Pages

Tuesday, November 23, 2010

டெங்ங்ங்ங்ங்ங்கு......

.
.
.
ஏதோ பாழாப்போன காலேஸ்-ல இருந்து, எனக்கு, டாக்டர் பட்டம் கொடுத்தானுகனு மனம் பதைபதைக்குதா?.  ஹி..ஹி.    அப்படியெல்லாம் இல்லை பாஸ்.  (டாக்டர் பட்டம் வாங்க, நான் என்ன நாடறிந்த  நாதாரியா..அரசியல்வாதியா? இல்லை அரிதாரம்  பூசிய, அவதார நடிகனா?)

இந்த டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையிலும், அதைப்பற்றிய அறியாமையிலும், இந்தியா முதல் 10 வரிசையில் இடம் பெற்றுள்ளது..  (சிரிச்சுக்கிட்டே, தலைய இன்னும் கொஞ்சம் தூக்கிப் பாருங்க பாஸ்.. போட்டோவில் நல்லா வரும்.  நாம யாரு?. நம்ம பவர்  என்ன?.. ங்கொய்யாலே.)

அதை எப்படி ஒழிக்கனுமுனு, நிறைய நாடுகள் ஆராய்ச்சி செய்து வருகின்றன.. அட நாமளும்தான். அதற்கு பெரியமனது பண்ணி,  சிறிது பணம் ஒதுக்கிய இத்தாலி கவர்ன்மெண்ட்.. ஓ.. சாரிங்க.. இந்திய அரசாங்கத்தை நினைத்து மனசு விம்முகிறது.   (ராசாகளும், கல்மாடிகளும், நக்கியதை சரி செய்யவே , இன்னும் 5 வருஷம் ஆகும். அதுவுமில்லாமல், கதர் சட்டை+வாரிசுகள்.. அடுத்த 7 தலைமுறைக்கும்  சேர்த்துவிட்டு,   மிச்சம் மீதியிருந்தால்,  பெரிய அளவில் ஒதுக்குவார்களோ என்னமோ?. உம்.. பார்ப்போம்)So. அவசரத்துக்கு வேறவழி?.. Yes.. நம் அண்ணன், நாட்டாமை அமெரிக்கா..
அவர்கள் என்ன கண்டுபிடிக்கிறார்களோ, அதை  வாங்கிக்கொள்ள வேண்டியதுதான். சமீபத்தில் வட அமெரிக்கா, புது வகையான, ஆண் கொசுக்களை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. அதனுடைய DNA-வில் சில மாறுதல்கள் செய்து,  அது டெங்கைப் பரப்பும் பெண் கொசுக்களுடன், தொழிற்புரட்சி(?) செய்யப்போகிறது. அதனால் உருவாகும் முட்டைகளில் இருந்து வரும் கொசுக்களுக்கு ( Y- Generation),  டெங்குவை பரப்பும் வீரியம்  இருக்காதாம்..

சோதனை முயற்சியாக, டெங்கு பரவியுள்ள நாடுகளில், இந்த கொசுக்களை பரப்ப உள்ளனர். அதனால் வரும் பின்விளைவுகளை பற்றி இன்னும் தெரியவில்லை. பார்ப்போம் என்ன நடக்கும் என்று.

சாக்கடைகளை, வீதிகளில் விட்டுவிட்டு, நாம் எப்பொழுதும்போல, அடுத்த தேர்தல் வரும்வரை ”நாட்டை வல்லரசாக்குவோம்” என்று கூவிக்கொண்டிருக்கலாம்.

டிஸ்கி.

Basic requirement
 • நல்ல திடகாத்திரமான, திறமையான, மூளையுள்ள இளைஞர்கள்.
 • தங்குமிடம், மூன்று வேளை சோறு, குடி மற்றும் கு^%$ட்டி இலவசம்.

Job Scope
 • நாட்டுப்பற்று அவசியம்.
 • அனுபவம் தேவையில்லை.
 • புதுவகையான மருந்துக்கள்  கண்டுபிடிப்பவர்களுக்கு, முன்னுரிமை அளிக்கப்படும்.

Medicine Spec

 • புது மருந்தானது, ஊழல் அரசியல்வாதிகளை இனம் கண்டு அவர்களிடம் மட்டுமே செயல்படவேண்டும்.
 • உடம்பில் தடிப்போ, ரத்த சோகையோ வரக்கூடாது.
 • வாயில் வைக்கும் சோற்றை,  2 விநாடிகளில் மலமாக்கும் சக்தி,  அந்த மருந்துக்கு இருக்கவேண்டும்.

