Pages

Wednesday, April 13, 2011

உங்கள் வாக்கு காங்கிரஸுக்கே.. -தங்கபாலு



வணக்கம் என் தமிழக வாக்களப்பெருக்குடி மக்களே.
’பதிவர்களுக்குள் சண்டை இருக்கலாம். சச்சரவு இருக்ககூடாது’ என்ற உயரிய நோக்கம் கொண்ட மக்கள் தொண்டன் நான். இந்த ப்ளாக்கின் சொந்தக்காரரும், பதிவுலகில் செல்லமாக.. ’பட்டா’ என்று அழைக்கப்படும் பட்டாபட்டியும்...............,
என்னையும், ’எங்கள் கூட்டணியுடன் இணைந்து தொண்டாற்றும் கழகத்தையும்’, கண்டபடி பேசி, திட்டித்தொலைத்ததும், வம்புக்கிழுத்தும், கழுவி ஊற்றீய செயல் என் நெஞ்சை புண்ணாக்கியவேளையிலே...  களம் இறங்கி, விவாதம் செய்து, இந்த ப்ளாக்கை விவாதமேடையாக்கிய, திருவாரூர்காரன் என்று அழைக்கப்படும் வெளியூர்காரனை நினைவில் நிறுத்த, பாரம்பரிய கட்சித்தலைவனாகிய நான் கடமைப்பட்டுள்ளேன்.

ஏன் இந்த பீடிகை?

’எல்லாக்கட்சிக்காரார்களும் ஒரே மேடையில் நின்று பிரச்சாரம் செய்யும் காலம் வருமோ?’, என்று பதிவர்கள் பலர் பதைபதைத்து நிற்க, அதை செயலாக்கிய வடிவம் தந்த பட்டாபட்டிக்கும் வெளியூர்காரனுக்கும், என் வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

தேர்தல் நாள் வரை, இந்த ப்ளாக்கை விவாதமேடையாக்கிக்கொள்ளலாம் என்ற பெரியமனம் , காங்கிரஸ்காரர்களைவிட்டால் ப்ளாக்கர்களுக்கு வருவது, ’அன்னையின் ஆட்சியால்தான்’ என்பதையும் பதிவுசெய்யும் கடமை, தமிழக காங்கிரஸ் தலைவனாகிய எனக்குள்ளது.

  • அன்று.. இந்த மேடையில், அனைவரையும் காறீய பட்டாபட்டி

  • நேற்று.. இதேமேடையில் கலைஞருக்காக வெளியூர்காரன்.

  • இன்று.. தமிழகத்தின் நிரந்திர காங்கிரஸ்தலைவனாக, ”நான் ”

இந்த நாள் என்னுடைய நாள். அதாவது எங்கள் அன்னை சோனியாகாந்தியின் நாள்.  அவரின் ஆணைப்படி ’உங்கள் வாக்கை எங்களுக்குப்பெற’,உரிமையுடன் நின்று, என் பிரச்சாரத்தை தொடங்குகிறேன்.

பழையதைப் பேசிப்பேசி தமிழன் தற்குறியாவான் என்று, அன்றே எங்கள் ’நிரந்திரத் தலைவன் ராஜீவ்காந்தி’ என் இடது காதில் எடுத்துரைத்தார். அதை என்னைக் காக்கும் கடவுள் ‘அன்னை’யும் வழிமொழிந்துள்ளார். 

பத்திரிக்கைகள் எங்களை புறந்தள்ளி கழகத்தை விமர்சித்துகொண்டுள்ளதைப்பார்த்து, ”அய்யகோ .. எங்கள் ’அன்னை’-கே சோதனையா?” என்று பதைபதைப்பில், வேட்புமனு தாக்கல் செய்தபொது  நிகழ்ந்த சிறுதவறு...  அதைப் பரிகாசம் செய்வதுதான் தமிழனின் செயலா?

உங்களைப்பார்த்துக்கேட்கிறேன்.
மனிதனாகப்பிறந்தவன் தவறே செய்வதில்லையா?.
எங்கள் கட்சீ, வேட்பாளர்கள் நேர்காணல் முடிந்து.......... களம்காண தயாராகவுள்ளது. புறப்படும்முன் “எங்கள் வாக்குறுதிகளை” உங்கள் பார்வைக்காக...

