Pages

Tuesday, October 26, 2010

பாரம்பரியம்.. பன்னாடையின் பார்வையில்

.
.
.
முஸ்கி

இந்த நீண்ட பதிவுக்காக, பட்டாபட்டி
என்ற பாவியை  மன்னித்துக்  கொள்ளுங்கள்.     பதிவை படித்து முடிக்க, கட்டுச்சோற்றை, கைவசம் வைத்திருப்பது நல்லது.....( நீண்ட பிரயாணிணம்..) 
முக்கியமா, இந்த படத்துக்கும், பதிவுக்கும் சம்பந்தம் இல்லை என்று சுயநினைவோடு  சொல்லிக்கொள்கிறேன்....





எந்திரனின் படத்தோட one Liner, ’ஒரு ரோபோவில், மனித சிந்தனைகளை பதித்தால்?’.

இந்த பதிவின் one Liner, ’நமீதாவை அடுத்த படத்தில புக் செய்ய, முதல்வர் பரிந்துரைத்தால்?’.

இந்த செய்தி, சமீபத்தில ஒரு பிரபல வாரப்பத்திரிக்கையில் வந்தது.     அந்த தெய்வத்திடம்(?), ’இந்த வருட தீபாவளிக்கு, உங்களுக்கு கிடைத்த சர்ப்ரைஸ் கிப்ட் என்ன?’ என்பதுதான்  கேள்வி.       அதற்கு அவர்கள், ’நான் நடிக்கப்போகும் அடுத்த படத்தில, என்னை பரிந்துரை செய்தது முதல்வர். அது எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு’. 
இதில் பெருமை என்னவென்றால், ’நமீதா ஆடை கட்டிக்கொண்டு நடிக்கிறாங்களா, இல்ல அரைகுறையா நடிக்கிறாங்களா?’ என்பதல்ல.     இவ்வளவு பணிச்சுமைகளுக்கும் நடுவில், தலைவர் அவர்கள், அந்த மேடத்தை பரிந்துரை செய்திருக்கிறார்கள் என்றால், அங்கு அவருடைய கடின  உழைப்பைத்தான் பார்க்கவேண்டுமே  அன்றி புறங்கூறக்கூடாது.     நமீதா பிறந்த மண்ணும், காந்தி பிறந்த மண்ணும்,  நமது மண்டையில் உள்ள மண்ணும், ஒன்றே எனபதுதான் கூடுதல் செய்தி.    இதற்காக, ஒவ்வொரு இந்தியரும் பெருமை கொள்ளவேண்டும்.   

இப்படிப்பட்ட பரிந்துரைகள், வேறு எந்த நாட்டிலாவது நடக்குமா?. ஊகும். ஏன் என்றால், ’நாம் மனித நேயம்மிக்கவர்கள்.  வந்தாரை வாழவைக்கும்  மனப்பான்மை கொண்டவர்கள்.’

சரி.. இனி பதிவுக்கு போவோம்.

அடிமை ரத்தம்    To    இந்திய ரத்தம்

நாடு சுதந்திரம் அடைந்த அந்த காலகட்டத்தில், இரு பிரிவுகள்.    ஒன்று அகிம்சை,  அடுத்தபிரிவு,  அவர்களின் பார்வையில்(?) ஹிம்சை.   
ஒரு அணியில் பிரபல தலைவர்கள் காந்தி, நேரு போன்றோர்.    அடுத்த அணியில் நேதாஜி, பகத்சிங்....etc..     அதில் யார் வென்றாலும், அவர்களால்தான் நாடு சுதந்திரம் அடைந்தது என்று நாளைய சரித்திரம் சொல்லப்போகிறது.   அப்படிபட்ட சரித்திரதை ஆணியில எழுத அவர்கள் எடுத்த முடிவு?.

’பகத்சிங்கை தூக்கில் போடப்போகிறோம், உங்கள் கருத்து என்ன?’,  ஆங்கிலேயர்கள் காந்தியிடம் கேட்கின்றனர்.    ’நாங்கள் நடத்தப்போகும் உண்ணாவிரதம் முடிந்தபின், அவரை தூக்கில் போட்டுக்கொள்ள, எங்களுக்கு ஆட்சேபனை இல்லை’, அகிம்சையின்(?) பதில். 
இந்த சம்பவத்தில, அவருடைய நாட்டுப்பற்று, மதஉணர்வு, உங்களை மெய்சிலிர்க்க வைத்திருக்கலாம்.    அதில வென்றவர்கள், ’மாமா’வாகவும், ’தாத்தா’வாகவும் உருவாகினர்.

அடுத்த பிரிவினர், ’போராட்டத்தில கலந்து கொண்டவர்கள்’ என்ற பெயரை பெற்று, அவர்களின் கடைசி காலக்கட்டத்தை, இன்றுவரை தேடிக்கொண்டிருக்கிறோம்.     குறுநிலமன்னர்களால், பிரிந்துகிடந்த நாட்டை ஒன்று சேர்த்த படேலை, வழக்கம்போல மறந்துவிட்டோம். 

ஒன்றுபட்ட சுதந்திர இந்தியாவை,  ஆளும் பொறுப்பு  காங்கிரஸ்க்கு ( நேரு குடும்பத்திற்க்கு கிடைத்தது.) அள்ளிக்கொடுத்தோம்.      மன்னராட்சியை ஒழித்து மக்களாட்சியை கொண்டு  வந்ததற்கு ஒவ்வொரு இந்தியரும் பெருமை கொண்டோம்.      நமது உடம்பில் ஓடுவது இந்திய ரத்தம் என்று தலை நிமிர்ந்தோம்.





இந்திய ரத்தம்     To   திராவிட ரத்தம்

இப்பொழுது, அன்றைய தமிழக சூழ்நிலைக்கு வருவோம்.     சுதந்திரம் அடைந்து, சிலவருடங்களுக்குப்பிறகு, தமிழகத்தில் ஒரு விடிவெள்ளி முளைத்தது.   
அண்ணாவின் பின்னால், அலைகடலென திரண்ட கூட்டம்.     காங்கிரஸை எதிர்த்து கழகங்கள் உருவாகின.     ”திராவிடர்கள், ஆரியர்கள்” என்ற பாகுபாட்டை, ஒவ்வொரு தமிழனும்  உணர்ந்துகொண்ட பொற்க்காலம் இது.    அவரது காலத்துக்குப்பின் நடந்த திரைமறைவு வேலைகள், சொல் ஜாலங்கள், நடிகர்களின் அரசியல் பிரவேசம்.     திராவிட ரத்தம் வடிய ஆரம்பித்து, மனிதர்களின் உடம்பில், நடிகர்களின் ரத்தம் ஏற்றப்பட்ட காலம்.

மக்கள் , மந்தைகளாக பிரிந்து, நடிகர்களின் பின்னால் ஒரு பிரிவினரும், தாய் கழகத்தின் பின்னால் அடுத்த பிரிவினரும் அணி திரண்ட காலங்கள்  அவை.  
காலங்கள் உருண்டோடுகின்றன.      காட்சிகள் மாறுகின்றன.       நடிகரின் மறைவும், நடிகையின் தோற்றமும் தோன்ற ஆரம்பித்த பொற்காலங்கள்.   
இரண்டு பிரிவினர் , மூன்று, நான்காக பிரிய ஆரம்பித்தது.      மனிதர்களின் உடம்பில், பன்றி ரத்தத்தை தவிர, மற்ற ரத்தங்கள் ஊற ஆரம்பித்தது.




