Pages

Friday, March 25, 2011

கேளுங்கள்.. சொல்லப்படும்..

.
.
.
வணக்கம்ண்ணே. தேர்தல் சூடு பிடிச்சாலும் பிடிச்சது, என்னால் தெருவில்  நிம்மதியா நடக்ககூட முடியலண்ணே.     டீ குடிக்கபோனாலும் கூடவே வரானுக.       முகம் மழிக்க, பார்பர் ஷாப் போனாலும் தொல்லை.   சரி.. வேணாம்.     சினிமாவுக்கு போகலாம்னு போனா.. அங்கேயும் வந்துடரானுக.!

அன்னைக்கு எங்க வீட்டு டாய்லெட்-ல உக்காந்து கக்கா போய்கிட்டு  இருந்தண்ணே.   அங்கயும் வந்து கதவ தட்டுரானுக.    எவண்டானு அவசரமா வெளிய வந்தா...........    என்னொட கைய பிடிச்சுக்கிட்டு  ”எனக்கு ஓட்டு போடு. உனக்கு இதை தரேன். ஊட்டுக்காரம்மாக்கு அதைத்தரேன். உன்னோட  குழந்தைக்கு கம்யூட்டர் தரேன்”னு   உருகரானுக கூட்டமா.
யோவ்.. ’முதல்ல என்னோட, கைய திருப்பி தாங்கடா. கழுவனும்’னு  கத்தறேன்.. கதறரேன்.    ஊகூம்..   எவன் காதிலையும் விழவேமாட்டீங்குது..

பாருங்களேன்.. அன்னைக்கு இப்படித்தான்.  மூக்கு அடைச்சிருச்சுனு, சீந்த கைய கொண்டுபோனேன். ரெண்டு பேர் ஓடி வந்தானுக. வந்ததும், ”நாங்க உனக்கு   இலவசமா சீந்திவிடரோம்னு” நிற்கானுக.   அதைப்பார்த்துட்டு, அடுத்த குரூப். அதுல பெண்கள் வேற!!.  ஏதோ மகளிரணியாம்!!!  அவனுக வந்து..  ”எதிர்கட்சிக்காரனை நம்பாதே.. நாங்க சீந்திவிட்டு, நகத்தையும் இலவசமா வெட்டிவிடுவோம்”னு அலம்பரானுக.  

ஆங்.. சொல்லமறந்துட்டேனே. சிலவருசத்துக்கு முன்னாடி, எங்க அப்பன், ஜெயலலிதா அம்மாவுக்காக, நாக்கை வெட்டி, கோயில் உண்டியல்ல போட்டவரு..    எங்கே பார்த்தாலும் வாரிசு அரசியல் வேற.    ஏதாவது ஆர்வக்கோளாரு-ல,   எங்கப்பன் வாரிசா , என்னைய அறிவிச்சுட்டு,  ’வேறஎதையாவது வெட்டிட்டானுகனா’?.       அதனாலே... ஒரே ஓட்டமா வீட்டுக்குள்ள ஓடிப்போயிட்டேன்.

சரி அதை விடுண்ணே..  இப்ப நேரா பிரச்சனைக்கு வரேன். பதிவுலக மூத்தவர், ’என்னிய கேள்வி கேளு..பதில் சொல்றேன்’னு போட்டிருந்தாரே ஒரு விளம்பரம்.        அதை நம்பி, ஒரு கேள்வி கேட்டுத்தொலச்சிட்டேன். ங்கொய்யா... அனுப்புனாரு பாருங்க பதிலை.. ஆடிப்போயிட்டேன்.
 
என்னமோ ஒரு கேள்விக்கு ரூ 100, மணியார்டர் அனுப்பனுமாம்.  அதுவுமில்லாம, என்னோட ஜாதகம், சாதி.. ஆங்.. வீட்டுக்காரியோட குலம் கோத்திரம்  இதெல்லாம் சொன்னா,  10% தள்ளுபடி செய்வாராம்.   நமக்கு இதெல்லாம் சரிப்பட்டு வராதுண்ணே.   அதான் நேரா இங்க வந்துட்டேன்.
அதுவுமில்லாம , என்னொட மாமன் முதல்வர் வீட்டுல,  கார் டிரைவரா இருக்கேன்.    கூட்டிக்கிட்டு வருவது.. கொண்டுபோய் விடுவது..   நல்ல பணப்புழக்கம்.

