Pages

Wednesday, February 2, 2011

கல்யாண வாரம்...ம்ம்ம்..

ஏலேய் சின்ராசு, பார்த்து பலவருஷம் ஆயிடுச்சு...

ஆமாய்யா பட்டா. சே.. விலைவாசி கன்னாபின்னானு ஏறினதால, ஓவர்டைம் செய்யவேண்டியதா போச்சு. சரி... ஒரு வாரமா, கடைக்கு ஷட்டர் போட்டுட்டு
எங்கேயோ போயிட்டு வந்திருக்க போல!!.. மூஞ்சியெல்லாம் கறுத்திருக்கு..

ஹி..ஹி. நம்ம பயலுக்கு தஞ்சாவூர்ல கண்ணாலம். அதான் தலைய காட்டிட்டு, ஊர் நிலவரம் தெரிஞ்சுக்கலாமேனு போயிருந்தேன்.

யாரு.. இந்த சிகப்பு தொப்பி போட்டுக்கிட்டு, “நான் எங்ஙேஙேஙேஙேகே இருக்கேன்?-னு அடிக்கடி கேப்பானே.. அந்த  தம்பியா?..”

யோவ். வெண்ணே.. தம்பியெல்லாம் அந்த காலம். இப்ப அது பெரிய குடும்பி..அதாவது குடும்பஸ்தன். போன் பண்ணினா, ரெண்டு நாள் கழிச்சுதான் பதிலே  வருதுனா பார்த்துக்கோயேன்.

ஓ.. ரொம்ப பிஸி ஆகிட்டாரா!.. கல்யாணம் பண்ணினா, அப்படிஇப்படித்தான் இருக்கும். சரி விடு..கல்யாணத்துக்குப்போயிட்டு நல்லபடியா வந்து சேரனுமுனு,  செராங்கூன் பெருமாள் கோயில்ல உண்டகட்டி வாங்கி சாப்பிட்டேன். ஆனா ஒண்ணு நிச்சயமய்யா... கடவுள் இருந்திருப்பார் போல..

யோவ்.. ஸ்டாப்.. ஸ்டாப்.. என்ன திடீர்னு கடவுள், பெருமாளுனு பேச ஆரம்பிச்சுட்ட?

அடப்போய்யா.. நான் பட்ட கவலை எனக்குத்தானே தெரியும். அப்பப்பா.. சொன்னாலே உடம்பு சிலிர்த்துக்கும்போல...’ - சின்ராசு

அப்படி என்னாய்யா உடம்ப்பு சிலிர்க்கும் அளவுக்கு,  பெரிய கவலை?

இல்லப்பா.. புபழுத்தபழமே , Visa extension-க்கு , அவுங்க வீட்டுக்கார அம்மாக்களை(!),  கோயில் கோயிலா போகச்சொல்லி  அனுப்பிக்கிட்டு இருக்காம்.  எத்தனை கோடிவெச்சிருந்தாலும், என்ன பிரயோசனம்?. சரி விடு. நம்க்கு அரசியல் ஆகாது. நீ பெரிய இவனாட்டம், கலைஞரை விமர்சனம் பண்ணும் ஜாதி.
அந்த பயலோ, பக்கா கரைவேட்டி. அதான் பத்திரிக்கை வெச்சு, அங்க கூப்பிட்டு, வெச்சு  கும்முவானோனு நினைச்சேன்.  ஹி..ஹி எப்படியோ தப்பிச்சு வந்துட்ட.

யோவ்.. உன்னொட வாயில, கொள்ளிக்கட்டையை வைக்க. ஒரு நண்பனை இப்படியெல்லாம் பேசக்கூடாது.. ஹி..ஹி    நானும் கொஞ்சம் பயந்துபோயிதான் போனேன். அதான் நாலு பயலுகளை துணைக்கு கூப்பிட்டுக்கிட்டு, நெப்போலியன் தயவுல  போயிட்டு ஓடிவந்துட்டோமில்ல.. சிங்கம்லே நாங்க..  ஆமா பெருமாள் கோயில் உண்டக்கட்டில நெய் சேர்ப்பதை நிறுத்திட்டாங்களா?.     ஆள் மெலிஞ்சு போயி, ஆஆஆஆஆ ராசாமாறி ஆயிட்டே.

