Pages

Thursday, July 29, 2010

பதிவுலகில் நான் ஒரு பன்னா @#$..........!!!

.
.
.
தலைப்பை பார்த்து மிரளவேண்டாம்..
பதிவுலகில்,  நான் பன்னாட்டு சிங்கம் என்று எழுத வந்தது.. இங்க் தீர்ந்தபடியால்.. பாதியில் தொங்கிக்கொண்டிருக்கிறது...
என்னையும்(?).. இந்த தொடருக்கு..எழுத அழைத்த அண்ணன்  “முகிலனின் பிதற்றல்கள்”  அவர்களுக்கு நன்றி கூறி...

யாருப்பா.. மைக் பிடிங்கிறது......சரி..சரி.....நேரா கேள்விக்குப்போயிடலாம்......



1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?
பட்டா..பட்டி ( படிக்கும்போது, மறக்காம  ”கலர்ல” படிங்க பாஸ்..)


2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில்
பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

உண்மையான பெயரா....சே..சே....      என்ன பாஸ்..இப்படி ஒரு கேள்விய கேட்டுப்புட்டீங்க?.        நான் ஜெர்மனியில பிறந்தபோது..சரி..சரி..விடுங்க..

தீபாவளி சமயம், நானும் நண்பரும், துணி எடுக்க காந்திபுரம்  போயிருந்தோம்.  சுமார் இரண்டு மணி நேரத்தேடலுக்குப் பிறகு, அழகான,  அருமையான ஒரு சட்டைதுணியப் பார்த்தேன்..  அதுல இரண்டுமீட்டர் கிழிக்கச்சொல்ல, அந்த சேல்ஸ் கேர்ள் பார்த்த  பார்வையில...

அப்பப்பா...வேற யாராவது இருந்தா..வெக்கமில்லாம  அரசியல் கட்சில சேர்ந்திருப்பானுக.. நான் மானஸ்தன் ஆச்சே.     கண்ணாடி எடுத்து மூஞ்சியில மாட்டிக்கிட்டு,  கடைய விட்டு வெளிய  வந்துட்டேன்.

அது பேரு பட்டாபட்டியாம்.....கீழ போடறதாம்..பாக்கெட் வைத்தோ, வைக்காமலோ தைத்துப் போட்டுக்கலாமாம்... அவ்வளவு ’ஆம்’மிருக்காம்... அதிலிருந்து  இனிமேல் பட்டாபட்டில சட்டை போடுவதில்லைனு குலதெயவம் மேல சத்தியம்  பண்ணிட்டேன்.

அதனால, பழச மறக்ககூடாதுனு ...ஹி..ஹி..பேர மட்டும் யூஸ் பண்ணிக்கிட்டேன்.

3 )நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.
என்ன பாஸ்?.. விரதம் இருந்தா... காலடி எடுத்து வைப்பாங்க.. அப்படிக்கா போனவருஷம் ஊருக்குப்போயிருந்தபோது, பிரதர் கேட்டாரு.. ”ஏண்டா..யாரைப்பார்த்தாலும்  Blog Blog-னு  சொல்லிக்கிட்டு இருக்காங்க.   நீதான் வாயைத்திறந்தா, நிறுத்தாம ஒரு மணி நேரம் பேசுவியே. ஏதாவது  எழுது”னு புத்திமதி சொன்னாரு..அதனால கூகிளாண்டவர்கிட்ட கேட்டு நானும்   ஆரம்பிச்சுட்டேன்.


4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம்  செய்தீர்கள்?
இனிதான் ஏதாவது செய்யனும்.  நித்தியானந்த்தை வச்சு யாகம் பண்ணினா,
பிச்சுக்க சான்ஸ் இருக்கா?-னு பார்க்கனும் தல..
இல்ல.... சாணியக்கூப்பிட்டு, வாசல் தெளிக்கவும் ஐடியா வெச்சிருக்கேன்.


5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து 
கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை
என்றால் ஏன்?

தோணினதை எழுதுவேன். சொந்த விஷயம்?.. இதுல ஏதாவது உள்குத்து
இருக்கா பாஸ்..   ஏன்னா, கலைஞர் ”உடன்பிறப்பே”னு சொல்வாரு..
அம்மா, ”ரத்ததின் ரத்தமே”னு சொல்லும்..   அப்ப,  நான் எழுதுவது சத்தியமா சொந்தவிசமா..சாரி   பாஸ்..சொந்தவிசயமாத்தான் இருக்கனும். ஹி..ஹி


6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது
பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

நான் எழுதுவது பொழுதுபோக்குக்குத்தான். 
ஆங்....சம்பாரிப்பது?.. இதையும் முயற்சி செய்தேன்.. ஆனா யாரும் வாங்க
வரலே..   ( வெளியூர்காரன் ப்ளாகை..ப்ளாட் போட்டு விற்க முயற்சிசெய்தது மிஸ்  ஆயி....சே..அந்த கொடுமைய விடுங்க பாஸ்...  எல்லா பயலும் விவரமாயிட்டானுக..)


7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில்
எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

ஒண்ணுதான் பாஸ்..  இதுக்கே கண் பிதுங்குது...
மேலும், நான் சட்டப்படி நடப்பவன்.. ஒருவனுக்கு ஒருத்தி...ஹி..ஹி
( இதில் உள்குத்து எதுவுமில்லை என தமிழக அரசின் மேல் ஆணையாக கூறுகிறேன்..)

8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை  ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?
கோபமா?.. அப்பப்போ வரும்..அப்புறம்,    காணாம போயிடும்..  ( உப்பை குறைக்கனும் பாஸ்.)

9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு
பாராட்டிய மனிதர் யார்?

பலபேர் பாராட்டியிருக்காங்க...ஓகே..ஓகே.. ரைட்டு...
பலபேரு தேடிக்கிட்டு இருக்காங்க பாஸ்...ஒத்துக்கிடறேன்.....


10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு
தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

ஏதோ.பொழப்புக்கு பொட்டி தட்டிட்டு இருக்கேன் சிங்கைல..
சீக்கிரமா(?), இந்தியா வந்து செட்டில் ஆகிடனுமுனு , கடந்த 15 வருடமா முயற்சிபண்ணிக்கிட்டு இருக்கேன்..”முயற்சியுடையார் இகழ்ச்சி அடையார்..”

மேலும் பொழுதுபோக்குக்கு ஆரம்பித்த, பட்டாபட்டி ப்ளாக்கை,
உசுப்பேற்றி, உசுப்பேற்றி...   ”போஸ்மார்ட்டம் கிரவுண்ட்” ஆகிய பெருமை , நல்ல நண்பர்களையே(?) சேரும்..

அந்த நல்லவர்களை,  இத்தொடரைத்  தொடர அழைக்கிறேன்

கீழே நான் கிறுக்கியிருப்பது.....அந்த நல்ல நண்பர்களுக்காக..

பேரைச்சொல்லி உங்களை இழுத்துவிட விரும்பவில்லை...
மனச்சாட்சிப்படி, நீங்களா ஒத்துக்கிட்டு....
ஒழுக்கமா..
உண்மையா..
மெய்யா..
விவரமா..
நீங்களா எழுதினா....... நல்லாயிருக்கும்..
இல்ல ஆயுத முனையில,  எழுதவைக்கவேண்டி வரும் ...சொல்லிப்புட்டேன்  மக்கா...
.
.
.