Pages

Wednesday, November 24, 2010

மந்திரப்புன்னகை - பதிவரின்(?) பார்வையில்..

.
.
.

பதிவுலக்தோழரே,
நான் ஒரு பதிவர் என்ற முறையில் , இந்த கேள்வியை உங்கள் முன் வைக்கிறேன்.  ஒரு புதிய படவெளியீட்டு விழாவுக்கு, பதிவுலக அன்பர்களுக்கு, இலவச அழைப்பு வந்திருந்ததாக அறிந்தேன்.  இது நமக்குக் கிடைத்த அங்கீகாரம்தானே?. மேலும் இனிவரும் படங்களுக்கு, இதுபோன்ற ஏற்பாடு செய்தால், விமர்சனம் எழுத ஏதுவாக  இருக்குமே!.

மங்குனி என்ற பதிவரின் பதிவில், அதைப்பற்றிய, உங்கள்  கமென்சைப் பார்த்தேன்.  சிறிது நையாண்டியாக ஏதோ சொல்லவந்தீர்கள் போல.  ஏன்?.  ’நமக்கு கிடைத்த நல்ல ஆரம்பம் இது’, என நினைக்கலாமே!.
இதைப்பற்றி உங்கள் கருத்து என்ன?.

அன்பின்
படைப்பாளி.


----------------------------------------

வணக்கம் படைப்பாளி.

உங்களுக்கு பதில் சொல்லும் முன்..

அய்யா.. மக்கா.. இது படத்தை பற்றிய விமர்சன்ம் இல்லை.. 
சத்தியமா , காசு கொடுத்து,    இன்னும் படம் பார்க்கவில்லை..   அதனால,.. நான் என்ன சொல்லவரேனா,  ‘பிடிக்காதவங்க.. இடது பக்கம் "Exit"-னு ஒரு கதவு ஆடிக்கிட்டு இருக்கு பாருங்க.. அதுவழியா , மெதுவா,  வெளிய போயிடுங்க....’ 

இப்ப பதிவு..................

நீங்கள் சொல்லும் அந்த பிரபலபதிவர்(?) மங்குனியின் பதிவில், என் கருத்தை பதிக்கும்போது, திடீரென் தோன்றிய சஞ்சலத்தால்,  முழுமையாக பதிவு செய்யமுடியவில்லை.    அங்கு நான் இட்ட மறுமொழி..


//

@மங்குனி..
மந்திரப்புன்னகையை பார்க்க வரும் அனைத்து பதிவர்களையும் வருக ..வருக என வரவேற்க்கிறோம்..

உண்மைத்தமிழன் அண்ணாச்சிகிட்ட டிக்கெட்டுக்கு சொல்லி வெச்சுடு.. எவ்வளவு குடும்பத்தையும் கூட்டிக்கிட்டு போலாமாம்...

மறக்காம. பேப்பர் பேனா எடுத்துகிட்டு போயிடு மாம்ஸ்..

சோறு போடுவாங்கலானு தெரியலே..
என்னாலதான் வரமுடியாது.. நம்ம முக்கிய ம(த)ந்திரியை கேட்டதாக் கூறவும்.. ஹி..ஹி

//


மக்கா.. மற்றவர்கள் எப்படியோ எனக்குத்தெரியாது. நான் எனக்கென, சில வரைமுறைகள் வைத்திருக்கிறேன்.  கடைவீதிகளில், நடக்கும் போது, புத்தக்கடையில், நக்கீரன் என்ற மஞ்சள் பத்திரிக்கையை தொங்குவதை பார்த்திருக்கிறீர்களா?    ஆம். அவர்களேதான். வீரப்பனை பார்த்து, பேட்டி எடுத்து, சர்குலேஷனை உயர்த்திய பத்திரிக்கை அது.

அதனுடைய ஆசிரியர் அப்போது அளித்த பேட்டி இன்னும் என் கண் முன்னால் இருக்கிறது.  “நெற்றிக்கண் திறப்பினும், குற்றம்  குற்றமே என்ற கருத்தின் அடிப்படையில், எங்கள் பத்திரிக்கைக்கு நக்கீரன் என் பெயர் சூட்டினோம்.  குற்றம் எங்கு நடந்தாலும், அதை  வெளிக்கொண்டு வருவதே எங்கள் குறிக்கோள்.” என கூறிய நல்லமனிதர்(?) அந்த மீசைக்காரார்

இன்றைய நிலையில்,நான்கு காலை தூக்கிக்கொண்டு, ஸ்பெக்டரம் ஊழலை அடக்கிவாசிப்பதில, அவர்களின் நல்லகுணம்(?) தெரியும்.
அவர்களுக்கு தேவை.. பிஸ்கெட் என்ற பணம். யார் கொடுத்தாலும் சரி.  அங்கு வரும் கவர்ஸ்டோரிகளை பார்த்தாலே, உங்களுக்கு புரியும்.

 • நடிகையின் முதுகில் தேமல்?. ரசிகர் தீக்குளிப்பு..
 • நித்தியானந்தனின் காமகளியாட்டம்.
 • ஆட்டத்தைப் குடும்பத்துடன் பார்க்க, எங்கள் இணையதளத்துக்கு வாருங்கள்.
 • மற்ற தளங்களை விட, குறைவான கட்டணம். நிறைவான சேவை(?)
 • பாக்யராஜ் மகன் படிப்பில் படு மக்கு!
 • தமிழர் தூக்கத்தைக் கெடுக்க வரும் ஆந்திர அழகி!
 • தடம் மாறும் மனைவிகள்...! -"சாமி' டைப்!
 • கவர்ச்சி ராணியின் கதை! -நிழலாகும் நிஜம்!

ஏன். இப்படி.. பணம்..பணம்..பணம் சாமி பணம்.. அது படுத்தும் பாடு.

அதுபோல, இந்த நிகழ்வுக்கு வருவோம். பதிவர்கள் யாரும் முழுநேரத்தொழிலாக, இதைச் செய்வதில்லை என்பது என் எண்ணம்.. (  சிலபல டோமர்களைத் தவிர்த்து....).

