Pages

Tuesday, July 13, 2010

நல்லாயிருங்கலே..

நூசு..அதாம்பா செய்தி..

யுஎன்டிபி(UNDP) முயற்சியுடன், வறுமையை அளவிடும் எம்பிஐ (Multidimensional Poverty Index - MPI) எனப்படும் முறையில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த விவரம் தெரியவந்துள்ளது.

ஆப்ரிக்காவில் உள்ள 26 ஏழைநாடுகளில் உள்ளவர்களை( 410 மில்லியன்) விட, இந்தியாவின் 



  • பீகார்,
  • சட்டீஸ்கர்,
  • ஜார்க்கண்ட்,
  • மத்தியபிரதேசம்,
  • ஒரிஸ்ஸா,
  • ராஜஸ்தான்,
  • உத்தரபிரதேசம்,
  • மேற்கு வங்கம்... 

ஆகிய 8 மாநிலங்களில் உள்ள (421 மில்லியன்) மக்கள் மிக அதிக வறுமையில் வாடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

=========================================================

நாடு சுதந்திரம் அடைந்து பலவருடங்களாகிவிட்டது..
ஒரே குடும்பத்திலிருந்து வந்த,  தாத்தா..மாமா..அத்தை..மருமகள்..பேரன்.. என ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து  நாட்டை செம்மைப்படுத்தி, இப்போது பாலும் , தேனும் ஓடுவதை பார்க்க சந்தோசமாக இருக்கிறது..

ஒருவர் தன் கடமையை முழுமூச்சாக செய்தால்....மக்களாகிய நாம் பாராட்டவேண்டும்..  அப்போதுதான், ஆட்சியாளர்களின் மனம் குளிர்ந்து , மேலும் மேலும் , நாட்டை வளமாகக் பாடுபடுவார்கள்.

ஆகவே...இந்த பொன்னான தருணத்தில, மனமுவந்து ,எனது நல்வாழ்த்துக்களை , இந்த பதிவின் மூலம் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்..

மக்கா..வரும் தேர்தலில்..அழகா உங்க வாக்கை..........இவர்களுக்கே விற்றுவிடுங்கள்(?)..  அப்போதுதான் , மேற்கண்ட லிஸ்டில், ஒன்பதாவது மாநிலமாக நம்மை இணைக்கமுடியும்...

வாழ்க காங்கிரஸ்..
வளர்க மக்கள்..
வளர்க வள்ளுவரும், அவரது குடும்பமும்..


( என்னது ..தமிழக மீனவன, சிங்களப்படை சுட்டுட்டாங்களா?..
அட..விடுங்க சார்..    நம்ம ராகுல் காந்திக்கு வயசாகிட்டே போகுது. எப்ப கலயாணம்?னு தங்கபாலுவ கேட்டுச்சொல்லுங்க...புண்ணியமாப்போகும்.)




டிஸ்கி..லிஸ்டில்,  எல்லாமே வடமாநிலமா இருக்குனு நினைக்கிறவங்க... தயவு செய்து, டெல்லிக்கு  கடுதாசு/தந்தி , போட்டு உங்கள் ஆற்றாமையை வெளிப்படுத்துங்க..

என்னான?..

  • “இருக்கும் மரத்தையெல்லாம் வெட்டிவிட்டோம்..
  • விளை நிலங்களை முடிந்தவரை, வீடுகளாக மாற்றிவிட்டோம்..
  • ஆற்றை மூடிவிட்டோம்..
  • குழந்தை தொழிலாளர்களுக்கு கும்பிடு போட்டுவிட்டோம்..


இன்னும் ஏன் எங்கள்மீது கோபம் என..?.”
 .
.
.

(” துரைமுருகன்” ,  “காந்தி”,  ”சிதம்பரம்”,  ”சப்புரமணி சாமி”என்ற பெயருடையவர்கள், தயவு செய்து கமென்ஸ் போடவேண்டாம்..அப்புறம்..பச்ச பச்சையா, கண்டபடி பேசவேண்டியிருக்கும்..சொல்லிப்புட்டேன்)

88 comments:

  1. நீயும் தான் பதிவு பதிவா போடுறே ..,உரைக்கனுமே பட்டா...,

    ம்ம் ..யாருப்பா அது இலவசம் னு சொன்னது ..தோ வந்துரேன் பட்டா

    ReplyDelete
  2. முதல் வடையை அள்ளிக்கொண்டு சென்ற அண்ணன் ”பனங்காட்டி நரி” வாழ்க..வாழ்க

    ReplyDelete
  3. எப்படி பட்டா இப்படியெல்லாம்...
    தட்ஸ் தமிழ்ல செய்தி பார்த்ததும் உங்க வறுமைக்கோடு பதிவு தான் நினைவுக்கு வந்துச்சு... இங்க வந்து பார்த்தா நீங்க பதிவு போட்டுருக்கீங்க... :)

    ReplyDelete
  4. நாட்டை ஆளும் குடும்பங்கள் அரசாங்க பணத்தை கொள்ளை அடிப்பது நம் நாட்டில் மட்டும் அல்ல, உலகெங்கிலும் நடக்கிறது. அமரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், பிலிப்பைன்ஸ், அரேபிய நாடுகள் , ஜப்பான் எல்லா நாடுகளிலும்
    நடக்கிறது


    ஏழை பணக்கார பாகுபாடு எல்லா கண்டங்களிலும் பரவலாக உள்ளது. வாக்காளர்களாகிய நாம் தான் இதை மாற்ற வேண்டும், மாற்ற முடியும்.

    ReplyDelete
  5. ஏலே பட்டு!நீரு என்னவே சொத்த நியூஸ் சொல்லிகினு இருக்கீறு?முக்கியமான நியூஸ் வந்து இருக்குலே..
    இந்த முறை washing macchine தர்றாங்கலாம்லே...

    ReplyDelete
  6. காங்கிரஸ் மட்டுமே காரணம் இல்ல. பிஜேபி, கம்யூனிஸ்ட் கூட தானே இந்த பட்டியலில் இருக்கும் சில மாநிலங்களை ஆட்சி செய்தது ???