நீ வேற வெறுப்பேத்தாதே பட்டா. போனவாரம் கல்யாணம் நிச்சயம் பண்ணும் அளவுக்கு விசயம் கைமீறி போயிடுச்சு.

அய்.. தக்காளி, நீயும் மாட்டினியா?. ஆமா பொண்ணு யாரு.... அந்த பிலிப்பினோகாரியா?.

ஹி..ஹி  அதேதான். ’எஸ்’ ஆகி, ஊருப்பக்கம் போகலாமுனு பார்த்தேன்,  முடியாது போல...போனவாரம், ’வீட்டுக்கு வாங்க, வந்து எங்கப்பாகூட  பேசுங்க’னு  ஒரே குடைச்சல். சரி போய் பார்ப்போனு போனேனா.. உஸ்.. முடியலைடா இவனுக அலம்பறைய..

ஏன் என்னாச்சு... பொண்ணு தரமுடியாதுனு மூஞ்சிய சாணிய பீபூசிட்டாங்களா?..

இருடா..  சொல்வதற்குள், ஏன் இப்படி குதிக்கிறே?. வாழ்க்கையில் நல்லவனா இருப்பது எவ்வளவு கஷ்டம் தெரியுமா?. அப்பதான் விதிமேல நம்பிக்கை வந்துச்சு.

ஏண்டா இப்படியெல்லாம் பேசுறே.. நான் வேணா, உங்க வருங்கால மாமனார்கிட்ட பேசிப்பார்க்கட்டுமா?..

ப்ளீஸ்.. குட்டைய குழப்பாமா,  கொஞ்சம் மூடிக்கிட்டு இருக்கியா?.
பிகர் சொல்லுச்சேனு அவங்க வீட்டுக்கு போனேன். எல்லாம் ஒரு நம்பிக்கைதான். எப்படியும் அவங்கப்பன் பொண்ணை கொடுக்கமாட்டான். நாமளும் கழண்டுக்க சரியான சான்ஸ்னு நினைச்சுக்கிட்டு, உள்ள போனேன்.
மாடில உட்காரவெச்சுட்டு, எல்லாரும் காணாம போயிட்டானுக. நானும் பேக்கு மாறி, முழிச்சுக்கிட்டு, டெலிபோன் டைரக்ட்ரிய புரட்டு பார்த்துக்கிட்டு இருந்தேன்.
அப்ப திடீர்னு ரூம் பூரா ஒரே நறுமணம். ச்..ச்.ச்ச்...சரியான செம பிகர்.. ரூம்-ல கிழக்க மேற்கே நடந்துக்கிட்டு, ஓரக்கண்ணுல என்னைய லுக்கு விடுது.
அப்பவே முடிவு பண்ணீட்டேன்.. பிலிப்பினோகாரி கேன்ஷல்.. இவதான் என வருங்கால பொண்டாட்டினு. மனசு பூரா பட்டாம்பூச்சி பறக்குது. என்னோட கால், தரையில படாம, ’மிதக்கறனா?.. பறக்கிறேனா?’.. ஒண்ணுமே தெரியலே.. அப்படியே ..... எந்திருச்சு..பறந்து....ம்..ம்.. 
பீலிங் மச்சி.... இந்த காந்தர்வ கல்யாணம்னு சொல்றாங்களே. அதை அங்கேயே பண்ணிப்பார்க்க மனசு துடிக்குது.  ...அந்த ஒரு செகண்ட். ங்கொய்யா...எங்கப்பன் மீசை கண்ணுக்கு முன்னாடி வந்து போச்சு.
அப்புறம், ’அம்மாவை பார்த்த எம்.எல்.ஏ மாறி’, ப்யூஸ் புடிங்கிருச்சு.

உனக்கு லொள்ளுயா.. போனமா, அவங்கப்பனை பார்த்தமா?. பொண்ணு கேட்டமா?னு இல்லாம, அங்கேயும் போய், வேற பொண்ணைப்பார்த்து வடிஞ்சா?..  சரி .. கடைசியா,  உன்னைய செருப்படிலடிச்சதா அந்த பிகரு?