பதிவர்களைப்பொறுத்தவரை, ஹிட் ரேட், மறுமொழிகள், தமிழ்மணத்தில் முன்ணனி..   Etc..Etc..  என்னமோ விட்டுட்டேனே...     ஆங்.. ஓட்டுப்பிச்சை .( எழுதுங்கயா.  நல்லா இருந்தா , ஓட்டுப்போடுவாங்க. இல்ல  காறித்துப்புவாங்க..அவ்வளவுதானே!..)   மேலும், இதை வெச்சு , பெசண்ட் நகரில், மூணு கிரவுண்ட் வாங்க முடியுமா?.. இல்லை.. கனிமொழி, உங்க வீட்டுக்கே வந்து  ஆட்டோகிராப் போடப்போகுதா?

இதில வேற,  சில டோமர்கள்,
 • சாப்பிட்டு கை கழுவுவது எப்படி?.
 • முக்காமல் போவது எப்படி?.
 • பஞ்சாமிர்தத்தை, கை படாமல் நக்குவது எப்படி?-னு பதிவா போட்டு உயிரை வாங்குதுங்கள்.
நிசமாவே தெரியலே சாமிகளா...ஏய்யா  இப்படி இருக்கீங்க?.


இப்படி குடும்பத்தோட(?) படத்தை ஓசில பார்த்துட்டு, சோறுகீறு போட்டாங்கனா, அதையும் ஒரு கட்டு கட்டீட்டு, என்னா மயிறு விமர்சனம் எழுதப்போறாங்கனு நினைக்கிறீங்க?. செஞ்சோற்றுக்கடன்..... சாப்பிட்ட சாப்பாடு, உண்மையை எழுதவிடாதே பிரதர்.


இதற்கு யார்யாரெல்லாம், பாய்ந்து வந்து , குதறப்போறாங்கனு தெரியலே. பார்ப்போம்.

டிஸ்கி..
என்னாய்ய, முடிவு சொல்லாம, பதிவ முடிக்கிறேனு நினக்க்காதீங்க..

நீதி.
ஓசியில், குடும்பத்தோடு படம் பார்க்க வருபவர்களுக்கு.....

அய்யா பதிவர்களே.. எங்கே?..  எப்போ ஓசிப்படம்? என பதிவைப் போடும்  நல்ல உள்ளங்களே.    அப்படியே, அந்த பதிவில்.... சிறு கோரிக்கை வைத்து, வரும் பதிவர்களிடம், சிறுதொகையை பெற்று,  ஏதாவது ஏழைக்குழந்தைகளின் படிப்புக்கு உதவி செய்திருக்கலாமே..   சரி விடுங்க.. பதிவர் சங்கம் ஆரம்பித்து அப்பால பார்த்துக்களாம்.

இப்ப படம்.. அப்பால சந்திப்பு.. அப்பால, யாராவது நல்லவன் டீ வாங்கிக்கொடுக்காமலா போயிடுவான்.. ஹி..ஹி


மனம் இருந்தால்.....மார்க்க........
.
.
.

79 comments:

 1. மொத வடை எனக்குத்தானா?

  ReplyDelete
 2. இப்போ ப்ரெசென்ட் போட்டுக்கிறேன்.. அப்பாலிக்கா வாரேன்..

  ReplyDelete
 3. DrPKandaswamyPhD said... 1

  மொத வடை எனக்குத்தானா?

  //

  ஆகா.. நீங்களும் வடை வாங்க ஆரம்பிச்சுட்டீங்களா!!!

  ReplyDelete
 4. வெறும்பய said...

  இப்போ ப்ரெசென்ட் போட்டுக்கிறேன்.. அப்பாலிக்கா வாரேன்..
  //

  ஓ...

  ReplyDelete
 5. உண்மைதான் பட்டா! சாப்டறது, கைககளுவுறது இதையெல்லாம் அப்பன் ஆத்தா சொல்லிகொடுக்காததையா இவங்க சொல்லி தெரிஞ்சுக்க போறோம்!!! எனக்கு தெருஞ்சு வோட்டு, ஹிட்ஸ் இதுனாலஎல்லாம் பதிவர்களின் நோக்கமே சிதரிபோகுதுன்னு நினைக்கிறேன், அப்பறம் நீங்க சொன்ன மாதிரி வியாபாரத்துக்காக எதுவேணாலும் செய்யும் அந்த நக்கீரனுக்கும் இந்த பதிவர்களிக்கும் என்னவித்தியாசம், ரெண்டு பேரு படிச்சாலும் பதிவால ஒரு சின்ன மாற்றம் வந்தால் சந்தோசமே!!! எதோ எனக்கு தோணியத சொன்னேன் தவறாக தெரிந்தால் மற்ற பதிவர்கள் மன்னிக்கவும்( உங்களுக்கு தோணாது பட்டா

  ReplyDelete
 6. VAIGAI said... 5

  உண்மைதான் பட்டா! சாப்டறது, கைககளுவுறது இதையெல்லாம் அப்பன் ஆத்தா சொல்லிகொடுக்காததையா இவங்க சொல்லி தெரிஞ்சுக்க போறோம்!!! எனக்கு தெருஞ்சு வோட்டு, ஹிட்ஸ் இதுனாலஎல்லாம் பதிவர்களின் நோக்கமே சிதரிபோகுதுன்னு நினைக்கிறேன், அப்பறம் நீங்க சொன்ன மாதிரி வியாபாரத்துக்காக எதுவேணாலும் செய்யும் அந்த நக்கீரனுக்கும் இந்த பதிவர்களிக்கும் என்னவித்தியாசம், ரெண்டு பேரு படிச்சாலும் பதிவால ஒரு சின்ன மாற்றம் வந்தால் சந்தோசமே!!! எதோ எனக்கு தோணியத சொன்னேன் தவறாக தெரிந்தால் மற்ற பதிவர்கள் மன்னிக்கவும்( உங்களுக்கு தோணாது பட்டா
  //

  அவசரமா அள்ளித்தெளிப்பதற்க்குப் பதில், கொஞ்சம் யோசனை பண்ணி,
  அழகா பண்ணியிருக்கலாம்.. விடுங்க..

  ஆமா.. அடுத்து எங்க சோறு போடுவாங்க?.. கை துடிக்குது பாஸ்..

  ஹி..ஹி..

  ( ஓசினா... பல்லுகூட விளக்காம, பினாயில் குடிப்போம் சங்கம்..)

