Pages

Saturday, November 20, 2010

சென்ற வாரப் பதிவுலகம்

மியான்மர்

பர்மா என்று முன்னர் அழைக்கப்பட்ட மியான்மர் நாட்டின் ராணுவ அரசால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த அந்நாட்டின் ஜனநாயகப் போராளியும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான ஆங் சான் சூ கி விடுதலை செய்யப்பட்டார்.

ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடிய ஆங் சான் சூ கி (வயது 65), கடந்த 21 ஆண்டுகளில் சுமார் 15 ஆண்டுகளை சிறையிலேயே கழித்துள்ளார்.

விடுதலை செய்யப்பட்ட மறுதினமான ஞாயிற்றுக்கிழமை, யங்கோனில் உள்ள தனது கட்சி தலைமையகத்தில் உரையாற்றிய அவர்,

"நம்பிக்கையை விட வேண்டாம். நம்முடைய லட்சியங்களை எப்படி அடைவது என்பதை மக்கள் எண்ண வேண்டும். அனைத்து ஜனநாயக சக்திகளுடன் இணைந்து பணிபுரிய தயாராக இருக்கிறேன். மக்கள் விரும்பினால் மியான்மர் மீதான தடைகளை நீக்க மேற்கத்திய நாடுகளுடன் பேச தயாராக இருக்கிறேன். கடந்த 7 ஆண்டுகளாக தான் சிறை வைக்கப்பட்டது தொடர்பாக, என்னை சிறை வைத்தவர்கள் மீது எனக்கு எவ்விதமான வஞ்சமும் இல்லை," என்றார்.

*********** -X- ************ஒருவேளை, தமிழகமாக இருந்திருந்தால்..மக்கா... நான் சொல்லவந்தது..உம்..உம். இருந்திருந்தால்....., ."அய்யோ கொல்றாங்களே" என்று கூவி, இரண்டு மணி நேரத்தில் வெளிவந்து இருக்கலாம். உம்.....விடுங்க...

ஜனநாயகம் உயிருடன்தான் இருக்கிறது.

.

.

.

கலாச்சாரம் , Living Together

போன வார ஹாட் டாபிக்தான் இது.. கலாச்சாரம், சீரழிவு, பாதுகாவலர்கள், வன்புணர்சி, மென்புணர்சி, துகிலுரிதல்.etc..etc.. புதுப்புது வார்த்தைகளை தெரிந்துகொள்ள உதவிய, சக பதிவர்களுக்கு, கோடான, கோடி நன்றிகள் அய்யா.  
( நல்லவேளை.. சைலேந்திரபாபுகாரு,   போட்டுத்தள்ள(?),  போலீஸ்காரன் கைகளில துப்பாக்கியைக் கொடுத்து அனுப்பவில்லை...)

 • ரேஷன் கடை,
 • திரை அரங்கம்,
 • பால் பூத்,
 • அரசாங்க அலுவலகங்கள்,
 • சாலைவிதிகள்,
 • மனிதாபிமானம்,
 • தனிமனித ஒழுக்கம்..

இதெல்லாம் என்னானு கேட்குறீங்களா?. இருங்க பாஸ்.... சொல்லுவமில்ல...

மறுமணம், காதல் திருமணங்கள் பெண்ணுரிமை.. எல்லாம் அங்கங்கே நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால் மிகக்குறைந்த சதவீதத்தில் என்று சொல்லிக்கொள்வதில் வருத்தம்தான். என்ன செய்ய?. 

"அப்படி இருந்திருந்தா, இப்படி பன்ணியிருப்பேன். இப்படி கிடைத்திருந்தால், அப்படி செய்திருப்பேன்". அடுத்தவரை குறை கூறியே வளர்ந்த சமுதாயம் இது. ஒரு தவறு செய்தால், எவ்வளவு பேர், அந்த தவற்றில் பாடம் படித்தவர்களாக இருக்கிறார்கள் என நினக்கிறீர்கள்?

சந்து கிடைத்தால், நுழைக்கலாம்(?) என்ற தீவிர சிந்தனை உள்ள நற்குடி, நம்குடி.

ரேஷன் கடைகளாகட்டும், திரை அரங்குகளாகட்டும், தனிமனித ஒழுக்கத்துடன் இருப்பவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.. முன்நிற்பவன்மேல முட்டவைத்துக்கொண்டு நிற்கவில்லையென்றால், கட்டை வேகாது சார்.

சாலை விதிகளை பின்பற்றுங்கள்.. அப்படீனா?.. அதேதான்.. நம்ம கலாச்சாரம்.

ரெட் விழுந்தாலும், முட்டிமோதி, முன்னாடி போய் நிற்கவேண்டும். பச்சை விழுந்ததும் , முதலில் விரட்டும் ஆனந்தம் இருக்கே.. ஆகா.. சொல்லில் வடிக்கமுடியாது. இந்தப் பெருமைய யாரால சார் விட்டுக்கொடுக்க முடியும்.?

அப்புறம் நம்ம அரசியல் கட்சிகள். சாராயம் காய்ச்சியவன், மூஞ்சியில் சாயம் பூசியவர்கள், ஆங்க்.. நம்ம மகளிர் அணி.. அதாவது பிராத்தல் பண்ணிக்கிட்டு இருந்தவங்க எல்லாம் கட்சி, தலைமை, வட்டம், மாவட்டம்னு நுழையராங்களே. எதுக்குனு நினக்கிறீங்க?

மக்களுக்கு நல்லது பண்ணி, சமுதாயம் முன்னேற வேண்டும் என பாடுபடவா? ஊகூம். நமக்கு போஸ்ட் கிடைக்கனும். பணம் சுருட்டனும். பேர் புகழ் வாங்கனும். மறக்காம, வெள்ள சட்டை போடனும். பார்ப்பவர்கள், "வணக்கம் தலைவா"னு கும்பிடனும். அப்பால, சாயந்திரம் ஆனா, தண்ணி இறங்கனும்.( உள்குத்து எதுவுமில்லை சாமிகளா...)

இப்படி அடுத்தவர்கள், பிரச்சனைகள , காலடியில் போட்டு மிதித்து, சுயநலனுக்காக, பழகியவர்களையே போட்டு தள்ளும் சமூகத்தில்,  காலாச்சாரம், பண்பாடுனு பேசினா, அய்யோ.. நினைக்கவே பயமாயிருக்கு. அவர்களுக்கு என்ன சார். ஆடும் வரை ஆட்டம்.. அப்பால ஓட்டம்..

இது சரியில்லையா அது.. அது பிடிக்கலையா.. அடுத்தது...

தனிமனித ஒழுக்கத்துடன் இருந்து, நீங்க சொல்லும்படி இருந்தா,  ’எங்கிருந்தாலும், நல்லா இருக்கட்டும்..பாஸ்’

இந்த சமுதாயம் மாறனும். கலாச்சாரம் வளரனும்னு நினச்சீங்கனா.. ஹி..ஹி.. நான் என்னத்தை சொல்ல..

என்னமோ பண்ணுங்க சார்....

டிஸ்கி..
இது தாய்குலங்களுக்கு
அம்மணிகளா.. தனிமனித உரிமை, மறுமணம், living Together, உள்ளுணர்வு.....உம்.... எல்லாம் கேட்க, நல்லாத்தான் இருக்கு.
வாழ்க்கை வாழவே.
அதில் எந்த மறுப்பும் இல்லை. 

பெண்கள் ஜாக்கெட் போடக்கூடாது. சுடிதார் போடக்கூடாது, வேலைக்கு செல்லகூடாது.. அப்பபடீனு சொன்ன சமுதாயம், இப்ப மாறியிருக்கு.. நல்ல விசயம்தாம்.
வரவேற்கணும். 

திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வது, அவரவர் உரிமை. அதில், என் மூக்கை, நுழைப்பது தேவையில்லாதது.

ஆனா, சக பதிவனா, என்னுடைய கருத்தை சொல்ல உரிமையுண்டு.
“வரக்கூடிய பார்ட்னர், ஒழுக்கமானவனானு பார்த்துட்டு, அப்பால, உங்க பொன்னான முடிவை எடுங்க தாயி..”
பத்து நிமிடம் வேலைய செய்துவிட்டு, பத்து மாதம் பணிச்சுமைய கொடுத்திட்டுப்போக ,பலபேர்.... பலபோர்வையில் சுத்திக்கிட்டு இருக்கானுக.

அப்பால.. ’வாழக்கையை, வாழ்க்கை பூரா தேடும் நிலைக்கு விட்டுட்டுப்போயிடுவாங்க’, நமது சமூக ஆர்வலர்கள்(?) ...
.
.
.

107 comments:

 1. வடை எனக்கா? :-)

  //பத்து நிமிடம் வேலைய செய்துவிட்டு, பத்து மாதம் பணிச்சுமைய கொடுத்திட்டுப்போக ,பலபேர்.... பலபோர்வையில் சுத்திக்கிட்டு இருக்கானுக.//

  அம்புட்டுத்தேன். புத்தியிருந்தா பொழைச்சுக்கட்டும்! :-)

  ReplyDelete
 2. @சேட்டைக்காரன் said... 1
  அம்புட்டுத்தேன். புத்தியிருந்தா பொழைச்சுக்கட்டும்! :-)

  //

  அதேதான் சேட்டை..சரியா பாயிண்ட புடிச்சுட்டீங்க...

  ReplyDelete
 3. //பத்து நிமிடம் வேலைய செய்துவிட்டு, பத்து மாதம் பணிச்சுமைய கொடுத்திட்டுப்போக ,பலபேர்.... பலபோர்வையில் சுத்திக்கிட்டு இருக்கானுக.////

  மிக எளிமையான விளக்கம்..புரிவதற்கு...

  டெல்லியில் அதிக குளிர் பாதி வடை கிடைத்தால் சந்தோசம்..))))

