Pages

Tuesday, February 22, 2011

மரணங்கள் மூன்று...


1. பாடகர் மலேசியா வாசுதேவன்

தமது வசீகரக்குரலால், தமிழகத்தை கட்டிப்போட்ட, அருமை பாடகர்  வாசுதேவன் அவர்களின் மறைவு.    அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
அவர் மறைந்துவிட்டார் என்றாலும், அவர்தம் குரல் என்றென்றும் ஒலித்துக்கொண்டிருக்கும்.
2. பார்வதி அம்மையார்.

சிகிச்சைக்கு வந்த மூதாட்டியை,
அரசியல் எனும் போர்வை போர்த்தி,
மனசாட்சியை கொன்றெரிந்து,
நா-தளுக்க அறிக்கைவிட்டு,
தமிழன்க்காவலர் முடியின்கீழ் ,
உம்மரணத்துக்கு இரங்கல் தெரிவிக்க
நா கூசுகிறது தாயே.!!


3. மனச்சாட்சி..

போன பதிவின் தொடர்சி.
ஸ்பெக்ட்ரம் ஊழலில், அன்பர் சிவக்குமார் தொகுத்த பதிவினை பார்த்து, ”முட்டாள்கள்” எனக்
முகமறியாமல் கூறிய , கழகப்பாசறையின் அடிமட்ட அன்பர் நண்பர் பாலா+ வின் மனசசாட்சிக்கு...

//அந்த சிவக்குமாரை வரச்சொல்லுங்க.இவன் முட்டாளா இருந்துகிட்டு ஊரையும் முட்டாள் ஆக்கப்பாக்கிறான்...அவன் முட்டாள் என்பதற்கு மேற்கண்ட இந்த கணக்கே சாட்சி! அந்தக்கணக்கில் என்ன முட்டாள்தனம் இருக்குதுன்னு கூட்டிக்கழிச்சுப்பாருங்க...புரியலன்னா கேளுங்க...!//

சரிண்ணே..
முட்டாளாவே இருந்துட்டுப்போறோம். ஆமாண்ணே.. ஒரு நீங்களாவது கழக ரத்ததை புறம்தள்ளிவிட்டு, நேராச்சொல்லுங்க. ராசாவின் கரம் கறைபட்டதா?.. இல்லை உத்தமரை பழிவாங்கும் நடவடிக்கையா?.
உத்தமர் எனில், நமது தானைத்தலைவர் ஏன் சோனியாவிடம் இன்னமும் மடிப்பிச்சை ஏந்திக்கொண்டுள்ளார்?.

ஆமாம் முட்டாள் என்பதற்கு கழகஅடிப்படை விதி ஒன்று இருக்குமே. அதை இந்த முட்டாளுக்களுக்கு விளக்குவீர்களா?. ( முக்கிய குறிப்பு : 1 ரூ அரிசியில் சமைத்து சாப்பிடுபவர்கள் எல்லாரும் முட்டாள்கள் எனக்கூறினால் செல்லாது..ஹி..ஹி)


//ந்த வருமானமெல்லாம் அரசுக்கு சென்றிருக்க வேண்டும் என்று சொல்லும் அடிப்படை ஞானமற்ற அவருக்கு அடுத்த கேள்வி....பி.எஸ்.என்.எல் வருமானம் மட்டுமே அரசுக்கு செல்ல முடியும்..பிற தனியார் நிறுவனங்களின் லாபம் எப்படி அரசுக்கு செல்ல முடியும்???//

ஞானம்.. மெய்ஞானம். அட..அறிவுண்ணே நீங்க..
ஆமான்ணே.. இந்த டெண்டர் விட்டிருந்தால், அந்தப்பணம் அரசுக்குச்செல்லாமல், அல்லக்கைகளுக்கா செல்லும்?
முட்டாப்பசங்க.. சரி.. அதவிடுங்க. ராசாத்தி அம்மாள் பேர்ல இருந்த நிறுவனம், பல கைகள் மாறி, உள்ளே நுழைந்ததே. ஆமாண்ணே.. அந்தம்மா  Telecommunication-ல பயங்கர அனுபவம் கொண்டவர்கள்னு இந்த முட்டாள் நாய்களுக்கு தெரியாம போச்சு.