Reward

வெற்றிகரமாக கண்டுபிடிப்பாளர்கள், பட்டாபட்டி ப்ளாக்கின் சொந்தக்காரராகலாம்..
.
.
.

42 comments:

 1. //Reward

  வெற்றிகரமாக கண்டுபிடிப்பாளர்கள், பட்டாபட்டி ப்ளாக்கின் சொந்தக்காரராகலாம்..///

  நான் இப்போ அந்த(?) ஆராய்ச்சியில தான் இருக்கேன். கூடிய சீக்கிரம் கண்டுபிடிச்சு உங்க ப்ளாக் சொந்தக்காரன் ஆகிடுவேன்.

  ReplyDelete
 2. @நாகராஜசோழன் MA said... 2

  நான் இப்போ அந்த(?) ஆராய்ச்சியில தான் இருக்கேன். கூடிய சீக்கிரம் கண்டுபிடிச்சு உங்க ப்ளாக் சொந்தக்காரன் ஆகிடுவேன்.
  //

  கண்டுபிடி ராசா.. மாலை போட்டு மஞ்சத்தண்...
  சாரிப்பா.. சூடம் கொழுத்த.....


  சாரிப்பா...


  மாலைபோட்டு, மகுடம் சூட்ட நாங்க ரெடி...

  ReplyDelete
 3. //வாயில் வைக்கும் சோற்றை, 2 விநாடிகளில் மலமாக்கும் சக்தி, அந்த மருந்துக்கு இருக்கவேண்டும்.//

  மேலும் அந்த அரசியல்வாதிக்கு ஆண்தன்மையோ/பெண்தன்மையோ உடனடியாக இழந்திட செய்ய வேண்டும்.

  ReplyDelete
 4. //பட்டாபட்டி.. said...
  @நாகராஜசோழன் MA said... 2

  நான் இப்போ அந்த(?) ஆராய்ச்சியில தான் இருக்கேன். கூடிய சீக்கிரம் கண்டுபிடிச்சு உங்க ப்ளாக் சொந்தக்காரன் ஆகிடுவேன்.
  //

  கண்டுபிடி ராசா.. மாலை போட்டு மஞ்சத்தண்...
  சாரிப்பா.. சூடம் கொழுத்த.....


  சாரிப்பா...

  மாலைபோட்டு, மகுடம் சூட்ட நாங்க ரெடி..

  //

  சொல்லும்போதே இப்படி தவறுதே! நாளைக்கு கண்டுபிடிக்காட்டி என்ன செய்வீங்களோ தெரியலையே?

  ReplyDelete
 5. எவனுக்கு இந்த அற்புத பரிசு கிடைக்க போகிறதோ

  ReplyDelete
 6. பேசாம ,நம்ம மங்குனி ,பன்னிக்குட்டி ஜோடிகள தேர்ந்தெடுத்து அனுபிவிடலாம் .

  ReplyDelete
 7. // தங்குமிடம், மூன்று வேளை சோறு, குடி மற்றும் கு^%$ட்டி இலவசம்//

  இதுக்கு பதிவுலகில் ஒரு நபர்தான் இருக்கிறார் நம்ம வீனா போன சிரிப்பு போலீஸ் மட்டுமே ..........

  ReplyDelete
 8. இம்சைஅரசன் பாபு.. said... 8

  // தங்குமிடம், மூன்று வேளை சோறு, குடி மற்றும் கு^%$ட்டி இலவசம்//

  இதுக்கு பதிவுலகில் ஒரு நபர்தான் இருக்கிறார் நம்ம வீனா போன சிரிப்பு போலீஸ் மட்டுமே
  //

  . கடைசி ஐட்டம் ..ஊகூம்..நல்ல பையன்...இதுக்கு, அவரு சரிப்பட்டு வரமாட்டாரு... ஹி..ஹி

  ReplyDelete
 9. / * வாயில் வைக்கும் சோற்றை, 2 விநாடிகளில் மலமாக்கும் சக்தி, அந்த மருந்துக்கு இருக்கவேண்டும்.
  /

  இப்படி மருந்து கண்டு பிடிச்சிட்டாலும் ஊழலை விட்றுவானுங்களாக்கு:))

  ReplyDelete
 10. வானம்பாடிகள் said...

