பட்டாபட்டி சார்..
வணக்கம்.. நான் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில , வேலை செய்துகொண்டு இருக்கிறேன்.. என்னமோ , திடீர்னு , வாழ்க்கைமேல ஒரு வெறுப்பு சார்..
சென்னையில கொஞ்சம் நிலம் வாங்கலாம் என நினைத்தால் , கொள்ளைவிலை சொல்கிறார்கள்..
மாதம் ரூ 10000 சம்பாதிக்கிறேன்..இந்த ரேஞ்சில போனா, நிலம் வாங்கி , கல்யாணம் பண்ணுவதற்குள், வயதாகிவிடும்..
சரி .. சிறுக சிறுக ,சேர்க்கலாம் என முடிவு பண்ணி 1 ரூபாய் அரிசியில
சமையல் பண்ணி சாப்பிட ஆரம்பித்தேன்..
அப்புறம் ரூ10, 000 செலவு பண்ணி , நேற்றுத்தான் டிஸ்சார்ஸ் ஆனேன் ...
என்னோட பிரச்சனைக்கு ஏதாவது தீர்வு சொல்லுங்க சார்..
நீங்க வேற 100வது பதிவப் போட்டுடீங்க.. உங்களை கேட்டால்தான்,
நல்ல பதில் கிடைக்கும்..
- மணிமாறன்..
---------------------------------------------------------------------------------------------
அட பயலே..
முதல்ல உடம்ப பார்த்துக்கோயா....ஆமா காப்புறுதி ஏதாவது பண்ணியிருக்கையா?..... உடு..... எங்கிட்ட பிரச்சனைனு வந்திருக்க...... அப்புறம் எப்படி இதெல்லாம் பண்ணியிருப்பே.?
என்னைய வேற , செண்டிமண்ட்டா டச் பண்ணிட்ட..
உனக்கு நல்ல காலம் வந்துருச்சு ஓய்...
முடியாதவங்களுக்கு உதவி பண்ணுவதையே குறிக்கோளா வெச்சுட்டு இருக்கிற ஒரு மகான் கிட்ட கேட்டதால ( அட.. நாந்தாய்யா.. எந்த பயலும் சொல்ல மாட்டிங்கிறானுக.. அதுக்காக , சரித்திரத்தை மாற்ற முடியுமா?)
உன்னோட பிரச்சனைய , என்னோட பிரச்சனைய எடுத்துகிட்டு ,
உன்னைய உலகப்புகழ் அடையச்செய்யலேனே.........மகனே......
மங்குனுய, பலி கொடுக்கவும் தயாராக இருக்கிறான் இந்த பட்டாபட்டி..
சரி.. உன்னோட பிரச்சனைக்கு வருவோம்..
முதல்ல உங்கப்பன் மற்றும் ஆத்தாளுக்கு , 100 தேங்காய் உடைக்கனுமப்பா..
ஏன்னா?.
உனக்கு சொத்தோ, சுகமோ சேர்த்து வைக்கவில்லையினாலும்,
மணிமாறன் அப்படீனு பேரு வெச்சிருக்காங்களே.......... அதுவே, 10 கோடிக்கு சமமய்யா...
நான் சொல்ற மாறி செய்யி............ 6 மாசத்தில , நீ கோடீஸ்வரன் ஆகலைன இந்த தொழில விட்டுட்டு போயிடறேன்..... ( ஆமா.. செல்வமா வந்து கொட்டுது இப்ப.... தக்காளி...... புலி வால் புடிச்ச கதைமாறி ஆயுடுச்சு என் பொழப்பு....சே....6 மாசமுனு வாக்கு கொடுத்துட்டனே.....)
நேரா, சென்னை போ...... டாக்டருக்கு ஒரு போனைப் போடு.. ( நம்ம விஜய்..ஆமாமா இளய தளபதியேதான். )...
இப்படி நான் "மாறன்" பேசறேன்.......... அடுத்த படத்துக்கு டேட்ஸ் வேணும்..
அப்படீனு சொல்லி , அடுத்த நாலு மாசத்துக்கும் புக் பண்ணிக்க...........
ஒரு பிரச்சனை முடிஞ்சது..
அடுத்து , எவனாவது பைனான்சியருக்கு போனைப் போடு.............
இப்படி விஜய் நம்ம பிரண்டு....... அடுத்த நாலு மாசத்துக்கு , என்னோட படத்தில
நடிக்க டேட்ஸ் குடுத்துட்டாரு........படத்து பேரு "இறா"....... பணம் பைனான்ஸ் பண்ண முடியுமா?னு கேளு..
விஜய் படத்துக்கு, பைனான்ஸ் பண்ண முடியாதுனு எந்த நாயி சொல்லும்?..
ரெண்டாவது பிரச்சனை முடிஞ்சது..
இப்ப , ஹீரோயின் செலக்சன்............ மாறன் படத்தில நடிப்பதற்க்கு போட்டி கொஞ்சம் ஜாஸ்தியாயிருக்கும்......... உனக்கு கன்பூஸ் ஆயிடும்..
அதனால , நானே, டிஸ்கஸ் பண்ணி, யாரு.. என்னானு அடுத்த வாரம் சொல்றேன்..
சொல்ல மறந்துட்டனே...... ஹீரோயின் காஸ்டீயும் நானே பார்த்துக்குறேன்..
டிரஸ்சே இல்லாம வரச்சொல்லு..( சே.. ரொம்ப உணர்ச்சிவசப்பட்டுட்டேன்..)
இல்ல..இல்ல..
போட்ட டிரஸ்சோட வரச்சொல்லு..மீதிய நான் பார்த்துக்கிறேன்..
அவ்வளவுதான்....... முடிஞ்சது பிரச்சனை..
சம்பாரிச்ச பணத்தில , எனக்கு 10% ஒதுக்கிட்டு, மீதிய ஒழுக்கமா ,
நேசனல் பேங்க்ல டெபாசிட் பண்ணிட்டு , கல்யாணம் பண்ணிக்க...
வரட்டா..
சே.. சொல்ல மறந்துட்டனே...
போன் பண்றப்ப , மறந்து போயி "மணி"-னு சொல்லிடாதே..
அப்புறம் உன்னோட மணிய , கடவுளாலேயே காப்பாத்த முடியாது..
( நான் இதை, அன்பு ஆக, சொல்லிக்கொள்ள விரும்பிகிறேன்..)
வாசகர்களே.. ( பெரிய இவன்.. எழுத்தாளன் மாறியே பேசுறான் பன்னாட........என்னைய நானே சொன்னேன் சார்.)
அடுத்த ஆறு மாதத்தில் "இறா" என்ற படம் வெளிவந்தால் ,
மணிமாறன் வெற்றி பெற்றுவிட்டான் என கொண்டாடி விடுவோம்..
இல்லை.. பேப்பர் , நீயூஸ் பார்த்து தெரிந்து கொள்கிறேன்..மக்கா....
.
.
.