Pages

Thursday, November 18, 2010

பொறுத்தார் பூமி ஆள்(ழ்)வார்.

இடம் : சத்யமூர்த்தி பவன்
நேரம் : காலை கருக்கல்

அண்ணே வணக்கண்ணே. நாந்தான் பட்டாபட்டி..


அடடே. வாங்க.. என்னோட அறிக்கைய பார்த்து மெய்சிலிர்த்துதானே வந்தீங்க?.

நீங்க வேற தல. உங்க கட்சிக்கு ஆள் சேர்க்க, யுவராசாகூட நடைப்பயணம் போயிருந்தேன். அப்படியே கஷ்டப்பட்டு 4 பேரை  தேத்தியிருக்கேன். பார்த்துப் பன்ணுங்க.

நாலு பேரா?.. தம்பி உன்னைய மாறி இள ரத்தம் தான் கட்சிக்கு வேணும்.ஆமா இந்த நாலு பேர்கிட்டேயும்  சொல்லித்தானே சேர்த்திருக்கே.

என்னா தலைவா?.. ஏதாவது புதுசா சட்டம் போட்டிருக்கீங்களா?..  சொல்லவேயில்லை..

அது இல்லப்பா. இளங்கோவன் என்னை மதிக்கிறதேயில்லை. சரி.... வயசான கிழடுக. அப்படிதான் இருக்கும்.  ஆனா பாரு.  நேற்று வந்த சின்ன பையனுககூட என்னை மதிக்கமாட்டிங்கிறானுக.

யாரை தலைவா சொல்றே?. நம்ம ராகுல் பயலையா?.

ஆகா.. தப்பு.. தப்பு.. கன்னத்தில போட்டுக்க. அவங்க இல்லேனா, இந்தியாவே இல்லை தெரியுமா?.  சோனியா பரம்பரையே நாட்டுக்காக உழைச்ச பரம்பரை. அவங்க பாதம் இந்த மண்ணில பட்டதாலதான், இந்தியா   புண்ணியபூமி ஆகியிருக்கு..  (சாஷ்டாங்கமாக வடக்கு பார்த்து விழுந்து வணங்குகிறார்.)

அப்படியே, நீயும் விழு தம்பி. போட்டோ எடுத்து , விளம்பரம் பண்ணிட்டா, அடுத்த ஐந்து வருசத்துக்கு யாராலும் அசைக்க முடியாது.

என்னத்த தலைவா அசைக்கமுடியாது?.

இல்ல.. இந்த  தமிழக காங்கிரஸ் தலைவர் பதிவில் நான் இருப்பது ரொம்ப பேருக்கு பிடிப்பதில்லை.  நான் வந்தபின்தான், தமிழகத்திலேயே மழை பெய்தது. ஆனா எல்லாப்பயலும் மறந்துட்டானுக.

சரி அதை விடுங்க தலைவா. கால்ல விழும் காலாச்சாரம் எனக்கு பிடிக்காது. அதுமில்லாம, ரெண்டு நாளா  முதுகுவலி வேற.
இப்ப எதுக்கு , கழிப்பறைய இடிச்சுட்டு இருக்காங்க?.

ஓ. அதுவா தம்பி.. ( ரகசியமாக) கழிப்பிடம் வடக்கு பார்த்து இருக்கு. அப்படி உட்கார்ந்தா, அன்னை  கோவிச்சுக்குவாங்க. மேலும் எங்கள் அன்னை எங்களை..

யோவ்.. விடுய்யா.. எரிச்ச மயிறா வருது.. சரி . உங்க அன்னை இருக்கும் திசை பார்த்து கக்கூஸு போகமாட்டே.அதுதானே மேட்டரு. விட்டுத்தள்ளு. வேற ஏதாவது புதுசா விசயம் இருந்தா சொல்லு.

தம்பி கோபமாயிருக்குறமாறி தெரியுது. . நேற்று என்னோட அறிக்கைய படிச்சீகளா?. கஷ்டப்பட்டு நாலு மாசம் உட்கார்ந்து, யோசனை பண்ணி, பக்காவா அறிக்கை விட்டிருக்கேன். இனி ஒரு பயலும் என்னை அசைக்கமுடியாது.

அப்புறம்..ராசாவ கழட்டி விட்டாச்சு. அம்மா அறிக்கை விட்டாச்சு. உம். அடுத்த நாடகத்தை பார்க்க தமிழக  மக்கள் துண்டப்போட்டுக்கிட்டு ரெடியாயிட்டானுக. சரி  யாருகூட கூட்டணி?.

அதாவது எங்கள் அன்னை யாரை கை காட்டுகிறார்களோ, அவர்களுடந்தான் கூட்டணி. எங்கள் அன்னை எங்கள்  தெய்வம். எங்கள் தெய்வம் பெற்றெடுத்த சின்ன தெய்வம் ராகுல் காந்தி. அவர் கண் காட்டினால், தமிழகத்தில ஆட்சி மாற்றம் ஏற்ப்படும். மேலும் எங்கள் தெய்வம்.................


யோவ்.. Stop.. Stop..என்னால சத்தியமா முடியலே. ஒரே தெய்வங்களா இருக்கு.. சத்தியமா இந்தியா புண்ணிய பூமிதான்.

தம்பி. கடைசியா எங்களை நல்லா புரிஞ்சுக்கிட்டீங்க. அப்படியே அந்த உறுப்பினர் அட்டையில ஒரு கையெழுத்தை மட்டும் போட்டுட்டீங்கனா, மீதிய நான் Fill பண்ணுக்குவேன்.

