வெற்றி..வெற்றி..
அண்ணன் ரெட்டையின் வேண்டுகோளுக்கு இணங்க, தேர்தல் நாளை , ஏப்ரல் 10-லிருந்து, மார்ச் 2 தேதிக்கு மாற்றி , அதை வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம்..
சில சந்தேகபிராணிகள் கேட்கலாம், ' என்ன அவசரம் என்று? '..
உங்களுக்காக....ஒரு சில வார்த்தைகள்...
இது வேகமான உலகம்.. இந்த யுகத்தில் ஓரிடத்தில் நின்று கொண்டு
கண்ணீர் விட்டு , கதறியழுதால், பின்னே வரும் சமூகம், தன் தங்கக் கால்களால் உங்களை மிதித்துவிட்டு செல்ல வாய்ப்புண்டு...
உதாரணத்துக்கு ,
அவசரமாக , உங்களுக்கு ரூ 10,000 தேவைப்படுகிறது....உங்கள் நண்பர் ,
100 ரூ நோட்டுக்கள் அடங்கிய , 1 கட்டை தருகிறார்..
நன்றி சொல்லிய பின் , அதை முழுவதும் எண்ணினால் ,
உங்கள் நண்பர் , உங்களைப்பற்றி என்ன நினைப்பார்...?
அந்தப் பணத்தில, 1 முதல் 20 வரை எண்ணுங்கள்..
சரியாக இருந்தால்........எதற்காக நேரத்தை வீணடித்து 100 வரை எண்ண வேண்டும்?
புரிந்திருக்கும் என நினைக்கிறேன்...
சரி.. நமது ஆராய்சியை தொடர்வோம்..
இதுவரை வாக்களித்தவர்கள் 119 பேர்....இவற்றைப்பற்றி ஆராய்ந்ததில் ,
"நீ கிழிச்சது போதும் போய்யா..." ( 9 பேர் )
இது என்மீது கொண்டது காண்டா.. இல்லை அன்பா எனப் புரியாததால்,
இவர்களை நேர்காணல் காண , வெளியூரின் ராணுவம் அனுப்பபடுகிறது...
"பொழப்ப போயி பாருமையா.." ( 8 பேர் )
எனது பாச மலர்கள் சிலர், என்மீது கொண்ட அக்கறையினால் "பொழப்ப போயி பாருமையா.." எனக் ஓட்டளித்துள்ளனர்.. எனவே , அவர்களின் பாசத்தை மெச்சி , மங்குனி மற்றும் ஜெய்லானி அவர்களால், இந்த 8 பேருக்கும், உறுப்பினர் அட்டை வழங்கப்படும் என்பதை இந்த தேரத்தில் சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்..
"என்னமோ பண்ணித் தொலை..." ( 11 பேர் )
இவர்கள் படித்தவர்களாகத்தான் இருப்பார்கள் என்பதில் எள் அளவும் சந்தேகமில்லை.. இவர்களை நினைக்கும் போது, "படித்தவன் நாட்டை கெடுத்தான்.. படிக்காதவன் வீட்டை கெடுத்தான் "
என்று பிரான்ஸ் நாட்டு முத்து சொன்ன , முத்தான ( பிரெஞ்ச் முத்தமில்லை.... ) வரிகள்தான் மனதில் தோன்றுகிறது..
"எழுதித்தொலை..எங்களுக்கு வேற வழி..." ( 99 பேர் )
தன்மானச்சிங்கங்கள் , வருங்காலத்தூண்கள்..
இவர்களை பற்றி சொல்லும் போது ,
கண்களில் கண்ணீர் வழிந்தோடுகிறது..
கைகள் நடுங்குகிறது..
நாக்கு புரள மறுக்கிறது..
இதயம் வேகமாகத் துடிக்கிறது..
இவர்களுக்காக நான் சொல்லிக்கொள்வது ஒன்று மட்டுமே..
நன்றி...
மேலும், பிரகாஸ் (எ) சாமக்கோடாங்கி , தேர்தலில் ஊழல் நடந்திருக்குமோ
என ஐயம் கொண்டு என்னை தொடர்பு கொண்டார்........
சந்தேகத்தை நிவர்த்தி செய்யும்பொருட்டு , கட்சியின் சார்பாக ரூ 1,00,000 அனுப்பபட்டுவிட்டது...
பெருவாரியான வாசகர்களின் வேண்டுகோள்படி,
கிழிப்பது தொடரும்.... என்பதை இந்த நேரத்தில் சொல்லிக்கொண்டு, வாக்களித்த நண்பர்களுக்கு என் நன்றியை கூறிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன்...
.
.
.