Pages

Thursday, June 24, 2010

அய்யோ..கொல்றாங்களே..

தானத்தலைவர்..ன்மானச்சிங்கம்..மிழர் காவலர்...அய்யா கலைஞருக்கு, காலை வணக்கத்தை போட்டுக்கொள்றதில பெருமைகொள்கிறேன்.    அப்படி இப்படினு, செம்மொழி மாநாட்டை ஆரம்பிச்சு, கோவைய கலக்கு கலக்குனு கலக்கிப்புட்டீங்க.     நேத்து, சன்டீவிய போட்டுக்கிட்டு சோபால,  குத்த வெச்சு உக்காந்தவன்தான், என் ரூம்மேட் செல்போன்ல, மலர்வளையம் ஆர்டர் கொடுத்த சத்ததிலதான நிகழ்காலத்துக்கு வந்தேனா,  பார்த்துக்கோங்களேன்.

என்னோட வாழ்நாள்ல இதுமாறி ஒரு நிகழ்சியை பார்த்ததேயில்லைனு, காரமடை கோயில் உண்டக்கட்டி மேல, சத்தியம் பண்ணுவேன் தல.     அப்பப்பா...என்னா கூட்டம்?..என்னா ஜனம்?. கடலலையும் தோத்துப்போகும்.   

லட்சுமி மில்ல ஆரம்பிச்ச ஊர்வலம், ஊர்ந்து..ஊர்ந்து கொடீசியா போகும்வரை.. ஆகா..பேஸ்..பேஸ்..   வண்டிகளின் அணிவகுப்பு, பாரம்பரிய 
உடைகள், தமிழனின் வீரவிளையாட்டுக்கள், தாரை தப்பட்டை, ஒயிலாட்டம், கரகாட்டம், மயிலாட்டம்..  இந்த ஜென்மத்துக்கு  போதும் போதும்னு சொல்ற அளவுக்கு வாரி வழங்கிட்டீங்க...

ஆமா தல.  இந்த ஊர்வலத்தில ஒரு பெரியவரு சிலை , இடுப்ப வளைச்சிக்கிட்டு சிம்ரன் மாறியே நிக்கவெச்சிருந்தாங்களே. அதுவும், அப்புறம்  பின்னாடி வந்த வண்டில,  ”ஆத்திச்சூடி, அறம் செய்ய விரும்பு”-னு எழுதி, கையில ஆணி வெச்சிக்கிட்டு இருந்த பாட்டியும் கடைசிவரைக்கும்  யாருனு சொல்லாமா விட்டுட்டாங்க இந்த டீவிக்காரனுக.

சரி. கூடவேலை செய்யும் ஒரு பன்னாடை, காலேஸ் வரைக்கும் படிச்சவன். அவனைக்கேட்டா, சந்தேகத்தை நிவர்த்தி செய்வானு நினச்சு  தொடர்புகொண்டா, என்னமோ சிங்கைத்தமிழல ’ங்கொய்யா..ங்கொம்மா’-னு சொல்லீட்டு போனை கட் பண்ணிட்டான்.    மரியாதை தெரியாத பய.  எப்பம்போல மூடிக்கிட்டு கரகாட்டகாரிக ஆட்டத்தை ரசிக்க ஆரம்பிச்சேன். என்னா டான்ஸ்? என்னா டைமிங்?..சான்ஸே இல்ல தல. 
( அடுத்த முறை ஊருக்கு வரும்போது, கட்சி ஆபிஸ்ல இருக்குற கலைஞர் டீவி எடுத்து கொடுக்கப்போறேன்.. எத்தனை கொலை விழுந்தாலும் சரி. )


ஆங்..என்னத்தவோ சொல்லவந்துட்டு, வேற ஏதோ பேசிக்கிட்டு இருக்கேன். கோயமுத்தூர் கட்சிக்காரனுக ஒழுக்கமயிரா  வேலைபாக்கமாட்டீங்கிறானுக.  ஊட்டுக்காரம்மாகள், மகன், மகள் , மருமகன், மருமகள்னு தமிழ வளர்க்க பாடுபட்ட, எல்லோரும் சேர்  போட்டானுகளே..ஆனா கட்சிக்கு புதுவரவான, வாண்டுகளுக்கு சேர் போட்டானுகளா?..பொறந்த குழந்தையினாலும், ஒரு மரியாதை வேண்டாம்?

கட்சிக்காக குடும்பத்தைகூட பார்க்க நேரமில்லாம அலையிறீங்க. ஒரு வேளை அவசரத்தில, சென்னையில உட்டுட்டு வந்திட்டீங்களா?. அப்படீனா  சொல்லுங்க..அடுத்த ப்ளைட்ல அவங்களை கோவைக்கு கூட்டிக்கிட்டு வரோம்..ஸ்டேஸ்ல ஊஞ்சல் கட்டியாவது, இதே ஊர்வலத்தை
இன்னொருமுறை நடத்திக்காட்டுறோம்..  நமக்கு சரித்திரம் முக்கியம் தல.. நாளபின்ன, பையனுக வளர்ந்தபிறகு கேள்வி வரக்கூடாது பாருங்க..  அதுக்காகத்தான்..  பணம் என்ன பெரிய பணம்?..  இந்த 400 கோடிகூட, இன்னொரு 100 கோடி செலவாயிட்டுப்போகுது. ( எல்லாம்  ராசா பார்த்துக்குவாரு..)

பிரதீபா படேல், மன்மோகன்சிங்கை, நம்ம ஏரியாவுக்கு வரவெச்ச பெருமை கழகத்தையே சேரும்..    ஆமா தல..   இந்த சிங் என்னமோ, ’கவர்னர்’-னு,  சின்ராசு சொல்றான்.    தாடி வெச்சு, குல்லா வெச்சிருந்தா, அது மன்மோகன்சிங்னு தெரியாதா எங்களுக்கு?.   என்ன அவ்வளவு மடப்பயலா நாங்க?. ஒருவேளை சின்ராசுக்கு, மாநாட்டப்பார்த்து, பின்னாடி எரியுதுனு நினைக்கிறேன்..

இந்த இனிமையான நேரத்தில, நம்ம நித்தியானந்தாவுக்கு பதில் மரியாதை செலுத்த, கழகம் கடமைப்பட்டுள்ளது..   செம்மொழி மாநாடு நல்லா நடக்க, அவரச்சுற்றி குழி தோண்டி, அதுல தீ வெச்சுக்கிட்டு யாகம் பண்ணினாறாம் நம்ம சாமி...   இதை நான் சொல்லலே..ஊர் சொல்லுது.. 


அவரு மட்டும் யாகம் நடத்தாம இருந்திருந்தால்..யப்பா....நினைச்சு பார்க்கவே பயமாயிருக்கு..என்னவா?   ஒயிலாட்டத்தை பார்த்து, ஒய்யாரசுந்தரி, பழைய நினைப்புல, “கொட்ட பாக்கும், கொழுந்து வெத்தலையும் போட்டா..”-னு, ஸ்டேஸ்ல ஆடியிருந்தா..   அந்தோ...        மாநாடு கதி?.     அதை தடுத்த பெருமை நித்தியவே சாரும்.    மாநாடு முடிஞ்சதும், நித்திக்கு ஏதாவது பண்ணனும் தல..    பயபுள்ள பயந்துபோயிருக்கு...

(கழக சார்பா, அதையும் சொல்லீட்டேன்..இனி மேல தீர்த்தம் , கையிலதாம் கொடுக்கனும்..வாயில கொடுத்தா, சட்டம்..... மீண்டும் பாயுமுனு(?)..   
சரினு சொல்லியிருக்காரு..பார்ப்போம்..)


டிஸ்கி..
தலைப்புக்கும் பதிவுக்கும் சம்பந்தமே இல்லையினு யோசனை பண்றவங்களுக்கு..

தமிழில் முதல் எழுத்து “அ”.. பதிவின் முதல் எழுத்து (?).. ஹி..ஹி..

(துப்பனுமுனு நினைக்கிறவங்க, தயவு செய்து  நண்பர்களான  “ரெமியையும், மார்ட்டீனையும்” துப்புங்க..எல்லாத்துக்க்கும் காரணம் அவனுகதான்..)
.
.
.

140 comments:

  1. இந்த ப்ரோக்ராம் சிங்கப்பூர் வசந்தம் டிவி ல வருமா தல?

    ReplyDelete
  2. தக்காளி என் தங்க தலைவன நோண்டலைனா உங்களுக்கு தூக்கம் வராதே...நான் கெளம்பறேன்...போங்கப்பா...! :)

    ReplyDelete
  3. Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

    இந்த ப்ரோக்ராம் சிங்கப்பூர் வசந்தம் டிவி ல வருமா தல?
    //

    இதப் பார்த்தா டீவீ ப்ரோக்ராம் மாறி தெரியுதா?..அப்ப சா(ச)ரி...

    ReplyDelete
  4. Veliyoorkaran said...

    தக்காளி என் தங்க தலைவன நோண்டலைனா உங்களுக்கு தூக்கம் வராதே...நான் கெளம்பறேன்...போங்கப்பா...! :)
    //

    எங்கையா நோண்டியிருக்கோம்.. சப்போர்ட் பன்ணியிருக்கேன்.. நல்லா பாரு....

    எங்கள் தலைவர் வாழ்க...

    ReplyDelete
  5. மங்குனி அமைச்சர் said...

    உள்ளேன் ஐயா
    //

    வந்ததுக்கு வந்தனம்...

