Pages

Tuesday, April 12, 2011

வாக்களிப்பீர் உதயசூரியனுக்கே - வெளியூர்க்காரன்



’வைகோ இல்லாத...பட்டாபட்டியும் இல்லாத தேர்தல் பிரசாரம்’, சைட் டிஷ் இல்லாத சரக்கு பார்ட்டி மாதிரி சப்புன்னு முடிஞ்சிருச்சு.. ஆயிரம் சொல்லு வாத்யாரே...வைகோ இருந்தா ஒரு கெத்துதான்யா..மனுசன இந்த சண்டாள சிறுக்கி என்ன நிலைமைக்கு ஆக்கிபுட்டா. சரி அத விடுங்க..நாம மேட்டருக்கு வருவோம்...! அந்த பொம்பளைய பத்திதான் எல்லாருக்கும் தெரியுமே...!


நாளைக்கு எலெக்சன்..யாருக்கு வோட்டு போட போறீங்கன்னு மொக்கதனமா கருத்து கணிப்பெல்லாம் கேக்கமாட்டேன்..நீ எந்த நாய்க்கு வேணா போடு..ஆனா, நான் உதயசூரியனுக்குதான் போடபோறேன்....!


நீயும் ஒரு நிமிஷம் யோசிச்சு பாரு..குஷ்பு புது ஜாக்கெட் போட்டுக்கிட்டு வந்து சொன்னுச்சு...வண்டுமுருகன் வடிவேலு விஜயகாந்தா நல்லா தமாசா கலாசுனாப்லையா..இதுகெல்லாம் வோட்டு போடாத...யாரு ஆட்சிக்கு வந்தா தமிழ்நாட்ல வளர்ச்சி நல்லாருக்கும்..உடனே கலைஞர் குடும்பத்தோட வளர்ச்சியான்னு பேக்காளிதனமா கேக்காத...எவன்யா குடும்ப அரசியல் பண்ணல..பார்லிமெண்ட்ல கலாவதி கலாவதிங்கற வார்த்தைய தவிர அடுத்த வார்த்தைய குளறாம பேச தெரியாத ராகுல் காந்திய ஏன் தேசிய தலைவரா காங்கிரஸ் கட்சி ஏத்துகிச்சு..சோனியா காந்தி என்ன உப்பு சத்யாகிரகத்துல   உள்ள போனவங்களா...?  ராஜீவ் காந்தி மவனும் பொண்டாட்டியும்கரத தவிர வேற என்ன தகுதி இருக்கு இவங்ககிட்ட...?


ஏன் சென்டருக்கு போற...ஸ்டேட்டுக்கு வா..ஜி கே வாசன் யாரு...? மூப்பனார் மவன்தான..? ராமதாஸ் தான் மவன மாடு மேய்க்கவா அனுப்புனாரு...? மினிஸ்டராதான ஆக்குனாரு..? அவ்ளோ தூரம் ஏன் போற..? ஜெயலலிதா யாரு...? எம்ஜிஆரோட ..சரி அத விடு..,விஜயகாந்த் மட்டும்தான் தனி ஆளா இருக்காருன்னு நெனைக்காத மச்சி..இருக்கற டேஞ்சர்லையே பெரிய டேஞ்சர் இவன்தான்..பிரேமலாதா அக்காவும் சுதீஷ் அத்தானும் தமிழ்நாட்ல ஆட்டம் போடறப்ப புரிஞ்சுபீங்க..வெளியூர்காரன் சொன்னது எவ்ளோ உண்மைன்னு..!


இங்க எல்லா பயலும் நாதாரிங்கதான்..எவனும் நல்லவன் கெடயாது...உனக்கு நல்லவனுக்கு வோட்டு போட சாயிசும் கெடயாது..இருக்குற மொள்ளமாரில ஒரு முடிச்சவிக்குக்கு நீ வோட்ட போடணும்..ஏய் இரு.. ஷாக் ஆவாத மச்சி..மேல படி..!