  ReplyDelete
 4. நீங்க என்ன சொன்னாலும் நாங்க இப்படி தான் இருப்போம்....

  ReplyDelete
 5. சேட்டைக்காரன் said...
  வடை எனக்கா? :-)

  //பத்து நிமிடம் வேலைய செய்துவிட்டு, பத்து மாதம் பணிச்சுமைய கொடுத்திட்டுப்போக ,பலபேர்.... பலபோர்வையில் சுத்திக்கிட்டு இருக்கானுக.//

  அம்புட்டுத்தேன். புத்தியிருந்தா பொழைச்சுக்கட்டும்! :-///

  அப்போது அந்த மாதிரி இருப்பவர்களுக்கு புத்தி இல்லை சொல்றிங்களா...?

  ReplyDelete
 6. நல்லப் பாயிண்ட் எடுத்து வைச்சிருக்கீங்க! ஆனா காலம் மாறும்போது கற்புக்கான இலக்கணம் கூட மாறிப்போகும்னு நினைக்கிறேன்.

  டேடிங்க் கலாச்சாரம் இங்கேயும் தான் பரவிக்கிட்டு வருது. அதனால மேற்கத்திய கலாச்சாரம் மெல்ல மெல்ல பரவி நம் கலாச்சாரம் என்கின்ற ஒன்று தனியாக இல்லாத நிலை தான் வரப்போகுது. அப்போது அங்கே என்ன பிரச்சனைகள் உள்ளனவோ அவைகளை சமாளிக்க சட்ட திட்டங்கள் எல்லாம் கூட இயற்றுவாங்க.

  இப்போ Dowry harassment act வந்த மாதிரி அப்போ என்ன பிரச்சனைகள் முளைக்குமோ அதற்கேற்ற மாதிரி சட்ட திட்டங்களும் கொண்டுவருவாங்க!

  ReplyDelete
 7. அண்ணன் பட்டாப்பட்டி வாழ்க வாழ்க .....சிந்தனை சிற்பி பட்டாப்பட்டி வாழ்க .....சமூக சீர்திருதாளன் பட்டாப்பட்டி வாழ்க ........எங்கள் விடி வெள்ளி பட்டாப்பட்டி வாழ்க .......

  ReplyDelete
 8. //தண்ணி இறங்கனும்.( உள்குத்து எதுவுமில்லை சாமிகளா...)//

  உள்குத்து இல்லை நம்பிட்டோம் .........ஆனா டபுள் அர்த்தம் மக்கா .............

  ReplyDelete
 9. //அப்புறம் நம்ம அரசியல் கட்சிகள். சாராயம் காய்ச்சியவன், மூஞ்சியில் சாயம் பூசியவர்கள், ஆங்க்.. நம்ம மகளிர் அணி.. அதாவது பிராத்தல் பண்ணிக்கிட்டு இருந்தவங்க எல்லாம் கட்சி, தலைமை, வட்டம், மாவட்டம்னு நுழையராங்களே//

  இது தான் பட்டாப்பட்டி ஸ்டைல் ..சும்மா நச்சுன்னு இருக்கு ........

  ReplyDelete
 10. //அப்பால, சாயந்திரம் ஆனா, தண்ணி இறங்கனும்/

  ஓ அப்படியா. உள்குத்து இல்லியா. ஹிஹி(இதுல ஏதும் உள்குத்து இல்ல)

  ReplyDelete
 11. //
  ”வாழ்க்கை வாழவே.”
  //

  @ யோவ் பட்டா இதுல ஏதாச்சும் உள்குத்து இருக்கா. சும்மா கேட்டேன்

  ReplyDelete
 12. /பத்து நிமிடம் வேலைய செய்துவிட்டு, பத்து மாதம் பணிச்சுமைய கொடுத்திட்டுப்போக ,பலபேர்.... பலபோர்வையில் சுத்திக்கிட்டு இருக்கானுக.//

  அது யாருன்னு தெரியுமா பாஸ்?

  ReplyDelete
 13. //நல்லவேளை.. சைலேந்திரபாபுகாரு, போட்டுத்தள்ள(?), போலீஸ்காரன் கைகளில துப்பாக்கியைக் கொடுத்து அனுப்பவில்லை...//

  என்னை ஏன்யா வம்புக்கு இழுக்குற,

  ReplyDelete
 14. இந்த பதிவு போட்டதற்காக நீர் ஆட்டு மந்தை கூட்டத்தில் சேர்க்கப் படுகிறீர்!!

  ReplyDelete
 15. ///பத்து நிமிடம் வேலைய செய்துவிட்டு, பத்து மாதம் பணிச்சுமைய கொடுத்திட்டுப்போக ,பலபேர்.... பலபோர்வையில் சுத்திக்கிட்டு இருக்கானுக.///

  என்னதது வெறும் 10நிமிசம் தானா? நம்ம சேலத்து டாகுடர பாருங்க, அரைமணீ நேரம் கேரண்டி கொடுக்கறாங்க!

  ReplyDelete
 16. ////பார்ப்பவர்கள், "வணக்கம் தலைவா"னு கும்பிடனும். அப்பால, சாயந்திரம் ஆனா, தண்ணி இறங்கனும்.( உள்குத்து எதுவுமில்லை சாமிகளா...)////

  ஹி.... ஹி....ஹி.... ஆமா உள்குத்து எதுவும் இல்லை!

  ReplyDelete
 17. ////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
  /பத்து நிமிடம் வேலைய செய்துவிட்டு, பத்து மாதம் பணிச்சுமைய கொடுத்திட்டுப்போக ,பலபேர்.... பலபோர்வையில் சுத்திக்கிட்டு இருக்கானுக.//

  அது யாருன்னு தெரியுமா பாஸ்?////

  யோவ் பட்டா சார் அப்படியா பழகிக்கிட்டு இருக்காரு, அது நீதான்னு பப்ளிக்கா சொல்லி மானத்தலாம் வாங்கமாட்டாரு, பயப்படடாதே!

  ReplyDelete
 18. // கடந்த 7 ஆண்டுகளாக தான் சிறை வைக்கப்பட்டது தொடர்பாக, என்னை சிறை வைத்தவர்கள் மீது எனக்கு எவ்விதமான வஞ்சமும் இல்லை//

  இதுதான் நல்லவங்களுக்கு அடையாளம் ..!!

  ReplyDelete
 19. //திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வது, அவரவர் உரிமை. அதில், என் மூக்கை, நுழைப்பது தேவையில்லாதது.
  /

  சரியாத்தான் சொன்னீங்க ., இல்லனா அப்புறம் நம்மளையும் திட்டுவாங்க ..!! ஹி ஹி ஹி .. ஆனா நம்மல திட்டிட்டு மறுபடி என்ன ஆவாங்கன்னு அவுங்களுக்த் தெரியாது ..

  ReplyDelete
 20. ///இம்சைஅரசன் பாபு.. said... 8
  //தண்ணி இறங்கனும்.( உள்குத்து எதுவுமில்லை சாமிகளா...)//

  உள்குத்து இல்லை நம்பிட்டோம் .........ஆனா டபுள் அர்த்தம் மக்கா .............////

  ஏன்யா இப்பிடி டபுள்மீனிங்னு சொல்லி நம்ம பட்டாவ அசிங்கப்படுத்தற? அது சிங்கிள் மீனிங்யா!

  ReplyDelete
 21. //இந்த பதிவு போட்டதற்காக நீர் ஆட்டு மந்தை கூட்டத்தில் சேர்க்கப் படுகிறீர்!!
  //

  எப்படியோ அது எந்த மனதினு முடிவு பண்ணிடீங்களா ..?

  ReplyDelete
 22. ப.செல்வக்குமார் said... 18

  // கடந்த 7 ஆண்டுகளாக தான் சிறை வைக்கப்பட்டது தொடர்பாக, என்னை சிறை வைத்தவர்கள் மீது எனக்கு எவ்விதமான வஞ்சமும் இல்லை//

  இதுதான் நல்லவங்களுக்கு அடையாளம் ..!!

  //

  அப்பாடா.. ஒரு ஆளாவது நான் மியன்மாரை பற்றி சொன்னதை படிச்சீங்களே..

  நன்றி

  ReplyDelete
 23. யோவ் பட்டா சார் அப்படியா பழகிக்கிட்டு இருக்காரு, அது நீதான்னு பப்ளிக்கா சொல்லி மானத்தலாம் வாங்கமாட்டாரு, பயப்படடாதே!
  //

  ரொம்ப தேங்ஸ் பன்னி சார்.. எப்படி என் வாயால சொல்றது நினச்சேன்..ஹி..ஹி

  ReplyDelete
 24. Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

  //நல்லவேளை.. சைலேந்திரபாபுகாரு, போட்டுத்தள்ள(?), போலீஸ்காரன் கைகளில துப்பாக்கியைக் கொடுத்து அனுப்பவில்லை...//

  என்னை ஏன்யா வம்புக்கு இழுக்குற,
  //

  அட..மறந்தாப்புல சொல்லியிருப்பேன்.. ஆமா உன் கையில. அப்படி வேற என்னதான் வெச்சிருக்கே?...

  ReplyDelete
 25. //அப்பாடா.. ஒரு ஆளாவது நான் மியன்மாரை பற்றி சொன்னதை படிச்சீங்களே..

  நன்றி

  //

  நீங்க தலைப்பு மியான்மர் அப்படின்னு வச்சிருந்தா எல்லோரும் அத படிச்சிருப்பாங்க .. ஹி ஹி ஹி ..

  ReplyDelete
 26. Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

  //
  ”வாழ்க்கை வாழவே.”
  //

  @ யோவ் பட்டா இதுல ஏதாச்சும் உள்குத்து இருக்கா. சும்மா கேட்டேன்
  //

  ஓய்.. நீர் பிரபாகரன் அண்ணனை இழுத்துவிடப்பார்க்குறே.. இப்ப அவரு வரது இல்ல ..தெரியுமா?..