    ReplyDelete
  6. Robin said...

    :)
    //

    போங்க சார்.. எங்கூட ”கா”-வா?
    :-(

    ReplyDelete
  7. அது ஒரு அவங்க குடும்ப விழாதான் நடந்தது ...

    அருமையான பதிவு வாழ்த்துகள்..!

    உங்களுக்கு ஓட்டு போட்டாச்சு..
    தமிளிஷில் என் பதிவும் வந்திருக்கிறது
    http://rkguru.blogspot.com/2010/06/blog-post_23.html

    ReplyDelete
  8. @@@பட்டாபட்டி.. said...
    எங்கையா நோண்டியிருக்கோம்.. சப்போர்ட் பன்ணியிருக்கேன்.. நல்லா பாரு....எங்கள் தலைவர் வாழ்க.///

    நீங்கல்லாம் ரோஜாப்பூல வெடிகுண்டு வெக்கிற கூட்டம்னு எனக்கு தெரியும்டேய்...! உங்க சப்ப்போர்ட தூக்கி மங்குனி தலைல போடு...! :)

    ReplyDelete
  9. ஒரு குடும்ப நிகழ்ச்சிக்கு ஏன் இவ்ளோ செலவு ?

    ReplyDelete
  10. @Veliyoorkaran said...
    நீங்கல்லாம் ரோஜாப்பூல வெடிகுண்டு வெக்கிற கூட்டம்னு எனக்கு தெரியும்டேய்...! உங்க சப்ப்போர்ட தூக்கி மங்குனி தலைல போடு...! :)
    //

    யாரு நாங்க..?..

    நித்தி..வேற வழியில்ல.. அடுத்த யாகத்துக்கு நெய்ய ரெடி பண்ணு..

    ( யோவ்.. குழியோட சுற்றளவ கொஞ்சம் சிறுசு பண்ணிக்க..நெய் சரி வெல விக்குதுப்பு...)

    ReplyDelete
  11. அஹோரி said...

    ஒரு குடும்ப நிகழ்ச்சிக்கு ஏன் இவ்ளோ செலவு ?
    //

    என்ன பாஸ் பெரிய செலவு..அடுத்து 4G வராமல போயிடும்..?

    ReplyDelete
  12. ஓஒ இது தான் செம்மொழி மாநாடா !

    இந்த மாதிரி கூத்தெல்லாம் எங்க ஊரு கோவில் திருவிழாவிலையே பாத்திட்டேன்..

    ReplyDelete
  13. @rk guru said...
    அது ஒரு அவங்க குடும்ப விழாதான் நடந்தது ...
    அருமையான பதிவு வாழ்த்துகள்..!

    உங்களுக்கு ஓட்டு போட்டாச்சு..
    தமிளிஷில் என் பதிவும் வந்திருக்கிறது
    http://rkguru.blogspot.com/2010/06/blog-post_23.html
    //
    =================================


    வணக்கம் பிரதர்..பதிவ பற்றி சொன்னீங்க..ரைட்..

    ஓட்டு பற்றி எதுக்குனு எனக்கு புரியலே?..

    ஆங்..மறந்துட்டேனே..

    எனக்கு தோணிச்சுனா, நாளைக்கே..இந்த ப்ளாக்க இழுத்து மூடிட்டு ..பொழப்ப பார்க்க போயிடுவேன்..இது பட்டாபட்டி ஸ்டைல்...

    முக்கியமா, நான் ஓட்டுக்காக எழுதும் பன்னாடை இல்லை என்பதை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்...

    பிடிச்சா சிரிச்சுட்டு போங்க.. இல்ல துப்பிட்டு போங்க..

    ReplyDelete
  14. வெறும்பய said...

    ஓஒ இது தான் செம்மொழி மாநாடா !

    இந்த மாதிரி கூத்தெல்லாம் எங்க ஊரு கோவில் திருவிழாவிலையே பாத்திட்டேன்..
    //

    இந்த 400 கோடிக்கு , எவ்வளவோ நல்லது பண்ணியிருக்கலாம்..

    ReplyDelete
  15. @All

    மக்கா.. தப்பா நினைச்சுக்காதீங்க..
    என்ன மயிருக்கு ஓட்டுப்பட்டை..கழுத்துல கொட்டை( அதாங்க..Visitor Counts ) வெச்சிருக்கேனு நினைக்கிற பயபுள்ளைகளுக்கு என்னுடைய விளக்கம்...


    சார்..விசிட்டர் யாரும் வரலேனா, இந்த தொழில் நமக்கு சரிப்பட்டு வராதுனு முடிவுபண்ணி, எம்பொழப்ப பார்க்க, நான வெச்சிருக்கும் டைம் பாம் அது..

    ReplyDelete
  16. அப்பன் - CM
    மகன் - Asst.CM
    முதல் மகன் - Central Minister
    மகள் - MP
    பேரன் - Central Minister
    தமிழனுங்க இளிச்சவாயனுங்க, இளிச்சவாயனுங்க கூட்டம் தான் அங்க கெடக்குது

    ReplyDelete
  17. Veliyoorkaran said...
    @@@பட்டாபட்டி.. said...
    எங்கையா நோண்டியிருக்கோம்.. சப்போர்ட் பன்ணியிருக்கேன்.. நல்லா பாரு....எங்கள் தலைவர் வாழ்க.///

    நீங்கல்லாம் ரோஜாப்பூல வெடிகுண்டு வெக்கிற கூட்டம்னு எனக்கு தெரியும்டேய்...! உங்க சப்ப்போர்ட தூக்கி மங்குனி தலைல போடு...! :)
    ///



    என்னா ஆளையே காணும் , அதுவும் எங்க வீட்டுபக்கஎல்லாம் வரவே மாற்ற ?

    ReplyDelete
  18. அட போங்க பட்டா! ஒரே குடும்பத்து ஆண்கள் மேடை மேல பெண்கள் கீழன்னு உக்கார வச்சிருக்காங்க. பெண்ணாதிக்கத்தப் பத்தி பதிவு போடாமா என்னா பதிவர் நீங்க. புடிங்க என் கண்டனம்.:))

    ReplyDelete
  19. யோவ் , பட்டா மாநாட்டு பந்தல்ல ஒரு டீ கடைக்கு பெர்மிசன் கேட்டு , அத உனக்கு குடுகாமா பேரன் பேத்திகளுக்கு குடுத்ததால தான இவ்வளோ கோபம்?????

    ReplyDelete
  20. யோவ்..போதும் விடுய்யா...கோயமுத்தூர்ல தமிழுக்கு தான நடத்துறாய்ங்க...ஜெயா மாமி மாதிரி வளர்ப்பு மகன் கல்யாணமா நடத்துறாய்ங்க...!

    ReplyDelete
  21. இவனுங்களப் பத்தி பேசிப்பேசி போர் அடிக்குதுப்பா!

    ReplyDelete
  22. @சசிகுமார் said...
    அப்பன் - CM
    மகன் - Asst.CM
    முதல் மகன் - Central Minister
    மகள் - MP
    பேரன் - Central Minister
    தமிழனுங்க இளிச்சவாயனுங்க, இளிச்சவாயனுங்க கூட்டம் தான் அங்க கெடக்குது
    //

    இப்ப அது பரவி..இந்தியாவே ப்லோ பண்ண ஆரம்பிச்சுடுச்சே பாஸ்...

    ReplyDelete
  23. @வானம்பாடிகள் said...
    அட போங்க பட்டா! ஒரே குடும்பத்து ஆண்கள் மேடை மேல பெண்கள் கீழன்னு உக்கார வச்சிருக்காங்க. பெண்ணாதிக்கத்தப் பத்தி பதிவு போடாமா என்னா பதிவர் நீங்க. புடிங்க என் கண்டனம்.:))
    //


    அட..இது மேட்டரு..சரி உடுங்க..அடுத்து கட்சி மாநாடு நடக்காமலா போயிடும்?.. அப்ப வெச்சுக்கலாம்..

    ReplyDelete
  24. @மங்குனி அமைச்சர் said...
    யோவ் , பட்டா மாநாட்டு பந்தல்ல ஒரு டீ கடைக்கு பெர்மிசன் கேட்டு , அத உனக்கு குடுகாமா பேரன் பேத்திகளுக்கு குடுத்ததால தான இவ்வளோ கோபம்?????
    //

    அடப்போய்யா..அதுக்கு பெருமாள் கோயில்ல உண்டக்கட்டி வாங்கி பொழச்சிக்குவேன்...

    ReplyDelete
  25. @Rettaival's said...
    யோவ்..போதும் விடுய்யா...கோயமுத்தூர்ல தமிழுக்கு தான நடத்துறாய்ங்க...ஜெயா மாமி மாதிரி வளர்ப்பு மகன் கல்யாணமா நடத்துறாய்ங்க...!
    //

    ஆமா..இந்த தமிழ்..தமிழ்..னு சொல்றாங்களே..தமிழரசியவா?

    ReplyDelete
  26. சி. கருணாகரசு said...

    கலக்கல்!
    //


    வாங்க பாஸ்...

    ReplyDelete
  27. Phantom Mohan said...

    இவனுங்களப் பத்தி பேசிப்பேசி போர் அடிக்குதுப்பா!
    //

    உண்மைதான்.. நமக்கே வெக்கமாயிருக்கு..

    ஆனா..இவிங்க இரும்பு மனிதர்கள்தாம்பா....