நாங்கள் ஆட்சீக்கு வந்தால், அன்னையில் பொற்கரங்களால், ஒவ்வொருவருக்கும்
  • இரண்டு மிக்ஸி,
  • இரண்டு கிரைண்டர்,
  • இரண்டு வாசிங் மிசின்,
  • இரண்டு இரட்டைஆடுகள்,
  • கல்யாணம் செய்தால் காதுக்கு கம்மல்,
  • கருமாதி செய்தால், மலர்வளைத்துக்குப் பணம்.

அதுமட்டுமா?
  • மக்களுக்கு இலவசமா இரண்டு செல்போன்கள்
  • இரண்டு டீவீக்கள்
  • இரண்டு BroadBand கனெக்‌ஷன்கள்

எல்லாமே இரண்டு.. ஒன்று எங்கள் அன்னை தருவது.. அடுத்து அவர்தம் புதல்வர் தருவது.

எங்களைப்பார்த்து உரிமையுடன் கேட்கலாம்.
வேறு என்ன வேண்டும்?.
( பட்டாபட்டி அணிந்த பன்னாடை மேடை அருகே செல்ல.. தலைவர்.. மை-கையும் வேட்டியையும் இறுக்க பிடித்தபடி )

யோவ்.. யாருய்யா நீ? இப்ப என்னா சொல்லீட்டேன்?..

யோவ்.. நைனா.. சீக்கிரம் பேசி முடி..   மைக் செட்டை கழட்டீட்டு. ஊட்டுக்குப்போய் நாஸ்தா துன்னவேனாம்?-மைக் செட்காரன்


ம்.ம். ( எப்படியெல்லாம் பயமுறுத்துரான்க!!)   நாங்கள் தவறாக ஏதாவது செய்திருந்தால் அதை மறந்து, உங்கள் துயர் துடைக்க, “கை” சின்னத்துக்கு வாக்களியுங்கள். எங்களை பெருபான்மையாக தேர்வு செய்யுங்கள். உங்களுக்கு உழைக்க நாங்கள் இருக்கிறோம்.


ஏம்பா.. மைக் செட்டு.. ஏதாவது கேள்வி கேட்கனுமா?.

ஓய்.. என்னியா?.. சரி.. ஏய்யா மீனவனை இப்படி கொல்றானுக இலங்கைக்காரனுக?-மைக்

சரியான நேரத்தில கேட்கப்பட்ட கேள்வி. இதுவரை இறந்த மீனவர்கள் 500 கொச்சம்.  ஆனால் அதற்கு சிங்கள ராணுவம் செலவளித்த  குண்டுகள் சுமார் 5000.   அதாவது அவர்களால், சுமார் 10% விழுக்காடுவரைதான் சரியாக குறிபார்த்து சுட்டுள்ளனர். மீதி குண்டுகள் எல்லாம் விரயம்..

அதற்காக கவலைப்படவேண்டாம் என் தமிழகமே. அன்னை சோனியா ,இத்தாலியுடன் பேசி பேர்பாக்ஸ் பீரங்க்கிக்கு குண்டுகள் வாங்க உள்ளார்.,

நீங்கள் கேட்கலாம். ராஜீவ் வாங்கிய குண்டுகள் எங்கே? என்று. அதை பழைய BJP ஆட்சியின்போது..பொக்ரேனில்  கூடவே மறந்தபடி வைத்து... வெடித்துவிட்டனர். அன்னையின் ஆட்சீயில் இப்போது பீரங்கி மட்டும்தான் உள்ளது. விரைவில குண்டுகள் வாங்கி.. சிங்களவனின் 10% விழுக்காடு திறமையை, 20% விழுக்காடுவரை அடைய இந்திய ராணுவத்தை அனுப்ப தயாராகவும் உள்ளார்.

மேலும் தேர்தல் நெருங்குவதால் உங்களிடம் ஒரு உண்மையை சொல்லித்தொலைக்கிறேன்  ’அன்னை ’,........  இந்தியா வந்து வருடங்கள் பல ஆகிவிட்டது.  இந்தியில் சரளமாக பேச முடிந்த அளவுக்கு..இப்போது  இத்தாலியில்  பேச முடியவில்லை.

இடைத்தரகர்கள் வழக்கு..வம்பு என்று இந்தியா வரப்பயப்படுவதாலும்,  மீண்டும் குட்டராச்சியை வைத்து ’குண்டு வாங்கலாமா?’ என்று ஆலோசனை நடந்துகொண்டுள்ளது.


