Pages

Wednesday, February 16, 2011

கனிமொழி கைது.. பட்டாபட்டி ஸ்பெஷல் நியூஸ்

.
.
.
சென்னை: தமிழக மீனவர்களை தொடர்ந்து தாக்கி வரும் இலங்கை கடற்படையினரைக் கண்டித்து சென்னையில்  உள்ள அந்நாட்டு தூதரகத்தை திமுகவினர் முற்றுகையிட முயன்றனர். அப்போது திமுக எம்பி கனிமொழி உள்ளிட்ட  ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.
***

யார் இந்த கனிமொழி?
இவர், திராவிட முன்னேற்றக்கழகத்தின் ஒரு தூண்.   சமீபத்தில்தான், அவரது உழைப்புக்குத்தகுந்த பதவி அவரை  நாடிவந்தது.   ’குடும்பம், குட்டி’ என்பதை புறந்தள்ளிவிட்டு, நாடே வீடு, மக்களே சொத்து’ என்று பொன்னான  வாழ்க்கையை, இடக்கையால் புறந்தள்ளிவிட்டு,  பூகம்ப வாழக்கைக்கு தேர்ந்தெடுத்த தியாகச்செம்மல்.

மேலும், நாட்டு மக்களுக்காக, அவரது மூன்று தலைமுறையும் அணிதிரண்டு அரசியல் இருப்பது இளைய  வாக்காளர்களுக்கு புதுச்செய்தி.   இவரது தந்தையும், நாட்டை நிர்வகுக்கும் முக்கிய பொறுப்பில் உள்ளதாக ஏஜன்சி  செய்திகள் தெரிவிக்கின்றன.

ஏன் இந்த கைது?.
சமீபகாலமாக, தமிழக மீனவர்கள் , இலங்கை கடற்படையினரால், சுடப்பட்டு இறப்பது தினசரி  வழக்கமாகிக்கொண்டுள்ளது.   அவரது தந்தையும், இந்த தள்ளாத வயதிலும், அதற்காக பாடுபட்டுக்கொண்டுள்ளார்.   நேற்று 106 மீனவர்கள், இலங்கை அரசால் கைது செய்யப்படுள்ள விசயம் பத்திரிக்கைகளில் வந்ததே.   அதை  கண்ணுற்ற தந்தையார்,  ‘இறப்புக்கு மட்டுமே நான் பொறுப்பு , கைதுகளுக்கு தன் மகள் பொறுப்பு’ என்று  பணிச்சுமையை பகிர்தளித்து, மக்களுக்குக்காக பாடுபட, மனதை இரும்பாக்கி,  மகளை போர்களம் அனுப்பியுள்ளார்.

எப்படி கைது?
இவர் தமிழக எம்பி என்று தெரிந்தும், போலீசார் அத்துமீறி கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றினர்.   அதைக்கண்ட  தமிழகமே கொத்தளித்து கண்ணீர் கடலில் மூழ்கியது.   இதற்காகவா சுதந்திரம் வாங்கினோம் என்று முதிய  தலைமுறையினர் கதற,     பெண் என்றும் பாராமல், கைது செய்வதா? என இளைய தலைமுறை பரிதவிக்க,    தமிழ்நாடே கண்ணீர் கோலம் பூண்டது..  உஷ்..  இருங்க பாஸ் சோடா குடிச்சுட்டு எழுதறேன்...

க்ளக்..
க்ளக்..க்ளக்..
க்ளக்..
க்ளக்..க்ளக்..
க்ளக்..
க்ளக்..க்ளக்..

இதை கண்ணுற்ற பின்னும், ’சாதத்தில் கை வைப்பது மலத்தில் கை வைப்பது போல’ என்பதால், பேனா மற்றும்  பென்சிலை எடுத்துக்கொண்டு பேட்டி காண புறப்பட்டுவிட்டேன்..

இப்போது பேட்டி.

கலைஞர் :
வெயில்படாமல் வளர்த்த இந்த கிளி, மீனவர் பிரச்ச்னைக்கு கருவாடாக வாடியதை கண்ணுற்ற எனக்கு, மருந்து  மாத்திரைகள் சாப்பிடக்கூட தோன்றவில்லை.
துணைவியர்கள் வன்புறுத்தல், என் செவிகளில் ஏறவில்லை. இந்த நிகழ்வு, வருங்கால சந்ததிகளுக்கு ஒரு பாடம்.
நாளைய சரித்திரம், இதை பொன் எழுத்தில் பொறிக்கும் காலம்  வெகு அருகில் இருப்பதை தமிழகமே அறியும். . அதை கண்டபின்தான் , எனக்கு ஓய்வு..


து.முருகன்:
இதற்கெல்லாம் காரணம் சு.சாமி தலைவரே....   அவரை உள்ள  தூக்கிப்போடனும்..   நீங்க மட்டும் உம்-னு சொல்லுங்க, நானே  களத்தில்  இறங்கி முடிக்கிறேன்.


ஆ,வீராசாமி :
நல்லவேளை , தலைவர் என்னை கை காமிக்காம விட்டாரு.  ’கரண்ட் இருந்திருந்தா, மீனவர்கள் மானாட மயிலாட பார்த்துக்கிட்டு கடலுக்கு போகாம இருந்திருப்பாங்க’.   இவ்வளவு பிரச்சனை வந்திருக்காது.  கடவுள் என் பக்கமும் இருக்கார். அப்பாடா..


ஜெ.லலிதா:
’பெண் புலியுடன் மோத பெண்புலியை அனுப்பிவைத்த’, மைனாரிட்டி அரசை கண்டித்து, திருநெல்வேலியில், கழக ரத்தத்தின் ரத்தங்கள் ஆர்ப்பாட்டம் செய்யப்போகிறார்கள்.   இடம் மற்றும் நேரத்தை, கொடைநாட்டில் பொதுக்குழுவில் முடிவெடுப்போம்.   அதற்குள் மைனாரிட்டி அரசு ராஜினமா செய்யவேண்டும்.


வி.காந்த்:
இது பாகிஸ்தானின் சதி.  என்னை முதல்வராக்கினால், ஒரே வாரத்தில் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பேன் என உறுதிமொழி அளிக்கிறேன்.


