Pages

Tuesday, June 22, 2010

அண்டா..குண்டா அடகு வெச்சு...?

பட்டாபட்டி சார்..சமீபத்தில் மத்திய அரசு , இரவு நேரங்களில் ஏற்படும் விபத்தை தடுக்கும் வகையில், சைக்கிள்களின் நிறம் ஆரஞ்சு வண்ணத்துக்கு மாற்ற முடிவு செய்துள்ளதாக எங்கள் ஊர் வெட்டியான் கூறுகிறார்..  அது உண்மையா?..    அது உண்மையாக இருக்கும்பட்சத்தில, என்னுடைய சைக்கிளை, சொந்தகாசில் பெயிண்ட் அடிக்கவேண்டுமா?.. அல்லது மத்திய அரசே அதற்கு உதவுமா?
ராமேஸ்..கெட்டவன்..


==================================

ஆமாய்யா.. இது நிசம்தான்..மத்திய அரசு என்ன சொல்லுதுனா..

  • ஏழைகளின் வாகனமாம் சைக்கிள்
  • இன்றளவும் கிராமங்களில் பெருமளவு பயன்பாட்டில் உள்ளதாம்.
  • பெட்ரோல்-டீசல் விலையைச் சமாளிக்க சைக்கிள் போக்குவரத்து உதவுமாம்
  • உடல் பருமனாக இருப்பவர்களுக்கு சைக்கிள் பயிற்சி அவசியமாம்

இவ்வளவு “மாம்” இருக்கும் சைக்கிளினால்..  இந்திய பொருளாதாரம் எங்கோ போய்விடுமாம்..    இது நான் சொல்லலே..மத்திய அரசு சொல்லுது...

இந்தியா ஏழை நாடுப்பா.  .பாவம்.. சமீபத்தில வந்த போபால் தீர்ப்பு கூட,  ஏழை மக்களின் கஷ்டத்தை புரிந்துகொண்டு. மத்திய அரசின் வழிகாட்டுதலால் வந்த தீர்ப்புதான்..  அவ்வளவு பணமுடை..   இதுல வேற, வேட்டிகட்டிய தமிழனுக, டெல்லில உட்கார்ந்துகொண்டு  ஏதோ அவர்களால் முடிந்ததை சம்பாரிக்கிறார்கள்..

ஒரு இ(அ)ந்தியகுடிமகனா, நீயும் நாட்டுக்கு ஏதாவது செய்யுப்பா.. சைக்கிளுக்கு பெயிண்ட் அடிக்க, மத்திய அரசு நிதி ஒதுக்கும்..அதை சிலபேரு ஒதுக்கிடுவானுக..  அதை பார்த்து..”ங்கொய்யா..ங்கொம்மா”னு எரிச்சலாகாமா..  உன்னால் முடிந்தளவுக்கு மத்திய அரசுக்கு உதவனும்..  அது ஒவ்வொரு இந்தியனின் கடமையாகும்... 

மேலும்..ராகுலுக்கு 40 வயசு ஆயிடுச்சாம்.....வெளி உலகம் தெரியாம பொத்தி பொத்தி வளர்த்துட்டானுக.  பாவம்.. இப்பத்தான் வெளி உலகம் பார்க்க, ரயில் ரயிலா ஏறி இறங்கிட்டு இருக்கார்..  எப்படியோ கடைசி சொட்டு முடியறதுக்குள்ள, அடுத்த வாரிசு வரனுமேனு..எனக்கு பயமாயிருக்கு.

அப்புறம்..மறக்காம அடுத்த எலெக்‌ஷன்ல, அவங்களுக்கு உன்னோட பொன்னான ஓட்டை குத்தி வாழவையப்பா..   நீங்க உங்க கடமைய தவறாது செஞ்சா..பெட்ரோல், டீசல் விலையெல்லாம் குறைந்துபோகும்.. அப்புறம் நாடு ஓகோனு எங்கோ போயிடும்..    நீயும் நானும் டீ குடிக்க, 5 கிமீ சைக்கிள போகலாம்...     நம்பிக்கையா...

நான் இப்ப சொல்வதை உன்னோட டைரில குறிச்சு வெச்சுக்கோ..  நாடு போறபோக்கை பார்க்காம நீயும், நானும் கண்ணு மூடப்போறதில்லை..
அன்னை,  ”இந்தியாவை தூக்கி நிறுத்தாம , இத்தாலி  போகமாட்டாங்க..  ”

உனக்காகவும் எனக்காவும் கஷ்டப்பட எவ்வளவுபேரு இருக்காங்கனு நினைச்சு  பெருமைப்படாம..  பெயிண்ட அடிக்க காசு தருவானுகளா?னு கேட்டுக்கிட்டு இருக்கே...

அதுவுமில்லாம, நம்ம தலைவர் பழுத்தபழமய்யா..  அவருக்கே முன்னமே தெரியும்போல.. அதுதான் பட்டியும் சாப்பிடாத ரேஷன் அரிசிய ஏழைக்கு கொடுக்கிறாரு..   இப்பவே அதை சாப்பிட்டு பழகிக்க..    இல்ல..  பின்னாடி கஷ்டமாயிடும்..

என்னதான் நாம ஏழையா இருந்தாலும், விருந்தோம்பலில் நம்ம அடிச்சுக்க ஆளே இல்லை..     இவ்வளவு கஷ்டத்திலும்,எவ்வளவோ கோடி+ஆயுதம் கொடுத்து ராஜபட்ஷேக்கு உதவி பண்றாங்க பாரு ..  அதை பண்றதுக்கு காங்கிரஸ்காரனை தவிர யாருக்கும் மனசு வராதய்யா..

அதனால்..மத்திய அரசு சொன்னபடி..  வீட்ல இருக்கும் அண்டா குண்டாவ அடகு வெச்சாவது சைக்கிளுக்கு கலர் மாத்திக்க..இல்லாட்டி வருங்கால சந்ததி உன்னைய மன்னிக்காது..சொல்லீட்டேன்..
.
.
.

டிஸ்கி..வருங்கால பிரதமருக்கு ,  “கேக்”  ஊட்டாத நாதாரிகளை,   பட்டாபட்டியின் சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம்..  
( படம் உதவி : யூர்கன்  )

.
.
.