  / * வாயில் வைக்கும் சோற்றை, 2 விநாடிகளில் மலமாக்கும் சக்தி, அந்த மருந்துக்கு இருக்கவேண்டும்.
  /

  இப்படி மருந்து கண்டு பிடிச்சிட்டாலும் ஊழலை விட்றுவானுங்களாக்கு:))
  //

  குறைகளை சரிசெய்து, அடுத்த தயாரிப்பில்.. கக்கா போகாதமாறி செஞ்சிடுவோம் பாஸ்..


  ஆமாம். மந்திரப்புன்னகைக்கு டிக்கெட் சொல்லீட்டீங்களா?...

  ReplyDelete
 11. என்ன வெளையாட்டு இது..... என்ன வெளையாட்டு?

  ReplyDelete
 12. ////டாக்டர் பட்டம் வாங்க, நான் என்ன நாடறிந்த நாதாரியா..அரசியல்வாதியா? இல்லை அரிதாரம் பூசிய, அவதார நடிகனா?)/////

  பாவம்யா டடாகுடரு... எங்கே போனாலும் வாராயங்களே.....!

  ReplyDelete
 13. ///இந்த டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையிலும், அதைப்பற்றிய அறியாமையிலும், இந்தியா முதல் 10 வரிசையில் இடம் பெற்றுள்ளது.. /////

  அங்க ஏசியன் கேம்ஸ்ல மெடலுக்கு மேல மெடல் வாங்கி ரொப்பிக்கிட்டு இருகாங்க, அதப் பாத்து பெருமப் படுறத விட்டுப்புட்டு என்ன அனியாயம்யா இது?

  ReplyDelete
 14. ///சோதனை முயற்சியாக, டெங்கு பரவியுள்ள நாடுகளில், இந்த கொசுக்களை பரப்ப உள்ளனர். அதனால் வரும் பின்விளைவுகளை பற்றி இன்னும் தெரியவில்லை. பார்ப்போம் என்ன நடக்கும் என்று.////

  அப்டின்னா மைக் டெஸ்டிங் நம்ம ஊர்லதானா?

  ReplyDelete
 15. ////தங்குமிடம், மூன்று வேளை சோறு, குடி மற்றும் கு^%$ட்டி இலவசம். ////

  என்னது மூனு வேளைக்கும் கு%@#ட்டியா... ஒரே கு#$$ட்டியா இல்ல மூனா?

  ReplyDelete
 16. ////வாயில் வைக்கும் சோற்றை, 2 விநாடிகளில் மலமாக்கும் சக்தி, அந்த மருந்துக்கு இருக்கவேண்டும். ////

  இதெல்லாம் நம்ம ஊரு பெருச்சாளிகளூக்கு சரியா வருமா பட்டாஜி?

  ReplyDelete
 17. //Reward

  வெற்றிகரமாக கண்டுபிடிப்பாளர்கள், பட்டாபட்டி ப்ளாக்கின் சொந்தக்காரராகலாம்..//

  பின்னர் பட்டாபட்டியார் தமது தலைமையில் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்(???)களுடன் இத்தாலிய ராணுவத்தில் சேர்ந்து இந்திய தேச சேவை(!!) ஆட்டுவார், மன்னிக்கனும் ஆற்றுவார் என்பதனை மிக்க மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டு இருக்கிறேன்.

  ReplyDelete
 18. ஒரே கல்லுல ரெண்டு மாங்கா.
  தமிழ் கூறும் நல்லுலகமும் தப்பிச்சுது.
  பதிவுலகமும் தப்பிச்சுது

  ReplyDelete
 19. Blogger வானம் said...

  ஒரே கல்லுல ரெண்டு மாங்கா.
  தமிழ் கூறும் நல்லுலகமும் தப்பிச்சுது.
  பதிவுலகமும் தப்பிச்சுது
  //

  அவ்வளவு சீக்கிரம் விட்டுடுவோமா பாஸ்.. ஹி..ஹி

  ReplyDelete
 20. பன்னிக்குட்டி ராம்சாமி said...

  ////தங்குமிடம், மூன்று வேளை சோறு, குடி மற்றும் கு^%$ட்டி இலவசம். ////

  என்னது மூனு வேளைக்கும் கு%@#ட்டியா... ஒரே கு#$$ட்டியா இல்ல மூனா?
  //

  அடப்பாவி.. உனக்கு மூளை இருக்கு.. ஒத்துக்கிறேன்..(ம்...ம்.. படிச்ச பையனுக வந்தாவே, கொஞ்சம் சாக்கிரதையா இருக்கனும் போல...)

