.
.
.
.
வணக்கம். இம்ப்பூட்டி நாளா, என்ன பன்ணிகிட்டு இருந்தேன். இனிமேல என்ன பன்ணுவேனு யாரும் கேட்கக்கூடாது. வேலை விசயமா, கழுதையோட சைனா வரை போயிருந்தேன். கோடிகள், கேடிகளால் சரியான வங்கியில் பூட்டி வைக்கப்பட்டுவிட்டது.
இப்ப விசயத்துக்குப்போவோம்..
ஓசில பாலிடால் கிடைத்தாலும், பல்லு படாம குடிக்கும் திறமைகொண்ட என்னை, ஒரு நலம்விரும்பி, சிலபல காரணங்களால் சினிமாவுக்கு அழைத்துகொண்டு போனால் என்ன நடக்கும்?. ( ஓசி சப்பாடு.. ஓசி டிக்கெட்டு.. ஓசி பீரு... எஞசாய் சார்..)....
அதேதான் சார் நடந்தது..
ஒன் லைன்ல சொல்லனுமுனா... படம் சூப்ப்ப்ப்ப்பரு.
ஒவ்வொருவரும் தந்த விமர்சனத்தைப்பார்த்தால், அவர்களுக்குள் ஒளிந்திருக்கும் தொழில் திறமை, லைட்டா முட்டிக்கிட்டு வருவதை மறைக்கமுடியவில்லை.
கரெக்ட்தானே நைனா?...
சினிமா துறையை நாடிப்பிழைப்பவர்களைக் கேளுங்கள். ’படம் ஆகா.. வாழ்க்கையில, இதுமாறி படம் எடுக்க, முருகதாஸு மகன்வந்தாத்தான் உண்டு’னு சப்புக்கொட்டுவாங்க.
டாக்டரா இருந்தா... ‘படத்தை... கொன்னுட்டானுக சார்’னு சொல்லுவாங்க..
சமையற்காரன், ’படத்தில் கொஞ்சம் காரம் சேர்த்திருந்தா.. தூக்கலா இருக்கும்’னு சொல்றானுக.
உபி-க்கள். பேரனுக்காகவே காவடி தூக்கி, அலகு குத்திட்டு, ’படம் ஹிட்’னு சொல்லப்போறாங்க.
சரி.. நாம!!!... அதான் எவனைப்பார்த்தாலும்,கழுவி ஊத்தலாம்னு சுத்திக்கிட்டு இருக்கும் பொட்டி தட்டும் ஆசாமிகள் ஆச்சே. ஆங்.. அதுவுமில்லாம, அப்பப்ப, ”நட்டு நடுநிலை”னு போர்ட் வைத்து, காலை இருதரம், மாலை ஒருதரம்னு ’கொக்கரி’க்கும் இப்படிப்பட்ட நாதாரியிடம், விமர்சனம் பண்ணச்சொன்னா.. விடு சார்... விமர்சனத்துக்குப்போவோம்..
படம் எப்பவும் போல ஆரம்பிக்குது. குதிரையில் ஏறி, சீனா.... வழியில குளிச்சு, குடிச்சு.. களிச்சு..உஷ்..யம்மாம்மா... போதி தர்மரு...சீனா போனாரு. மக்களை காப்பாற்றுனாரு.. அப்பால..ஆங்.. கடைசியா .. செத்துப்போயிட்டாரு...
படத்தில ஹைலைட் காட்சினு சொன்னா, நம்ம கமலு பொண்ணு வருகின்ற சீன்கள்தான்.. கமலு ஜீன் -ல உருவான உடம்பு.. எப்படி இருக்கும் அந்த நடிப்பு என்பதை, உங்கள் பார்வைக்கே விட்டு விடுகிறேன்.