    ReplyDelete
  28. ஆமா ஆன்றோர்கள், சான்றோர்கள் தமிழ் அறிஞர்கள்னு சொல்றாங்களே அவங்கள்லாம் அந்த கூட்டத்துல எங்கண இருக்காங்க..???

    ReplyDelete
  29. க.பாலாசி said...

    ஆமா ஆன்றோர்கள், சான்றோர்கள் தமிழ் அறிஞர்கள்னு சொல்றாங்களே அவங்கள்லாம் அந்த கூட்டத்துல எங்கண இருக்காங்க..???

    ////////////////////////////////

    நல்லாப் பாருங்க பாஸ். தேங்கா, மாங்கா,பட்டாணி, சுண்டல், ஜிகர்தண்ட விக்கிறவங்க எல்லாம் அவங்க தான்!

    ReplyDelete
  30. இத்தாலி பார்ட்டி வரலையா? என்னக் கொடுமை சார் இது!

    ReplyDelete
  31. apadialam ungala kadaiya muda vituruvama?

    ReplyDelete
  32. இங்க மேட்ராசே காத்தடிச்சு கெடக்குன்னு சந்தோசமா டாஸ்மாக்குல ஜில்லுன்னு பீர உட்டுட்டு முட்ட பொறியல கொரிசிட்டு சந்தோசமா இருக்குறது புடிக்கலையா.. தலைவாஆஆஅ ... நீ ஏன் மானாட்ட ஒரு வாரத்துக்கு நடத்தக் கூடாது.. அப்புறம் கரண்டு கட்டாகால.. வூட்டுல ஏசி மக்கர் பண்ணாம ஓடுது ..

    வால்க தமில் .. வலர்க செம்மொலி.... ஹி .. ஹி ..

    ReplyDelete
  33. பட்டா செம்மொலி மாநாட்டுக்கு கூப்பிடாத கோவமா..

    ReplyDelete
  34. //ஆமா ஆன்றோர்கள், சான்றோர்கள் தமிழ் அறிஞர்கள்னு சொல்றாங்களே அவங்கள்லாம் அந்த கூட்டத்துல எங்கண இருக்காங்க..???//

    தப்பு,தப்பு,தப்பு.அது ஆண்டோர்கள்,சுரண்டோர்கள்...பிரிண்டிங் மிஸ்டேக்.

    அப்புறம்,மறுக்கா மறுக்கா சொல்றேன்.
    தானே விழா எடுக்கும் தானைத் தலைவன்! வாழ்க! வாழ்க!

    ReplyDelete
  35. @Phantom Mohan said...
    இத்தாலி பார்ட்டி வரலையா? என்னக் கொடுமை சார் இது!
    //


    பதிலாத்தான் சிங் வந்திருந்தாரே?..

    ReplyDelete
  36. @Mythili said...
    apadialam ungala kadaiya muda vituruvama?
    //

    எனக்கே தெரியல மேடம்.. நடப்பது நடக்கட்டும்...

    ReplyDelete
  37. @கே.ஆர்.பி.செந்தில் said...
    இங்க மேட்ராசே காத்தடிச்சு கெடக்குன்னு சந்தோசமா டாஸ்மாக்குல ஜில்லுன்னு பீர உட்டுட்டு முட்ட பொறியல கொரிசிட்டு சந்தோசமா இருக்குறது புடிக்கலையா.. தலைவாஆஆஅ ... நீ ஏன் மானாட்ட ஒரு வாரத்துக்கு நடத்தக் கூடாது.. அப்புறம் கரண்டு கட்டாகால.. வூட்டுல ஏசி மக்கர் பண்ணாம ஓடுது ..
    வால்க தமில் .. வலர்க செம்மொலி.... ஹி .. ஹி ..
    //

    இது நூசு...
    இருங்க ஆற்காட்டாருக்கு போன் பண்றேண்..( போறப்ப சென்னையில..கரண்ட் கட் பண்ண மறந்துட்டாரு போல...)

    ReplyDelete
  38. @ஜெய்லானி said...
    பட்டா செம்மொலி மாநாட்டுக்கு கூப்பிடாத கோவமா..
    //

    எதுக்கு குஷ்புக்கு குடை பிடிக்கவா பாஸ்?

    ReplyDelete
  39. ILLUMINATI said...
    அப்புறம்,மறுக்கா மறுக்கா சொல்றேன்.
    தானே விழா எடுக்கும் தானைத் தலைவன்! வாழ்க! வாழ்க!
    //

    ஏம்பா..10 வருஷம் ஆன பழைய காரை சிட்டிக்குள்ள ஓட்டக்கூடாதாமா?..
    தெரியுமா?- ( கார்பனை ரொம்ப கக்குமாம்..)

    ஆங்.. உன்னோட கமென்ஸ்க்கு பதில் சொல்லமுடியாத பாவி ஆயிட்டேன்யா நானு..

    ReplyDelete
  40. //இது நூசு...
    இருங்க ஆற்காட்டாருக்கு போன் பண்றேண்..( போறப்ப சென்னையில..கரண்ட் கட் பண்ண மறந்துட்டாரு போல...)//

    நேரடி ஒலிபரப்பு பாதிக்க கூடாது இல்லீங்களா அதுக்குதான் - ஆற்காட்டார் ...

    ReplyDelete
  41. கே.ஆர்.பி.செந்தில் said...

    //இது நூசு...
    இருங்க ஆற்காட்டாருக்கு போன் பண்றேண்..( போறப்ப சென்னையில..கரண்ட் கட் பண்ண மறந்துட்டாரு போல...)//

    நேரடி ஒலிபரப்பு பாதிக்க கூடாது இல்லீங்களா அதுக்குதான் - ஆற்காட்டார் ...
    //

    பார்த்தீங்களா.. இதுக்குத்தான் படிச்சிருக்கனுமுனு பெரியவங்க சொல்லுவாங்க.. எனக்கு இந்த ரோசனை தோணவேயில்ல..ஹி..ஹி

    ReplyDelete
  42. //ஆங்.. உன்னோட கமென்ஸ்க்கு பதில் சொல்லமுடியாத பாவி ஆயிட்டேன்யா நானு..//

    அட,நீரு ஏன் ஒய் பதில் சொல்லணும்?என்னய மாதிரி வாழ்க சொல்லிட்டு போரும். :)

    ReplyDelete
  43. @ILLUMINATI said...
    This post has been removed by the author.
    //

    ரொம்ப டேங்ஸ்..கெட்ட வார்த்தையில திட்டுனியா?...

    யோவ்..சும்மா சொல்லு..

    ப்ளாக் எழுத வரும்போது..இந்த வெக்கம் மானம்.ரோசம் எல்லாத்தையும் கக்கூஸ்ல விட்டு.. தண்ணி ஊத்தியாச்சு...

    ReplyDelete
  44. கனிமொழியின் மகனையும் , கருணாநிதியின் குடும்பத்தைச் சார்ந்த மற்ற குஞ்சு குளுவான்களையும், டிவியில் காட்டியும், பதிவில் அவர்களது போட்டோவை வெளியிடாத பட்டாவை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

    ReplyDelete
  45. எனக்கு தோணிச்சுனா, நாளைக்கே..இந்த ப்ளாக்க இழுத்து மூடிட்டு ..பொழப்ப பார்க்க போயிடுவேன்..இது பட்டாபட்டி ஸ்டைல்...

    முக்கியமா, நான் ஓட்டுக்காக எழுதும் பன்னாடை இல்லை என்பதை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்...
    ////////////////////////

    நெசமாத்தான் சொல்றியா?

    "கற்றது தமிழ்"

    ReplyDelete
  46. Blogger கும்மி said...

    கனிமொழியின் மகனையும் , கருணாநிதியின் குடும்பத்தைச் சார்ந்த மற்ற குஞ்சு குளுவான்களையும், டிவியில் காட்டியும், பதிவில் அவர்களது போட்டோவை வெளியிடாத பட்டாவை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
    //

    இது என்னுடைய தவறு இல்ல பாஸ்..
    அந்த கூட்டத்தில, யாரு கண்மணி..யாரு கட்சிக்காரங்கனு கண்டுபிடிக்கமுடியாது..

    (இனிமேல் குஞ்சு குளுவான்களுக்கு, மஞ்ச சட்டைய தெச்சு மாட்டிக்க சொல்லலாம்..ஈஸியா இருக்கும்..ஹீ.ஹி)

    ReplyDelete
  47. http://thatstamil.oneindia.in/news/2010/06/24/azhagiri-mamta-banerjee-cabinet-ministers-meeting.html

    இந்தக் காமெடியப் பாருய்யா...ஹி ஹி ஹி சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது...

    மறுபடியும் என்ன பதிவு எழுத வச்சிருவானுங்க போல!

    ReplyDelete
  48. Phantom Mohan said...

    எனக்கு தோணிச்சுனா, நாளைக்கே..இந்த ப்ளாக்க இழுத்து மூடிட்டு ..பொழப்ப பார்க்க போயிடுவேன்..இது பட்டாபட்டி ஸ்டைல்...

    முக்கியமா, நான் ஓட்டுக்காக எழுதும் பன்னாடை இல்லை என்பதை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்...
    ////////////////////////

    நெசமாத்தான் சொல்றியா?
    //

    ஆமாய்யா..Hit rate, வெச்சு முதுகு கூட சொறிஞ்சமுடியாதுனு தெரியாத அடிமுட்டாளா நானு?...