வெண்ணை.. உயிரை குடுக்க சொல்லு. கொடுக்கிறேன். ஆனா, உங்க கட்சீல மட்டும் சேரமாட்டேன்.  சுதந்திரம் வாங்கிதந்து(?), நாட்டை, ஆளு..ஆளுனு ஆண்டுக்கிட்டு. இன்னும் கூசாம, இந்தியாவை வல்லரசு  ஆக்குவோமுனு கூவிக்கிட்டு இருக்கீங்களே. நான் என்ன மூளை இல்லாத மடையனா?.
இங்க பாரு .. வளவளனு பேசாம அந்த அறிக்கைய கொடு. பப்ளிஸ் பண்ணிட்டு பொழப்ப பார்க்கப்போறேன்.
--------------------------------------------------------------------------------------------------------
பின்வருவது அண்ணன், ஆருயிர் தலைவன், தெய்வம் பெறாத பிள்ளை கொடுத்த அறிக்கை.  பூசை அறையில்  வைத்து, இதை மூணு வேளை நாள் தவறாது சொல்லி வந்தால், இந்தியா வல்லராசுக் காலம் விரைவில  வந்துவிடும்..
--------------------------------------------------------------------------------------------------------


//
 • சோனியா காந்தி பிரதமர் பதவியையே ஏற்க மறுத்து தியாக உணர்வோடு மக்கள் பணியாற்றி வருபவர். குறிப்பாக  இலங்கை தமிழர்களை பாதுகாக்கும் பாசமிகு தாயாக செயல்பட்டு வரும் நிகரற்ற தலைவியாவார்.


 • இலங்கைப்போர் நிகழ்வுகள் தொடங்கிய காலத்திலும், அது நடைபெறும் நேரத்திலும் அது முடிவுக்கு வந்து சுமூக சூழ்நிலை முழுமையாக உருவாகப்போகும் இன்றைய காலக்கட்டம் வரை அனைத்து நிலைகளிலும் சோனியாகாந்தியின் மனிதாபிமான வழிகாட்டுதலில் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான மத்திய அரசு எடுத்ததொடர் நடவடிக்கைகளை  தமிழக மக்களும், இலங்கைவாழ் தமிழர்களும் ஒருபோதும் மறந்திருக்க மாட்டார்கள்.

 • போர் நிறுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி 2009-ம் ஆண்டு ஏப்ரல் 27-ந் தேதி தமிழக முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற உண்ணாநோன்பிலும், அதே ஆண்டு பிப்ரவரி மாதம் 7, 8, 9-ந் தேதிகளில் நடைபெற்ற பேரணி, பொதுக்கூட்டங்களிலும் பங்கேற்க வேண்டும் என்று சோனியா காந்தி அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு காங்கிரஸ் தொண்டர்கள் பங்கேற்றனர்.

 • சோனியாகாந்தியின் வழிகாட்டுதலில் மத்திய அரசு 800 டன் உணவு, மருந்து மற்றும் அத்தியாவசிய  பொருட்கள் 4-11-2008 அன்றும், 9-3-2009 அன்று 25 டன் மருந்து பொருட்களுடன் டாக்டர்கள்,  செவிலியர்கள் உள்பட இந்திய மருத்துவக்குழு இலங்கை போர் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டு இலங்கை  தமிழர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

 • போர்க்காலத்தில் அங்கு உணவின்றி தவித்த இலங்கை தமிழர்களுக்கு சோனியா காந்தியின் ஆணைகேற்ப கடந்த  16-4-2009 அன்று அரிசி, பருப்பு, மருந்து மற்றும் துணிமணிகள் ஆகிய நிவாரணப்பொருட்கள்  வழங்கப்பட்டன.

 • இலங்கைத் தமிழர்களை காப்பாற்ற அங்கு போர் நிறுத்தம் வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங் இலங்கையில்  நடைபெற்ற சார்க் மாநாட்டின் போது அதிபர் ராஜபக்சேவிடம் நேரிலும், மீண்டும் தொலைபேசி மூலமும்  இரண்டுமுறை பேசினார்.

 • இந்திய வெளியுறவுத்துறை மந்திரி பிரணாப் முகர்ஜி, இலங்கைக்கு நேரடியாக சென்று அதிபர் ராஜபக்சேவை  சந்தித்து, `இலங்கையில் போர் நிறுத்தப்பட வேண்டும். அப்பாவி தமிழர்களுக்கு பாதுகாப்பு வேண்டும்' என்று  வலியுறுத்தினார். அதையொட்டி 48 மணி நேரத்தில் போர் நிறுத்தம் செய்யப்பட்டது.


 • இலங்கையில் அமைதி நிலை உருவாக வேண்டும், அதற்கிடையே போரில் அல்லல்படும் இலங்கை தமிழர்களின்  துயர் துடைக்கப்பட வேண்டும் என்பது போன்ற நடவடிக்கைகளில் மத்திய அரசு எடுத்த ஒருசில நடவடிக்கைகளை மட்டுமே நினைவுபடுத்தியுள்ளேன்.

 • அதைத்தொடர்ந்து போர் நிறுத்தப்பட்டு அங்கு அமைதி சூழல் உருவான நிலையில் அங்குள்ள தமிழர்களின் புனர்வாழ்வுக்கு மத்திய அரசு சார்பில் 5 ஆயிரம் கோடி ரூபாயை வழங்கியிருக்கிறது என்பதை நாடறியும்.


 • வீடிழந்து, உணவின்றி தவிக்கும் இலங்கை தமிழர்களுக்கு, அங்கு 50 ஆயிரம் வீடுகள் கட்டித் தரும் பணி  விரைவில் தொடங்கும் என்ற செய்தி அண்மையில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.


 • இலங்கை போர்க்காலம் தொடங்கி, அது நின்றதற்கு பின்பு இதுவரை மனிதாபிமான உணர்வோடு மத்திய அரசால்  நடைபெற்று வரும் இலங்கை தமிழர்களின் மறுவாழ்வு திட்டங்கள் அபரிமிதமாக தொடர்ந்து நிறைவேற்றப்பட்டு வருகின்றன.