யுவராஜ்:
கனிமொழியை கைது செய்து போலீஸ்வேனில் ஏற்றும் காட்சியை பார்த்ததும் , மனம் சுக்குநூறாகிவிட்டது.   பின்ன என்ன சார்?.   எங்கள் தலைவர் ராகுல்காந்தியை ஈன்றெடுத்த  அன்னை,  தாயுள்ளத்தோடு வழங்கிய வேன் அது.   அதில் எங்கள் தலைவர் ராஜீவ் போட்டோ எங்கே?.   இது ஒவ்வொரு தமிழனக்கும் தலைகுனிவு.
அதைப்போக்க, ’சென்னை - திருப்பதி நடைப்பயணம்’ செல்லப்போகிறோம். அப்படி போகும் வழியில் உள்ள கிராமத்தில், “ தலைவர் ராஜீவ் போட்டோ” வைக்காத அரசாங்கத்தை கண்டித்து, ஆர்ப்பாட்டம் செய்வோம்.


தங்கபாலு
:
எங்கள் அன்புத்தலைவர் ராஜீவ்காந்தி. அவரது அன்பு மனைவி, எங்கள் அன்னை சோனியா. அவர், எங்களை மண்டியிடச்சொன்னால், தலை தரையில்படும் அளவுக்கு, மண்டியிடவும் தயங்கமாட்டோம்.   அவர்தான் எங்கள் தெய்வம். தமிழகத்தில் உட்கட்சி பூசல் இல்லை.   அப்படி இருந்தால், எங்கள் தலைவியின் சொல்லுக்கு கட்டுப்படுவோம். வாழ்க காங்கிரஸ்.


உ.தமிழன் :
இதெல்லாம் முருகன் செயல். ஏதோ இப்பொழுதாவது முருகன் அருளால், நல்ல புத்தி வந்ததே என்று சந்தோசப்படுங்க என் இனிய வலை உலகமக்களே..!!


டோமர் :
நான் சமீபத்தில் அதாவது 1928-ல், ஜெர்மானிய மொழியில்  இருந்து  தமிழில், திருக்குறளை மொழிபெயர்த்துக்கொண்டிருந்தேன்.   அப்போது, கதவைத் தட்டாமல் உள்ளே நுழைந்த ஜெர்மானிய பெண்ணின், கன்னத்தில் இருந்த மரு, என்னை அதிரவைத்தது.  அதற்கு என்ன பரிகாரம்? என்று முன்னோர்கள் அருளிய சமஸ்கிருத புத்தகத்தை , ஆராய்ந்தபோது, திடுக்கிடும் உண்மை விளங்கியது.
அதை நான் சொன்னால், வால்பையன் போன்றவர்கள், வசைபாடுவர்கள் என்றெண்ணி, கையது பொத்தி வாய-து மூடி, சந்தர்ப்பம் வரும்வரை காத்திருந்தேன்.  ஆரியர்கள் நெற்றியில் இருந்து பிறந்தவர்கள்.  திராவிடம் சுடப்பட்டே அழியும் நிலையில் இருப்பதை பார்க்கும்போது நகைப்பதா, அல்ல நடிப்பதா என்று தெரியவில்லை.  இதனுடைய மேல்விபரங்களுக்கு, ’சோ’வின் இந்த சுட்டியை சொடுக்கவும்.





மக்கள்:
ங்கொய்யாலே ... என்னாய்யா நடக்குது?.    அவரு தந்திய டாய்லெட் பேப்பர் கணக்கா யூஸ் பண்றாரு.   இந்தம்மா, நீராநாடியாவோட ஆங்கிலத்தில இழுத்து இழுத்து பேசினப்பவே, எங்க உயிர் இழுத்துக்குச்சு.

இப்ப எங்ககிட்ட, இன்னா ம^%&$யிரு இருக்குனு, ஆளாக்கு சீன் போடறானுக?. இதை பார்ததற்கு பரிகாரமா, எலெக்‌ஷ்ன் டைம்ல 10 ஆயிரம் ரூபாய் வரலே, ங்க்கொய்யா.   ஊரே குடி பெயந்து, இத்தாலில போய் செட்டில் ஆயிடுவோம்..  அப்புறம்,ஆளே  இல்லாத கடையில,  அவனுகளே அடிச்சுக்கிட்டு சாகட்டும். தூத்தேறிக....
.
.
.
கனிமொழி யார் என்று தெரியாத பன்னாடை தமிழர்களுக்காக..



இவர்தான் கனிமொழி.










.
.
.
--------------------------------------------------------------------------------


கடை'சீசீ' செய்தி..




போய் வா நதிஅலையே..

82 comments:

  1. கனிமொழி: தாக்குதலை உடனடியாக நிறுத்தாவிட்டால், எங்களது போராட்டம் மேலும் தீவிரம் அடையும் ....... இப்படியா http://bit.ly/f5XaVx

    ReplyDelete
  2. அங்க போட்டது இங்கயும்.

    கனிமொழி கைது # ஒரு நாடகமன்றோ நடக்குது? #tnfisherman

    திமுக போராட்டம் # ஏங்கண்ணா பேப்பர் தீந்துருச்சுங்களா? #tnfisherman

    கனிமொழி கைது # நாடக நடிகையின், நாடக வசனகர்த்தாவின் மகள் நடிக்கும் நாடகம் #நடக்கட்டும் நடக்கட்டும் #tnfisherman

    கனிமொழி கைது #இந்த விஷயத்துல நல்லாதான் திரைக்கதை அமைக்குறாரு #இளைஞன்ல ஏன் கோட்டை விட்டாரு? #tnfisherman

    கனிமொழி கைது #ஸ்பெக்ட்ரமுக்கு ஒத்திகைன்னு நெனைச்சிக்கிங்க. #tnfisherman

    எப்படிப்பா மீனவர் பிரச்சனைய சமாளிக்கிறது? #100 மீனவர்களை பிடிக்கச்சொல்லு. நாம போராட்டம் பண்ணி கோபத்தை திசை திருப்பிரலாம். #tnfisherma

    தமிழகம் கொந்தளிக்க வேணாமா? இப்படி அமைதிப் பூங்காவா இருக்கே? இதுதான் தலைவரின் மகளுக்கு மக்கள் அளிக்கும் மரியாதையா?