    ReplyDelete
  49. //யாரு கண்மணி..யாரு கட்சிக்காரங்கனு கண்டுபிடிக்கமுடியாது//

    அதுக்குதான் கலைஞர் டிவி பாக்கணும்; குடும்ப உறுப்பினர்களை முழுமையா கவர் செஞ்சாங்க

    ReplyDelete
  50. ஆமாய்யா..Hit rate, வெச்சு முதுகு கூட சொறிஞ்சமுடியாதுனு தெரியாத அடிமுட்டாளா நானு?...
    //////////////////////////////

    என்னய்யா நீ சூடு, சொரணை உள்ளவனா இருப்ப போலியே? இங்க அப்டியெல்லாம் இருக்கக் கூடாது.

    அப்புறம் எப்போ நீ "XXXXXXXXXXXX லட்சம் ஹிட்ஸ் குடுத்த உங்களுக்கு கோடானு கோடி நன்றின்னு" இளிச்சிக்கிட்டே போஸ் குடுக்கிறது! அந்தக் கண் கொள்ளாக் காட்சிய நான் எப்போ பாக்கிறது!

    ReplyDelete
  51. தமிழகத்தில் யாரும் சோத்துல உப்பு போட்டு சாப்பிடக்கூடாதுன்னு சட்டம் வரப்போகுதாம் தல!

    ReplyDelete
  52. //தமிழகத்தில் யாரும் சோத்துல உப்பு போட்டு சாப்பிடக்கூடாதுன்னு சட்டம் வரப்போகுதாம் தல! //

    நான் இப்பவே அப்படிதான் சாப்புடுறேன்

    ReplyDelete
  53. வால்பையன் said...

    தமிழகத்தில் யாரும் சோத்துல உப்பு போட்டு சாப்பிடக்கூடாதுன்னு சட்டம் வரப்போகுதாம் தல!

    ////////////////////////////

    எவன் இங்க சோறு தின்கிறான்? சோறு தின்னாத்தான அதுல உப்பு போடக்கூடாது.

    ReplyDelete
  54. சோத்துக்கு பதிலா வேற ஒன்னு திங்க ஆரம்பிச்சு ரொம்ப நாள் ஆச்சு. உதா"ரணம்" நெறையா இருக்கு!

    ReplyDelete
  55. அட.. இனிமேல யாருமே சோறு திங்ககூடாது சட்டம் வந்தாலும் வரும் பாஸ்...

    ( எல்லாரும் இப்பவே பீஸ்ஸா தின்னு பழகிக்கனும்...)
    ////////////////////////////////

    மொட்டையா சொன்னா எப்பிடி? அத மட்டும் Bold ல காட்டு, அப்பத்தான நம்ம "பீற்ப்போக்கு" கருத்து மக்களுக்கு புரியும்.

    ReplyDelete
  56. @வால்பையன் said...
    தமிழகத்தில் யாரும் சோத்துல உப்பு போட்டு சாப்பிடக்கூடாதுன்னு சட்டம் வரப்போகுதாம் தல!


    @கும்மி said...
    நான் இப்பவே அப்படிதான் சாப்புடுறேன்


    @Phantom Mohan said...

    //


    அட.. இனிமேல யாருமே சோறு திங்ககூடாது சட்டம் வந்தாலும் வரும் பாஸ்...

    ( எல்லாரும் இப்பவே "இத்தாலியன் பீஸ்ஸா" தின்னு பழகிக்கனும்...)

    ReplyDelete
  57. கும்மி said...

    //யாரு கண்மணி..யாரு கட்சிக்காரங்கனு கண்டுபிடிக்கமுடியாது//

    அதுக்குதான் கலைஞர் டிவி பாக்கணும்; குடும்ப உறுப்பினர்களை முழுமையா கவர் செஞ்சாங்க
    //

    இங்கதான் சன், விஜய் தவிர ஒண்ணுமே வராதே பாஸ்...

    ReplyDelete
  58. //இங்கதான் சன், விஜய் தவிர ஒண்ணுமே வராதே பாஸ்... //

    நல்லவேளை, கலைஞர் டிவி பாத்திருந்தா நீங்க இன்னும் கடுப்பாகி இருப்பீங்க.

    ReplyDelete
  59. @கும்மி said...
    நல்லவேளை, கலைஞர் டிவி பாத்திருந்தா நீங்க இன்னும் கடுப்பாகி இருப்பீங்க.
    //

    சன் டீவிக்கே..
    நாங்க டாய்லெட் போறது, கக்கூஸ்லயா ..இல்ல பெட்ரூம்லயானு கன்பூஸ் பண்ணிக்கிட்டு இருக்கோம் பாஸ்..

    இதுல கலைஞ்ர் வந்தா?.. ஆகா..

    ReplyDelete
  60. கண்கள் பணித்தது
    இதயம் இனித்தது...

    ReplyDelete
  61. @ அஹமது இர்ஷாத் said...
    கண்கள் பணித்தது
    இதயம் இனித்தது...
    //


    ஆமா சார்.. அதுக்கு செலவு 400 கோடி ஆயிடுச்சு..ஹி..ஹி

    ReplyDelete
  62. ஆமா சார்.. அதுக்கு செலவு 400 கோடி ஆயிடுச்சு..ஹி..ஹி///



    யோவ் அதுக்குத்தான் நாங்க 'டெக்ட்ராம்' ஒப்பந்தம் வச்சிருக்கோமே...

    ReplyDelete
  63. @ அஹமது இர்ஷாத் said...

    யோவ் அதுக்குத்தான் நாங்க 'டெக்ட்ராம்' ஒப்பந்தம் வச்சிருக்கோமே...
    //

    அப்ப சார்.. அதுக்குதான் பெரியவங்க சொல்லியிருக்கா..”முயற்சி திருவினையாகுமு”-னு
    ஹா.ஹா

    ReplyDelete
  64. அஹோரி said...
    ///என்ன பாஸ் பெரிய செலவு..அடுத்து 4G வராமல போயிடும்..?///
    ஏனுங்க இந்த ரெண்டு மூணு ஜி ள வந்ததெல்லாம் இவ்வளவு சீக்கிரமா முடிஞ்சு போச்சா. அடப்பாவமே இதுக்குத்தான் குடும்ப கட்டுப்பாடு ரொம்ப அவசியம்னு கவுர்மெண்டு சொல்லுதுங்களா?
    சசிகுமார் said...
    ///முதல் மகன் - Central Minister///
    வரலாற்றுப் பாடத்தில் பிட் அடிச்சுதான தேருனீங்க உண்மைய சொல்லுங்க.




    ///தப்பு,தப்பு,தப்பு.அது ஆண்டோர்கள்,சுரண்டோர்கள்...பிரிண்டிங் மிஸ்டேக்.
    அப்புறம்,மறுக்கா மறுக்கா சொல்றேன்.
    தானே விழா எடுக்கும் தானைத் தலைவன்! வாழ்க! வாழ்க!///

    எவ்வளவுதான்யா மனுஷன் சிரிக்கறது.

    /// எதுக்கு குஷ்புக்கு குடை பிடிக்கவா பாஸ்? ///
    ஆசை தோசை அப்பளம் வடை. பத்திரிகை வச்சா ஒடனே இந்தப் போஸ்டடேல்லாம் கேட்டா எப்புடி.

    ReplyDelete
  65. பட்டா, வாய்யா வா, 2 நாளா யாருகிட்ட சந்தேகத்த கேக்குறதுனு தெரியாம இருந்தே, என்னோட 31/2 வயசு புள்ளய, இப்பதான் பணம் கட்டி( ங்கொய்யாலே எவ்வளவுனு கேக்காதே அப்புரம் சிங்க வெள்ளில கணக்கு போட்டாலும் உனக்கு தல சுத்தும்) சேர்த்துவிட்டேன் அதுக்குள்ள புதன்ல இருந்து லீவு, திங்கள் தான் ஸ்கூல்னாங்க, என்னனு கேட்டா செம்மொழி மானாடுன்றாங்க, தக்காளி LKG படிக்கிற பொன்னு என்னயா பன்னபோகுது, சரி லீவுதான் உட்டாங்க ஊர்வலத்த லைவ்லயாவது காட்டலாம்ன, எம்ப்ள்ள் இது நல்லாலப்பா, pogo chaanel போடுப்பானுது, அனக்கு ஒன்னியும் பிரியல தல, என் சந்தேகத்த நீயவது தீர்த்துவை.(ங்கொய்யாலே சீரியஸா கேக்குறேன் எதவது காமடி பன்னே, சிங்கைல வந்து பொழிபோட்ருவேன் ஆமா சொல்லிட்டேன்)

    ReplyDelete
  66. சாகும்போதும் தமிழ் படித்து சாக வேண்டும்னு ஒருத்தர் சொன்னாராம். ஓய் யாரப்பது யாருன்னு கேக்கறது இதுக்குத்தான் படிக்கிற காலத்துல ஒழுங்கா படிக்கனும்கிறது.(எனக்கு நானே சொல்லிகிட்டது.) அதத்தான அவரும் செய்யறாரு.
    ஒரு டவுட்டு
    என் பட்டாபட்டி நாடாவை பின்பற்றுவோர்.. ஆமா பட்டாபட்டி நாடா முன்னாடியில்ல இருக்கும் அதெப்படி பின்பற்றுவோர். ஒருவேளை அதுல பின்னும் போட்டு வச்சிருக்கீரோ.. ஒரு சேப்டிக்குத்தான்

    ReplyDelete
  67. Jey said...