நான் என்ன சொல்றேன்..இன்னொரு தடவ ஜெயலலிதாவுக்கு வாய்ப்பு குடுத்தா அந்த அம்மா கலைஞர் க்ரூப்ப ஒளிச்சு கட்றதுக்கு ஒரு வருசத்த வேஸ்ட் பண்ணும்..அடுத்த வருஷம் அரசு கடுமையான நிதி நெருக்கடில இருக்கு.. முந்தைய திமுக ஆட்சிதான் இதுக்கு காரணம்னு சொல்லி இருக்கற நலத்திட்டங்கள் எல்லாத்தையும் புடுங்கிரும்..மூணாவது வருசத்துலேர்ந்து இவ்ளோ நாள் காய்ஞ்சதுக்கும் சேர்த்து சம்பாரிக்க ஆரம்பிச்சிரும்..அதுக்குள்ள அடுத்த வருஷம் வந்துரும் மறுபடியும் பழைய குருடி கதவ தொரடிதான்...!

விஜயகாந்த் அண்ணனுக்கு வாய்ப்பு குடுத்தா..அண்ணேன் இப்பதான் அரசியலுக்கு வந்துருக்காப்ள..நெறைய செலவு பண்ணிருக்காப்ள..அதெல்லாம் சேர்த்து சம்பாரிக்கனும்...அவரு கட்சிகாரங்கல்லாம் இனிமேதான் சம்பாரிக்கனும்..அவரு மச்சான் பொண்டாட்டி எல்லாரும் சம்பாரிக்கனும்..தவிர நாப்பது சீட்ட வெச்சுக்கிட்டு இவங்களால பெருசா ஒன்னும் நாக்க வழிச்சிற  முடியாது..ஏப்ரல் பதினாலாம் தேதி இவனுகள அம்மா செருப்பால அடிச்சு வெளில வெரட்டிரும்..அப்பறம் எங்கேந்து ஆட்சில பங்கு வகிக்கறது...இவனுக ஜெய்ச்சாலும் வேஸ்டுதான் ..அதனால இவனுகளுக்கு வோட்ட போட்டு உன் வோட்ட வேஸ்ட் பண்ணாத..!


தி மு க வ பொறுத்த வரைக்கும் வார்டு கவுன்சில்லர்லேர்ந்து மத்திய மந்திரி வரைக்கும் எல்லாரும் சம்பாரிசிட்டாணுக...சம்பாரிச்சதோட மட்டும் இல்ல..எதோ டைம் கெடைக்கறப்ப மக்களுக்கு ஒன்னு ரெண்டு நல்லதும் பண்ணிருக்காணுக... இந்த ஆட்சிலதான் தங்கம் மாதிரி ரோடு போட்ருகாணுக..ஒரு ரூபாய்க்கு அரிசி போட்டு தமிழ்நாட்லேர்ந்து பசிய ஒழிச்சிட்டாணுக.போன தேர்தல் அறிக்கைல சொல்லிருகர பெரும்பான்மையான வாக்குறுதிகள நிறைவேத்திருக்காங்க....!

அது மட்டும் இல்லாம  அடுத்த முதலமைச்சரா ஆகறதுக்கு திரு.ஸ்டாலின் அவர்களுக்கு எல்லா தகுதியும் இருக்கு...திரு.ஸ்டாலின் என்கிற ஒரு அரசியல் தலைவர் மேல ஜெயலலிதாவுக்கு கூட நல்ல மரியாதை இருக்குங்கறது எல்லாருக்குமே தெரியும்...துக்ளக் சோ வுக்கு புடிச்ச அரசியல்வாதி எனக்கு தெரிஞ்சு திரு.ஸ்டாலின் மட்டும்தான்..!


அதனால குஷ்பு வடிவேலு இவங்கலஎல்லாம் லெப்ட்ல விடு..கூத்தாடிங்க சொல்லி நாம் வோட்டு போடற அளவுக்கு நாம இன்னும் முட்டாள் ஆகல..உனக்கு எது கரெக்டுன்னு தோணுதோ அவங்களுக்கு வோட்டு போடு..!

என்னை கேட்டேன்னா  யோசிக்காம திமுகவுக்கு வோட்டு போட்ருனுதான் சொல்லுவேன்..!


ஏன்னா, யோசிச்சீனா உன்னால எவனுக்குமே வோட்டு போட முடியாது..!


ஆகையினால்        "வாக்களிப்பீர் உதயசூரியனுக்கே.."