இப்ப என்னோட பிரச்சனை இதுதான்ணே.   ஒத்தைப்பையனை, தவமிருந்து பெத்தோம்.    ஆனா பாவிப்பய.. 15 வயசுதான் ஆச்சு.. இப்பவே பீடி, குடி கூத்தி-னு சுத்திக்கிட்டு   இருக்கான். படிப்போ சுத்தம்!!.  என்ன பண்ணினா, அவனோட வாழ்க்கை பிரகாசிக்கும்?.     நல்ல பதிலை சொல்லி, என்னோட வாழ்க்கையில விளக்கை ஏத்திவையுங்கண்ணே..   ப்ளீஸ் (ஹி..ஹி நானும் அந்த காலத்து அஞ்சாம் வகுப்பு. கனிமொழியக்கா   மாறியே இங்கிலீசு பேசவரும்..)

அன்புடன் ஜெய்சிங்கம்

==================================
வாய்யா ஜெய்ஜங்ங்ங்கம்...
அரசியல் ஒரு ’சாக்கடை தேசம்’. அதை ’பூக்கடை தேசமா’க்க, யாராலும்  முடியாது.    ஆனால், அதில் நீந்தி, கரை சேர்வது எப்படினு வேணா  சொல்லித்தரேன்.   ஆமா..அந்த பதிவர்கிட்ட கேள்விகேட்கனுமுனா, நீ அவாளா இல்லை இருக்கனும். சரி விடு.. பதிவரசியல் நமக்கெதற்கு..?

மேட்டருக்கு வரேன்.
  • ’எங்கே தவமிருந்து’ உம் பிள்ளைய பெத்தேனு சொல்லவேயில்லை. அது முதல் தப்பு.
  • அஞ்சாம்வகுப்புவரை படிச்சிருக்கேனு பெருமையா சொன்னபாரு.. அது அடுத்த தப்பு.
  • அவனுக வேற எதையாவது வெட்டிடுவானுகனு ஓடின பாரு.. அது மூணாவது தப்பு.
  • கடைசியா, என்னைய பெரியமனுஷன்னு நினச்சு வந்து கேட்டிருக்க பாரு கேள்வி?.. தக்காளி.. அது உலகமகா தப்புய்யா..

சரி.விடு..  ஈரை பேனாக்கி, பேனை பெருமாளாக்கி..மேல..மேல..எப்படி ஏறுவது-னு பார்ப்போம்..    பள்ளிவாழ்க்கையையே எடுத்துக்கோ.( பெண்புர்ர்ரசியாளர்கள் தயைகூர்ந்து ’பள்ளியறை’ என நினக்கவேண்டாம்.  ’இஸ்கூலு’.. அதைதான் குறிப்பிட்டேன்.)

நன்குபடித்து முதலிடம் வருபவர்கள், ’இஞ்சினியரு, டாக்டர்’னு செட்டில் ஆயிடுவானுக. ஓகேயா..

இரண்டாமிடத்தில் வருபவர்கள், ’கட்டடவேலை, மில்லுவேலை, சிலபேரு வீட்டுக்காரரா’, லைப்-ல  செட்டில் ஆயிடுவானுக..

என்னதான் படிச்சு பெரிய பதவியில் இருந்தாலும், முதலிடம் வந்தவர்களை... ’வீடோ, இல்லை மில்லையோ’ கட்டச்சொல்லுங்க பார்க்கலாம்.. முடியாது மச்சி.. இரண்டாம் இடத்துக்காரனுககிட்ட, கையகட்டி, வாயப்பொத்தி நின்னாத்தான் வேலை நடக்கும். இப்ப இதுல யாரு பெரியவனுக? ரோசனை பன்ணு..

அடுத்து..மூன்றாம் இடத்தில் வரும் மூதேவிகள்.. இவனுக பலே மூள(ல)க்காரனுக. எப்படியோ வட்டம், மாவட்டம் , தேசிய அரசியல்னு பூந்து.. மேல சொன்னேன் பாரு ரெண்டு கோஷ்டி.. அவனுகளையே அடிமைப்படுத்தி.. பார்க்குற இடத்தில் எல்லாம்.. கைய கட்டி கும்ம்பிட வெச்சுருவானுக..

