Pages

Saturday, October 30, 2010

வேலை...வே...லை.......(ம) போச்சு.

முஸ்கி.
தலைப்பை பார்த்துவிட்டு, பட்டாபட்டி,   “ (ம)”  என்று சொல்வது தலைமுடியை என்று நினைப்பவர்கள், சீக்கிரமாக, இவ்விடத்தை விட்டு விலகுமாறு அன்புடன்..டோண்......சே...சே... பண்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

---------------------------------------------------------------------

’வாய்யா சின்ராசு.  மன்னாரு சூடா ரெண்டு டீ.’
அப்புறம் சின்ராசு, ஏன் டல்லா இருக்கே?.  யாரும் கல்யாணத்துக்கு கூப்பிடலையா?. ஹி..ஹி


’நீ வேற பட்டாபட்டி. நானே வேலை போயிடுச்சுனு வருத்ததுல இருக்கேன். எரிய தீயில எண்ணெய ஊத்திக்கிட்டு..’ சின்ராசு

என்னய்யா சொல்றே?.  உனக்கு இருக்கும் அறிவு(?)க்கு, பில் கேட்ஸ்ச, உன்னோட மாமனாராகியிருப்பேனு நினச்சேன்?

அடப்போய்யா.  இன்சூரன்ஸ் கம்பெனில வேலை கிடைச்சதேனு சந்தோசப்பட்டேன். அதே சந்தோசத்தோட போறவரவனுகெல்லாம் தண்ணி வாங்கிக்கொடுத்துட்டு,   வாந்தியெடுத்துட்டு.... வேலையில ஜாயின் பண்ணினேன்.

உம்.. அதுதான் தெரிஞ்ச கதை ஆச்சே. அதுவுமில்லாம , நீ மூளக்கரான். டிஸ்யூ பேப்பர் வெச்சு சம்பாரிச்சவனில்ல நீ.  
உன்னைய எப்படியா வேலைய விட்டு தூக்கினானுக?.  உங்க மேனேஜருக்கு தெரியாம, தமிழ்மணத்தில உலாவினியா?.அவரு உன்னோட காதை புடிச்சு, வெளிய தள்ளீட்டாரா?.
(உபயம்.. டோண்டு சார்.. அவருக்கு எங்களுடைய நன்னி) 

இல்லய்யா....வரவர டோமரு மாறியே பேசு.. தெரியாத தொழில், புரியாத பாஷை. எப்படியோ மேனேஜர் கிட்ட , தாங்கி(?) வேலைய வாங்கிட்டேன்.
அந்த டோமரு, ஒரு வாரத்தில, எவனை பிடிப்பியோ தெரியாது. $25,000 பாலிஸிக்கு ஆள் தேத்துனு சொல்லுச்சு..    அலைஞ்சு திரிஞ்சு , ரெண்டு முட்டாப்பயலுகளை பிடிச்சேன். அதுவும் எவ்வளவுக்கு தெரியுமா?  $50,000..

அடப்பாவி.. அப்படீனா உங்க மேனேஜர் உன்னோடத தாங்க(?) ஆரம்பிச்சிருப்பானே. அப்புறம் என்னாய்யா வருத்தம்?

இல்லப்பா. அங்க எல்லாரும் நல்லா நிறம் பார்க்கிறானுக. நான் எப்படி பிடிச்சேனு எல்லோரும் காண்டு ஆயிட்டானுக. அத பார்த்த மேனேஜரு, தனியா அவரோட ரூம்-க்கு கூப்பிட்டு, காச்மூச்னு கத்திட்டாரு..

அதுக்குத்தான் சொன்னேன். எப்பவும் வெண்ணையும் கையுமா சுத்தனுமுனு.  நீ கேப்பியா?. உனனைய.. ங்கோ....விடு..விடு.
சரி...என்னானு சொல்லிக் கத்தினான?

$25,000 பாலிசு புடிச்சா, மெடிக்கல் செக்கப் செஞ்சாத்தான் செல்லுமாம். என்ன எளவு கர்மாந்திரமோ.. முதல்லேயெ சொல்லியிருந்தா, பாலிஸில கையெழுத்து வாங்கும்போது பாட்டில எடுத்துட்டு போயிருப்பேன். நாதாரி.. எல்லாம் முடிஞ்சதும், உனக்கு வேலைய ஒழுங்கா செய்ய தெரியலேனு கத்தரான்.    வெறுப்பாயி, டாக்ஸில போயி, பாலிஸி போட்டவனுகள கண்டுபிடிச்சு எப்படியோ பாட்டில நிரப்பிட்டு வந்துட்டேன்.

என்னாது.. தண்ணி பாட்டிலா?

யோவ்..யூரின் பாட்டில்.. கடுப்பேத்தாதே....