திராவிட ரத்தம்   To   அடிமை ரத்தம்

இது இளைய தலைமுறையின் காலம்.    பள்ளிப்பருவத்தில, ‘காந்திய தேசம் என்று பெயர் சொல்லுவார். பிறர் பயங்கொள்ளுவார்’என்ற எண்ணங்கள் ஊறறப்படுகிறது.     தமிழன் என்பதால், ‘இலையில் சோறை போட்டு, ஈ-யை தூர ஓட்டு’ என்ற இலக்கணங்கள் வேறு.     மீடியாக்களால், எங்களையறியாமல், நடிகர்களின் ரத்தமும் சேர்க்கப்படுகிறது.     கழங்களின் துணையால், அவர்களின் ரத்தத்தையும் ஏற்றுக்கொள்கிறோம்.    இப்பொழுது எல்லாம் கலந்த ’கலவையின் அடிமைகள்’ நாங்கள்.

இன்றைய இளைய தலைமுறையினர் ஒன்று, 
தளபதியின் ரசிகனாகவோ, இல்லை, தல-யின் ரசிகனாகவோ
கலைஞரின் தலைமையிலோ இல்லை, லலிதாவின் தலைமையிலோ
அல்லது, சிலபல ’குறுநில மன்னர்களின்’ கட்சி தலமையை ஏற்காவிட்டால், மனிதனாக இருப்பதற்க்கே தகுதியில்லை என்று முத்திரை குத்தப்படுகிறது.

சுதந்திர இந்தியாவில், ’அந்நிய ரத்ததிலிருந்து.. அடிமை ரத்தத்துக்கு’ மாற்ற , நாய் பேய்களாக, அரும்பாடுபட்ட, காங்கிரஸுக்கும், கழகத்துக்கு, நடிகர்களுக்கு, அவர்தம்  வாரிசுகளுக்கு, கட்சித்தலைவர்களின் வாரிசுகளுக்கும்,  முக்கியமாக,  இனி கருவில் உருவாகப்போகும் எங்கள்  தலைமையின் சிசுகளுக்கும் எங்கள் நன்றியினை தெரிவித்துக்கொண்டு ,
அவரவர் வேலையை, திறம்பட செய்த,  கழகங்களின் கால்களில் விழுந்து, நமீதாவிற்க்காக,  அலகு குத்தி, பால்காவடி எடுக்க, ஓர் அணியில் திரளுங்கள் இளைய சமூகத்தினரே..    என்று அறைகூவல் விடுகிறேன்.




டிஸ்கி 1.
இது நமக்கு
  • தலைவர்களின் பணி, நாட்டை சீர்திருத்துவது,
  • நடிகர்களின் பணி, அரிதாரம் பூசிக்கொண்டு அவர்தம் தொழிலில் திறம்பட செழிப்பது.
  • வாரிசுகளின் தொழில், அவரவர் குடும்பத்தொழிலை(?), மென்மேலும் சிறப்புறச்செய்வது.
  • குறுநிலமன்னர்களின் பணி, நல்ல அடிமைகளாக, அணியில் சேர்ப்பது..
நாம் , அடிமைகளாக தொடர்வதா?..  இல்லை.. அவரவர் திறமைகளை  தீட்டிக்கொண்டு, அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறுவதா?.
முடிவு உங்கள் கையில்.

டிஸ்கி 2.
இது குஷ்புக்கு
என்னடா, இவன் நம்ம பொழப்பை கெடுத்துடுவானேனு நினைக்காதீங்க.
எல்லோருக்கும் வயதாகும்.  தோல சுருங்கும். ஆகவே நமீதா, உங்கள் இடத்துக்கு வருவதற்கு, மனம் கோணாமல் உதவுங்கள்

டிஸ்கி 3.
இது அவருக்கு(?..)
எங்கள் தலைவர் ராகுலை, அவமதித்துவிட்டனர் என்று, யாராவது வருத்தப்பட்டால்... உங்களுக்கு என்னுடைய பதில். “நீ வேணா, ராகுலுக்கு பரம்பரை அடிமையா இருங்க பாஸ்....அதற்கு எங்களுடைய வாழ்த்துக்கள்... மேலும், எங்களுக்கு வாழ , கைவசம் நேர்மையான தொழில் இருக்கிறது.

அடுத்தவர்கள் மனசு புண்படக்கூடாது  எனபது பட்டாபட்டியின் எண்ணம். ஆகவே மேற்சொன்னதை, அடித்துவிட்டேன்....யாரும் படிக்கவேண்டாம்...

இது ராகுல்ஜீ-க்கு
ராகுல்ஜீ..ராகுல்ஜீ.. நிம்மள்க்கு பட்ச்ச பய, நிம்மள் பேரை வெச்சவன்,  அடிமையா சிக்கியிருக்கான். அம்மாகிட்ட , சொல்றான்.... ரெண்டு செட் பேண்ட் சர்ட் எடுக்றான். கோயமுத்துர்ர் வரான். அந்த ‘படிச்ச அடிமைய’, நிம்மள் கட்சில சேர்க்ரான்,,
ஜல்தி ஆவோ....



டிஸ்கி 4.
இதுவும் அவர்களுக்கு(?..)
என்னாடா.. பட்டாபட்டி பக்கா லோக்கலா எழுதுவானே.. ஒரு வேளை, தண்ணி,கிண்ணி போடாம, தமிழர் பாரம்பரியத்தை விட்டு விலக்கிப்போறானோ-னு நினச்சீங்கனா, உங்களுக்கு என்னுடைய பதில்...”ஹி..ஹி.. லோக்கல்னா என்னா பாஸ்?..  எனக்கு தெரிஞ்சு, தாய் தந்தை உடலுறவின் மூலம் வாரிசுகள் பிறக்கின்றன. அது சென்னையில் பிறந்து வளர்ந்தா லோக்கல். பக்கத்து ஊரில் பிறந்து , சென்னை வந்திருந்தா, அது பாரீனா?”..புரியலே.. மேலும் எனக்கு புரியவும் வேண்டாம்..

டிஸ்கி 5.
இதுவும் இவர்களுக்கு(?..)
லோக்கல் பிரச்சனைகளின் அடி வேரான..உங்களுக்கு..
நீங்க சொல்ல வந்த விசயம் சரிதான். ஆனால், அதற்காக ஒருவரின், உடலமைப்பை நக்கல் பண்ணவேண்டாமே..ஏன்னா.... குஷ்புவுக்கும் வயசாகும். ஹி..ஹி
.
.
.

90 comments:

  1. லோக்கல்னா என்னா பாஸ்?.. எனக்கு தெரிஞ்சு, தாய் தந்தை உடலுறவின் மூலம் வாரிசுகள் பிறக்கின்றன. அது சென்னையில் பிறந்து வளர்ந்தா லோக்கல். பக்கத்து ஊரில் பிறந்து , சென்னை வந்திருந்தா, அது பாரீனா?”..புரியலே.. மேலும் எனக்கு புரியவும் வேண்டாம்/////

    பயங்கர உள் குத்து இருக்கே....!!!!