 • அங்கு விடுதலைப்புலிகளின் பிரச்சனை உக்கிரம் அடைந்த கடந்த 1983-ம் ஆண்டு முதல் இந்திராகாந்தி,  ராஜீவ்காந்தி, பிரதமர் நரசிம்மராவ் ஆகிய தலைவர்களின் காலங்களில் இலங்கை தமிழர்களுக்கு வாழ்வுரிமையை பெற்றுத்தரும் பணிகளில் உலகளாவிய அளவில் எத்தனை எத்தனை நடவடிக்கைகளை செயல்படுத்தி வந்தார்கள்  என்பது வரலாற்றில் மறைக்க முடியாத அத்தியாயங்கள்-சாதனைகள்.


 • ராஜீவ்காந்தி-ஜெயவர்த்தனே ஒப்பந்தம் இலங்கை தமிழர்கள் வாழ்வை பாதுகாக்கும் அரணாக உருவாக்கப்பட்டது. ஆனால் வைகோவின் பிதாமகன்களான விடுதலைப்புலிகளின் தடையால் அது நிறைவேறாமல் போனது.


 • இலங்கை தமிழர்களின் வாழ்வுரிமைக்காக போராடிய விலைமதிக்க முடியாத தலைவர் ராஜீவ்காந்தி அவர்களை  தமிழின துரோகிகளால் பறிகொடுத்தோம். இன்றைக்கு சோனியா காந்தி பிரதமர் பதவியையே ஏற்க மறுத்து தியாக  உணர்வோடு மக்கள் பணியாற்றி வருபவர். குறிப்பாக இலங்கை தமிழர்களை பாதுகாக்கும் பாசமிகு தாயாக  செயல்பட்டு வரும் நிகரற்ற தலைவியாவார்.


 • அரசியல் நடத்த வேறு வழியோ, கொள்கையோ இல்லாத நிலையில் இலங்கை தமிழர் ஒன்றை மட்டுமே வைத்து  தமிழின மக்களுக்கு விரோதமாகவும், எஞ்சியிருக்கும் தமிழர்களை காப்பாற்றும் மத்திய அரசு நடவடிக்கைகளுக்கு எதிராகவும் பேசி செயல்படுகிற வைகோவுக்கு சோனியா காந்தியை பற்றி பேச எவ்வித அருகதையும் கிடையாது.


 • தமிழர்களின் வாழ்வுரிமைக்காக போராடிய தலைவர் ராஜீவ்காந்தி அவர்களை கொலை செய்த கொலையாளிகளுக்கு துதிபாடும் வைகோ போன்றவர்கள் இலங்கை தமிழர்களுக்கு மட்டுமல்ல, தமிழக மக்களுக்கு கூட எதையும்  செய்யும் வாய்ப்பற்றவர்கள் என்பதை மக்கள் அறிவார்கள்

//


 டிஸ்கி.
நாளைபின்னே, இந்தியா ஏன் முன்னேறலேனு கேள்வி கேட்பவர்களுக்கு..

யோவ்.. மூணு வேளை பூசை பண்ணுங்கனு அண்ணாரு சொல்லியாச்சு. அதை ஒழுக்கமயிரா பண்ணினா,  இந்தியா முன்னேறும்.  இல்லே.. பிரியங்காவோட சின்ன தெய்வங்களோ, இல்லை ராகுல்க் காந்தியோட, சின்ன   தெய்வங்களோ வந்து இந்தியாவை வல்லரசு ஆக்கும் வரை பொறுத்துக்குங்க..

பொறுத்தார் என்னத்தை ஆள்வார்....

ஆம்..           பூமியை ஆள்வார்....


( சரியா சொன்னவங்க, அப்படியே அந்த காங்கிரஸ் உறுப்பினர் அட்டைய எடுத்து பூர்த்திசெய்து அனுப்புங்க. அதில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும், அந்த நாலு(?) பேருக்கு, ராகுல் காந்தி கைப்பட எழுதிய, “பரதேசி மக்களும், பார்புகழ் காங்கிரஸும் “ என்ற  புத்தகம் வழக்கப்படும்)


மேலும் குலுக்கல் நடைபெறும் நாளன்று, அன்றைய அரசியல் நிலவரப்படி அன்னையுடன், அம்மாவோ அல்லது,  கருநா ணாநிதியோ கை கோர்த்து மக்களுக்கு காட்சி அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முந்துங்கள்.. உறுப்பினர் அட்டையை பூர்த்தி செய்யுங்க.. அன்னைய ஓட்டிச்செல்லுங்கள்... சாரிப்பா.. அன்னையின் அன்பைப் பெற்றுச்செல்லுங்கள்...

(இளங்கோவன் அவர்களுக்கு.... தங்கபாலுக்கு சனி சங்கோட நிற்குது சார்.. அவர் அறிக்கையில், உங்கள் அன்னையை,  தெய்வம் என்று குறிப்பிடாமல், பேரை சொல்லியிருக்காரு.. உம்.. போர் முரசு கொட்டுங்கள்.. வாழ்க தமிழமக்கள்.. வளர்க இந்தியா...)

.
.
.

59 comments:

 1. தங்கபாலு அறிக்கையில் இருக்கற ஒரு வரிக்கு ஈடா ஒரு காமெடி பதிவு போட முடியுமா? பெத்த தாய் எதிர்த்தாலும் அன்னை சோனியாவின் புகழ் பாடாமல் ஓய மாட்டோம்.
  2110-ல இந்த நாட்டின் பிரதமரா ராகுல் காந்தியின் கொள்ளுப்பேரனை ஆட்சியில் அமர்த்தி இந்த நாட்டு மக்கள் "அழகு" பார்ப்பார்கள்.

  ReplyDelete
 2. இத்தனை தெய்வங்களா???அதான் நாடு முன்னேற மாட்டிக்குது...