  ReplyDelete
 7. பதிவுலகினர் மீது பலரின் பார்வைகளும் திரும்பி இருப்பது உண்மை தான்

  ReplyDelete
 8. KANA VARO said... 7

  பதிவுலகினர் மீது பலரின் பார்வைகளும் திரும்பி இருப்பது உண்மை தான்

  //

  அதை உருப்படியாக, நேரான முதுகெலும்புடன், பயன்படுத்திக்கொள்வது ..ஹி..ஹி நம் கையில் பாஸ்...

  ReplyDelete
 9. உங்க ப்ளாக் பக்கம் வந்தா.. பதிவு போட்டு கொஞ்ச நேரத்திலையே கமெண்ட் நூறை தாண்டிடும். இன்னிக்கு காலைல பதிவு போட்ட படியா, சுதந்திரமா ஒரு கமெண்ட் அடிக்க முடிஞ்சுது.

  ReplyDelete
 10. //இப்ப படம்.. அப்பால சந்திப்பு.. அப்பால, யாராவது நல்லவன் டீ வாங்கிக்கொடுக்காமலா போயிடுவான்.. ஹி..ஹி//

  செம கலக்கல்...

  //அதை உருப்படியாக, நேரான முதுகெலும்புடன், பயன்படுத்திக்கொள்வது ..ஹி..ஹி நம் கையில் பாஸ்..//

  மிகச் சரியான கருத்து முற்றிலும் உண்மை சார்..

  தொடரட்டும் உங்கள் பொன்னான பணி

  வாழ்க வளமுடன்

  ReplyDelete
 11. உண்மைதான் பட்டா! சாப்டறது, கைககளுவுறது இதையெல்லாம் அப்பன் ஆத்தா சொல்லிகொடுக்காததையா இவங்க சொல்லி தெரிஞ்சுக்க போறோம்!!! எனக்கு தெருஞ்சு வோட்டு, ஹிட்ஸ் இதுனாலஎல்லாம் பதிவர்களின் நோக்கமே சிதரிபோகுதுன்னு நினைக்கிறேன், அப்பறம் நீங்க சொன்ன மாதிரி வியாபாரத்துக்காக எதுவேணாலும் செய்யும் அந்த நக்கீரனுக்கும் இந்த பதிவர்களிக்கும் என்னவித்தியாசம், ரெண்டு பேரு படிச்சாலும் பதிவால ஒரு சின்ன மாற்றம் வந்தால் சந்தோசமே!!! எதோ எனக்கு தோணியத சொன்னேன் தவறாக தெரிந்தால் மற்ற பதிவர்கள் மன்னிக்கவும்( உங்களுக்கு தோணாது பட்டா
  //

  அவசரமா அள்ளித்தெளிப்பதற்க்குப் பதில், கொஞ்சம் யோசனை பண்ணி,
  அழகா பண்ணியிருக்கலாம்.. விடுங்க..

  ஆமா.. அடுத்து எங்க சோறு போடுவாங்க?.. கை துடிக்குது பாஸ்..

  ஹி..ஹி..

  ( ஓசினா... பல்லுகூட விளக்காம, பினாயில் குடிப்போம் சங்கம்..)

  அள்ளிதெளிக்களை பாஸ்!!! இப்ப கூட என்னோட கருத்தில மாற்றமில்லை!!!

  ReplyDelete
 12. KANA VARO said... 9

  உங்க ப்ளாக் பக்கம் வந்தா.. பதிவு போட்டு கொஞ்ச நேரத்திலையே கமெண்ட் நூறை தாண்டிடும். இன்னிக்கு காலைல பதிவு போட்ட படியா, சுதந்திரமா ஒரு கமெண்ட் அடிக்க முடிஞ்சுது.

  //

  ஹா..ஹா.. இப்ப வரவர, இங்கு.. கும்மியை குறைத்துக்கொண்டோம் பாஸ்..

  ReplyDelete
 13. VAIGAI said...

  உண்மைதான் பட்டா! சாப்டறது, கைககளுவுறது இதையெல்லாம் அப்பன் ஆத்தா சொல்லிகொடுக்காததையா இவங்க சொல்லி தெரிஞ்சுக்க போறோம்!!
  //

  அட..லூஸ்ல விடுங்க.. உங்கள் மனதில் இருப்பதை தாராளமாக இங்கு சொல்லலாம்.. எதுவும் தவறாக எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.. ஹா..ஹா

  ReplyDelete
 14. மாணவன் said...

  //இப்ப படம்.. அப்பால சந்திப்பு.. அப்பால, யாராவது நல்லவன் டீ வாங்கிக்கொடுக்காமலா போயிடுவான்.. ஹி..ஹி//

  செம கலக்கல்...

  //அதை உருப்படியாக, நேரான முதுகெலும்புடன், பயன்படுத்திக்கொள்வது ..ஹி..ஹி நம் கையில் பாஸ்..//

  மிகச் சரியான கருத்து முற்றிலும் உண்மை சார்..
  //

  வாருங்கள் மாணவன் சார்..

  ReplyDelete
 15. Blogger SENTHIL said...

  good
  //

  ஏண்ணே.. கோவிச்சுட்டீங்களா?..
  நாலே எழுத்து-ல ஷ்ட்டரை போட்டுட்டு போறீங்க?..

  ReplyDelete
 16. பட்டாபட்டி.. said... 13

  ஹா..ஹா.. இப்ப வரவர, இங்கு.. கும்மியை குறைத்துக்கொண்டோம் பாஸ்..

  //

  காலையிலையே இந்த மாதிரி டுபாக்கூரு வசனமெல்லாம் கேக்கனுமுன்னு ராசிபலன்ல சொன்னாங்க..

  ReplyDelete
 17. எத்தன கர்ண பிரபுக்களோ இந்த உலகத்தில் இன்று ...................

  ReplyDelete
 18. எல்லாரும் வந்து இந்த நியாத்த கேளுங்கப்பா.. பட்டாபட்டி திருந்திட்டாராம்...


  இனிமேல் நாட்டு நடப்பு பற்றி எழுதமாட்டாராம்...
  டோமரை கெட்ட வார்த்தையில திட்ட மாட்டாராம்...
  புனைவு எழுத மாட்டாராம்...
  முக்கியமா லிவிங் together பற்றி ஒரு வார்த்தை கூட பேச மாட்டாராம்...