    பட்டா, வாய்யா வா, 2 நாளா யாருகிட்ட சந்தேகத்த கேக்குறதுனு தெரியாம இருந்தே, என்னோட 31/2 வயசு புள்ளய, இப்பதான் பணம் கட்டி( ங்கொய்யாலே எவ்வளவுனு கேக்காதே அப்புரம் சிங்க வெள்ளில கணக்கு போட்டாலும் உனக்கு தல சுத்தும்) சேர்த்துவிட்டேன் அதுக்குள்ள புதன்ல இருந்து லீவு, திங்கள் தான் ஸ்கூல்னாங்க, என்னனு கேட்டா செம்மொழி மானாடுன்றாங்க, தக்காளி LKG படிக்கிற பொன்னு என்னயா பன்னபோகுது, சரி லீவுதான் உட்டாங்க ஊர்வலத்த லைவ்லயாவது காட்டலாம்ன, எம்ப்ள்ள் இது நல்லாலப்பா, pogo chaanel போடுப்பானுது, அனக்கு ஒன்னியும் பிரியல தல, என் சந்தேகத்த நீயவது தீர்த்துவை.(ங்கொய்யாலே சீரியஸா கேக்குறேன் எதவது காமடி பன்னே, சிங்கைல வந்து பொழிபோட்ருவேன் ஆமா சொல்லிட்டேன்)

    //

    நீர் லீவு போட்டுட்டு, குழந்தைகளை வெளிய கூட்டிட்டு போகனும் சார்...
    அதுக்குத்தான் லீவு..ஹி..ஹி
    ஊர்வலத்த காட்ட என்ன அது “குஷ்புவோட டான்ஸ்சா?..”..குழந்தைகளை..குழந்தையா விடுங்க பாஸ்..

    ஆமா..செம்மொழி மாநாடு உமக்குனு யார் சொன்னது?..

    ReplyDelete
  68. அண்ணே செம்மொழி அரங்கத்தில முரசொலிமாறன் அரங்கம் ஒன்னு இருக்காமா அவரு தமிழக்கு என்ன செய்தாருங்ண்ணே

    ReplyDelete
  69. @அரைகிறுக்கன் said...
    சாகும்போதும் தமிழ் படித்து சாக வேண்டும்னு ஒருத்தர் சொன்னாராம். ஓய் யாரப்பது யாருன்னு கேக்கறது இதுக்குத்தான் படிக்கிற காலத்துல ஒழுங்கா படிக்கனும்கிறது.(எனக்கு நானே சொல்லிகிட்டது.) அதத்தான அவரும் செய்யறாரு.
    ஒரு டவுட்டு
    என் பட்டாபட்டி நாடாவை பின்பற்றுவோர்.. ஆமா பட்டாபட்டி நாடா முன்னாடியில்ல இருக்கும் அதெப்படி பின்பற்றுவோர். ஒருவேளை அதுல பின்னும் போட்டு வச்சிருக்கீரோ.. ஒரு சேப்டிக்குத்தான்
    //

    ஆகா.. இலக்கணப்பிழைய கண்டுபிடிச்சுட்டாரே..
    மிஸ்டர் நித்தி.. தொடங்கு உன் யாகத்தை...ஹி..ஹி

    ReplyDelete
  70. @கக்கு - மாணிக்கம் said...
    வழக்கம் போல நான்தா கடைசியா?
    // (கழக சார்பா, அதையும் சொல்லீட்டேன்..இனி மேல தீர்த்தம் , கையிலதாம் கொடுக்கனும்..வாயில கொடுத்தா, சட்டம்..... மீண்டும் பாயுமுனு(?)..
    சரினு சொல்லியிருக்காரு..பார்ப்போம்..)//
    பட்டா அண்ணா ...எதுக்கு இந்த சிரமம் எல்லாம். அது அத அந்த வழியிலே விட்டுடலாமே !
    //

    ஆமா பாஸ்.. இயற்கைய மாற்றக்கூடாதுனு சொல்றீங்க..ஹி..ஹி

    ReplyDelete
  71. சிவா (கல்பாவி) said...

    அண்ணே செம்மொழி அரங்கத்தில முரசொலிமாறன் அரங்கம் ஒன்னு இருக்காமா அவரு தமிழக்கு என்ன செய்தாருங்ண்ணே
    //

    மாறனை(களே)யே கொடுத்திருக்காரு.. எம்மாம் பெரிய கொடை...

    ReplyDelete
  72. To Jey

    அதே பிரச்சனை தான் எனக்கும். என் சகோதரி குழந்தைகள் நான் வருவதையொட்டி லீவ் போட்டிருந்தாங்க, ஏகப்பட்ட பிளான் போட்டு நெறைய செலவு பண்ணிருந்தேன். இப்போ எல்லாம் கேன்சல், காரணம் மாநாட்டுக்கு அஞ்சு நாள் லீவ் விட்டதுக்கு கோம்பென்சட் பண்ண 5 சனிக்கிழமை ஸ்கூல் உண்டாம். அவங்க லீவையும் கேன்சல் பண்ணிட்டாங்க.

    கடுப்பா இருக்கு, பாவம் அந்த குழந்தைகள் தான் ரொம்ப ஏமாந்து போய்ட்டாங்க! எல்லாத்துக்கும் காரணம் .....

    ReplyDelete
  73. சிவா (கல்பாவி) said...

    அண்ணே செம்மொழி அரங்கத்தில முரசொலிமாறன் அரங்கம் ஒன்னு இருக்காமா அவரு தமிழக்கு என்ன செய்தாருங்ண்ணே
    ///////////////////////////////////////////////

    தமிழர்களுக்கு "நெறையா நல்லது" செஞ்சிருக்காரு.

    ReplyDelete
  74. //நீர் லீவு போட்டுட்டு, குழந்தைகளை வெளிய கூட்டிட்டு போகனும் சார்...
    அதுக்குத்தான் லீவு..ஹி..ஹி//

    தக்காளி எல்லோரும் தெளிவாத்தான் இருக்கனுகளா, அப்பா நாந்தான் அவுட்டா?..

    //ஊர்வலத்த காட்ட என்ன அது “குஷ்புவோட டான்ஸ்சா?..”..குழந்தைகளை..குழந்தையா விடுங்க பாஸ்..//

    குஸ்ஸூபு டிவில வந்த எம்பொன்னு அப்பா பூச்சாண்டினு வீட்டவிட்டு வெளில ஒடுராளெ பட்டா, பெரகு எப்படி அவுக டான்ஸ காட்றது?.


    //ஆமா..செம்மொழி மாநாடு உமக்குனு யார் சொன்னது?.//

    எளவு பெரகு யாருக்குயா தக்காளி என் வரிப்பணத்த செலவழிச்சி நடத்துரானுங்க( தலைவி,மனைவி, துனவி, அவுங்க மகனுக, மகளுக, பேரனுக, பேதிக, கொல்லு, எள்ளு பெரனுக, பேதிகனு நம்ம பணத்துல ஏன்யா கும்மியடிக்கிறானுக.
    இவய்ங்க நம்ம பாட்டன்/ முப்பாட்டனுக்கு பிறந்தனுகளா இல்ல நமக்குதான் பொறந்தானுகளா( மக்களே சாரி, கோவத்துல சில வார்த்தக செதறிரிச்சி)

    ReplyDelete
  75. http://naanummanithan.blogspot.com/2010/06/48.html

    ReplyDelete
  76. தானே உக்கார்ந்த தானைத்தலைவன் வாழ்க! உதயநிதி வாழ்க, துரைதயாநிதி வாழ்க!

    ReplyDelete
  77. ///Phantom Mohan said...
    To Jey

    அதே பிரச்சனை தான் எனக்கும். என் சகோதரி குழந்தைகள் நான் வருவதையொட்டி லீவ் போட்டிருந்தாங்க, ஏகப்பட்ட பிளான் போட்டு நெறைய செலவு பண்ணிருந்தேன். இப்போ எல்லாம் கேன்சல், காரணம் மாநாட்டுக்கு அஞ்சு நாள் லீவ் விட்டதுக்கு கோம்பென்சட் பண்ண 5 சனிக்கிழமை ஸ்கூல் உண்டாம். அவங்க லீவையும் கேன்சல் பண்ணிட்டாங்க.

    கடுப்பா இருக்கு, பாவம் அந்த குழந்தைகள் தான் ரொம்ப ஏமாந்து போய்ட்டாங்க! எல்லாத்துக்கும் காரணம் .....///



    இதுக்குத்தான் எதையும் ப்ளான் பண்ணிப் பண்ணக்கூடாது!

    நீ ப்ளான் பண்ண முன்னாடி தலைவர்கிட்ட ஒருவார்த்த கேட்டிருக்கனும், அதவிட்டுட்டு எங்க யானைத்தலைவனையே..தூ..சே...தானைத்தலைவனையே போட்டு கிண்டுங்க! சே இந்த செம்மொழி மாநாட்டுக்கு எத்தனை எதிரிகள்? தலைவா நீ மனம் தளராதே? நீ பாட்டுக்கு மாநாட மயிலாடவுக்கு ஆள் செலக்ட் பண்ணு, இவிங்கள நாங்க பாத்துக்கறோம்!