    தலைவரே உங்கள் உண்ணாவிரத சாதனையை ம.பி. முதல்வர் முறியடித்துள்ளார். விடாதீர்கள். களம் இறங்குங்கள். #2 நிமிடம் உண்ணாவிரதம் #tnfisherman

    புலிக்குப் பிறந்தது பூனையாகுமா? #நாடக நடிகைக்குப் பிறந்தது நடிக்காமல் இருக்குமா? #tnfisherman

    ஐயோ! பேப்பர் தீந்துபோச்சே! என் செய்வேன்? மகளே, இன்று முக்கியப் பாத்திரத்தை நீ ஏற்றுக்கொள். #நடக்கட்டும் நாடகம் #tnfisherman

    ஏப்பா! இந்த கைது காட்சி போதுமா? இல்லை 2 நிமிட உண்ணாவிரத காட்சியும் நடத்தனுமா? #தேர்தல் வருதில்ல? #tnfisherman

    தேர்தல் வரும் பின்னே! நாடகம் நடக்கும் முன்னே! #போங்கடா பொறம்போக்குங்களா! #tnfisherman

    RT: இலங்கை கடற்படை அத்துமீறலை கண்டித்து திமுக பேரணி! மக்களே தேர்தல் வந்து விட்டது #TNfisherman

    இன்னைக்கி ஹீரோயின் சப்ஜக்ட் படமா? ஹீரோவ எப்பப்பா இன்ட்ரோட்யுஸ் பண்ணுவீங்க? #tnfisherman

    ராசா: காத்திருந்து! காத்திருந்து! காலங்கள் போகுதடி! .... கனி: வந்தேன்! வந்தேன்! மீண்டும் நானே வந்தேன் #tnfisherman

    உதயநிதி: நம்ம எடுக்குற படத்துக்கு இவ்வளவு செலவு பண்ணி விளம்பரம் பண்றோம். அத்தை நடிக்கிற நாடகம் செலவே இல்லாம ஓடுது? #tnfisherman

    கைது காட்சி வந்துருச்சி. கொல்றாங்கப்பா காட்சி எப்ப வரும்? #tnfisherman

    கனிமொழி கைது #வேன்ல ஏறும்போது கை காட்டுனியா மகளே! #tnfisherman

    மாங்குயில் கூவிடும் கவிச்சோலை, எமை மாட்ட நினைத்திடும் சிறைச்சாலை. #எல்லா வசதியும் இருக்கு! போய் வா மகளே! #tnfisherman

    நாடகம் விடும் வேளைதான்! உச்சக் காட்சி நடக்குதம்மா! வேஷம் கலைக்கவும், ஓய்வு எடுக்கவும் நேரம் நெருங்குதம்மா! #tnfisherman

    ஒரே நாடகத்தின் இருவேறு காட்சிகள்; இடமும் தலைமையும் வேறு வேறு;#கனி #டக்ளஸ். இயக்கம் ஒருவரே #மு.க #tnfisherman

    RT: நூறு பேரை மடக்கும் வல்லமை கொண்ட பருத்தித்துறை மீனவர்கள் இலங்கைக் கடற்படைக்கே சவாலாக அமையுமோ # இந்த நாடகம் எத்தனை நாளம்மா #tnfisherman

    இலங்கைக் கடற்படையை விட வலிமை வாய்ந்த பருத்தித்துறை மீனவர்கள். #ஹையோ ஹையோ #tnfisherman

    கதை எழுதும் திறன் குறைந்ததாக யார் சொன்னது? இன்று நடப்பதைப் பார்த்தீர்கள்தானே? - முக. #நான் அசைந்தால் SL Navy அசைந்தாடும்! #tnfisherman

    கூட்டுக்களவானிகளின் கூட்டு நாடகம். யாழிலும், சென்னையிலும். #tnfisherman

    அம்மணி! இன்னைக்கு நாடகத்துல ஆறுமுகம் தொண்டைமானுக்கு ஏதும் வேஷம் கொடுக்கலையா? என்ன அம்மணி இப்படியா நன்றி மறக்கறது? #tnfisherman

    106 மீனவர்களை காக்க போராடியது கழக ஆட்சி. 2 மீனவர்கள் உயிர் பெருசா? 106 உயிர்கள் பெருசா #தேர்தல் வருது #tnfisherman

    இரண்டு காட்சிகள் கொண்ட ஒரே நாடகத்தின் மூலம் #tnfisherman கொலைகளை மறக்கடிக்கும் திறன் வேறு யாருக்கும் உண்டா? - முக. #தேர்தல் வருது

    உன் தாய் நாடக நடிகை என்பதை நிரூபித்துவிட்டாய், என் செல்வ மகளே! அடுத்தத் தேர்தலுக்குதான் அடுத்த காட்சி. ஓய்வு கொள். - முக. #tnfisherman

    ReplyDelete
  3. அய்யகோ எங்கே செல்கிறது இந்த நாடு! (இத்தாலிக்கா?)

    ReplyDelete
  4. அரசியல்வாதிகளுக்கு சரியான சவுக்கடி..

    ReplyDelete
  5. நாகை, காரைக்காலை சேர்ந்த 100 மீனவர்களை இலங்கை மீனவர்கள்
    பிடித்து வைத்துள்ளதாக தான் தினகரனில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

    கொல்லும் அதிகாரத்தை இலங்கை ராணுவம் வைத்துக்கொண்டு , கைது செய்யும் அதிகாரத்தை இலங்கை மீனவரகளுக்கு தந்து விட்டார்கள் போல.

    ReplyDelete
  6. இலங்கைக் கடற்படையை விட வலிமை வாய்ந்த பருத்தித்துறை மீனவர்கள். #ஹையோ ஹையோ #tnfisherman

    ReplyDelete
  7. //இவர், திராவிட முன்னேற்றக்கழகத்தின் ஒரு தூண். சமீபத்தில்தான், அவரது உழைப்புக்குத்தகுந்த பதவி அவரை நாடிவந்தது.//

    தூண் இல்லைனா கீழ விழுந்திடுமோ ?

    ReplyDelete
  8. ஜெயலிலதா அறிக்கயும் , வி.காந்த் அறிக்கையும் ரொம்ப கச்சிதமா இருக்கே அண்ணா ? ஒரு வேலை இதுவரைக்கும் நீங்கதான் எழுதி கொடுத்துட்டு இருக்கீங்களோ ?

    ReplyDelete
  9. அந்த போட்டோவுல இருக்குறவங்கதான் கனிமொழியா ? நல்லவேளை சொன்னீங்க ..

    ReplyDelete
  10. இலக்கணப்படி அது ஒரு வினைத்தொகையண்ணே.கனிந்த மொழி,கனிகின்ற மொழி,கனியும் மொழி.இறந்த காலம்,நிகழ்காலம்,எதிர்காலம் என்று மூன்று கால வினைகளையும் ஒரு சேரக்குறிக்கிறது.எனக்கும் ஒண்ணும் புரியல.106 மீனவர்களை இலங்கை அரசு கைது செய்ததை கண்டித்து போராட்டம் நடத்திய ஆயிரக்கணக்கான திமுக உறுப்பினர்களை தமிழக அரசு கைது செய்திருக்கிறது.சரி.அப்டின்னா ஆயிரக்கணக்கான திமுக காரர்களை கைது செய்த தமிழக அரசை கண்டித்து இலட்சக்கணக்கான காங்கிரஸ் காரர்கள் போராட்டம் நடத்துவார்களா? அல்லது அதிமுக காரர்கள் போராட்டம் நடத்துவார்களா?