வசனம்.. சோகமாயிருந்தாலும் சரி.. சந்தோசமா இருந்தாலும் சரி.. இழுத்து இழுத்து.. இப்படித்தான் பேசுவேனு பொண்ணு, கண்டிசனா சொல்லிடுச்சு போல. நம்ம முருகதாசு அண்ணனும், என்னவோ பண்ணித்தொலை. என்னோட கடமை, தமிழனை தலை நிமிர்ந்து நிற்கச்செய்வதும், கல்லாபொட்டியை ரொப்புவதுதான் என எண்ணி ஆப் ஆயிட்டாரு. பாசக்கார பய...
பாதிப்படதிலேயே, தமிழன்னா யாரு?.. அவனோட பெருமை என்ன?. சீனாக்காரனுக எப்படி இருப்பானுக? டி.ன்.ஏ-னா இன்னா.. மண்டைக்குள்ள ஏத்திட்டானுக சார்...
ஸ்ருதி,குரலை இழுத்துவெச்சு.. ”வாயிலையே கொடுப்பேனு ” சொல்லும்போது தியேட்டர்ல விசில் சத்தம் அடங்க ரொம்ப நேரம் ஆச்சு. மப்புடன், திரும்பி அருகில அமர்ந்திருந்த, ’லோக்கல் டமிழ் பொண்ணைப்’பார்த்தேன்.
அவிங்க கொள்ளுத்தாத்தா..... ”மரப்பணுப்படி” , ’தில்லானா மோகனாம்பால்ல கடம் வாசிச்ச கோஷ்டி போல.’. தலை இன்னும், விண்ணு விண்ணுனு வலிக்குதுங்க .
படத்தில பிடிச்ச காட்சினு சொன்னா.. ஆங்.. வில்லன் கண்களாலேயே, பொதுமக்களைப்பார்த்து மந்திரிச்சுவிடும் காட்சிகள்தான். பார்வைபட்டதும், பொதுமக்கள், அவரவர் வண்டியின் முதல் கியரை போட்டு, சிவக்குமாரு பையன் கொல்லப்போவது.. நல்லவேளை.. வீல்சேர் அம்பூட்டு வேகமாபோகாதுனு அதைமட்டும் காட்டல.
இதை எழுத்தில் படித்தால் அனுபவிக்கமுடியாது சாரே..தியேட்டருக்குப்போய்.. நீங்களும் ப்ப்ப்ப்ப்ப்பாருங்க பாஸ்.. புல்லரிக்கும்..
முக்கியமா.. கடைசிக்கட்டக்காட்சிகள்..
இதுவரை எந்தபடத்திலும் வந்திராத க்ளைமேகஸ். சூர்யாவும் , சீனனும் அனல் பறக்க சண்டை போட்டுக்கொண்டிருக்கிறார்கள். நம்ம கமலு மக வஜனம் பேசுது.. எப்படி?.. அடிக்கடி வலதுபக்கம் திரும்பி.. ஒருவேளை, சூட்டிங் நடக்கும்போது, பேரப்புள்ள அந்தப்பக்கமா நின்றிருக்குமோ என்ற சந்தேகம் லைட்டா வந்துபோகுது. அது கெடக்கட்டும் கழுதை..
அம்மணி.. இன்னும் கொஞ்சம் குஷ்பூ மாறி ’வளந்தா’, உங்களை அடுத்த முதலமைச்சர் ஆக்க, டமிழனுக தலை நிமிர்ந்து பொறுப்பா உழைப்பானுக. மைண்ட்-ல வெச்சுக்க தாயி. டமிழனுக்கு கண்ணுக்குமுன் தெரியும் வளச்சி முக்கியம்.. ஆங்காங்..
கடைசியா, எல்லோரும் ஒன்றை மட்டும் மனதில் அழுத்தமா வைத்துக்கொள்ளுங்கள். உங்களுடைய முன்னோர்களின் மரப்பணுவைத் தூண்ட, பொம்பளைபுள்ளைகளை கூட்டிக்கொண்டு, மூடியிருக்கும் காலேசு பக்கம் ஒதுங்காதீங்க.. மரப்பணு தவறான வழியில் வெளிவந்துவிடும்
அதற்காக மனம் தளரக்கூடாது...