சரி.. இதெல்லாம் பள்ளிப்படிப்பை முடிச்சவனுகளுக்கு..     இப்ப, உன்னோட பையன்மாறி.. பள்ளீக்கூடமே போகாம.. சுத்திக்கிட்டு இருக்கானுகபாரு..
எப்படியும், நீ வளர்த்த லட்சணத்தில..அவன் எங்கேயோ(?)  போகப்போறான். !!!
வேலை வெட்டி கிடைக்காது. இப்பவே குடி.. .சீக்கிரம் ’தாதா’ ஆகிடுவான். அப்பால.. இந்த அரசியல் நாதாரிக..இவனுகளை பார்த்து..... ’முன்னாடி பின்னாடி பொத்திக்கிட்டு நிப்பானுக’.. 

அப்ப மட்டும் ஒரு சிச்சுவேஷன் சாங்கை மறந்துடாதே...
”மாபெரும் சபையினில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழவேண்டும்”

அப்பன் நாக்கை அறுத்து..உண்டியல்ல போட்டானாம்!!. அதை பெருமையா வேற நினச்சுக்கிட்டு வந்து கேள்வி கேக்குற பாரு.. உனனைய.....%$$#@

போய்யா.. போ.. புள்ளக்குட்டிகளை வெளிநாடு அனுப்பிச்சு வை.. அவனுகளாவது உருப்படுட்டும்...

53 comments:

  1. ’முதல்ல என்னோட, கைய திருப்பி தாங்கடா. கழுவனும்’னு கத்தறேன்.. கதறரேன். ஊகூம்.. எவன் காதிலையும் விழவேமாட்டீங்குது..//

    நல்லா கேட்டீங்களா? ஒருவேள அதுக்குதான் வந்துருப்பாங்க..

    ReplyDelete
  2. ஏதோ மகளிரணியாம்!!! அவனுக வந்து.. ”எதிர்கட்சிக்காரனை நம்பாதே.. நாங்க சீந்திவிட்டு, நகத்தையும் இலவசமா வெட்டிவிடுவோம்”னு அலம்பரானுக.//

    மூக்கு சிந்தவும் நகம் வெட்டவும் மட்டும் மகளிர் அணியா? இது அப்பட்டமான ஆணாதிக்கம்.. ஹி ஹி அவங்களோட வேலையே வேற.. என்னன்னு சாமிகிட்ட கேளுங்க :))

    ReplyDelete
  3. (ஹி..ஹி நானும் அந்த காலத்து அஞ்சாம் வகுப்பு. கனிமொழியக்கா மாறியே இங்கிலீசு பேசவரும்..)//

    நான் ஏதோ ரெண்டாம் வகுப்புதான் பாஸ்.. அவுக அம்மா அளவுக்குத்தான் வரும் :))

    ReplyDelete
  4. //”எனக்கு ஓட்டு போடு. உனக்கு இதை தரேன். ஊட்டுக்காரம்மாக்கு அதைத்தரேன். உன்னோட குழந்தைக்கு கம்யூட்டர் தரேன்”னு உருகரானுக கூட்டமா.
    யோவ்.. ’முதல்ல என்னோட, கைய திருப்பி தாங்கடா. கழுவனும்’னு கத்தறேன்.. கதறரேன். //

    ஹ ..ஹா ...வர வர உனக்கு ஓவர் குசும்பு ..டோமரை கூப்பிட்டு நக்க சொல்லணும் ..அப்ப தான் நீங்க சரி பட்டு வருவீங்க ...

    எழுத்து பிழை அதனால் முன்தின கமெண்ட் டெலீட் செய்ய பட்டது

    ReplyDelete
  5. எனிக்கும் ஒன்னிமே பிரியலே பட்டா... இப்பிடி அல்லாத்தியும் பட்டா போட்டு கொட்தானுகன்னு வய்யி,, பின்னே அவனுக எங்க போயி கொள்ளை அடிப்பானுக..

    ReplyDelete
  6. .( பெண்புர்ர்ரசியாளர்கள் தயைகூர்ந்து ’பள்ளியறை’ என நினக்கவேண்டாம். ’இஸ்கூலு’.. அதைதான் குறிப்பிட்டேன்.)//

    புர்ர்ச்சியாலர்களே... பாருங்க இவரு வெறும் இஸ்கூலுன்னுதான் சொல்றாரு.. எத சொல்லிக்கொடுக்கிற இஸ்கூளுன்னு சொல்லல... புர்ர்ச்சி வெடிக்கட்டும் பட்டாவுக்கு எதிராக

    ReplyDelete
  7. பட்டா பாருய்யா என்னமோ ஆரிய பவனுக்கு போனவன்க்கிட்ட ஆர்டர் கேட்டா மாதிரி கேட்டு இருக்கானுங்க.......ஆங் அப்புறமாவது உங்க அந்த வேலைய முடிக்க விட்டானுங்களா இல்லையா.....