//
அட முட்டாள்களே கருணாநிதியின் மீதான / திமுகவின் மீதான வெறுப்பை இப்படியா கண்ணை மூடிக்கொண்டு துப்புவது.....???
மல்லாக்கப்படுத்துக்கொண்டு எச்சில் துப்பிவிட்டு தன் முகத்தில் விழுவதாக குறைபட்டுக்கொண்டானானாம் ஒரு முட்டாள்....அதுபோலல்லவா உங்கள் வாதங்கள் இருக்கின்றன???
//

கழக ரத்தம் கொதிக்குதா பாஸ்?...  லூஸ்ல விடுங்க.. ஆமாண்ணே.. இதில் பிரச்சனை இல்லையென்றால், ஏண்ணே ராசாவின் நுங்கை  பிதுக்குராங்க.?.. பழைய பாக்கியா?. இல்லை, குடும்ப உறு(றி)ப்பினரா இல்லாமல் இருப்பதா?


//வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று நாம் தமிழ்த்தவளைகளாய் இருந்து கொண்டு இப்படியே பேசினால் வேறு எதிரி நமக்கு எங்கிருந்து வேண்டும்?//

ஆமாண்ணே.. வேற ந்ங்கிருந்து வரவேண்டும்?.  வரும் தேர்தலுக்கு எங்கே நிற்க உத்தேசம்?.. கள்ள , மற்றும் நல்ல ஓட்டை போட்டு உங்களை கெலிக்கவைக்கனுமுனு , வேண்டுதல் இருக்கு..


//நாகராஜசோழன் MA said... 123

    @பாலா, ஒரே ஒரு சந்தேகம், ஊழல் நடக்கவில்லை என்றால் ஏன் அவர்களே ஆட்சியில் இருக்கும் போது ஒரு மத்திய காபினட் அமைச்சரை கைது செய்து திகார் ஜெயிலில் அடைக்கின்றனர்?
//

அது பங்காளி தகறாரு பாஸ்..
மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்று , மக்களுக்காக, உயிரை பணயம் வைத்து, உள்ளே இருக்கிறார்../////ஊழல் நடந்திருக்கலாம்.....அல்லது நடக்காமலிருக்கமலாம். அதுபற்றீ நான் பேசவே இல்லை.அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை சொல்லாதீர்கள் என்பதே என் கருத்து....//

ஆகா.. இது அருமை.. தலைவாழை இலை போட்டு, உப்புக்கு பக்கத்தில், கொஞ்சம் ”மலம்” வைத்ததுபோல...  பேசாம, மக்களை அடிமுட்டாப்பு^$$%$கனு சொல்லிடுங்க பாஸ்.. புண்ணியமா போகும்.


கடைசியா:
சே.. இவ்வளவு விளக்கங்கள் கொடுத்தும், ஊழல் இல்லாத ஆட்சி என்று ,உற்சாகமாக  தமிழின மக்களுக்கு பாடுபடும், நம் தலைவர்களைப்பார்த்து, அடி முட்டாப்பய சங்கம், இரு கரம் தூக்கி வணக்கம் வைக்கிறது


தொடர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரட்டும் உங்க பணி.. சிந்தட்டும் முட்டாள்களின் ரத்தம். ஹி..ஹி..

.
.
.

48 comments:

 1. இரு பிரிவும் நெருடலானவை தான்...

  அன்புச் சகோதரன்...
  ம.தி.சுதா
  தமிழுக்காக ஒரு தமிழனால் முடிந்த உதவி (இலகு தட்டச்சு உதவி)

  ReplyDelete
 2. மக்களிடம் யோசிப்புதன்மை இருந்தால் கண்டிப்பாக வரும் தேர்தலில் எது உண்மை என்று கூறிவிடுவார்கள்.. தேர்தல் நியாமாக நடந்தால்!!!!!!!????