    ReplyDelete
  11. அட போங்கப்பா அவனுகளும் திருந்த மாட்டானுவ நாமளும் திருந்த மாட்டம்....
    பத்தாயிரம் வாங்கினமா இஷ்ட பட்டவனுக்கு ஓட்டை போட்டமான்னு போயிகிட்டே இருக்க வேண்டியதுதான்....

    ReplyDelete
  12. // ங்க்கொய்யா. ஊரே குடி பெயந்து, இத்தாலில போய் செட்டில் ஆயிடுவோம்.. //

    இத் நல்ல ஐடியாதான் பட்டா. எல்லாரும் ஒன்ன சேந்து போய்டணும்.

    ReplyDelete
  13. டோமர் :
    நான் சமீபத்தில் அதாவது 1928-ல்,.......//////////////


    தக்காளி இது டைனோசர் காலத்து பெருசுன்னு நெனச்சேன் .
    ரொம்ப யுத்தா இருக்கும் போலே .............

    ReplyDelete
  14. அட போங்கப்பா. போரடிக்குது. வேற படம் காட்டுங்க

    ReplyDelete
  15. >>> ஊரே குடி பெயந்து, இத்தாலில போய் செட்டில் ஆயிடுவோம்.. அப்புறம்,ஆளே இல்லாத கடையில, அவனுகளே அடிச்சுக்கிட்டு சாகட்டும். தூத்தேறிக....


    கனிமொழியை தாக்கறப்பவும் இத்தாலியை மறக்க முடியலையே உங்களால?

    ReplyDelete
  16. அப்பாவிFebruary 16, 2011 at 5:59 PM

    பட்டாப்பட்டி .. கனிமொழின்னு மொட்டையா எழுதினா ? அவங்களுக்கு இனிஷியல் இல்ல? தெரியலனா நாலு பேருகிட்ட கேட்டு எழது. எவ்வளு பெரிய இனிஷியல் ஆனாலும் சரி.

    ReplyDelete
  17. Mile sur mera tumhara...Oh....sur bane hamaaraa....!

    ReplyDelete
  18. நீ இன்னா சவுண்டு உட்டாலும் ஒரு பய திருந்த மாட்டான் தல..

    ReplyDelete
  19. கிழி கிழின்னு கிழிச்சீட்டீங்க தலைவரே..

    ReplyDelete
  20. எங்கள் தலைவி கைதா? இது அநியாயம் அக்கிரமம்,
    இதை வன்மையாக கண்டித்து பட்டாவின் பிளாகிலிருந்து வெளிநடப்பு செய்கிறேன்

    ReplyDelete
  21. ஹிஹி கலைஞரின் பேட்டி கடி...

    ReplyDelete
  22. //கரண்ட் இருந்திருந்தா, மீனவர்கள் மானாட மயிலாட பார்த்துக்கிட்டு கடலுக்கு போகாம இருந்திருப்பாங்க//

    இதை காட்டி தானே இலங்கை தமிழர் பிரச்சனையிலும் உசுப்பேத்த முடியவில்லை ,எதிலும் உசுப்பேத்த முடியவில்லை ... கேபிள் டி வி நமக

    ReplyDelete
  23. இவரது தந்தையும், நாட்டை நிர்வகுக்கும் முக்கிய பொறுப்பில் உள்ளதாக ஏஜன்சி செய்திகள் தெரிவிக்கின்றன.//

    வீல் சேரில் போவாரே அவரைத்தானே சொல்றீங்க. ஆமாண்ணே நானும் கேள்விப்பட்டேன் அவர்தான் முதல்வராம். அது உண்மயாண்ணே. மத்தியில அந்த சோனி அம்மாதான் எல்லாம் செய்றாங்க ஆன அந்த தலைப்பாகை வைத்த ஆள்தான் பிரத மந்திரியாம். பத்திரிகை செய்தில பார்த்தேன் யாரைத்தான் நம்புவதோ.....

    ReplyDelete
  24. பட்டா, கனிமொழி என்கிற தியாகசெம்மலின் வரலாறு தந்தமைக்கு தமிழுலகம் உங்களுக்கு நன்றி கூறுகிறது.

    ReplyDelete
  25. மண்டபத்தில் மாலைவரை வைத்திருந்துவிட்டு வீட்டுக்கு அனுப்பி வைப்பதற்கு பேருதான் கைதா?

    பேட்டியில் பிரபல பதிவர் ஒருவரின் பேட்டி மிஸ்ஸிங். கழக உடன்பிறப்புகள் கடுப்புல இருப்பதாக கேள்வி.

    ReplyDelete
  26. பட்டா நன்றிங்க.

    கும்மி உங்க ட்வீட் இப்போது தான் முழுமையாக படித்தேன்.

    ReplyDelete
  27. ////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... 14

    அட போங்கப்பா. போரடிக்குது. வேற படம் காட்டுங்க////

    இதை நான் வழிமொழிகிறேன் .........

    ReplyDelete
  28. ஆகா.. சூப்பர்..
    வாழ்த்துக்கள்..
    அருமை நண்பா..
    கலக்குங்க..
    எப்படி சார் இப்படி?..
    ஹா..ஹா
    :-)
    :-(
    ம்..ம்..
    Online...
    வடை எனக்கு...
    வடைபோச்சே....

    ReplyDelete
  29. //கனிமொழி கைது.. பட்டாபட்டி ஸ்பெஷல் நியூஸ்//

    அட போங்க பட்டா ..பேக் கிரௌண்ட் மியூசிக் ....ஐயோ என்னை கொல்லுறாங்க ....ஐயோ என்னை கொளுறாங்க ன்னு கேக்கவே இல்லை ..ஹி ..ஹி ...
    இது செல்லாது செல்லாது

    ReplyDelete
  30. // ’குடும்பம், குட்டி’ என்பதை புறந்தள்ளிவிட்டு, நாடே வீடு, மக்களே சொத்து’ என்று பொன்னான வாழ்க்கையை, இடக்கையால் புறந்தள்ளிவிட்டு//

    அப்போ வலக்கை என்ன செய்யுது ......ஐயோ ...!ராசா தூண புடிச்சிகிட்டு இருந்துச்ச ....