102 comments:

  1. //வருங்கால பிரதமருக்கு , “கேக்” ஊட்டாத நாதாரிகளை, பட்டாபட்டியின் சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம்..//

    ப‌ட்டா
    ப‌ட‌த்துல‌ அவ‌ந்தான் கேக் ஊட்ட‌றான்ல‌ அவ‌னைப் போய் நாதாரின்னு ஏன்யா திட்றீங்கோ

    ReplyDelete
  2. உள்ளேனய்யா!!
    ஹை வடை எனக்கு தான்

    ReplyDelete
  3. கரிகாலன் வராமலிருந்தால்

    ReplyDelete
  4. //அரசே அதற்கு உதவுமா?
    ராமேஸ்..கெட்டவன்..//
    மவனே நீ மட்டும் என் கைல கிடைச்சா.... பிரியாணிதான்

    ReplyDelete
  5. //ஏழைகளின் வாகனமாம் சைக்கிள்
    இன்றளவும் கிராமங்களில் பெருமளவு பயன்பாட்டில் உள்ளதாம்.
    பெட்ரோல்-டீசல் விலையைச் சமாளிக்க சைக்கிள் போக்குவரத்து உதவுமாம்
    உடல் பருமனாக இருப்பவர்களுக்கு சைக்கிள் பயிற்சி அவசியமாம்

    இவ்வளவு “மாம்” இருக்கும் சைக்கிளினால்.. இந்திய பொருளாதாரம் எங்கோ போய்விடுமாம்.. இது நான் சொல்லலே..மத்திய அரசு சொல்லுது...//

    அப்ப‌ வ‌ருங்கால‌ பிர‌த‌மர் அடுத்து சைக்கிள் ஓட்டி சீன் போடுவாரே!

    ReplyDelete
  6. //அன்னை, ”இந்தியாவை தூக்கி நிறுத்தாம , இத்தாலி போகமாட்டாங்க.. ”//


    ம்ஹூம் ......தூக்கிட்டாலும்!!!!!!!!!!

    ReplyDelete
  7. \\எப்படியோ கடைசி சொட்டு முடியறதுக்குள்ள, அடுத்த வாரிசு வரனுமேனு..எனக்கு பயமாயிருக்கு.\\
    இந்த கடைசி சொட்டுன்னு எதை சொல்றீங்க. அதையே சொன்னீங்க

    ReplyDelete
  8. //மேலும்..ராகுலுக்கு 40 வயசு ஆயிடுச்சாம்.....வெளி உலகம் தெரியாம பொத்தி பொத்தி வளர்த்துட்டானுக. பாவம்.. இப்பத்தான் வெளி உலகம் பார்க்க, ரயில் ரயிலா ஏறி இறங்கிட்டு இருக்கார்.. எப்படியோ கடைசி சொட்டு முடியறதுக்குள்ள, அடுத்த வாரிசு வரனுமேனு..எனக்கு பயமாயிருக்கு//

    த‌ங்க‌ த‌மிழ்நாட்டில் ஆச்சியை ச்சீ ஆட்சியை புடிச்ச‌துக்க‌ப்புற‌ம் தான் க‌ல்யாணம்.(யோவ் யாருய்யா அது..... 60 தாம் க‌ல்யாண‌ம் கூட‌ ப‌ண்ண‌ முடியாதுன்னு சொல்ற‌து)

    ReplyDelete
  9. //அப்புறம் நாடு ஓகோனு எங்கோ போயிடும்//

    இத்தாலி லெவ‌லுக்கா இல்ல‌ கொல‌ம்பியா லெவ‌லுக்கா ?????? அவ்வ்வ்வ்

    ReplyDelete
  10. //நம்ம தலைவர் பழுத்தபழமய்யா.. அவருக்கே முன்னமே தெரியும்போல..//

    த‌லைவ‌ர் ரொம்ப‌ பிஸி!
    சொர்ணமால்யா டான்ஸ் ம‌ட்டும் தான் முடிஞ்சுருக்கு இன்னும் க‌லாக்கா,ந‌மீதாக்கா,குஷ்பூக்கா டான்ஸ் எல்லாம் இருக்கு.
    த‌லைவ‌ர‌ தொந்த‌ர‌வு ப‌ண்ணாதீங்க‌ப்பா

    ReplyDelete
  11. ||என்னதான் நாம ஏழையா இருந்தாலும், விருந்தோம்பலில் நம்ம அடிச்சுக்க ஆளே இல்லை..||

    :o)

    ReplyDelete
  12. பட்டாபட்டி நல்ல துணிச்சலாத்தான் எழுதுறிங்க.... (ஒளிஞ்சிருந்தாலும்)

    நான் கேக் ஊட்டல... அப்ப நானும்....?

    ReplyDelete
  13. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

    //அரசே அதற்கு உதவுமா?
    ராமேஸ்..கெட்டவன்..//
    மவனே நீ மட்டும் என் கைல கிடைச்சா.... பிரியாணிதான்//

    நான் நினைக்கிறன்.... ஏதோ கூட்டு இருக்குன்னு...?

    ReplyDelete
  14. யோவ் பட்டு,இந்த ரமேஷ் பயபுள்ள மேல உனக்கு என்னய்யா அவ்ளோ கடுப்பு? :)

    ReplyDelete
  15. முட்டை போட்ட கேக்கா போடாத கேக்கா சொல்லலையே..:))

    ReplyDelete
  16. http://naayakan.blogspot.com/2010/06/master-piece-of-money.html

    Ai..Jolly....! :)

    ReplyDelete
  17. @க‌ரிச‌ல்கார‌ன் said...
    //அன்னை, ”இந்தியாவை தூக்கி நிறுத்தாம , இத்தாலி போகமாட்டாங்க.. ”//
    ம்ஹூம் ......தூக்கிட்டாலும்!!!!!!!!!!
    //

    அண்ணே..இந்தியா ஏழை நாடு என்பது ஒவ்வொரு இந்தியனின் மனதிலும் துழையனுமுணே...
    அப்பத்தான் , கட்சிக்காரனுகளை வாழ விடுவானுக...