    ReplyDelete
  7. @ஜெகதீசன் said...
    எப்படி பட்டா இப்படியெல்லாம்...
    தட்ஸ் தமிழ்ல செய்தி பார்த்ததும் உங்க வறுமைக்கோடு பதிவு தான் நினைவுக்கு வந்துச்சு... இங்க வந்து பார்த்தா நீங்க பதிவு போட்டுருக்கீங்க... :)

    //

    நீயூஸ் பார்த்ததும். மண்டைக்கு ஏறிடுச்சு பாஸ்..

    ReplyDelete
  8. @ராம்ஜி_யாஹூ said...
    நாட்டை ஆளும் குடும்பங்கள் அரசாங்க பணத்தை கொள்ளை அடிப்பது நம் நாட்டில் மட்டும் அல்ல, உலகெங்கிலும் நடக்கிறது. அமரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், பிலிப்பைன்ஸ், அரேபிய நாடுகள் , ஜப்பான் எல்லா நாடுகளிலும்
    நடக்கிறது
    ஏழை பணக்கார பாகுபாடு எல்லா கண்டங்களிலும் பரவலாக உள்ளது. வாக்காளர்களாகிய நாம் தான் இதை மாற்ற வேண்டும், மாற்ற முடியும்.
    //

    நாட்டுக்கு நல்லது பண்றவனை, தேர்ந்தெடுப்பது நம் கடமை பாஸ்.

    ReplyDelete
  9. @ILLUMINATI said...
    ஏலே பட்டு!நீரு என்னவே சொத்த நியூஸ் சொல்லிகினு இருக்கீறு?முக்கியமான நியூஸ் வந்து இருக்குலே..
    இந்த முறை washing macchine தர்றாங்கலாம்லே...
    //

    எதுக்கு..அழுக்கை சுத்தம் பண்ணவா?

    ReplyDelete
  10. //எதுக்கு..அழுக்கை சுத்தம் பண்ணவா?//

    ஆமாலே.நாமளும் அவங்கள மாதிரி கரை படியாம இருக்கணும்ல?அதேன்! எம்புட்டு கரிசனம் பாரு...

    ReplyDelete
  11. காங்கிரஸ் மட்டுமே காரணம் இல்ல. பிஜேபி, கம்யூனிஸ்ட் கூட தானே இந்த பட்டியலில் இருக்கும் சில மாநிலங்களை ஆட்சி செய்தது ??
    //

    எல்லாப்பயலும் இப்படித்தான் சார் இருக்கானுக..
    என்ன ஆதங்கம்னா, இவ்வளவு வருஷம் ஆட்சி நடத்தினது இவங்கதான்..

    நினச்சிருந்தா..நம்ம நாட்டை, எப்படி கொண்டு வந்திருக்கலாம்..?

    அவனுகதான் நாட்டின் பாதுகாப்புக்கு வாங்கின பீரங்கியைலே, ஊழல் பண்ணிய நாதாரிகள் ஆச்சே.

    ReplyDelete
  12. ஆமாலே.நாமளும் அவங்கள மாதிரி கரை படியாம இருக்கணும்ல?அதேன்! எம்புட்டு கரிசனம் பாரு...
    //

    பேசாம..காண்டம் கொடுக்கலாம்.. ( கட்சி லோகோ போட்டு..

    சீப் & பெஸ்ட் ..)

    ReplyDelete
  13. பட்டா ,
    என்னை அண்ணன் என்று சொன்னதக்கு கடுமையான கண்டனங்களை தெரிவிக்கிறேன் :)
    பின்னூட்டம் வழியாக ஆரோகியமான் விவாதத்தை எதிர்பார்கிறேன்

    ReplyDelete
  14. //பேசாம..காண்டம் கொடுக்கலாம்.. ( கட்சி லோகோ போட்டு..

    சீப் & பெஸ்ட் ..)//

    நீரு என்னவே காண்டத்தோட சமாதானம் ஆயிட்டீறு? அவனுவ ரேஞ்சே வேறலே..

    ReplyDelete
  15. பட்டா சோத்துல கொஞ்சம் உப்ப கொறைங்க.. நாங்களெல்லாம் குறைச்சு ரொம்ப நாளாயிடுச்சு..அப்பவாவது கொஞ்சமாவது ரோஷம் மானம் சூடு சொரன ஏதும் வராதில்ல.. என்ன பன்றது நம்மளால அவ்வளவுதான் சொல்லமுடியும்.. ஆங் இன்னொன்னு யாரோ அம்பானியாம் 6 ஆயிரம் கோடிக்கு வீடு கட்றாப்'ல.. தெரியுமில்ல...

    ReplyDelete
  16. யோவ் வெளியூர்காரன் பதிவு போட்டுட்டாரா. மேட்டர் வேற பக்கம் போகுதே. இத விடக்கூடாது பாஸ்.

    ReplyDelete
  17. இதுபோல் ஆதங்கப்படத்தான் முடியும் பட்டா!

    பிரபாகர்...

    ReplyDelete
  18. பட்டா, நாம ஒன்னு இந்த மாதிரி பேசி பேசியே காலத்தை ஓட்டுவோம், இல்லனா பேசாமல் நமக்கு என்னனு இருப்போம். இது நம் நாட்டின் தலை எழுத்து, எதுவும் பண்ண முடியாது

    ReplyDelete
  19. இந்த லட்சணத்துல இந்த மாநிலங்கள்ல போய் வேல பாக்குறதுக்கு இந்தி தெரியணும் அதைக் கத்துக் குடுக்காம நம்ம தமிழ்நாட்டுல ஏமாத்திப் புட்டாய்ங்கன்னு ஒரு கோஷ்டி புலம்புது.