(காங்கிரஸ் நிக்கற தொகுதில ..அவனுகளுக்கு ஓட்டுபோடாதீங்க.. அதைத்தான் பட்டாபட்டியும் எதிர்பார்க்கிறான்.
அவனோட வாயால.. யாருக்குவேணா போடு..ஆனா காங்கிரஸ்க்கு மட்டும் போடாதேனு சொன்னதால்.. அவருக்கு “ஓ” போட்டு விடை பெறுகிறேன்..
நன்றி - வெளியூர்க்காரன் )



( பட்டாபட்டி அவசரவேலையாக மலேசியா சென்றதற்கு..

கழகத்தின் சார்பிலும்.. 
அவரது கம்பெனியின் சார்பிலும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.. 

கடவுளே.. அவன் திரும்பிவருவதற்குள் தேர்தல் முடிந்துவிடவேண்டும்  )





22 comments:

  1. ஓட்டும் போட்டாச்சி தொற!

    ReplyDelete
  2. காங்கிரசுக்கு எதிராக வாக்களிக்கலாம் என்கிறார்கள்.. அது எந்த விதத்தில் உதவும் ஜெயலலிதாவை மீண்டும் ஆட்சி கட்டிலில் ஏற்றுவது தவிர?
    ஜெயலலிதா காங்கிரசுக்கு தூது விட்டவர் தானே? அவர் காங்கிரசுடன் போய் இன்று காங்கிரசை எதிர்த்து வாக்களித்தவர்கள் முகத்தில் கரி பூசமாட்டார் என்று என்ன நிச்சயம்?
    சட்டமன்ற தேர்தலில் தோற்பதால் காங்கிரசுக்கு என்ன இழப்பு?
    ஒரு குறிப்பிட்ட விஷயத்துக்காக உணர்ச்சிவயப்பட்ட முடிவெடுத்து , அது தமிழக தமிழர்களுக்கு எதிராக போகவேண்டுமா?
    தேர்தல் தமிழத்துக்கு - தமிழகது தமிழர் , இலங்கை தமிழர் என்று இரண்டையும் எடை போட்டுதானே வாக்களிக்க வேண்டும்?
    ஜெ வின் மீது பெங்களுரு வில் இருக்கும் வழக்கில் அவருக்கு எதிராக திறப்பு வரபோகிறது.. அப்படிப்பட்டவர் மிண்டும் வர வேண்டுமா?

    யோசியுங்கள்.. மூட்டை பூசிக்கு பயந்து வீட்டை கொளுத்த வேண்டுமா?

    காங்கிரசை தவிர்த்தாலும் தி மு க , மற்ற தி மு க கூட்டணி கட்சிகளுக்கு வாக்களிப்போம்,

    ReplyDelete
  3. வெளியூரு .............
    பட்டைய கிளப்பிங் . . . .
    நச்சுன்னு ஒரு பதிவு யா இது . . .

    ReplyDelete
  4. இரு வெளியூரு , முதல்ல இந்த பதிவுக்கு நச்சு நச்சுன்னு ஓட்டு போட்டுட்டு வரேன் மத்ததெல்லாம் அப்புறம் பேசுவோம் . . .

    ReplyDelete
  5. அப்படி இன்னைக்கு தான் திருப்தியா ஒரு ஓட்டு போட்டு இருக்கேன் . . .
    ஆமா இங்க இன்ட்லி மட்டும்தான? தமிழ் 10 கிடையாத?

    ReplyDelete
  6. போட்டுருவோம் ! எரியுர கொள்ளியில இதுதான் நல்ல கொள்ளி!

    ReplyDelete
  7. //// நீயும் ஒரு நிமிஷம் யோசிச்சு பாரு..குஷ்பு புது ஜாக்கெட் போட்டுக்கிட்டு வந்து சொன்னுச்சு... ///

    குஷ்பூ மேடம் மே சொன்னதுக்கு அப்புறம் என்ன யோசனை?
    அதுவும் புது ஜாக்கெட் எல்லாம் போட்டுக்கிட்டு வந்து சொன்னதுக்கு அப்புறமாவும் ?
    நச்சுன்னு குத்த வேண்டியதுதானே? ஓட்டு சீட்டுல ஓட்டை சொன்னேன் பா . . .

