Pages

Wednesday, January 5, 2011

நேர் நேர் தேமா!!!!

.
.
.
சீக்கிரம் தேர்தல் வரப்போகிறது. கட்சி தலைமைகளின் ஒரே கு(வெ)றி.... "அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிப்போம்" என்பதே. இதில் பிரச்சனைக்குறிய உயிரினங்கள்(?) யார் என நினக்கிறீர்கள்?


உங்கள் மனத்தில், 'மக்கள்' என்ற எண்ணம் தோன்றினால்...... ப்ளீஸ்.. ஒரு நிமிடம் கண்களை இறுக்க மூடிக்கொண்டு, கைகளால், உங்களின் ஒரே ஒரு பரம்பரை சொத்தான, கோமணத்தை இறுக்க பற்றிக்கொண்டு வெளியே போய்விடுங்கள், அடுத்த பதிவில் நாம் சந்திக்கலாம். ( நானும் எங்கேயும் போயிடமாட்டேன்.. ஹி..ஹி நீங்களும்தான்.. அப்புறம் என்ன கவலை பிரதர்?..)



மீதி உயிரினங்கள்(!)... வாங்க சார்.. நாம அலசுவோம். உஷ்.. இப்ப ஒரு குரூப் வெளிய போனதே!.. தேசப்பற்றே இல்லாத பன்னாடை பயலுக சார்... கட்சி நடத்துவது என்ன சாதாரணமா?. என்னமோ எப்ப பார்த்தாலும், 'மக்கள், மயிரு, மட்டை'னு கூவிக்கிட்டு இருக்கானுக.. இந்த மக்களுக்குத்தான் தங்களின் பொன்னான, மூளையை கசக்கி,

  • 1 ரூபாய்க்கு அரிசி,
  • அரசின் சலுகைவிலையில் சாராயம். அதாங்க.. டாஸ்மார்க்,
  • இலவச டீவீ,
  • அதுக்கு முன்னாடி செருப்பு,
  • பல்லு விளக்க பிரஸ்..
  • ஆங்.. கோயில்ல இலவச உண்டக்கட்டி,
  • வெள்ளிக்கிழமை, பெண்கள் தலைக்கு குளித்துவர ஆபீஸ் நேர மாற்றம்....
  • கிராமிய வேலைவாய்ப்புத்திட்டம். (கைதாங்கலா நடந்து வந்தா போதும். தினக்கூலி நிச்சயம்.என்னா அருமையான திட்டம்!!)
போன்ற அரிய திட்டங்களை கொண்டு வந்தாலும், திருப்திப்படமாட்டார்கள்.

எல்லாப்பயலும், பழசை மறந்துட்டானுக தலை. நன்றி கெட்ட நாதாரிக....


'மக்கள் தொண்டே மகேசன் தொண்டு'னு , அவரவர் குழந்தைகுட்டியை பார்க்ககூட நேரமில்லாமல், மக்களுக்கு உழைக்கும் கட்சிக்காரர்களின் புகழை, நாம் பாடாமல் எவர் பாடுவார்?. என்ன சார்?. நான் சொல்லுவது சரிதானே.

சரி..இப்ப யார் யார் , எப்படினு பார்க்கலாம்.



கலைஞர்.

'மக்கள்தான் குடும்பம், குடும்பம்தான் மக்கள்' என்ற உயரிய கொள்கைகொண்ட ப(பு)ழுத்த பழம்.. எவ்வளவு வருட அரசியல் அனுபவங்கள், சிறைகள், சிந்தனைகள், திரைப்படங்கள், பாராட்டு நிகழ்சிகள். பாவம் நிற்ககூட(!) நேரமில்லாமல்.. நினச்சா எனக்கே கலங்குது பாஸ்.

விரைவில் பொதுக்குழு கூட்டப்போகிறாராம். உம்..பார்ப்போம். 'எந்த மக்களின் பேரன்' அரசியலுக்கு வரப்போகிறாரோ!... காரமடை ஜோசியனுக்கு மட்டும்தான் தெரியும்.

அதனால , அவரை அடுத்த முதல்வர் ஆக்குவது நம் கைகளில்தான் உள்ளது..



