Pages

Wednesday, November 3, 2010

கல்மாடியை காப்போம்.. வாருங்கள்..

.
.
.
.
டொக்.. டொக்..
டொக்..
.
டொக்..
டொக்..டொக்..டொக்..டொக்..டொக்..
.
டொக்..

எவண்டா அவன் இந்த நேரத்தில் கதவை தட்டுவது?.  நாதாரிகளா.  மனுசனை நிம்மதியா தூங்கவிடுங்கடா.

முதலாளி, நாந்தான்...  நீங்கதான் என்னை காப்பாற்றனும். சுக்கு மாணிக்கம் அண்ணன், என்னை கிழி கிழினு  கிழிக்கிறாரு.

அடடே. அவரு நல்லமனுசனாச்சே.  அப்படியெல்லாம் பண்ணமாட்டாருயா. காலங்கார்த்தால அவதூறூ சொன்னா, எனக்கு கைகால் நடுங்குமேய்யா.

இல்லேண்ணெ. நான் ஊழல் பண்றேனு பதிவு எழுதி, போனமாதம் என் மானத்தை கப்பலேத்திட்டார். சரினு  என்னோட வேலைய பார்த்துக்கிட்டு இருந்தேன், நேற்று திரும்பவும் சீண்டராருண்ணே.

ஓ. அதுவா மேட்டரு. ஆமா நீ என்னமோ ஊழல் பண்ணி, பேரை  கெடுத்துட்டேனு சொன்னாரு.?

இல்லேண்ணே. நாட்டுக்காக , 5 கோடி சேமிச்சதை யாரோ தப்பா அவருகிட்ட சொல்லீட்டாங்க.

அடங்கோ%$^#த்தா. பண்றதை பண்ணீட்டு இப்ப நொண்ண நியாயம் பேசறீயா?.
வரவர டோமர் மாறியே ஆரம்பிச்சுட்டீங்கப்பா. சரி. என்ன ம^&$யிரு, பண்ணி 5 கோடிய சேமிச்சே?.

அண்ணே. அவனுக Quotation கொடுத்தது 117கோடின்ணே.... நான், ’ இந்தியா ஏழைநாடு. சோற்றுக்கே வழியில்லாம ரொம்பபேர் இருக்கோம். அதனால கொஞ்சம் குறைச்சுகொடுங்க’-னு வாதாடி 112 கோடிக்கு பேரம்  முடிச்சேன். அண்ணே. அண்ணே.. பாருங்கண்ணே. யாரோ காறித்துப்பறாங்க.

அட விடுய்யா.. நம்ம சகபதிவர்கள் யாராவது இருக்கும். ’பேரு சொல்லாம , கதை சொல்லிக்கிட்டு  இருக்கான் பாரு’-னு துப்பியிருப்பானுக.


[ இவரு பேரு கல்மாடி. சமீபத்தில நடந்த காமன்வெல்த் போட்டிகளில் ஊழல் செய்ததாக, அவர்மீது அவதூறு  கூறியுள்ளதால், மனமுடைந்து, இங்கு வந்துள்ளார்.. ]


யோவ்.. இனிமேல துப்பக்கூடாது சொல்லீட்டேன். . நீ சொல்லு களவாடி..






அண்ணே. கல்மாடிண்ணே..

ஆங்.. ஆமா.. கல்மாடி. ஆமா, இந்த பிரச்சனைக்கு, என்னைய எதுக்குய்யா பார்க்கவந்தே?.

ஹி..ஹி நீங்க எந்திரன் பார்த்தீங்கள்ல. அதனால, நீங்களும் நானும் சொந்தகாராரு ஆயிட்டோம்.

ஏய்..ங்கொய்யாலே. படம் பார்த்தா, சொந்தக்காரருனு சன் டீவிக்காரனுக சொன்னானுகளா?.

இல்லண்ணே.  சோனியா அம்மாவுக்கு என்னை பிடிக்கும். சோனியா அம்மாவும் அமிதாப் அண்ணனும் குடும்ப நண்பர்கள். ஒரு வீட்டுல சாப்பிட்டுட்டு, அடுத்த வீட்டில கைகழுவுவாங்க.  அவருக்கு பிடிச்சது அவங்க மருமக. அதுக்கு பேரு ஐஸ்.  ஐஸ்க்கு ரஜினிய ரொம்ப புடிக்கும்.
உங்களுக்கு ரஜினிய அப்பப்ப பிடிக்கும். அப்ப நாம சொந்தக்காரங்கதானே..

அட்ங்கொய்யா.. நீ பொழைச்சுக்குவ மேலமாடி..
சரி..சரி.. மேல சொல்லு.....மேல சொல்லு.....( சரி..சரி.. விடுங்கய்யா.. இனிமேல பல்லு  தெரியாம சிரிச்சு பழகிக்கிறேன்.)

அண்ணே. நான் நல்ல மனுசுக்காரண்ணே. ஆஸ்திரேலியாகாரனுக Quotation கொடுத்தபோது ”12-”  கோடினு கொடுத்தானுக. இந்திய பண்பாட்டுப்படி ”1” க்கும் “7”க்கும் வித்தியாசம் தெரிய “7”-ல் ஒரு கோடு  போடுவமில்ல. அப்படிபோடாம, கொடுத்ததாலே, நாந்தான் அவங்ககிட்ட மாற்றச்சொன்னேன்.

என்னானு?