    ReplyDelete
  2. பயங்கர உள் குத்து இருக்கே....!!!!
    //

    ஹி..ஹி அப்படீனா?

    ReplyDelete
  3. அக்கம்பக்கம் பாரடா சஞ்ச%$ராஜா..
    அண்டர்வேரு ஜாக்கிரதை. படிச்ச ராஜா....

    ReplyDelete
  4. இந்த வாரம் என்ன நெருப்பு வாரமோ அண்ணாத்தே ?
    பத்திக்கிட்டு எரியுதே ? ஆனா ஒரு பயலுவளும் கேக்கமாட்டானுவ!!

    ReplyDelete
  5. கக்கு - மாணிக்கம் said...

    இந்த வாரம் என்ன நெருப்பு வாரமோ அண்ணாத்தே ?
    பத்திக்கிட்டு எரியுதே ? ஆனா ஒரு பயலுவளும் கேக்கமாட்டானுவ!!

    //

    வரட்டுண்ணே.. கழட்டி விட்டுடரோம்...

    ReplyDelete
  6. பட்டாப்பட்டி சார்... சார்... சார்....[இந்த மூணு சாருக்கும் நீங்க பொருத்தமானவர்]
    இது வரைக்கும் ஏதாவது மரியாத கொறைவா பேசி இருந்தா மன்னிச்சுடுங்க....

    ReplyDelete
  7. [இந்த மூணு சாருக்கும் நீங்க பொருத்தமானவர்]
    //

    அடப்பார்றா..சாருமாறி கேரளாவுக்கு அனுப்ப ..தூபம் போடுவதை....

    ReplyDelete
  8. பரவாயில்லையே ஹிந்தி ரெம்ப நல்லா பேசுரிங்களே))))

    ReplyDelete
  9. ///அவரவர் வேலையை, திறம்பட செய்த, கழகங்களின் கால்களில் விழுந்து, நமீதாவிற்க்காக, அலகு குத்தி, பால்காவடி எடுக்க, ஓர் அணியில் திரளுங்கள் இளைய சமூகத்தினரே.. என்று அறைகூவல் விடுகிறேன்.///

    வாருங்கள்... அனைவரும் ஒன்றுதிரண்டு பட்டாபட்டியின் தலையில் சாரி தலைமையில் அலகு குத்துவோம்..தலைவர் பட்டாபட்டி ஜிந்தாபாத்.

    ReplyDelete
  10. Blogger ganesh said...

    பரவாயில்லையே ஹிந்தி ரெம்ப நல்லா பேசுரிங்களே))))
    //

    நீங்க வேற.. நம்கு ஹிந்தி நஹி மாலும்...

    ReplyDelete
  11. @சிவசங்கர். said...
    வாருங்கள்... அனைவரும் ஒன்றுதிரண்டு பட்டாபட்டியின் தலையில் சாரி தலைமையில் அலகு குத்துவோம்..தலைவர் பட்டாபட்டி ஜிந்தாபாத்.
    //

    ஆனா... கால்ல சலங்கை கட்டச்சொல்லக்கூடாது..சொல்லிப்புட்டேன்

    ReplyDelete
  12. //
    டிஸ்கி 1.
    இது நமக்கு
    தலைவர்களின் பணி, நாட்டை சீர்திருத்துவது,
    நடிகர்களின் பணி, அரிதாரம் பூசிக்கொண்டு அவர்தம் தொழிலில் திறம்பட செழிப்பது//

    இந்த டிஸ்கி எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.....கண்டிப்பா தலைவர்கள் நாட்ட திருத்த மாட்டாய்ங்க....

    அதே மாதிரி நான் விஜய் ரசிகர் இல்ல அஜீத் ரசகர்னு சொல்லிகரதுல என்ன எழவு பெருமை இருக்கோ தெரியல....அவன் நடிச்சி அவன் கல்லாவ கட்டுறான்....நம்மாளுங்க முட்டா பயலுவ....படத்த பாத்தோமோ போனோமானு இல்ல...தலைவரு மயிருனு வெட்டி சீன் போட்டு பணத்த வேஸ்ட் பண்றாங்க... : (

    ReplyDelete
  13. அதே மாதிரி நான் விஜய் ரசிகர் இல்ல அஜீத் ரசகர்னு சொல்லிகரதுல என்ன எழவு பெருமை இருக்கோ தெரியல....அவன் நடிச்சி அவன் கல்லாவ கட்டுறான்....நம்மாளுங்க முட்டா பயலுவ....படத்த பாத்தோமோ போனோமானு இல்ல...தலைவரு மயிருனு வெட்டி சீன் போட்டு பணத்த வேஸ்ட் பண்றாங்க... : (
    //

    விடுங்க.. அவனுக, ’நாங்க அடிமைகளாத்தான் இருப்போமு’னு சொல்லும்போது..நாம என்ன பண்ண முடியும்?...

    கட் அவுட்-கு பாலாபிஷகம் பண்ணி புண்ணியம் தேடிக்கட்டும்..

    ReplyDelete
  14. //இந்த சம்பவத்தில, அவருடைய நாட்டுப்பற்று, மதஉணர்வு, உங்களை மெய்சிலிர்க்க வைத்திருக்கலாம். அதில வென்றவர்கள், ’மாமா’வாகவும், ’தாத்தா’வாகவும் உருவாகினர். //

    பட்டாப்பட்டி சாப், ஏன் அத்தையை விட்டுட்டீங்க??

    ReplyDelete
  15. நான் அப்பவே சொல்லலை பதிவுலகின் விடிவெள்ளி பட்டாப்பட்டி(சீ வாய்ல அடி வாய்ல அடி). பட்டாபட்டின்னு சொல்லகூடாது பிரபல பதிவர் பட்டாபட்டி.

    ReplyDelete
  16. //இன்றைய இளைய தலைமுறையினர் ஒன்று,
    ’தளபதியின் ரசிகனாகவோ, இல்லை, தல-யின் ரசிகனாகவோ’
    ‘கலைஞரின் தலைமையிலோ இல்லை, லலிதாவின் தலைமையிலோ’
    அல்லது, சிலபல ’குறுநில மன்னர்களின்’ கட்சி தலமையை ஏற்காவிட்டால், மனிதனாக இருப்பதற்க்கே தகுதியில்லை என்று முத்திரை குத்தப்படுகிறது.//

    இது 100% சரி. நீ யாருக்காவது அடிமையா இரு இல்லையென்றால் தமிழனா இருக்காதே இதுதான் இப்போ இங்கே நடந்திட்டு இருக்கு.

    ReplyDelete
  17. உஸ்........... இரு படிச்சிட்டு வர்றேன்

    ReplyDelete
  18. அடப்பாவிகளா காலைல ஆபீஸ் வந்ததும் பதிவை படிக்க ஆரமிச்சேன். அதுக்குள்ளே லஞ்ச் வந்துடுச்சே. பட்டிக்காட்டான் jey கூட சகவாசம் வச்சிக்காதேன்னா கேக்குறியா?