    ReplyDelete
  31. //இறப்புக்கு மட்டுமே நான் பொறுப்பு , கைதுகளுக்கு தன் மகள் பொறுப்பு//

    பார்த்தீங்கள பொது ஜனங்களே ..எவ்வளவு பருப்புன்னு ..சீ தூ ..பொறுப்பு ன்னு ...

    ReplyDelete
  32. // தமிழ்நாடே கண்ணீர் கோலம் பூண்டது.. உஷ்.. இருங்க பாஸ் சோடா குடிச்சுட்டு எழுதறேன்..//

    தமிழகமே கண்ணீரில் இருக்கும் பொழுது நீ மட்டும் சோடா குடிக்கிறது தப்பு .....
    ஹி ...ஹி ...

    ReplyDelete
  33. ஆகவே எனது உரையை இத்தோடு முடித்துக் கொல்கிறேன்....

    ReplyDelete
  34. // ’சாதத்தில் கை வைப்பது மலத்தில் கை வைப்பது போல//

    கடைசி இப்படி ஒரு வார்த்தைய சொல்லிபுட்ட ...நான் எப்படி சாப்பிடறது ..(சோறு மக்க )

    ReplyDelete
  35. //////சென்னை: தமிழக மீனவர்களை தொடர்ந்து தாக்கி வரும் இலங்கை கடற்படையினரைக் கண்டித்து சென்னையில் உள்ள அந்நாட்டு தூதரகத்தை திமுகவினர் முற்றுகையிட முயன்றனர். /////

    ஒருவேள எலக்சன் முடிஞ்சி, திமுக எதிர்க்கட்சி ஆகிடுச்சோ?

    ReplyDelete
  36. பட்டா...செம ஸ்ட்ராங் பதிவு..அசத்திட்டிங்க...உங்க பதிவில் இதை வெரி பெஸ்ட் னு சொல்லலாம்...:))

    ReplyDelete
  37. ////யார் இந்த கனிமொழி?
    இவர், திராவிட முன்னேற்றக்கழகத்தின் ஒரு தூண். சமீபத்தில்தான், அவரது உழைப்புக்குத்தகுந்த பதவி அவரை நாடிவந்தது. ’குடும்பம், குட்டி’ என்பதை புறந்தள்ளிவிட்டு, நாடே வீடு, மக்களே சொத்து’ என்று பொன்னான வாழ்க்கையை, இடக்கையால் புறந்தள்ளிவிட்டு, பூகம்ப வாழக்கைக்கு தேர்ந்தெடுத்த தியாகச்செம்மல். ////////

    எப்பேர்ப்பட்ட தியாகி, இவர் போன்றவர்கள் நம் மண்ணில் பிறந்ததற்கே நாம் பெருமைப் பட வேண்டாமா?

    ReplyDelete
  38. ///////சமீபகாலமாக, தமிழக மீனவர்கள் , இலங்கை கடற்படையினரால், சுடப்பட்டு இறப்பது தினசரி வழக்கமாகிக்கொண்டுள்ளது. அவரது தந்தையும், இந்த தள்ளாத வயதிலும், அதற்காக பாடுபட்டுக்கொண்டுள்ளார். ///////

    என்ன பல்லாவரத்துல கல்லு உடைக்கிறாரா?

    ReplyDelete
  39. //////அதை கண்ணுற்ற தந்தையார், ‘இறப்புக்கு மட்டுமே நான் பொறுப்பு , கைதுகளுக்கு தன் மகள் பொறுப்பு’ என்று பணிச்சுமையை பகிர்தளித்து, மக்களுக்குக்காக பாடுபட, மனதை இரும்பாக்கி, மகளை போர்களம் அனுப்பியுள்ளார்.////////

    கண்கள் பனித்தன, இதயம் இனித்தது, வாய் புளித்தது.......

    ReplyDelete
  40. //////எப்படி கைது?
    இவர் தமிழக எம்பி என்று தெரிந்தும், போலீசார் அத்துமீறி கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றினர். அதைக்கண்ட தமிழகமே கொத்தளித்து கண்ணீர் கடலில் மூழ்கியது. இதற்காகவா சுதந்திரம் வாங்கினோம் என்று முதிய தலைமுறையினர் கதற, பெண் என்றும் பாராமல், கைது செய்வதா? என இளைய தலைமுறை பரிதவிக்க, தமிழ்நாடே கண்ணீர் கோலம் பூண்டது..//////

    என்ன கொடுமை அய்யா இது? மக்களுக்குக்காக சிறை சென்ற சீமாட்டியை பாருங்கள் அய்யா...! அவரை வாழ்த்த வயதில்லை, வணங்குகிறோம்....!

    ReplyDelete
  41. /////இதை கண்ணுற்ற பின்னும், ’சாதத்தில் கை வைப்பது மலத்தில் கை வைப்பது போல’ என்பதால், பேனா மற்றும் பென்சிலை எடுத்துக்கொண்டு பேட்டி காண புறப்பட்டுவிட்டேன்..//////

    அண்ணே கேமரா, சவுண்ட் ரிக்கார்டிங், எடிட்டிங் ஐட்டங்கள விட்டுட்டீங்களே.... (கொல பண்றாங்க...... சவுண்ட் வேணாமா?)

    ReplyDelete
  42. /////கலைஞர் :
    வெயில்படாமல் வளர்த்த இந்த கிளி, மீனவர் பிரச்ச்னைக்கு கருவாடாக வாடியதை கண்ணுற்ற எனக்கு, மருந்து மாத்திரைகள் சாப்பிடக்கூட தோன்றவில்லை.//////

    மக்களுக்காக வாடும் தலைவரைப் பாருங்கள் அய்யா..... !

    ReplyDelete
  43. பழுத்த பழத்தின் புளுத்த பழம்.....

    ReplyDelete
  44. அண்ணே அடிச்சு தாக்குங்க இது போதாது அவனுகளுக்கு இன்னும் இன்னும் போட்டு தாக்குங்க

    ReplyDelete
  45. கனி மேலயே கைய வச்சிட்டானுகளா இன்னா தைரியம் அவனுங்களுக்கு, ராசா இல்லாத நேரமா பார்த்து இன்னா நடக்குதய்யா இங்க?

    ReplyDelete
  46. கழிவறையில் அமர்ந்திருந்தபோது கணநேரத்தில் உதித்த சிந்தனை----கலைஞர்...


    ஹி ஹி ஹி...

    ReplyDelete
  47. ஏன்யா எங்க கனியம்மா இப்பதான் முதல் முறையா நடிக்கத்தொடங்கி இருக்காங்க.. அது கூட உங்ககண்ணுக்கு பொறுக்கலயா. இப்ப விடுறேன் சாபம் நாளைக்கு முரசொலில எங்க ஏழைபங்காளன் தமிழர்களின் ஒரே ரத்தம் டாக்குடர் கொலைஞர் இந்த வலைமனைக்காரங்கள கண்டிச்சி நீளமான அறிக்கை விடுவாரு.. அப்புறம் எப்படி உங்க காது செவிடாகம இருக்குன்னு பாக்குறேன்.