  அதுமாறி நல்ல அண்ணானை விட்டுடுயா பாவம்...

  ReplyDelete
 27. நீங்க தலைப்பு மியான்மர் அப்படின்னு வச்சிருந்தா எல்லோரும் அத படிச்சிருப்பாங்க .. ஹி ஹி ஹி ..
  //

  கூடவே அம்மணமா ஒரு போட்டோ போட்டிருந்தா.. ஸ்...ஸாரிப்பா.. நான் லோக்கல் இல்ல.. பாரின்.. ஹி..ஹி

  ReplyDelete
 28. ////போன வார ஹாட் டாபிக்தான் இது.. கலாச்சாரம், சீரழிவு, பாதுகாவலர்கள், வன்புணர்சி, மென்புணர்சி, துகிலுரிதல்.etc..etc.. புதுப்புது வார்த்தைகளை தெரிந்துகொள்ள உதவிய, சக பதிவர்களுக்கு, கோடான, கோடி நன்றிகள் அய்யா. ////

  வன்புணர்ச்சி/மென்புணர்ச்சி......???

  ReplyDelete
 29. @என்னது நானு யாரா?
  இப்போ Dowry harassment act வந்த மாதிரி அப்போ என்ன பிரச்சனைகள் முளைக்குமோ அதற்கேற்ற மாதிரி சட்ட திட்டங்களும் கொண்டுவருவாங்க!
  //

  ஆமாம் பாஸ்.. காலங்கள் மாறும்..காட்சிகளும் மாறும்..

  ReplyDelete
 30. // அண்ணன் பட்டாப்பட்டி வாழ்க வாழ்க .....சிந்தனை சிற்பி பட்டாப்பட்டி வாழ்க .....சமூக சீர்திருதாளன் பட்டாப்பட்டி வாழ்க ........எங்கள் விடி வெள்ளி பட்டாப்பட்டி வாழ்க .......//

  -----இம்சை அரசன் பாபு.

  ரிபீட்டு.

  ReplyDelete
 31. Blogger இம்சைஅரசன் பாபு.. said...

  அண்ணன் பட்டாப்பட்டி வாழ்க வாழ்க .....சிந்தனை சிற்பி பட்டாப்பட்டி வாழ்க .....சமூக சீர்திருதாளன் பட்டாப்பட்டி வாழ்க ........எங்கள் விடி வெள்ளி பட்டாப்பட்டி வாழ்க .......
  //

  அய்யோ.. இந்த பதிவ எழுதிக்கொடுத்தது பன்னிக்குட்டினு சொல்லாம விட்டுட்டேனே..( பன்னி.. நீயும் சேர்ந்து சாவு..ஹி..ஹி)

  ReplyDelete
 32. ////அய்யோ கொல்றாங்களே" என்று கூவி, இரண்டு மணி நேரத்தில் வெளிவந்து இருக்கலாம். உம்.....விடுங்க...////

  இதுதான்யா ஜனநாயகம்,. அது தெரியாம...%^#!$@#@#$

  ReplyDelete
 33. //ரெட் விழுந்தாலும், முட்டிமோதி, முன்னாடி போய் நிற்கவேண்டும். பச்சை விழுந்ததும் , முதலில் விரட்டும் ஆனந்தம் இருக்கே.. ஆகா.. சொல்லில் வடிக்கமுடியாது. இந்தப் பெருமைய யாரால சார் விட்டுக்கொடுக்க முடியும்.?//

  அதன் இன்பமே ஒரு அலாதி

  ReplyDelete
 34. வன்புணர்ச்சி/மென்புணர்ச்சி......???
  //

  With / Without பலூன்??

  ReplyDelete
 35. ////பட்டாபட்டி.. said...
  Blogger இம்சைஅரசன் பாபு.. said...

  அண்ணன் பட்டாப்பட்டி வாழ்க வாழ்க .....சிந்தனை சிற்பி பட்டாப்பட்டி வாழ்க .....சமூக சீர்திருதாளன் பட்டாப்பட்டி வாழ்க ........எங்கள் விடி வெள்ளி பட்டாப்பட்டி வாழ்க .......
  //

  அய்யோ.. இந்த பதிவ எழுதிக்கொடுத்தது பன்னிக்குட்டினு சொல்லாம விட்டுட்டேனே..( பன்னி.. நீயும் சேர்ந்து சாவு..ஹி..ஹி)////

  பட்டா சார் பட்டா சார், கலாச்சாரம்னா என்ன சார்?

  ReplyDelete
 36. @ சசிகுமார் said...

  அதன் இன்பமே ஒரு அலாதி
  //

  வாங்க பாஸ்.. ஹி..ஹி.. நானும் அப்படித்தான்

  ReplyDelete
 37. வேறொரு பதிவில் ஆங் சான் சூகி அவர்களின் வாழ்க்கை பற்றி கொஞ்சம் விரிவாக படித்தேன்.
  http://urssimbu.blogspot.com/2010/11/blog-post_15.html
  அவரின் கணவரின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள கூட அனுமதிக்கவில்லையாமே.
  இது போன்றவர்களின் வாழ்க்கை வரலாற்றை வழிகாட்டியாக கொள்ள வேண்டும்.

  ReplyDelete
 38. பட்டா சார் பட்டா சார், கலாச்சாரம்னா என்ன சார்?
  //

  ஆகா.. இதுக்கு பத்து பதிவ எழுதி, படத்தோட விளக்கனுமே உனக்கு....

  ReplyDelete
 39. மச்சி நெத்தில அடிச்ச மாதிரி சொல்ல உங்கள விட யாரு இருக்கா இங்க....!!!!!!

  ///தனிமனித ஒழுக்கத்துடன் இருந்து, நீங்க சொல்லும்படி இருந்தா, ’எங்கிருந்தாலும், நல்லா இருக்கட்டும்..பாஸ்’///

  இத தான் சொன்னென் நெத்தியடின்னு....!

  ReplyDelete
 40. ////பட்டாபட்டி.. said...
  பட்டா சார் பட்டா சார், கலாச்சாரம்னா என்ன சார்?
  //

  ஆகா.. இதுக்கு பத்து பதிவ எழுதி, படத்தோட விளக்கனுமே உனக்கு....///

  என்னது படதோடவா? ஹைய்யா ஜாலிதான் இன்னிக்கு நல்ல வேட்டை இருக்கு, நமீதா வீடு கேன்சல்!

  ReplyDelete
 41. ///முன்நிற்பவன்மேல முட்டவைத்துக்கொண்டு நிற்கவில்லையென்றால், கட்டை வேகாது சார். ////

  என்னது இது, அபச்சாரமா பேசரேள்?

  ReplyDelete
 42. ////ஆங்க்.. நம்ம மகளிர் அணி.. அதாவது பிராத்தல் பண்ணிக்கிட்டு இருந்தவங்க எல்லாம் கட்சி, தலைமை, வட்டம், மாவட்டம்னு நுழையராங்களே. எதுக்குனு நினக்கிறீங்க?/////

  எல்லாம் ஒரு சேவை மனப்பான்மைதான்!
  பினனே மேலிடத்துல இருக்கவங்கள்லாம் இதுக்காக எடம் தேடி போகமுடியுமா?

  ReplyDelete
 43. dheva said... 39

  மச்சி நெத்தில அடிச்ச மாதிரி சொல்ல உங்கள விட யாரு இருக்கா இங்க....!!!!!!

  ///தனிமனித ஒழுக்கத்துடன் இருந்து, நீங்க சொல்லும்படி இருந்தா, ’எங்கிருந்தாலும், நல்லா இருக்கட்டும்..பாஸ்’///
  //

  வாங்க தேவா...அதுதானே practical Life... ம்...

  ReplyDelete
 44. எல்லாம் ஒரு சேவை மனப்பான்மைதான்!
  பினனே மேலிடத்துல இருக்கவங்கள்லாம் இதுக்காக எடம் தேடி போகமுடியுமா?
  //

  அடப்பாவி..அதுக்குத்தானா...

  என்னமோ பண்ணுங்க.. ஆமாம்.. புள்ளி ராசாவுக்கு எயிட்ஸ் வருமாய்யா?

  ReplyDelete
 45. எஸ்.கே said... 37

  வேறொரு பதிவில் ஆங் சான் சூகி அவர்களின் வாழ்க்கை பற்றி கொஞ்சம் விரிவாக படித்தேன்.
  http://urssimbu.blogspot.com/2010/11/blog-post_15.html
  அவரின் கணவரின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள கூட அனுமதிக்கவில்லையாமே.
  இது போன்றவர்களின் வாழ்க்கை வரலாற்றை வழிகாட்டியாக கொள்ள வேண்டும்.

  //

  உண்மை பாஸ்..

  ReplyDelete
 46. //ஒருவேளை, தமிழகமாக இருந்திருந்தால்..மக்கா... நான் சொல்லவந்தது..உம்..உம். இருந்திருந்தால்.....//

  இருந்திருந்தால், நீங்க உள்ளே வந்ததுமே மூஞ்சிலே நாலு குத்து விட்டிருப்போம். எங்க சானல்ல, ‘ஐயோ கொல்றாங்கப்பா’ அப்படின்னு டப்பிங் சேர்த்து நாள் முழுக்க ஒளிபரப்புவோம். அவங்க சானல்ல, மூஞ்சில குத்துனத மட்டுமே நாள் முழுக்க ஒளிபரப்புவாங்க. மாக்கள் (ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்ல) அன்னைக்கு ஒரு நாள் மெகா சீரியல மறந்துட்டு, க்ளிப்பிங்ஸ் பார்த்து புளகாகிதம் அடைவார்கள். அம்புட்டுதேன்.