    //
    த‌ங்க‌ த‌மிழ்நாட்டில் ஆச்சியை ச்சீ ஆட்சியை புடிச்ச‌துக்க‌ப்புற‌ம் தான் க‌ல்யாணம்.(யோவ் யாருய்யா அது..... 60 தாம் க‌ல்யாண‌ம் கூட‌ ப‌ண்ண‌ முடியாதுன்னு சொல்ற‌து)
    //

    60 வயது இளைஞர்(!)..ஹா..ஹா

    ReplyDelete
  18. எம் அப்துல் காதர் said...
    உள்ளேனய்யா!!
    ஹை வடை எனக்கு தான்
    கரிகாலன் வராமலிருந்தால்
    //

    ஹா..ஹா..

    ReplyDelete
  19. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
    //அரசே அதற்கு உதவுமா?
    ராமேஸ்..கெட்டவன்..//
    மவனே நீ மட்டும் என் கைல கிடைச்சா.... பிரியாணிதான்
    //

    போன பதிவுலையும் பிரியாணி..இதுலையுமா?...
    ஆமா..ராமேஸ் உடைய பிரதரா நீர்?

    ReplyDelete
  20. @சிவா (கல்பாவி) said...
    \\எப்படியோ கடைசி சொட்டு முடியறதுக்குள்ள, அடுத்த வாரிசு வரனுமேனு..எனக்கு பயமாயிருக்கு.\\
    இந்த கடைசி சொட்டுன்னு எதை சொல்றீங்க. அதையே சொன்னீங்க
    //

    அதேதான்...சிவா..( நான் வேற என்னாத்தை சொல்லப்போறேன்..)

    ReplyDelete
  21. @கலகலப்ரியா said...
    ||என்னதான் நாம ஏழையா இருந்தாலும், விருந்தோம்பலில் நம்ம அடிச்சுக்க ஆளே இல்லை..||

    :o)
    //

    உணமையைத்தான் சொல்லியிருக்கேன் மேடம்...

    ReplyDelete
  22. @சி. கருணாகரசு said...
    பட்டாபட்டி நல்ல துணிச்சலாத்தான் எழுதுறிங்க.... (ஒளிஞ்சிருந்தாலும்)
    நான் கேக் ஊட்டல... அப்ப நானும்....?
    //

    அவங்க பார்வையில நாம அதேதான் சார்..நம்மள மனுஷனா நினைச்சிருந்தா, ராஜபட்ஷே உள்ள வந்திருப்பானா?...

    ReplyDelete
  23. @ILLUMINATI said...
    யோவ் பட்டு,இந்த ரமேஷ் பயபுள்ள மேல உனக்கு என்னய்யா அவ்ளோ கடுப்பு? :)
    //

    நீரு கோவில்பட்டி
    நான் பட்டாபட்டி
    ரமேஸ் கோவிபட்டி..ஹி..ஹி அதான்..
    போன தடவை சிங்கை வந்துட்டு என்னைய கண்டுக்காம போனதுக்கு லைட்டா கடுப்பு..
    ( இலுமி..கொஞ்ச நாளா , பழசு எனக்கு மறந்துட்டு வருதுய்யா.. யாரு யாரச்சொன்னாங்கனு..)
    இதுக்கு ஏதாவது பரிகாரம் இருக்கு...?

    ( இந்த நரபலி.. நரபலி..னு சொல்றாங்களே..அதை பற்றி என்ன நினைக்கிற?)

    ReplyDelete
  24. வானம்பாடிகள் said...

    முட்டை போட்ட கேக்கா போடாத கேக்கா சொல்லலையே..:))

    //

    இது நல்ல கொஸ்டின் சார்.. எதுக்கும் மேலிடத்தில் கலந்து பேசிட்டே சொல்றேன்..ஏன்னா நாங்க பாரம்பரிய கட்சி..ஹி..ஹி

    ReplyDelete
  25. Veliyoorkaran said...

    http://naayakan.blogspot.com/2010/06/master-piece-of-money.html

    Ai..Jolly....! :)
    //

    அங்க உனக்கு பதில் வராது ஓய்.. எல்லாம் ஒரு வழிப்பாதை...

    ReplyDelete
  26. //போன தடவை சிங்கை வந்துட்டு என்னைய கண்டுக்காம போனதுக்கு லைட்டா கடுப்பு..//
    ஒரு மானஸ்தன் என்னோட விசா முடியுறதுக்குள்ள வந்து பாக்குறேன்னு சொன்னாருங்க. அந்த மானஸ்தன் என்ன ஆனாருன்னு இன்னும் சிங்கை போலீஸ் தேடிகிட்டு இருக்கு. பயபுள்ள இந்தியாவுக்கு எப்படியும் வந்ததான ஆகணும்.

    ReplyDelete
  27. அப்ப மொதல்ல எங்க தாத்தா சைக்கிளுக்கு பெயின்ட் அடிக்கணும். தகவல் சொன்னதுக்கு நன்றி நண்பா

    ReplyDelete
  28. வாயத் தொறந்து சாப்பிடு தல..
    பயபுள்ளைல குடும்பம், குட்டிய விட்டுட்டு உங்களுக்கு ஊட்டி விடுறாங்க..பேசாம இருக்கீக.....

    நீங்க மட்டும் சாப்பிட்டுட்டு, ‘உம்’ சொன்னீங்கனா, இந்தியாவில் உள்ள மக்களை பூரா, உங்களுக்கு கீழ அடிமையா கொண்டு வர ரெடியா இருக்கோம் தல..

    ..ப்ளீஸ் ..செல்லம்...
    கொஞ்சமா...ஆ..சொல்லுங்க...

    ReplyDelete
  29. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

    //போன தடவை சிங்கை வந்துட்டு என்னைய கண்டுக்காம போனதுக்கு லைட்டா கடுப்பு..//
    ஒரு மானஸ்தன் என்னோட விசா முடியுறதுக்குள்ள வந்து பாக்குறேன்னு சொன்னாருங்க. அந்த மானஸ்தன் என்ன ஆனாருன்னு இன்னும் சிங்கை போலீஸ் தேடிகிட்டு இருக்கு. பயபுள்ள இந்தியாவுக்கு எப்படியும் வந்ததான ஆகணும்.
    //

    நல்லவேளை ரமேஸ்.. நானும்கூட என்னத்தான் தேடுறீங்கனு பயந்துட்டேன்...