    ReplyDelete
  8. ////ஏன் சென்டருக்கு போற...ஸ்டேட்டுக்கு வா..ஜி கே வாசன் யாரு...? மூப்பனார் மவன்தான..? ராமதாஸ் தான் மவன மாடு மேய்க்கவா அனுப்புனாரு...? மினிஸ்டராதான ஆக்குனாரு..? அவ்ளோ தூரம் ஏன் போற..? ஜெயலலிதா யாரு...?////

    வெளியூரு நீ என்ன நாக்க புடுங்கிக்கிற மாதிரி எல்லாம் கேள்வி கேக்குற? அதெல்லாம் தப்பு தப்பு . . . நம்ப மக்கள் எல்லாம் அவங்க புடிச்ச முயலுக்கு மூணு காலுதான் ன்னு நிப்பாங்க . ..

    ReplyDelete
  9. /// நான் என்ன சொல்றேன்..இன்னொரு தடவ ஜெயலலிதாவுக்கு வாய்ப்பு குடுத்தா அந்த அம்மா கலைஞர் க்ரூப்ப ஒளிச்சு கட்றதுக்கு ஒரு வருசத்த வேஸ்ட் பண்ணும்..அடுத்த வருஷம் அரசு கடுமையான நிதி நெருக்கடில இருக்கு.. முந்தைய திமுக ஆட்சிதான் இதுக்கு காரணம்னு சொல்லி இருக்கற நலத்திட்டங்கள் எல்லாத்தையும் புடுங்கிரும்..மூணாவது வருசத்துலேர்ந்து இவ்ளோ நாள் காய்ஞ்சதுக்கும் சேர்த்து சம்பாரிக்க ஆரம்பிச்சிரும்..அதுக்குள்ள அடுத்த வருஷம் வந்துரும் மறுபடியும் பழைய குருடி கதவ தொரடிதான்...! ////

    GOLDEN WORDS ...
    இதெல்லாம் தங்கத்தால பொரிக்க வேண்டிய வார்த்தைகள் . இதுக்கு முன்னாடியே ரெண்டு முறை பார்த்தாச்சு . இருந்தாலும் நம்ப அறிவாளி மக்கள் கேப்பாங்க ன்னு நினைக்குற? , போன முறை dmk க்கு ஓட்டு போட்டோம் , இந்த முறை admk க்கு போடுவோம் அப்படின்னு குத்த போறாங்க பாரு , அம்மா அமோகம ஜெய்க்க போகுது . . . அதுக்கு அப்புறம் அம்மா செய்யுற அட்டூழிங்கள பக்கம் பக்கமா பதிவு போட்டு நம்ப பதிவர்கள் அவங்க பதிவுக்கு ஓட்டு வாங்கி பிரபல பதிவர் ஆகுராங்கள இல்லையா பாரு . . .

    ReplyDelete
  10. ///// ஜெயலலிதா யாரு...? எம்ஜிஆரோட ..சரி அத விடு.., ///

    he he he he . . .
    :)

    ReplyDelete
  11. ///அதனால குஷ்பு வடிவேலு இவங்கலஎல்லாம் லெப்ட்ல விடு..கூத்தாடிங்க சொல்லி நாம் வோட்டு போடற அளவுக்கு நாம இன்னும் முட்டாள் ஆகல..உனக்கு எது கரெக்டுன்னு தோணுதோ அவங்களுக்கு வோட்டு போடு..!///




    மச்சி ஒரு குவாட்டர் சொல்லேன் . . . . ..

    he he he

    ReplyDelete
  12. ///(காங்கிரஸ் நிக்கற தொகுதில ..அவனுகளுக்கு ஓட்டுபோடாதீங்க.. அதைத்தான் பட்டாபட்டியும் எதிர்பார்க்கிறான்.
    அவனோட வாயால.. யாருக்குவேணா போடு..ஆனா காங்கிரஸ்க்கு மட்டும் போடாதேனு சொன்னதால்.. அவருக்கு “ஓ” போட்டு விடை பெறுகிறேன்..
    நன்றி - வெளியூர்க்காரன் ) ///

    right . . .

    i agree

    ReplyDelete
  13. ஆதரவளித்து வரும் அனைத்து அன்பு உடன்பிறப்பு உள்ளங்களுக்கும் நன்றி..!

    அன்பு உடன்பிறப்பு பட்டாபட்டியின் பாசமிகு உள்ளத்துக்கும் அன்புக்கும் என் அன்பு வணக்கங்கள்..!

    வாக்களிப்பீர் உதயசூரியனுக்கே..!:)

    ReplyDelete
  14. சாரி பட்டா. முதல் தடவையா இந்த பிளாக்குக்கு மைனஸ்...

