டாக்ஸியில் போகலாமா இல்லை பேருந்தா?. மணி இப்போது........ சே. மணிக்கட்டை உயர்த்திப்பார்க்க, பாய்ந்தோடி வருகிறது டாக்ஸி. (மக்களே. சிங்கப்பூர் வந்தால், தலையைச் சொறியக்கூட கைகளை உயர்த்தாதீர். டாக்ஸி வந்துவிடும்.)
Taxi?..
ya.. Jurong East Central..
Get In..
(டாக்ஸி புறப்படுகிறது....)
என்னா-லா. நீங்க தமிழா?
ஆமாண்ணே. எப்படிண்ணே கரெக்டா சொல்றீங்க?.
இல்ல-லா. நான் யாரை பார்த்தாலும் கரெக்ட்டா Guess பண்ணிடுவேன். ஆமா ஊர்காரரா-லா?.
ஊர்...ஊர்ர்ர்ர்ர்.. ஆமாண்ணே.. கோயமுத்தூர் பக்கம். இங்கதான் கொஞ்ச வருஷமா வேலை செஞ்சிக்கிட்டு இருக்கேன்.
அப்படியா-லா. அப்புறம் எதுக்கு தமிழன்கூட இங்கிலீஸ் பேச்ற-லா?.
இல்லேண்ணே.. முதன்முறை பார்த்ததும் நீங்க மாலய்காரருனு நினச்சுக்கிட்டேன்.அதுதான்..ஹி..ஹி
என்னவேலை செய்யறீங்க? கப்பக்கம்பெனியா?
( சே.. இந்த பாழாய்போன ஷூ-வை மாற்றனும். ஒரு பொட்டி தட்டும் பன்னாடைய பார்த்து, கப்பல்கம்பெனியா-னு கேக்க வைத்துவிட்டது பார்...)
இல்லேண்ணே. கம்பூட்டர் படிச்சுட்டு, ’சோனா-மானா’ கப்பெனில வேலை செய்யறேன்.
ஓ. நீங்கெல்லாம் வந்ததாலதான் எங்களுக்கு வேலை கிடைக்கமாட்டீங்குது-லா. ஊரு பக்கம் வேலைவெட்டி கிடைக்கலையா-லா?
(ஓ.பன்னாடை. வயித்தெரிச்சல் கேசு போல..இதுக்கு இதோட பாணில பதில் சொல்லாட்டி, இருக்கும் கோவணத்தை அவிழத்தாலும் அவிழ்த்துவிட்டுடும்.)
ஊருல நல்ல வேளைதாண்ணே. வெளிநாடு போயி கொஞ்ச நாள் இருந்துட்டு வந்தா, கொஞ்சம் அறிவு விசாலமாகுமேனு..ஹி.ஹி
ஆமாண்ணே. நீங்க கம்யூட்டர் படிச்சுட்டுத்தான் டாக்ஸி ஓட்டுரீங்களா?
இல்ல-லா. நான் அந்தகாலத்து Pri-2. ஏன் கேக்குற-லா?
இல்ல. உங்க வேலைய தட்டி பறிச்சுட்டேனு சொன்னீங்களே. அதுக்குத்தான் கேட்டேன்..ஹி..ஹி
அப்படியில்ல-லா. நீங்க வந்து நல்லா சம்பாரிச்சுட்டு, ஊர்பக்கம் போயிடுவீங்க. அப்புறம் நாங்க என்னா-லா பண்றது?
ஏண்ணே. உங்க பையன, கம்யூட்டர் வேலைக்கு அனுப்பிச்சிருக்கலாமே.
அத ஏன் கேக்குற தம்பி. அந்த பரதேசி, பெத்த அப்பனுக்கு சோறு போடாம, ஒரு மலாய்காரி பின்னாடி போயிட்டான். செலவுக்கு காசு கேட்டா கொடுக்கமாட்டீங்கிறான். அத விடு-லா. Batam போககூடாது. தண்ணி அடிக்ககூடாது. Kalang போகக்கூடாது.
என்னா-லா. ஒரு பெத்த அப்பனை பார்த்து கேட்டா, கோவம் வராதா-லா.
நானும், போடானுட்டு, டாக்ஸி ஓட்ட வந்துட்டேன்.
அவன பெத்ததுக்கு ஆட்டுக்குட்டிய பெத்திருக்கலா-லா. புழுக்கையாவது மிஞ்சியிருக்கும்.
ஏண்ணே. உங்க வயசுக்கு, CPF-ல நிறைய வெள்ளி சேர்ந்திருக்குமே. அப்புறம் என்னண்ணே கவலை?.
நீ வேற தம்பி. பிலிப்பினோகாரி பின்னாடிபோய், தேவி%$#டியா......... சிரிச்சே என்னோட கையிருப்ப குறைச்சிட்டா-லா.