    ஆமா..பூமியில, இன்னுமா மானஸ்தனுக இருக்காங்க....இது எனக்கு செய்தி..ஹி..ஹி

    ReplyDelete
  30. சசிகுமார் said...

    அப்ப மொதல்ல எங்க தாத்தா சைக்கிளுக்கு பெயின்ட் அடிக்கணும். தகவல் சொன்னதுக்கு நன்றி நண்பா
    //

    சீக்கிரம் அடிச்சிருங்க நண்பா.. இல்ல கொஞ்ச நாளானா, பெயிண்ட் வாங்க, வீட்டுப்பத்திரம் வெச்சு பாங்க் லோன் வாங்க வேண்டி வரும்..

    ReplyDelete
  31. ஆளுங்கட்சி மக்களை திசை திருப்புறாங்க...நாம கவனமா பெயிண்ட் அடிப்போம்...

    ReplyDelete
  32. யெச் சூஸ் மீ..... மொதல்ல கருணாநிதியின் தள்ளுவண்டிக்கு ஆரஞ்சு பெயிண்ட் அடிக்கட்டும் அப்புறம் பார்த்துக்கலாம்...

    ReplyDelete
  33. ஒரு எழவும் புரியல. இன்னா மேட்டரு?

    ReplyDelete
  34. **இவ்வளவு கஷ்டத்திலும்,எவ்வளவோ கோடி+ஆயுதம் கொடுத்து ராஜபட்ஷேக்கு உதவி பண்றாங்க பாரு .. அதை பண்றதுக்கு காங்கிரஸ்காரனை தவிர யாருக்கும் மனசு வராதய்யா***

    இந்தியர்களையே கவனிக்காத கசுமாலங்கள் ஸாரி காங்கிரஸ்கட்சி இலங்கைதமிழர்களையா காப்பாற்றும்.

    ReplyDelete
  35. உயர்திரு பட்டாபட்டி அவர்களின் மேன்மைதாங்கிய சமூகத்திற்கு,

    தங்களின் பதிவைப் படித்து இன்புற்றேன். ஆனால் எனக்கு ஒரு பெரிய சந்தேகம் வந்துவிட்டது, தாங்கள் தயை கூர்ந்து அதை நிவர்த்தி செய்வீர்கள் என்ற நம்பிக்கையில் இதை எழுதுகிறேன். அய்யா, நான் ஒரு மிதிவண்டி கூட வாங்க இயலாத ஏழை. எப்போதும் கால்நடையாகவே நடக்கிறேன். தொழில்நிமித்தமாக இரவு நேரங்களில் நெடுஞ்சாலைகளில் அடிக்கடி நான் நடக்க வேண்டியிருக்கிறது. எனவே விபத்துக்களைத் தவிர்த்துக் கொள்ள எனக்கும் மஞ்சள் பெயின்ட் அடிக்க வேண்டுமா? அப்படி அடிக்க வேண்டுமென்றால் எந்த இடத்தில் அடித்துக் கொள்ள வேண்டும்? இதற்காவது அரசு ஏதாவது உதவி செய்கின்றதா என்று தெரியப்படுத்தவும்.

    நன்றி!

    ReplyDelete
  36. பன்னிக்குட்டி ராம்சாமி said...

    உயர்திரு பட்டாபட்டி அவர்களின் மேன்மைதாங்கிய சமூகத்திற்கு,

    தங்களின் பதிவைப் படித்து இன்புற்றேன். ஆனால் எனக்கு ஒரு பெரிய சந்தேகம் வந்துவிட்டது, தாங்கள் தயை கூர்ந்து அதை நிவர்த்தி செய்வீர்கள் என்ற நம்பிக்கையில் இதை எழுதுகிறேன். அய்யா, நான் ஒரு மிதிவண்டி கூட வாங்க இயலாத ஏழை. எப்போதும் கால்நடையாகவே நடக்கிறேன். தொழில்நிமித்தமாக இரவு நேரங்களில் நெடுஞ்சாலைகளில் அடிக்கடி நான் நடக்க வேண்டியிருக்கிறது. எனவே விபத்துக்களைத் தவிர்த்துக் கொள்ள எனக்கும் மஞ்சள் பெயின்ட் அடிக்க வேண்டுமா? அப்படி அடிக்க வேண்டுமென்றால் எந்த இடத்தில் அடித்துக் கொள்ள வேண்டும்? இதற்காவது அரசு ஏதாவது உதவி செய்கின்றதா என்று தெரியப்படுத்தவும்.

    நன்றி!/////////////


    கொய்யால இது கேள்வி அது வந்து பெயிண்ட் எங்க அடிகனுமுன்னா...........இருயா மோகன் சொலுறத சொல்லவிடாம பன்னுறதுக்கே நீ இருக்க

    ReplyDelete
  37. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
    ஒரு மானஸ்தன் என்னோட விசா முடியுறதுக்குள்ள வந்து பாக்குறேன்னு சொன்னாருங்க. அந்த மானஸ்தன் என்ன ஆனாருன்னு இன்னும் சிங்கை போலீஸ் தேடிகிட்டு இருக்கு. பயபுள்ள இந்தியாவுக்கு எப்படியும் வந்ததான ஆகணும்.///////


    இது தான் பட்டு மேல் உங்களுக்கு காண்டா அப்போ நான் உங்கள் கட்சி,பட்டு ஊருக்கு வரும் போது லெக் பீசை உருவி எனக்கு அனுப்பவும்

    ReplyDelete
  38. Veliyoorkaran said...

    http://naayakan.blogspot.com/2010/06/master-piece-of-money.html

    Ai..Jolly....! :)//////////////

    ஏலே நீ உயிரோடு தான் இருக்கியாலே!!!

    ReplyDelete
  39. இப்பதான் பழைய பார்ம் வந்திருக்கு! :))

    ReplyDelete
  40. போட்டோவுக்கு கேக் ஊட்டுனா, போட்டோ கேக் சாப்பிடுமா தல!?