  ReplyDelete
 3. என்ன தம்பி, காசு பொறாத விசயத்துக்குப் போய் இவ்வளவு டைம் செலவளிச்சிருக்கறயே?

  ReplyDelete
 4. ஹிஹி. இப்படிக்கு ஒண்ணுமே புரியாமல் கமென்ட் போடுவோர் சங்கம்

  ReplyDelete
 5. Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

  ஹிஹி. இப்படிக்கு ஒண்ணுமே புரியாமல் கமென்ட் போடுவோர் சங்கம்
  //

  சே.. இவ்வளவுநாளா உன்னிய மூளக்காரனு நினச்சுக்கிட்டு இருந்தேன்...

  பகிர்வுக்கு நன்னி....ஹி..ஹி
  ( அடுத்த கல்யாணம் எப்போ?.. எங்கே?. ஹி..ஹி)

  ReplyDelete
 6. Blogger DrPKandaswamyPhD said...

  என்ன தம்பி, காசு பொறாத விசயத்துக்குப் போய் இவ்வளவு டைம் செலவளிச்சிருக்கறயே?
  //

  என்னண்ணே பண்றது?.. அறிக்கை விட்டுருக்காங்க.. பதில் சொல்லாட்டி, என்னை இந்தியாவின் உளவாளினு உளருவானுக.. அதான் ..ஹி..ஹி

  ReplyDelete
 7. Blogger ganesh said...

  இத்தனை தெய்வங்களா???அதான் நாடு முன்னேற மாட்டிக்குது...
  //

  அடுத்து இன்னொரு சூப்பர் தெய்வம் வரப்போகுது.. ரிலீக்கு காத்திருங்கள்..

  ( எந்த வெள்ளக்காரி எங்களோட தலைவிதிய நிர்ணியிக்கப்போறாளோ..உம்.... ராகுலுக்கே வெளிச்சம்..)

  ReplyDelete
 8. @பெயர் சொல்ல விருப்பமில்லை ...

  தங்கபாலு அறிக்கையில் இருக்கற ஒரு வரிக்கு ஈடா ஒரு காமெடி பதிவு போட முடியுமா?
  //

  தமிழனுக, மறப்போம் மன்னிப்போம் என்ற குணம் உடைவர்கள் அண்ணா...

  ReplyDelete
 9. அறிக்கையை படிச்சா எனக்கு பீப்பீ ஏறுது..

  ReplyDelete
 10. எப்படிதான் வாய்கூசாம இவனுங்களால இப்பிடி பொய் பேச முடியுது .. இதுகளை நம்பியும் சில பேர்....!!!!!!!!!!!!!

  காங்கிரஸுன்னாலாலே காமெடிதானே ஹய்யோ..ஹய்யோ

  ReplyDelete
 11. //பொறுத்தார் என்னத்தை ஆள்வார்....

  ஆம்.. பூமியை ஆள்வார்....//

  அதற்க்காதான் அன்னை பொறுத்திருக்கான்களோ? அப்போ அடுத்து அன்னையோட ஆட்சியா?

  ReplyDelete
 12. //சுதந்திரம் வாங்கிதந்து(?), நாட்டை, ஆளு..ஆளுனு ஆண்டுக்கிட்டு.//

  சுதந்திரம் வாங்கி எங்க தந்தாங்க. அதை அவங்களேதானே வச்சுக்கிட்டாங்க??

  ReplyDelete
 13. அட கருமமே ! அந்த தலைப்பை பார்த்தே ஒரு பயலும் மேல்கொண்டு படிப்பதே இல்லை. பதிரிக்கைக்காரனுக்கு இடம் நிரப்ப
  வேண்டும் அல்லவா? தமிழ் நாட்டில் காங்கிரஸ்காரர்கள் விடும் அறிக்கையை "வேலை மெனக்கட்டு " படித்துவிட்டு அதற்கு ஒரு பதிவும் போட்டு .............................................................போங்கா பட்டா.................................எனகு உங்க மேல கோவம் கோவமா வருது. உங்க பேச்சுக்கு காஆஆ.............................................................

  --

  ReplyDelete
 14. நக்கலுடன் கூடிய தெளிவு

  ReplyDelete
 15. பட்டாபட்டி.. said...
  அடுத்து இன்னொரு சூப்பர் தெய்வம் வரப்போகுது.. ரிலீக்கு காத்திருங்கள்.. ...////

  அது எப்பங்க வருது....நான் இவ்வளவு நாளா அவருக்கு திருமணம் ஆகலைன்னு நினைச்சிக்கிட்டு இருந்தேன்......)))

  ReplyDelete
 16. முக்கியமான மேட்டரை விட்டுட்டேன்.. அதாவது தங்கபாலு சொல்ல மறந்தது..

  1. எங்க அன்னை , ராகுல் காந்திய 10 மாசம் சுமந்து பெத்தாங்கோ..

  2, பிரியங்காவை 11 மாசம் சுமந்து பெத்தாங்கோ...

  ReplyDelete
 17. ஓ ............... இங்கயும் கிடாவெட்டு நடந்திருக்கா ???? பேஸ் பேஸ் , இரு ஒரு சின்ன ஆணி புடுங்கிட்டு வந்துடுறேன்

  ReplyDelete
 18. மேட்டரே கொமட்டுது. இதுல ஃபோட்டோ வேற போட்டுட்டீங்களே. காலைல இந்த பரதேசி மூஞ்சிய பார்த்தா உருப்படவா..ஏன்! ஏன்! இந்த கொல வெறி

  ReplyDelete
 19. Blogger வானம்பாடிகள் said...