  ReplyDelete
 21. @பட்டா

  //வெற்றிகரமாக கண்டுபிடிப்பாளர்கள், பட்டாபட்டி ப்ளாக்கின் சொந்தக்காரராகலாம்..//

  அப்பொ உன் ப்ளாக் எனக்கு தரேன் சொன்னது பொய்யா??

  ReplyDelete
 22. //வெற்றிகரமாக கண்டுபிடிப்பாளர்கள், பட்டாபட்டி ப்ளாக்கின் சொந்தக்காரராகலாம்..//

  நான் கலந்துக்கலாமா

  ReplyDelete
 23. TERROR-PANDIYAN(VAS) said... 22

  @பட்டா

  //வெற்றிகரமாக கண்டுபிடிப்பாளர்கள், பட்டாபட்டி ப்ளாக்கின் சொந்தக்காரராகலாம்..//

  அப்பொ உன் ப்ளாக் எனக்கு தரேன் சொன்னது பொய்யா??

  //

  யோவ்.. வெண்ண.. சும்மா கொடுத்தா, அதுக்கு பேரு வேறை..

  ReplyDelete
 24. Blogger Arun Prasath said...

  //வெற்றிகரமாக கண்டுபிடிப்பாளர்கள், பட்டாபட்டி ப்ளாக்கின் சொந்தக்காரராகலாம்..//

  நான் கலந்துக்கலாமா
  //

  லாம்....

  ReplyDelete
 25. @ Arun Prasath said... 23

  //நான் கலந்துக்கலாமா//

  பட்டா ப்ளாக் வாங்கி என்ன பண்ண போற?. முன்ன பின்ன கொலை பண்ண அனுபவம் இருக்கா??

  ReplyDelete
 26. TERROR-PANDIYAN(VAS) said... 26

  @ Arun Prasath said... 23

  //நான் கலந்துக்கலாமா//

  பட்டா ப்ளாக் வாங்கி என்ன பண்ண போற?. முன்ன பின்ன கொலை பண்ண அனுபவம் இருக்கா??

  //

  ஆகா.. சரி...சரி 2% தரேன்யா...

  ReplyDelete
 27. .
  நல்ல திடகாத்திரமான, திறமையான, மூளையுள்ள இளைஞர்கள்.
  தங்குமிடம், மூன்று வேளை சோறு, குடி மற்றும் கு^%$ட்டி இலவசம்...///

  பாஸ்!!!!
  தங்குமிடம், மூன்று வேளை சோறு, குடி மற்றும் கு^%$ட்டி இலவசம்..../
  இது எல்லாம் இலவசம்னா, அப்பறம் எதுக்கு பாஸ் அவன் மூளைய வளக்கணும்!!! எத வளக்கனுமோ அத வளக்க வேண்டியதுதானே!!!!!இதுல எதுவும் உள்குத்து இல்ல!!! வெளிகுத்தாவே சொல்லிட்டேன்!!!!!!

  ReplyDelete
 28. டெங்கு மட்டுமா இன்னும் என்னென்னவோ நோயெல்லாம் பிரச்சினைகளை உண்டாக்குது!
  கவர்மெண்ட் ஒரு மண்ணும் செய்ய மாட்டேங்குது!

  ReplyDelete
 29. வாயில் வைக்கும் சோற்றை, 2 விநாடிகளில் மலமாக்கும் சக்தி, அந்த மருந்துக்கு இருக்கவேண்டும்.
  -----------------------------------

  அந்த மருந்துளையும் நம்மாளுங்க ஊழல் பண்ணிடுவாங்க

  ReplyDelete
 30. வந்துட்டேன் , பட்ட இருக்கியா ? இதோ போஸ்ட் படிச்சுட்டு வரேன் கும்மி அடிக்க . . .

  ReplyDelete
 31. ///சோதனை முயற்சியாக, டெங்கு பரவியுள்ள நாடுகளில், இந்த கொசுக்களை பரப்ப உள்ளனர். அதனால் வரும் பின்விளைவுகளை பற்றி இன்னும் தெரியவில்லை. பார்ப்போம் என்ன நடக்கும் என்று.////

  அப்படியே இந்த பதிவுலகதிலையும் பரப்ப சொல்லு பட்டா இங்கயும் நெறைய கொசுக்கள் தொல்லை தாங்கல . . . .

  ReplyDelete
 32. இன்னமுமா நம்மள நம்புறாங்க..........