    ReplyDelete
  41. பன்னாட , பரதேசி எங்கள் தானை தலைவன் , தமிழின பாதுகாவலன் (?????) அண்ணன் ராகுலை தரக்குறைவாக பேசிய பட்டாபட்டியை சாகும் வரை சன் டி.வி பார்க்கும் படி ஆணை இடுகிறேன் (தக்காளி செத்தான் எதிரி )

    ReplyDelete
  42. பட்டா , எப்ப கட தொறக்குற , எப்ப கடைய மூடுற ஒன்னும் தெரிய மாட்டேங்குது

    ReplyDelete
  43. அதெப்படியா எதப் பேசுனாலும்,எங்க சுத்துனாலும் நான் வந்த தமன்னாவ இழுத்திர்றீங்க!

    அன்பின் பன்னி (யோவ் இந்த அன்பின் ர வார்த்தைய நான் இங்க வந்தப்புறம் தான் கேக்குறேன், அதுக்கு என்னய்யா அர்த்தம்),

    தாங்கள் தமன்னாவை பற்றி தடித்த வார்த்தை உபயோகப்படுத்தியுள்ளீர்கள். என் தரம் தாழ்ந்த கண்டனங்கள்.

    ReplyDelete
  44. பதிவுலக ஆணாதிக்கவாதி பட்டாபட்டியை வன்மையாக கண்டிக்கிறேன்.

    //மேலும்..ராகுலுக்கு 40 வயசு ஆயிடுச்சாம்.....வெளி உலகம் தெரியாம பொத்தி பொத்தி வளர்த்துட்டானுக. பாவம்.. இப்பத்தான் வெளி உலகம் பார்க்க, ரயில் ரயிலா ஏறி இறங்கிட்டு இருக்கார்.. எப்படியோ கடைசி சொட்டு முடியறதுக்குள்ள, அடுத்த வாரிசு வரனுமேனு..எனக்கு பயமாயிருக்கு.//

    யோவ் நீ சரியான ஆணாதிக்க வாதின்னு நிருபிச்சுட்டியே. ஏன் ராகுல் மட்டும்தான் ராஜீவுக்கு வாரிசா நம்ம பிரியங்கா பொண்ணு இல்லயா. எவ்வளவு தங்கமான பொண்ணு தெரியுமா. நம்ம நளினியவெல்லாம் வந்து சட்டப்படி சந்திச்சுட்டுப் போச்சு. நாட்டுநடப்ப தெரிஞ்சு எழுதுய்யா.

    ReplyDelete
  45. பட்டா, இந்த இலுமி,வெளியூரு, எல்லோருக்கும் அவார்ட் கொடுக்குற ஜெய்லானி இவங்கலை இன்ரொடூஸ் பன்னி வையியா, நைஸா என்ன follow panna சொல்லி கவுத்துரலாம்

    ReplyDelete
  46. இன்னும் என்னை follow pannaatha பட்டாபட்டியை வன்மையாக கண்டிக்கிறேன்.

    ReplyDelete
  47. //”இந்தியாவை தூக்கி நிறுத்தாம , இத்தாலி போகமாட்டாங்க...//

    என்ன பட்டா இன்னும் வெவரமில்லாம இருக்க, அதான் இந்தியக் கொடிய, நெட்டுக்க தொங்க விட்டு அன்னை வர்ற இடத்துலயெல்லாம் இத்தாலி கொடி மாதிரி தொங்க விடுறாங்கலெ இந்த மானங்கெட்ட காங்ரஸ்காரனுக, பெருகு எதுக்கு இவக இத்தாலி போகப்போராக.

    ReplyDelete
  48. இருக்கேளா!ஓடிட்டீங்களோன்னு நினைச்சேன்:)

    ReplyDelete
  49. வருமுன் காத்த எங்கள் வருங்கால வாரிசு பட்டாப்பட்டி வாழ்க .அண்ணனே இது சம்பந்த்தமா ஆலோசனை நம்ம மக்களுக்கு நீங்கதானே வாரி வாரி வழங்கணும்

    ReplyDelete
  50. //அதனால்..மத்திய அரசு சொன்னபடி.. வீட்ல இருக்கும் அண்டா குண்டாவ அடகு வெச்சாவது சைக்கிளுக்கு கலர் மாத்திக்க..இல்லாட்டி வருங்கால சந்ததி உன்னைய மன்னிக்காது..சொல்லீட்டேன்../////////


    தக்காளி இது எல்லாம் நடக்கும்னு தெருஞ்சுதான் என் நைனா மொங்கு வண்டிகூட வாங்கித் தரலையா !

    ReplyDelete
  51. //மத்திய அரசு நிதி ஒதுக்கும்..அதை சிலபேரு ஒதுக்கிடுவானுக.//
    என்னங்க, அடிமடியிலேயே கை வைக்கறீங்க. எங்க பொளப்ப கெடுத்துடுவீங்க போல இருக்கே?

    இது ஆவாதுங்க, ஆட்டோ அனுப்பிச்சிடவேண்டியதுதான்!

    ReplyDelete
  52. @ராசராசசோழன் said...
    ஆளுங்கட்சி மக்களை திசை திருப்புறாங்க...நாம கவனமா பெயிண்ட் அடிப்போம்...
    //

    ஆமா சார்.. இது நம்ம கடமை..

    ReplyDelete
  53. @யூர்கன் க்ருகியர் said...
    யெச் சூஸ் மீ..... மொதல்ல கருணாநிதியின் தள்ளுவண்டிக்கு ஆரஞ்சு பெயிண்ட் அடிக்கட்டும் அப்புறம் பார்த்துக்கலாம்...
    //

    அதுவும் சர்தான்

    ReplyDelete
  54. @Phantom Mohan said...
    ஒரு எழவும் புரியல. இன்னா மேட்டரு?
    //

    சும்மா..ஒரு எளவும் இல்ல பாஸ்..எப்போம்போல டாஸ்மார்கல தண்ணி அடிச்சு,
    கவர்மெண்ட்க்கு உதவி பண்ணுங்க..

