நம்ம நாட்டு விமானநிலையங்களைப் பற்றி உங்களின் கருத்து என்ன?..
வெளிநாடு சென்று வரும் பயணிகளின் புலம்பல்களை நீங்கள் கேள்விப்பட்டு இருக்கலாம். அடிக்கடி அவர்களின் பேக்கேஜிலிருந்து கைத்தொலைபேசி, மடிக்கணனி, வாசனைத்ததிரவியங்கள், மதுவகைகள் மாயமாக மறைந்துவிடும். அதை அங்குள்ள ஆபிஸரிடம் புகாராக அளித்தால், நீங்கள் குற்றவாளிக்கூண்டில் ஏற்றப்பட்டு உங்கள் பட்டாபட்டி உருவப்படும். சில சமயம் நிர்வாணமாகத்தான் வெளியே வர வேண்டியிருக்கும்.
இது ஒரு சாதாரண நிகழ்வுதான். பிரச்சனைகளை கண்டு ஒதுங்குவதும் , துடைத்துபோட்டுவிட்டு போவதும், ஒவ்வொரு சராசரி இந்தியனும் செய்வதுதான். அய்யா.. நானும் இப்படித்தான் நினைத்திருந்தேன் போனவாரம் வரை.
தவறு மக்களே தவறு...
இந்தியர்..வயது 40..பாம்பே ரயிலில் பயணம் செய்யும் சராசரி முகம்..அவருக்கு போன வாரம் பிறந்தநாள். அதை இங்கு கொண்டாடுவதைவிட, ஐரோப்பியாவில் கொண்டாடினால் நன்றாக் இருக்கும் என்ற அவரது தாயாரின் எண்ணம். ’தாய் சொல்லை தட்டாத தனயனா’ன அவர், அன்னையின் விருப்படி ஐரோப்பியா சென்றுவிட்டார்.
வாரம் கழிந்தது. கடமை அழைத்தது.. கண்ணியமாக திரும்பிவிட்டார்..
அந்தோ பரிதாபம். டெல்லி ஏர்போர்டில் அவரது கைத்தொலைபேசி காணாமல் போய்விட்டது. Special Protection Group (SPG) அதிகாரிகளிடம் சென்றார். விவரங்களை சொன்னார். போன் விலை ரூ 15,000.
செய்திகள் பறந்தன. விமான நிலயத்தில் உள்ள காவல்துறை முடுக்கிவிடப்பட்டது. கண்டுபிடிக்கமுடியவில்லை. 2 நாட்கள்.. 300 போலீஸார்.. துப்பறியும் நாய்கள்..விமான நிலையம் அலம்பப்பட்டு, பதிவு செய்யப்பட்ட காமிராக்கள் மூலம், குற்றவாளி இனம் காணப்பட்டார்.. வேறுயாருமில்லை பாஸ்..விமான நிலையத்தில், பொருடகளை ஏற்றி இறக்கும் தொழிலாளி.
கடைசியாக, அந்த தொழிலாளியின் வீட்டுக்கு காவல்படை விரைகிறது. தொலைபேசியை கண்டுபிடிக்கப்படுகிறது. இரண்டு நாட்களில், அது உரியவரிடம் சேர்ப்பிக்கப்படுகிறது..கண்டுபிடிக்க ஆன செலவு பல லட்சங்கள் மட்டுமே.
இவ்வளவு திறமைமிக்கவர்களாகவும், விரைந்து குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் காவலர்களை/அதிகாரிகளையும் பார்த்து.... நாம் பொருமிகிறோம்... நகைக்கிறோம்..நையாண்டி செய்கின்றோம்.. இதுதான் இந்தியர்களின் குணமா?..
காண்போர் காறித்துப்பும் நிலையை அடையும்முன், ஒரு இந்தியனாக, தமிழனாக என்னுடைய கருத்தை பதிவு செய்வது என் கடமையாகும்..
- அடுத்தவரை குறை கூறுவதை நிறுத்துங்கள்..
- நாட்டை வல்லரசாக, முட்டுக்கட்டையாக இருக்காதீர்..
- இந்தியனாக உங்கள் கடமையை செய்யுங்கள்..
கடைசியாக.....
” திருந்துங்கள்..இல்லை திருத்தப்படுவீர்கள்... “
நன்றி...
.
.
.
.
டிஸ்கி..
அட பார்றா.. அவரு யாருனு கடைசி வரை சொல்லாம விட்டு..என்னுடைய கடமையிலிருந்து நழுவப்பார்த்தேனே...|
|
|
.
.
அவரு பேரு ” ராகுல் காந்தியாம்” சார்..
.
.
வரட்டா...
.
.
.