    ReplyDelete
  78. தலிவர் பட்டா அவர்லளுக்கு, ஒரு சின்ன சந்தேகம், இந்த வெளியூருக்காரரு, உங்க பக்கத்துவூட்டுகாரருனு காத்துவாக்குல நியூஸ் வன்ருதே அது உண்மைங்களா?!!!!!( ஒரே வூட்ல இருக்குரதாகவும் பேச்சி)

    ReplyDelete
  79. //இந்த ஊர்வலத்தில ஒரு பெரியவரு சிலை , இடுப்ப வளைச்சிக்கிட்டு சிம்ரன் மாறியே நிக்கவெச்சிருந்தாங்களே//

    paavan 2000 varusama ukkanthu iruthavara ippadi nikka vachu kollurangaa :-)

    ReplyDelete
  80. பன்னிக்குட்டி ராம்சாமி said...

    தானே உக்கார்ந்த தானைத்தலைவன் வாழ்க! உதயநிதி வாழ்க, துரைதயாநிதி வாழ்க!///////

    எங்க உட்கார்ந்த பா.ரா.

    ReplyDelete
  81. Jey said...

    எளவு பெரகு யாருக்குயா தக்காளி என் வரிப்பணத்த செலவழிச்சி நடத்துரானுங்க( தலைவி,மனைவி, துனவி, அவுங்க மகனுக, மகளுக, பேரனுக, பேதிக, கொல்லு, எள்ளு பெரனுக, பேதிகனு நம்ம பணத்துல ஏன்யா கும்மியடிக்கிறானுக.
    இவய்ங்க நம்ம பாட்டன்/ முப்பாட்டனுக்கு பிறந்தனுகளா இல்ல நமக்குதான் பொறந்தானுகளா( மக்களே சாரி, கோவத்துல சில வார்த்தக செதறிரிச்சி)/////////////


    நீயும் டெர்ரா தான் இருக்கே!

    ReplyDelete
  82. தல.. உங்க லொள்ளுசபா நாளுக்கு நாள் வளர்பிறையாய் போகாம.. ஜெட் வேகத்தில் போகுது..! ம்ம்..
    பதிவு வழக்கம்போல் செமநக்கல்+காமெடி தொடர்ந்து அசத்துங்க.. பாஸ்..!

    ReplyDelete
  83. //கண்கள் பணித்தது
    இதயம் இனித்தது...//

    ஆமா,அப்புடியே போது மக்கள் பர்ஸ் இளைத்தது.

    ReplyDelete
  84. தமிழில் முதல் எழுத்து “அ”.. பதிவின் முதல் எழுத்து (?)

    நித்தியானந்தாவை நினைவு படித்தி என்ன டென்ஷன் பண்ணிடீங்க ..

    ReplyDelete
  85. ஒருத்தரு இன்விடேஷன் கொடுத்தாருன்னு நாம்போயி சிக்கி தப்பிச்சு ஊடு வர்ரதுக்குள்ள பொறந்த நாளு கண்டு போச்சு தம்பி. கோயமுத்தூர நாற அடிச்சுட்டாங்க பாவிங்க.

    ReplyDelete
  86. @Jey said...
    எளவு பெரகு யாருக்குயா தக்காளி என் வரிப்பணத்த செலவழிச்சி நடத்துரானுங்க( தலைவி,மனைவி, துனவி, அவுங்க மகனுக, மகளுக, பேரனுக, பேதிக, கொல்லு, எள்ளு பெரனுக, பேதிகனு நம்ம பணத்துல ஏன்யா கும்மியடிக்கிறானுக.
    இவய்ங்க நம்ம பாட்டன்/ முப்பாட்டனுக்கு பிறந்தனுகளா இல்ல நமக்குதான் பொறந்தானுகளா( மக்களே சாரி, கோவத்துல சில வார்த்தக செதறிரிச்சி)

    //

    பேசு ராசா..பேசு.. வரி கட்டின நாம பேசாம, இத்தாலிக்காரனுகளா பேசுவாங்க..

    ReplyDelete
  87. ராம்ஜி_யாஹூ said...
    http://naanummanithan.blogspot.com/2010/06/48.html
    //

    பார்த்தேன் பாஸ்..மக்கள் அறியாமையை எப்படி யூஸ் பண்ணிக்கிறானுக?

    ReplyDelete
  88. @பன்னிக்குட்டி ராம்சாமி said...
    தானே உக்கார்ந்த தானைத்தலைவன் வாழ்க! உதயநிதி வாழ்க, துரைதயாநிதி வாழ்க!
    //

    இதுக்கு என்ன பதில் சொல்வதென தெரியவில்லை பாஸ்..

    ReplyDelete
  89. @Jey said...
    தலிவர் பட்டா அவர்லளுக்கு, ஒரு சின்ன சந்தேகம், இந்த வெளியூருக்காரரு, உங்க பக்கத்துவூட்டுகாரருனு காத்துவாக்குல நியூஸ் வன்ருதே அது உண்மைங்களா?!!!!!( ஒரே வூட்ல இருக்குரதாகவும் பேச்சி)
    //


    யாரு பன்னிப்பய கிளப்பிவிட்டுருக்கானா?..அதுக்கு எல்லாமே டமாசு..

    ReplyDelete
  90. @Kumar said...
    //இந்த ஊர்வலத்தில ஒரு பெரியவரு சிலை , இடுப்ப வளைச்சிக்கிட்டு சிம்ரன் மாறியே நிக்கவெச்சிருந்தாங்களே//
    paavan 2000 varusama ukkanthu iruthavara ippadi nikka vachu kollurangaa :-)
    //

    அதனாலத்தான் நிக்கவெச்சுட்டாங்க போல.!!

    ReplyDelete
  91. @பிரவின்குமார் said...
    தல.. உங்க லொள்ளுசபா நாளுக்கு நாள் வளர்பிறையாய் போகாம.. ஜெட் வேகத்தில் போகுது..! ம்ம்..
    பதிவு வழக்கம்போல் செமநக்கல்+காமெடி தொடர்ந்து அசத்துங்க.. பாஸ்..!
    //

    டாங்ஸ் வாத்யாரே!!!..

    ReplyDelete
  92. @ILLUMINATI said...
    //கண்கள் பணித்தது
    இதயம் இனித்தது...//
    ஆமா,அப்புடியே போது மக்கள் பர்ஸ் இளைத்தது.
    //

    எதுக்கு பர்ஸ்..தூக்கிப்போட்டுட்டு கூலி வேலைக்கு போகலாமே?..
    அப்படியாவது நாடு முன்னேறட்டும்..ஹி..ஹி

    ReplyDelete
  93. @ManA said...
    தமிழில் முதல் எழுத்து “அ”.. பதிவின் முதல் எழுத்து (?)
    நித்தியானந்தாவை நினைவு படித்தி என்ன டென்ஷன் பண்ணிடீங்க ..
    //

    அவன் போடும் சீன்களை பார்த்தால் திரும்பி அடுத்த ரவுண்ட் ஆட வருவான் போலிருக்கு..
    ஜனத்தொகைக்கு பஞ்சமா பாஸ்?..
    அடுத்த குரூப் மக்கள் சீக்கிரம், கிடைக்காமலா போயிடுவாங்க?.

    ReplyDelete
  94. @DrPKandaswamyPhD said...
    ஒருத்தரு இன்விடேஷன் கொடுத்தாருன்னு நாம்போயி சிக்கி தப்பிச்சு ஊடு வர்ரதுக்குள்ள பொறந்த நாளு கண்டு போச்சு தம்பி. கோயமுத்தூர நாற அடிச்சுட்டாங்க பாவிங்க.
    //

    அவநாசி ரோடு..இன்னுமா இருக்கு சார்?...

    ReplyDelete
  95. சார் அப்துல் கலாம் ஐயா கலந்துக்கிறாத..அந்த எதோ ஒரு மாநாட்டை பத்தி எனக்கு கவலை இல்லை....ஆனா யாரோ (உங்க கமெண்ட்ஸ் பகுதியில)சொல்லறாங்க இனி சோறு கிடைக்காதமே..அதான் சார் என்னக்கு ரெம்ப கஷ்டமா இருக்கு..எதுக்கும் நிங்க ஒரு தடவை கேட்டு சொல்லுங்க சார்...

    அது உண்மையானால் என் நிலைமை ரெம்ப மோசமாயிரும் சார்..(ஹி..ஹி...ஹி.)

    ReplyDelete
  96. ஹை நான் 102.
    100 பெருசா, 102 பெருசா.

    ReplyDelete
  97. @ganesh said...
    அது உண்மையானால் என் நிலைமை ரெம்ப மோசமாயிரும் சார்..(ஹி..ஹி...ஹி.)
    //

    கவலைய விடுங்க பாஸ்..பழகிடும்..ஹா.ஹா

    ReplyDelete
  98. Jey said...

    ஹை நான் 102.
    100 பெருசா, 102 பெருசா.
    //

    ஆமா..டேபிள் உக்காந்துக்கிட்டு, பேப்பர் கொடுக்கிறமாறி போட்டோ போட்டிருக்கீங்களே..என்னா பேப்பர் அது?...

    ReplyDelete
  99. கடலை மடிச்ச பேப்பர் மச்சி. :P

    ReplyDelete
  100. ///பட்டாபட்டி.. said...
    @Jey said...
    தலிவர் பட்டா அவர்லளுக்கு, ஒரு சின்ன சந்தேகம், இந்த வெளியூருக்காரரு, உங்க பக்கத்துவூட்டுகாரருனு காத்துவாக்குல நியூஸ் வன்ருதே அது உண்மைங்களா?!!!!!( ஒரே வூட்ல இருக்குரதாகவும் பேச்சி)
    //


    யாரு பன்னிப்பய கிளப்பிவிட்டுருக்கானா?..அதுக்கு எல்லாமே டமாசு..///

    சேசே...இது நம்ம கைங்கர்யம் இல்ல தல (நம்மதான் பதிவுக்கு சம்பந்தமே இல்லாததப் பத்தி கமென்ட் அடிக்கறதில்லன்னு தானைத்தலைவன் மேலே சத்தியம் பண்ணியிருக்கோமே!)