நீ வேற.. இது கண்ணுலேயே என்னை கற்பழிக்குது. இதுக்கு மேல சும்மா இருந்தா, நான் மனுஷனே இல்லேனு விடுவிடுனு கீழ வந்துட்டேன்.

என்ன இருந்தாலும், மனசுக்குள்ள ஒரு ’நல்லவன் சின்ராசு’ இருந்திருப்பான் போல.. விடு .  நீ ஊருக்கு போய் நல்ல பெண்ணா பார்த்து கல்யாணம்  பண்ணிக்கிட்டு,  வாரிசை பெத்துக்கிட்டு, எலெக்‌ஷன் டைம்ல கலெக்‌ஷன்  பண்ணி பொழச்சுக்க..  ஆமா.. அந்த பிகர் போன் நம்பர் இருக்கா?..

அய்யோ..பட்டாபட்டி.. நீயும் மற்றவன் மாறி யோசிக்க ஆரம்பிச்சுட்டையே... எனக்கு பீலிங் ஆகி, முடியாம, கார் கிட்ட போயிட்டேன்.
அவங்கப்பன் ஓடி வந்து என்னோட கை புடிச்சுக்கிட்டு, ஒரே அழுகை.
மாமியார்காரி, ஓரமா நின்னுக்கிட்டு, கைய மேல காட்டி, கடவுளுக்கு தந்தி அடிக்குது.  இதுக்கு நடுவுல,  நம்ம சப்ப பிகர்..அதாம்பா , அந்த பிலிப்பினோகாரி, ஓடி வந்து கட்டி பிடிச்சுகிட்டு கேவி கேவி அழுது.   என்னாங்கோ%$##த்தா... குடும்பமே, மெண்டல் போல-னு நான் தப்பிக்க பார்க்க....ஹி..ஹி
கடைசியா பார்த்தா... சீ.. விடுய்யா.. நான் நல்லவனா இருப்பதுதான் நாட்டுக்கு பிடிக்கும்னு தலைவிதி இருந்தா, நான் நல்லவனாவே இருக்கேன்..

இரு..இரு.. சின்ராசு.. கடைசியா என்ன ம^$%#யிரு சொல்லவரே.. ஒரு எழுவும் புரியலே..

அட..’பாதுகாப்பு உறை’ய கார்ல வெச்சிருந்தேன். அதை எடுத்துக்கிட்டு, திரும்பவும் மேல போகலாம்னு நான் வெளிய வர, குடும்பமே, ’ஆகா..இவன் ரொம்ப   உத்தமன்டா.. எந்த பொண்ணையும் ஏறிட்டுபார்க்காத நல்லவனு’னு , என்னை பார்த்து நெஞ்சை நக்க... உண்மையில கலிகாலம்தாண்டா.....ஹி..ஹி
.
.
.
டிஸ்கி..
கதையா நிசமா?.. ப்ளீஸ் யாராவது சொல்லுங்களேன்....
.
.
.

47 comments:

  1. பட்டா இது சொந்த கதை போலிருக்கே...

    ReplyDelete
  2. நம்ம பயலுக்கு தஞ்சாவூர்ல கண்ணாலம்.

    //

    சொல்லவே இல்ல.. கல்யாணம் பன்னி வைக்கிற அளவுக்கு பெரிய பையன் இருக்கானா உமக்கு...