  ReplyDelete
 47. இருந்திருந்தால், நீங்க உள்ளே வந்ததுமே மூஞ்சிலே நாலு குத்து விட்டிருப்போம். எங்க சானல்ல, ‘ஐயோ கொல்றாங்கப்பா’ அப்படின்னு டப்பிங் சேர்த்து நாள் முழுக்க ஒளிபரப்புவோம். அவங்க சானல்ல, மூஞ்சில குத்துனத மட்டுமே நாள் முழுக்க ஒளிபரப்புவாங்க. மாக்கள் (ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்ல) அன்னைக்கு ஒரு நாள் மெகா சீரியல மறந்துட்டு, க்ளிப்பிங்ஸ் பார்த்து புளகாகிதம் அடைவார்கள். அம்புட்டுதேன்.
  //

  டாஸ்மார்க்க விட்டுட்டீங்க..

  அதுவும் நம் தினசரி வாழ்க்கையில ஒரு அங்கம் ஆயிடுச்சு பாஸ்.. ஹி..ஹி

  ReplyDelete
 48. ////பட்டாபட்டி.. said...
  எல்லாம் ஒரு சேவை மனப்பான்மைதான்!
  பினனே மேலிடத்துல இருக்கவங்கள்லாம் இதுக்காக எடம் தேடி போகமுடியுமா?
  //

  அடப்பாவி..அதுக்குத்தானா...

  என்னமோ பண்ணுங்க.. ஆமாம்.. புள்ளி ராசாவுக்கு எயிட்ஸ் வருமாய்யா?////

  ஆளப் பாத்தா தெரியலியா?

  ReplyDelete
 49. ////தனிமனித ஒழுக்கத்துடன் இருந்து, நீங்க சொல்லும்படி இருந்தா, ’எங்கிருந்தாலும், நல்லா இருக்கட்டும்..பாஸ்’////

  வாழ்க... எங்கிருந்தாலும் வாழ்க....!

  ReplyDelete
 50. என்னமோ பண்ணுங்க.. ஆமாம்.. புள்ளி ராசாவுக்கு எயிட்ஸ் வருமாய்யா?////

  ஆளப் பாத்தா தெரியலியா?
  //

  இல்லையே.. ஏர்போர்ட்ல சிரிச்சுக்கிட்டே வந்ததாமே..
  ஆமா .. இப்ப எந்த ராசாவை பற்றி பேசிக்கிட்டிருக்கோம்?

  ReplyDelete
 51. ////இந்த சமுதாயம் மாறனும். கலாச்சாரம் வளரனும்னு நினச்சீங்கனா.. ஹி..ஹி.. நான் என்னத்தை சொல்ல..////

  அப்போ இந்தக் கலாச்சாரம் மாறாதா? FTVய சும்மா பாத்தே வாழ்க்கை ஓடிடுமோ?

  ReplyDelete
 52. பத்து நிமிடம் வேலைய செய்துவிட்டு, பத்து மாதம் பணிச்சுமைய கொடுத்திட்டுப்போக ,பலபேர்.... பலபோர்வையில் சுத்திக்கிட்டு இருக்கானுக.

  //

  சரியா சொல்லிருக்கீங்க பட்டா... ஆமா நீங்களும் இந்த லிஸ்ட்ல ஒரு ஆளு தானே...

  ReplyDelete
 53. பத்து நிமிடம் வேலைய செய்துவிட்டு, பத்து மாதம் பணிச்சுமைய கொடுத்திட்டுப்போக ,பலபேர்.... பலபோர்வையில் சுத்திக்கிட்டு இருக்கானுக.

  அப்பால.. ’வாழக்கையை, வாழ்க்கை பூரா தேடும் நிலைக்கு விட்டுட்டுப்போயிடுவாங்க’, //

  பயந்தாங்கோழிகளுக்கு ஒத்து வராது..

  ஏன் விட்டுட்டு போனா தனியா ஒத்தையாளா பிள்ளை வளர்க்க முடியாதா?..

  இல்லை அப்படி வளர்த்த தாய்மார் இல்லையா?..

  தான் சம்பாதித்ததை எடுத்தும் குடிக்க செல்லும் கணவரோடு ஆயுசுக்கும் போராடி பிள்ளை வளர்க்கும் தாய்மார்.?

  பிள்ளைகளை வைத்தெல்லாம் இந்த லிவிங் -டுகெதரை பயமுறுத்த முடியாது..

  எல்லாத்துக்கும் தயாரானவர்கள் மட்டுமே இதில் ..

  ஜீவனாம்சம் கூட தேவையேயில்லை என்பவர்கள்..

  ஏன் பெண் இன்னும் ஆணை சார்ந்தே வாழ்கிறாள் என நினைக்கிறீர்கள்..?

  படித்த மேல்தட்டு பெண்களல்ல நான் சொல்வது..

  ஒரு கிராமிய பெண் கூட தனித்து வாழ்ந்து குழந்தைகளை காப்பாற்றியதை நான் கண்டுள்ளேன்..

  சட்ட திட்டம் இன்னும் மேலைநாடுகள் போல வரவில்லை தான்..

  ஆனால் எதையும் எதிர்பார்க்காத ஒரு பெண்ணுக்கு இவை எதுவும் முட்டுகட்டையில்லை...

  அவளை வேசி என்றாலும் , அவளுக்கு கவலையில்லை.. :). ஏன்னா சிரிச்சு பேசினாலே வேசி என்ற பட்டத்தை எப்பவோ கேட்டிருப்பாள் அவள்..:)

  ReplyDelete
 54. பன்னிக்குட்டி ராம்சாமி said...

  அப்போ இந்தக் கலாச்சாரம் மாறாதா? FTVய சும்மா பாத்தே வாழ்க்கை ஓடிடுமோ?

  //

  எதுக்கு FTV இப்போ எல்லா டிவி சானலும் ஒரே மாதிரி தானே இருக்கு...

  ReplyDelete
 55. //"நம்பிக்கையை விட வேண்டாம். நம்முடைய லட்சியங்களை எப்படி அடைவது என்பதை மக்கள் எண்ண வேண்டும். அனைத்து ஜனநாயக சக்திகளுடன் இணைந்து பணிபுரிய தயாராக இருக்கிறேன். மக்கள் விரும்பினால் மியான்மர் மீதான தடைகளை நீக்க மேற்கத்திய நாடுகளுடன் பேச தயாராக இருக்கிறேன். கடந்த 7 ஆண்டுகளாக தான் சிறை வைக்கப்பட்டது தொடர்பாக, என்னை சிறை வைத்தவர்கள் மீது எனக்கு எவ்விதமான வஞ்சமும் இல்லை," என்றார்.
  //

  என்னை மாதிரி சத்தியமா ரொம்ப நல்லவங்க போல. அப்பாட இதை பத்தியும் கேமென்ட் போட்டுட்டேன். இல்லைனா அதுக்கும் ஒரு புனைவு எழுதுவாங்க...

  ReplyDelete
 56. ///ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
  //"நம்பிக்கையை விட வேண்டாம். நம்முடைய லட்சியங்களை எப்படி அடைவது என்பதை மக்கள் எண்ண வேண்டும். அனைத்து ஜனநாயக சக்திகளுடன் இணைந்து பணிபுரிய தயாராக இருக்கிறேன். மக்கள் விரும்பினால் மியான்மர் மீதான தடைகளை நீக்க மேற்கத்திய நாடுகளுடன் பேச தயாராக இருக்கிறேன். கடந்த 7 ஆண்டுகளாக தான் சிறை வைக்கப்பட்டது தொடர்பாக, என்னை சிறை வைத்தவர்கள் மீது எனக்கு எவ்விதமான வஞ்சமும் இல்லை," என்றார்.
  //

  என்னை மாதிரி சத்தியமா ரொம்ப நல்லவங்க போல. அப்பாட இதை பத்தியும் கேமென்ட் போட்டுட்டேன். இல்லைனா அதுக்கும் ஒரு புனைவு எழுதுவாங்க...///

  எனனது புனைவா? உனக்கு ஒரு கமென்ட் போட்டா பத்தாதா? மேலே இன்னும் பாக்கலியா?

  ReplyDelete
 57. பயணமும் எண்ணங்களும் said... 53
  பயந்தாங்கோழிகளுக்கு ஒத்து வராது..
  ஏன் விட்டுட்டு போனா தனியா ஒத்தையாளா பிள்ளை வளர்க்க முடியாதா?..
  இல்லை அப்படி வளர்த்த தாய்மார் இல்லையா?..
  தான் சம்பாதித்ததை எடுத்தும் குடிக்க செல்லும் கணவரோடு ஆயுசுக்கும் போராடி பிள்ளை வளர்க்கும் தாய்மார்.?
  பிள்ளைகளை வைத்தெல்லாம் இந்த லிவிங் -டுகெதரை பயமுறுத்த முடியாது..
  எல்லாத்துக்கும் தயாரானவர்கள் மட்டுமே இதில் ..
  ஜீவனாம்சம் கூட தேவையேயில்லை என்பவர்கள்..

  ஏன் பெண் இன்னும் ஆணை சார்ந்தே வாழ்கிறாள் என நினைக்கிறீர்கள்..?

  படித்த மேல்தட்டு பெண்களல்ல நான் சொல்வது..

  ஒரு கிராமிய பெண் கூட தனித்து வாழ்ந்து குழந்தைகளை காப்பாற்றியதை நான் கண்டுள்ளேன்..

  சட்ட திட்டம் இன்னும் மேலைநாடுகள் போல வரவில்லை தான்..

  ஆனால் எதையும் எதிர்பார்க்காத ஒரு பெண்ணுக்கு இவை எதுவும் முட்டுகட்டையில்லை...
  அவளை வேசி என்றாலும் , அவளுக்கு கவலையில்லை.. :). ஏன்னா சிரிச்சு பேசினாலே வேசி என்ற பட்டத்தை எப்பவோ கேட்டிருப்பாள் அவள்..:)
  //

  தாய்குலங்களே..
  யார் யாரையும் சார்ந்திருப்பதில்லை.
  வாழ்க்கை என்பது முகம் தெரியாத ஒரு கயிற்றால் இருவர் இணைந்து, ஒருவருக்கொருவர் புரிந்து, வாழ்க்கையை அனுபவிப்பது.