  பதிவுலக மக்கள் இனி மேல் நிம்மதியா அவங்கவங்க வேலைய பாத்திட்டு .. அப்படியே கதை கவிதை தொடர் பதிவு அப்படீன்னு ஏதாவது எழுதலாம்..

  கும்மி மறந்த பிரபல (பிராப்ள) பதிவர் பட்டாவுக்கு எனது இரங்கல்கள்..

  ReplyDelete
 19. @வெறும்பய said... 19
  கும்மி மறந்த பிரபல (பிராப்ள) பதிவர் பட்டாவுக்கு எனது இரங்கல்கள்..
  //

  பார்த்து. ரொம்ப இரங்கிடாதீங்கா...
  கீழ வழுக்கும்... ஹி..ஹி

  ReplyDelete
 20. Blogger விக்கி உலகம் said...

  எத்தன கர்ண பிரபுக்களோ இந்த உலகத்தில் இன்று ...................
  //

  ஹி..ஹி ..அதையும் பார்ப்போம்..

  ReplyDelete
 21. வெறும்பய said... 2

  இப்போ ப்ரெசென்ட் போட்டுக்கிறேன்.. அப்பாலிக்கா வாரேன்..

  //

  சாவு வீட்டுக்குக்குப்போனா.. சொல்லீட்டு போகக்கூடாதுனு எங்க பாட்டி சொல்லும்..

  ReplyDelete
 22. பட்டாபட்டி.. said...

  சாவு வீட்டுக்குக்குப்போனா.. சொல்லீட்டு போகக்கூடாதுனு எங்க பாட்டி சொல்லும்..

  ///

  மொத தடவை வரும் பொது கொஞ்சமா உயிர் இருந்திச்சே... இப்ப தானே அந்த அசம்பாவிதம் நடந்திருக்கு... எனி வே திருந்தி நல்லாயிரு..

  ReplyDelete
 23. என்ன பட்டா!... ஃபுல் ஃபார்ம்ல இருக்கீரு போலிருக்கு!...

  ReplyDelete
 24. விடுங்க பட்டா!... டைரக்டரு ப்ரிவியூ ஷோ காட்றாரு, எல்லாரும் பாக்குறாங்க!... இதெல்லாம் அரசியல்ல சகஜம்பா!...

  பிரபாகர்...

  ReplyDelete
 25. @பட்டா

  //செஞ்சோற்றுக்கடன்..... சாப்பிட்ட சாப்பாடு, உண்மையை எழுதவிடாதே பிரதர்.//

  மச்சி நாங்க எல்லாம் கொட்டி கொடுக்கர கையை இருந்தாலும் தப்பு பண்ணா எட்டி கடிக்கிற ஜாதி மச்சி... எங்களுக்கு நீதி, நேர்மை ரொம்ப முக்கியம். ஹி...ஹி... அப்படியே எனக்கு ஒரு ப்ரீ டிக்கட் சொல்லிடு பட்டா....

  ReplyDelete
 26. @பட்டா

  //இதற்கு யார்யாரெல்லாம், பாய்ந்து வந்து , குதறப்போறாங்கனு தெரியலே. பார்ப்போம்.//

  அய்யோ அப்போ சண்டை வருமா இங்க?? எனக்கு இப்பவே பயமா இருக்கே. எதுக்கும் உனக்கு எதிர இரண்டு கமெண்ட் போட்டு வைக்கிறேன்...

  சிங்கபூரில் இலவச டிக்கட் கிடைக்காத வயித்து எரிச்சலில் பிரபல பதிவர்கள் மனதை புண்படுத்திய பட்டா ப்ளாக் தடை செய்யபட வேண்டும் என்று முதல்வருக்கு கடிதம் எழுதுகிறேன்...

  ReplyDelete
 27. Preview ஒரு விளம்பர யுக்திதான் பட்டா... அதில் ஒன்றும் தவறில்லை.

  நாம் அதைக்கண்டு களிப்பதிலும் தவறில்லை.

  நீங்கள் எந்த அளவுக்கு அதில் ஈடுபாடு காட்டுகிறீர்கள். அதனால் நமக்கோ, சமுதாயத்திற்கோ என்ன பலன்? என்பது முக்கியம்.

  பதிவர்களின் பலத்தாலாவது சிறந்த திரைப்படங்கள் எதிர்காலத்தில் வருதா பார்ப்போம்.

  ReplyDelete
 28. அந்த நன்கொடை வசூலித்து பிறருக்கு உதவும் ஐடியா பிடிச்சிருக்கு. சாத்தியமா?

  ReplyDelete
 29. ரோஸ்விக் said...

  அந்த நன்கொடை வசூலித்து பிறருக்கு உதவும் ஐடியா பிடிச்சிருக்கு. சாத்தியமா?
  //

  அது முடியாது என நினக்கிறேன்.
  ஏன்னா.. சாத்தியப்பட இது என்ன, ஸ்பெக்ட்ரமா?...ஹி..ஹி

  ReplyDelete
 30. Blogger TERROR-PANDIYAN(VAS) said...

  @பட்டா

  //இதற்கு யார்யாரெல்லாம், பாய்ந்து வந்து , குதறப்போறாங்கனு தெரியலே. பார்ப்போம்.//

  அய்யோ அப்போ சண்டை வருமா இங்க?? எனக்கு இப்பவே பயமா இருக்கே. எதுக்கும் உனக்கு எதிர இரண்டு கமெண்ட் போட்டு வைக்கிறேன்...

  சிங்கபூரில் இலவச டிக்கட் கிடைக்காத வயித்து எரிச்சலில் பிரபல பதிவர்கள் மனதை புண்படுத்திய பட்டா ப்ளாக் தடை செய்யபட வேண்டும் என்று முதல்வருக்கு கடிதம் எழுதுகிறேன்..
  //

  யோவ்.. பண்பாட்டை மறக்க்கூடாது..

  வேணுமுனா...தந்தி அடி..

  ReplyDelete
 31. Blogger பிரபாகர் said...

  விடுங்க பட்டா!... டைரக்டரு ப்ரிவியூ ஷோ காட்றாரு, எல்லாரும் பாக்குறாங்க!... இதெல்லாம் அரசியல்ல சகஜம்பா!...
  //

  பிரபாகர் அண்ணனா இது?.. இருக்கீகளா?