  ReplyDelete
 3. அவ்விருக்கும் மனமார்ந்த அஞ்சலிகள்!

  ReplyDelete
 4. //...மக்களிடம் யோசிப்புதன்மை இருந்தால் கண்டிப்பாக வரும் தேர்தலில் எது உண்மை என்று கூறிவிடுவார்கள்.. தேர்தல் நியாமாக நடந்தால்!!!!!!!????.../

  மக்களிடம் யோசிக்கும் தன்மை பற்றி பிரச்சன்னை இல்லை கவர் வினையோகம் எப்படி நடக்கபோகிறது என்பதே தேர்தல் முடிவை தீர்மானிக்கும்...

  ReplyDelete
 5. This comment has been removed by the author.

  ReplyDelete
 6. .

  ஒரு மாபெரும் கலைஞன். மனதோடு பேசும் இசைக்கு சொந்தக்காரன். மறைந்தது உடல் மட்டுமே.

  மரணம் என்பது மறக்கடிக்கபடுவது. ம.வாசுதேவனுக்கு மரணமில்லை


  2.

  அப்பாடா இப்பதான் நிம்மதியா இருக்கு.

  இந்தியாவோட உள்நாட்டு பாதுகாப்புக்கு பெரிய அச்சுருத்தல்.அதனால்தான் மருத்துவ உதவிக்கு கூட இந்தியாவிற்குள் விடவில்லை.

  ஒருவழியாகஅந்த தாய் இறந்துவிட்டார். இனி இந்திய உள்நாட்டு பாதுகாப்புக்கு பிரச்சினை இல்லை

  இப்படிக்கு

  “இண்டியன்”

  (உள்நாட்டு அமைச்சரவை)

  (திருப்தியா உங்களுக்கு ??????)

  ReplyDelete
 7. மறைவுகள் இரண்டும் துன்பம் தருவன.

  ReplyDelete
 8. அவ்விருக்கும் ஆழ்ந்த இரங்கல்களும் அஞ்சலிகளும்..

  ReplyDelete
 9. மனமார்ந்த அஞ்சலிகள்...

  ReplyDelete
 10. அவர்களுக்கும் அவர்களது குடும்பாத்தார்க்கும் கவிதை வீதியின் அனுதாபங்கள்..

  அவர்கள் ஆன்பா சாந்தி அடையட்டும்..

  ReplyDelete
 11. ///////(உதா. பன்னிகுட்டி, கோமாளி, அஞ்சா சிங்கம், ரொம்ப நல்லவன்.. பட்டாபட்டி.. டெரர்.. சேட்டைக்காரன்.. ஓட்டவடை)///////

  என்ன இது தெரிந்து கொள்ள கவி‌தை வீதி வாங்க...

  ReplyDelete
 12. இருவருக்கும் அஞ்சலி.
  தாய் பார்வதியம்மாளின் மரணம் இருக்கும் குற்றவுணர்ச்சியை இன்னும் அதிகப்படுத்திப்போயிருக்கிறது.

  ReplyDelete
 13. ஆமா பட்டா நாக்கு கூசுகின்றந்து தான் ..
  நம்ம மகன் மட்டும் தன் சிகிச்சைச்சைக்கு இங்கு உள்ள மருத்துவர்களை ,மருத்துவமனைகளை நம்பாமல் .....லண்டன சென்று ஒரு வாரம் சிகிச்சை ..

  இங்கு உள்ள மக்கள் எல்லாம் முட்டாள்கள் தான் ..

  கேட்டால் மக்களுக்காக தொண்டு ஆற்றுகிராரம் ..

  ReplyDelete
 14. ///ராசாவின் கரம் கறைபட்டதா?.. இல்லை உத்தமரை பழிவாங்கும் நடவடிக்கையா?.
  உத்தமர் எனில், நமது தானைத்தலைவர் ஏன் சோனியாவிடம் இன்னமும் மடிப்பிச்சை ஏந்திக்கொண்டுள்ளார்?.////

  அது கறைபட்ட கரம் இல்லீங்கண்ணோவ். கனிபட்ட கரமா இருக்கும்.