  இங்கு நான் சொல்ல வந்தது, எல்லாரும் நல்லவர்கள் இல்லை என்பதே.

  மீறி , ”ஏன் விட்டுட்டு போனா தனியா ஒத்தையாளா பிள்ளை வளர்க்க முடியாதா?” என்ற கேள்விக்கு என் பதில்..

  .ரைட்டு..முடியும்... சந்தோசம்..

  ReplyDelete
 58. //றி , ”ஏன் விட்டுட்டு போனா தனியா ஒத்தையாளா பிள்ளை வளர்க்க முடியாதா?” என்ற கேள்விக்கு என் பதில்..

  .ரைட்டு..முடியும்... சந்தோசம்..

  ///
  கண்டிப்பா சந்தோசப்படுரோம் ..!!

  ReplyDelete
 59. ////வெறும்பய said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said...

  அப்போ இந்தக் கலாச்சாரம் மாறாதா? FTVய சும்மா பாத்தே வாழ்க்கை ஓடிடுமோ?

  //

  எதுக்கு FTV இப்போ எல்லா டிவி சானலும் ஒரே மாதிரி தானே இருக்கு...////

  நான் டிவிய சொல்லல, பிகர சொன்னேன்!

  ReplyDelete
 60. பன்னிக்குட்டி ராம்சாமி said...

  //

  எதுக்கு FTV இப்போ எல்லா டிவி சானலும் ஒரே மாதிரி தானே இருக்கு...////

  நான் டிவிய சொல்லல, பிகர சொன்னேன்!

  //

  பாதி படிச்சிட்டு கமெண்ட் போட்டா இப்படி தான் ஆகுமோ..

  ReplyDelete
 61. //திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வது, அவரவர் உரிமை. அதில், என் மூக்கை, நுழைப்பது தேவையில்லாதது. //

  இதுதான் மேட்டர்.

  /ஆனா, சக பதிவனா, என்னுடைய கருத்தை சொல்ல உரிமையுண்டு.
  “வரக்கூடிய பார்ட்னர், ஒழுக்கமானவனானு பார்த்துட்டு, அப்பால, உங்க பொன்னான முடிவை எடுங்க தாயி..”. //

  இது மிகச்சரி. ஆனா பெரும்பான்மைக்கு எதிரா இப்படி ஒரு வழியைத் தேடுறவங்களுக்கு இந்த தெளிவு கண்டிப்பா இருக்கும்னு நினைக்கிறேன். அதன் பின்னுமான விளைவுகள் திருமணத்திலும் உண்டுதானே. அதற்காக இப்படி இருக்க நினைப்பவர்கள், அதில் தவறில்லை, அவர்கள் உரிமை அது என மதிப்பவர்களை கீழ்த்தரமாகப் பேசும் உரிமை யாருக்கும் இல்லை.

  ReplyDelete
 62. சார் ஒரே ஒரு வரி சொல்லிக்கலாமா

  பெண்களுக்கு சுகந்திரம்
  கொடுத்தாச்சு தான்
  ஆனா ஒரு வேண்டுகோள்
  காமுகன் அலையும்
  காலமிது துநிந்துதான்
  நீர் செல்வீர்
  துகிளுரிப்பு யோதனர்கள்
  திருந்தவில்லை தாயே
  இன்றும்
  புறம் செல்லுகையில்
  துணையுடன் செல்
  துனிந்து துயரங்கள்
  மாறும்..........
  தாய்குலமே சகோதரனின் பணிவான வேண்டுகோள்........

  ReplyDelete
 63. “வரக்கூடிய பார்ட்னர், ஒழுக்கமானவனானு பார்த்துட்டு,//

  அதுக்குத்தான் லிவிங்-டுகெதர்.

  ஏன்னா திருமணத்தில் இப்படி பார்க்க முடியாதே..

  மாட்டை கொண்டு சந்தையில விற்கிற கதைதானே?..

  ஒழுக்கமோ இல்லையோ கடசீ வரை காலம் தள்ளணும்.. விதின்னு...ஏன்னா அது கலாச்சாரமும்..

  ReplyDelete
 64. துகிளுரிப்பு யோதனர்கள்
  திருந்தவில்லை தாயே
  இன்றும்
  புறம் செல்லுகையில்
  துணையுடன் செல்
  துனிந்து துயரங்கள்
  மாறும்..........
  தாய்குலமே சகோதரனின் பணிவான வேண்டுகோள்........//

  பணிவுக்கு வணக்கம்..

  ஆனா இப்படியே துணையை நம்பி இருக்கணும் என பெண் குழந்தைகளுக்கு சொல்லி தராதீங்க..

  துகிலுறிப்பவனுக்கு பயந்தே எப்பவும் துணையோடே போகணுமா , இல்ல அந்த குழந்தைக்கு அதை சமாளிக்கும் படி வளர்க்கணுமா?..

  ஒரு குழந்தையை கூட பாலியல் செய்யும் மனமுள்ள மிருகங்கள் இருக்கும் நாட்டில் பாதுகாப்பு கொடுப்பதை விட எதிர்த்து நிற்க பழக்குவோம் குழந்தைகளை....

  ReplyDelete
 65. @வானம்பாடிகள்
  திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வது, அவரவர் உரிமை. அதில், என் மூக்கை, நுழைப்பது தேவையில்லாதது//

  ஒருவருக்கு இனிப்பு பிடிக்கும்..மற்றவருக்கு கசப்பு பிடிக்கும்.. அவரவருக்கு பிடித்ததை எடுத்துக்கொள்ளுங்கள்..

  ஆனால்.. சுகாதாரமற்ற கடைகளில் சாப்பிடாதீர்கள்.. இதுதான் நான் சொல்ல வருவது வானம்பாடிகள் சார்..

  :-)

  ReplyDelete
 66. @பயணமும் எண்ணங்களும்

  ஏன்னா திருமணத்தில் இப்படி பார்க்க முடியாதே..

  மாட்டை கொண்டு சந்தையில விற்கிற கதைதானே?.

  //
  ஒரு குழந்தையை கூட பாலியல் செய்யும் மனமுள்ள மிருகங்கள் இருக்கும் நாட்டில் பாதுகாப்பு கொடுப்பதை விட எதிர்த்து நிற்க பழக்குவோம் குழந்தைகளை....
  //

  உண்மை.. குழந்தைகளுக்கு அவரவர் சொந்தகாலில், நிற்கும் துணிவை ஊட்டலாம்..

  இந்த திருமணம் சந்தையில் விற்க்கும் கதை என்று சொல்கிறீர்களே.
  ஏன்.. அந்த பெண்ணுக்கு,அவருடைய பெற்றொருடன் பேசும் துணிவு இல்லையா?

  இது பெற்றோர் பிரச்சனையா?. இல்லை கலாச்சார சீரழிவா?....

  ReplyDelete
 67. //பட்டாபட்டி.. said...

  @வானம்பாடிகள்
  திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வது, அவரவர் உரிமை. அதில், என் மூக்கை, நுழைப்பது தேவையில்லாதது//

  ஒருவருக்கு இனிப்பு பிடிக்கும்..மற்றவருக்கு கசப்பு பிடிக்கும்.. அவரவருக்கு பிடித்ததை எடுத்துக்கொள்ளுங்கள்..

  ஆனால்.. சுகாதாரமற்ற கடைகளில் சாப்பிடாதீர்கள்.. இதுதான் நான் சொல்ல வருவது வானம்பாடிகள் சார்..

  :-)//

  இது நச் மேட்டர். கலக்கல் பட்டா..

  ReplyDelete
 68. @பட்டா

  உன்னை யாருயா அதுக்குள்ள உள்ள வர சொன்னது?? இன்னும் சண்டையே சூடு பிடிக்கல கருத்து சொல்ல வந்தவங்க இன்னும் சொல்லி முடிக்கவே இல்லை. அதுக்குள்ள நீ பதிவு போட்ட.. வர வர பிரபல பதிவர் மாதிரியே நடக்க மாட்டர நீ... நீ பொம்பள பிள்ளைங்க மேட்டர்ல ரொம்ப நல்லவன் அதனால அடக்கி வாசிச்சி இருக்க.... நடத்து.... :))

  ReplyDelete
 69. @பட்டா

  அது யாரு பொம்பளை புள்ளை?..

  நம்ம ப்ளாக்க்கு , அப்படி யாரும் வரமாட்டாங்க பிரதர்.. ஹி..ஹி

  ReplyDelete
 70. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... 67

  //பட்டாபட்டி.. said...

  @வானம்பாடிகள்
  திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வது, அவரவர் உரிமை. அதில், என் மூக்கை, நுழைப்பது தேவையில்லாதது//

  ஒருவருக்கு இனிப்பு பிடிக்கும்..மற்றவருக்கு கசப்பு பிடிக்கும்.. அவரவருக்கு பிடித்ததை எடுத்துக்கொள்ளுங்கள்..

  ஆனால்.. சுகாதாரமற்ற கடைகளில் சாப்பிடாதீர்கள்.. இதுதான் நான் சொல்ல வருவது வானம்பாடிகள் சார்..

  :-)//

  இது நச் மேட்டர். கலக்கல் பட்டா..

  //

  நக்கல் பண்றையா.. இல்ல உண்மையா சொலிறீயா ?. தெரியலே..

  இருந்தாலும் சொல்றேன்
  காலம் மாறிக்கிட்டே இருக்கு..
  எது நல்லது..எது கெட்டதுனு சந்ததிகளுக்கு புரிய வெச்சுட்டா போதும்..

  நீ கேட்கலாம். ஏன் அன்னைக்கு குஷ்பு பிரச்சனைக்கு வாந்தி எடுத்தேனு?..