ஆகவே,  இந்த சிறிய பிரச்சனையை தேர்தல்களத்தில் நினைக்காமல். மக்களுக்காக பாடுபடும் ஒரே கட்சீ காங்கிரஸ்க்கு...ஆங்..இன்னும் ஒரு முக்கியமான விசயம் மறந்துட்டேன்....

 வெயில் அடித்தால் தலை வாடாமல் இருக்கு, இலவச தொப்பி கொடுக்கும் திட்டமும் எங்களிடம் உள்ளது. அதுவும் எத்தனை?..

ரெண்டு.....


ஆகவே ......உங்கள் ஓட்டு ’கை’ சின்னதுக்கே.
அன்னை வாழ்க..ராகுல் வாழ்க...

உலகளவில், இந்தியா  உன்னதமான இடத்தை அடைய , கை சின்னத்துக்கு வாக்களியுங்கள்.


( குறிப்பு : நண்பர் ராவணண், அவரது திறமையெல்லாம் உபயோகித்து, கட்டங்கள் வரைந்து ராகு, கேது, சனி, போன்ற கிரகங்களை தவிர்த்து..நல்லநேரத்தை குறித்துக்கொடுத்துள்ளார்.
அவரது கூற்றின்படி, மாலை 5 மணிக்குமேல் வாக்கு சேகரிக்ககிளம்பினால.. ”இந்தியாவின் எதிர்காலம் காங்கிரஸ் கை-யில்” என்பதாலும்.............!!!!!!!!)



மைக்..பிடுங்கப்பட்டு பட்டாபட்டியிடம்

@பட்டாபட்டி..


இதுக்கும்மேலே....கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்தூதூ......
ஓகே..ஓகே... நான் கிளம்புறேன்.. ங்கோ....எனக்கு ரிலாக்ஸ்டா.. ப்ளீஸ்யா..ஒரு அல்லக்கைய நோண்டி விடனும்..எப்பபாரு... தயாநிதி MORON.. கலாநிதி MORON.னு குலைச்சுக்கிட்டு,..குண்%$#டிகூட கழுவத்தெரியாம சுத்திக்கிட்டு இருக்கு... இப்படியே இருந்தா.. வரூண்டா  எப்போ மெரூண்டா ஆவது?.


ம்..ம்..சரி.. பொதுப்பிரச்சனைய..பொதுவுல தீர்த்துக்குவோம்..


அண்ணன் தங்கபாலு ஓட்டுக்கேட்டு...... வந்தாலும் வராவிட்டாலும்........    காங்கிரஸ் பெரும்பான்மை பெற என் வாழ்த்துக்கள்...

மறக்காம ஓட்டுப்போடுங்க.. குளித்து.. புத்தாடை உடுத்தி.. ”மாலை 5 மணிக்குமேல்”, உங்கள் வலது காலை எடுத்துவைத்து... பூத்துக்குப்போய்...

கை-சின்னத்துக்கு  வாக்களிப்பது உங்கள் கடமை..



தங்கபாலு அண்ணே நீங்களே பேசுங்க..
.
.
(மைக் கைமாறுகிறது)
.
.
.நான் சொல்லவேண்டியதை மக்களுக்கு விளக்கமாக விளக்கிவிட்டதாலும். மாலை வெயில் ஒருவித மயக்கமாக இருப்பதாலும்....
தேர்தல் களம் காணும் முன் எங்கள் பாசமிகு கூட்டணி கட்சியாம் திமுகவை சேர்ந்த அன்பு தொண்டர் திரு.வெளியூர்காரன் அவர்களை வாழ்த்தி பேசி இறுதிஉரை ஆற்ற வருமாறு அன்புடன் அழைக்கிறேன்..! 

ஓவர் டூ வெளியூர்க்காரன்..

டேய் சொட்டை..வாக்குபதிவு இன்னும் ரெண்டு மணி நேரத்தில முடியப்போகுதுடா வழுக்க மண்டை..! போ போய் தண்ணிய தொட்டு தலைய தொடைச்சுக்க...! அப்பத்தான் எங்களுக்கு ஜம்ப் பண்ணி ஜம்ப் பண்ணி சொட்டமண்டைலையே எச்சி   தொட்டு அடிக்க வசதியா இருக்கும்..! அலையைவாடா விடறீங்க என் தலைவன ..! இனிமே பாருங்கடா.. ஆட்டத்த..!”
 

