.
.
என்ன மன்னாரு.. டீக்கடைய சுத்தி வெள்ளத்துணிகளா இருக்குது. குரூப் குரூப்பா தற்கொலை பண்ணிக்க, ஏதாவது ப்ளான் வெச்சிருக்கியா?..
வாங்க தல...எங்க ரொம்ப நாளா ஆளக்காணேம்?.. கட்சிய கலச்சுப்புட்டு விவசாயம் பண்ண போயிட்டீங்களா?
யோவ்..நக்கலு..
தக்காளி.. சும்மா சுத்திக்கிட்டு இருக்கிறனுவனுகளுக்கு, கவர்மெண்ட் 100 ரூபாய் கொடுத்தா.. இப்படித்தான் வாயி காதுவரைக்கும் விரியும் போல..
என்ன தல கோவிச்சிக்கிறீங்க.. சும்மா பேசிப்பார்த்தேன்.. சீக்கிரம் எம்.எல்.ஏ ஆகனுமுனு ப்ளான் பண்ணிக்கிட்டு இருக்கேன்.. ஆசீர்வாதம் பண்ணுங்க தல..
அடப்பாவி.. உனக்கு யாருயா சீட் கொடுக்க போறாங்க..?
என்ன தல இப்படி சொல்றீங்க. போன வாரம், நம்ம பங்காளி பெரிய கார்ல வந்து கால்ல விழுந்து, சீட் கொடுத்திருக்காரு.. பேப்பர் பார்க்கலையா?.
அட.. அது வேறையா..போனவாரம் இந்தியா போயிருந்தேன்.. பேப்பர் பார்த்து இரண்டு வாரம் ஆச்சு. ஆமா யாருயா அது கார்ல வந்து சீட் கொடுத்தது?
நம்ம மதுரைக்காரருதான்.. கடைக்கு பால் ஊத்தறவனுக்கு ஒரு எம்.எல்.ஏ சீட்.
காலையில, நம்ம கடைய சுத்தம் பண்ணுமே முனியம்மா.. அதுக்கு ஒரு சீட். ஆக மொத்தம் 30 எம்.எல்.ஏ சீட் கொடுத்திருக்காரு..
அடப்பாவிகளா.. அந்தாளுக்கு இட்லிக்கடைக்கு பூட்டு போடவே நேரம் இருக்காதே.. எப்படியா 30 பேரை புடிச்சாரு?.. அதுவுமில்லாம யாருகூட கூட்டணி?..
தலைவர் சொன்னாரு.. வாசன் கோஷ்டி 80% வாக்கை வெச்சிருக்காராம். சிதம்பரத்துக்கு 75%-மும் , இளங்கோவன் கோஷ்டிக்கு 46% அப்பால யாரையோ சொன்னாரே.. ஆங்.. தங்க வாலு.. அவருக்குத்தான் 98% வாக்கு வங்கி இருக்காம். இதுல யாரை புடிச்சாலும், ஆட்சிக்கு வந்திடலாமாம். டீ குடிச்சுட்டே மூணு மணி நேரம் விளக்கிச்சொன்னாரு.
யோவ்.. ஒரு டீய-வே மூணு மணி நேரம் குடிக்கிற உங்க தலைவன், அதுக்கு காசு கொடுத்தாரா?
ஹி..ஹி.. தலைவர்கிட்ட எப்படீங்க காசு கேக்றது?.
அட பன்னாடப்பயலே.. அந்தாளு சொன்ன வாக்குகளை கூட்டிப்பார்த்தாலே 100% மேல வருமேயா.. ஒரு வேளை தமிழ்நாட்டில இருக்குற பீகாரிகளையும் சேர்த்து சொல்றாரோ என்னமோ?..சரி.. ஆட்சிய புடிச்சதுஎம் என்ன பண்றதா ப்ளான்?.
என்ன தலைவா.. எனக்கு என்ன தெரியும்?. "டீக்கடை உண்டு... நான் உண்டு"-னு இருக்கிறவன கூப்பிட்டு பொறுப்பை கொடுக்கிறாரு.. அவரு என்ன சொல்றாரோ அதை கேட்டு , அது மாறி செஞ்சுட்டா போதும்..
யோவ்.. அவரு உன்னோட டீ தொழிலுக்கு ஆப்பு வெக்க ப்ளான் பண்றாரு.. அது
தெரியாம, வெள்ளத்துணிகளா வாங்கி குவிச்சிருக்கே..
என்னமோ பண்ணு.. ஒரு வேளை மந்திரி பதவி கொடுத்தா.. ”டீ வளத்துறை”-ய கேளு.. நல்லா காசு பார்க்கலாம்.. சரி வரட்டா..
தலைவா.. டீக்கு காசு..
ஆமாய்யா.. எங்கிட்ட கேளு.. அந்த நல்லவன் கிட்ட மட்டும் பல்லக் காமி.. என்னமோ பண்ணுங்கப்பா...
செய்தி:
ஜனதா தளத்தலைவர் சுப்புரமணிசாமி, அவரது கட்சியில், 30 எம்.எல்.ஏ கள் பெயர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.. அவரது கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொள்ள விரும்புவர்கள் விரைவாக அணுகவேண்டிய முகவரி.
![]() |
| சு%$#.சாமி |
முருகன் இட்லிக்கடை
மதுரை
.
