Pages

Wednesday, January 19, 2011

ம்.. பெருசுகளுக்காக..

படிப்பறிவு ....ம்...ம்...கொஞ்சம்.     படிக்கும் காலத்தில, பழுத்து, புழுத்து, காலத்தின் கோலத்தில கல்யாணம்.

சாட்சியாக இரு குழந்தைகள்.   குழந்தைகளின் படிப்பு, செலவு.. பராமரிப்பு.. Don't Worry மாம்ஸ்....... எல்லாம் பெருசுவின் தலையில்.


குடி..குட்டி..கூ****..    வாழ்க்கை இன்பமாக போய்கொண்டிருக்கிறது.
யாருக்கா?.... உம்....தெரிஞ்ச குடும்பத்தில், இப்படி ஒரு மகன் கேரக்டர்.

பாவம் பெரிசு.   மகனை படிக்க வைத்தார். ஏறவில்லை..
பணியில் சேர்த்துவிட்டார்.. முடியவில்லை...

ரிட்டையர் ஆன பணத்தில , மகனுக்கு, லேத் கம்பெனி வைத்துக்கொடுத்தார்.
ஒவ்வொன்றாக விற்று, புதல்வன் மதுவின் மூலமாக, அரசுக்கு உதவ அதுவும் அந்தோ!!!

காலை எழுந்ததும், சரக்கு... அதுவும் எப்படி? சுயமா  நிற்ககூட முடியாதளவுக்கு.    அப்புறம் தெருவீதி உலா..மதியம் மீண்டும் கடைக்கு திரும்பல்.  நல்ல தூக்கம்.. தந்தைக்கு துக்கம்..

மாலை எழுந்ததும், மறுபடியும் கடை.  மயங்கி விழும்வரை ஆட்டம் பாட்டம்..

வாழ்க்கைச்சக்கரம் சுழல்கிறது. இப்போது அன்பருக்கு வயது 50.
கால், கை விரல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பக்கம் திரும்பி, ஒவ்வாமையை  காட்டத்துவங்கிவிட்டது.

துன்பங்கள் பல வந்தாலும், துடைத்து எறிந்துவிட்டு, துள்ளலாக துயிலும் இடம் மதுபானக்கடை என ஆயிற்று..

பிறந்தோம்.. வளர்ந்தோம்.. வாழ்ந்தோம் .. சென்றோம்..”.. இதுதான் வாழ்க்கைச்சக்கரம்....

ஆம்..... நாளை, மகனுக்கு 12 ஆம் நாள்.... கருமாதி...
.

.
.

டிஸ்கி 1
அய்யா பெரியவர்களே. உங்களுக்கு எனது பணிவான வேண்டுகோள்..
தயவுசெய்து, உங்கள் குழந்தைகளுக்கு, நல்ல படிப்பை கொடுத்து, சுயமாக முன்னேற மட்டும், வழியை காட்டுங்கள்.

டிஸ்கி 2
அதீத அன்பால், உங்கள் சேமிப்பை, வாரிசுகளுக்கு கொடுக்கும்முன்..தாரக மந்திரத்தை மனதில் நிறுத்தி, முடிவை எடுங்கள்.. ( ”என் காலத்துக்குப்பின்..”)


டிஸ்கி 3
பெரியவர்(74),  பழைய சைக்கிளை மீண்டும் துடைக்க ஆரம்பித்துவிட்டார்..ம்.

பேத்திகளை படிக்கவைக்க , நாளை முதல்,  இரவு பணியாளராக ஓரிடத்தில் சேரப்போகும் அவருக்கு,  


என் வருத்ததை தெரிவிப்பதா?  அல்லது  வாழ்த்துக்களையா?..



.
.
.