    ReplyDelete
  19. நாகராஜசோழன் MA said...

    //இந்த சம்பவத்தில, அவருடைய நாட்டுப்பற்று, மதஉணர்வு, உங்களை மெய்சிலிர்க்க வைத்திருக்கலாம். அதில வென்றவர்கள், ’மாமா’வாகவும், ’தாத்தா’வாகவும் உருவாகினர். //

    பட்டாப்பட்டி சாப், ஏன் அத்தையை விட்டுட்டீங்க??
    //

    நான் சொன்னது காந்தியும் ..நேருவும்.. அப்ப அத்தை..குச்சி மிட்டாய் சாப்பிட்டுக்கொண்டு இருந்திருப்பாங்க.. அதனால விதிவிலக்கு கொடுத்தாச்சு.. ஹி..ஹி ( நீ சமாளி பட்டாபட்டி...)

    ReplyDelete
  20. Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

    நான் அப்பவே சொல்லலை பதிவுலகின் விடிவெள்ளி பட்டாப்பட்டி(சீ வாய்ல அடி வாய்ல அடி). பட்டாபட்டின்னு சொல்லகூடாது பிரபல பதிவர் பட்டாபட்டி.
    //

    ஹா...ஹா...

    சரி..சரி...தேன்...மறந்துடாதே.....

    ReplyDelete
  21. Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

    அடப்பாவிகளா காலைல ஆபீஸ் வந்ததும் பதிவை படிக்க ஆரமிச்சேன். அதுக்குள்ளே லஞ்ச் வந்துடுச்சே. பட்டிக்காட்டான் jey கூட சகவாசம் வச்சிக்காதேன்னா கேக்குறியா?
    //

    ஆமா.. ஜே-க்கு என்னாச்சு..
    கூட்டணி பேச டெல்லி போயிருக்காரா?..


    இல்ல..... சொல்லாம கொள்ளாம ...போட்டு தள்ளிட்டுத்தான் சிங்கப்பூர் வர, நீர் டிக்கெட் எடுத்திருக்கியா?....

    ReplyDelete
  22. //சரி..சரி...தேன்...மறந்துடாதே.....//

    கண்டிப்பா. ஓசி பிரயாணி உண்டு தான?

    ReplyDelete
  23. சசிகுமார் said...

    ஹி ஹி ஹி
    //

    போங்கண்ணெ.. நம்ம சிரிப்ப சிரிச்சுக்கிட்டு...

    ReplyDelete
  24. Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

    //சரி..சரி...தேன்...மறந்துடாதே.....//

    கண்டிப்பா. ஓசி பிரயாணி உண்டு தான?
    //

    உண்டு.. ஸ்பான்ஷர் கோவி கண்ணன் ரெடியாயிட்டு இருக்காரு.. கவலையே படாம.. கட்டின பேண்ட் சர்ட்டோட.. சாரிப்பா.. போட்ட பேண்ட் சர்ட்-டோட வா...
    \

    ReplyDelete
  25. பட்டா வெளுத்து வாங்கிட்ட ... இந்த பன்னாட பரதேசிகளுக்கு இன்னும் எவ்வளவு சொன்னாலும் மண்டையில ஏறாது , ஏன்? என்னான்னே விளங்காது .................... இருந்தாலும் கல்லெறிஞ்சு பார்ப்போம் , ம@#தா கட்டி மலைய இழுப்போம் வந்தா மலை இல்லை ........... அப்படியும் சும்மா யோசிக்க முடியல நண்பா ..... என்ன பண்றதுன்னு தெரியல..... ஏதாவது செய்ய முயற்சி செய்வோம்

    ReplyDelete
  26. நண்பர்களே பதிவு ரொம்ப நல்லா இருக்கு முடிஞ்சா அளவுக்கு சீரியஸ் ஆ பதிவு சம்பத்தப்பட்ட விசயத்த "மட்டும்" டிஸ்கஸ் பண்ணுங்க

    ReplyDelete
  27. //மனிதர்களின் உடம்பில், பன்றி ரத்தத்தை தவிர, மற்ற ரத்தங்கள் ஊற ஆரம்பித்தது.//


    எங்கள் பன்னிக்குட்டி ராம்சாமியை மனிதனே இல்லை என்று சொன்ன பட்டாபட்டியை கண்டித்து எங்கள் தலைவர் பகு ராம்சாமி சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பார் என்று தெரிவித்துக் 'கொல்'கிறோம்.

    ReplyDelete
  28. உங்களுக்கு என்னுடைய பதில். “நீ வேணா, ராகுலுக்கு பரம்பரை அடிமையா இருங்க பாஸ்....அதற்கு எங்களுடைய வாழ்த்துக்கள்... மேலும், எங்களுக்கு வாழ , கைவசம் நேர்மையான தொழில் இருக்கிறது.//

    இது எச்சி தொட்டு அழிக்கப்பட்டிருக்கு. இதப் படிக்கனுமா?

    jey நாணன் கோடா நாட்டுல ரெஸ்ட் எடுக்குறாரு...

    ReplyDelete
  29. /லோக்கல் பிரச்சனைகளின் அடி வேரான..உங்களுக்கு..
    நீங்க சொல்ல வந்த விசயம் சரிதான். ஆனால், அதற்காக ஒருவரின், உடலமைப்பை நக்கல் பண்ணவேண்டாமே..ஏன்னா.... குஷ்புவுக்கும் வயசாகும். ஹி..ஹி//

    எவனுக்கும் உறைக்காது பட்டா (சாரி) பிரபலபதிவர் பாட்டாபட்டி

    ReplyDelete
  30. Delete
    Blogger மங்குனி அமைசர் said...

    பட்டா வெளுத்து வாங்கிட்ட ... இந்த பன்னாட பரதேசிகளுக்கு இன்னும் எவ்வளவு சொன்னாலும் மண்டையில ஏறாது , ஏன்? என்னான்னே விளங்காது
    //

    படிச்சு முடிச்சாச்சா?.. எழுதி..எழுதி..கை வலி கண்டதுதான் மிச்சம்..
    அவனுகளா திருந்தினா நல்லது.. இல்லை.. இன்னொரு அடிமைதான்

    ReplyDelete
  31. இருய்யா படிச்சிட்டு வாரேன் (மொத தடவையா படிச்சிட்டு கமென்ட் போடப் போறேன், ஏதாவது பாத்து போட்டுக் கொடுங்க சார்!)

    ReplyDelete
  32. ////நமீதா பிறந்த மண்ணும், காந்தி பிறந்த மண்ணும், நமது மமண்டையில் உள்ள மண்ணும், ஒன்றே எனபதுதான் கூடுதல் செய்தி.////

    நமீதாவுக்கும் நமக்கும் இப்பிடி ஒரு ரிலேசன்ஷிப்பா? உடம்பே புல்லரிக்குதே?

    ReplyDelete
  33. ////நாம் , அடிமைகளாக தொடர்வதா?.. இல்லை.. அவரவர் திறமைகளை தீட்டிக்கொண்டு, அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறுவதா?.////

    அடுத்த கட்டத்தை நோக்கி போயே தீர வேண்டும்! ஆனால் அதைத் தடுக்கும் குறுநிலமன்னர்களின் கொட்டத்தை அடக்க என்ன வழி?