    ReplyDelete
  8. ம்..ம்.. நடத்துங்க..நடத்துங்க..

    ReplyDelete
  9. எஙக‌ள் அண்ண‌ன் தொஙக‌பாலு(டு) அவர்க‌ள், அவ‌ரின் துணைவியார் அவ‌ர்க‌ளுக்கு க‌டுமையான போராட்த்திற்கு பிற‌கு சீட்டு வாஙகியுள்ளார்.

    அன்னை (ச‌)சோனியா வாழ்க‌.

    பாட்டாப‌ட்டி, சென்னையில் வரும் போது அவரை எதிர்த்து தொஙக‌பாலு(டு) காஙகிரஸ் சார்பாக‌ க‌ண்ட‌ன‌ ஆர்பாட்ட‌ம், பாட்டாப‌ட்டி க‌க்கா போகும்வ‌ரை நட‌த்த‌ப்ப‌டும்.

    அன்னை (ச‌)சோனியா வாழ்க‌!
    இந்தியாவின் புத‌ல்வ‌ன் (இந்தியாவின் மாமா மாதிரிப்பா) ராகுல் வாழ்க‌!
    பாட்டாப‌ட்டி ஒழிக‌. இளஙகோவ‌ன் ஒழிக‌.

    இப்ப‌டிக்கு,
    தொஙக‌பாலு(டு)
    தொஙக‌பாலு(டு) காஙகிரஸ்

    ReplyDelete
  10. @வைகை
    முதல்ல என்னோட, கைய திருப்பி தாங்கடா. கழுவனும்’னு கத்தறேன்.. கதறரேன். ஊகூம்.. எவன் காதிலையும் விழவேமாட்டீங்குது..//
    நல்லா கேட்டீங்களா? ஒருவேள அதுக்குதான் வந்துருப்பாங்க..//

    ஹி..ஹி ..

    //
    மூக்கு சிந்தவும் நகம் வெட்டவும் மட்டும் மகளிர் அணியா? இது அப்பட்டமான ஆணாதிக்கம்.. ஹி ஹி அவங்களோட வேலையே வேற.. என்னன்னு சாமிகிட்ட கேளுங்க :))
    //
    சூ..சூ சுப்பரமணிகிட்டவா பாஸ்?



    //
    நான் ஏதோ ரெண்டாம் வகுப்புதான் பாஸ்.. அவுக அம்மா அளவுக்குத்தான் வரும் :))
    //

    ஓ.. பெரும் தொழிலதிபர்மாறினு சொல்லுங்க


    // புர்ர்ச்சியாலர்களே... பாருங்க இவரு வெறும் இஸ்கூலுன்னுதான் சொல்றாரு.. எத சொல்லிக்கொடுக்கிற இஸ்கூளுன்னு சொல்லல... புர்ர்ச்சி வெடிக்கட்டும் பட்டாவுக்கு எதிராக//

    அண்ணே. அன்னைக்கு கூட்டத்துக்கு, சூசு சப்ளை நம்ம மச்சான்தான். பாவம்.. அவனும் பொழச்சுப்போகட்டும்..

    ReplyDelete
  11. @இம்சைஅரசன் பாபு
    ஹ ..ஹா ...வர வர உனக்கு ஓவர் குசும்பு ..டோமரை கூப்பிட்டு நக்க சொல்லணும் ..அப்ப தான் நீங்க சரி பட்டு வருவீங்க ...
    //

    ஏண்ணே.. நக்குனா.. என்னொட கைய விட்டுவானுகளா?

    ReplyDelete
  12. @கே.ஆர்.பி.செந்தில்
    எனிக்கும் ஒன்னிமே பிரியலே பட்டா... இப்பிடி அல்லாத்தியும் பட்டா போட்டு கொட்தானுகன்னு வய்யி,, பின்னே அவனுக எங்க போயி கொள்ளை அடிப்பானுக..
    //

    ஹி..ஹி சீக்கிரம் நாம... வெளிநாட்டுல, துண்டைப்போட்டு..செட்டில் ஆகிடனும் போல இருக்கு பாஸ்..