  /// ஏண்ணே ராசாவின் நுங்கை பிதுக்குராங்க.?./////

  புரியாம பேசாதே பட்டா, சிபிஐ நேர்மையா விசாரிச்சா கொலைஞர்,அண்டோனியோ மெய்னோ, மண்ணுமோகன், டாடா, அம்பானி இப்படி கவருமெண்டு நடத்துற அத்தன பேரும் உள்ள போகணும்.இது எப்படி நடக்கும்?
  அதனால,
  நொங்கு தின்னவன் தப்பிச்சுட்டான், அத நோண்டித்தின்னவன் மாட்டிக்கிட்டான்.

  ReplyDelete
 15. ஹி ...ஹி ..ரத்தன் டாட்டா வை இது நாள் வரை அரசியல் முகம் பூசாத தொழில் அதிபர் என்றே ஊடகங்கள் கூறி வந்தன ..மக்களும் அதை தான் நம்பினார்கள் ...அதனால் அந்த மக்கள் முட்டாள்கள் தானே ..

  ஒரு வேலை அப்படி பட்ட மனிதரையும் விட்டு வைக்காமல் ..அவரையும் அரசியல் வலிக்கு வந்தே தீரவேண்டும் என்று வர வைத்து .கழகங்கள் செய்த சாதனையோ ....

  ReplyDelete
 16. ஏன் பட்டா, ராசா ஜெயில்ல வீட்டுசாப்பாடு எடுத்துகிறத்துக்கு கோர்ட்டு அனுமத்திச்சுருக்கே. சாப்பாட்டுக்கு மட்டும்தான் அனுமதியா, இல்ல காய்’கனி’க்கும் அனுமதி உண்டா?

  ReplyDelete
 17. உம்மரணத்துக்கு இரங்கல் தெரிவிக்க
  நா கூசுகிறது தாயே.!!...........//////////////////////

  அவர் மறைந்துவிட்டார் என்றாலும், அவர்தம் குரல் என்றென்றும் ஒலித்துக்கொண்டிருக்கும்.....................///////////////////////

  ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறோம் ...........

  ReplyDelete
 18. பார்வதி அம்மாள் மறைவு..இனியாவது அந்த ஆத்மா நிம்மதியாக இருக்கட்டும்

  ReplyDelete
 19. இவனுக யாரும் திருந்த வேண்டாம்னே குனிய வெச்சி ஒவ்வொருத்தனுக்கும் ஆப்பு அடிக்கணும்

  ReplyDelete
 20. அடிமுட்டாப்பய சங்கம் வரவேற்கிறேன்...

  ReplyDelete
 21. கடேசியா போட்டுருக்குற உன்னோட ஒட்டு கேக்குற போட்டோ ரொம்ப நல்லாருக்கு. ஆனா மறந்தாப்புல ட்ரெஸ் போடாம வந்துட்ட.

  ReplyDelete
 22. Blogger வானம் said...

  கடேசியா போட்டுருக்குற உன்னோட ஒட்டு கேக்குற போட்டோ ரொம்ப நல்லாருக்கு. ஆனா மறந்தாப்புல ட்ரெஸ் போடாம வந்துட்ட.
  //

  யோவ்.. அது நானில்ல.. என்னோட குரு”நா(த)யி” டோமரு...ஹி..ஹி

  ReplyDelete
 23. //தமது வசீகரக்குரலால், தமிழகத்தை கட்டிப்போட்ட, அருமை பாடகர் வாசுதேவன் அவர்களின் மறைவு. அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
  அவர் மறைந்துவிட்டார் என்றாலும், அவர்தம் குரல் என்றென்றும் ஒலித்துக்கொண்டிருக்கும்.//