    ReplyDelete
  34. ///வாரிசுகளின் தொழில், அவரவர் குடும்பத்தொழிலை(?), மென்மேலும் சிறப்புறச்செய்வது. ///

    அப்போ மத்தவன்லாம் மந்திரியாகவே முடியாதா?

    ReplyDelete
  35. ////இது ராகுல்ஜீ-க்கு
    ராகுல்ஜீ..ராகுல்ஜீ.. நிம்மள்க்கு பட்ச்ச பய, நிம்மள் பேரை வெச்சவன், அடிமையா சிக்கியிருக்கான். அம்மாகிட்ட , சொல்றான்.... ரெண்டு செட் பேண்ட் சர்ட் எடுக்றான். கோயமுத்துர்ர் வரான். அந்த ‘படிச்ச அடிமைய’, நிம்மள் கட்சில சேர்க்ரான்,,
    ஜல்தி ஆவோ....////


    நமக்கு வாய்த்த அடிமைகள் ரொம்பத் திறமைசாலிகள்!

    ReplyDelete
  36. ///இது அவருக்கு(?..)
    எங்கள் தலைவர் ராகுலை, அவமதித்துவிட்டனர் என்று, யாராவது வருத்தப்பட்டால்... ///

    எங்க தானைத்தலைவன வம்புக்கு இழுக்காம இருக்க முடியாதே? ஒரு பச்ச மண்ணப் போயி இப்பிடியா கிழிக்கிறது?

    ReplyDelete
  37. ///ஆகவே நமீதா, உங்கள் இடத்துக்கு வருவதற்கு, மனம் கோணாமல் உதவுங்கள்///

    கவலைப்படவேணாம், அதெல்லாம் தலைவரோட வாரிசுகள் கரெக்டா பாத்துக்கும்!

    ReplyDelete
  38. ////டிஸ்கி 4.
    இதுவும் அவர்களுக்கு(?..)
    என்னாடா.. பட்டாபட்டி பக்கா லோக்கலா எழுதுவானே.. ஒரு வேளை, தண்ணி,கிண்ணி போடாம, தமிழர் பாரம்பரியத்தை விட்டு விலக்கிப்போறானோ-னு நினச்சீங்கனா, உங்களுக்கு என்னுடைய பதில்...”ஹி..ஹி.. லோக்கல்னா என்னா பாஸ்?.. எனக்கு தெரிஞ்சு, தாய் தந்தை உடலுறவின் மூலம் வாரிசுகள் பிறக்கின்றன. அது சென்னையில் பிறந்து வளர்ந்தா லோக்கல். பக்கத்து ஊரில் பிறந்து , சென்னை வந்திருந்தா, அது பாரீனா?”..புரியலே.. மேலும் எனக்கு புரியவும் வேண்டாம்..////


    இதுல உள்குத்து, வெளிக்குத்து, நடுக்குத்துன்னு எல்லாம் இருக்கும்போல?

    ReplyDelete
  39. தானைத்தலைவன் பட்டாபட்டி வாழ்க! பட்டாபட்டி வாழ்க! பட்டாபட்டியின் புகழ் ஓங்குக!

    ReplyDelete
  40. //////நமீதாவிற்க்காக, அலகு குத்தி, பால்காவடி எடுக்க, ஓர் அணியில் திரளுங்கள் இளைய சமூகத்தினரே.. என்று அறைகூவல் விடுகிறேன்./////////

    இதுதான்யா உன்கிட்ட எனக்கு ரொம்ப புடிச்சது, எதையும் உள்ளுக்க வெச்சுக்காம அப்பிடியே சொல்லிடுற பாரு! சரி, சரி சீக்கிரம், ஆகவேண்டியத பாப்போம்!

    ReplyDelete
  41. தானைத்தலைவன் பட்டாபட்டி வாழ்க! பட்டாபட்டி வாழ்க! பட்டாபட்டியின் புகழ் ஓங்குக!
    //

    உம்ம சந்தோசமே..எம்ம சந்தோசம்..
    ஏக்க.. கன்னட கொத்தில்லா....

    ReplyDelete
  42. சொல்லிடுற பாரு! சரி, சரி சீக்கிரம், ஆகவேண்டியத பாப்போம்!
    //

    யோவ் வென்று.. நமிதாவை திருச்சில கடத்திகிட்டு போயிட்டாங்களாம்.. முதல்வர் எப்பொ திருச்சி வராருனு..தமிழகமே அல்லாடிக்கிட்டு இருக்கு.. இப்பபோயி என்னை பாராட்டிக்கிட்டு...

    மீசைக்காரரு பரிதவிச்சுப்போயி இருக்காரு.. போய் வாந்தி எடு...

    http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=42017

    ReplyDelete
  43. பன்னிக்குட்டி ராம்சாமி said...

    ///வாரிசுகளின் தொழில், அவரவர் குடும்பத்தொழிலை(?), மென்மேலும் சிறப்புறச்செய்வது. ///

    அப்போ மத்தவன்லாம் மந்திரியாகவே முடியாதா?

    //

    முடியும்..முடியும்.. எதுக்கும் கொல்லைபுற வழியா முயற்சி பண்ணி பார்க்கச்சொல்லு...
    ( ராசா...ராசாதி ராசன் இந்த ராசா...
    ஏம்பா..ஸ்பெக்ட்ரம் பிரச்சனை என்னாச்சு?...)

    ஊத்தி மூடிட்டாங்களா?

    ReplyDelete
  44. // பட்டாபட்டி.. said...

    பன்னிக்குட்டி ராம்சாமி said...


    ஏம்பா..ஸ்பெக்ட்ரம் பிரச்சனை என்னாச்சு?...)//


    அதுதான் தெரியல. அம்மா மதுர கூட்டத்துல கூட அதபத்தி ஒன்னும் சொல்லல.

    ReplyDelete
  45. //நடிகர்களின் பணி, அரிதாரம் பூசிக்கொண்டு அவர்தம் தொழிலில் திறம்பட செழிப்பது.


    நமது பணி அவர்களுக்கு சொம்பு தூக்குவது ...

    ReplyDelete
  46. Blogger "ராஜா" said...

    //நடிகர்களின் பணி, அரிதாரம் பூசிக்கொண்டு அவர்தம் தொழிலில் திறம்பட செழிப்பது.


    நமது பணி அவர்களுக்கு சொம்பு தூக்குவது ..
    //


    நசுங்காம தூக்குவது...ஹி..ஹி..

    ReplyDelete
  47. // குறுநிலமன்னர்களின் பணி, நல்ல அடிமைகளாக, அணியில் சேர்ப்பது.

    நமது பணி திறமையான அடிமையாக காலம் முழுவதும் அவர்களுக்கும் அவர்கள் சந்ததியினர்க்கும் அடி வருடுவது

    ReplyDelete
  48. // பட்டாபட்டி.. said...
    @சிவசங்கர். said...
    வாருங்கள்... அனைவரும் ஒன்றுதிரண்டு பட்டாபட்டியின் தலையில் சாரி தலைமையில் அலகு குத்துவோம்..தலைவர் பட்டாபட்டி ஜிந்தாபாத்.
    //

    ஆனா... கால்ல சலங்கை கட்டச்சொல்லக்கூடாது..சொல்லிப்புட்டேன்///

    ha..ha...ha.....