    ReplyDelete
  20. நாடு சுதந்திரம் அடைந்து பலவருடங்களாகிவிட்டது..//////////

    கொய்யால ஆயிடுச்சா

    ReplyDelete
  21. ஒரே குடும்பத்திலிருந்து வந்த, தாத்தா..மாமா..அத்தை..மருமகள்..பேரன்.. என ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து நாட்டை செம்மைப்படுத்தி, இப்போது பாலும் , தேனும் ஓடுவதை பார்க்க சந்தோசமாக இருக்கிறது../////////////

    நாட்டிற்காக வாழும் தெய்வங்கள்

    ReplyDelete
  22. ஒருவர் தன் கடமையை முழுமூச்சாக செய்தால்....மக்களாகிய நாம் பாராட்டவேண்டும்.. அப்போதுதான், ஆட்சியாளர்களின் மனம் குளிர்ந்து , மேலும் மேலும் , நாட்டை வளமாகக் பாடுபடுவார்கள்.//////////


    யாருப்பா அங்கே அவங்களுக்கு நியூ வாட்டர் அனுப்பிவிடு

    ReplyDelete
  23. மக்கா..வரும் தேர்தலில்..அழகா உங்க வாக்கை..........இவர்களுக்கே விற்றுவிடுங்கள்(?).. ///


    எவ்வளவுக்கு பட்டா

    ReplyDelete
  24. வளர்க வள்ளுவரும், அவரது குடும்பமும்/////////

    இனி மேல் வளர்ந்தால் நன்றாக இருக்காது

    ReplyDelete
  25. இதில் கட்சி வேறு பாடு இல்லாம எல்லா நாதாரிகளும் ஆட்சி பண்ணிட்டாங்க.
    ஐந்து மாநிலங்களில் நக்சல் இயக்கம் பந்து நடத்துவதும் வன்முறையால் பலர் மடிவதும்,
    ரயிலை கவிழ்ப்பதும் மி சாதாரண மாக போனது எதனால்?
    இந்த மாநிலங்கள் இந்தியாவில் இல்லையா என்ன? இதில் "பரம்பரை "ஆட்சி செய்வதில் வேறு
    பெருமை இந்த பொறுக்கிகளுக்கு.

    ReplyDelete
  26. //மக்கா..வரும் தேர்தலில்..அழகா உங்க வாக்கை..........இவர்களுக்கே விற்றுவிடுங்கள்(?).. அப்போதுதான் , மேற்கண்ட லிஸ்டில், ஒன்பதாவது மாநிலமாக நம்மை இணைக்கமுடியும்...//


    இன்னும் இணைக்கலையா!?

    ReplyDelete
  27. இது போன்ற கருத்துக் கணிப்புகளை நடத்தி, உலக வங்கி / உலக நாடுகளால் தரப்படும் நிதி உதவிகளை, வட மாநிலங்களுக்கு திருப்ப அரசியல்வாதிகள் முயலலாம் இல்லையா?

    காங்கிரஸ், குறிப்பாக ராகுல் காந்தியின் செல்லம் : உத்திரபிரதேசம். அதை வறுமையுள்ள மாநிலமாக காட்டுவதன் மூலம், மாயவதிக்கும் ஆப்பு வைக்கலாம். ஒட்டு மொத்த நிதிகளையும் அங்கே குவிக்கலாம்.

    எல்லாம் அரசியல் வாதிகளின் கணக்குங்கண்ணா?


    மற்றொன்று, எண்ணிக்கை அடிப்படையில் மக்கள் தொகை, தென் மாநிலங்களை விட, வட மாநிலங்களில் அதிகம். சதவிகித அடிப்படையில் பிரித்தார்கள் என்றால், தமிழ்நாடும் போட்டிக்கு வரும்.

    ReplyDelete
  28. ///நாடு சுதந்திரம் அடைந்து பலவருடங்களாகிவிட்டது...///

    இந்த நாரிப்போன நதாரி அரசியல்வதிங்ககிட்ட இருந்த இன்னும் சுதந்திரம் கிடைகலையே, பட்டா...,

    ReplyDelete
  29. ///ஒரே குடும்பத்திலிருந்து வந்த, தாத்தா..மாமா..அத்தை..மருமகள்..பேரன்.. என ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து நாட்டை செம்மைப்படுத்தி, இப்போது பாலும் , தேனும் ஓடுவதை பார்க்க சந்தோசமாக இருக்கிறது..///

    அதச்சொல்லு மொதல்ல, நானெல்லாம் பால் கடையில வாஙுரது இல்ல, விட்டுக்கெ பைப் கனெக்சன் கொடுத்திருக்கானுக, இப்போ கக்கா கழுவக்கூட அததான் யூஸ் பன்ணிட்டிருக்கேன்.

    ReplyDelete
  30. //ஒருவர் தன் கடமையை முழுமூச்சாக செய்தால்....மக்களாகிய நாம் பாராட்டவேண்டும்.. அப்போதுதான், ஆட்சியாளர்களின் மனம் குளிர்ந்து , மேலும் மேலும் , நாட்டை வளமாகக் பாடுபடுவார்கள்.///

    அடுத்த 5 வருசத்துக்கு, கால்ஷீட் இல்லைனுட்டாங்க, பராட்டு விழா நடத்த எற்கனவே அட்வான்ஸ் புக்கிங்க் முடிஞ்சிட்டுதாம்.( மீடியா,சினிமாக்காரங்க, நாட்ல இருக்கிற லட்சத்தி சொச்சம் சாதி சங்கங்கள் எட்சட்ரா.., நமக்கு முன்னாடி கியூவ்ல நிக்கிராங்களாம்).

    ReplyDelete
  31. //என்னது ..தமிழக மீனவன, சிங்களப்படை சுட்டுட்டாங்களா?..
    அட..விடுங்க சார்.. நம்ம ராகுல் காந்திக்கு வயசாகிட்டே போகுது. எப்ப கலயாணம்?னு தங்கபாலுவ கேட்டுச்சொல்லுங்க...புண்ணியமாப்போகும்.//

    பஞ்ச் வரிகள் தூள்.

    ReplyDelete
  32. முதல்ல பணத்த வாங்கி கிட்டு ஒட்டு போடுற பன்னாடைகளுக்கும், இலவசத்துக்கு அலையிர நாதாரிகளுக்கும்.. ***** அடிக்கனும்.