பராசக்தி

'அம்மா' என்று செல்லமாக, ரத்தங்களால் அழைக்கப்படும் கான்வென்ட் மாமி. அந்தகால வெற்றிப்பட நடிகை. தமிழகத்தின் தலைவிதி. மக்களின் விடிவெள்ளி, ஆடிட்டர்களை செருப்பில் அடிக்கும் பத்ரகாளி. கொடைநாட்டு கோமகள். உடன்பிறந்த, பிறக்கப்போகும் பெண்களின் காவல் தெய்வம். அப்ப்ப்பா எவ்வளவு பட்டங்கள்?.

பாவம்..அடிக்கடி ஓய்வு எடுத்தாலும், மக்களுக்கு ஒரு பிரச்சனைனா, வீதிக்கு வந்து போராடும் மிருககுணம் கொண்ட மூர்க்கமான கோபம் உள்ளவர். ( நீங்கவேணா, அவர் காலில் விழாமல், உங்கள் காரியத்தை சாதித்துப்பாருங்க.. அப்ப புரியும் அந்த வலி..)

ஏன் அடிக்கடி கொடை நாடு போறாங்க?. இது, சில பன்னாடைகள் கேட்கும் கேள்வி..

பாவம்... என்னதான் பண்ணுவாங்க?.. எல்லோரும் கால்ல விழுந்து, ஏதாவது விழும் என எழாமல் இருப்பதால், அவருக்கு கால்வலி. அதனால..., கொடை நாட்டுக்கு போறாங்க..

தற்போதய முதல்வருக்கு , இவர் மாற்றா?.. இல்லை.. இவருக்கு, அவர் மாற்றா?.. சே..சே. அப்படி எல்லாம் பிரிச்சு பேசக்கூடாது. கோயில்ல அன்னதானம் பண்ணி, மக்களுக்கு புண்ணியம் சேர்த்த வீராங்கனை இவர்..

என்ன.. அங்கே ஓவரா நாறுச்சுனா, இங்கே, விட்டுவிட்டு நாறும்.. மற்றபடி எல்லோரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளாக, மக்களுக்கு தொண்டு செய்பவர்கள்தான்..

அதனாலே.. அதனால்.. இவரையும் அடுத்த முதல்வராக்கலாம். ( ஆனா..கால்ல விழுந்தா, தலை தூக்கிப்பார்க்க்கூடாது ..சொல்லீட்டேன்..)



கேப்டன்.

'கேப்டன்' என்று செல்லமாக, மக்களால் அழைக்கப்படும் அடுத்த முதல்வர்(?). அவரும் முதல்வராகி, 'பாகிஸ்தானை தமிழ்நாட்டுடன் சேர்க்க', அரிதாரம் பூச ஆரம்பித்துவிட்டார். ( ஆமாய்யா.. அவர் முகத்துக்குத்தான்.. மக்களுக்கு கரி போதும்.). பெண்களை எப்போதும் மதிப்பார். பாருங்களேன்.. அவரது மனைவி, மச்சான் நல்லா இருந்தா, மக்களும் நல்லா இருப்பாங்கனு புரிஞ்சு வைத்துள்ளார்.

அவரு மட்டும் முதல்வராகட்டும்.. மச்சான் சதீஸ்கிட்ட சொல்லி, விருதகிரிய தேசியப்படமா அறிவிக்க சொல்லிடலாம்.. தேசிப்பறவை மயில், தேசப்படம் விருதகிரி....ஹி..ஹி நல்லாயிருக்குல்ல..

அதனாலே.. இவரையும் அடுத்த முதல்வராக்கி பாகிஷ்தானை தமிழ்நாட்டோடு இணய உதவ.. உங்கள் பொன்னான வாக்கை, இவருக்கோ, அல்லது அவரது துணவியாருக்கோ, அல்லது மச்சான் சதீஸ்க்கோ போடுங்க.. போடுங்க. போட்டுக்கிட்டே இருங்க.



'அய்யா'.

இவர் பெயர் சொன்னால், சாலை ஓர மரங்கள், அதுவாக தற்கொலை செய்துகொள்ளும். 'பிள்ளைய பெற்றா கண்ணீரு'னு பாவம், வயதான காலத்தில், மகனின் வேலை வாய்புக்காக, கடைகடையா ஏறி இறங்கிட்டு இருக்காரு.. யாரும் கொடுக்க தயாராக இல்லை.

அவரின் மனசஞ்சலத்தைப்போக்க, அவரை முதல்வராக்கும் பொறுப்பு நமக்கு உள்ளது.








சிற்றரசர்கள்.