கை கொள்ளுமளவு அருகம்புல்லை எடுத்து, இதை இடது பக்கம் அக்குளில் செருக்கிக்கொண்டு, ஐந்து கிலோமீட்டர் ஜாக்கிங் போகலாம். உடம்பு நன்றாக வேர்த்ததும், அந்த அருகம்புல்லை, நல்லெண்ணெயில் முக்கி, முக்கி..முக்கி.. அப்படியே சாப்பிடுங்க.. மரப்பணு பிச்சிக்கிட்டு வந்துவிடும்.
படம் பார்க்கலாமா வேண்டாமானு முடிவு செய்யமுடியாதவர்களுக்கு, நக்கீரன் மாறி, நானே பதிலை போட்டுவிடலாம்னு நினைக்கிறேன்.
அதாவது , உபிக்கள், சொந்தகாசுல, ப்ளாக்-ல டிக்கெட் வாங்கிப்பார்க்கலாம். இந்த உதவி, ’கரும்’ நிதியை, வெள்ளையாக்கிட உதவும். இன்னும் ரெண்டு படம் எடுத்துவிட்டு, அந்த 1.7xxxxxxx-க்கை வெள்ளையாக்க , உயிர் கொடுங்கள் திராவிடர்களே.
இந்த நடுநிலை, செண்டருனு கூவும் பயலுக, எப்பவும்போல, ஹிஹி.. ஓசியிலே அடுத்தவன் காசில, வீட்டிலோ இல்லை தியேட்டர்லோ போய் பாருங்க. ஆனா.. போகும்போது.. தலைகீழா நின்னு, பாக்கெட்டில் இருக்கும் சில்லறைகாசு முதற்க்கொண்டு, வீட்டில் பாதுகாப்பாக, வைத்துவிட்டுச்செல்லவும்.. இல்லாட்டி அதையும் உருவிடுவானுகோ...
மீண்டும் சந்திப்போம்..
சே..சே.. ரெண்டு மாசம் கழிச்சு இல்லை பாஸ்.. அடிக்கடினு சொன்னேன்.
வராமவிட்டா, பொறம்போக்கு நிலம்னு கொடிய நட்டிக்கிட்டு போனாலும் போயிடுவானுக ... எனக்கு தெர்யாதா..!!!!!
எப்படியும் இந்த ஏழாம் அறிவு, முக்கிமுக்கி, சன் டீவியின் தரவரிசையில், முதலாம்
வர்ர்ர்ர்ரட்டா...
கிழிக்கிறதுன்னு முடிவாயிடுச்சு... நல்லா கிழிக்க வேண்டியது தானே... அதென்ன பட்டும் படாமலும் கிழிச்சிருக்கீங்க...
ReplyDeleteதாயகம் திரும்புறதா ஒரு ரகசிய தகவல் வந்துச்சு... எப்ப சார்...?
ReplyDeleteஸ் ஸ் அபா....ஒரே தீப்பந்தமால்ல இருக்கு!
ReplyDeletePhilosophy Prabhakaran said...
ReplyDeleteகிழிக்கிறதுன்னு முடிவாயிடுச்சு... நல்லா கிழிக்க வேண்டியது தானே... அதென்ன பட்டும் படாமலும் கிழிச்சிருக்கீங்க.
//
ஹி.ஹி சித்தப்பன் பொண்ணா இருந்தா.. கிழிச்சிருக்கலாம்.. மாமன் பொண்ணா போயிடுச்சு பாஸ்...
ஹிஹி
Blogger Philosophy Prabhakaran said...
ReplyDeleteதாயகம் திரும்புறதா ஒரு ரகசிய தகவல் வந்துச்சு... எப்ப சார்...?
//
உள்ளாட்சி தேர்தல் முடிந்ததும் ..ஆ..
முடிஞ்சுடுச்சில்ல..
இதோ அடுத்த மாசம் பொட்டிய கட்டிட்டு வாரேன்...
Blogger விக்கியுலகம் said...
ReplyDeleteஸ் ஸ் அபா....ஒரே தீப்பந்தமால்ல இருக்கு!