    ReplyDelete
  33. When Abudul kalam was president of India he ask army to arrest all politicians and ask to sized all assets and money from them.All politicians had to export to Andaman & Nicobar islands still British jail is free.If he done this job now India is super power really and like this type of statistics dropped by him.Unfortunately this not happen still we living in India like goats

    ReplyDelete
  34. ரொம்ப பிரமாதமா யோசிக்க வைக்கும்வகையிலும்... நெத்தியில் அடித்தாற்போல் சொல்லியிருக்கீங்க..!!

    ReplyDelete
  35. தமிழ் நாட்டுக்கு அந்த நிலை வரும்னு தோணலை. காந்த பெட்ல இருந்து ஆன்லைன் ட்ரேடிங் வரைக்கும், தீபாவளி சீட்டுல இருந்து மல்டி லெவல் மார்க்கட்டிங் வரைக்கும் எத்தனை பேரு கிட்ட ஏமாந்தும், திரும்பவும் திரும்பவும் ஏமாந்து திருந்த மாட்டமே.:(. நச்சு நச்சுன்னு கேள்வி விழுது இப்பல்லாம். எங்கய்யா வச்சிருந்த இம்புட்டு நாள்?

    ReplyDelete
  36. //முதல் வடையை அள்ளிக்கொண்டு சென்ற அண்ணன் ”பனங்காட்டி நரி” வாழ்க..வாழ்க//

    பாட்டி ஏன் வடை சுட்டுச்சுன்னு இப்பத்தானே தெரியுது:)

    ReplyDelete
  37. //நச்சு நச்சுன்னு கேள்வி விழுது இப்பல்லாம். எங்கய்யா வச்சிருந்த இம்புட்டு நாள்?//

    நச் இருக்கும் இடத்தில் இல்லாமல் இருந்தா இப்படித்தான் யாராவது எடயில பூதுவாங்க.

    ReplyDelete
  38. இப்படி எவ்வளவு நாள் புலம்பிக் கொண்டு மட்டும் இருப்போம் .

    ReplyDelete
  39. @Pattapatti...//
    யோவ் பட்டாப்பட்டி...ஜானி வாக்கேர்க்கு நல்ல மிக்சிங் சோடாவா இல்ல கோகோ கோலாவாயா...! - இப்படிக்கு ஆளும் மத்திய சர்கார் மீதும் மாநில சர்கார் மீதும் பலியை போடும் பதிவுகளில் விவாதத்தை வேறு திசையில் திருப்பி விட முயற்ச்சி செய்யும் சங்கம்...சிங்கப்பூர் மாவட்டம்..

    ReplyDelete
  40. @ Pattaapatti../
    இந்திய சர்க்கார பத்தி நல்ல விஷயங்கள் பத்தி பேசவே கூடாதான்னு பட்டாபட்டியார் சத்தியம் பண்ணிருக்கார் போலருக்கு...!

    அண்ணே..இந்தியா வளருதுன்னேன்...அத பத்தியும் கொஞ்சம் எழுதுங்க...எவ்ளோ நாள் மண்ணை அள்ளி தூத்திகிட்டே இருப்பீங்க...! நீங்க கை குடுத்தீங்கன்னா இன்னும் கொஞ்சம் வேகமா வளரும்ல...!

    (நீங்க கம்முயுனிஸ்ட் மாதிரியும் தெரியலையே...என்னதான் உங்க சித்தாந்தம்...நான் பக்கா திமுக காரனப்பா....! எனக்கு இந்த விசயத்துல பட்டாபட்டியாரோட ஒத்து போகாது...அண்ணேன் மன்னிக்கணும்...நான் வெளியே போறேன்..! )

    குஜால் பதிவுல மீண்டும் சந்திப்போம்... :)

    ReplyDelete
  41. Veliyoorkaran said...

    (நீங்க கம்முயுனிஸ்ட் மாதிரியும் தெரியலையே...என்னதான் உங்க சித்தாந்தம்...நான் பக்கா திமுக காரனப்பா....! எனக்கு இந்த விசயத்துல பட்டாபட்டியாரோட ஒத்து போகாது...அண்ணேன் மன்னிக்கணும்...நான் வெளியே போறேன்..! )

    வெளியூரே...
    வெளிநடப்பு செய்கிறதே...
    ஆச்சர்யக் குறி ....

    ReplyDelete
  42. @பனங்காட்டு நரி said...
    பட்டா ,
    என்னை அண்ணன் என்று சொன்னதக்கு கடுமையான கண்டனங்களை தெரிவிக்கிறேன் :)
    பின்னூட்டம் வழியாக ஆரோகியமான் விவாதத்தை எதிர்பார்கிறேன்

    //


    எனக்கு 13 வயசு..
    உங்களுக்கு? ஹி..ஹி

    ReplyDelete
  43. @அஹமது இர்ஷாத் said...
    பட்டா சோத்துல கொஞ்சம் உப்ப கொறைங்க.. நாங்களெல்லாம் குறைச்சு ரொம்ப நாளாயிடுச்சு..அப்பவாவது கொஞ்சமாவது ரோஷம் மானம் சூடு சொரன ஏதும் வராதில்ல..
    //


    உடுங்க பாஸ்.. கஞ்சி குடிக்கும் காலம் வந்தா வராமலாபோயிடும்?

    ReplyDelete
  44. @ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
    யோவ் வெளியூர்காரன் பதிவு போட்டுட்டாரா. மேட்டர் வேற பக்கம் போகுதே. இத விடக்கூடாது பாஸ்.
    //

    ரமேஸ்..வெளியூரான் பற்றி தெரியாது..
    என்னோட பட்டாபட்டியவே, ஓடவிட்டு கழட்டின, பன்னாட பயலுக..

    எப்ப அவனுகள வம்புக்கு இழுத்தாலும், ஒரு கை, நம்ம பட்டாபட்டிமேல இருக்கனும்..
    சூதனமா இருந்துக்குங்க அப்பு...