  ReplyDelete
 32. மொத தடவை வரும் பொது கொஞ்சமா உயிர் இருந்திச்சே... இப்ப தானே அந்த அசம்பாவிதம் நடந்திருக்கு... எனி வே திருந்தி நல்லாயிரு..
  //
  கண் கலக்கியது.. இதயம் இயக்கத்தை நிறுத்தியது...

  ஹி..ஹி

  கொஞ்சம் திருந்தலாமுனு ஐடியா.. என்னா சொல்றீங்க?...

  ReplyDelete
 33. சிங்கபூரில் இலவச டிக்கட் கிடைக்காத வயித்து எரிச்சலில் பிரபல பதிவர்கள் மனதை புண்படுத்திய
  //

  ஆங்.. ஆமாய்யா வயிறு எரியுது.. ஹிட் ரேட் கிடைக்காம.. இன்னும் கக்கூஸ்கூட போகலே..

  ஹி..ஹி

  என்னா-லா நீ?

  ReplyDelete
 34. எனக்கு ஒரு சந்தேகம்...நான் மேலே சொன்ன மாதிரி எழுதுவதில்லை...இருந்தாலும் நான் ப்ளாக் ஆரம்பிச்ச பிறகு கிட்ட தட்ட 4 மாதம் நீங்கள் ஒருவரே என்னை பின் தொடர்ந்ததுக்கு காரணம் என்ன??))))

  பதிவில் சொல்லி இருப்பதை பார்த்து திருந்தினால் நலம்..

  ReplyDelete
 35. @சார்

  நான் இதற்க்கு முன் ஏதோ பதிவ படிச்சிட்டு பின்னூட்டம் போட்டுட்டு போய்டுவேன். ஆனால் உங்களுடைய இந்த பதிவ படிச்சிட்டு உங்கள ஏதாவது ஒருவார்த்தையில் மரியாதையா கூப்பிடனும்னு தோணுச்சி

  சார்.

  ReplyDelete
 36. சார் நான் ஒரு பிட்டுப்படம் எடுக்கலாம் என்று இருக்கிறேன். நாளை ஷூட்டிங் ஆரம்பிக்கிறோம், பதிவர்கள் அனைவரும் குடும்பத்தோடு வந்து சிறப்பித்துத் தரும்படி கேட்டுக்கொள்கிறேன். (நாளை வருபவர்களுக்கு பிரிவியூ ஷோவுக்கான அழைப்பிதழ் தரப்படும்!)

  ReplyDelete
 37. Blogger ganesh said...

  எனக்கு ஒரு சந்தேகம்...நான் மேலே சொன்ன மாதிரி எழுதுவதில்லை...இருந்தாலும் நான் ப்ளாக் ஆரம்பிச்ச பிறகு கிட்ட தட்ட 4 மாதம் நீங்கள் ஒருவரே என்னை பின் தொடர்ந்ததுக்கு காரணம் என்ன??))))

  பதிவில் சொல்லி இருப்பதை பார்த்து திருந்தினால் நலம்..
  //

  ஹா.. ஹா.. நல்ல கேள்வி...
  பதிவை படித்து, திரும்பவும் தேடி வரனும் பாஸ்..

  அப்படி வரலேனா... இழுத்து மூடிட்டு ..பிழைப்பை பார்க்க போயிடுவேன்.. அதில் மிகவும் தெளிவாக இருக்கிறேன்..  அப்பால் .. உங்க பதிவை பற்றி...
  நல்லா எழுதிக்கொண்டிருக்கீங்க...

  நல்ல பதிவில , நான் கமென்ஸ் போட்டு நாறடிக்கவேண்டாம் என படித்தவுடன், வந்துவிடுவேன்..

  தொடர்ந்து எழுதுங்கள்.. வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 38. @ பன்னிக்குட்டி ராம்சாமி said...

  சார் நான் ஒரு பிட்டுப்படம் எடுக்கலாம் என்று இருக்கிறேன். நாளை ஷூட்டிங் ஆரம்பிக்கிறோம், பதிவர்கள் அனைவரும் குடும்பத்தோடு வந்து சிறப்பித்துத் தரும்படி கேட்டுக்கொள்கிறேன். (நாளை வருபவர்களுக்கு பிரிவியூ ஷோவுக்கான அழைப்பிதழ் தரப்படும்!)
  //

  சோறு போடுவியா?. பலூன் கொடுப்பியா?.. இதெல்லாம் சொல்லாம எப்படி வர்ரது?

  ReplyDelete
 39. இன்ப அதிர்ச்சி இப்பதிவு..

  தொடருங்கள்.

  ReplyDelete
 40. ////பட்டாபட்டி.. said...
  @ பன்னிக்குட்டி ராம்சாமி said...

  சார் நான் ஒரு பிட்டுப்படம் எடுக்கலாம் என்று இருக்கிறேன். நாளை ஷூட்டிங் ஆரம்பிக்கிறோம், பதிவர்கள் அனைவரும் குடும்பத்தோடு வந்து சிறப்பித்துத் தரும்படி கேட்டுக்கொள்கிறேன். (நாளை வருபவர்களுக்கு பிரிவியூ ஷோவுக்கான அழைப்பிதழ் தரப்படும்!)
  //

  சோறு போடுவியா?. பலூன் கொடுப்பியா?.. இதெல்லாம் சொல்லாம எப்படி வர்ரது?////


  ஷூட்டிங் பார்க்கும் பதிவர்களுக்கு பலூன் வழங்கப்படும், சோறு கண்டிப்பாக கிடையாது!

  ReplyDelete
 41. @THOPPITHOPPI said...
  நான் இதற்க்கு முன் ஏதோ பதிவ படிச்சிட்டு பின்னூட்டம் போட்டுட்டு போய்டுவேன். ஆனால் உங்களுடைய இந்த பதிவ படிச்சிட்டு உங்கள ஏதாவது ஒருவார்த்தையில் மரியாதையா கூப்பிடனும்னு தோணுச்சி
  //

  விடுங்க..விடுங்க...
  ஒரு நிகழ்வை உணர்ச்சிப்பூர்வமாக பார்க்க.. நாம் பழகிவிட்டோம்..

  பார்ப்போம் அடுத்த சங்கம் ஆரம்பிப்பதை பற்றி.. எனென்ன அறிக்கைகள் வரப்போகுது என..

