அம்மணி.. வணக்கம்.. நாந்தான்..அட..என்னத் தெரியலையா மாதாஜீ. I am குவாட்டர் கோவிந்தன். I am always ஸ்டெடி..
என்னடா திடீர்னு கடிதாசி எழுதரானேனு, மனசுல தோணுமே.........தோணனும்....
நமக்கு பெருசா புடுங்கிறமாறி, விசயம் ஒண்ணுமில்லை. அடிச்சு பார்த்தேன்.... ஊகூம்... ஏறலே.
கலப்படம் பண்ணி சரக்கு விற்றா, கட்டையா வேகும்?.
சை.. என்னவோ சொல்லவந்துட்டு என்னத்தவோ ஒளரிக்கிட்டு இருக்கேன்.
மன்னிச்சுடுங்க.. மகராசனை பெத்த மகராசியம்மா... அப்புறம்...எனக்கும் பெரிசா வேலை மயி%^$ரில்ல.. உங்களுக்கும் .. ஹி..ஹி
அதுவுமில்லாம, உங்களை கேள்வி கேட்கும் உரிமை எனக்கு இல்லாம , யாருக்கு இருக்கு?. ஒரு விதத்தில நீங்களும் நானும் உறவுதான்.
எப்படீனா... நம்ம ஜார்ஜ் புஷ், அதுதான்....அமெரிக்காகாரன், ”பெட்ரோல் இருக்குனு தெரிஞ்சா, படைய அனுப்புவானே...... அவரு, நம்ம பெரியப்பன் வகையாறா ஆகுது. உங்க மகள் கண்ணாலம் கட்டினது, ஏதோ ஜார்ஜ் புஷ்சாமே?. பார்த்தீங்களா. வெளிய சொல்லாம மறைச்சுட்டீங்க. எனக்கு எப்படி தெரியமுனு கேக்குறீங்களா?.
சரி..சரி.. சொல்லிடரேன். அன்னைக்கு சின்ராசு தண்ணிய போட்டுட்டு உளறிட்டான். இலாங்காட்டி இந்த உறவுமுறை தெரியாத...’படிக்காத
பன்னாடை’யாவே இந்த கட்டை வெந்திருக்கும்.
ஏம்மா மகராசி. இதை வெளிய சொல்லாம மனசுக்குள்ள வைத்திருக்க, இது என்ன, ”தமிழன போட்டுத்தள்ள, ரகசியமா அனுப்புனீங்களே. அதுமாறி, ராணுவ ரகசியமா?.. போங்கம்மா...எனக்கு உங்கமேல கோவம்.
கடைசியா, நாலு பேரு வேணும். மைண்ட்-ல வெச்சுக்குங்க.
அட. பாருங்க.. எதுக்கு உங்க மூஞ்சி தக்காளி மாறி சிவக்குது? என்ன சொல்லிப்புட்டேன் அம்மணி? எனக்கு குவாட்டர் உள்ள போனா, கண்ட கழிச்சடையெல்லாம் வெளிய வருமுனு தெரியாதா?.
சரி.. விசயத்துக்கு வருவோம். இந்த காமன்வெல்த் விளையாட்டுக்கு முன்னாடியே, பலபேரு ஆடிட்டாங்கனு பதிவுலகம் மூலமா கேள்விப்பட்டேன். நம்ம சுக்கு அண்ணாச்சி கூட மனசு வெறுத்துப்போயி கண்டபடி துப்பிட்டாரு.. ’நல்லவங்களுடைய பாவம் , நாலு அண்டர்வேரை கழட்டுவதற்க்கு சமம்’-னு , பெரியவங்க சொல்லுவாங்க..
அதனால மனசு கேட்காம, கை நடுங்க நடுங்க கடுதாசி எழுதறேன் தாயி.
மனச குழப்பிக்காதே..
பாவம். வெளிநாட்டிலிருந்து வந்து, எங்களுக்காக, வியர்வை சிந்த உழைக்கிறீங்களே. அதை யாராவது பாராட்டுரானுகளா?.
நம்ம மகன் வேற, வெளி நாட்டு பிகரை டாவடிக்கிறது விட்டுட்டு, நாடே கதினு, வெயில்ல சுத்திகிட்டு இருக்கு. அதையும் யாரும் கண்டுக்கல.
என்னா உலகமையா இது.
ஆங்.. சொல்லமறந்துட்டேனே. இங்க பலபேரு, அவனுகதான், ’அடுத்த முதல்வரு’னு, குசுகுசுனு பேசிக்கிட்டு இருக்கானுகோ.
முக்கியமா, கண்ணாடி போட்டுக்கிட்டு, உங்க கட்சில இருக்காரே. அவரு பெத்த மகராசந்தான். அதனாலே, எதுக்கும் விசயத்தை உங்க காதில போட்டு வைக்கிறேன். யாராவது, நம்ம சொந்தக்காரனுக, இத்தாலில சும்மா சுற்றிக்கிட்டு இருந்தா அனுப்பி வையுங்க. அடுத்த முதல்வராக்கி காட்டுறோம். ( மறக்காம, சிவப்பா இருக்கும் ஆளை அனுப்பி வையுங்க தாயி. கண்ண மூடிட்டு குத்துவானுக இங்க.. அப்புறம் தனி மெஜாரிட்டிதான்... தனி ராஜாங்கம்தான்..)
மக்கள் சொல்றானுக.. காமன்வெல்த் விழாவை சரியா திட்டமிடாததால், இந்தியனுக்கு தலைகுனிவாம்.. எனக்கு எதுல சிரிக்கனுமுனு தெரியலே..ஒரு நிமிசம் இருங்க..
.
.
.
பர்ர்ர்ர்ர்.ர்ர்ர்ர்ர்.ர்ர்ர்ர்ர்ர்.
.
.
.
அப்பாடா.. நல்ல வேளை, நான் விட்டதால, எவனும் வரலே. அப்பப்பா..
இதே நீங்க பன்ணியிருந்தா?.. நினைச்சு பார்க்கவே பயமாயிருக்கு....தமிழ்நாட்டில உள்ள , அடுத்த முதல்வர்கள் எல்லாம் ( தங்கபாலு, இளங்கோவன், வாசன், ஆங்.. இளைஞரணி தலைவர்.. பேரு மறந்துடுச்சு..சரி விடுங்க.. பேரா முக்கியம்?), மீன் வலைய எடுத்துக்கிட்டு, கு%$சு பிடிக்க வந்திருப்பானுக.. பன்னாடை பயலுக.
அதனாலே.. கடைசியா, சொந்தக்காரங்கற முறையில சொல்லிக்கிறேன். இந்தியா அயல்நாடு... இத்தாலி தாய் நாடு..
நமக்கு அதுதான் முக்கியம்.. இங்க நாம பண்ணுவது சும்மா டமாசுக்கு. மகன், மகள், பேத்தி பேரன் எல்லார்கிட்டையும் சொல்லிவையுங்க.
சரி..சரி இறங்கிடுச்சு...வரட்டுமா தாயி..அடுத்த பேட்டில்(Bottle or Battle.. எதோ ஒண்ணு...)-ல சந்திப்போம்..
.
.
.