    ReplyDelete
  13. @விக்கி உலகம் said...
    பட்டா பாருய்யா என்னமோ ஆரிய பவனுக்கு போனவன்க்கிட்ட ஆர்டர் கேட்டா மாதிரி கேட்டு இருக்கானுங்க.......ஆங் அப்புறமாவது உங்க அந்த வேலைய முடிக்க விட்டானுங்களா இல்லையா.....
    //

    நண்பேண்டா...
    நல்ல வேளை.. ஞாபகப்படுத்தினீங்க.. இதோ.. கழுவிட்டு வரேன்..

    ReplyDelete
  14. ஒரு தேர்தல் எத்தனை பேரை ஆட்டுது பாத்திங்களா ?

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    பதிவுலகில் சமூகபதிவாளனாக என்னை முத்திரை குத்திய முக்கிய சாதனை
    இனி வரும் பொழுதுகளில் தங்கள் தளத்திற்கு வாரம் ஒரு தடவையே வர முடியும் என்பதை மன வருத்தத்துடன் அறியத் தருகிறேன்...

    ReplyDelete
  15. நீங்க பின்னுங்க ராசா:))))

    ReplyDelete
  16. ஏமார்ந்த பொதுமக்களை வைத்துக் கொண்டுதான் இவர்கள் அரசியல் நடத்த முடியும்..

    மக்கள் தெளிந்தால் அரசியல் வாதிகளுக்கு இங்கு வேலையில்லை..

    ReplyDelete
  17. @♔ம.தி.சுதா♔ said...
    ஒரு தேர்தல் எத்தனை பேரை ஆட்டுது பாத்திங்களா ?
    //

    ஆமா சார்.. ஆமா...

    // இனி வரும் பொழுதுகளில் தங்கள் தளத்திற்கு வாரம் ஒரு தடவையே வர முடியும் என்பதை மன வருத்தத்துடன் அறியத் தருகிறேன்...//

    அய்யே.. இன்னாது இது.. பொம்பளைபுள்ளமாறி அழுதுக்கிட்டு?..
    ஆகா..இந்த வார்த்தைக்கே... பட்டாபட்டி செத்தாண்டா.!!!.
    எவ்வளவு பேரு சண்டைக்கு வரப்போறாங்களோ?..

    தலீவா.. நமக்கு ஒரு சேர் ரெடிபண்ணு... இதோ பிரச்சாரத்துக்கு கிளம்பிட்டேன்..

    ReplyDelete
  18. @வானம்பாடிகள் said...
    நீங்க பின்னுங்க ராசா:))))
    //

    வாங்க பாஸ்... ஆள் இருக்கீகளா?.. இலலை தேர்தல் பிஸியா சார்?

    ReplyDelete
  19. @ # கவிதை வீதி # சௌந்தர் said...
    ஏமார்ந்த பொதுமக்களை வைத்துக் கொண்டுதான் இவர்கள் அரசியல் நடத்த முடியும்..
    மக்கள் தெளிந்தால் அரசியல் வாதிகளுக்கு இங்கு வேலையில்லை..
    //

    என்னாது தெளிந்தாலா..?

    யார் அங்கே.. டாஸ்மார்க் கடைகளை அதிகப்படுத்துங்கப்பா.. மக்கள் கேள்வி கேக்குறாங்க..

    ReplyDelete
  20. > பதிவுலக மூத்தவர், ’என்னிய கேள்வி கேளு..பதில் சொல்றேன்’னு போட்டிருந்தாரே ஒரு விளம்பரம்.

    யாருண்ணே இந்த பதிவுலக மூத்தவர்???

    ReplyDelete
  21. 'அ'னா 'ஆ'வன்னா said...

    > பதிவுலக மூத்தவர், ’என்னிய கேள்வி கேளு..பதில் சொல்றேன்’னு போட்டிருந்தாரே ஒரு விளம்பரம்.

    யாருண்ணே இந்த பதிவுலக மூத்தவர்???
    //

    டோமரு..
    .
    .
    அடுத்த கேள்வி..
    .
    .
    .
    யார்ண்ணே அந்த டோமரு?
    .
    .
    அதை மட்டும் Dont' ask me..
    மீறிக்கேட்டா.. டோண்டு-னு யாராவது சொல்லிடுவாங்க..!!!

    அதனாலதான் யாருக்கும் சொல்லக்கூடாதுனு மங்குனிகிட்ட சத்தியம் பன்ணியிருக்கேன்

    அதனால... யாருனு கேக்காதீங்க..