    ReplyDelete
  48. நீ தூள் கிளப்பு ராசா..!

    ReplyDelete
  49. அடிக்கிற மாதிரி அடி.. வலிக்காத மாதிரி நடிப்போம்..

    ReplyDelete
  50. // தமிழக மீனவர்களை தொடர்ந்து தாக்கி வரும் இலங்கை கடற்படையினரைக் கண்டித்து சென்னையில் உள்ள அந்நாட்டு தூதரகத்தை திமுகவினர் முற்றுகையிட முயன்றனர். அப்போதுதிமுக எம்பி கனிமொழி உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். ////

    என்னது கைதா !!! டேய் ரங்கசாமி ,முனியாண்டி ,பழனி ,எல்லாரும் ஓடியாங்கடா !! தக்காளி மக்கா வாங்கடா தேர்தல் வர போகுது.

    ReplyDelete
  51. /// யார் இந்த கனிமொழி? ///

    சபாஷ் !! சரியான கேள்வி ..,

    ReplyDelete
  52. கருணாநிதி ஆ.ராசாவிடம் மணி எனக்கு கனி உனக்கு

    ReplyDelete
  53. அந்த டோ பதிவர் பத்தின பத்தி செம காமெடி...

    ReplyDelete
  54. // ’சோ’வின் இந்த சுட்டியை சொடுக்கவும். //

    சொடுக்கிப் பார்த்தேன்... நானும்கூட இதே ஸ்டைலில் ஒரு வலைப்பூவை தயார் செய்து வைத்திருக்கிறேன்... படிக்கும் வசதிக்காக...

    ReplyDelete
  55. இலங்கை மீனவர்களால் இவ்வளவு இந்திய மீனவர்களை கைதுசெய்யிற பலம் துளியும் கிடையாது. மத்திய அரசும் மாநில அரசும் ராஜபக்ச அரசும் சேந்து நல்லா கேம் ஆடுறாங்க. ஊழல் பிரச்சனையை மூடிமறைக்க புதுசா ஒண்ண கிழப்புறாங்க. எதுக்கோ கைதாகவேண்டிய கனிமொழி வேறெதுக்கோ கைதாகிறா. என்ன கொடுமைடா சாமி

    ReplyDelete
  56. அண்ணே..போட்றதுதான் போடுறாங்க......கொஞ்சம் சீக்கிரம் வெளில வர்ற மாதிரி போடச்சொல்லுங்க.......வெளில நெறைய பேரு வெய்ட்டிங்.....
    அட......நான் கேச சீக்கிரம் முடிச்சு வெளில வரணும்னு சொன்னேன்.......ஆமா...நீங்க என்ன நெனச்சிங்க?

    ReplyDelete
  57. ஏன்யா இந்த கொலவெறி அனுதாப ஓட்டு வாங்கி ஜெயிக்கவா..?

    எப்படி இருந்தாலும் எல்லா தொகுதியிலையும் தோற்க்க போவது உறுதி :-)

    ReplyDelete
  58. கனிமொழி கைது:
    இது தாழ்த்தப் பட்ட சமுதாயத்தின் மீது தொடுக்கபடும் போர்.

    ReplyDelete
  59. இது உள்நாட்டு சதி................

    - தலிவரே நம்ம ஆட்சி தான் நடக்குது............

    ஸ்ஸ்ஸ் மறந்திட்டேன்......இது ங்கொய்யால யாரோட சதின்னு தெரியல அதனால எல்லோரும் எங்கயாவது போய்(எங்கபோறது!)போராடுவோம்

    ReplyDelete
  60. என்னமா நடிக்கிறாயா!

    நடிப்புல அப்பன் தோத்தான் பொண்ணு கிட்ட ஹி ஹி!

    இந்த நடிப்பா பாக்க சிவாஜி இல்லையே!

    ReplyDelete
  61. கனிமொழி கருணாநிதியின் உண்மையான வாரிசு என்பதை நிருபித்துவிட்டார். கருணாநிதிக்கப் பிறகு முதலமைச்சர் நாற்காலி யாருக்கு என நடைபெறும் குடும்பச்சண்டையில் நானும் இருக்கிறேன் என மறைமுகமாக உணர்த்தியுள்ளார்.

    வாழ்க! கருணாநிதி குடும்பம்!
    வாழ்க! கனிமொழி!

    தமிழனம் நாசமாய் போக பொன்னான வாய்ப்பு!

    தமிழர்களே! தமிழர்களே! இந்த வாய்ப்பை நழுவவிடாதீர்கள்!

    ReplyDelete
  62. போய் வா நதிஅலையே.. ரா%$#வுக்கு பூ கொண்டு போ..!!!//


    Too ugly.:(

    பெண் என்றால் எப்படி வேணா பேசலாம்.?

    அதுவும் பொது வாழ்க்கைக்கு வந்துவிட்டால் ?. அப்படியா?..

    ReplyDelete
  63. that comment offends women...and the message you wanted to convey will get diverted.
    the article is indeed good, but this comment needs to be seen again.

    ReplyDelete
  64. Blogger Dr.Rudhran said...

    that comment offends women...and the message you wanted to convey will get diverted.
    the article is indeed good, but this comment needs to be seen again.
    //

    Noted and that sentence removed..

    ReplyDelete
  65. @கும்மி said...

    கைதுக்கு பின்னால, மீண்டும் 24 மீனவர்கள் கைது..
    என்னமோ ஒப்பந்தப் ஓடிக்கிட்டு இருக்கு கும்மி..

    ReplyDelete
  66. அதை நீக்கியமைக்கு நன்றி..

    நன்றி மருத்துவர் ருத்ரனுக்கும்..