    ReplyDelete
  49. //// "ராஜா" said...
    // குறுநிலமன்னர்களின் பணி, நல்ல அடிமைகளாக, அணியில் சேர்ப்பது.

    நமது பணி திறமையான அடிமையாக காலம் முழுவதும் அவர்களுக்கும் அவர்கள் சந்ததியினர்க்கும் அடி வருடுவது////


    அடி வருடுவது அல்ல...அடி நெருடுவது(உள்குத்து எதுவும் இல்லை... காங்கிரஸும் கம்யூனிஸ்ட்ம் போலன்னு நான் சொல்ல வரல)

    ReplyDelete
  50. ரத்தம் To ரத்தம், ரத்தம் To ரத்தம், ரத்தம் To ரத்தம்....
    ஒரே பயமாக இருக்கு சார்!!!!!

    ReplyDelete
  51. //அங்கு அவருடைய கடின உழைப்பைத்தான் பார்க்கவேண்டுமே அன்றி புறங்கூறக்கூடாது. ///

    அடடா , இதுல என்னங்க கடின உழைப்பு இருக்கு ..?

    ReplyDelete
  52. // நமீதாவிற்க்காக, அலகு குத்தி, பால்காவடி எடுக்க, ஓர் அணியில் திரளுங்கள் இளைய சமூகத்தினரே.. என்று அறைகூவல் விடுகிறேன்.//

    ஆனா எனக்குத்தான் நமிதா பிடிக்காதே ..!!?

    ReplyDelete
  53. //அடுத்தவர்கள் மனசு புண்படக்கூடாது எனபது பட்டாபட்டியின் எண்ணம். ஆகவே மேற்சொன்னதை, அடித்துவிட்டேன்....யாரும் படிக்கவேண்டாம்.../

    ஆமாங்க , நீங்க ரொம்ப நல்லவர்னு ஊருக்குள்ள சொல்லிட்டு திரியுறாங்க ..!!

    ReplyDelete
  54. //அதில வென்றவர்கள், ’மாமா’வாகவும், ’தாத்தா’வாகவும் உருவாகினர்.//

    //ஒன்றுபட்ட சுதந்திர இந்தியாவை, ஆளும் பொறுப்பு காங்கிரஸ்க்கு ( நேரு குடும்பத்திற்க்கு கிடைத்தது.) //


    செம நக்கல்யா உனக்கு ;)
    ஆனா ,எனக்கு ஒரு டவுட் ரொம்ப நாளா இருக்கு மச்சி! 'எழுச்சி தலைவன் ' னு ஏன் மச்சி பட்டம் கொடுத்தாங்க? ;)

    யோவ்,லோக்கல் னு நீ யார நக்கல் விட்டு இருக்கனு மட்டும் சொல்லு.. : )

    ReplyDelete
  55. இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு இந்த அடிமை சரித்திரம் தொடரும் என்று தெரியவில்லை..

    என் தாய் நாட்டின் கண்ணீர்ச் சரித்திரம் இன்னும் நீடிக்கிறதே.. உலகம் நம்மைப் பார்த்துச் சிரிக்கிறது..

    நன்றி..
    சாமக்கோடங்கி...

    ReplyDelete
  56. பட்டா சொன்னா கேளு ராவா அடிக்காத, அடிச்சால் இப்படி தான் ஆகும்

    ReplyDelete
  57. பகத்சிங்கை தூக்கில் போடப்போகிறோம், உங்கள் கருத்து என்ன?’, ஆங்கிலேயர்கள் காந்தியிடம் கேட்கின்றனர். ’நாங்கள் நடத்தப்போகும் உண்ணாவிரதம் முடிந்தபின், அவரை தூக்கில் போட்டுக்கொள்ள, எங்களுக்கு ஆட்சேபனை இல்லை’///////////////////////////////


    என்னே ஒரு நாட்டு பட்டரு (பற்று)

    ReplyDelete
  58. நாகராஜசோழன் MA said...

    //இந்த சம்பவத்தில, அவருடைய நாட்டுப்பற்று, மதஉணர்வு, உங்களை மெய்சிலிர்க்க வைத்திருக்கலாம். அதில வென்றவர்கள், ’மாமா’வாகவும், ’தாத்தா’வாகவும் உருவாகினர். //

    பட்டாப்பட்டி சாப், ஏன் அத்தையை விட்டுட்டீங்க??/////////////


    அத்தையை தப்பா பேசாதீங்க பன்னிகுட்டி டென்ஷன் ஆகிடுவாரு

    ReplyDelete
  59. மங்குனி அமைசர் said...

    நண்பர்களே பதிவு ரொம்ப நல்லா இருக்கு முடிஞ்சா அளவுக்கு சீரியஸ் ஆ பதிவு சம்பத்தப்பட்ட விசயத்த "மட்டும்" டிஸ்கஸ் பண்ணுங்க//////////////

    கொய்யால இந்த மங்குவுக்கு இதே வேலை நான் கமெண்ட் போடுறது புடிக்காதே

    ReplyDelete
  60. பன்னிக்குட்டி ராம்சாமி said...

    இருய்யா படிச்சிட்டு வாரேன் (மொத தடவையா படிச்சிட்டு கமென்ட் போடப் போறேன், ஏதாவது பாத்து போட்டுக் கொடுங்க சார்!)


    yoov,யோவ்,அப்போ என் பதிவை எல்லாம் படிக்க்வே இல்லையா?

    ReplyDelete
  61. பன்னிக்குட்டி ராம்சாமி said...

    ////இது ராகுல்ஜீ-க்கு
    ராகுல்ஜீ..ராகுல்ஜீ.. நிம்மள்க்கு பட்ச்ச பய, நிம்மள் பேரை வெச்சவன், அடிமையா சிக்கியிருக்கான். அம்மாகிட்ட , சொல்றான்.... ரெண்டு செட் பேண்ட் சர்ட் எடுக்றான். கோயமுத்துர்ர் வரான். அந்த ‘படிச்ச அடிமைய’, நிம்மள் கட்சில சேர்க்ரான்,,
    ஜல்தி ஆவோ....////


    நமக்கு வாய்த்த அடிமைகள் ரொம்பத் திறமைசாலிகள்!

    ஆனால் பதிவுதான் நீளமாக ,நீலமாக இருக்கும்

    ReplyDelete
  62. யோவ் பட்டாபட்டி,இதை படைக்க வேணாம்னு அடிச்சு எழுதுன ஐடியா நல்லாருக்குய்யா

    ReplyDelete
  63. ////// யோவ் பட்டாபட்டி,இதை படைக்க வேணாம்னு அடிச்சு எழுதுன ஐடியா நல்லாருக்குய்யா /////


    ஹி ஹி ஹி நீங்க பட்டாபட்டிக்கு புதுசா ? இருந்தாலும் சொல்றேன் கேளுங்க ..,உங்ககிட்ட பட்டாபட்டி பேசுற மாதிரி இருக்கும்.....,அப்போது ......, கீழே பார்தீங்கனா டவுசெர் இருக்காது ..,அது தான் பட்டாபட்டியோட ஸ்டைல் ...,ஹி ஹி

    ReplyDelete
  64. பிரபல பதிவர் ஆகிவிட்டாலே இப்படித்தான்... எதையாவது குண்டக்க மண்டக்க எழுதத் தோன்றும்...