  அவரவர் சுயநலங்களை..எப்படி பொது நலம் என்ற போர்வையில்.. வெளி உலகிற்க்கு , காட்ட போகிறார்கள் என்பதை பார்க்த்தானே போகிறோம்..

  ReplyDelete
 42. நல்ல பதிவில , நான் கமென்ஸ் போட்டு நாறடிக்கவேண்டாம் என படித்தவுடன், வந்துவிடுவேன்..

  தொடர்ந்து எழுதுங்கள்.. வாழ்த்துக்கள்../////


  அப்படி இல்லை...


  வாழ்த்துக்கு நன்றி.

  ReplyDelete
 43. @இம்சைஅரசன் பாபு.. said...
  ப்ரெசென்ட் சார் ......
  //


  இன்னும் கொஞ்சம் ட்ரை பண்ணுங்க பாபு.. கண்டிப்பா வரும்..


  முயற்சி உடையார்..இகழ்ச்சி அடையார்...

  ஹி..ஹி... சரி விடுங்க.. அடுத்த பதிவில பார்ப்போம்...

  ReplyDelete
 44. பன்னிக்குட்டி ராம்சாமி said... 38

  சார் நான் ஒரு பிட்டுப்படம் எடுக்கலாம் என்று இருக்கிறேன். நாளை ஷூட்டிங் ஆரம்பிக்கிறோம், பதிவர்கள் அனைவரும் குடும்பத்தோடு வந்து சிறப்பித்துத் தரும்படி கேட்டுக்கொள்கிறேன். (நாளை வருபவர்களுக்கு பிரிவியூ ஷோவுக்கான அழைப்பிதழ் தரப்படும்!) / / /
  அந்த பிட்டு படத்துல பன்னி சார் நீங்க நடிக்கலையே ? ஹி ஹி ஹி
  நடிக்கிறதா இருந்த சொல்லுங்க நான் எஸ்கேப் . . . அந்த ஏரியா பக்கம் நான் தப்பி தவறி கூட வர மாட்டேன் . . .

  ReplyDelete
 45. பட்ட கருத்தோட நான் ஒத்து போகிறேன் , கரெக்டா சொன்ன பட்டா . .
  ( பட்டா அப்படியே சோறு போடுவாங்கள பிரியாணி போடுவங்கலன்னு கேட்டு சொல்லு . . . ஹி ஹி ஹி )

  ReplyDelete
 46. தாங்கள் சொல்வது போல் பிளாக்கில் எழுதுவதையும், முன்னணி, பின்னணிகளை வைத்துக் கொண்டு எதையும் சாதிக்க போவதில்லை. பிளாக்கில் எழுதுவது ஜஸ்ட் ஒரு டைம்பாஸ்தானே! நமக்கு பிடிச்சதை சொல்ல, எழுத இதை பயன்படுத்துறோம்! நம் மனதில் உள்ளவற்றை இங்கே கொட்டறோம் அவ்வளவுதான்! (சில பேர் அவங்க மனசில இருக்க அழுக்கையும் சேர்த்து கொட்டிடறாங்க, அதான் பிரச்சினையே)

  ReplyDelete
 47. இலவசம்னா அதை மனசு அவ்வளவு சீக்கிறத்தில விட்டுக் கொடுக்காதே! :-)
  அதான் பிரச்சினை சார்!

  ReplyDelete
 48. @Blogger ♔ℜΩℭ₭ℤ ℜÅℑℇ$ℌ♔™ said...

  பட்ட கருத்தோட நான் ஒத்து போகிறேன் , கரெக்டா சொன்ன பட்டா . .
  ( பட்டா அப்படியே சோறு போடுவாங்கள பிரியாணி போடுவங்கலன்னு கேட்டு சொல்லு . . . ஹி ஹி ஹி )
  //

  பன்னிய அடிப்பாங்கனு நினைக்கிறேன்..நானும்... ஹி..ஹி

  ஆமா..பேர்ல ஏதாவது கெட்ட வார்த்தைய ஒளிச்சு வெச்சிருக்கீறா?...

  பதிவரிசியல் போல, விளங்காம இருக்கு?

  ReplyDelete
 49. Blogger எஸ்.கே said...

  இலவசம்னா அதை மனசு அவ்வளவு சீக்கிறத்தில விட்டுக் கொடுக்காதே! :-)
  அதான் பிரச்சினை சார்!
  //

  விடுங்க சார்.. மக்கள் மனசு, நஞ்சாகி பல வருஷமாயிடுச்சு..

  திராவிட மற்றும், பாரம்பரிய காந்தி காங்கிரஸ்க்கும் , அந்த நன்றி உரித்தாகுக...

  ReplyDelete
 50. ///@பட்டாபட்டி.. said...
  பன்னிய அடிப்பாங்கனு நினைக்கிறேன்..நானும்... ஹி..ஹி///

  பன்னி சார் ப்ளாக் ல தான் கும்மி "அடிக்குரங்க" நா , அங்கையுமா ? ஏன் இப்படி ? ஹி ஹி ஹி . . .

  ReplyDelete
 51. ////பட்டாபட்டி.. said...
  ஆமா..பேர்ல ஏதாவது கெட்ட வார்த்தைய ஒளிச்சு வெச்சிருக்கீறா?...

  பதிவரிசியல் போல, விளங்காம இருக்கு?////

  அது டிசைன் பட்டா , , , , டிசைன் டிசைன்னா போட்டு இருக்கேன் . .

  விளங்கலையா ? அப்படி எங்க விளங்கிடுமொன்னு பயந்துகிட்டு இருதேன் . அப்போ நானும் பிரபல பதிவர் ஆகுறதுக்கு வாய்ப்பு இருக்கு போல ? அவ்வ்வவ்வ்வ்

  ReplyDelete
 52. பட்டா என்ன நீ நம்ப ஏரியா ( ப்ளாக் ) பக்கம் வரதே இல்ல? , 1st டைம் வந்ததோட சரி ... . .

  ReplyDelete
 53. பயணமும் எண்ணங்களும் said... 41

  இன்ப அதிர்ச்சி இப்பதிவு..

  //

  ஹா..ஹா.. என்னடா திருந்தி எழுதியிருக்கானேனா?..

  நல்லா பண்ணியிருக்கலாமுனு தோணிச்சுங்க..