++++++++++++++++++++++ 

.


.

24 comments:

  1. @All.//

    தற்பொழுது நடந்து கொண்டிருக்கும் சட்டமன்ற தேர்தலில், காங்கிரசை தமிழகத்திலிருந்து கழுவி வெளியே ஊற்றி கொண்டிருக்கும் தமிழக வாக்காள பெருமக்களுக்கு எங்கள் இதயபூர்வமான நன்றிகள்...! :)

    ReplyDelete
  2. அதானே பார்த்தேன்.. பயந்தே போயிட்டேன்

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. அது என்ன தங்க'பாலு',மண்ட'பாலு' ங்கிறது தான் சரியாயிருக்கும்.நம்ம ஹர்பஜன்ட அந்த மண்டயக்கொடுத்தா,எச்சிய துப்பி நல்லா தேய்,தேய்னு தேய்ச்சி மிச்சமீதி இருக்கிற முடியையும் புடிங்கிப்போட்டிரும்.

    ReplyDelete
  5. கடைல கூட்டம் சேர்ரதுக்குள்ளே துண்டு போட்டுக்கிறேன்.

    ReplyDelete
  6. மைக் ஒயர் பிஞ்சி நாளு நாள் ஆச்சு. மொதல்ல அந்த தகர டப்பா தலையன் தங்கபாலுவ கீழ எறங்கச்சொல்லுய்யா..

    ReplyDelete
  7. காங்கிரசுக்கு ஓட்டுப்போடும் அனைவருக்கும் சுவிசு பேங்கில் அக்கவுண்ட்டு ஆரம்பித்துக்கொடுக்கப்படும் என்ற கோரிக்கையை வலியுறுத்தாத பட்டாபட்டியை கண்டித்து இந்த பிரச்சார கூட்டத்தை காரித்துப்பி கண்டித்துவிட்டு வெளிநடப்பு செய்கிறேன்.

    ReplyDelete
  8. தமிழ்நாடு என்று சொன்னாலே எல்லாரும் கேவலமாக பார்க்கிறார்கள். காசுக்கு ஓட்டு போடும் மக்கள் என்று. நமது நிலைமை என்று தான் மாறுமோ?

    ReplyDelete
  9. அய்யோ அய்யோ!

    ReplyDelete
  10. ஆ....ஆ.. நா....எங்கயிருக்கேன்.என்ன
    எழுப்பமா போயிட்டாங்களே!

    ReplyDelete
  11. செய்றதையும் செஞ்சுட்டு கொஞ்சம் கூட பயமோ குற்ற உணர்வோ இல்லாம காங்கிரஸ்காரத் _________ தமிழ்நாட்டுல எலக்சன்ல நிக்குறாயங்க. அப்ப நம்மள எவ்ளோ இளக்காரமா நினச்சுருக்காய்ங்க. இந்தத் தேர்தல்ல காங்கிரஸ்க்கு விழுகுற ஒவ்வொரு ஓட்டும் தமிழ்நாட்டுல இன்னும் எத்தன எட்டப்பன் மிச்சம் இருக்கான்னு காட்டும்.

    ReplyDelete
  12. நான் என்னய்யா பாவம் செஞ்சேன், ஒடஞ்ச பாலுவிடம் என்னை மாட்டிவிடலாமா?

    அதுசரி நம்ம சரக்கு பாட்டில் என்னாச்சு?

    ReplyDelete
  13. காங்கிரஸ்ஸை வைத்து செமையாக் கடிச்சுப்புட்டீங்களே சகோ...

    ReplyDelete
  14. காங்கிரஸ்ஸை வைத்து செமையாக் கடிச்சுப்புட்டீங்களே சகோ...

    ReplyDelete
  15. தேர்தல் நாள் வரை, இந்த ப்ளாக்கை விவாதமேடையாக்கிக்கொள்ளலாம் என்ற பெரியமனம் , காங்கிரஸ்காரர்களைவிட்டால் ப்ளாக்கர்களுக்கு வருவது, ’அன்னையின் ஆட்சியால்தான்’ என்பதையும் பதிவுசெய்யும் கடமை, தமிழக காங்கிரஸ் தலைவனாகிய எனக்குள்ளது.//

    சகோ.. இது தானே உள் கூத்து அரசியல்;-))))

    ReplyDelete
  16. அன்று.. இந்த மேடையில், அனைவரையும் காறீய பட்டாபட்டி//

    ஹா... பாஸ்.. அந்தப் பதிவு மாதிரி ஒரு ஹிக் வருமா சகோ?