  ஏன்னா.. அந்த சாப்பாடு ஒரு பிச்சைப்பாத்திரம்.... அதுக சொல்லு, நாம புரிஞ்சுக்கும் நிலையில இல்லை...

  புரியும் என் நினக்கிறேன்...

  ReplyDelete
 71. இந்த திருமணம் சந்தையில் விற்க்கும் கதை என்று சொல்கிறீர்களே.
  ஏன்.. அந்த பெண்ணுக்கு,அவருடைய பெற்றொருடன் பேசும் துணிவு இல்லையா?

  இது பெற்றோர் பிரச்சனையா?. இல்லை கலாச்சார சீரழிவா?....

  //

  முக்கிய காரணி பெற்றோர்.. அவர்கள் பயப்படும் /பயப்படுத்தி வைத்திருக்கும் சமூக கலாச்சாரம்..

  நான் லிவிங்-டுகெதரை என் பிள்ளைக்கு அனுமதித்தால் என்னை வந்து ஏன் னு கேள்வி கேட்கும் நட்பு எனக்கில்லை.. ஆக எனக்கு அந்த சமூக வட்டம் இல்லை..

  அல்லது என்னை கேள்வி கேட்கும் அளவுக்கு நான் விடுவதில்லை..

  இப்படி எத்தனை பெற்றோர் துணிவை கொடுப்பார்கள்..?

  அதே சமயம் , அதில் ஏதும் தவறு நடந்தாலும் அழுதுகிட்டு வந்து நிற்க கூடாது என் பிள்ளை.. அதை அவரே சமாளிக்கணும்.. பின்னாலிருந்து ஆதரவு மட்டும் தரலாம்.

  சாதக பாதகம் சொல்லி வளர்க்கலாம்..

  அதைவிட்டு அது மோசம் கிட்டயே போகாதே னு சொன்னா " அட போய்த்தான் பார்ப்போமே " னு தோணும்..

  திருமணத்தில் இணைந்து வாழ்வதற்கும் லிவிங்-டுகெதருக்கும் வித்யாசம் ஏதுமில்லை..

  இரண்டுமே மனம் ஒத்து வாழ்வதுதான்..

  திருமணத்திலுள்ள பிரச்னை சில லிவிங்-டுகெதரில் தீர்க்கப்படுமேயொழிய Vice versa அல்ல..

  ReplyDelete
 72. அதிரடியா இருக்கு பிராத்தல் மகளிர் அணி...நல்ல மகளிரும் ஒழுக்கம் கெட்ட சாக்கடையில் மாறி விடுவது இயல்பு

  ReplyDelete
 73. //ஒரு தவறு செய்தால், எவ்வளவு பேர், அந்த தவற்றில் பாடம் படித்தவர்களாக இருக்கிறார்கள் என நினக்கிறீர்கள்?
  //

  அப்படி பாடம் படித்திருந்தால் நாம் எப்போதோ வல்லரசாகி இருப்போம். இப்படி கேவலமாக இத்தாலிக்கும் கொலம்பியாவுக்கும் அடிமைப்பட்டு இருக்க மாட்டோம். சரிதானே பட்டபட்டி சாப்?

  ReplyDelete
 74. @ பயணமும் எண்ணங்களும்: நீங்கள் ஆணா, பெண்ணா என்று தெரியவில்லை. உங்களின் கருத்துக்கள், காலத்திற்கு மிகவும் ஏற்றதாக இருக்கின்றன. பெண்களை பொத்தி பொத்தி வளர்தால் சக்தியற்ற, அறிவுமற்ற வெறும் அழகு பதுமைகளாக மட்டுமே வளர்கிறார்கள். அதைத்தான் இப்போது பார்க்கும் எதார்த்தம். அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளும் அதேவிதமாக வளர்தெடுக்கப்படுகிறார்கள்.

  பெண்கள் படிப்பில் எல்லாம் அதிக மார்க் வாங்கி மாநில அளவில், தேசிய அளவில் சாதனையெல்லாம் புரிகிறார்கள். ஆனால் தன் சொந்த வாழ்க்கையை பிறர் நிர்ணயிக்க கொடுத்து விடுகிறார்கள். நீங்கள் சொல்வது முற்றிலும் ஏற்றுக்கொள்கின்றேன். பெண்ணை பேடியாக வளர்கக்கூடாது கிரண்பேடியாக வளர்க்கவேண்டும்.

  உங்கள் கருத்துக்களுக்கு என்னுடைய சபாஷ்!

  ReplyDelete
 75. //நக்கல் பண்றையா.. இல்ல உண்மையா சொலிறீயா ?. தெரியலே..//

  இல்லப்பா சீரியஸா தான் சொல்றேன். நச்சுன்னு புரியிற மாதிரி சொன்னீங்க

  ReplyDelete
 76. அருமையான அலசல் மிகத்தெளிவாக சிந்திக்கக கூடியதாக பதிவு செய்துள்ளீர்கள் பாராட்டுக்கள் சார்,

  //பர்மா என்று முன்னர் அழைக்கப்பட்ட மியான்மர் நாட்டின் ராணுவ அரசால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த அந்நாட்டின் ஜனநாயகப் போராளியும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான ஆங் சான் சூ கி விடுதலை செய்யப்பட்டார்.//

  ஆங் சான் சூ கி அம்மையாரைப்பற்றி நானும் ஒரு பதிவு எழுதியுள்ளேன் சார் நேரமிருந்தால் பாருங்கள்:
  http://urssimbu.blogspot.com/2010/11/blog-post_15.html

  //மக்களுக்கு நல்லது பண்ணி, சமுதாயம் முன்னேற வேண்டும் என பாடுபடவா? ஊகூம். நமக்கு போஸ்ட் கிடைக்கனும். பணம் சுருட்டனும். பேர் புகழ் வாங்கனும். மறக்காம, வெள்ள சட்டை போடனும். பார்ப்பவர்கள், "வணக்கம் தலைவா"னு கும்பிடனும். அப்பால, சாயந்திரம் ஆனா, தண்ணி இறங்கனும்.( உள்குத்து எதுவுமில்லை சாமிகளா...)//

  சரியான சாட்டையடி...

  பகிர்வுக்கு நன்றி சார்

  தொடரட்டும் உங்கள் பொன்னான பணி

  ReplyDelete
 77. //எஸ்.கே said... 37

  வேறொரு பதிவில் ஆங் சான் சூகி அவர்களின் வாழ்க்கை பற்றி கொஞ்சம் விரிவாக படித்தேன்.
  http://urssimbu.blogspot.com/2010/11/blog-post_15.html
  அவரின் கணவரின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள கூட அனுமதிக்கவில்லையாமே.
  இது போன்றவர்களின் வாழ்க்கை வரலாற்றை வழிகாட்டியாக கொள்ள வேண்டும்.//

  எஸ்.கே சார் உங்களுக்கு சிறப்பு நன்றிகள் சார் என் தளத்தை சுட்டிகாட்டியதற்கு...

  நன்றி
  வாழ்க வளமுடன்

  ReplyDelete
 78. @பட்டா

  //அது யாரு பொம்பளை புள்ளை?..

  நம்ம ப்ளாக்க்கு , அப்படி யாரும் வரமாட்டாங்க பிரதர்.. ஹி..//

  அப்படியா சொல்லவே இல்லை... :)) இங்க கமெண்ட் போட்டு இருக்கவங்க எல்லாரும் ஆம்பளையா??

  (அவசர பட்டு அருவா எடுக்காதயா... ஆள பாத்து வெட்டு)

  ReplyDelete
 79. //நம்ம ப்ளாக்க்கு , அப்படி யாரும் வரமாட்டாங்க பிரதர்.. ஹி..//

  அப்படியா சொல்லவே இல்லை... :)) இங்க கமெண்ட் போட்டு இருக்கவங்க எல்லாரும் ஆம்பளையா??

  (அவசர பட்டு அருவா எடுக்காதயா... ஆள பாத்து வெட்டு)நக்கல் பண்றையா.. இல்ல உண்மையா சொலிறீயா ?. தெரியலே..//

  அயோ பட்டா இவன நம்பாத உன்னை உசுபேத்தி விடுறான்.....சொன்ன கேளு .....அருவாவ கீழ போடு ............

  ReplyDelete
 80. என்னது நானு யாரா? said...

  @ பயணமும் எண்ணங்களும்: நீங்கள் ஆணா, பெண்ணா என்று தெரியவில்லை. உங்களின் கருத்துக்கள், காலத்திற்கு மிகவும் ஏற்றதாக இருக்கின்றன. பெண்களை பொத்தி பொத்தி வளர்தால் சக்தியற்ற, அறிவுமற்ற வெறும் அழகு பதுமைகளாக மட்டுமே வளர்கிறார்கள். அதைத்தான் இப்போது பார்க்கும் எதார்த்தம். அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளும் அதேவிதமாக வளர்தெடுக்கப்படுகிறார்கள்.

  பெண்கள் படிப்பில் எல்லாம் அதிக மார்க் வாங்கி மாநில அளவில், தேசிய அளவில் சாதனையெல்லாம் புரிகிறார்கள். ஆனால் தன் சொந்த வாழ்க்கையை பிறர் நிர்ணயிக்க கொடுத்து விடுகிறார்கள். நீங்கள் சொல்வது முற்றிலும் ஏற்றுக்கொள்கின்றேன். பெண்ணை பேடியாக வளர்கக்கூடாது கிரண்பேடியாக வளர்க்கவேண்டும்.

  உங்கள் கருத்துக்களுக்கு என்னுடைய சபாஷ்!//

  மிக்க நன்றி நண்பரே.

  நான் பெண்தான்..

  ஆனால் தமிழ் வலையுலகை பொருத்தவரை ஆண் என அறியப்படுவதையே விரும்புகிறேன்..

  :)

  ReplyDelete
 81. பயணமும் எண்ணங்களும் said... 64

  பணிவுக்கு வணக்கம்..