  பட்டா...வாசுதேவன் சார் கூட சாகும் கடைசி நேரத்தில் கொஞ்சம் பொருளாதரா ரீதியாக கஷ்டபட்டுட்டு தான் இறந்திருக்கார்...பக்கவாதத்தில் பாதிக்க பட்டு இருந்தபோது வார இதழ்களில் அவரின் பேட்டிகளை படிச்சிருக்கேன்...திரைப்பட துறையில் நன்கு தெரிஞ்ச நண்பர்கள் உதவிகள் கூட எதுவும் கிடைக்கலன்னு வருத்தப்பட்டு இருந்தார்..moreover , மலையாளத்தில் நடிகர் கோபி பக்கவாதத்தில் இருந்தாலும்..அதற்க்கு தகுந்த கதாபாத்திரங்கள் கொடுத்து அவருக்கு வாய்ப்பு கொடுத்தாங்க..எனக்கும் அப்டி நடிக்க வாய்ப்பு கொடுக்கலாமே னு அவர் பரிதாபமாய் கேட்ட வரிகள் இன்னும் நினைவில்..ம்ம்...ஆத்மா சாந்தியடையட்டும்...:(

  ReplyDelete
 24. மலேசியா வாசுதேவன் அவர்கள் குரலில் 'காடு பொட்டக்காடு' (கருத்தம்மா) எனும் பாடலில் வானம் பார்த்த பூமி பற்றி நுட்பமாக விவரிக்கப்பட்டிருக்கும். குறிப்பாக 'ஆறு எங்கே ஆறு. அட போடா வெட்கக்கேடு. மழை வந்தா தண்ணி ஓடும். மறு நாளே வண்டி ஓடும்'. உன்னதமான கலைஞனின் மறைவு வேதனையை அளிக்கிறது.

  ReplyDelete
 25. சே.. இவ்வளவு விளக்கங்கள் கொடுத்தும், ஊழல் இல்லாத ஆட்சி என்று ,உற்சாகமாக தமிழின மக்களுக்கு பாடுபடும், நம் தலைவர்களைப்பார்த்து, அடி முட்டாப்பய சங்கம், இரு கரம் தூக்கி வணக்கம் வைக்கிறது////


  இதில மகளிர் அணி உண்டா பாஸ்?

  ReplyDelete
 26. கழகத்தின் ஆட்சிதனை ஊழல் கவ்வும்....
  கழகம் மறுபடி வெல்லும்!

  வேற எவென் இருக்கான்? மக்கள் என்னைக்குமே மண்ணைத்தான் கவ்வும்!

  ReplyDelete
 27. முதல் இரண்டு மறைவுகளுக்கும் என் அஞ்சலிகள்!
  யோவ் பட்டா, மூணாவதா ஒண்ணு போட்டிருக்கியே, ஏதோ மனசாட்சி சாவு,அப்படின்னு! அதை நான் ஒதுக்கவே மாட்டேன். மனசாட்சி இருந்தாதானே சாகும், இல்லாத ஒண்ணு எப்படிசாகும்?

  ReplyDelete
 28. லிங்க் கொடுத்திருந்தா ஒரு காட்டு காட்டிட்டு வருவேன்ல?

  ReplyDelete
 29. இறந்த ஆத்மாக்கள் சாந்தியடைய பிரார்த்தனைகள்.

  ReplyDelete
 30. பூதவுடல் நீத்தவர்களுக்கு அஞ்சலிகள்! 2G ஸ்பெக்ட்ரம் விஷயத்தில் இன்னும் தொடர்ந்து பிடிவாதம் செய்பவர்களைப் பார்த்துப் பரிதாபப்படுவதைத் தவிர நம்மால் ஆகக்கூடியது ஒன்றுமில்லை அண்ணே! காலம் பதில் சொல்லும்!

  ReplyDelete
 31. இன்னுமா ராசா நல்லவர்னு உலகம் நம்புது? அட தேவுடா...

  ReplyDelete
 32. http://adrasaka.blogspot.com/2011/02/blog-post_22.html

  ReplyDelete
 33. //இன்னுமா ராசா நல்லவர்னு உலகம் நம்புது? அட தேவுடா...//

  ReplyDelete
 34. //இன்னுமா ராசா நல்லவர்னு உலகம் நம்புது? அட தேவுடா...//

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

  ReplyDelete
 35. நல்லா இருக்கு ஞாயம் இன்னும்மா இந்த அறிவாளிங்க அந்த மவராசன நம்புதுங்க அய்யோ அய்யோ!