  ReplyDelete
 54. ♔ℜΩℭ₭ℤ ℜÅℑℇ$ℌ♔™ said... 56

  பட்டா என்ன நீ நம்ப ஏரியா ( ப்ளாக் ) பக்கம் வரதே இல்ல? , 1st டைம் வந்ததோட சரி ... . .

  //

  ஆகா.. யாரு சொன்னா?. வந்துட்டுத்தான் இருக்கேன்.. கமென்ஸ் போட பயமாயிருக்கு..
  ( நல்லா எழுதறே.. நான் வந்தா ஏதாவது நக்கலா சொல்லுவேன்.. அடுத்தவங்களுக்கு கஷ்டமாயிருக்கும்..அதான்..)

  மேலும்..Std template கமென்ஸ் போட..ஹி..ஹி எனக்கு வராது..

  ReplyDelete
 55. சிங்கபூரில் இலவச டிக்கட் கிடைக்காத வயித்து எரிச்சலில் பிரபல பதிவர்கள் மனதை புண்படுத்திய பட்டா ப்ளாக் தடை செய்யபட வேண்டும் என்று முதல்வருக்கு கடிதம் எழுதுகிறேன்...//

  அடப்பாவி டெரர் என்கிட்டே இருந்து பதிவு,அவார்ட் தான் திருடுவேன்னு பாத்தா இப்ப நான் யோசிச்ச கமேண்டேயே திருடிட்டியே.

  சிங்கப்பூர்ல எவனாவது இளிச்சவாயன்(வெறும்பயலா கூட இருக்கலாம்) கூட்டிட்டு போறானான்னு பாரு!!!

  ReplyDelete
 56. Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

  சிங்கபூரில் இலவச டிக்கட் கிடைக்காத வயித்து எரிச்சலில் பிரபல பதிவர்கள் மனதை புண்படுத்திய பட்டா ப்ளாக் தடை செய்யபட வேண்டும் என்று முதல்வருக்கு கடிதம் எழுதுகிறேன்...//

  அடப்பாவி டெரர் என்கிட்டே இருந்து பதிவு,அவார்ட் தான் திருடுவேன்னு பாத்தா இப்ப நான் யோசிச்ச கமேண்டேயே திருடிட்டியே.

  சிங்கப்பூர்ல எவனாவது இளிச்சவாயன்(வெறும்பயலா கூட இருக்கலாம்) கூட்டிட்டு போறானான்னு பாரு!!!
  //

  என்னாய்யா லீவுனு சொன்னே.. கேன்ஷல் பண்ணி விட்டுட்டானுகளா...!!!!

  ReplyDelete
 57. பதிவின் தலைப்பை பார்த்ததும் நீங்களுமா என்ற கேள்வியுடன் வந்தேன் பதிவை முழுவதும் வாசித்தப் பிறகுதான் புரிந்தது நீங்கள் மட்டும்தான் இப்படி எழுத முடியும் என்று கலக்கல் நண்பரே . எவளவு நாட்களுக்குத்தான் வாடகை விளம்பரத்தில் வாழ்வது . புதுமையாகா சிந்திப்போம் .பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 58. ஆமா தல பேசாம நக்கிரனிடம் சொல்லி இந்த இந்த நெற்றிக்கண் திறப்பினும் என்ற டயலாக்கை இப்ப மாத்தி எழுத சொன்ன என்ன !?

  ReplyDelete
 59. //பட்டாபட்டி.. said... 60

  Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

  சிங்கபூரில் இலவச டிக்கட் கிடைக்காத வயித்து எரிச்சலில் பிரபல பதிவர்கள் மனதை புண்படுத்திய பட்டா ப்ளாக் தடை செய்யபட வேண்டும் என்று முதல்வருக்கு கடிதம் எழுதுகிறேன்...//

  அடப்பாவி டெரர் என்கிட்டே இருந்து பதிவு,அவார்ட் தான் திருடுவேன்னு பாத்தா இப்ப நான் யோசிச்ச கமேண்டேயே திருடிட்டியே.

  சிங்கப்பூர்ல எவனாவது இளிச்சவாயன்(வெறும்பயலா கூட இருக்கலாம்) கூட்டிட்டு போறானான்னு பாரு!!!
  //

  என்னாய்யா லீவுனு சொன்னே.. கேன்ஷல் பண்ணி விட்டுட்டானுகளா...!!!!
  ///

  hehe. Just boss went out athaan...

  ReplyDelete
 60. //அதனுடைய ஆசிரியர் அப்போது அளித்த பேட்டி இன்னும் என் கண் முன்னால் இருக்கிறது. “நெற்றிக்கண் திறப்பினும், குற்றம் குற்றமே என்ற கருத்தின் அடிப்படையில், எங்கள் பத்திரிக்கைக்கு நக்கீரன் என் பெயர் சூட்டினோம். குற்றம் எங்கு நடந்தாலும், அதை வெளிக்கொண்டு வருவதே எங்கள் குறிக்கோள்.” என கூறிய நல்லமனிதர்(?) அந்த மீசைக்காரார் //

  பட்டு!நக்கீரன் மஞ்சள் பத்திரிகை என்று தனி(மனித)பத்திரிகை தாக்குதல் நடத்தாமல் பத்திரிகை தர்மத்துக்கு முரணாக அல்லக்கை பாட்டு பாடுவதை பதிவுலகம் நக்கீரனின் முகத்திரையை தமிழகத்துக்கு காண்பிப்பது அவசியம்.இந்த அழகில் நக்கீரன் கோபால் வலுமையான(Powerful)10 நபர்களில் ஒருவர் என்று யாரோ ஒரு மாங்கா பத்திரிகையின் லாபி வேறு.

  ReplyDelete
 61. I like it பட்டா!அடுத்தடுத்து பின்னூட்ட அரசியல், ப்ளாக்கர்களோட குழு மனோபாவம் எல்லாத்தையும் வெலாவரியா கிழிச்சி தொங்க விடுங்க. பயபுள்ள ஒவ்வொருத்தனும் சாகணும்

  ReplyDelete
 62. பட்டா! அழகான மாற்றம். இப்படியே தொடருங்களேன். அப்பப்ப ஒரு கும்மி போதும்ல:))

  ReplyDelete
 63. @பனித்துளி சங்கர்
  ஆமா தல பேசாம நக்கிரனிடம் சொல்லி இந்த இந்த நெற்றிக்கண் திறப்பினும் என்ற டயலாக்கை இப்ப மாத்தி எழுத சொன்ன என்ன !?
  //

  நல்ல ஒரு கேப்ஷன் சொல்லுங்க பாஸ்.. ஒரு விழா எடுத்து, கோபாலுக்கு கொடுக்கனும்
  அப்பவாவது திருந்துவாங்கலானு பார்க்கலாம்..