    ReplyDelete
  22. //போய்யா.. போ.. புள்ளக்குட்டிகளை வெளிநாடு அனுப்பிச்சு வை.. அவனுகளாவது உருப்படுட்டும்...//

    ஏன்?அங்க போய் இருக்குற பசங்க பட்டாவையெல்லாம் கழட்டறதுக்கா:)

    ReplyDelete
  23. Blogger ராஜ நடராஜன் said...

    //போய்யா.. போ.. புள்ளக்குட்டிகளை வெளிநாடு அனுப்பிச்சு வை.. அவனுகளாவது உருப்படுட்டும்...//

    ஏன்?அங்க போய் இருக்குற பசங்க பட்டாவையெல்லாம் கழட்டறதுக்கா:)
    //
    ஹி..ஹி.. அப்படி இல்லண்ணே,,
    தமிழ்நாட்டுல இருந்தா.. களத்தில் இறங்கி வேலை செய்ய சொல்றாங்க.. அதான் கிரேட் எஸ்கேப்-க்கு.. ஹி..ஹி

    ReplyDelete
  24. வேறஎதையாவது வெட்டிட்டானுகனா’?. அதனாலே... ஒரே ஓட்டமா வீட்டுக்குள்ள ஓடிப்போயிட்டேன்.//
    ஒரு ஆடு தப்பிச்சிருச்சு

    ReplyDelete
  25. போய்யா.. போ.. புள்ளக்குட்டிகளை வெளிநாடு அனுப்பிச்சு வை.. அவனுகளாவது உருப்படுட்டும்//
    அங்கியும் டின்னு கட்டுறானுகளாம் தல

    ReplyDelete
  26. Blogger ஆர்.கே.சதீஷ்குமார் said...

    போய்யா.. போ.. புள்ளக்குட்டிகளை வெளிநாடு அனுப்பிச்சு வை.. அவனுகளாவது உருப்படுட்டும்//
    அங்கியும் டின்னு கட்டுறானுகளாம் தல
    //

    ஹி..ஹி.. நான் இத்தாலிய சொன்னேன்... எங்க தாய் நாடு.. ஹி..ஹி

    ReplyDelete
  27. என்னத்த சொல்ல பாஸ்....
    இன்றைய என் பதிவு....
    http://ragariz.blogspot.com/2011/03/political-pages-from-rahim-gazali.html

    கலைஞரும் ஜெயலலிதாவும் எம்புட்டு நல்லவுங்களா இருக்காக......

    ReplyDelete
  28. பட்டாப்பட்டி அண்ணே பி யு பி தண்ணிய கொஞ்சம் குறைவா குடிங்க . ஓவரா புல்லரிக்குது .

    ReplyDelete
  29. //போய்யா.. போ.. புள்ளக்குட்டிகளை வெளிநாடு அனுப்பிச்சு வை.. அவனுகளாவது உருப்படுட்டும்...//

    அப்புறம் மருமக வெளி நாட்டு காரியா தான் வரும் பரவாயில்லையா ..நா இததாலியை சொல்லலை ஹி..ஹி.. :-))

    ReplyDelete
  30. //கடைசியா, என்னைய பெரியமனுஷன்னு நினச்சு வந்து கேட்டிருக்க பாரு கேள்வி?.. தக்காளி.. அது உலகமகா தப்புய்யா..//

    அதானே எங்கே வந்து என்ன கேள்வி இது ..ஹா..ஹா.. !! :-))

    ReplyDelete
  31. வக்காளி ...,இங்க அடிபோம்யா ..,கும்மிய !!!!!!!!!!!

    ReplyDelete
  32. மச்சி ..,உன்னக்கு ரசிகர் பட்டாளம் கூடிட்டு போய்டி இருக்கு ..,அதுனாலே ...,சீக்கிரம் சிக்கிரம் ..கைய கழுவிட்டு வா மச்சி .., I LOVE PATTAPATTI BLOG

    ReplyDelete
  33. ///////வணக்கம்ண்ணே. /////

    இன்னும் டாஸ்மாக் ஓபன் பண்ணலே ..,மன்குனிய இப்போவே லைன் ல இருக்க சொல்லி அனுப்பி வைச்சிட்டேன் ...,அதுக்கு அப்புறம் தாம் கும்மி .,( மங்குனி : யோவ் காலைல இருந்து ஒரு க்வாட்டர் கூட கிடைக்கல ,மனான் கனி மொழி அக்கா கிட்ட சொல்ல போறேன் )

    ReplyDelete
  34. யோவ் ..பட்டு ..,லக்கி லுக் அண்ணே கிட்டே சொல்லி அட்ரஸ் வாங்கி குடுயா

    ReplyDelete
  35. @நரி
    //

    யாருய்யா அது.. ஆளே இல்லாத கடையில வந்து சலம்பிட்டு இருப்பது?..