    ReplyDelete
  55. @NAGA said...
    **இவ்வளவு கஷ்டத்திலும்,எவ்வளவோ கோடி+ஆயுதம் கொடுத்து ராஜபட்ஷேக்கு உதவி பண்றாங்க பாரு .. அதை பண்றதுக்கு காங்கிரஸ்காரனை தவிர யாருக்கும் மனசு வராதய்யா***
    இந்தியர்களையே கவனிக்காத கசுமாலங்கள் ஸாரி காங்கிரஸ்கட்சி இலங்கைதமிழர்களையா காப்பாற்றும்.
    //

    உண்மைதான்

    ReplyDelete
  56. @பன்னிக்குட்டி ராம்சாமி said...
    உயர்திரு பட்டாபட்டி அவர்களின் மேன்மைதாங்கிய சமூகத்திற்கு,
    தங்களின் பதிவைப் படித்து இன்புற்றேன். ஆனால் எனக்கு ஒரு பெரிய சந்தேகம் வந்துவிட்டது, தாங்கள் தயை கூர்ந்து அதை நிவர்த்தி செய்வீர்கள் என்ற நம்பிக்கையில் இதை எழுதுகிறேன். அய்யா, நான் ஒரு மிதிவண்டி கூட வாங்க இயலாத ஏழை. எப்போதும் கால்நடையாகவே நடக்கிறேன். தொழில்நிமித்தமாக இரவு நேரங்களில் நெடுஞ்சாலைகளில் அடிக்கடி நான் நடக்க வேண்டியிருக்கிறது. எனவே விபத்துக்களைத் தவிர்த்துக் கொள்ள எனக்கும் மஞ்சள் பெயின்ட் அடிக்க வேண்டுமா? அப்படி அடிக்க வேண்டுமென்றால் எந்த இடத்தில் அடித்துக் கொள்ள வேண்டும்? இதற்காவது அரசு ஏதாவது உதவி செய்கின்றதா என்று தெரியப்படுத்தவும்.
    நன்றி!
    //

    பின்னாடி அடிச்சுக்க..
    முடிஞ்சளவு Water Proof பெயிண்ட் அடிக்கப் பாரு...

    ReplyDelete
  57. @முத்து said...
    பன்னிக்குட்டி ராம்சாமி said...
    கொய்யால இது கேள்வி அது வந்து பெயிண்ட் எங்க அடிகனுமுன்னா...........இருயா மோகன் சொலுறத சொல்லவிடாம பன்னுறதுக்கே நீ இருக்க
    இது தான் பட்டு மேல் உங்களுக்கு காண்டா அப்போ நான் உங்கள் கட்சி,பட்டு ஊருக்கு வரும் போது லெக் பீசை உருவி எனக்கு அனுப்பவும்

    //
    போட்டு தள்ளுங்க முத்து...

    ReplyDelete
  58. @【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
    இப்பதான் பழைய பார்ம் வந்திருக்கு! :))
    //

    ஹி..ஹி

    ReplyDelete
  59. @வால்பையன் said...
    போட்டோவுக்கு கேக் ஊட்டுனா, போட்டோ கேக் சாப்பிடுமா தல!?
    //

    என்ன பாஸ்.. விநாயகரே போட்டோல பால் குடிக்கிறாராம்.. ராகுல் பண்ணமாட்டாரா?

    ReplyDelete
  60. @மங்குனி அமைச்சர் said...
    பன்னாட , பரதேசி எங்கள் தானை தலைவன் , தமிழின பாதுகாவலன் (?????) அண்ணன் ராகுலை தரக்குறைவாக பேசிய பட்டாபட்டியை சாகும் வரை சன் டி.வி பார்க்கும் படி ஆணை இடுகிறேன் (தக்காளி செத்தான் எதிரி )
    பட்டா , எப்ப கட தொறக்குற , எப்ப கடைய மூடுற ஒன்னும் தெரிய மாட்டேங்குது

    //

    ஹி..ஹி ..இதெல்லாம் வாழ்க்கையில சகஜமப்பா...

    ReplyDelete
  61. @Phantom Mohan said...
    அதெப்படியா எதப் பேசுனாலும்,எங்க சுத்துனாலும் நான் வந்த தமன்னாவ இழுத்திர்றீங்க!
    அன்பின் பன்னி (யோவ் இந்த அன்பின் ர வார்த்தைய நான் இங்க வந்தப்புறம் தான் கேக்குறேன், அதுக்கு என்னய்யா அர்த்தம்),
    தாங்கள் தமன்னாவை பற்றி தடித்த வார்த்தை உபயோகப்படுத்தியுள்ளீர்கள். என் தரம் தாழ்ந்த கண்டனங்கள்.
    //


    ரெண்டு பேரும் மாற்றி மாற்றி..போட்டு தள்ளிடுங்க..

    யோவ்..பருப்பு..சீக்கிரமா அடுத்த பதிவ போடுய்யா..

    ReplyDelete
  62. @அரைகிறுக்கன் said...
    பதிவுலக ஆணாதிக்கவாதி பட்டாபட்டியை வன்மையாக கண்டிக்கிறேன்.
    யோவ் நீ சரியான ஆணாதிக்க வாதின்னு நிருபிச்சுட்டியே. ஏன் ராகுல் மட்டும்தான் ராஜீவுக்கு வாரிசா நம்ம பிரியங்கா பொண்ணு இல்லயா. எவ்வளவு தங்கமான பொண்ணு தெரியுமா. நம்ம நளினியவெல்லாம் வந்து சட்டப்படி சந்திச்சுட்டுப் போச்சு. நாட்டுநடப்ப தெரிஞ்சு எழுதுய்யா.
    //


    ஆகா.. தப்பு நடந்துபோச்சு...
    ஓ.கே சார்...ஊர் கூட்டத்தை கூட்டுங்க..டமால்னு கால்ல உளுக நான் வரேன்..ஹி..ஹி

    ReplyDelete
  63. @Jey said...
    பட்டா, இந்த இலுமி,வெளியூரு, எல்லோருக்கும் அவார்ட் கொடுக்குற ஜெய்லானி இவங்கலை இன்ரொடூஸ் பன்னி வையியா, நைஸா என்ன follow panna சொல்லி கவுத்துரலாம்
    இன்னும் என்னை follow pannaatha பட்டாபட்டியை வன்மையாக கண்டிக்கிறேன்.
    //

    முதல்ல பதிவு..அதை படிச்சுட்டு அப்புறம்தான் முடிவு செய்யுவோம்..
    நீரு.. ராமாயணம்..மகா பாரதமுனு எழுத ஆரம்பிச்சா..பின்னங்கால் பிடரிலபட ஓடும் முதல் ஆள் நாந்தான்..ஹி..ஹி