//
யோவ்.. டெம்ப்ளேட் கமெண்ட் போட்டா என்ன நடக்கும்னு தெரியுமில்ல
விமர்சனத்தையெல்லாம் அப்புறம் வாசிக்கிறேன்! இத்தனை நாள் கழிச்சு வந்து இடுகை போட்டது ரொம்ப மகிழ்ச்சி! இவ்ளோ இடைவெளி விடாதீங்க இனிமேல்!
ReplyDeleteபோதிய இடைவெளியுடன் வைத்துக் கொள்ளவும்னு கவர்மென்டே சொல்லிடுச்சு...அப்புறம்...இவ்வளவு நாள் எங்க இருந்தேன்னு சொல்லிடாத...! நாறிடப் போவுது!
ReplyDeleteRettaival's Blog said...
ReplyDeleteபோதிய இடைவெளியுடன் வைத்துக் கொள்ளவும்னு கவர்மென்டே சொல்லிடுச்சு...அப்புறம்...இவ்வளவு நாள் எங்க இருந்தேன்னு சொல்லிடாத...! நாறிடப் போவுது!
//
ஹி..ஹி வெளிய சொன்னா..அம்பூட்டா நாறும்?..
ஸ்ருதியோட "வளர்ச்சி"யில் எவ்வளவு ஆர்வமா இருக்கீங்கன்னு தெரியுது. வித்தியாசமான விமர்சனம்.
ReplyDeleteBlogger சேட்டைக்காரன் said...
ReplyDeleteவிமர்சனத்தையெல்லாம் அப்புறம் வாசிக்கிறேன்! இத்தனை நாள் கழிச்சு வந்து இடுகை போட்டது ரொம்ப மகிழ்ச்சி! இவ்ளோ இடைவெளி விடாதீங்க இனிமேல்!
//
ஹி..ஹி.. ஏண்ணே.. நான் எழுதுவதைப்பார்த்து
”புலிட்சர் விருது”தா கொடுக்கப்போறானுக..விடுங்கண்ணே..!!!!
:-))))))
Blogger காந்தி பனங்கூர் said...
ReplyDeleteஸ்ருதியோட "வளர்ச்சி"யில் எவ்வளவு ஆர்வமா இருக்கீங்கன்னு தெரியுது. வித்தியாசமான விமர்சனம்.
//
என்ன இருந்தாலும், எங்க வருங்கால முதலமைச்சரம்மா ஆச்சே பாஸ்..
ஆகா.. சூப்பர்..
ReplyDeleteவாழ்த்துக்கள்..
அருமை நண்பா..
கலக்குங்க..
எப்படி சார் இப்படி?..
ஹா..ஹா
:-)
:-(
ம்..ம்..
Online...
வடை எனக்கு...
Present..
வடைபோச்சே....
யோவ் முரளிகண்ணன்,
ReplyDeleteஎப்படிய்யா மனசுக்குள்ளே இருக்கிறதைத் திருடுறீங்க?!
//கோடிகள், கேடிகளால் சரியான வங்கியில் பூட்டி வைக்கப்பட்டுவிட்டது.//
ReplyDeleteபட்டா... இந்த டைலாக்குக்கும், பட விமரிசனத்துக்கும் என்ன சம்பந்தம்?
வெளக்கவும்...
//”வாயிலையே கொடுப்பேனு ” சொல்லும்போது தியேட்டர்ல விசில் சத்தம் அடங்க ரொம்ப நேரம் ஆச்சு.///
ReplyDeleteம்க்கும்....
என்னண்ணே?
//வரவர் வண்டியின் முதல் கியரை போட்டு, சிவக்குமாரு பையன் கொல்லப்போவது.. நல்லவேளை.. வீல்சேர் அம்பூட்டு வேகமாபோகாதுனு அதைமட்டும் காட்டல.///
ReplyDeleteநீங்க உ.பி. ய சொல்லலியே?