  ReplyDelete
 64. @ராஜ நடராஜன் said... 64
  பட்டு!நக்கீரன் மஞ்சள் பத்திரிகை என்று தனி(மனித)பத்திரிகை தாக்குதல் நடத்தாமல் பத்திரிகை தர்மத்துக்கு முரணாக அல்லக்கை பாட்டு பாடுவதை பதிவுலகம் நக்கீரனின் முகத்திரையை தமிழகத்துக்கு காண்பிப்பது அவசியம்.இந்த அழகில் நக்கீரன் கோபால் வலுமையான(Powerful)10 நபர்களில் ஒருவர் என்று யாரோ ஒரு மாங்கா பத்திரிகையின் லாபி வேறு.
  //

  எல்லாம் புகழ் படுத்தும் பாடு சார்...
  மீடியா எவ்வளவு நல்ல விசயம். அதையும் அடமானம் வெச்சுட்டு.. சே..
  தலையடிக்க வெச்சுட்டாங்க சார்

  ReplyDelete
 65. @விந்தைமனிதன் said... 65

  I like it பட்டா!அடுத்தடுத்து பின்னூட்ட அரசியல், ப்ளாக்கர்களோட குழு மனோபாவம் எல்லாத்தையும் வெலாவரியா கிழிச்சி தொங்க விடுங்க. பயபுள்ள ஒவ்வொருத்தனும் சாகணும்
  //

  ரைட்.. முரசு கொட்டட்டும்...

  ReplyDelete
 66. @வானம்பாடிகள் said... 66
  பட்டா! அழகான மாற்றம். இப்படியே தொடருங்களேன். அப்பப்ப ஒரு கும்மி போதும்ல:))
  //

  நல்லாப் பண்ணியிருக்கலாமே என்ற நப்பாசை பாஸ்..
  யாரையுன் குறை சொல்லவில்லை.

  பத்திரிக்கைதான் ..பல்லிளிக்க ஆரம்பித்துவிட்டது.. பதிவுலகமாவது..முதுகு வளையாமல் இருக்கட்டுமே.

  ஏதாவது சிறு தொகையை கொடுத்து, யாருக்காவது உதவியிருந்தால்.. முதுகெலும்புடன் படம் பார்த்ததுபோலவும் ஆகிற்று.
  மற்றவருக்கு உதவியது போலவும் ஆகியிருக்கும் ( Win-Win situation )..

  சரி விடுங்க..
  சின்ன வட்டத்துக்குள், சிந்தித்துப்பழக ஆரம்பித்துவிட்டோமோ என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடு இந்த பதிவு..

  ReplyDelete
 67. யோவ் பட்டாபட்டி ,மொதல்ல கை குடுய்யா,செம நக்கல் பதிவு.

  >>பத்திரிக்கைதான் ..பல்லிளிக்க ஆரம்பித்துவிட்டது.. பதிவுலகமாவது..முதுகு வளையாமல் இருக்கட்டுமே.>>>

  சூப்பர் லைன்ஸ்.

  ReplyDelete
 68. boss...

  bihar election la congress out... namakku oru adima sikkittaan.. ezhudhunga boss ezhudhunga

  ReplyDelete
 69. எல்லாத்தோட பட்டாபட்டியையும் கிழிச்சிடுவீங்க போல இருக்கே? பட் உங்க ஐடியா நல்லா இருக்கு

  ReplyDelete
 70. நெத்தியடி . ஆமாண்ணே நீங்க சொல்றது கரக்ட்டு தானே . மொக்க பதிவு போடாம திருந்த முயற்சி பண்றேனே

  ReplyDelete
 71. //

  * சாப்பிட்டு கை கழுவுவது எப்படி?.

  * முக்காமல் போவது எப்படி?.

  * பஞ்சாமிர்தத்தை, கை படாமல் நக்குவது எப்படி?-னு பதிவா போட்டு உயிரை வாங்குதுங்கள்.///

  நான் இன்னும் இந்த மாதிரி எதுவும் எழுதலையே ..? எப்படியோ மூணு தலைப்பு கிடைச்சுது ..! ஹி ஹி ஹி ..

  ReplyDelete
 72. இலவசமா கொடுத்தா எல்லாம் இப்படித்தான், நக்கீரன் உதாரணம் சூப்பர்.

  ReplyDelete
 73. நெத்தியடி தலைவா..

  இதனால்தான் என்னோட ப்ளாக் வலது கோடியில எப்போதும் உங்களுக்குத் தனி இடம்.. இது தான் பட்டா பாட்டியிடம் என்னை ஈர்க்க வைத்த நெத்தியடி எழுத்து..

  அந்த இயக்குனர் எந்த நோக்கத்தில் இவர்களை அழைத்தாரோ, இதுவே லஞ்சத்தின் முதல் படி.. இது தவறு.. நடுநிலையாளர்கள் சற்று தள்ளி இருந்து கொண்டு எழுதுவதே அவர்களின் பெயருக்கு இழுக்கு ஏற்படாமல் இருக்க உதவும்.. இந்த ப்ளாக் ஒண்ணுல தான் கொஞ்சம் படிக்கிற மாறி வெளிப்படையான விஷயங்கள் இருந்தது.. இனிமே எப்படியோ..

  ReplyDelete
 74. "நாட்டாம... கைய நனச்சுட்டு போங்க.."

  "டேய்.. என்றா.. பஞ்சாயத்து வெச்சிருக்கிற வீட்டுல பல்லு கூட வெளக்க மாட்டேன்.. நீ சாப்புட கூப்புடுற.."

  இதைத்தான் இன்றைய பிளாக் மனிதர்கள செய்ய வேண்டும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து..

  இல்லாட்டினா, சும்மா போய் பாருங்க.. ஒண்ணும் எழுதாதீங்க.. அடுத்த தடவ கூப்புடறாங்களான்னு பாருங்க.. தெரியும் இவர்களின் உண்மை சொரூபம்..

  ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!