    யோவ் ஜெய், ஏம்ல இப்பிடி குட்டைய கொழப்புற?

    ReplyDelete
  101. யாரு பன்னிப்பய கிளப்பிவிட்டுருக்கானா?..அதுக்கு எல்லாமே டமாசு..///

    சேசே...இது நம்ம கைங்கர்யம் இல்ல தல (நம்மதான் பதிவுக்கு சம்பந்தமே இல்லாததப் பத்தி கமென்ட் அடிக்கறதில்லன்னு தானைத்தலைவன் மேலே சத்தியம் பண்ணியிருக்கோமே!)

    யோவ் ஜெய், ஏம்ல இப்பிடி குட்டைய கொழப்புற?///

    பன்னி எனக்கு ஒரு எளவும் புரியல?.
    நான் கேட்டதுல எனக்கெ தெரியாம அதுல ஊள்குத்து இருக்கா?.

    ReplyDelete
  102. பட்டாபட்டி.. said...
    Jey said...

    ஹை நான் 102.
    100 பெருசா, 102 பெருசா.
    //

    ஆமா..டேபிள் உக்காந்துக்கிட்டு, பேப்பர் கொடுக்கிறமாறி போட்டோ போட்டிருக்கீங்களே..என்னா பேப்பர் அது?...///

    அது ஒன்னும் இல்ல பட்டா, லாஸ்மாக் போறவங்களுக்கு, இலவச டோக்கன் வினியோகம்தான், உனக்கு வெனும்னாலும் வாங்கிக்கலாம்.

    ReplyDelete
  103. அப்புறம் பட்டா இன்னிக்கு புது சரக்கை போடப்போறேன்( ஃபினிஷிங் சரியா வரல), என் வீட்டுல இன்னிக்கு உன்க கும்மிய வச்சிக்குங்க.

    ReplyDelete
  104. என் முதல் பதிவை படித்து கருத்து கூறவும்

    ReplyDelete
  105. @பன்னிக்குட்டி ராம்சாமி said...
    யாரு பன்னிப்பய கிளப்பிவிட்டுருக்கானா?..அதுக்கு எல்லாமே டமாசு..///
    சேசே...இது நம்ம கைங்கர்யம் இல்ல தல (நம்மதான் பதிவுக்கு சம்பந்தமே இல்லாததப் பத்தி கமென்ட் அடிக்கறதில்லன்னு தானைத்தலைவன் மேலே சத்தியம் பண்ணியிருக்கோமே!)
    யோவ் ஜெய், ஏம்ல இப்பிடி குட்டைய கொழப்புற?
    //

    யாரு அது பன்னி சாரா?.. எங்கேயா கொஞ்ச நாளே ”வெளிய வரல” போலிருக்கு..

    ReplyDelete
  106. @Jey said...
    அது ஒன்னும் இல்ல பட்டா, லாஸ்மாக் போறவங்களுக்கு, இலவச டோக்கன் வினியோகம்தான், உனக்கு வெனும்னாலும் வாங்கிக்கலாம்.
    //

    சே..சே..இலவசம் எனக்கு பிடிக்காது பிரதர்..

    ReplyDelete
  107. @Jey said...
    அப்புறம் பட்டா இன்னிக்கு புது சரக்கை போடப்போறேன்( ஃபினிஷிங் சரியா வரல), என் வீட்டுல இன்னிக்கு உன்க கும்மிய வச்சிக்குங்க.
    என் முதல் பதிவை படித்து கருத்து கூறவும்
    //

    யோவ்..நல்லாத்தானே எழுதுரீர்..அப்புறம் என்ன தயக்கம்..
    அடிச்சு விளையாடுங்க...

    ReplyDelete
  108. பட்டாபட்டி.. said...

    முத்து said...

    100 ///////////////////////


    என்ன இருந்தாலும் பட்டா பட்டா தான்னு நிருபிசுட்டையா,கண்கள் பணித்தது,இதயம் இனித்தது

    ReplyDelete
  109. Veliyoorkaran said...

    தக்காளி என் தங்க தலைவன நோண்டலைனா உங்களுக்கு தூக்கம் வராதே...நான் கெளம்பறேன்...போங்கப்பா...! :)////////////


    முதுலில் நீ பதிவு போட ஆரம்பி பிறகு இந்த நொண்ண கேள்வி கேட்கலாம் என்ன பட்டா நான் சொல்லுறது

    ReplyDelete
  110. முத்து said...

    பட்டாபட்டி.. said...

    முத்து said...

    100 ///////////////////////


    என்ன இருந்தாலும் பட்டா பட்டா தான்னு நிருபிசுட்டையா,கண்கள் பணித்தது,இதயம் இனித்தது
    //

    உனக்குதாயா 100.. நிரு வரலேனாதான் வேற யாருக்காவது போகும்..

    ReplyDelete
  111. முதுலில் நீ பதிவு போட ஆரம்பி பிறகு இந்த நொண்ண கேள்வி கேட்கலாம் என்ன பட்டா நான் சொல்லுறது
    //

    அய்யே..அதுக்கு ..இப்ப என்ன சொன்னாலும் காதுல விழாது.. மயக்கத்தில இருக்கு...

    ReplyDelete
  112. பட்டா என்ன கொடுமை பாரு கண்ட கழிசடைகளும் வந்து இருக்கு,தமிழுக்கு சமந்த படாதவர்களுக்கு கூட அழைப்பு அனுப்பி இருக்கிறார்கள் ஆனால் அப்துல் கலாமிற்கு அழைப்பு இல்லை

    ReplyDelete
  113. முத்து said...

    பட்டா என்ன கொடுமை பாரு கண்ட கழிசடைகளும் வந்து இருக்கு,தமிழுக்கு சமந்த படாதவர்களுக்கு கூட அழைப்பு அனுப்பி இருக்கிறார்கள் ஆனால் அப்துல் கலாமிற்கு அழைப்பு இல்லை
    //

    ஆமாய்யா.. அது மொழி விழா-னு காட்டீட்டாங்களே..
    இன்னக்கு நெலமையில யாரும் வாய தொறக்க மாட்டானுக...

    சீக்கிரம் சங்கு ஊதிட்டு..எல்லா பயலும் வெளிநாடு போயி செட்டில் ஆயிடுவானுக பாரேன்...

    ReplyDelete
  114. பட்டாபட்டி.. said...


    ஆமாய்யா.. அது மொழி விழா-னு காட்டீட்டாங்களே..
    இன்னக்கு நெலமையில யாரும் வாய தொறக்க மாட்டானுக...

    சீக்கிரம் சங்கு ஊதிட்டு..எல்லா பயலும் வெளிநாடு போயி செட்டில் ஆயிடுவானுக பாரேன்...//////


    அது என்னவோ உண்மை தான் பட்டா

    ReplyDelete
  115. //அய்யே..அதுக்கு ..இப்ப என்ன சொன்னாலும் காதுல விழாது.. மயக்கத்தில இருக்கு...//

    ஏன்யா பட்டு,திடீர்னு எனக்கு ஏன்யா திருவிழால அரை மயக்கத்துல இருக்குற ஆடு நினைவுக்கு வருது?உனக்கு ஏன்னு தெரியும்? :)

    ReplyDelete
  116. ஏன்யா பட்டு,திடீர்னு எனக்கு ஏன்யா திருவிழால அரை மயக்கத்துல இருக்குற ஆடு நினைவுக்கு வருது?உனக்கு ஏன்னு தெரியும்? :)
    //

    அட..வாழ்க்க்கையில இந்த சான்ஸ் ஒரு முறைதான்.. விடுங்க.. லைப்-ப நல்லா என்ஜாய் பண்ணட்டும்..

    ReplyDelete
  117. முத்து said...

    பட்டா என்ன கொடுமை பாரு கண்ட கழிசடைகளும் வந்து இருக்கு,தமிழுக்கு சமந்த படாதவர்களுக்கு கூட அழைப்பு அனுப்பி இருக்கிறார்கள் ஆனால் அப்துல் கலாமிற்கு அழைப்பு இல்லை/

    கட்சி மானாட்டுக்கெல்லாம் , அவரெதுக்கு முத்து.

    ReplyDelete
  118. Jey said...

    கட்சி மானாட்டுக்கெல்லாம் , அவரெதுக்கு முத்து.////////////


    அப்போ அது செம்மொழி மாநாடு இல்லையா

    ReplyDelete
  119. வெளிவுலகத்துக்கு அப்படி பேரவச்சிகிட்டு நம்ம பணத்துல குளிக்கிறானுக.

    ReplyDelete
  120. அட நாந்தான் 125

    ReplyDelete
  121. முத்து said...

    Jey said...