    ஹி..ஹி

    ReplyDelete
  36. Blogger maruthu said...

    பட்டாப்பட்டி அண்ணே பி யு பி தண்ணிய கொஞ்சம் குறைவா குடிங்க . ஓவரா புல்லரிக்குது .
    //

    புல்லரிக்குதா இல்லை நாறுதா பிரதர்...?

    ReplyDelete
  37. ஜெய்லானி said...

    //கடைசியா, என்னைய பெரியமனுஷன்னு நினச்சு வந்து கேட்டிருக்க பாரு கேள்வி?.. தக்காளி.. அது உலகமகா தப்புய்யா..//

    அதானே எங்கே வந்து என்ன கேள்வி இது ..ஹா..ஹா.. !! :-))
    //

    நண்பேண்ண்ண்ண்ண்ட்டா...!!!!

    ReplyDelete
  38. /////பதிவுலக மூத்தவர், ’என்னிய கேள்வி கேளு..பதில் சொல்றேன்’னு போட்டிருந்தாரே ஒரு விளம்பரம்.

    யாருண்ணே இந்த பதிவுலக மூத்தவர்???
    //

    யோவ் ..,யாருயா நீ ..,ரத்னா கபே ஹோட்டெல போண்டா சாம்பார் ல தோய்ச்சி தோச்சி ..ஊற வச்சி திம்பாரே ..,அவர் தான் ஒய் ..,நீ பூணுல் போட்டு இருந்தீனா உன்னக்கு ரெண்டு போண்டா வாங்கி தருவார்

    ReplyDelete
  39. ////// யாருய்யா அது.. ஆளே இல்லாத கடையில வந்து சலம்பிட்டு இருப்பது?../////

    அது ஒன்னும் இல்ல பட்டா ..,கொல வெறில இருக்கேன் ..,எவனாவது மாட்டுனா டிபன் க்கு ஆகுமே தான்

    ReplyDelete
  40. ஏற்கெனவே பட்டாபட்டியோட ஆட்டம் தாங்கமுடியாது. இதுல தேர்தல்னு சொல்லிட்டு பட்டாபட்டிய கழட்டிட்டு கால்ல சலங்கைய கட்டிவிட்டுட்டானுக.
    இன்னும் ஒரு மாசத்துக்கு பிளாக்ஸ்பாட்டே (ரொம்ப அதிகமா) நாறப்போகுது.

    ReplyDelete
  41. யோவ் ரெண்டு முட்ட தோசையும் நாலு வடையும் பார்சல் கட்டுய்யா........

    ReplyDelete
  42. /////எங்க அப்பன், ஜெயலலிதா அம்மாவுக்காக, நாக்கை வெட்டி, கோயில் உண்டியல்ல போட்டவரு.. எங்கே பார்த்தாலும் வாரிசு அரசியல் வேற. ஏதாவது ஆர்வக்கோளாரு-ல, எங்கப்பன் வாரிசா , என்னைய அறிவிச்சுட்டு, ’வேறஎதையாவது வெட்டிட்டானுகனா’?. ///////

    அட விடுய்யா... சொல்லாமலே படத்துல லிவிங்ஸ்டனும்தான் வெட்டிக்கிட்டாரு பிகருக்காக...... இதுக்குப் போயி பொலம்பிக்கிட்டு...... அத வெச்சி அப்பிடி என்னய்ய்யா பண்ணப் போறே? பேசமா வாரிசாகி 3000 கோடி 4000 கோடின்னு வாங்கி எண்ணி எண்ணி வெளையாடுவியா.... அத விட்டுப்புட்டு...

    ReplyDelete
  43. /////போய்யா.. போ.. புள்ளக்குட்டிகளை வெளிநாடு அனுப்பிச்சு வை.. அவனுகளாவது உருப்படுட்டும்...//////

    வெளிநாட்ல இப்போ இதுக்கெல்லாம் படிப்பு வந்துடுச்சா...... சே நாம இதுல கூட பின் தங்கி இருக்கோமா?