    ReplyDelete
  64. @jey said...
    //”இந்தியாவை தூக்கி நிறுத்தாம , இத்தாலி போகமாட்டாங்க...//
    என்ன பட்டா இன்னும் வெவரமில்லாம இருக்க, அதான் இந்தியக் கொடிய, நெட்டுக்க தொங்க விட்டு அன்னை வர்ற இடத்துலயெல்லாம் இத்தாலி கொடி மாதிரி தொங்க விடுறாங்கலெ இந்த மானங்கெட்ட காங்ரஸ்காரனுக, பெருகு எதுக்கு இவக இத்தாலி போகப்போராக.
    //

    ஏன்னா.. இங்க மக்கள் கருப்பு கலர்ல இருக்கானுக.. அதனால் முடிஞ்சளவு எடுத்துக்கிட்டு
    ஊர் பார்கக போகவேண்டியதுதான்..ஹி..ஹி

    ReplyDelete
  65. @ராஜ நடராஜன் said...
    இருக்கேளா!ஓடிட்டீங்களோன்னு நினைச்சேன்:)
    //

    ஹி..ஹி.. பேஷா.. நன்னாயிருக்கேன்..சார்..இதுக்கு மேல பாஷை தெரியாது..ஹி..ஹி

    ReplyDelete
  66. @ஆண்டாள்மகன் said...
    வருமுன் காத்த எங்கள் வருங்கால வாரிசு பட்டாப்பட்டி வாழ்க .அண்ணனே இது சம்பந்த்தமா ஆலோசனை நம்ம மக்களுக்கு நீங்கதானே வாரி வாரி வழங்கணும்
    //

    பண்ணிட்டாப்போச்சு பாஸ்..எவ்வளவோ பண்ணீட்டோம்..இத பண்ணமாட்டமா?.

    ReplyDelete
  67. @♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
    //அதனால்..மத்திய அரசு சொன்னபடி.. வீட்ல இருக்கும் அண்டா குண்டாவ அடகு வெச்சாவது சைக்கிளுக்கு கலர் மாத்திக்க..இல்லாட்டி வருங்கால சந்ததி உன்னைய மன்னிக்காது..சொல்லீட்டேன்../////////
    தக்காளி இது எல்லாம் நடக்கும்னு தெருஞ்சுதான் என் நைனா மொங்கு வண்டிகூட வாங்கித் தரலையா !

    //

    ஆகா.. அவருக்கு முன்னமே தெரிஞ்சு போச்சு பாஸ்..

    ReplyDelete
  68. @DrPKandaswamyPhD said...
    //மத்திய அரசு நிதி ஒதுக்கும்..அதை சிலபேரு ஒதுக்கிடுவானுக.//

    என்னங்க, அடிமடியிலேயே கை வைக்கறீங்க. எங்க பொளப்ப கெடுத்துடுவீங்க போல இருக்கே?
    இது ஆவாதுங்க, ஆட்டோ அனுப்பிச்சிடவேண்டியதுதான்!
    //

    ஆனா மறக்காம ஆட்டோவுக்கு ஆரஞ்சு கலர் பெயிண்ட் அடிச்சு அனுப்புங்க பாஸ்..அது முக்கியம்

    ReplyDelete
  69. ச்சே..கொஞ்சம் தூங்கிட்டா என்னா ரகளை..என்னா ரகளை..சந்தேகம் கேட்டவரின் அட்ரஸை குடு பட்டா ...இந்த மதிரி சந்தேகம் எனக்கு மட்டும் தான் வரனும் ..ஹி..ஹி..

    ReplyDelete
  70. ஆமா பட்டா செய்கிள் இல்லாதவனுங்கோ என்ன பன்னனும்..

    ReplyDelete
  71. பொடி நடையா வாக்கிங் போரவனுங்கோ என்ன பன்னனும்

    ReplyDelete
  72. பெயிண்ட் அடிச்ச சட்டை போட்டு கிட்டு போவனுமா ? ....

    ReplyDelete
  73. சட்டையே இல்லாத விவசாயி என்ன் பன்னுவான்

    ReplyDelete
  74. உடம்புல வாட்டர் கலரை அடிச்சிகிட்டு போவனுமா ?

    ReplyDelete
  75. இந்த சட்டம் எத்தனை மனி டூ எத்தனை மணி வரை...

    ReplyDelete
  76. ..உஸ் ஆத்தாடி இருங்க மூச்சி வாங்கிக்கிரேன்..ம்..ம்....ம்....

    ReplyDelete
  77. இந்த சட்டம் கிராமத்துக்கு மட்டுமா இல்ல நகரத்துக்கு மட்டுமா ?..

    ReplyDelete
  78. ராத்திரி மட்டும்தான் ஆக்ஸிடெண்ட் ஆகுதுன்னு எந்த பரதேசி சொன்னான்..

    ReplyDelete
  79. பட்ட பகல்ல ஒன்னுமே ஆகரதில்லையா.. அதுக்கு பேரு விபத்து இல்லைன்னா வெர என்ன பேரு..

    ReplyDelete
  80. பெயிண்ட் மேட் என்ன இத்தாலியா ? ஏன்னா முதல்லயே சொல்லிட்டா நல்லது .

    ReplyDelete
  81. இல்லாட்டி முன்ன ஆட்டோவுக்கு நம்பர் பிளேட்கலர் மாத்த சொன்ன கதை மாதிரி ஆகிடும் அதன் கேட்டேன்...

    ReplyDelete
  82. இரு ராஸா தெம்பா ராத்திரிக்கு வரேன் ஹி..ஹி...

    ReplyDelete
  83. தானே விழா எடுக்கும் தானைத் தலைவன்! வாழ்க! வாழ்க!

    ஹீ ஹீ ஹீ..
    சும்மா... ;)

    ReplyDelete
  84. யப்பா இருட்டுல நடந்து போகும்போது மனிதர்கள் விபத்துக்கு உள்ளாகிறார்கள் , எனவே இனி அனைவரும் தலைக்கு புலோரசன்ட் எல்லோ (yellow) கலர் பெயின்ட் அடிக்க சொல்லலாம்ன்னு மத்திய அரசு ஆலோசனை பண்ணுது

    ReplyDelete
  85. ஜெய்லானி said...