  மேட்டரே கொமட்டுது. இதுல ஃபோட்டோ வேற போட்டுட்டீங்களே. காலைல இந்த பரதேசி மூஞ்சிய பார்த்தா உருப்படவா..ஏன்! ஏன்! இந்த கொல வெறி
  //

  மக்கள் இந்த மூஞ்சிய மறந்தாப்புல விட்டுப்புட்டு.. ஓட்டா குத்திடப்போறானுகனு ஒரு முன்னெச்சறிக்கைண்ணே...

  ஹா.ஹா..

  ReplyDelete
 20. இன்று முதல் நமது பட்டா பட்டி அவர்கள் சிங்கபூர் மாநில காங்கிரஸ் கொ.ப.செ வாக பொறுப்பேற்றுள்ளார் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்

  ReplyDelete
 21. ரேடார்களையும் ராணுவத்தினரையும் அனுப்பி போரை முடிவுக்கு கொண்டு வந்தது பற்றி ஏதும் சொல்லாம விட்டுட்டாரு.

  ReplyDelete
 22. அவனுக விடுற அறிக்கைய அவனுகளே படிக்கமாட்டானுக..

  காங்கிரஸ்காரங்க எல்லாம் தமிழர்களா?..

  ReplyDelete
 23. Blogger கும்மி said...

  ரேடார்களையும் ராணுவத்தினரையும் அனுப்பி போரை முடிவுக்கு கொண்டு வந்தது பற்றி ஏதும் சொல்லாம விட்டுட்டாரு.
  //

  அதைச்சொன்னா விழும் 50 ஓட்டு கூட விழாது பாஸ்..

  அதெல்லாம் சொல்லமாட்டானுக இந்த பன்னாடைக...

  ReplyDelete
 24. //அவங்க பாதம் இந்த மண்ணில பட்டதாலதான், இந்தியா புண்ணியபூமி ஆகியிருக்கு.. (சாஷ்டாங்கமாக வடக்கு பார்த்து விழுந்து வணங்குகிறார்.///

  அவுங்க வரலைனா புண்ணிய பூமி ஆகிருக்காது அப்படின்னு சொல்லுறீங்களா ..?

  ReplyDelete
 25. ///பின்வருவது அண்ணன், ஆருயிர் தலைவன், தெய்வம் பெறாத பிள்ளை கொடுத்த அறிக்கை. பூசை அறையில் வைத்து, இதை மூணு வேளை நாள் தவறாது சொல்லி வந்தால், இந்தியா வல்லராசுக் காலம் விரைவில வந்துவிடும்..///

  பூஜை பண்ணுற செலவு கட்சி ஏற்றுகுமா ..? அத சொல்லுங்க மொதல்ல .. அப்புறம் பூச பண்ணுரதப் பத்தி பேசலாம் ..

  ReplyDelete
 26. //போர் முரசு கொட்டுங்கள்.. வாழ்க தமிழமக்கள்.. வளர்க இந்தியா...//

  ஓங்குகுக காங்கிரஸ் ..!! ஹி ஹி ஹி ..

  ReplyDelete
 27. நண்பர்களே என்னுடைய இந்த பதிவிற்கு வந்து உங்களின் கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும்.
  http://vandhemadharam.blogspot.com/2010/11/blog-post_18.html

  உங்கள் கருத்துக்களை எதிர்பார்த்து
  சசிகுமார் (வந்தேமாதரம்)

  ReplyDelete
 28. கலைஞர் பாணியில் படிக்கவும்:

  காங்கிரஸ் -

  கா- காவடி தூக்குவது பொழப்பு.

  ங்- ங்கொய்யால (இதுக்கு எங்களுக்கே விளக்கம் தெரியாது)

  கி- கிறுக்கு புடித்து திரிவது

  ர-ரவுண்டு கட்டி வேட்டி, டவுசர் உருவுவது.

  ஸ்- எல்லாம் கிழிஞ்சதுக்கு அப்புறம் விடும் சவுண்டு.

  ReplyDelete
 29. நல்லாவே வருது வாயில

  தல,

  இந்த மாதிரி பேட்டியெல்லாம் எடுத்து போடாதீங்க ப்ளீஸ்


  கூச்சப்படாம இந்தமாதிரி பேட்டி கொடுக்கிற அளவுக்கு வச்சிருக்காங்களே மக்கள் அவிங்கள நெனச்சாத்தான் ......

  கேட்கிறவன் கேனையன்னா........

  ReplyDelete
 30. இந்த கட்சில உறுப்பினர் அட்டை வாங்குறதுக்கு பதிலா... ஆப்கானிஸ்தான்ல ராணுவ வேலையில சேர்ந்திரலாம். நீ வாரியா பட்டா? நமக்கு அங்க தெரிஞ்ச ஆளு இருக்காரு.

  ReplyDelete
 31. பாஸ் நல்லா இருக்கீங்களா?? என்னா இது நல்ல நாள் பெருநாள் கூட ஒரு வாழ்த்து சொல்லாம?? ஹி..ஹி.. அதான் தங்கபாலுவ வாழ்த்துனீங்களா.. நல்லா இருக்கு!!

  ReplyDelete
 32. ஒரே ஒரு குறைதான். உங்க உலகப்புகழ் பெற்ற(??) துண்டு பீடியோட குத்தவச்சு முக்குற படத்த அந்த கிளார் மண்டையன் தகரபாலு படத்துக்கு மேல வச்சுருந்தா சூப்பரா இருந்துருக்கும்.

  ReplyDelete
 33. வானம் said...

  ஒரே ஒரு குறைதான். உங்க உலகப்புகழ் பெற்ற(??) துண்டு பீடியோட குத்தவச்சு முக்குற படத்த அந்த கிளார் மண்டையன் தகரபாலு படத்துக்கு மேல வச்சுருந்தா சூப்பரா இருந்துருக்கும்.
  //

  போங்கண்ணே.. தற்ப்பெருமை அடிச்சுக்க நான் என்ன டோமரா?..

  ஹி..ஹி

  ReplyDelete
 34. Blogger எம் அப்துல் காதர் said...