//இன்னும் கொஞ்சம் குஷ்பூ மாறி ’வளந்தா’, உங்களை அடுத்த முதலமைச்சர் ஆக்க, டமிழனுக தலை நிமிர்ந்து பொறுப்பா உழைப்பானுக. மைண்ட்-ல வெச்சுக்க தாயி. டமிழனுக்கு கண்ணுக்குமுன் தெரியும் வளச்சி முக்கியம்.. ஆங்காங்..///
ReplyDeleteஹி ஹி ஹி ஹி...
//வணக்கம். இம்ப்பூட்டி நாளா, என்ன பன்ணிகிட்டு இருந்தேன். இனிமேல என்ன பன்ணுவேனு யாரும் கேட்கக்கூடாது.///
ReplyDeleteதலீவா... அந்த, அந்த, அந்த......
சரி விடு தலீவா... முன்னாள் முதலமைச்சரே மூணுங்குறபோது....
நீ இனிமேதான் ஆவணும்... வாழ்க!
ஏதாச்சும் ஒரு போட்டோ போட்டிருக்கக்
ReplyDeleteகூடாதா? படம் பார்க்க போகமுடியாத எங்களைப் போன்றவர்கள் பார்த்துக்குவோமில்லையா?
//அதுவுமில்லாம, அப்பப்ப, ”நட்டு நடுநிலை”னு போர்ட் வைத்து, காலை இருதரம், மாலை ஒருதரம்னு ’கொக்கரி’க்கும் இப்படிப்பட்ட நாதாரியிடம், விமர்சனம் பண்ணச்சொன்னா..//
ReplyDeleteசினிமா விமர்சனம் எழுதும் போது தேவையா.. வர வர உமக்கு குசும்பு ஜாஸ்தி ஹி ..ஹி .. சைக்கிள கேப்ல ஆடு வெட்டுரீயே பட்டா ..!!
அண்ணே அந்த கழுதைய கொஞ்சம் அனுப்பி வைங்கண்ணே, கொசுத்தொல்லை அதிகமா இருக்கு....
ReplyDeleteவளர்ச்சி முக்கியம்ணே.... ஆமா ஏற்கனவே கொஞ்சம் வளர்ந்துட்ட மாதிரி இல்ல? இன்னும் கொஞ்ச நாள்ல எப்படியும் தமிழன் கண்ணுக்கு முன்னாடி வந்திரும்ணே......!
ReplyDelete/////கை கொள்ளுமளவு அருகம்புல்லை எடுத்து, இதை இடது பக்கம் அக்குளில் செருக்கிக்கொண்டு, ஐந்து கிலோமீட்டர் ஜாக்கிங் போகலாம். உடம்பு நன்றாக வேர்த்ததும், அந்த அருகம்புல்லை, நல்லெண்ணெயில் முக்கி, முக்கி..முக்கி.. அப்படியே சாப்பிடுங்க.. மரப்பணு பிச்சிக்கிட்டு வந்துவிடும்.
ReplyDelete//////
முக்காமயே பிச்சிக்கிட்டு வந்துடாது?
///// நம்ம கமலு மக வஜனம் பேசுது.. எப்படி?.. அடிக்கடி வலதுபக்கம் திரும்பி.. ஒருவேளை, சூட்டிங் நடக்கும்போது, பேரப்புள்ள அந்தப்பக்கமா நின்றிருக்குமோ என்ற சந்தேகம் லைட்டா வந்துபோகுது. அது கெடக்கட்டும் கழுதை../////
ReplyDeleteஅடேடே இதுவேறயா? (பேராண்டிக படம் எடுக்கறதே இதுக்குத்தானே.....?)
மரப்பணு தவறான வழியில் வெளிவந்துவிடும்///
ReplyDeleteஎப்படி ? பின்னாடி வழியாவா ?? நான் பின்கட்டு வழிய சொன்னேன்யா
அதுக்குள்ளவா...........?
ReplyDeleteவெறும் பெப்சிக்கே.........!
ReplyDeleteபெப்சி உமா வந்தால் ...........?
பட்டா ...வா தலை ...
ReplyDeleteரோம்ப வேலை பர்க்ககஊடாது ...
அப்படி பார்த்தா "எல்லாம்"
போய்டும் ....