Pages

Wednesday, December 23, 2009

கூவம் மணக்கிறதா ?



கொஞ்ச நாளா சின்ராசு தொந்தரவில்லாம நிம்மதியா இருந்தேன்..
மனுசன் நிம்மதியா இருந்தா , சனிஸ்-க்கு ஆகாதே...
அடுத்த நாளே முன்னாடி வந்து நிக்கிறான் சின்ராசு..

நொட்ட கதை, மொட்ட கதை , மொண்டி கதையெல்லாம் பேசி முடித்த பிறகு ,
மெதுவா ஆரம்பிச்சான் டாபிக்க ...

"அப்புறம்..கொஞ்ச நாளைக்கு முன்னாடி கோட், ஸுட் போட்டுட்டு துணை முதல்வர் நம்ம ஏரியா வந்திருந்தார் போலிருக்கே " சொல்லிட்டே மெதுவா மண்டயச்சொறிஞ்சான்...
( ஊட்டி குதிரைக்காரன் மாறி..யாராவது காதில விழுத்திருந்தா நான் பொறுப்பில்லை)

நமக்கு உள்ளுக்குள்ளே நம்பிக்கை வந்திருச்சு..என்ன இருந்தாலும் , நல்லது பண்றதுக்குத்தானே, தலைவர் வந்திருக்காரு..இதுல என்னத்த நொள்ள கண்டுபிடிக்கபோறானு மனசு தெம்பாயிருச்சு...

"ஆமா சின்ராசு..கூவத்த மணக்க வைக்க என்னென்ன பண்ணலாமுனு பார்க்க
வந்திருந்தார் " னு நான் சொன்னேன்.

"இங்கபாரு பட்டாபட்டி.. லோக்கல் பேப்பரில் , அதைப்பற்றி நூசு வெளியாயிருந்தது..
ஏம்பா.. கூவத்த இங்க ஷிப்ட் பண்ணிட்டாங்கா?"... னு நக்கலா
சிரிக்கிறான்.


சென்னையில இருக்கற கூவத்துக்கு, சிங்கப்பூர்ல என்னய்யா பண்றிங்க?..
எங்கோ தேள் கொட்டுனா எங்கேயோ நெறி கட்றமாறி.....சொல்லிட்டு என்னைய
சைடா பார்க்கிறான்..

இவங்கிட்ட பேசி தப்பிக்கமுடியாது முடிவுபண்ணிட்டு "இல்ல சின்ராசு..அவரு சீக்கிரமா
கூவத்த மணக்க வெச்சுருவாரு.. என்னா.... 



எங்க தலைவரு , நல்லவரு, வல்லவரு..
சொன்னத்தான் செய்வாரு.. செஞ்சத்தான் சொல்வாரு ,"

                                                                                                                                      நான் இழுக்க...

ஆமான்டா .. வேட்டைக்காரன்ல டாக்டர் விஜய் மஞ்சத்துண்ட போட்ட மாறி ,
தமிழ் நாட்ல ஒருத்தரு தோள்ல மஞ்சத் துண்டப்போட்டுட்டு பகுத்தறிவு பேசுவாரே..
அவரு நம்ம துணைமுதல்வர் ஸ்கூல் பையனா இருந்தப்போ இதையேதான் சொல்லிட்டிருந்தார்
.-னு சொல்லிட்டு பெரிசா மூச்சு உடுறான்.

நாயி.எங்கிருந்து எதெதுக்கு முடிச்ச போடறான் பார்த்தீங்களா.
டாக்டர் விஜய எடுத்து , மஞ்சத்துண்டல மூடி , துணைமுதல்வர் தோள்லயே மாட்றான்.

மக்கா..வேறவழியே இல்லை..அதனாலே









   

One


Two



Three


 


வுடு         ஸுட்..












தற்காலியமா அவங்கிட்ட இருந்து ஒரு வழியா தப்பிச்சுட்டேன்..
சின்ராசு கிட்டயிருந்து முழுசா தப்பிக்கனுமுனா
எனக்கு ஒரே ஒருவழிதான் இருக்கு..

அதற்கு, சென்னையில வசிக்கும், மற்றும் "Digital Camera"
வைத்துள்ள நண்பர்கள் மட்டுமே எனக்கு உதவமுடியும்.,



சிரமம் பார்க்காம


" பாலும் தேனும் ஓடுகின்ற கூவத்தை" தயவுசெய்து
கிளிக் செய்து ஈஈஈஈஈஈஈஈஈமெயில் அனுப்பிவைக்கவும்.
அப்பதான் சின்ராசு மூஞ்சியிலெ கரி பூசமுடியும்...

நன்றி மக்கா..எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..



போட்டோ மறந்திராதிங்க...

2 comments:

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!