    ReplyDelete
  3. //வெறும்பய said... 2
    பட்டா இது சொந்த கதை போலிருக்கே...///

    அண்ணே நெசமாவே படிச்சீங்களா??? ஹிஹி

    ReplyDelete
  4. அண்ணே.. பதிவு ஓக்கே.. ஆனா காங்கிரஸ் எதிர்ப்பாளரான உங்க கிட்டே இந்த மாதிரியான அரசியல் நெருக்கடி மிகுந்த கால கட்டத்துல அரசியல் நையாண்டி கட்டுரையை எதிர்பார்க்குறோம். அதே மாதிரி மீனவர் பற்றி ஒரு பதிவும் போடுங்க.. ( அதிகப்பிரசங்கித்தனமான ஐடியான்னு நீங்க நினைச்சா இதை பப்ளிஷ் பண்ண வேணாம். சும்மா உங்க பர்சனல் பார்வைக்கு வெச்சுக்குஙக)

    ReplyDelete
  5. //டிஸ்கி..
    கதையா நிசமா?.. ப்ளீஸ் யாராவது சொல்லுங்களேன்....//

    நெசம் கலந்த கதை... :))))

    ReplyDelete
  6. // சீ.. விடுய்யா.. நான் நல்லவனா இருப்பதுதான் நாட்டுக்கு பிடிக்கும்னு தலைவிதி இருந்தா, நான் நல்லவனாவே இருக்கேன்..//

    இந்த நல்லவன் நம்ம போலீஸா??.. அவருதான் அடிக்கடி (நான் ரொம்ப நல்லவன்னு) சொல்றாரு...ஹிஹி

    ReplyDelete
  7. சி.பி.செந்தில்குமார் said... 5

    அண்ணே.. பதிவு ஓக்கே.. ஆனா காங்கிரஸ் எதிர்ப்பாளரான உங்க கிட்டே இந்த மாதிரியான அரசியல் நெருக்கடி மிகுந்த கால கட்டத்துல அரசியல் நையாண்டி கட்டுரையை எதிர்பார்க்குறோம். அதே மாதிரி மீனவர் பற்றி ஒரு பதிவும் போடுங்க.. ( அதிகப்பிரசங்கித்தனமான ஐடியான்னு நீங்க நினைச்சா இதை பப்ளிஷ் பண்ண வேணாம். சும்மா உங்க பர்சனல் பார்வைக்கு வெச்சுக்குஙக)
    //

    அய்யோ..அய்யோ.. இங்க பர்சஷன் , பேரு.. பொறுப்பு.. இதெல்லாம் கிடையாது பாஸ்..

    அரசியல் பற்றி எழுதலாம்னு பார்த்தா, கெட்ட கெட்ட வார்த்தையா வந்து விழுது.. அதான் பார்க்கிறேன்...

    ReplyDelete
  8. @வெறும்பய said...
    பட்டா இது சொந்த கதை போலிருக்கே...
    //

    அடக்கொன்னியா.. பேரை கெடுக்காம விடமாட்டீங்க போல..

    ஹி,,ஹி

    ReplyDelete
  9. @sakthistudycentre-கருன் said...

    நல்லாயிர்க்கு...கதை..
    //

    நல்லவேளைண்ணே.. உங்களுக்குக்காவது இது ஒரு கதைனு புரிஞ்சிருக்கே.. ஹி..ஹி

    ReplyDelete
  10. மாணவன் said...

    // சீ.. விடுய்யா.. நான் நல்லவனா இருப்பதுதான் நாட்டுக்கு பிடிக்கும்னு தலைவிதி இருந்தா, நான் நல்லவனாவே இருக்கேன்..//

    இந்த நல்லவன் நம்ம போலீஸா??.. அவருதான் அடிக்கடி (நான் ரொம்ப நல்லவன்னு) சொல்றாரு...ஹிஹி
    //

    யாரு போலீஸ்சா?. இது சூப்பர் டமாசு...

    ReplyDelete
  11. தாங்கள் எடுத்த வாந்தியின் ச்சீ கூற வந்த கருத்து என்னவோ?

    ReplyDelete
  12. தாங்கள் எடுத்த வாந்தியின் ச்சீ கூற வந்த கருத்து என்னவோ?