    ReplyDelete
  45. @பிரபாகர் said...
    இதுபோல் ஆதங்கப்படத்தான் முடியும் பட்டா!
    //

    வாங்க அண்ணே..

    ரோஸ்விக்கு தம்பி எப்படியிருக்காரு?

    ReplyDelete
  46. @அருண் பிரசாத் said...
    பட்டா, நாம ஒன்னு இந்த மாதிரி பேசி பேசியே காலத்தை ஓட்டுவோம், இல்லனா பேசாமல் நமக்கு என்னனு இருப்போம். இது நம் நாட்டின் தலை எழுத்து, எதுவும் பண்ண முடியாது
    //

    Science...cell...molecules...

    பண்ணமுடியும் பாஸ்...

    ReplyDelete
  47. @முகிலன் said...
    இந்த லட்சணத்துல இந்த மாநிலங்கள்ல போய் வேல பாக்குறதுக்கு இந்தி தெரியணும் அதைக் கத்துக் குடுக்காம நம்ம தமிழ்நாட்டுல ஏமாத்திப் புட்டாய்ங்கன்னு ஒரு கோஷ்டி புலம்புது.
    //

    ஓ..அதுவேற சொல்லியிருக்கானுகளா பாஸ்?

    ReplyDelete
  48. @முத்து said...

    நாடு சுதந்திரம் அடைந்து பலவருடங்களாகிவிட்டது..//////////
    கொய்யால ஆயிடுச்சா
    //


    அது ஆயி..பலவருஷம் ஆச்சு

    ReplyDelete
  49. @கக்கு - மாணிக்கம் said...
    இதில் கட்சி வேறு பாடு இல்லாம எல்லா நாதாரிகளும் ஆட்சி பண்ணிட்டாங்க.
    ஐந்து மாநிலங்களில் நக்சல் இயக்கம் பந்து நடத்துவதும் வன்முறையால் பலர் மடிவதும்,
    ரயிலை கவிழ்ப்பதும் மி சாதாரண மாக போனது எதனால்?
    இந்த மாநிலங்கள் இந்தியாவில் இல்லையா என்ன? இதில் "பரம்பரை "ஆட்சி செய்வதில் வேறு
    பெருமை இந்த பொறுக்கிகளுக்கு.
    //

    சவுக்கடி...மக்களுக்கு புரியமாட்டீங்குதே சார்...

    ReplyDelete
  50. @வால்பையன் said...
    //மக்கா..வரும் தேர்தலில்..அழகா உங்க வாக்கை..........இவர்களுக்கே விற்றுவிடுங்கள்(?).. அப்போதுதான் , மேற்கண்ட லிஸ்டில், ஒன்பதாவது மாநிலமாக நம்மை இணைக்கமுடியும்...//


    இன்னும் இணைக்கலையா!?
    //


    சீக்கிரம் இணைஞ்சிரும் தல...

    ReplyDelete
  51. @சாந்தப்பன் said...
    இது போன்ற கருத்துக் கணிப்புகளை நடத்தி, உலக வங்கி / உலக நாடுகளால் தரப்படும் நிதி உதவிகளை, வட மாநிலங்களுக்கு திருப்ப அரசியல்வாதிகள் முயலலாம் இல்லையா?

    காங்கிரஸ், குறிப்பாக ராகுல் காந்தியின் செல்லம் : உத்திரபிரதேசம். அதை வறுமையுள்ள மாநிலமாக காட்டுவதன் மூலம், மாயவதிக்கும் ஆப்பு வைக்கலாம். ஒட்டு மொத்த நிதிகளையும் அங்கே குவிக்கலாம்.

    எல்லாம் அரசியல் வாதிகளின் கணக்குங்கண்ணா?


    மற்றொன்று, எண்ணிக்கை அடிப்படையில் மக்கள் தொகை, தென் மாநிலங்களை விட, வட மாநிலங்களில் அதிகம். சதவிகித அடிப்படையில் பிரித்தார்கள் என்றால், தமிழ்நாடும் போட்டிக்கு வரும்.
    //


    ஆகா.. இந்த கண்ணோட்டத்தில இருக்காம்போல..
    என்னதான் பண்ணப்போறாங்களோ?

    ReplyDelete
  52. @Jey said...

    முதல்ல பணத்த வாங்கி கிட்டு ஒட்டு போடுற பன்னாடைகளுக்கும், இலவசத்துக்கு அலையிர நாதாரிகளுக்கும்.. ***** அடிக்கனும்.
    //

    மக்களா திருந்தாவிட்டால்..எதுவும் பண்ணமுடியாது..

    ReplyDelete
  53. Tirupurvalu said...

    When Abudul kalam was president of India he ask army to arrest all politicians and ask to sized all assets and money from them.All politicians had to export to Andaman & Nicobar islands still British jail is free.If he done this job now India is super power really and like this type of statistics dropped by him.Unfortunately this not happen still we living in India like goats


    சத்தியமான வரிகள்

    ReplyDelete
  54. @பிரவின்குமார் said...
    ரொம்ப பிரமாதமா யோசிக்க வைக்கும்வகையிலும்... நெத்தியில் அடித்தாற்போல் சொல்லியிருக்கீங்க..!!
    //

    டேங்ஸ் பாஸ்..

    ReplyDelete
  55. @வானம்பாடிகள் said...
    தமிழ் நாட்டுக்கு அந்த நிலை வரும்னு தோணலை. காந்த பெட்ல இருந்து ஆன்லைன் ட்ரேடிங் வரைக்கும், தீபாவளி சீட்டுல இருந்து மல்டி லெவல் மார்க்கட்டிங் வரைக்கும் எத்தனை பேரு கிட்ட ஏமாந்தும், திரும்பவும் திரும்பவும் ஏமாந்து திருந்த மாட்டமே.:(. நச்சு நச்சுன்னு கேள்வி விழுது இப்பல்லாம். எங்கய்யா வச்சிருந்த இம்புட்டு நாள்?
    //

    எல்லாம் கக்கத்திலதான் சார்..
    வெறுப்புல எழுதினாலே..இப்படித்தான் வருது சார்...ஹி..ஹி

    ReplyDelete
  56. @ராஜ நடராஜன் said...
    //நச்சு நச்சுன்னு கேள்வி விழுது இப்பல்லாம். எங்கய்யா வச்சிருந்த இம்புட்டு நாள்?//

    நச் இருக்கும் இடத்தில் இல்லாமல் இருந்தா இப்படித்தான் யாராவது எடயில பூதுவாங்க.
    //

    உங்க கடைக்கு என்னாச்சு பாஸ்.. திறக்கமுடியவில்லை...
    ஒரு வேளை நல்ல விலைக்கு வித்துட்டீங்களா?