  ஆனா இப்படியே துணையை நம்பி இருக்கணும் என பெண் குழந்தைகளுக்கு சொல்லி தராதீங்க..

  துகிலுறிப்பவனுக்கு பயந்தே எப்பவும் துணையோடே போகணுமா , இல்ல அந்த குழந்தைக்கு அதை சமாளிக்கும் படி வளர்க்கணுமா?..

  ஒரு குழந்தையை கூட பாலியல் செய்யும் மனமுள்ள மிருகங்கள் இருக்கும் நாட்டில் பாதுகாப்பு கொடுப்பதை விட எதிர்த்து நிற்க பழக்குவோம் குழந்தைகளை....
  November 20, 2010 3:45 PM

  நீங்க சொல்றது சரிதான் சகோதரி
  அதே போல துணை என்பது கணவன் மட்டும் தானா?

  ReplyDelete
 82. ///“வரக்கூடிய பார்ட்னர், ஒழுக்கமானவனானு பார்த்துட்டு, அப்பால, உங்க பொன்னான முடிவை எடுங்க தாயி..”.////

  சரிதான் ஆனால் பெண்களை விட இப்போது ஆண்கள் தான் பயப்பட வேண்டி உள்ளது. முடிவை எடுக்க.

  ReplyDelete
 83. //கலாச்சாரம், சீரழிவு, பாதுகாவலர்கள், வன்புணர்சி, மென்புணர்சி, துகிலுரிதல்.etc..etc.. புதுப்புது வார்த்தைகளை தெரிந்துகொள்ள உதவிய, சக பதிவர்களுக்கு, கோடான, கோடி நன்றிகள் அய்யா. //

  விபச்சாரத்தை விட்டுட்டீங்களே பாஸ்..

  மற்றபடி.. இதில் உள்ள சாதக பாதகங்களைப் புரிந்து அந்த வாழ்க்கையை வாழ முடிவு செய்பவர்களைத் தடுக்க நாம் யார்?

  ReplyDelete
 84. விடுதலை தேவதைக்கு வணக்கங்கள்.

  ReplyDelete
 85. கலாச்சாரம் பத்தி ரொம்ப தெளிவான பார்வை பட்டா.

  விவசாயம் பன்றதுக்கு முன்னாடி மண்ணை பண்படுத்தனும் / பண்படுத்தப்பட்ட இடத்துல விவசாயம் பண்ணனும். சும்மா நானும் விவசாயம் பண்ணுறேன்னு போயி பொட்டல் தரிசுல பண்ணினா எல்லாம் பாழ்.

  வாட்டர் ரெசிஸ்டன்ஸ் வாட்ச் வாங்குனா அதை குளிக்கும்போது கூட அவுக்காத அளவுக்கு உள்ள அறிவு ஜீவித்தனம் மிகுந்தவர்களைக்கொண்டது நம்ம கலாச்சாரம். எதை எதுக்கு எப்போது எப்படி பயன்படுத்தனும்னு கூரில்லாம செயல்படுவது நமது வழக்கமும் கூட.

  நீங்க கொடுத்திருக்கிற உதாரணங்களும் சிறப்பு.

  இந்த புதிய வாழ்கை முறையில பெண்கள் மட்டுமில்ல ஆண்களும் நிறையப் பக்குவப்படனும். இந்த முறையில பிறக்கிற குழந்தைகளுக்கும் சட்டம் பாதுகாப்பா மாற்றி அமைக்கப்படனும்.

  மொத்தத்துல தனிமனித ஒழுக்கம் சீரழியக்கூடாது.

  ReplyDelete
 86. dineshkumar said...  நீங்க சொல்றது சரிதான் சகோதரி
  அதே போல துணை என்பது கணவன் மட்டும் தானா?//

  எல்லாவிதமான துணையும் தான் சொல்கிறேன் நண்பரே..

  எப்போதும் துணைக்கு வர இயலுமா?..

  விட்டுக்குள் பூட்டி வைத்து சென்றாலுமே ஆபத்து இக்காலத்தில் , சொந்தங்கள் ரூபத்தில் கூட..

  ஆக ஒரே வழி சமாளிக்க கற்று தருவது மட்டுமே..

  ReplyDelete
 87. இது உங்க முதல் பாகத்துக்கு -

  நீங்க நல்ல இருக்கோணும் நாடு முன்னேற உங்க நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற.........................

  இது ரெண்டாவதுக்கு -

  எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோசம் ... ராத்திரிகள் வந்துவிட்டால் ................

  போதும்னு நெனைக்கிறேன் dot.

  ReplyDelete
 88. ////அம்புட்டுத்தேன். புத்தியிருந்தா பொழைச்சுக்கட்டும்! :-////

  //அப்போது அந்த மாதிரி இருப்பவர்களுக்கு புத்தி இல்லை சொல்றிங்களா...?//

  சௌந்தர்! நான் எந்த வாக்கியத்தை மேற்கோள் காட்டி எனது கருத்தைத் தெரிவித்திருக்கிறேன் என்று கவனிக்கவும்.

  //பத்து நிமிடம் வேலைய செய்துவிட்டு, பத்து மாதம் பணிச்சுமைய கொடுத்திட்டுப்போக ,பலபேர்.... பலபோர்வையில் சுத்திக்கிட்டு இருக்கானுக.//

  அப்படிப் பலபோர்வையில் இருப்பவர்களைப் புத்தியிருப்பவர்களால் அவசியம் கண்டு எச்சரிக்கையாக இருக்க முடியும்; இருக்க வேண்டும் என்பதே எனது கருத்து. எனி மோர் கொஸ்சன்ஸ்??

  ReplyDelete
 89. சமூக விழிப்புணர்வுள்ள் பதிவுதான்,இன்னும் உங்க கிட்டே காமெடியை எதிர்பார்க்கறோம் சார்

  ReplyDelete
 90. இம்சைஅரசன் பாபு.. said...

  அண்ணன் பட்டாப்பட்டி வாழ்க வாழ்க .....சிந்தனை சிற்பி பட்டாப்பட்டி வாழ்க .....சமூக சீர்திருதாளன் பட்டாப்பட்டி வாழ்க ........எங்கள் விடி வெள்ளி பட்டாப்பட்டி வாழ்க ......

  ஏதாவது கட்சி ஆரம்பிச்சீங்களா? சொல்லவே இல்லை?

  ReplyDelete
 91. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

  //அப்பால, சாயந்திரம் ஆனா, தண்ணி இறங்கனும்/

  ஓ அப்படியா. உள்குத்து இல்லியா. ஹிஹி(இதுல ஏதும் உள்குத்து இல்ல)

  டபுள் மீனிங் மாதிரி தெர்யுது

  ReplyDelete
 92. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

  இந்த பதிவு போட்டதற்காக நீர் ஆட்டு மந்தை கூட்டத்தில் சேர்க்கப் படுகிறீர்!!

  அங்கே மட்டும் என்ன வாழுது

  ReplyDelete
 93. Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

  ////அய்யோ கொல்றாங்களே" என்று கூவி, இரண்டு மணி நேரத்தில் வெளிவந்து இருக்கலாம். உம்.....விடுங்க...////

  இதுதான்யா ஜனநாயகம்,. அது தெரியாம...%^#!$@#@#$

  நீங்க 2 பேரும் டி எம் கே வை தைரியமா தாக்கறீங்களே எப்படி?

  ReplyDelete
 94. மகளிர் அணியோட இன்னொரு முக்கியமான வேலை இருக்கு நண்பா!!!! தெரியலனா சுப்ரமணியசாமிய கேட்டுக்கங்க!!!!!!

  ReplyDelete
 95. @மாணவன் said... 76

  அருமையான அலசல் மிகத்தெளிவாக சிந்திக்கக கூடியதாக பதிவு செய்துள்ளீர்கள் பாராட்டுக்கள் சார்,
  ஆங் சான் சூ கி அம்மையாரைப்பற்றி நானும் ஒரு பதிவு எழுதியுள்ளேன் சார் நேரமிருந்தால் பாருங்கள்:
  http://urssimbu.blogspot.com/2010/11/blog-post_15.html

  //

  வாங்க் பாஸ்..

  ReplyDelete
 96. நாகராஜசோழன் MA said... 73

  //ஒரு தவறு செய்தால், எவ்வளவு பேர், அந்த தவற்றில் பாடம் படித்தவர்களாக இருக்கிறார்கள் என நினக்கிறீர்கள்?
  //

  அப்படி பாடம் படித்திருந்தால் நாம் எப்போதோ வல்லரசாகி இருப்போம். இப்படி கேவலமாக இத்தாலிக்கும் கொலம்பியாவுக்கும் அடிமைப்பட்டு இருக்க மாட்டோம். சரிதானே பட்டபட்டி சாப்?

  //

  சரிதான் போலிருக்கு.. இரண்டு வாரத்தில இத்தாலி மொழி.. புக் இருக்கு.. வேணுமா பாஸ்...

  ReplyDelete
 97. @பயணமும் எண்ணங்களும்:

  பயந்தாங்கோழிகளுக்கு ஒத்து வராது..
  ஏன் விட்டுட்டு போனா தனியா ஒத்தையாளா பிள்ளை வளர்க்க முடியாதா?..
  இல்லை அப்படி வளர்த்த தாய்மார் இல்லையா?..
  தான் சம்பாதித்ததை எடுத்தும் குடிக்க செல்லும் கணவரோடு ஆயுசுக்கும் போராடி பிள்ளை வளர்க்கும் தாய்மார்.?
  பிள்ளைகளை வைத்தெல்லாம் இந்த லிவிங் -டுகெதரை பயமுறுத்த முடியாது..
  எல்லாத்துக்கும் தயாரானவர்கள் மட்டுமே இதில் ..
  ஜீவனாம்சம் கூட தேவையேயில்லை என்பவர்கள்..
  ஏன் பெண் இன்னும் ஆணை சார்ந்தே வாழ்கிறாள் என நினைக்கிறீர்கள்..?
  படித்த மேல்தட்டு பெண்களல்ல நான் சொல்வது..
  மிக்க நன்றி நண்பரே.
  நான் பெண்தான்..
  ஆனால் தமிழ் வலையுலகை பொருத்தவரை ஆண் என அறியப்படுவதையே விரும்புகிறேன்..
  //

  நீங்கள் மேலே சொன்னதற்க்கும், இதற்க்கும் நிறைய வித்தியாசங்கள்.
  ஏன் ஆண் என்ற முகமூடி?