    ReplyDelete
  13. மாணவன் said...
    // சீ.. விடுய்யா.. நான் நல்லவனா இருப்பதுதான் நாட்டுக்கு பிடிக்கும்னு தலைவிதி இருந்தா, நான் நல்லவனாவே இருக்கேன்..//

    இந்த நல்லவன் நம்ம போலீஸா??.. அவருதான் அடிக்கடி (நான் ரொம்ப நல்லவன்னு) சொல்றாரு...ஹிஹி
    //

    பட்டாவை விட நான் நல்லவந்தான். ஆனா பட்டா மாதிரி நேர்மையானவன் இல்லை(வந்து பாக்குறேன்னு சொன்னா கண்டிப்பா பாத்துடுவாறு)

    ReplyDelete
  14. அந்த கடைசி பாரா ஒன் லைன் ஏற்கனவே படிச்ச ஒரு ஜோக்:)..ஆனால் நல்லா டெவெலப் பண்ணி இருந்திங்க இந்த ஸ்க்ரிப்ட் ஐ..:)))

    ReplyDelete
  15. ஆஹா கதை நல்லாயிருக்கே

    ReplyDelete
  16. ஆரம்பிச்சிட்டியா ??? இரு படிச்சிட்டு வர்றேன்

    ReplyDelete
  17. என்னோட கால், தரையில படாம, ’மிதக்கறனா?.. பறக்கிறேனா?’.. ஒண்ணுமே தெரியலே.. ////

    இன்கொய்யாலே ........ மிக்சிங் இல்லாம ராவ சரக்கடிச்சிட்டு போனா அப்படித்தான் இருக்கும்

    ReplyDelete
  18. அப்புறம், ’அம்மாவை பார்த்த எம்.எல்.ஏ மாறி’, ப்யூஸ் புடிங்கிருச்சு./////

    அம்மாவ பாத்தா பீஸ் புட்டுக்குமா ???? (!)

    ReplyDelete
  19. நீ வேற.. இது கண்ணுலேயே என்னை கற்பழிக்குது. ////

    ஏன்......... அங்க வேற மேட்டர் எதுவும் இல்லையா ???

    ReplyDelete
  20. டிஸ்கி..
    கதையா நிசமா?.. ப்ளீஸ் யாராவது சொல்லுங்களேன்....////

    ஒரு வெங்காயமும் கிடையாது ....... பன்னாட ரெண்டு பீர எக்ஸ்ட்ரா குடிச்சிட்டு என்னா அலும்பு பண்ணுது பாரு

    ReplyDelete
  21. ஆக இது அல்லவா கருத்து என்ன நடை என்ன நடை பூனை நடயை விட அருமை.....!

    ReplyDelete
  22. டிஸ்கி..
    கதையா நிசமா?.. ப்ளீஸ் யாராவது சொல்லுங்களேன்...////

    நாங்க யாராவது கேட்டோமா...? நீங்களே கேளுங்க இதை நீங்க எங்க இருந்து சுட்டிங்க ரமேஷ் சொல்லிட்டார்....

    ReplyDelete
  23. சடார்ன்னு காணாம போய்டீங்க?

    ReplyDelete
  24. மச்சி என் வாழ்த்துக்கள கவ்விக்கினு போய் அந்த வெளியூர்காரன் கிட்ட குடுத்திடு.

    ReplyDelete
  25. என்னது வெளியூர்காரன் ku கல்யாணமா?
    சொல்லவே இல்ல

    ReplyDelete
  26. ஏன் கண்ட க(கா)ண்ட விளம்பரத்தை எல்லாம் பார்த்து சொந்த கதையினு அவுத்து ஊடுரே பட்டாபட்டி...

    http://www.youtube.com/watch?v=KwDXCGXtBKY&playnext=1&list=PLE6F2FCC5040A1802&has_verified=1

    ReplyDelete
  27. வர வர சூப்பரா கதை எழுதிறீங்க! சாதாரண பேச்சு நடையில் எழுதுவது நல்லாயிருக்கு! உண்மையோ கதையோ எங்களுக்கு ஓகே!:-)

    ReplyDelete
  28. அப்புறம் என்னதான் நடந்துச்சு?

    ReplyDelete
  29. கடைசி வரைக்கும் climax (இது அதுல ன்னு யாரும் கேக்க கூடாது ) சொல்லவே இல்லையே .......