    ReplyDelete
  57. @Veliyoorkaran said...
    இந்திய சர்க்கார பத்தி நல்ல விஷயங்கள் பத்தி பேசவே கூடாதான்னு பட்டாபட்டியார் சத்தியம் பண்ணிருக்கார் போலருக்கு...!

    அண்ணே..இந்தியா வளருதுன்னேன்...அத பத்தியும் கொஞ்சம் எழுதுங்க...எவ்ளோ நாள் மண்ணை அள்ளி தூத்திகிட்டே இருப்பீங்க...! நீங்க கை குடுத்தீங்கன்னா இன்னும் கொஞ்சம் வேகமா வளரும்ல...!

    (நீங்க கம்முயுனிஸ்ட் மாதிரியும் தெரியலையே...என்னதான் உங்க சித்தாந்தம்...நான் பக்கா திமுக காரனப்பா....! எனக்கு இந்த விசயத்துல பட்டாபட்டியாரோட ஒத்து போகாது...அண்ணேன் மன்னிக்கணும்...நான் வெளியே போறேன்..! )

    குஜால் பதிவுல மீண்டும் சந்திப்போம்... :)
    //

    ஓய்.. அம்மா..அன்னை..தாத்தா..பேரன், பேத்தி எல்லோரையும் தூக்கு தூக்கி எழுதரேன்..

    பதிவ ஒழுக்கமா படி..
    9வது மாநிலமா இணைக்க, அரும்பாடு படும் கட்சிக்ள் “ வாழ்க..வாழ்க”-னு , டீ கூட குடிக்காம கோஷம் போட்டிருக்கேன்..

    நக்கல் பண்ணிக்கிட்டு.....

    ReplyDelete
  58. ///மக்கா..வரும் தேர்தலில்..அழகா உங்க வாக்கை..........இவர்களுக்கே விற்றுவிடுங்கள்(?).///

    இரு விலை படியுதான்னு பாப்போம்

    ReplyDelete
  59. . /// அப்போதுதான் , மேற்கண்ட லிஸ்டில், ஒன்பதாவது மாநிலமாக நம்மை இணைக்கமுடியும்...///

    நம்ம தலைவரு என்னானா தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கு ,முதலிடத்தில் இருக்கு அப்படிங்குறார் , ஆனா உலக நடப்பு வேறமாதிரி இருக்கே ?? சே.... உடனே இத நம்ம தலைவருக்கு தெரியபடுத்துங்க , என்னடியும் அடுத்த வர்சத்துகுள்ள லிஸ்ட்டுல சேந்துடும் , அப்புறம் நாளுவருசத்துல முதலிடம்புடிச்சிடும்

    ReplyDelete
  60. அப்புறம் நாம் ராகுல்க்கு பஸ்ட்டு நாடு தான் முக்கியமாம் , வீடு , மனைவி எல்லாம் பின்னாடிதானாம்

    ReplyDelete
  61. //இந்த லட்சணத்துல இந்த மாநிலங்கள்ல போய் வேல பாக்குறதுக்கு இந்தி தெரியணும் அதைக் கத்துக் குடுக்காம நம்ம தமிழ்நாட்டுல ஏமாத்திப் புட்டாய்ங்கன்னு ஒரு கோஷ்டி புலம்புது.//

    பீகார்,
    சட்டீஸ்கர்,
    ஜார்க்கண்ட்,
    மத்தியபிரதேசம்,
    ஒரிஸ்ஸா,
    ராஜஸ்தான்,
    உத்தரபிரதேசம்,
    மேற்கு வங்கம்...
    இந்த எல்லா மாநிலங்களிலும் நம்மவர் இருக்கின்றனர். நடு மட்ட, மேல் மட்ட வேலைகளுக்கு இன்னும் செல்வர். கீழ் மட்ட வேலைகளுக்கு கூட முன்பெல்லாம் போய் இருக்கிறார்கள்: (மும்பையில் சிற்றுந்து ஓட்டுனர்களில் நம்மவர் அதிகம். மகாராஷ்டிரம் இந்த பட்டியலில் இல்லை.). இந்தி படிக்க வேண்டாம் என சம்பந்தமில்லாத இடத்தில் வந்த பின்னூட்டம் என தோன்றியதால் இது. பொறுத்தருள்க

    ReplyDelete
  62. அருமையான நடை. சூப்பருங்கோவ்.

    ReplyDelete
  63. என்ன தல நம்ம தலைவர் குடும்பத்த விட்டுபுட்டியே ரொம்ப கஷ்ட்டமா கீது ப்பா

    ReplyDelete
  64. அண்ணே விடுங்கண்ணா யூனியன் கார்பைடு நிறுவனம் போல மாநிலத்துக்க ஒன்னு ஆரம்பிச்சு சீக்கிரமா எல்லாரையும் கொன்னுவிடுவாங்க

    ReplyDelete
  65. சமிபத்தில் படித்தது பிகார் தலைநகர் பாட்னவில் இருந்து ஒரு 45 கிலோமிட்டர் எந்த திசையிலும் சென்றாலும் 1945 முன்னே இந்திய எப்படி இருந்ததோ அப்படி இருக்குமாம் கரண்ட் இல்லாமல், எந்த சாலை வசதி இல்லாமல், மருத்துவ வசதி இல்லாமல் மக்கள் ஆதிகால வாழ்கை தான் வாழுறாங்க ...இந்தியாவில் மறைக்கப்பட்ட கொடுமைகள் அதிகமா இருக்கு...