    கட்சி மானாட்டுக்கெல்லாம் , அவரெதுக்கு முத்து.////////////


    அப்போ அது செம்மொழி மாநாடு இல்லையா///


    யோவ் அவுங்க ஏதோ குடும்பத்தோட எது திருவிழா கொண்டாடுறாங்க , எதுக்கு அவுகள கிண்டல்பன்றிக (யப்பா ஏதாவது ஒரு வீட்ல கும்மியடிக்கலாம் இப்படி மாறி மாறி ஒரே குழப்பமா இருக்கு , தக்காளி இன்னைக்கு ஜெய் வீடு தான் , அனைவரும் வருக ஆதரவு தருக்க

    ReplyDelete
  122. என் பதிவு சமூக சிந்தனை, உடல்நலன், நகைச்சுவை இவைகள் சார்ந்துதான் பதிவுகள் வருகிறது. ஏதோ பதிவு போட்டோம் பிரபல பகுதியில் வந்தது என்று சந்தோஷம் இல்லை. இதில் எதுவும் லாப நோக்கம்மில்லை. கம்யுனிச கொள்கையில் ஒன்று உள்ளது. "உனக்கு தெரிந்ததை எனக்கு சொல்லிகொடு எனக்கு தெரிந்ததை உனக்கு சொல்லிகொடுகிறேன்". எல்லாம் நம் தமிழ் சகோதர்கள் அவர்களிடம் நம் பதிவை தெரிவிப்பதில் என்ன தவறு... இதில் மற்ற பதிவுலக நண்பர்களுக்கு அவர்களின் பதிவுபற்றி பின்னோட்டம் இட்டு பின் என்பதிவும் வந்திருகிறது அதையும் பாருங்கள் என்று கூறுகிறேன். பல சமூக தளங்களில் நண்பர்களின் பகுதியில் அவர்கள் நண்பர்கள் அவர்களுடைய பதிவு மற்றும் கருத்துகளை இடுவார்கள் அது அந்த நண்பர்களால் விரும்பகூடியாதாக இருக்கிறது.

    ஒரு பொருளை உற்பத்தி செய்துவிட்டு நாம் அதை விற்க்கும் போது நாம் ஏன் விளம்பறபடுத்தவேண்டும். தேவை இருந்தால் அவங்களே வந்து வாங்கிகொள்ளட்டும் என்று இருக்க முடியுமா இருந்தால் அப்பொருள அப்படியே வைத்திருக்கவேண்டியதுதான். இன்னொன்று கேள்வியும் நம்மிடம் வரலாம் நல்ல பதிவு, படைப்பு விளம்பரம் இல்லாமல் ஏற்கப்படும் என்று நினைக்கலாம். இதில் என் கேள்வி... எப்போது?

    நல்ல சமையல்காரன் சமையல் செய்த சாப்பாட்டை சாப்பிடுவார்கள் நாக்கை உச் கொட்டிட்டே சாப்பிடுவதை தானே எதிர்பார்ப்பான் அதில் வேறு என்ன லாப நோக்கமும் இருக்க போகிறது. அதை நல்லா சப்பிடுருவங்க பகுதியில் வந்து விற்கிறான். இதில் என்ன தவறு... நானும் அச்சமையல்காரன் போலதான் இருக்கிறேன். நல்ல பதிவு வெளியிடும்போது குறைந்த எண்ணிகையிலே அதை படித்தனர் என்று நினைக்கும் போது மன வருத்தம் அடைகிறது. என் பதிவுகளில் பலது முடங்கி போய் இருந்தது. அதனால்தான் சிறு உபாயமாக உங்கள் கருத்திடும் பகுதியில் இட்டேன். இவை உங்களுக்கு மன உறுத்தலை ஏற்படுத்தி இருந்தால் தவறாக கொள்ளவேண்டும். இனிமேல் இது போல் வராது

    ReplyDelete
  123. @Blogger rk guru said...

    //. நல்ல பதிவு வெளியிடும்போது குறைந்த எண்ணிகையிலே அதை படித்தனர் என்று நினைக்கும் போது மன வருத்தம் அடைகிறது. என் பதிவுகளில் பலது முடங்கி போய் இருந்தது. அதனால்தான் சிறு உபாயமாக உங்கள் கருத்திடும் பகுதியில் இட்டேன். இவை உங்களுக்கு மன உறுத்தலை ஏற்படுத்தி இருந்தால் தவறாக கொள்ளவேண்டும். இனிமேல் இது போல் வராது
    //

    வாங்க பிரதர்...நீங்க சொன்னது உங்கள் பார்வையில்....

    “சரக்கு நல்லாயிருந்தா தேடி வந்து வாங்குவாங்க...”

    ஒரே மாறியான கமென்ஸ்..சுமார் 30 க்கு மேற்பட்ட பதிவுகளீல் இருந்தால்?


    ( சன் டீவீ..சுறா படத்துக்கு, 10 நிமிடங்களுக்கு ஒருமுறை போட்ட விளம்பரங்களை..எவ்வளவு பேர் விரும்பி பார்த்தார்கள் என தெரியுமா?..)


    பதிவுகள் நன்றாக இருந்தால் ..பலரை சென்றடையும்..

    இதில் வருத்தம் வேண்டாம்..

    ReplyDelete
  124. கம்யுனிச கொள்கையில் ஒன்று உள்ளது. "உனக்கு தெரிந்ததை எனக்கு சொல்லிகொடு எனக்கு தெரிந்ததை உனக்கு சொல்லிகொடுகிறேன்".
    //

    எவ்வளவு முறை என்பதுதான் என் கேள்வி?..

    முதல் முறை போட்டவுடன்..உங்கள் பதிவுக்கு வந்தேன்.. நன்றாக இருந்தது.. எனது ஓட்டையும் ..கருத்துக்களையும் பதிவு செய்தேன்...
    அடிக்கடி அங்கு வந்து படித்துக்கொண்டுதான் உள்ளேன்..

    ”வந்தேன்.. வருவேன்..”


    ஆனால்..இங்கு ஒவ்வொரு பதிவுகளிலும்.அதே கமென்ஸ் இருந்தால்......


    லூஸ்ல விடுங்க..பதிவுகளில் கவனத்தை செலுத்துங்க..படிக்கும் மக்கள் அதிகமாவார்கள்..
    நன்றி...

    ReplyDelete
  125. நல்ல டைமிங்...

    ReplyDelete
  126. ராசராசசோழன் said...

    நல்ல டைமிங்...
    //

    டாங்ஸ் வாத்தியாரே...

    ReplyDelete
  127. //கம்யுனிச கொள்கையில் ஒன்று உள்ளது. "உனக்கு தெரிந்ததை எனக்கு சொல்லிகொடு எனக்கு தெரிந்ததை உனக்கு சொல்லிகொடுகிறேன்".//

    பேண்ட் போடுவது எப்படி..யாராவது சொல்லிகுடுங்களேன் எனக்கு.

    ReplyDelete
  128. //கட்சி மானாட்டுக்கெல்லாம் , அவரெதுக்கு முத்து.////////////


    அப்போ அது செம்மொழி மாநாடு இல்லையா//

    இப்பதான் புரியுது அது செம்மறிஆட்டு மாநாடுன்னு. உலக தமிழ் மாநாடு நடத்த ஆதரவு கிடைக்காததால இப்படி ஒரு ஜால்ரா மாநாடு.

    ReplyDelete
  129. //@ஜெய்லானி said...
    பட்டா செம்மொலி மாநாட்டுக்கு கூப்பிடாத கோவமா..
    //

    எதுக்கு குஷ்புக்கு குடை பிடிக்கவா பாஸ்?//

    ஏன் லைவ் ஷோ எதுவும் இல்லையா..?

    ReplyDelete
  130. ச்சே..இங்கையும் தனியா பொலம்ப வேண்டி வருதே.. பன்னிகுட்டியும் அங்கே தூங்குது..மங்குவும் தூங்குது.

    ReplyDelete
  131. ஜெய்லானி said...

    //பேண்ட் போடுவது எப்படி..யாராவது சொல்லிகுடுங்களேன் எனக்கு//
    //ஏன் லைவ் ஷோ எதுவும் இல்லையா..?//

    பேண்ட் போடாம நின்னா அது லைவ் ஷோ பாஸ், இங்க வந்து என்ன புலப்பம்

    ReplyDelete
  132. ஜெய்லானி said...

    //எதுக்கு குஷ்புக்கு குடை பிடிக்கவா பாஸ்?//

    கொடைக்கி கொட எதுக்கு? அவங்களே தமிழ் நாட்டுக்கு கெடச்ச கொடை தானே!!

    ReplyDelete
  133. அப்புறம் எப்படி இருக்கீங்க தல! சிங்கபூர்ல வெயிலா மழையா குளிரா??

    ReplyDelete
  134. >>>>>>>>>>>>ஆனா கட்சிக்கு புதுவரவான, வாண்டுகளுக்கு சேர் போட்டானுகளா?..பொறந்த குழந்தையினாலும், ஒரு மரியாதை வேண்டாம்?>>>>>>>>>>>

    கலக்கலான வரிகள்... பணம் வாங்கிட்டு ஓட்டு போடுற பன்னாடைகளாயிட்டோமே.. என்ன பண்றது?!

    ReplyDelete
  135. ஓசியில கட்சி மாநாடு நடத்துறது எப்படின்னு ஒரு கருத்தரங்கு நடக்குதாம்.. மறக்காம வந்துடுங்க.. தலைமை நம்ம ராஜதந்திரி தானுங்க..

    ReplyDelete
  136. பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

    ஓசியில கட்சி மாநாடு நடத்துறது எப்படின்னு ஒரு கருத்தரங்கு நடக்குதாம்.. மறக்காம வந்துடுங்க.. தலைமை நம்ம ராஜதந்திரி தானுங்க..///////////////

    பார்த்து சார் செலவை உங்க தலையில் கட்டிட போறாங்க

    ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!