  அது அவங்க தல விதின்னே

  ReplyDelete
 33. //இம்சைஅரசன் பாபு.. said... 8 // தங்குமிடம், மூன்று வேளை சோறு, குடி மற்றும் கு^%$ட்டி இலவசம்//

  இதுக்கு பதிவுலகில் ஒரு நபர்தான் இருக்கிறார் நம்ம வீனா போன சிரிப்பு போலீஸ் மட்டுமே//

  நானே லீவ் ல இருக்கேன். என்னை ஏன்டா வம்புக்கு இழுக்குற செல்லம். நீயும் டெரர் அவர்களும்(ஷ்ஷ்ஷ்) செத்து செத்து விளையாடுங்க

  ReplyDelete
 34. Blogger VAIGAI said...

  .
  நல்ல திடகாத்திரமான, திறமையான, மூளையுள்ள இளைஞர்கள்.
  தங்குமிடம், மூன்று வேளை சோறு, குடி மற்றும் கு^%$ட்டி இலவசம்...///

  பாஸ்!!!!
  தங்குமிடம், மூன்று வேளை சோறு, குடி மற்றும் கு^%$ட்டி இலவசம்..../
  இது எல்லாம் இலவசம்னா, அப்பறம் எதுக்கு பாஸ் அவன் மூளைய வளக்கணும்!!! எத வளக்கனுமோ அத வளக்க வேண்டியதுதானே!!!!!இதுல எதுவும் உள்குத்து இல்ல!!! வெளிகுத்தாவே சொல்லிட்டேன்!!!!!!
  //

  ஹி..ஹி

  சர்தான்

  ReplyDelete
 35. Blogger எஸ்.கே said...

  டெங்கு மட்டுமா இன்னும் என்னென்னவோ நோயெல்லாம் பிரச்சினைகளை உண்டாக்குது!
  கவர்மெண்ட் ஒரு மண்ணும் செய்ய மாட்டேங்குது!
  //

  வைத்துக்கொண்டா வஞ்சகம் பண்றாங்க பாஸ்.. பாவம் சுருட்டினது போக, மந்திரிகளுக்கு சம்பளம் கொடுக்கவே பணம் இல்லையாம்..

  ReplyDelete
 36. THOPPITHOPPI said...

  வாயில் வைக்கும் சோற்றை, 2 விநாடிகளில் மலமாக்கும் சக்தி, அந்த மருந்துக்கு இருக்கவேண்டும்.
  -----------------------------------

  அந்த மருந்துளையும் நம்மாளுங்க ஊழல் பண்ணிடுவாங்க
  //

  ஊகூம்.. பண்ண முடியாதே.. ஏன்னா Pattern நம்ம கிட்ட இருக்கு பாஸ்...

  ReplyDelete
 37. @ rockzsrajesh said...

  அப்படியே இந்த பதிவுலகதிலையும் பரப்ப சொல்லு பட்டா இங்கயும் நெறைய கொசுக்கள் தொல்லை தாங்கல . . . .

  //

  சே..சே. என்னை அப்படி சொல்லப்படாது.. ஹி..ஹி

  ReplyDelete
 38. விக்கி உலகம் said...

  இன்னமுமா நம்மள நம்புறாங்க..........

  அது அவங்க தல விதின்னே
  //

  ஹி..ஹி..

  ReplyDelete
 39. @ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)
  நானே லீவ் ல இருக்கேன். என்னை ஏன்டா வம்புக்கு இழுக்குற செல்லம். நீயும் டெரர் அவர்களும்(ஷ்ஷ்ஷ்) செத்து செத்து விளையாடுங்க
  //

  ஏன் செல்லம்.. லீவுனா சோறு துன்னமாட்டியா நீ?
  டமாசு பண்ணிக்கிட்டு..

  ReplyDelete
 40. டாக்டர் பட்டாபட்டி வாழ்க!

  கொசுவை ஒழிக்க எதிர்காலத்தில் உருவாகும் கொசுவையெல்லாம் மலடாக்கும் DNA மாறுதல் அமல்படுத்தப்போவதாக...நான் கேள்விப்பட்டேன்...

  நடந்தால் நல்லது தான்.

  என்னது மனிதனுக்கா...? அது வேறுபல காரணிகளால் மலடாக்கம் செயல்பட ஆரம்பித்துவிட்டது.

  ReplyDelete
 41. என்னாய்யா Basic Requirement-லே Reward-ஐ ரெண்டாவது பாயிண்டா சேர்த்துட்ட...

  :-)))

  ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!