    உங்க பதிவு நல்லா இருக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  66. ///சமிபத்தில் படித்தது பிகார் தலைநகர் பாட்னவில் இருந்து ஒரு 45 கிலோமிட்டர் எந்த திசையிலும் சென்றாலும்///

    நண்பரே, நான் கடந்த வருடம், பீகார் மாநிலத்தில் முங்கேர் மாவட்டத்தில் (பட்னாவிலிருந்து (பாட்னா என்று உச்சரிக்கக்கூடாது, அப்படி உச்சரித்தால் அவர்கள் சிரிக்கிறார்கள்) சுமார் 150 KM) பணிபுரியும் என் அண்ணணுடைய வீட்டிற்கு சென்று, 15 நாட்கள் தங்கியிருந்தேன். அப்போதுதான் பீஹாரைப் பற்றி எப்படி ஒரு தவறான சித்திரம் நம் மனதினில் ஊடகங்களால் உருவாக்கப்பட்டுள்ளது என் அறிந்து அதிர்ந்தேன். மொழியைத் தவிர, வேறே எந்த பெரிய வித்தியாசத்தையும் என்னால் காணமுடியவில்லை. ஒரு நாளைக்கு 5 மணி நேரம் மின்சார தடை செய்யப்படுகிறது (தமிழகத்தில் 4 மணி நேரம் சராசரியாக) இதே மாநிலத்தில் கடந்த 3 வருடங்களுக்கு முன் ஒரு நாளைக்கு 4 மணி நேரம் மாத்திரமே மின்சாரம் இருக்கும். மூன்றே வருடத்தில் எவ்வளவு முன்னேற்றம் என்று பாருங்கள். தமிழ்நாடோ பின்னோக்கி வேகமாக போய்க்கொண்டிருக்கிறது. பண்பாட்டிலோ, நாகரிகத்திலோ அவர்களை சற்றும் குறைந்தவர்களாக நான் காணவில்லை. ஆட்டோ ரிக்ஷாவிற்கு பதிலாக ரிக்க்ஷா பயன்படுத்துகின்றனர். அதுதான் கொஞ்சம் மனதுக்கு நெருடலாக இருந்தது. மற்றபடி நம் மாநிலம் போலவே இருந்தது. அம்மாநிலத்தின் பிற பகுதிகளைப் பற்றி நான் அறியவில்லை. எனக்கு இதை சொல்ல வேண்டும் என்று தோன்றியதால் சொல்கிறேன்.

    ReplyDelete
  67. சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியா வளர்ந்துகொண்டு தான் இருக்கிறது. ஏழை மிகவும் ஏழையாகவும், பணக்காரன் பெரும்பணக்காரணாகவும் ஆவதே இவர்களின் வளர்ச்சியாகக் கருதப்படும்.

    மாத ஊதியம் பெருபவனிடமிருந்து மட்டும் வரி வசூலிக்கப்படும். பெரும்பாலான தொழிலதிபர்களின் வருமானத்தை சரியாக கணக்கிட்டு வரி கணக்கீடுகள் செய்யப்படுவதில்லை. ஒருவேளை அவர்களின் வருமானம் தெரிந்தால் கட்சிகளின் தேர்தல் செலவுக்கும் அவர்களின் சொந்த செலவுக்கும் கட்சி பேதமின்றி வசூலித்து குதூகலிக்கின்றனர்.

    இவர்களிடமிருந்து எப்படி சரியான வளர்ச்சியைப் பெற முடியும்?

    வாக்காளன் இப்போது தான் வாக்குக்குப் பணம் வாங்குகிறான். இதற்கு முன் வியாதிகள் என்ன முறையாகச் செய்தார்கள்?

    நம்மிடமும் குறை இருக்கிறது. சரியான மாற்று அரசு அமைக்க சரியான கட்சியும் இருப்பதாகத் தெரியவில்லை. புதிதாக எவன் வந்தாலும் அவனை நம்பவும் தயாராக இருப்பதில்லை.

    ReplyDelete
  68. சரியான முறையில் வளர்ச்சி வேண்டும் என்ற இந்த நெருப்பை முடிந்த எல்லா வழிகளிலும் அணையாமல் காத்து வளர்த்து வருவோம். நேரம் வாய்க்காமலா போய்விடும் பத்தி எரிய....?

    ReplyDelete
  69. சபாஷ் பட்டா... உமக்கு அடிக்கடி இப்படி மண்டைக்கு ஏறட்டும்...

    ReplyDelete
  70. இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாகப் போகட்டும்.. என்ற வரி தான் நினைவுக்கு வருகிறது... கோடி கோடியாகச் சம்பாரிக்கும் இவர்கள் போகும்போது கொண்டு போகப் போவது என்ன...? கொஞ்சம் கொடுத்தால் தான் என்ன...? நினைக்கவே வெறுப்பாக இருக்கிறது..

    ReplyDelete
  71. @மங்குனி அமைச்சர் said...

    அப்புறம் நாம் ராகுல்க்கு பஸ்ட்டு நாடு தான் முக்கியமாம் , வீடு , மனைவி எல்லாம் பின்னாடிதானாம்

    //

    ஏன் .. முன்னாடி சரியில்லையா?..

    என்னையா ..இன்னக்கு நான் இன்னைக்கு எது பேசினாலும்..தப்பு தப்பாவே வருது...

    ReplyDelete
  72. @vignaani said...

    இந்த எல்லா மாநிலங்களிலும் நம்மவர் இருக்கின்றனர்.. இந்தி படிக்க வேண்டாம் என சம்பந்தமில்லாத இடத்தில் வந்த பின்னூட்டம் என தோன்றியதால் இது. பொறுத்தருள்க

    //

    வாங்க பாஸ்.. தகவலுக்கு நன்றி

    ReplyDelete
  73. @ஜூனியர் தருமி said...
    அருமையான நடை. சூப்பருங்கோவ்.
    //

    வாங்க சார்...