    மற்றபடி பதிவின் சாராம்சம் நன்று

    ReplyDelete
  67. @கோமாளி செல்வா said...
    அந்த போட்டோவுல இருக்குறவங்கதான் கனிமொழியா ? நல்லவேளை சொன்னீங்க ..
    //

    சரித்திரம் முக்கியம்

    ReplyDelete
  68. @சேக்காளி said...
    இலக்கணப்படி அது ஒரு வினைத்தொகையண்ணே.கனிந்த மொழி,கனிகின்ற மொழி,கனியும் மொழி.இறந்த காலம்,நிகழ்காலம்,எதிர்காலம் என்று மூன்று கால வினைகளையும் ஒரு சேரக்குறிக்கிறது.எனக்கும் ஒண்ணும் புரியல.106 மீனவர்களை இலங்கை அரசு கைது செய்ததை கண்டித்து போராட்டம் நடத்திய ஆயிரக்கணக்கான திமுக உறுப்பினர்களை தமிழக அரசு கைது செய்திருக்கிறது.சரி.அப்டின்னா ஆயிரக்கணக்கான திமுக காரர்களை கைது செய்த தமிழக அரசை கண்டித்து இலட்சக்கணக்கான காங்கிரஸ் காரர்கள் போராட்டம் நடத்துவார்களா? அல்லது அதிமுக காரர்கள் போராட்டம் நடத்துவார்களா?
    //

    மக்கள் முட்டாள்கள் சார்.. அப்படித்தாம் அரசியல்வாதிகள் நினக்கிறார்கள்

    ReplyDelete
  69. @MANO நாஞ்சில் மனோ said...
    அட போங்கப்பா அவனுகளும் திருந்த மாட்டானுவ நாமளும் திருந்த மாட்டம்....
    பத்தாயிரம் வாங்கினமா இஷ்ட பட்டவனுக்கு ஓட்டை போட்டமான்னு போயிகிட்டே இருக்க வேண்டியதுதான்....
    //

    அப்ப சீக்கிரம் சாப்பாட்டுக்கு டோக்கன் வாங்கிட்டு கட்சி ஆபீஸ்ல க்யூல நிற்கவேண்டி வரும் சார்..
    பார்த்துக்குங்க..

    ReplyDelete
  70. @கக்கு - மாணிக்கம் said...
    // ங்க்கொய்யா. ஊரே குடி பெயந்து, இத்தாலில போய் செட்டில் ஆயிடுவோம்.. //

    இத் நல்ல ஐடியாதான் பட்டா. எல்லாரும் ஒன்ன சேந்து போய்டணும்.
    //

    எல்லோரும்னா, அரசியல்வாதிகள் தவிர..ஹி..ஹி

    ReplyDelete
  71. Blogger பயணமும் எண்ணங்களும் said...

    அதை நீக்கியமைக்கு நன்றி..

    நன்றி மருத்துவர் ருத்ரனுக்கும்..

    மற்றபடி பதிவின் சாராம்சம் நன்று
    //

    மீண்டும் படித்தபோது, தவறாக தோன்ற வாய்ப்புள்ளதாக தெரிகிறது..

    சரி செய்துவிட்டேன் மேடம். சுட்டியதற்க்கு நன்றி...

    ReplyDelete
  72. @Rettaival's said...
    Mile sur mera tumhara...Oh....sur bane hamaaraa....!
    //
    இன்னும் கொஞ்சம் முயற்சி பண்ணினா, அடுத்த வரி வரும் பாஸ். try பன்ணுங்க..

    ReplyDelete
  73. @அஞ்சா சிங்கம் said...
    டோமர் :
    நான் சமீபத்தில் அதாவது 1928-ல்,.......//////////////

    தக்காளி இது டைனோசர் காலத்து பெருசுன்னு நெனச்சேன் .
    ரொம்ப யுத்தா இருக்கும் போலே .............
    //
    இளைஞன்(?).. ஹி..ஹி




    @ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
    அட போங்கப்பா. போரடிக்குது. வேற படம் காட்டுங்க
    //
    ஆமாய்யா.. இப்படியே விஜய், விஜய காந்துனு போய்கிட்டு இருக்கு.. விளங்கும்


    @சி.பி.செந்தில்குமார் said...
    >>> ஊரே குடி பெயந்து, இத்தாலில போய் செட்டில் ஆயிடுவோம்.. அப்புறம்,ஆளே இல்லாத கடையில, அவனுகளே அடிச்சுக்கிட்டு சாகட்டும். தூத்தேறிக....
    கனிமொழியை தாக்கறப்பவும் இத்தாலியை மறக்க முடியலையே உங்களால?
    //

    திருடனுக்கு ஒளிய சிறந்த இடம் போலீஸ் ஸ்டேசந்தான் பாஸ்..



    @கூகுள் ஓனர் said...
    நீ இன்னா சவுண்டு உட்டாலும் ஒரு பய திருந்த மாட்டான் தல..
    //

    அப்படீங்கிறீங்க.. எறும்பு ஊற கல்லும் தேயும்.. பார்ப்போம்


    @அசோக்.S said...
    இணைப்பு கொடுத்துள்ளேன் அய்யா நன்றாக இருக்கிறது என்று http://enjoymails.blogspot.com/
    //

    ரைட்ண்ணே..

    ReplyDelete
  74. @மாணவன் said...
    கிழி கிழின்னு கிழிச்சீட்டீங்க தலைவரே..
    //

    விடுங்க..விடுங்க..


    @ரஹீம் கஸாலி said...
    எங்கள் தலைவி கைதா? இது அநியாயம் அக்கிரமம்,
    இதை வன்மையாக கண்டித்து பட்டாவின் பிளாகிலிருந்து வெளிநடப்பு செய்கிறேன்
    //

    ஹி..ஹி தேங்ஸ் வாத்தியாரே..



    @மைந்தன் சிவா said...
    ஹிஹி கலைஞரின் பேட்டி கடி...
    //
    வயசாச்சில்லே.. ஹி..ஹி.. எனக்கு

    ReplyDelete
  75. @S.Sudharshan said...
    இதை காட்டி தானே இலங்கை தமிழர் பிரச்சனையிலும் உசுப்பேத்த முடியவில்லை ,எதிலும் உசுப்பேத்த முடியவில்லை ... கேபிள் டி வி நமக
    //

    அட ஆமாம் பாஸ்..



    @கே. ஆர்.விஜயன் said...
    இவரது தந்தையும், நாட்டை நிர்வகுக்கும் முக்கிய பொறுப்பில் உள்ளதாக ஏஜன்சி செய்திகள் தெரிவிக்கின்றன.//

    வீல் சேரில் போவாரே அவரைத்தானே சொல்றீங்க. ஆமாண்ணே நானும் கேள்விப்பட்டேன் அவர்தான் முதல்வராம். அது உண்மயாண்ணே. மத்தியில அந்த சோனி அம்மாதான் எல்லாம் செய்றாங்க ஆன அந்த தலைப்பாகை வைத்த ஆள்தான் பிரத மந்திரியாம். பத்திரிகை செய்தில பார்த்தேன் யாரைத்தான் நம்புவதோ.....
    //

    விடுங்க.. இன்னும் 30 வருஷம் ஆகும் நாம முன்னேற...