    ReplyDelete
  17. இந்த நாள் என்னுடைய நாள். அதாவது எங்கள் அன்னை சோனியாகாந்தியின் நாள். அவரின் ஆணைப்படி ’உங்கள் வாக்கை எங்களுக்குப்பெற’,உரிமையுடன் நின்று, என் பிரச்சாரத்தை தொடங்குகிறேன்.//

    ஆரம்பமே.... அம்மா எழுதிக் கொடுத்ததை தமிழில் ட்ரான்ஸிலேட் பண்ணி வாசிக்கிற மாதிரி இருக்கே;-)))

    ReplyDelete
  18. பழையதைப் பேசிப்பேசி தமிழன் தற்குறியாவான்//

    சகோ- தற் குறியாவான்...

    you mean.. master...
    இலக்கியத்திலை எப்படியெல்லாம் புகுந்து விளையாடுறாங்க.. நம்மாளுங்க.. பார்த்தீங்களா மக்களே!

    அண்ணன் பட்டா பட்டி வாழ்க!

    காங்கிரஸின் பிரச்சாரப் பீரங்கி பட்டா பட்டி வாழ்க!

    ReplyDelete
  19. இரண்டு மிக்ஸி- ஒரு மிக்ஸி அரைக்க, மத்தது எதுக்கு?

    இரண்டு கிரைண்டர்- ஒரு கிறைண்டர் மாவாட்ட போதாதா?

    இரண்டு வாசிங் மிசின்- ஐ இது கலைஞரை விட better ஆ இருக்கே.
    என் ஓட்டு உங்களுக்குத் தான்.

    இரண்டு இரட்டைஆடுகள்- ஒரு ஆட்டை வைத்தே சமாளிக்கப் படுற பாட்டிலை, அவரு இரட்டை ஆடு தரப் போறாராம்...............
    அவ்...................


    கல்யாணம் செய்தால் காதுக்கு கம்மல்,
    கருமாதி செய்தால், மலர்வளைத்துக்குப் பணம்.- அப்போ உங்க கட்சி வன்முறையிலை செத்தால் நட்ட ஈடு இல்லையா சகோ?

    ReplyDelete
  20. உங்கள் பதிவினூடாக கைச் சின்னத்தை வைத்து நீங்கள் பண்ணியிருக்கும் நகைச்சுவை செம ஹிட்...

    ReplyDelete
  21. @@@நிரூபன் said... 21
    உங்கள் பதிவினூடாக கைச் சின்னத்தை வைத்து நீங்கள் பண்ணியிருக்கும் நகைச்சுவை செம ஹிட்...///

    சரி சரி கெளம்பு..ரொம்ப பேசுற நீ..!

    @ பட்டாப்பட்டி..

    யோவ் பட்டாப்பட்டி..என்னய்யா தங்கபாலு எனென்னமோ பண்றாப்ல...எஸ் வி சேகர கட்சிய விட்டு தூக்கிடாப்லாயாம்...! அவரு பண்றத பார்த்தா நெஜமாவே அவருதான் காங்கிரஸ் கட்சிக்கு தலைவர் போலருக்கு..!:)

    ReplyDelete
  22. டங்கவாலுவோட வால அன்னை வெட்ட் போறதா கேள்விப்பட்டேன்..

    இனி அண்ணனை மெகா டிவில மட்டும் பாக்கலாம்..

    ReplyDelete
  23. Veliyoorkaran said...
    @@@நிரூபன் said... 21
    உங்கள் பதிவினூடாக கைச் சின்னத்தை வைத்து நீங்கள் பண்ணியிருக்கும் நகைச்சுவை செம ஹிட்...///

    சரி சரி கெளம்பு..ரொம்ப பேசுற நீ..!

    @ பட்டாப்பட்டி..//

    சகோ இது ரொம்ப ஓவரு....
    பிச்சுப் புடுவன் பிச்சு....லத்திகா பட டீவிடியை உட்கார வைச்சு பத்துவாட்டி பார்க்கப் பண்ணிடுவேன்;-))

    ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!