  பாஸ் நல்லா இருக்கீங்களா?? என்னா இது நல்ல நாள் பெருநாள் கூட ஒரு வாழ்த்து சொல்லாம?? ஹி..ஹி.. அதான் தங்கபாலுவ வாழ்த்துனீங்களா.. நல்லா இருக்கு!!
  //

  வாங்க பாஸ்.. faceBook-ல சொல்லியிருந்தேன்.. ஹி..ஹி

  விடுமுறை என்பதால் பார்க்கவில்லை என நினக்கிறேன்.. ஹி..ஹி

  ReplyDelete
 35. Delete
  Blogger ரோஸ்விக் said...

  இந்த கட்சில உறுப்பினர் அட்டை வாங்குறதுக்கு பதிலா... ஆப்கானிஸ்தான்ல ராணுவ வேலையில சேர்ந்திரலாம். நீ வாரியா பட்டா? நமக்கு அங்க தெரிஞ்ச ஆளு இருக்காரு.
  //

  கூடவே கோவி க(அ)ண்ணன் வருவாரா?...
  சொல்லு.. அப்பால என்னோட கருத்தை சொல்லுறேன்.. ஹி..ஹி

  ReplyDelete
 36. Blogger யாசவி said...

  நல்லாவே வருது வாயில

  தல,

  இந்த மாதிரி பேட்டியெல்லாம் எடுத்து போடாதீங்க ப்ளீஸ்


  கூச்சப்படாம இந்தமாதிரி பேட்டி கொடுக்கிற அளவுக்கு வச்சிருக்காங்களே மக்கள் அவிங்கள நெனச்சாத்தான் ......

  கேட்கிறவன் கேனையன்னா........
  //

  பேட்டி போட்டது அவனுகள தூக்கி விட இல்ல பாஸ்..

  மக்கள் மறந்துடகூடாதேனு ஒரு நல்லெண்ணம்...

  ReplyDelete
 37. விக்கி உலகம் said...

  கலைஞர் பாணியில் படிக்கவும்:

  காங்கிரஸ் -

  கா- காவடி தூக்குவது பொழப்பு.

  ங்- ங்கொய்யால (இதுக்கு எங்களுக்கே விளக்கம் தெரியாது)

  கி- கிறுக்கு புடித்து திரிவது

  ர-ரவுண்டு கட்டி வேட்டி, டவுசர் உருவுவது.

  ஸ்- எல்லாம் கிழிஞ்சதுக்கு அப்புறம் விடும் சவுண்டு.

  //

  இது நல்லாயிருக்கே.. ஹா.ஹா

  ReplyDelete
 38. Blogger ganesh said...

  பட்டாபட்டி.. said...
  அடுத்து இன்னொரு சூப்பர் தெய்வம் வரப்போகுது.. ரிலீக்கு காத்திருங்கள்.. ...////

  அது எப்பங்க வருது....நான் இவ்வளவு நாளா அவருக்கு திருமணம் ஆகலைன்னு நினைச்சிக்கிட்டு இருந்தேன்......)))

  //

  ஒரு வேளை ”Living together”- ஆ இருக்குமோ என்னமோ.. ஹி..ஹி

  ReplyDelete
 39. Blogger மங்குனி அமைச்சர் said...

  இன்று முதல் நமது பட்டா பட்டி அவர்கள் சிங்கபூர் மாநில காங்கிரஸ் கொ.ப.செ வாக பொறுப்பேற்றுள்ளார் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்
  //

  ஏன்.. ஏன் காண்டு..
  அதுக்கு பேசாமா, அடிமாடா போயிடுவேன்..ஹி..ஹி

  ReplyDelete
 40. @ ஜெய்லானி said...
  அறிக்கையை படிச்சா எனக்கு பீப்பீ ஏறுது..
  //

  ஏறப்படாது.. நாம யாரு?.. ஹி..ஹி எதையும் தாங்கும்....அதே...

  ReplyDelete
 41. @நாகராஜசோழன் MA said...
  சுதந்திரம் வாங்கி எங்க தந்தாங்க. அதை அவங்களேதானே வச்சுக்கிட்டாங்க??
  //

  அது மேட்டரு.. டமால்னு புடிச்சுட்டீங்க..
  இதுதான் நல்ல குடிமகனுக்கு அழகு.. ஹி..ஹி

  ReplyDelete
 42. @கக்கு - மாணிக்கம் said...
  அட கருமமே ! அந்த தலைப்பை பார்த்தே ஒரு பயலும் மேல்கொண்டு படிப்பதே இல்லை. பதிரிக்கைக்காரனுக்கு இடம் நிரப்ப
  வேண்டும் அல்லவா? தமிழ் நாட்டில் காங்கிரஸ்காரர்கள் விடும் அறிக்கையை "வேலை மெனக்கட்டு " படித்துவிட்டு அதற்கு ஒரு பதிவும் போட்டு .............................................................போங்கா பட்டா.................................எனகு உங்க மேல கோவம் கோவமா வருது. உங்க பேச்சுக்கு காஆஆ.............................................................
  //

  விடுண்ணே..விடுண்ணே.. ஏதோ தெரியாம பண்ணியிருப்பேன்..ஹி..ஹி

  ReplyDelete
 43. @ஜோதிஜி said...
  நக்கலுடன் கூடிய தெளிவு
  //

  தேங்ஸ் வாத்தியாரே!

  ReplyDelete
 44. காமெடிக்காக இந்த பதிவ போட்ருந்தா நீங்க இவ்வளவு சிரமபட்டிருக்க வேண்டாம்!! காங்கிரசுன்னு ஒரு வார்த்த எழுதினாலே நாள் பூரா சிரிக்கலாம்!!!!! அதிலயும் இந்த தொங்கபாலு போட்டாவ பார்த்தா வாரம் பூரா சிரிக்கலாம்!!!!