    ReplyDelete
  30. நான் ரொம்ப லேட் பரவில்லை .........விடு பட்டா அடுத்த பதிவுல பாப்போம்

    ReplyDelete
  31. ஹி ஹி.
    இந்த கதையை ஏதோ ஒரு காண்டம் விளம்பரத்தில் பார்த்ததாக நினைவு.

    ReplyDelete
  32. யாருகிட்ட கதைவிடுற? இது ஏற்கனவே படிச்ச கதை... :-)

    ReplyDelete
  33. //கதையா நிசமா?.. ப்ளீஸ் யாராவது சொல்லுங்களேன்....//

    இது மும்பை சிவாஜி பார்க் கதை மாதிரியில்ல இருக்கு ஹி..ஹி..

    ReplyDelete
  34. யோவ் நீ மனுஷனா ?? இல்லை கேக்குறேன் நீ மனுஷனா ? ஒரு போன் பண்ண மாட்டே ? இப்படி பம்முரே ..,

    (""" நரி உடையான் எதற்கும் அஞ்சான் சென்னையில் """)

    ReplyDelete
  35. //// இல்லப்பா.. புபழுத்தபழமே , Visa extension-க்கு , அவுங்க வீட்டுக்கார அம்மாக்களை(!), கோயில் கோயிலா போகச்சொல்லி அனுப்பிக்கிட்டு இருக்காம்.///////

    வந்தவரெல்லாம் தங்கி விட்டால் இந்த பூமியில் நமக்கு இடமேது !!!!!

    ReplyDelete
  36. ///// யோவ்.. உன்னொட வாயில, கொள்ளிக்கட்டையை வைக்க ////

    யோவ் பட்டா ..,சத்தியமா நான் அந்த கொள்ளிகட்டையை வைக்கிறேன் ..,ஊருக்கு வந்திட்டு ஒரு போன்,ஒரு போன் !! பண்ணியா ! கொடுத்த வாக்கை காப்பத்தனும் பட்டா

    ReplyDelete
  37. ///// போனவாரம் கல்யாணம் நிச்சயம் பண்ணும் அளவுக்கு விசயம் கைமீறி போயிடுச்சு. ///

    டேய் இந்தாட சின்ராசு ! ஏன்டா இப்படி பேசி பழகுரே !!! இங்கன செவ்வாய் தோஷம் செவிட்டுல அடிக்குதுன்னு பொண்ணு தர மாட்றாங்க ..,உன்னக்கு வலிய வந்து பொண்ணு தரேன் சொல்றாங்க ..,அதை கைமீறி ,கால் மீறி சொல்லிட்டு????? போ போ ..,முதல்ல நிச்சயம் பண்ணு

    ReplyDelete
  38. ////// அய்.. தக்காளி, நீயும் மாட்டினியா?./////

    தோடா இவரு சொல்லிடாரு ! அவன் அவனுக்கு தெரியும் கஷ்டம்

    இப்படிக்கி
    ஏக பத்தினி விரதம் சங்கம்

    ReplyDelete
  39. கடைசியா ஒன்னு ..,இல்ல தெரியாம தான் கேக்குறேன் ..,அது என்ன HIDE AND SEEK ?

    ReplyDelete
  40. இரண்டு தபா படிச்சேங்க , ஆனா என்னமோ கதை மாதிரி தெரியுது ? இது என்ன கதை ?

    ReplyDelete
  41. வாக்களித்து என் வருகையை பதிவு செஞ்சுக்கிறேன்.

    ReplyDelete
  42. இந்தப் பக்கம் வந்து ரொம்ப நாளாச்சுங்க.. அதான் வந்தேன்.

    கதை சூப்பருங்கோவ்.. ஆனா எங்கயோ கேட்ட மாதிரியிருக்கே..

    ReplyDelete
  43. நல்லா இருக்குங்க.

    ReplyDelete
  44. ஆல்ரெடி படிச்ச கதை.. இருந்தாலும் உம்ம நடையில பின்னுது போங்க..

    ReplyDelete
  45. ஐயோ அண்ணே பிலிப்பினோ அப்படின்னாவே சரியான....ஹி ஹி!

    இது கதையல்ல நிஜம் புரிஞ்சிடுச்சி ஹி ஹி!!

    ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!