    பட்ட பகல்ல ஒன்னுமே ஆகரதில்லையா.. அதுக்கு பேரு விபத்து இல்லைன்னா வெர என்ன பேரு..///


    நிறையா நடக்குது , அதுனால எல்லா வண்டிக்கு இருட்டு கலர்ல பெயின்ட் அடிக்க சொல்லலாம்ன்னு ஒரு ஆலோசனை இருக்கு

    ReplyDelete
  86. ஜெய்லானிக்கு ஒரு சோடா ஒடச்சி குடுங்கப்பா, பாவம் டயர்டாயிட்டாரு.

    ReplyDelete
  87. \\Blogger மங்குனி அமைச்சர் said...
    பன்னாட , பரதேசி எங்கள் தானை தலைவன்//எல்லோரும் பாருங்க அவங்க தலைவர எவ்வளவு பாசமா கூப்பிடுறாங்க

    ReplyDelete
  88. Blogger சிவா (கல்பாவி) said...

    \\Blogger மங்குனி அமைச்சர் said...
    பன்னாட , பரதேசி எங்கள் தானை தலைவன்//எல்லோரும் பாருங்க அவங்க தலைவர எவ்வளவு பாசமா கூப்பிடுறாங்க
    //

    நல்லவேளை..அவனுக தலைவனுக்கு தமிழ் நஹி மாலும்..ஹி..ஹி..

    ReplyDelete
  89. @ஜெய்லானி said...

    //

    ஒரு பதிவவே போட்டுடீங்க போல...

    ReplyDelete
  90. Blogger ILLUMINATI said...

    தானே விழா எடுக்கும் தானைத் தலைவன்! வாழ்க! வாழ்க!
    ஹீ ஹீ ஹீ..
    சும்மா... ;)
    //

    அதுதானே பார்த்தேன்..அந்த பயமிருக்கட்டும்..ஹி..ஹி

    ReplyDelete
  91. பட்டாபட்டி.. said...

    @ஜெய்லானி said...

    //

    ஒரு பதிவவே போட்டுடீங்க போல.../////

    பதிவு இல்ல பட்டா நக்கலு,இது மாதிரி நக்கலு பண்ணுறவங்களுக்கு என்ன தண்டனை குடுக்கலாமுன்னு சொல்லு

    ReplyDelete
  92. பட்டாபட்டி.. said...

    Blogger சிவா (கல்பாவி) said...

    \\Blogger மங்குனி அமைச்சர் said...
    பன்னாட , பரதேசி எங்கள் தானை தலைவன்//எல்லோரும் பாருங்க அவங்க தலைவர எவ்வளவு பாசமா கூப்பிடுறாங்க
    //

    நல்லவேளை..அவனுக தலைவனுக்கு தமிழ் நஹி மாலும்..ஹி..ஹி../////////////


    அப்படியே தெரிஞ்சுட்டாலும்!!!!!!

    ReplyDelete
  93. பட்டாபட்டி...அட்ரஸ் மாறிப் போன லெட்டர் ஒன்னு வந்திருக்கு...அனுப்பட்டா...?

    ReplyDelete
  94. Rettaival's said...

    பட்டாபட்டி...அட்ரஸ் மாறிப் போன லெட்டர் ஒன்னு வந்திருக்கு...அனுப்பட்டா...?

    //

    இது என்ன கேள்வி?.. அனுப்பி வை சாமி...

    ஆனா..கலெக்‌ஷன் மட்டும் உயிரோடவா?..இல்ல டெட் பாடியானு... முதல்யே சொல்லிடனும்..

    ஏன்னா..அதுக்கு தகுஎதமாறிதான் சடங்கு பண்ணுவோம்..ஹி..ஹி

    ReplyDelete
  95. @முத்து said...
    அப்படியே தெரிஞ்சுட்டாலும்!!!!!!

    //

    ஆமா..முத்து..தெரிஞ்சுட்டாலும்..கிழிக்கவா போறானுக?

    ReplyDelete
  96. இவ்வளவு “மாம்” இருக்கும் சைக்கிளினால்.. இந்திய பொருளாதாரம் எங்கோ போய்விடுமாம்..

    எங்கு காங்கிரஸ் வீட்டுக்கா?

    ReplyDelete
  97. //ஒரு பதிவவே போட்டுடீங்க போல...//

    ஹி..ஹி..

    ReplyDelete
  98. @@@ முத்து--
    ஒரு பதிவவே போட்டுடீங்க போல.../////

    பதிவு இல்ல பட்டா நக்கலு,இது மாதிரி நக்கலு பண்ணுறவங்களுக்கு என்ன தண்டனை குடுக்கலாமுன்னு சொல்லு //

    முத்து இரு இரு போட்டு குடுக்கிறியா.. உன் பிளாக்கில வந்து வச்சிக்கிறேன்.

    ReplyDelete
  99. @@@Jey

    ஜெய்லானிக்கு ஒரு சோடா ஒடச்சி குடுங்கப்பா, பாவம் டயர்டாயிட்டாரு.//

    எவ்வளவு நல்ல மனசுய்யா உனக்கு அடுத்த விருது உனக்கும் இருக்கு..ஹி.ஹி..

    ReplyDelete
  100. @சௌந்தர் said...
    // இவ்வளவு “மாம்” இருக்கும் சைக்கிளினால்.. இந்திய பொருளாதாரம் எங்கோ போய்விடுமாம்..//
    எங்கு காங்கிரஸ் வீட்டுக்கா?
    ---------------

    இத்தாலிக்கு

    ReplyDelete
  101. @ஜெய்லானி said...

    மீஈஈஈஈஈஈ 100
    //

    சதம் அடித்த சிங்கமே வருக..வருக..எப்ப வரீங்க..எப்ப போறீங்கனு தெரியமாட்டீங்குது..ஆனா சரியான நேரத்தில வந்து சதம் அடித்ததால்..
    உங்களுக்கு செம்மொழி மாநாட்டில ஒரு பிரைம் டைம் ஸ்லாட் வாங்கி உங்க சந்தேகத்தை நிவர்த்தி செய்ய , நேரம் ஒதுக்கிறோம்..

    அதை சன் டீவி கவரேஸ் பண்ண..தனியா என்ன கவனிங்க..

    ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!