  ReplyDelete
 98. @THOPPITHOPPI said... 82
  சரிதான் ஆனால் பெண்களை விட இப்போது ஆண்கள் தான் பயப்பட வேண்டி உள்ளது. முடிவை எடுக்க.
  //

  உண்மைதான் என நினக்கிறேன்.. ஹி..ஹி

  ReplyDelete
 99. @முகிலன் said... 83
  விபச்சாரத்தை விட்டுட்டீங்களே பாஸ்..
  மற்றபடி.. இதில் உள்ள சாதக பாதகங்களைப் புரிந்து அந்த வாழ்க்கையை வாழ முடிவு செய்பவர்களைத் தடுக்க நாம் யார்?
  //

  வாங்க பாஸ்.. ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கீங்க ... உம்..

  ReplyDelete
 100. @ரோஸ்விக் said... 84
  விடுதலை தேவதைக்கு வணக்கங்கள்.
  //

  அது யாருய்யா?...  // கலாச்சாரம் பத்தி ரொம்ப தெளிவான பார்வை பட்டா.

  விவசாயம் பன்றதுக்கு முன்னாடி மண்ணை பண்படுத்தனும் / பண்படுத்தப்பட்ட இடத்துல விவசாயம் பண்ணனும். சும்மா நானும் விவசாயம் பண்ணுறேன்னு போயி பொட்டல் தரிசுல பண்ணினா எல்லாம் பாழ்.

  வாட்டர் ரெசிஸ்டன்ஸ் வாட்ச் வாங்குனா அதை குளிக்கும்போது கூட அவுக்காத அளவுக்கு உள்ள அறிவு ஜீவித்தனம் மிகுந்தவர்களைக்கொண்டது நம்ம கலாச்சாரம். எதை எதுக்கு எப்போது எப்படி பயன்படுத்தனும்னு கூரில்லாம செயல்படுவது நமது வழக்கமும் கூட.

  நீங்க கொடுத்திருக்கிற உதாரணங்களும் சிறப்பு.

  இந்த புதிய வாழ்கை முறையில பெண்கள் மட்டுமில்ல ஆண்களும் நிறையப் பக்குவப்படனும். இந்த முறையில பிறக்கிற குழந்தைகளுக்கும் சட்டம் பாதுகாப்பா மாற்றி அமைக்கப்படனும்.

  மொத்தத்துல தனிமனித ஒழுக்கம் சீரழியக்கூடாது.
  //

  வரிக்கு வரி பிரபாகர் எழுதியதைப்போல உள்ளது.. ஹி..ஹி

  ReplyDelete
 101. @சி.பி.செந்தில்குமார் said... 89
  சமூக விழிப்புணர்வுள்ள் பதிவுதான்,இன்னும் உங்க கிட்டே காமெடியை எதிர்பார்க்கறோம் சார்
  //

  அடப்பாவிகளா.. என்னைய காமெடியனாவே பண்ணீட்டிங்களா?

  ReplyDelete
 102. @சி.பி.செந்தில்குமார் said... 93
  நீங்க 2 பேரும் டி எம் கே வை தைரியமா தாக்கறீங்களே எப்படி?
  //

  ஏன்னா.. ஸ்பெக்டம் ஊழல்ல காசு வரலே.. அதான்..

  போங்க சார்.. இவங்க என்ன மன்னரா?.. கேள்வியே கேட்கக்கூடாதா?..

  ReplyDelete
 103. @VAIGAI said... 94
  மகளிர் அணியோட இன்னொரு முக்கியமான வேலை இருக்கு நண்பா!!!! தெரியலனா சுப்ரமணியசாமிய கேட்டுக்கங்க!!!!!!
  //

  அட.. இங்க வந்துட்டு வெக்கமா?..
  ஆமா.. சு.சாமிக்கு, பிறப்பிடத்தை காட்டின ஆட்டம்தானே பாஸ்..

  சுருக்கமா சொன்னா, அம்மணக்கு^%$#ண்டி ஆட்டம்.. ஹி..ஹி

  ReplyDelete
 104. நல்ல பதிவு

  //பத்து நிமிடம் வேலைய செய்துவிட்டு, பத்து மாதம் பணிச்சுமைய கொடுத்திட்டுப்போக ,பலபேர்.... பலபோர்வையில் சுத்திக்கிட்டு இருக்கானுக.//

  அம்புட்டுத்தேன். புத்தியிருந்தா பொழைச்சுக்கட்டும்! :-)
  ரிப்பீட்டு...

  ReplyDelete
 105. ஆனால் தமிழ் வலையுலகை பொருத்தவரை ஆண் என அறியப்படுவதையே விரும்புகிறேன்..
  //

  நீங்கள் மேலே சொன்னதற்க்கும், இதற்க்கும் நிறைய வித்தியாசங்கள்.
  ஏன் ஆண் என்ற முகமூடி? //

  நான் பெண்ணாக இருப்பதில் எனக்கொண்ணும் பிரச்னையில்லீங்க..

  ஆனா ஒரு பெண் சில கருத்துகளை சொன்னால் ஏற்க முடியாமல் அவளை கடித்து குதறி ரத்த கொதிப்பு அதிகமாகுது சிலருக்கு.. :))

  இதனால் நேர விரயமும் இன்னும் பிறவும்..:))

  அதே ஆண் கருத்து என்றால் வேறு விதமா பார்க்கப்படும்..:)

  ஆக ஒரு சேவைதான்.. பாவம் நம்மளால பலர் அவதிப்படவேண்டாமேன்னுதான்.:)

  ReplyDelete
 106. @@பயணமும் எண்ணங்களும்:

  //நான் பெண்ணாக இருப்பதில் எனக்கொண்ணும் பிரச்னையில்லீங்க..

  ஆனா ஒரு பெண் சில கருத்துகளை சொன்னால் ஏற்க முடியாமல் அவளை கடித்து குதறி ரத்த கொதிப்பு அதிகமாகுது சிலருக்கு.. :))

  இதனால் நேர விரயமும் இன்னும் பிறவும்..:))//

  தோழி! நீங்க பெண்ணென்று அறிந்து, இத்தனை புரட்சிகரமான கருத்துக்கள் கொண்டிருக்கிறீர்கள் என்று மனது மிகவும் மகிழ்ச்சிக்கொண்டேன்.

  ஆண் என்கின்ற முகமுடி எதற்கு?எதற்கும் பயப்படாமல் கருத்து சொல்லுங்கள்! கருத்தை சொல்ல எல்லோருக்கும் உரிமை உண்டு. இதுக்கெல்லாம் நீங்கள் வருத்தப்படாதீங்க. உங்க கடைசி கருத்தை வாபாஸ் வாங்கிக்கொள்ளுங்க தோழி! உங்க தைரியத்தை பாராட்டலாம் என்றுப் பார்த்தால், உள்ளுக்குள்ளே எங்கேயோ ஒரு மூலையில் கோழையும் ஒளிந்து இருக்கிறாளே உங்களுக்குள்.

  பெண்கள் இன்னமும் மற்றவர்கள் கருத்துக்களுக்கு ஆமாம் சாமி போடும் பலிகடாக்களா? பதில் சொல்லுங்க தோழி!

  ReplyDelete
 107. உள்ளுக்குள்ளே எங்கேயோ ஒரு மூலையில் கோழையும் ஒளிந்து இருக்கிறாளே உங்களுக்குள்.

  //

  :) கோழைத்தனமில்லை.,. ஆனால் சில பிரச்னை நான் ஆண் என்பதால் தவிர்க்கப்படும் என்றால் அது எனக்கு சரி .

  இங்கு கருத்துதானே முக்கியம் . ஆணா பெண்ணா என்பதல்ல.. ஆனால் சிலருக்கு அது ஆண் என்றால் தான் ஏற்கவே முடிகிறது என்பது சாபக்கேடு.:)

  பெண்கள் இன்னமும் மற்றவர்கள் கருத்துக்களுக்கு ஆமாம் சாமி போடும் பலிகடாக்களா? பதில் சொல்லுங்க தோழி

  //

  இல்லவே இல்லை..

  என் பாட்டி துணிவு என் அம்மாவிடம் இல்லை. என் அம்மாவின் புரட்சிகரமான செயல்கள் இன்னும் நான் செய்ததில்லை..
  http://punnagaithesam.blogspot.com/2010/11/2.html

  ( படித்து பாருங்க அம்மா பற்றி. இது சாம்பிள் மட்டுமே )

  என்னை ஒரு பெண்ணாய் வளர்க்கவில்லை ஒரு மனிதத்தனமை அதிகமுள்ள வீராங்கனையாக வளர்த்தார்.. விளையாட்டு , நடனம் , வீணை , படிப்பு என அனைத்திலுமே..

  நான் கடந்து வந்த பாதையும் பல சவால்கள் நிறைந்தவையே..

  ஆமாஞ்சாமி போடாததால் எத்தனை பிரச்னை இப்பதிவுலகிலே.. :))

  ( http://www.dinamani.com/edition/Story.aspx?SectionName=Tamils%20Abroad&artid=331552&SectionID=178&MainSectionID=178 )

  இருப்பினும் அதுவும் ஒரு நல்லதுக்கே..:)

  நன்றி நண்பரே..

  ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!