  ReplyDelete
 45. உங்கள் வேலைகளுக்கு இடையில் மெனக்கெட்டு என் தளத்திற்கு வந்து ஆதரவாக கருத்து கூறியதற்கு மிக்க நன்றி நண்பரே. நான் திரும்பவும் பதிவு போட தங்கள் கமெண்ட்டும் ஒரு காரணம்.

  ReplyDelete
 46. மக்கா நான் ரொம்ப லேட் ஆகிடுச்சி நினைக்கிறன் .......சரி வந்துட்டு சும்மா போன உன் பட்டா பட்டிய அனுபிவிடுவ .......
  மக்கா அந்த கட்சிய யாரும் சீண்டுவது இல்லை ...........அதனால ஒரு ஐடியா எல்லா பதிவர்களும் இப்போ கலாச்சாரம் பத்தி எழுதுறாங்கோ .......நீ உன் ஸ்டைல் கொஞ்சம் எழுதின நல்லா இருக்கும் .இது இந்த இம்சையோட ஆசை ...............

  ReplyDelete
 47. // இந்திய வெளியுறவுத்துறை மந்திரி பிரணாப் முகர்ஜி, இலங்கைக்கு நேரடியாக சென்று அதிபர் ராஜபக்சேவை சந்தித்து, `இலங்கையில் போர் நிறுத்தப்பட வேண்டும். அப்பாவி தமிழர்களுக்கு பாதுகாப்பு வேண்டும்' என்று வலியுறுத்தினார். அதையொட்டி 48 மணி நேரத்தில் போர் நிறுத்தம் செய்யப்பட்டது.

  //


  அப்ப, எங்க 'எழுச்சி' தலைவன் எழுந்திருக்காமலே போராடினது (அட,படுத்துகிட்டு போராடினார் னு சொன்னேன்யா.எதுக்கெடுத்தாலும் டபுள் மீனிங் நினைக்குறது..) எல்லாம் சும்மா னு சொல்றியா?அவரால தான்யா யுத்தம் முடிஞ்சது னு அறிவிக்குரதுக்கு பல மாசங்களுக்கு முன்னேயே யுத்தம் நின்னது.(யப்பா,தல சுத்துது சாமி!இவனுக எல்லாம் எப்படி தான் மெயின்டைன் பன்றாணுக இந்த நாற பொழப்ப?) பொலி போட்டுடுவோம் மவனே! :)

  //
  அப்படியே, நீயும் விழு தம்பி. போட்டோ எடுத்து , விளம்பரம் பண்ணிட்டா, அடுத்த ஐந்து வருசத்துக்கு யாராலும் அசைக்க முடியாது.

  என்னத்த தலைவா அசைக்கமுடியாது?.//

  அது தான? என்னத்த?(மறுபடியும் நோ டபுள் மீனிங் ) ;)

  //கக்கூஸு போகமாட்டே.அதுதானே மேட்டரு.//

  அய்யோயோ!அப்படியா? :)

  //இலங்கையில் அமைதி நிலை உருவாக வேண்டும், அதற்கிடையே போரில் அல்லல்படும் இலங்கை தமிழர்களின் துயர் துடைக்கப்பட வேண்டும் என்பது போன்ற நடவடிக்கைகளில் மத்திய அரசு எடுத்த ஒருசில நடவடிக்கைகளை மட்டுமே நினைவுபடுத்தியுள்ளேன்.//

  இலங்கையில் 'மயான ' அமைதி நிலவ வேண்டும் என்று கருத்துடன் பணியாற்றிய காங்கிரசை தமிழர்கள் மறக்க மாட்டார்கள். குறிப்பாக, வெண்ணை..ச்சே அன்னையின் (ஒரே ரைமிங்கா இருக்கிறதால லிட்டில் கன்ஃபூசன் )தொண்டு மறக்கவே முடியாதது!

  //தமிழர்களின் வாழ்வுரிமைக்காக போராடிய தலைவர் ராஜீவ்காந்தி அவர்களை கொலை செய்த கொலையாளிகளுக்கு துதிபாடும் வைகோ போன்றவர்கள் இலங்கை தமிழர்களுக்கு மட்டுமல்ல, தமிழக மக்களுக்கு கூட எதையும் செய்யும் வாய்ப்பற்றவர்கள் என்பதை மக்கள் அறிவார்கள்//

  ஆகவே, இதனை எதிர்க்க, சர்வ வல்லமை பொருத்திய தமிழ்நாடு காங்கிரஸ் தலைமையில் ஒன்றுபடுவீர் தமிழ் ஜனமே! :)

  //பிரியங்காவோட சின்ன தெய்வங்களோ, இல்லை ராகுல்க் காந்தியோட, சின்ன தெய்வங்களோ வந்து இந்தியாவை வல்லரசு ஆக்கும் வரை பொறுத்துக்குங்க..//

  அப்படியும் இல்லை என்றால், சின்ன தெய்வங்களின் சின்ன தெய்வங்களோ, இல்லை சின்ன சின்ன தெய்வங்களோ வந்து உருப்படுத்தி விடுவார்கள்.அது வரை பஞ்சப்பராரியாக இருப்பது நமது கடமை எனக் காண்க...

  //அதில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும், அந்த நாலு(?) பேருக்கு

  முந்துங்கள்.. உறுப்பினர் அட்டையை பூர்த்தி செய்யுங்க.. அன்னைய ஓட்டிச்செல்லுங்கள்... சாரிப்பா.. அன்னையின் அன்பைப் பெற்றுச்செல்லுங்கள்...//

  ஹாஹா...