”12-” கோடிய,  ”127” கோடியா. அதப்பார்த்த அவங்க சேர்மன் உடனே யாருக்கோ போன் பண்ணி, BMW  கார் பரிசா கொடுத்தாருண்ணே. அதப்போயி எல்லோரும் ஊழல், ஊழல்னு சொல்றாங்க. என்னோட மனசு  எவ்வளவு பாடுபடும்?

இதுதான் பிரச்சனையா?. ஆமா டாய்லெட் டிஸ்யூ பேப்பர்ல ஊழல் பண்ணி, பொழப்புல மண்ண போட்டுட்டீங்கனு சின்ராசு கடுப்பா இருந்தான். ஏன்?.

அதுதாண்ணே நான் பன்ணின தப்பு. டிஸ்யூ பேப்பர்தானே. தொடச்சு தண்ணில போட்டுட்டா,  காணாமபோயிடுமேனு, அதுல கொஞ்சம் காசு பார்த்தேன். பயபுள்ளைக அதையும் கண்டுபிடிச்சுட்டானுக. அதுக்குதான் உங்களை பார்க்கவந்தேன்.

யோவ்.. நீ ஒரு மடக்கூ^%73யா. அன்னை, அம்மா, அக்கானு டெல்லில சொல்லிக்கிட்டு இருந்தா மற்றும்  பத்தாது. அவங்களுக்காகவோ, அவர்கள் கட்சிக்காவோ என்ன பன்ணினே?.  ஒரு மயிரும் பண்ணாம வந்துட்டு, என்னைய நோண்றாங்க, ரொட்ராங்கண்ணா...

ப்ளீஸ்ண்ணே.. ஏதாவது ஒரு வழி சொல்லுங்க.

உம்.. சரி.. கண்ண மூடிக்கிட்டு சொல்லுவேன். கேட்டுட்டு , போகும்போது,  “தும் தத்தா”  சொல்லீட்டு, ஓடிப்போயிடனும். நான் கண்ணத்தொறந்து  பார்க்கும்போது , நீ இங்க இருந்தே, டோமரை விட்டு நக்க&$%^#விட்டுருவேன். டீலுக்கு ஓகேனா, எங்க  மண்டிய போட்டு உக்காரு.


1. இனிமேல, காங்கிரஸ்காரனுக போட்டோவை, ’அவனுக சிரிச்சுக்கிட்டே நாட்டுக்கு சேவை செய்யறமாறி  போஸ்ல, போட்டோ எடுத்து’  டிஸ்யூ பேப்பரின் இரண்டு பக்கம் பிரிண்ட் பண்ணி, ஏழை எளிய மக்களுக்கு  இலவசமா தரனும்.

2. வாங்கின டிஸ்பிளே போர்டை, கட்சி ஆபீஸ், நெடுஞ்சாலை பகுதிகளில் வைத்து, கட்சியின் இன்று  எத்தனை பேர் சேர்ந்தார்கள், எத்தனைபேர் ஓடினார்கள். கடைசியா, இப்ப இருப்பது யாருனு லைவா காட்டனும்

3. அப்புறம், எங்கஊரு தம்பி, அதாம்பா. ராகுலோட கொ^$ட்டைதாங்கி,  சஞ்%$#@$ய் தம்பியின்  உருவப்படத்தை,  10 செகண்ட்க்கு ஒருதடவை, Diaplay-ல காட்டனும்.


இதெல்லாம் பண்ணினா, ’நீதான் விடிவெள்ளி. வெயிலல உனக்கு மூளை, தாடியா வழிச்சிருச்சு. அதை ஒரு  டோமரு நக்கி^&$டுச்சு’னு, ரெட்டைய விட்டு சொல்லச்சொல்லி,  கேஸை மூடிடலாம்.

சரி நாயே.. ஓடிப்போ...


அண்ணே.. கண்ண தொறக்காம, இன்னுமொரு உதவிபண்ணுங்கணே.

சீக்கிரம் சொல்லுயா...

அண்ணே.  இங்கிலாந்து இளவரசி டயானாவ பார்த்து, கை குலுக்கனுமுனு ரொம்ப நாளா ஆசை. நடந்த களேபரத்தில, இது முடியாம போச்சுண்ணே..

அடப்பாவி.. இது சப்பமேட்டரு.  உன்னோட கேஸை, சைனாவுக்கு மாற்றினா, உன்னோட விருப்பம் சீக்கிரமா நடக்கும். டயானாவை பொக்கேயுடன் வெயிட் பண்ணச்சொல்லி, உன்னை அனுப்புவானுக.

ஆனா கல்மாடி.....பார்த்துக்க.. உங்க அன்னை, கண்டதை சொல்லி, இந்த கேஸை இந்தியாவுலேயே நடத்தலாம்னு சொல்லும் . கேட்காதே.
கேஸை, இழு..இழுனு இழுத்து, வயசாயி, நீயா  சொந்தமா டிக்கெட் வாங்கி, டயானாவை பார்க்குறமாறி பண்ணிடுவானுக. ஜாக்கிரதையா நடந்துக்க..

சரிண்ணே.. நீங்க கண்ண திறப்பதற்க்குள், நான் கிளம்பறேன். அண்ணே.. பாருங்கண்ணே.. திரும்பவும் யாரோ காறித்துப்புறாங்க..

அடப்போய்யா.. இப்ப துப்பினது எனக்கு.. இதெல்லாம் ஒரு பதிவுனு எழுதறான் பாருனு , ..
நீ கெளம்பு செல்லம்..
நானும் தூங்கப்பபோறேன்..
.
.
.
தும் தத்தா....