ஓ. கொஞ்சம் ஏமாந்தாலும், காசு கறந்திடுவாங்கபோல..
ஆமா-லா. முக்கியமா இந்த Lucky Plaza பக்கம் போனா, ஜாக்கிரதையா இருக்கனு-லா. ஊர்கார பயலுல எல்லாம் வெள்ள மனசோட இருப்பிங்க. அதனால சொல்றேன். போன மாசம் இப்படித்தான் ரெண்டு பிலிப்பினோகாரிக, டாக்ஸியில ஏறினாளுக. அதுல ஒருத்தி, என் பக்கத்தில உட்கார்ந்துகிட்டு, மேல கையப்போடறா, மூஞ்சிய தடவரா.. முத்தம் கொடுக்கிறா. டாக்ஸி எப்படி அவங்கவீட்டுக்கு போனதுனு எனக்கே தெரியலை-லா.
ஏன்ணே. மயக்கிட்டாளுகளா?.
ஆமா-லா. சரி. எனக்கும் ஜிவ்வுனு இருந்ததால ஒண்ணுமே சொல்லாம ஓட்டிக்கிட்டு இருந்தேன். இறங்கினதும் காசு வேண்டானு சொல்லச்சொல்ல, கூட 10 வெள்ளி அதிகம தந்தாளுக-லா
உங்க காட்டில மழைனு சொல்லுங்க-லா.( நாக்கை கடித்துக்கொள்கிறேன் -லா ஹி..ஹி)
அடப்போப்பா.. திரும்பி வந்து கொஞ்ச நேரம் கழித்து பார்த்தால், என்னுடைய, பர்ஸ், IC, அட..காண்டம் எல்லாம் சுட்டுட்டு போயிட்டாளுக-லா. பயங்கரமான, ஜகஜாலக்கில்லாடிக-லா.
ஏண்ணே. அந்த பீஸ்தான் உங்க மூஞ்சில கைய வெச்சுக்கிட்டு இருந்ததே. அப்புறம் எப்படிண்ணே பர்ஸ்ச அடிச்சாளுக?
முன்னாடி உட்காந்த்த நல்லவ போல(?) தெரியுது. இதுக்கெல்லாம் காரணம் பின்னாடி உட்கார்ந்து இருந்தவ-லா. நீங்க வேற ஊர்காரரா போயிட்டீங்க. அதுவுமில்லாம எனக்கு எம்ஜிஆரை ரொம்ப புடிக்கும்.அதனாலதாய்யா சொல்றேன். பார்த்து நடந்துக்குங்க.
ஏண்ணே. எம்ஜிஆரு ரசிகரா நீங்க?. ரொம்ப சந்தோசம்ண்ணே.
ஆமாப்பா.. ஊர்பக்கம் போயி ரொம்ப வருஷமாச்சு. அடுத்த தடவை போய், எம்ஜிஆர் பார்த்துட்டு, அவரு வீட்டில ஒரு வாய் சாப்பிட்டு வரனு-லா...
ஓ..அண்ணே.. நிறுத்துங்க.. நிறுத்துங்க.. நான் இங்கேயே இறங்கிக்கிறேன். அடுத்த தடவை பார்க்கும்போது நிறைய பேசலா-லா..உங்க தமிழுக்கு நன்றி. காதில தேன் பாஞ்சிருச்சு-லா. வரேண்ணே...
------------------------------------------------------------
டிஸ்கி 1.
அட்த்தூ.. இனிமேல சிங்கையில டாக்ஸி ஏறுவதில்லை. ஏறினாலும், தமிழன் டாக்ஸில ஏறுவதில்லை என்று , இந்த தீபாவளிக்கு முடிவெடுக்க உள்ளேன்.
டிஸ்கி 2.
அது சொல்லுச்சேனு, நானும் Lucky plazaa போய் பார்த்தேன்ண்ணே. ஹி..ஹி உண்மைதான். மேல விழுந்து கொஞ்சி..கொஞ்சி, கடைசியா பர்ஸ் அடிச்சிருராங்க.
டிஸ்கி 3.
ஒரு தடவைதான் ஏமாந்தாகிவிட்டதே. உஷாரா இருக்கனுமுனு பார்த்தா... கடந்த 1, 4, 8, 13, 20... ஏன்? போனமாதம் 29-ஆம் தேதியும் போயிருந்தேன். அதே டெக்னிக் வெச்சு, திருப்ப திரும்ப பர்ஸ் அடிக்கறாளுக. ஜாக்கிரதையா இருங்க மக்கா....
டிஸ்கி 4.
China town-ல , 20 cent-க்கு, நம்ம ஊர்காசு மதிப்புக்கு , ரூ7-க்கு பர்ஸ் கிடைக்குது.
இது ஜெனரல் நாலேட்சுக்காக.....
.
.
.