ஓ... அப்படீனாதான் பிரச்சனை முடிஞ்சிருச்சே. அப்பால,  என்னா ம^%$ருக்கு வேலைய விட்டு தூக்கினானுக?.

பாட்டிலை கொண்டு வந்ததும், எங்க மேனேஜர் மூஞ்சி ..ஆங்.. நீ அடிக்கடி சொல்லுவியே.. டோமரு.. அதுமாறி ஆயிடுச்சி.    அடுத்த வாரம் $60,000-க்கு ஆள் பிடினு சொல்லிட்டாரு..

சே.. பாவம்யா நீ.. எப்படியா ரெண்டு வாரத்தில இவ்வளவு $-க்கு ஆள் பிடிப்பது?. ஓ.. அதான் வெறுப்பாயி வெளிய வந்துட்டியா?.

வெண்ணை.. கொஞ்ச நேரம் மூடிக்கிட்டு, நான் சொல்றதை கேட்குறியா?.
அந்தாளு சொன்னமாறி போய், அடுத்த தடவை, $100,000-க்கு ஆள் புடிச்சேன்.ஆனாலும் தொரத்திவிட்டுட்டானுக..

இரு..இரு..நீ என்ன தப்பு பண்ணியிருக்கேனு நானே கண்டுபிடிக்கிறேன்.  $50K-க்கே யூரின் வேணும்னு சொன்னாங்க. $60K-க்கு மேலேனா, ‘மோஷன் சாம்பிள்’ வேணுமுனு, உன்னிய தொரத்திவிட்டிருப்பானுக.. நீ மூஞ்சிய காட்டிட்டு, ‘ என்னைய பார்த்தா.. அவருமாறியா தெரியுதுனு’ மேனேஜர் மூஞ்சில பீச்சாங்கைய வெச்சிருப்பே....... சரியா?

போய்யா வென்று.  ’சண்டைக்கு போய், சண்டைக்கு போய் , வரவர சாக்கடை ஆயிட்டிருக்கே.’  விசயம் என்னான,   எல்லா ம%$^#ருக்கும் அதே யூரின் சாம்பிளாம். அதையும் தெளிவா விசாரிச்சுட்டேன்.  ஆபீஸ்க்கு எடுத்துட்டு போயி, அவரு டேபிள்ல வைச்சதும், காச் மூச்-னு கத்திக்கிட்டு செக்யூரிட்டிய கூப்பிட்டு வெளிய தள்ளீட்டாங்க.

ஏன்னாய்ய சொல்றே.. வேலைய கரீக்ட்டா செஞ்சாலும், கழுத்தை பிடிச்சு வெளிய தள்ளுவானுகளா. சே. வரவர கலிகாலம் ஆயிடுச்சு..
நீயிம் ஒருவேளை, அவரு வாயில .... இரு..இரு.. தப்பா புரிஞ்சுக்காதே. அவரு வாயில விழுந்துட்டியானு கேட்கவந்தேன்.

என்ன எளவுயா சொல்றே.. யாரு வாயில.. யாரு விழுந்தா?- சின்ராசு

விடு...விடு.. இந்தா டீ வந்திருச்சு.. சூடா சாப்பிடு.


மன்னாரு.. தங்கபாலு கணக்குல எழுதி வெச்சுக்க.. அப்பால வந்து நம்ம ஜீ செட்டில பன்ணுவாரு..   நீ வா சின்ராசு.


அது யாருயா புதுசா ஜீ?...


’நம்ம வருங்கால பிரதமர், இந்தியாவின் விடிவெள்ளி,  ராகுல்ஜீ’ தான்




அவரு, இந்த மாறி பிரச்சனைனா, லுங்கிய கட்டிக்கிட்டு, கேமரா எடுத்துகிட்டு ஓடி வருவாரு...





டிஸ்கி 1..
.
பதிலே சொல்லாம, ஷட்டரை போட, நான் என்ன அவரா?
.
எதுக்கு வேலைய விட்டு தூக்கினானுகளா?.
.
யோவ்... அவன் கடைசியா பிடிச்ச பாலிஸி, ”குரூப் பாலிஸி”யாம்..
அந்த நாதாரி,  எல்லோருடையதையும், ஒண்ணா , ஒரே பக்கெட்ல பிடிச்சுட்டு வந்து,   மானேஜர் டேபிள்ல வெச்சா???????
.
.
.

டிஸ்கி 2..
.
//  பதிலே சொல்லாம, ஷட்டரை போட, நான் என்ன அவரா?  //


“அண்ணா.. நீங்கள் அவரா(?) எனக்குறிப்பிடுவது, நார்வே பதிவரைத்தானே”   என்று வரும் கமென்ஸ்கள்  ,  மட்டறுக்கப்படும்.
.
.
.