    ReplyDelete
  65. பகத்சிங் மேட்டர் உண்மையா?... இது வரைக்கும் யாரும் சொல்லவே இல்ல?

    ReplyDelete
  66. நல்லா வந்திருக்கு.

    பதிவும் நல்லா இருக்கு. கமெண்ட்ஸ் பகுதியும் நல்லா ட்வீட்டர் ஏரியால இருக்கிறது போல இருக்கு.

    அடிச்சி ஆடுங்க :)

    ReplyDelete
  67. @Premkumar Masilamani said...

    பகத்சிங் மேட்டர் உண்மையா?... இது வரைக்கும் யாரும் சொல்லவே இல்ல?
    ///



    (கோப்பு எண்: 545/19312, உள்துறை அமைச்சகம், தேசிய ஆவணக் காப்பகத்தில் உள்ள அரசியல் பிரிவு)

    ReplyDelete
  68. Blogger பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

    ////// யோவ் பட்டாபட்டி,இதை படைக்க வேணாம்னு அடிச்சு எழுதுன ஐடியா நல்லாருக்குய்யா /////


    ஹி ஹி ஹி நீங்க பட்டாபட்டிக்கு புதுசா ? இருந்தாலும் சொல்றேன் கேளுங்க ..,உங்ககிட்ட பட்டாபட்டி பேசுற மாதிரி இருக்கும்.....,அப்போது ......, கீழே பார்தீங்கனா டவுசெர் இருக்காது ..,அது தான் பட்டாபட்டியோட ஸ்டைல் ...,ஹி ஹி

    //


    உஷ்....உஷ்......

    ReplyDelete
  69. இங்கிலாந்து அரசுக்கு அன்றாடம் பேச்சுவார்த்தை விவரங்களை தெரிவிக்க கடமைப்பட்டிருந்த இர்வின், பேச்சுவார்த்தைக் குறிப்புகளை ஆவணப்படுத்தியுள்ளார்: ""முடிவில், அவர் (காந்தி) ....பகத்சிங் வழக்கு குறித்து குறிப்பிட்டார். அவர் (மரண) தண்டனையை நீக்கக் கோரவில்லை. ஆனால், தற்போதைய சூழ்நிலையில் தண்டனையைத் தள்ளி வைக்கக் கேட்டுக் கொண்டார்.''

    ReplyDelete
  70. பிப்ரவரி 19 தேதியிட்டது 1970 ஆகஸ்டு 15 மெயின்ஸ்ட்ரீம் இதழில் டி.பி.தாஸ் எழுதிய கட்டுரையிலிருந்து)

    ReplyDelete
  71. வர வர உங்க எழுத்துகள் நல்ல இருக்கு.

    Font Change பண்ணுணீங்களா .. :)

    லேட்டஸ்ட் தமிழ் சினிமா படங்களுக்கு
    Tamil Movie Gallery

    ReplyDelete
  72. ஜாலியன் வாலாபாக் படுகொலைக்குத் தலைமை ஏற்று நடத்திய ஜெனரல் டயரைச் சுட்டுக் கொன்றார் உத்தம் சிங். அதனைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டார் காந்தி. ஆனால், உத்தம் சிங்கைப் பாராட்டி கடிதம் அனுப்பினார் நேதாஜி. காந்திக்கும் நேதாஜிக்கும் இடையிலான உரசலை அதிகமாக்கிய சம்பவம் இது!

    ReplyDelete
  73. 1939-ல் இரண்டாவது முறையாக காங்கிரஸ் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார். நேதாஜியின் செல்வாக்கு உயர்ந்து வருவதை அறிந்த காந்தி, அவருக்கு எதிராக ராஜேந்திரப் பிரசாத்தையும், நேருவையும் போட்டியிடுமாறு வற்புறுத்தினார். அவர்கள் மறுக்கவே, பட்டாபி சீதா ராமையாவை நிறுத்தினார். போஸ் 1,580 வாக்குகளுடனும், சீதா ராமையா 1,371 வாக்குகளுடனும் இருந்தனர். சீதா ராமையாவின் தோல்வி தனக்குப் பெரிய இழப்பு என்று பகிரங்கமாகவே காந்தி தெரிவித்து
    உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினார். அதனால், அவரைச் சமாதானப்படுத்த, நேதாஜி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலக்கப்பட்டார். அப்போது அவர் ஆரம்பித்ததுதான் 'ஃபார்வர்டு பிளாக்' கட்சி!

    ReplyDelete
  74. So many things were happening in the background. I dint know all these. Thanks for the information.

    ReplyDelete
  75. //////// ஜாலியன் வாலாபாக் படுகொலைக்குத் தலைமை ஏற்று நடத்திய ஜெனரல் டயரைச் சுட்டுக் கொன்றார் உத்தம் சிங். அதனைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டார் காந்தி. ஆனால், உத்தம் சிங்கைப் பாராட்டி கடிதம் அனுப்பினார் நேதாஜி. காந்திக்கும் நேதாஜிக்கும் இடையிலான உரசலை அதிகமாக்கிய சம்பவம் இது! //////


    இன்னும் நிறைய நிறைய இருக்கு ...,பட்டாபட்டி...,

    ReplyDelete
  76. பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

    //////// ஜாலியன் வாலாபாக் படுகொலைக்குத் தலைமை ஏற்று நடத்திய ஜெனரல் டயரைச் சுட்டுக் கொன்றார் உத்தம் சிங். அதனைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டார் காந்தி. ஆனால், உத்தம் சிங்கைப் பாராட்டி கடிதம் அனுப்பினார் நேதாஜி. காந்திக்கும் நேதாஜிக்கும் இடையிலான உரசலை அதிகமாக்கிய சம்பவம் இது! //////


    இன்னும் நிறைய நிறைய இருக்கு ...,பட்டாபட்டி...,
    //

    எழுதினா நாறுமே நரி..அதான் பார்க்குறேன்

    ReplyDelete
  77. Blogger Selvamani said...

    வர வர உங்க எழுத்துகள் நல்ல இருக்கு.

