனும் ஓடும், அந் நாட்டை பாதுகாக்க ஆட்கள் வேண்டுமாம்..
    உடனே எனக்கு நினைவில் வந்த முகம், நீ தான் என்பதை நாடு அறியும்..

    உனக்கு உடனடி விடுதலை..
    புறப்படு.. வெற்றிக் கனியை பறித்து ரெட்டைக்கு கொடுத்திடு...

    ReplyDelete
  5. நன்றி என் இதயமே...சில வருடம் கழிச்சு நாம மீட் பண்ணுவோம்...(அன்னிக்கு இருக்குடி மாப்ள உனக்கு...போர்க்களத்துலையே வெச்சு போட்டு தள்ரண்டி உன்ன..ஆப்கானிடம் வீழ்ந்தது இந்தியான்னு வரலாறு சொல்லும் பாரு....)...ரெட்டையையும் என்னுடன் வர அனுமதித்ததற்கு சிறப்பு நன்றிகள் திரு பட்டாபி அவர்களே...(மூளைக்காரன உன்ட்ட விட்டுட்டு போறதுக்கு நான் என்ன பட்டாபட்டியா....)

    ReplyDelete
  6. ஷ்..ஷ்..

    பாகிஸ்தான க்ராஸ் பண்றப்போ, வெடிக்கற மாறி செட் பண்ணிடு..

    ங்கொய்யா...ஒரே கல்லுல ரெண்டு மாங்கா..
    சதி பண்றாங்களாமா.. சதி..

    ReplyDelete
  7. நமக்கு எதுக்குவோய் மூளக் காரன்.. பின்னாடி பிரச்சனை வரக்கூடாது பாரு..

    ReplyDelete
  8. தக்காளி..கேட்டோன்னையே ரிலீஸ் பன்னப்பவே சந்தேகப்பட்டேன்...பட்டாப்பட்டி வில்லனாச்சே விடமாட்டானேன்னு..குண்டா வெக்கற..நான் அரசியல்வாதி போர்வைக்குள்ள இருக்கற தீவிரவாதியா..நான் ஜெயல்லேர்ந்து வெளில வந்தாதான...வரமாட்டண்டி மாப்ள...வரமாட்டேன்டி.என் கழகத்தையும் கழக உடன்பிறப்புகளையும் பிரிய மனமில்லாததால் தனது விடுதலையை நிராகரித்தார் வெளியூர்காரன்னு நாளைக்கு தினகுசும்புல வரும் பாரு.....

    ReplyDelete
  9. ஆரம்பிச்சிட்டீங்களா.....

    ReplyDelete
  10. யோவ் காவல்துறை.. அந்த GPS -க் கொடு..
    என்னாலளே.. இரு பாயிண்டு மட்டும் முன்னாடி, பின்னாடி ஆடிக்கிட்டு இருக்கு..
    இன்னொறு பாயிண்டு செத்த பொணமாறி நகராமயிருக்கேயா?..

    சொன்ன மாறீ ஆப்கானிஷ்தான் போவாங்களா?
    எதுக்கும் ஒரு கண்ண, அவங்க மேல வெச்சுக்கோலே....

    இன்னும் ஒரு மணி நேரத்தில இடத்த காலி பண்ணலன வெய்யி , உள்ளயே போட்டுத்தள்ளிடுங்கலளே..
    நான் உள் நாட்டுக் கலவரமுனு அறிக்கை கொடுத்திடரேன்..

    யோவ்.. ரெண்டு மாலை எதுக்கையா?..

    போதும்.. போதும் ஒரு மாலை மட்டும்
    காச கரியாகத்லே மூதி....

    ரெண்டு பேருக்கும்..சேர்த்தாப்ல போட்டுடலாம்..
    ஆமா.. ஈ-யும் பீ-யும் இருந்தாங்க...அப்புறம் எதுக்கையா பிரிக்கீங்க...
    சிரிச்சுட்டே செத்த மாறீ கிராபிக்ஸ் பண்ணி பத்திரிக்கைக்கு அனுப்புலே...

    ReplyDelete
  11. //கண்ணகி said...
    ஆரம்பிச்சிட்டீங்களா.....
    //

    அக்கா உடுங்கா.. 'உடன்பிறப்பு மாறி',
    ஆங்க்..
    'கண்ணுக்கு இமை மாறி' பார்த்திடிருந்தேக்கா..
    என்னையே போட்டு தள்ள ப்ளான் சதி பண்றாங்களா.. சதி..
    பாருங்க .. கோவத்தில வார்த்தையே வரமாட்டிங்குது..
    பிரச்சனைய முடிச்சுடு வந்து அடுத்த பதிவ போடரேங்கா...

    ReplyDelete
  12. கலக்கல்.

    //இங்கு நடந்த அமளி அமெரிக்காவிலும் எதிரொலித்தது.. அதை கட்டுப்படுத்த திணறிய 'ஓபாமா' பட்டாபட்டியாரை தொலைபேசியில் அழைத்து 'கலவரத்தை ஒடுக்க , அமெரிக்கா வர முடியுமா?' என் கெஞ்சியதாக...//

    ஹா...ஹா...
    ஆலேசனை, கொழுத்தி போன்ற பிழைகளைத் திருத்தி இன்னும் கலக்குங்க...

    ReplyDelete
  13. //ஸ்ரீராம். said...
    ஹா...ஹா...
    ஆலேசனை, கொழுத்தி போன்ற பிழைகளைத் திருத்தி இன்னும் கலக்குங்க...
    //


    அட.. ஆமா சார்.. தப்பு தப்பா அடிச்சிருக்கேன்..
    இதுதான் ' கோபம் கண்ணை மறைத்தது..' என்பதா?...

    எடுத்துக் காட்டியதற்கு நன்றி ஸ்ரீராம் அவர்களே...

    ReplyDelete
  14. தி.கு நிருபர் : பட்டாபட்டியின் கதி என்ன?

    ரெ.வா : பட்டாபட்டிக்கு லிம்ஃபோசாடயரியகோமா வந்துவிட்டதால் அவரை மெண்டல் ஹாஸ்பிட்டல் அனுப்பிவிட்டோம்.

    மேலும் பேட்டிக்கு....http://rettaivals.blogspot.com/2010/02/blog-post_03.html

    ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!