இந்த லிஸ்டில், மீதியுள்ள நல்ல உள்ளங்களை பட்டியலிட்டுக்கொள்ளலாம். பாவம்.. அவர்களும் மக்களுக்காக உழைக்க , ஓ.கே..ஓ.கே.( தங்கபாலு அண்ணே.. இதில் உங்கபேரும் இருக்கு..பயப்படாதீங்க..!!)



இது தலைவர்களுக்காக..

அய்யா தொரைகளே, தொரைசாணிகளே... மக்கள் துயர் துடைக்கவந்த மாசறு மாணிக்கங்களே. இப்படி பிரிச்சு, பிரிச்சு அடிச்சுக்கிட்டா, எங்க மனசு கலங்குது.. ஏன் நீங்கள் எல்லோரும் சேர்ந்து, "முதல்வர்களாக" அமரக்கூடாது. 
அந்த காட்சியை காணும் பாக்கியத்தை, இந்த மக்களுக்கு அருள்வீர்களா? ( அருள் அண்ணே.. உங்கள சொல்ல்லே.. லூஸ்ல விட்டுப்புட்டு, எப்பவும் போல, டோமர்ர்ர்ர்ர்ர்ர்ருக்கு உதவி பண்ணுங்க..ஹி..ஹி)

 

தலைவர்களுக்கு, 
இலவச திட்டங்களுக்கு,  என்னால் முடிந்த சிறு உதவி.

  • ஆண் மக்களுக்கு இலவச காண்டம்.
  • வீதிக்கு ஒரு அன்னதான முகாம்.
  • பொங்கலுக்கு, இலவச கோமணம்
  • பெண்களுக்கு, இலவச மூக்குத்தி
  • குழந்தைகளுக்கு, மூக்கு சீந்த, பழைய கட்சிக்கொடிகள்.
  • மாதம் ஒருமுறை மொட்டை அடிக்க, திருப்பதிக்கு இலவச பேருந்து. ( ஏசி வசதியுடன் )
  • பாராட்டுவிழாவில் நேரில் பார்வையிட , நமீதா மூலம் குலுக்கல் முறையில் தேர்வு.
  • முதியவர்களுக்கு, இலவச சுடுகாடு.
  • பள்ளிக்கட்ட்டங்களை, டாஸ்மார்க் கோடோனாக மாற்றகோரிக்கை.
  • கோயில்களில், அம்மாவாசை அன்று இலவச பூசை.


டிஸ்கி 0.

சார்வாள்.. யாரு முதல்வரா வந்தாலும், இந்த சிறுவனை மறந்துவிடாதீங்க.. என்னோட மச்சான், சென்னையில, சும்மா ப்ளாக் எழுதிக்கிட்டு நேரத்தை விரயம் பண்ணிக்கிட்டு இருக்கான்.

அந்த பன்னாடைக்கு, ஹோல்சேல் காண்டம் சப்ளை செய்ய அனுமதி கொடுத்தால், நானும், என் குடும்பமும், வாழ்நாள் முழுதும், உங்களை மறக்கமாட்டோம்.


( அதில், கட்சி லோகோ மற்றும் எழுச்சி வாசங்கள் எழுத, என்னுடைய பெரியப்பா மகன் இருக்கான்.. இத்துடன் சில சாம்பிள் கொடுத்துள்ளேன்.. அதனால, பிரிண்டிங் காண்ராக்ட்டை, பெரியப்பா பையனுக்கு கிடைக்க, அருள் புரியுங்கள். )


சாம்பிள் வாசகங்கள்


சூரியன் எழுகிறது...

எழுச்சிப்பயணம் இங்கே ஆரம்பம்..

இலை..தொடை..இலவசம்..



( முக்கியமாக, இந்த காண்ராக்ட் கிடைத்தால், காண்டத்தில், இலவசமாக, தலைவர்கள் படத்தை ( கலர் ) போடவும், தயாராக உள்ளோம் என்பதையும் இத்தருணத்தில் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.)


டிஸ்கி 1..

என்னடா.. பட்டாபட்டி, காங்கிரஸ் பற்றி ஒன்னுமே சொல்லலைனு பார்க்கிறீங்களா?
”.. சே..சே.. நாம் வாழும் நாடு.. அவர்கள் போட்ட பிச்சை..”.
அவர்கள் கடவுளின் அவதாரங்கள்...


நன்றி..
.
.
.