    என்ன இந்தாளு காங்கிரஸ் கூட்டணி வைக்காம இருவதா பார்பதியம்மாள திருப்பி அனுப்பிருக்க மாட்டப்ள. அதுக்கப்புறமும் எதுக்குக் காங்கிரஸ் கூட்டணி? அவய்ங்க என்னமோ பெரிய இதாட்டம் கெஞ்ச விடுறாய்ங்க.
    எவன் வேணா வரட்டும் ஆனா இவய்ங்க மட்டும் வந்துரக் குடாது. அதுக்காகவே இந்த தடவ மெட்ராஸ்ல இருந்து ஊருக்குப் போறேன் ஓட்டுப் போட.பஸ் டிக்கட் போக வர 1500 . ஆனாலும் பரவால்ல. செத்துப் போன பார்வதியம்மாளோட சமாதில நான் ஏத்துற ஒரு தீபமா தி.மு.க. கூட்டனிக்கு எதிரா நான் போடுற ஓட்டு இருக்கட்டும்

    ReplyDelete
  15. நானும் பட்டாபட்டியும் சிங்கப்பூரிலிருந்து ஓட்டை போடுவோம்.

    அது யாருக்குக் கிடைக்குமோ தெரியாது.

    ReplyDelete
  16. ஆதரவளித்து வரும் அனைத்து அன்பு உடன்பிறப்பு உள்ளங்களுக்கும் நன்றி..!

    அன்பு உடன்பிறப்பு பட்டாபட்டியின் பாசமிகு உள்ளத்துக்கும் அன்புக்கும் என் அன்பு வணக்கங்கள்..!

    வாக்களிப்பீர் உதயசூரியனுக்கே..!:)

    ReplyDelete
  17. பன்னிகுட்டி , நீயி எங்கதான் பூட்ட?? ஆளையே காணல? இன்னா ஊர்ல கீரீயா இன்னா ராசா? நம்ம வூட்டாண்ட வர்றதே இல்ல?
    இன்னா ஆச்சி கண்ணு?

    ReplyDelete
  18. தமிழக தேர்தல் கடைசி நேர சர்வே முடிவு விவரம்
    http://athiradenews.blogspot.com/2011/04/blog-post_13.html

    ReplyDelete
  19. இந்த வடைய வெளியூர்க்காரன் கடைல சாப்பிட்ட மாதிரி இருக்குதே!

    பட்டு!சீக்கிரமா மலேசியாவுலருந்து ஓடி வாங்க...கடைல யாரோ பூந்துட்டாங்க.

    ReplyDelete
  20. @All.///

    மீண்டும் அரியணையை நோக்கி முன்னேறுகிறது திமுக...!

    வெற்றி பெருக்கில் உடன்பிறப்புகள்...!

    வாழ்க கலைஞர்...! வளர்க தமிழகம்..!

    ReplyDelete
  21. @@@ராஜ நடராஜன் said... 20
    பட்டு!சீக்கிரமா மலேசியாவுலருந்து ஓடி வாங்க..///


    பட்டாப்பட்டி கூடிய விரைவில் மலேசியாவிலிருந்து திரும்புவார் என ஏஜென்சி தவல்கள் தெரிவிக்கின்றன...!

    பட்டாபட்டியின் ஆதரவு யாருக்கு..! பரபரப்பான கணங்கள்...! கூடிய விரைவில் உங்கள் பட்டாபட்டியில்...!

    ReplyDelete
  22. //தி மு க வ பொறுத்த வரைக்கும் வார்டு கவுன்சில்லர்லேர்ந்து மத்திய மந்திரி வரைக்கும் எல்லாரும் சம்பாரிசிட்டாணுக//

    உண்மை!; ஆனால் அது போதுமென்று அவர்கள் சொன்னார்களா? தயாளு அம்மாளுக்கு 40 கோடி
    சொத்துண்டாம். இது எப்படி வந்தது. இவ்வளவும் ஏன்?
    இவர்களா? திருப்பதி அடையப் போகிறார்கள்.
    அதனால், இனி அதிமுக அடிக்கட்டும்.
    ஆத்தில போற தண்ணியை, அண்ணன் நல்லாக் குடிச்சுட்டான்; இனித் தம்பி குடிக்கட்டும்.
    நாம பாத்துக் கொண்டிருப்போம்.

    ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!