    ReplyDelete
  74. @சசிகுமார் said...
    என்ன தல நம்ம தலைவர் குடும்பத்த விட்டுபுட்டியே ரொம்ப கஷ்ட்டமா கீது ப்பா
    //

    எங்க போயிடுவாரு பாஸ்..

    ReplyDelete
  75. @சிவா (கல்பாவி) said...
    அண்ணே விடுங்கண்ணா யூனியன் கார்பைடு நிறுவனம் போல மாநிலத்துக்க ஒன்னு ஆரம்பிச்சு சீக்கிரமா எல்லாரையும் கொன்னுவிடுவாங்க
    //

    ”கொன்னு”னு சொல்லக்கூடாது சிவா..

    சிவலோகப்பதவினு சொல்லனும்..

    மத்திய அரசுக்கு..கொத்து கொத்தா
    கொன்னாத்தான் பிடிக்கும் போல..

    ReplyDelete
  76. @Maria Mcclain said...
    Nice blog & good post. overall You have beautifully maintained it, you must try this website which really helps to increase your traffic. hope u have a wonderful day & awaiting for more new post. Keep Blogging!
    //


    மங்குனி...கோனார் நோட்ஸ் எங்கப்பா?

    ReplyDelete
  77. @rk guru said...
    சமிபத்தில் படித்தது பிகார் தலைநகர் பாட்னவில் இருந்து ஒரு 45 கிலோமிட்டர் எந்த திசையிலும் சென்றாலும் 1945 முன்னே இந்திய எப்படி இருந்ததோ அப்படி இருக்குமாம் கரண்ட் இல்லாமல், எந்த சாலை வசதி இல்லாமல், மருத்துவ வசதி இல்லாமல் மக்கள் ஆதிகால வாழ்கை தான் வாழுறாங்க ...இந்தியாவில் மறைக்கப்பட்ட கொடுமைகள் அதிகமா இருக்கு...

    உங்க பதிவு நல்லா இருக்கு வாழ்த்துகள்.
    //

    டேங்ஸ் பிரதர்..

    ReplyDelete
  78. @ஜூனியர் தருமி said...
    மற்றபடி நம் மாநிலம் போலவே இருந்தது. அம்மாநிலத்தின் பிற பகுதிகளைப் பற்றி நான் அறியவில்லை. எனக்கு இதை சொல்ல வேண்டும் என்று தோன்றியதால் சொல்கிறேன்.
    //


    நோ பார்மலிட்டீஸ்..
    இங்க உங்க கருத்தை...நறுக்குனு சொல்லலாம்..தப்பாவே நினச்சுக்கமாட்டோம்..

    ReplyDelete
  79. @ரோஸ்விக் said...
    சபாஷ் பட்டா... உமக்கு அடிக்கடி இப்படி மண்டைக்கு ஏறட்டும்...
    //

    உள்குத்து?..

    இரு..இரு..பிரபாகர் அண்ணாகிட்ட சொல்லி, உமக்கு வாட்டர் சர்வீஸ் பண்ணச்சொல்றேன்

    ReplyDelete
  80. @பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...
    இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாகப் போகட்டும்.. என்ற வரி தான் நினைவுக்கு வருகிறது... கோடி கோடியாகச் சம்பாரிக்கும் இவர்கள் போகும்போது கொண்டு போகப் போவது என்ன...? கொஞ்சம் கொடுத்தால் தான் என்ன...? நினைக்கவே வெறுப்பாக இருக்கிறது..
    //

    இனியாவது புது சமுதாயம் மலரட்டும்..

    ReplyDelete
  81. @பட்டாபட்டி..

    ///நான் “மணம்” என்று நினைத்து படித்துவிட்டேன் ////


    நீங்க படித்தாலும் அது சரிதான் காதல் 'மணம்' புரிந்தாலும் மதம் தேவையில்லை.

    ReplyDelete
  82. பட்டாபட்டி.. said...

    நோ பார்மலிட்டீஸ்..
    இங்க உங்க கருத்தை...நறுக்குனு சொல்லலாம்..தப்பாவே நினச்சுக்கமாட்டோம்.///

    இப்படி எல்லோரையும் உசுப்பேத்திவிட்டு...உசுப்பேத்திவிட்டு...உன் அன்றாயரை கழட்டச்சொல்றதுல அவ்வளவு சுகமா.. பட்டா?, ”என்னமோ போய்யா...”

    ReplyDelete
  83. என்ன பட்டா, நம்ம பயபுள்ளக கடையெல்லாம், புதுசரக்கு இல்லாம, டல்லா இருக்கு, எல்லோருக்கும் ஆனியா?.

    ReplyDelete
  84. பட்டா, புது பதிவு போட்டாச்சி.

    ReplyDelete
  85. என்னப்பா, ஆளையே கானோம் ?!!!, ரொம்ப ஆனியா...

    ReplyDelete
  86. /மக்கா..வரும் தேர்தலில்..அழகா உங்க வாக்கை..........இவர்களுக்கே விற்றுவிடுங்கள்(?).. அப்போதுதான் , மேற்கண்ட லிஸ்டில், ஒன்பதாவது மாநிலமாக நம்மை இணைக்கமுடியும்...//

    ஒன்பதாவது மாநிலமா சேரது என்ன முதலிடத்துக்கே கொண்டு போயடுவாணுக நம்ம அரசியல்வியாதிங்க

    ReplyDelete
  87. இந்த சர்வதேச நிறுவனம் தமிழகத்தை புறக்கணித்துவிட்டு கருத்துக்கணிப்பு நடத்தியிருக்கிறது. இதை நடத்தியவர்கள் அம்மையாரை சந்தித்து ஆலோசனை செய்ததாக எனக்குத் தகவல் வந்துள்ளது. இதிலிருந்து தமிழகத்தின், தமிழ் மக்களின் நன்மையைப் பேணுவது யார் என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்!
    தமிழினத்தலைவர்

    ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!