    Font Change பண்ணுணீங்களா .. :)
    //

    ரொம்ப நன்னிங்க... font மாற்றினால்... பதிவுகள் நல்லாயிருக்குமுனு தெரியவெச்சதுக்கு... ஹி..ஹி

    ReplyDelete
  78. ///// 1939-ல் இரண்டாவது முறையாக காங்கிரஸ் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார். நேதாஜியின் செல்வாக்கு உயர்ந்து வருவதை அறிந்த காந்தி, அவருக்கு எதிராக ராஜேந்திரப் பிரசாத்தையும், நேருவையும் போட்டியிடுமாறு வற்புறுத்தினார். அவர்கள் மறுக்கவே, பட்டாபி சீதா ராமையாவை நிறுத்தினார். போஸ் 1,580 வாக்குகளுடனும், சீதா ராமையா 1,371 வாக்குகளுடனும் இருந்தனர். சீதா ராமையாவின் தோல்வி தனக்குப் பெரிய இழப்பு என்று பகிரங்கமாகவே காந்தி தெரிவித்து
    உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினார். அதனால், அவரைச் சமாதானப்படுத்த, நேதாஜி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலக்கப்பட்டார். அப்போது அவர் ஆரம்பித்ததுதான் 'ஃபார்வர்டு பிளாக்' கட்சி!////
    சத்தியமா பட்டா ..,இதெல்லாம் நான் கல்லூரியில் படிக்கும் போது படித்தது ..,வரலாற்றை திரித்து தனக்கு சாதகமான மொழியில் வகுத்து கொண்டார்கள் ..,வரலாறு என்பது உண்மையாக உள்ளது உள்ளபடி இருக்க வேண்டும் ..,பட்டா நீ நள்ளிரவில் சுதந்திரம் படித்திருபே நினைகிறேன் ...,இது போல் பல வரலாற்று சம்பவங்களையும் கூறலாம் ..,செக்கு இழுத்த வா.ஊ .சி கடைசி காலத்தில் கேட்பாரற்று கிடந்தார் ...,ஆனால் அதே சமயம் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனை துணை ஜனாதிபதியாக்கியது அரசாங்கம் ...,அவர் ஆசிரியர் தொழிலில் தான் இருந்தார் ..,நாடு சுதந்திரம் அடைவதற்கு பாடுபட்டார என்று தெரியவில்லை ..,தெரிந்தவர்கள் சொல்லலாம்

    ReplyDelete
  79. பெரியார், குடும்ப‌ஸ்த‌ன்(புள்ளை குட்டி பெத்த‌வன்)அரசிய‌ல் த‌லைவ‌னாக‌க் கூடாதுன்னார்.
    இராஜாஜி, அப்ப‌ன் தொழில‌(குல‌த்தொழில்)புள்ளைங்க செய்ய‌னும்ன்னார்.
    திராவிட‌ த‌ன்மான‌த் த‌லைவ‌ர், யாரைப் பின்பற்றுகிறார்? த‌மிழ‌ங்க‌ளா!! பொழைப்ப‌த்த‌, த‌றுத‌லைங்க‌, வெட்டிப் ப‌ச‌ங்க‌

    ReplyDelete
  80. பெரியார், குடும்ப‌ஸ்த‌ன்(புள்ளை குட்டி பெத்த‌வன்)அரசிய‌ல் த‌லைவ‌னாக‌க் கூடாதுன்னார்.
    இராஜாஜி, அப்ப‌ன் தொழில‌(குல‌த்தொழில்)புள்ளைங்க செய்ய‌னும்ன்னார்.
    திராவிட‌ த‌ன்மான‌த் த‌லைவ‌ர், யாரைப் பின்பற்றுகிறார்? த‌மிழ‌ங்க‌ளா!! பொழைப்ப‌த்த‌, த‌றுத‌லைங்க‌, வெட்டிப் ப‌ச‌ங்க‌.

    ReplyDelete
  81. யோவ் பட்டா என்னைய சொல்ல வர? ஒன்னுமே புரியல .. இது ஏதோ எங்களையெல்லாம் குழப்பி விட்டு நீ கட்சி ஆரம்பிச்சு எங்கள உன் அடிமைகளாக்க, போடுற திட்டமிட்ட சதி மாதிரி தெரியுது . வேண்டாம்ய நீயெல்லாம் கட்சி ஆரம்பிச்ச தமிழ்நாடு இல்ல , இந்திய நாடு இல்ல பக்கத்துல இருக்க பாகிஸ்தான் , பங்களாதேஷ் , பர்மா , பாலஸ்தீன் வரைக்கும் தாங்காது ..... சொல்லிபுட்டேன் ஆமா .
    ( பட்டா நீ கட்சி ஆரம்பிச்ச அந்த மகளீர் அணிய மட்டும் நான் maintain பண்ணிகிரென்யா .. பத்தே மாசத்துல பாரு எப்படி develope பண்ணிகாட்டுறேனு , அட கட்சிய சொன்னேன்ப்ப .... )

    ReplyDelete
  82. http://velangaathavan.blogspot.com/2010/10/blog-post_27.html

    இங்க கொஞ்சம் வந்திட்டுப் போங்களேன்!

    ReplyDelete
  83. பட்டாபட்டியார் வந்தே தீரணும்...

    ReplyDelete
  84. இந்தப் பக்கம் நானும் வந்துட்டுப் போனேனு யார்கிட்டயும் சொல்லிடாதீங்க..

    ReplyDelete
  85. இந்திரா said...

    இந்தப் பக்கம் நானும் வந்துட்டுப் போனேனு யார்கிட்டயும் சொல்லிடாதீங்க..
    //

    அய்யோ.. பொய் பேசினா.. எனக்கு கை கால் நடுங்குமே...

    ReplyDelete
  86. சிவசங்கர். said...

    http://velangaathavan.blogspot.com/2010/10/blog-post_27.html

    இங்க கொஞ்சம் வந்திட்டுப் போங்களேன்!
    //

    வந்துட்டேன்..

    ReplyDelete
  87. ( பட்டா நீ கட்சி ஆரம்பிச்ச அந்த மகளீர் அணிய மட்டும் நான் maintain பண்ணிகிரென்யா .. பத்தே மாசத்துல பாரு எப்படி develope பண்ணிகாட்டுறேனு , அட கட்சிய சொன்னேன்ப்ப .... )
    //

    அட.. நீர் வெற.. பத்து மாசம் மட்டும் யோசனை பண்ணக்கூடாது.. லாங் ரன்-ன்னு.பார்த்தா.

    ஆள் முடிஞ்சிரும் சாமி...

    ReplyDelete
  88. பெரியார், குடும்ப‌ஸ்த‌ன்(புள்ளை குட்டி பெத்த‌வன்)அரசிய‌ல் த‌லைவ‌னாக‌க் கூடாதுன்னார்.
    இராஜாஜி, அப்ப‌ன் தொழில‌(குல‌த்தொழில்)புள்ளைங்க செய்ய‌னும்ன்னார்.
    திராவிட‌ த‌ன்மான‌த் த‌லைவ‌ர், யாரைப் பின்பற்றுகிறார்? த‌மிழ‌ங்க‌ளா!! பொழைப்ப‌த்த‌, த‌றுத‌லைங்க‌, வெட்டிப் ப‌ச‌ங்க‌.
    //

    எல்லாம் சீரழிச்சுட்டு.. இன்னும் பேசிக்கிட்டே இருக்காங்க சார்...

    ReplyDelete
  89. Blogger பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...
    ,வரலாறு என்பது உண்மையாக உள்ளது உள்ளபடி இருக்க வேண்டும் ..,பட்டா நீ நள்ளிரவில் சுதந்திரம் படித்திருபே நினைகிறேன் ...,இது போல் பல வரலாற்று சம்பவங்களையும் கூறலாம்
    //


    அட.. சில ஆவணங்களை மெயில அனுப்புறேன்.. படிச்சு பாரு.. எரியும்...

    ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!