  ReplyDelete
 36. கலிங்கர் வாழ்க!
  கவி அம்மணி வாழ்க!
  ராசா வாழ்க!
  பட்டா வாழ்க!


  (பொதுசனம்- குத்துங்க எசமான், குத்துங்க)

  ReplyDelete
 37. அந்த நாய் படம் ரொம்ப நிதர்சனங்க...

  ReplyDelete
 38. ஊழலா, கொஞ்சம் பொறுங்க... மானாட மயிலாட பார்த்துகிட்டு வந்துடறேன்!

  ReplyDelete
 39. பாஸ்..என்னது இது ஏதும் மலைக்கு மாலை போட்டிருக்கீங்கலா...ரொம்பவும் சாஃப்டா போட்டிருக்கீங்களே...!!

  ReplyDelete
 40. இவ்வளவு நடந்தும் ராசாவுக்கு சப்போட்டுன்னா..!!!
  ஜால்ரா போட ஒரு அளவில்லையா..!!!.

  ReplyDelete
 41. அட முட்டாள்களே கருணாநிதியின் மீதான / திமுகவின் மீதான வெறுப்பை இப்படியா கண்ணை மூடிக்கொண்டு துப்புவது.....???//

  கலைஞர் மீது வெறுப்பா அவருக்கும் எங்களுக்கும் ஏதாவது வாய்க்கா வரப்பு பிரச்சனையா அல்லது பங்கு பிரிச்சதுல பிரச்சனையா... அட அவரு நாங்க ஓட்டு போட்டதுல ஜெயித்தவருங்க(நீங்களும் கள்ள ஓட்டு போட்டீங்க ஒத்துக்கிறேன்) அவரு இப்படி நாட்டு வருமானத்தையெல்லாம் வீட்டுக்கு ஒதுக்குனா என்னதான் மானங்கெட்ட தமிழனா இருந்தாலும் கோவம் வரத்தான் செய்யும். ஒன்னும் பிரச்சனை இல்லண்ணே எலக்சன் வரைக்கும் பொறுங்க. பதில் அங்கேதான் இருக்கு.மல்லாக்க படுத்து துப்பினது யாருன்னு

  ReplyDelete
 42. அண்ணே கீழே ஒரு ஜந்து அப்பாவியா கை எடுத்துக் கும்பிடுதே, அதுதான் அந்த அல்லக்கையா?

  ReplyDelete
 43. மறைந்தவர்களுக்கு அஞ்சலிகள்....

  ReplyDelete
 44. http://powrnamy.blogspot.com/2011/02/blog-post_25.html

  கேபிள் அழைக்கிறார் - மீனவர் பிணங்களுக்கு மத்தியில் கூத்தடிக்க பதிவர் சந்திப்பு

  ReplyDelete
 45. Blogger நிலவு said...

  http://powrnamy.blogspot.com/2011/02/blog-post_25.html

  கேபிள் அழைக்கிறார் - மீனவர் பிணங்களுக்கு மத்தியில் கூத்தடிக்க பதிவர் சந்திப்பு//

  அய்யா நிலவு..
  ஆமாம்.. கேபிள் மீது என்ன தனிப்பட்ட கோபமா?..

  ”கேபிள் , கக்கூஸ் போறார்.. ஏன்?”-னு பதிவு மட்டும்தான் எழுதலே.... !!

  ReplyDelete
 46. முதல் இரண்டு மரணங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்..

  மூன்றாமவது...

  அதை ரொம்ப நாள் முன்னாடியே அவுத்து வெச்சுட்டு தான் அரசியலுக்கே வருதுக... என்னத்த சொல்ல..

  ReplyDelete
 47. //இதில் பிரச்சனை இல்லையென்றால், ஏண்ணே ராசாவின் நுங்கை பிதுக்குராங்க.?.// இன்னுமா இந்த ஊரு CBI நடவடிக்கையெல்லாம் நிஜம்னு நம்புது..??? ஐயோ, ஐயோ....

  ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!