  //காமெடிக்காக இந்த பதிவ போட்ருந்தா நீங்க இவ்வளவு சிரமபட்டிருக்க வேண்டாம்!! காங்கிரசுன்னு ஒரு வார்த்த எழுதினாலே நாள் பூரா சிரிக்கலாம்!!!!! அதிலயும் இந்த தொங்கபாலு போட்டாவ பார்த்தா வாரம் பூரா சிரிக்கலாம்!!!!//

  இது நல்லா இருக்கே! :)

  ReplyDelete
 48. பட்டா பட்டிதான் உண்மையான காங்கிரஸ் குண்டன்,, அட சாரிப்பா தொண்டன், எப்பிடி இருக்கீங்க பாஸ்?நலமா?

  ReplyDelete
 49. @VAIGAI said...
  காமெடிக்காக இந்த பதிவ போட்ருந்தா நீங்க இவ்வளவு சிரமபட்டிருக்க வேண்டாம்!! காங்கிரசுன்னு ஒரு வார்த்த எழுதினாலே நாள் பூரா சிரிக்கலாம்!!!!! அதிலயும் இந்த தொங்கபாலு போட்டாவ பார்த்தா வாரம் பூரா சிரிக்கலாம்!!!!
  //

  நீங்கவேறண்ணே.. அவனுக நம்மலைப்பார்த்து காமெடி பண்ணிக்கிட்டு இருக்கானுக...
  கூசாமா எப்படி அறிக்க்கை விடரானு மக்கள் தெரிஞ்சிக்கிடத்தான் பதிவா போட்டேன்..

  ReplyDelete
 50. @பிரியமுடன் பிரபு said...
  நக்கலு.....

  //


  சே...சே...

  ReplyDelete
 51. @சசிகுமார் said...
  உங்கள் வேலைகளுக்கு இடையில் மெனக்கெட்டு என் தளத்திற்கு வந்து ஆதரவாக கருத்து கூறியதற்கு மிக்க நன்றி நண்பரே. நான் திரும்பவும் பதிவு போட தங்கள் கமெண்ட்டும் ஒரு காரணம்.
  //

  நீங்க வேற சார்.. நான் என்ன தமிழக் முதல்....வரா?..(நமீதா கால்ஷீட்டை மெயிண்டெயிண் பண்ணி, பிஸியா இருக்க..)

  விடுங்க பாஸ்..... எப்பவும் போல எழுதுங்க...
  போற்றுவோர் போற்றட்டும்..தூற்றுவோர் தூற்றட்டும்..
  நம்ம நம்ம வேலையச்செய்வோம்
  ( கருத்து..)

  ReplyDelete
 52. @இம்சைஅரசன் பாபு.. said...
  மக்கா நான் ரொம்ப லேட் ஆகிடுச்சி நினைக்கிறன் .......சரி வந்துட்டு சும்மா போன உன் பட்டா பட்டிய அனுபிவிடுவ .......
  மக்கா அந்த கட்சிய யாரும் சீண்டுவது இல்லை ...........அதனால ஒரு ஐடியா எல்லா பதிவர்களும் இப்போ கலாச்சாரம் பத்தி எழுதுறாங்கோ .......நீ உன் ஸ்டைல் கொஞ்சம் எழுதின நல்லா இருக்கும் .இது இந்த இம்சையோட ஆசை ...............
  //

  அய்யோ..அய்யோ... நானா?..
  போங்க பாஸ்.. எனக்கு பயமாயிருக்கு(!)

  ReplyDelete
 53. @ILLUMINATI said...
  அப்ப, எங்க 'எழுச்சி' தலைவன் எழுந்திருக்காமலே போராடினது (அட,படுத்துகிட்டு போராடினார் னு சொன்னேன்யா.எதுக்கெடுத்தாலும் டபுள் மீனிங் நினைக்குறது..) எல்லாம் சும்மா னு சொல்றியா?அவரால தான்யா யுத்தம் முடிஞ்சது னு அறிவிக்குரதுக்கு பல மாசங்களுக்கு முன்னேயே யுத்தம் நின்னது.(யப்பா,தல சுத்துது சாமி!இவனுக எல்லாம் எப்படி தான் மெயின்டைன் பன்றாணுக இந்த நாற பொழப்ப?) பொலி போட்டுடுவோம் மவனே! :)
  ///  வாய்யா கொரியா பீஸு...
  உன்னோட கமென்ஸ் என்னுடைய பதிவை விட பெரிசா இருக்கே...
  நீ என் சினிமா எடுக்ககூடாது?

  ReplyDelete
 54. @பித்தனின் வாக்கு said...

  பட்டா பட்டிதான் உண்மையான காங்கிரஸ் குண்டன்,, அட சாரிப்பா தொண்டன், எப்பிடி இருக்கீங்க பாஸ்?நலமா?

  //

  ஹி..ஹி.. நலமே..
  சென்னையிலதான் இருக்கீகளா?...

  பன்னிக்குட்டி ராமசாமி, நமீதா வீட்டை தேடிக்கிட்டு இருக்கான்னு சொன்னாங்க. அட்ரஸ் கேட்டா,
  இங்க அனுப்பிவையுங்க...

  ReplyDelete
 55. அண்ணே,

  நாந்தான் உங்க 280ஆவது புது டவுசர்

  சாரிண்ணே கொஞ்சம் லேட்டாயிடுச்சி
  மன்னிச்சுக்குங்க...

  தொடரட்டும் உங்கள் பொன்னான பணி

  ReplyDelete
 56. மாணவன் said... 58

  அண்ணே,

  நாந்தான் உங்க 280ஆவது புது டவுசர்

  சாரிண்ணே கொஞ்சம் லேட்டாயிடுச்சி
  மன்னிச்சுக்குங்க...

  தொடரட்டும் உங்கள் பொன்னான பணி

  //

  வாங்க மாணவன் சார்..
  அப்துல கலாம் போட்டோ போட்டிருக்கீங்க.. நல்ல மனுசன்..

  போர் அடிச்சா, அப்பப்ப இங்க வாங்க....

  ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!