    ReplyDelete
  44. அண்ணன் பட்டா பட்டி இந்திய அரசியலை கேவலப்படுத்தி விட்டதாலும், பதிவுலக சீனியர்களை அவமானப்படுத்தி விட்டதாலும் நான் வெளி நடப்பு செய்கிறேன்

    ReplyDelete
  45. அப்பாவிMarch 26, 2011 at 7:58 PM

    பட்டாப்பட்டி .. இந்த வாரம் ஜூ வீ படிச்சியா. ??? மீண்டும் பதவிக்கு வர நரபலி கொடுத்து இருக்காங்க .... இவனுங்கள என்ன பண்ணலாம்..

    ReplyDelete
  46. நமக்குப் பேப்பர்தானே.........எப்பக் கழுவினோம்?

    ReplyDelete
  47. அண்ணே! கடைசில கையை கழுவிட்டு தானே இந்த கட்டுரையை டைப் அடிச்சீங்க?

    ReplyDelete
  48. my new post : தேர்தல் 2011 , ஓட்டு அள்ளும் பதிவர்கள் ...

    ///
    சும்மா ஆடு அறுக்குறோம் , கோழி அறுக்குறோம் , கெடா வெட்டறோம் பொங்க வைக்குறோம் ன்னு இவங்க பண்ணுற அழிச்சாட்டியம் தாங்க முடிய ( இது பட்டாபட்டி யையோ இல்ல , மங்குனி அமைச்சர் ரியோ குறிப்பதாக நினைத்தால் அதற்க்கு கம்பெனி பருப்பு வேகாது , அட ச்சா , கம்பெனி பருப்பாகாது , அட ச்சா ........கம்பெனி பொறுப்பாகாது ..... ) ( அப்பாடி ரெண்டு போரையும் வம்புக்கு இழுத்தாச்சு ஹி ஹி . . . ) ///

    ReplyDelete
  49. @ராவணன்
    நமக்குப் பேப்பர்தானே.........எப்பக் கழுவினோம்?
    //

    இல்லண்ணே.. பேப்பர் யூஸ் பன்ணினா...... ’குஷ்பூ கழகத்தில ஒட்டிக்கிட்டு இருக்குறமாறி ஒரு பீலிங்...’

    அதனாலே...முடிஞ்சளவு தண்ணிதான்!!!

    ReplyDelete
  50. வடிவேலு சிலாங்க் இனிமே உபயோகிக்காதீங்க...

    அந்த ஆளு விஜயகாந்தை பத்தி பேசுனதுல இருந்து அவரு மேல இருந்த மரியாதை எல்லாம் போயிடுச்சு.

    என்ன தான் விஜயகாந்த் தப்பு பண்ணி இருந்தாலும், இப்புடி பொதுவுல வச்சு அவன் இவன் லூசுன்னு வாரக்கூடாது.

    மத்தபடி கேள்வி பதில் அருமை. தொடர்க...

    ReplyDelete
  51. Blogger சி.பி.செந்தில்குமார் said...

    அண்ணன் பட்டா பட்டி இந்திய அரசியலை கேவலப்படுத்தி விட்டதாலும், பதிவுலக சீனியர்களை அவமானப்படுத்தி விட்டதாலும் நான் வெளி நடப்பு செய்கிறேன்
    //

    சந்தோசம்ண்ணே..!!

    ReplyDelete
  52. Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

    யோவ் ரெண்டு முட்ட தோசையும் நாலு வடையும் பார்சல் கட்டுய்யா........
    //

    ஏன்.. சாப்பிட்டுட்டு, காப்பி கொட்டையா வெளிய எடுப்பியா?..
    ஹி..ஹி

    ReplyDelete
  53. Blogger வானம் said...

    ஏற்கெனவே பட்டாபட்டியோட ஆட்டம் தாங்கமுடியாது. இதுல தேர்தல்னு சொல்லிட்டு பட்டாபட்டிய கழட்டிட்டு கால்ல சலங்கைய கட்டிவிட்டுட்டானுக.
    இன்னும் ஒரு மாசத்துக்கு பிளாக்ஸ்பாட்டே (ரொம்ப அதிகமா) நாறப்போகுது.
    //

    ஹல்லோ பிரதர்..
    இரு காந்தியவாதிய பார்த்து... இன்னா கேள்வி கேட்டுப்புட்டீங்க?

    ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!