    @கும்மாச்சி said...
    பட்டா, கனிமொழி என்கிற தியாகசெம்மலின் வரலாறு தந்தமைக்கு தமிழுலகம் உங்களுக்கு நன்றி கூறுகிறது.
    //

    என் கடமையைதானே செய்தேன்...ஹி..ஹி


    @தமிழன்பன் said...
    மண்டபத்தில் மாலைவரை வைத்திருந்துவிட்டு வீட்டுக்கு அனுப்பி வைப்பதற்கு பேருதான் கைதா?
    பேட்டியில் பிரபல பதிவர் ஒருவரின் பேட்டி மிஸ்ஸிங். கழக உடன்பிறப்புகள் கடுப்புல இருப்பதாக கேள்வி.
    //

    ஹி..ஹி

    ReplyDelete
  76. மீண்டும் படித்தபோது, தவறாக தோன்ற வாய்ப்புள்ளதாக தெரிகிறது..

    சரி செய்துவிட்டேன் மேடம். சுட்டியதற்க்கு நன்றி...//

    உயர்ந்தீர்கள் உங்கள் செயலால்.. மகிழ்ச்சி. நன்றி.

    ReplyDelete
  77. @இம்சைஅரசன் பாபு.. said...
    @பன்னிக்குட்டி ராம்சாமி said...
    @ஆனந்தி.. said...
    @தினேஷ்குமார் said...
    @இரவு வானம் said...
    @வெளங்காதவன் said...
    @சூன்யா said...
    //

    உங்களுக்கு என்னா பதில் சொல்றதுனு தெரியலே..
    விடுங்க.. முதலமைச்சர் ஆனதும் நீஙக எல்லாம் மினிஸ்டர்ஸ்..ஹி..ஹி


    @Philosophy Prabhakaran said...

    அந்த டோ பதிவர் பத்தின பத்தி செம காமெடி...
    //

    பேட்டியில் அது மட்டும்தான் உண்மையான பேட்டி



    @ஜெய்லானி said...
    ஏன்யா இந்த கொலவெறி அனுதாப ஓட்டு வாங்கி ஜெயிக்கவா..?
    எப்படி இருந்தாலும் எல்லா தொகுதியிலையும் தோற்க்க போவது உறுதி :-)
    //

    ஊகும்.. கஷ்டம்.. பணம் விளையாடும்.. மேலும் மக்களிடம் விழிப்புணர்வு இல்ல பாஸ்..


    @சிவாராமநாதன் said...
    கனிமொழி கைது:
    இது தாழ்த்தப் பட்ட சமுதாயத்தின் மீது தொடுக்கபடும் போர்.
    //

    ஹி..ஹி


    @விக்கி உலகம் said...
    நடிப்புல அப்பன் தோத்தான் பொண்ணு கிட்ட ஹி ஹி!

    இந்த நடிப்பா பாக்க சிவாஜி இல்லையே!
    //

    மக்கள் மாக்களா இல்லையானு பொறுத்திருந்து பார்ப்போம் பாஸ்..

    @சீ.பிரபாகரன் said...
    கனிமொழி கருணாநிதியின் உண்மையான வாரிசு என்பதை நிருபித்துவிட்டார். கருணாநிதிக்கப் பிறகு முதலமைச்சர் நாற்காலி யாருக்கு என நடைபெறும் குடும்பச்சண்டையில் நானும் இருக்கிறேன் என மறைமுகமாக உணர்த்தியுள்ளார்.

    வாழ்க! கருணாநிதி குடும்பம்!
    வாழ்க! கனிமொழி!

    தமிழனம் நாசமாய் போக பொன்னான வாய்ப்பு!

    தமிழர்களே! தமிழர்களே! இந்த வாய்ப்பை நழுவவிடாதீர்கள்!
    //

    பழகிரி, ஸ்டாலின், தயா, மேலும் சிலபல அல்லக்கைகள்..சீக்கிரமா, கட்சி, கசகசனு பிரியும் என நினைக்கிறேன்...

    ReplyDelete
  78. //கைதுக்கு பின்னால, மீண்டும் 24 மீனவர்கள் கைது..
    என்னமோ ஒப்பந்தப் ஓடிக்கிட்டு இருக்கு கும்மி.//

    அதில் இருக்கும் அரசியல் பற்றி பதிவிடலாம் என்று நினைக்கின்றேன். நேரம்தான் ஒதுக்க முடியவில்லை.

    மீனவர் பிரச்னை பற்றி இதுவரை வந்திருக்கும் கட்டுரைகளில் தெஹல்காவின் கட்டுரை நிறைய விஷயங்களை பேசுகின்றது.

    http://www.tehelka.com/story_main48.asp?filename=Ne260211THE_BOLD.asp

    மீனவர் தலைவர்களோடு ஒருங்கிணைந்து செயல்படும் மணி அவர்களின் பதிவு இன்னும் சில விஷயங்களை கூறும்.

    http://maniblogcom.blogspot.com/2011/02/blog-post_2833.html

    http://maniblogcom.blogspot.com/2011/02/blog-post_8578.html

    இப்பொழுது நடப்பவற்றை பார்க்கும்போது, CPI தலைவர் மகேந்திரன் அளித்த பேட்டி முக்கித்துவம் வாய்ந்ததாக தெரிகின்றது.

    http://www.savetnfishermen.org/?p=153

    கோவி கண்ணனின் பதிவில் இருக்கும் பின்னூட்டத்தையும் பாருங்கள்.

    http://govikannan.blogspot.com/2011/02/blog-post_17.html

    ---
    நேரமிருப்பின் பதிவிடுகின்றேன்.

    ReplyDelete
  79. Blogger கும்மி said...

    //கைதுக்கு பின்னால, மீண்டும் 24 மீனவர்கள் கைது..
    என்னமோ ஒப்பந்தப் ஓடிக்கிட்டு இருக்கு கும்மி.//

    எப்படியாவது நேரம் ஒதுக்கி பதிவிட முயற்சியுங்கள்..
    அரசியல் நாடகத்தை, மக்கள் அறியட்டும்...

    ReplyDelete
  80. அது என்ன சார் யார் கைது செய்தாலும் விண்டோ சீட் கரெக்டா ஒதுக்கிடறாங்க

    ReplyDelete
  81. நண்பரே தங்களை வலைச்சரத்தில் அறிமுகம் செய்திருக்கிறேன். நேரம் கிடைத்தால் வருகை தரவும் .
    http://blogintamil.blogspot.com/2011/02/5-saturday-in-valaichcharam-rahim.html

    ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!