Pages

Wednesday, January 20, 2010

துணையாக இருப்பதால் தானே துணை முதல்வர்...


"நாங்கள் விட்டுச் செல்கிற பணிகளை, துணை முதல்வர் தொடர வேண்டும்,'' என முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.  திருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழக அரசின் விருதுகள் வழங்கும் விழா, சென்னையில்  நடந்தது.

முதல்வர் கருணாநிதி விருது வழங்கி பேசியதாவது:
நானும் அன்பழகனும் முக்கியமானவர்களுக்கு கொடுத்த விருதுகளை தொடர்ந்து மற்றவர் களுக்கு, துணை முதல்வர் விருதுகளை வழங்குவார். எனக்கு துணையாக இருப்பதால் தானே துணை முதல்வர். நானும் அன்பழகனும் விட்டுச் செல்கிற பணிகளை துணை முதல்வர் ஆற்ற வேண்டும், தொடர வேணடும். இவ்வாறு பேசினார்.

.
.
.
.
.

ஏய்யா இப்படியெல்லாம் பேசுறீங்க...

நீங்க  உடன்பிறப்புக்களுக்கு  ஆற்றவேண்டிய பணி இன்னுமுள்ளது...
 

பாலும் தேனும் ஓடனுமுனா , நீங்கதான் எங்க நிரந்திர முதல்வராயிருக்கனும்..( கண்டிசனா சொல்லிப்பபுட்டேன்..)

ரொம்ப கஸ்டமாயிருந்தா சொல்லுங்க.... நம்ம அன்பழகனை வேணா,  கழட்டிவிட்டுடலாம்..


(படத்துக்கும் மேலே உள்ள வஜனத்துக்கும் சம்மதமில்லை.. தயவு செய்து  உண்ணாவிரதமோ அல்லது    தந்தியோ அடிக்கவேண்டாம்)