Pages

Wednesday, July 7, 2010

வறுமைக் கோட்டிலிருந்து (?)

    சாரி பிரதர்ஸ்..  என்னடா எடுத்ததும் மன்னிப்பு கேக்குறானே?.  அதுவும் ஆம்பளப்பசங்களைப் பார்த்து(!). பெருசா ஏதாவது அலம்பப்போறானா?-னு நினைக்கிற பயபுள்ளைகளுக்கு , நான் ஒன்றுமட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.   வந்_____ந்து..வந்து....சாரிங்க..ஹி..ஹி.. கொஞ்சநாளா ஆணி அதிகமானதால், வலையுலகம் வர இயலவில்லை.  ஓ.கே..  மேட்டருக்கு போவோம்.

    நாடு சுதந்திரம் வாங்கி பலவருசங்கள் ஆகிவிட்டன.  சுதந்திரத்துக்காக, தனிமனிதனாய் பாடுபட்ட தேசத்தந்தை(!) காந்தியாகட்டும், குடும்பத்தையே துச்சமாக நினைத்து, நாட்டுக்காக ரத்தம் சிந்திய மோதிலால் நேருவாகட்டும். ( சரித்திரம் சொல்கிறது பாஸ்..). ஒன்றாக இருந்த நாட்டை, துண்டாக்கி ,பாகிஸ்தானுக்கு பண உதவிசெய்து அதற்காக ’தீவிரவாதம்’ என்ற பெயரில், ’வட்டி’ வாங்கிக்கொண்டிருக்கும் நமது தேசமாகட்டும், அன்றுமுதல் இன்றுவரை போராடிக்கொண்டிருப்பது முக்கியமான ஒரு பிரச்சனைக்குத்தான்.  ஆங்.. அதுக்கு ஒரு பேர வெச்சுருக்காங்க.. ’வறுமைக்கோடாம்’.

    சரி. சுதந்திரம் வாங்கியதும், தலைவர்கள் விட்ட அறிக்கைகளில் முக்கியமானது , ’வறுமைக்கோட்டை ஒழித்து, இந்தியாவை முன்னேற்றுவோம்’ .  சமீபத்தில அதே வசனம் அன்னை(?) சோனியாவால் திரும்பவும் சொல்லப்பட்டது.   சரி..  இவர்களின் பார்வையில் வறுமைக்கோடுனா என்ன, அதற்காக அவர்கள் தீட்டிய திட்டம், அதனுடைய பலன்கள் ஆகியவற்றைப்பற்றி  அலசலாம்.

    இந்திய மக்கள்தொகையில் 15% ஏழ்மையில் உள்ளனர்.  அடுத்த 65%, நடுத்தர மக்கள்.  மீதியுள்ள 20% ஏதோ அவர்களின் சொந்தமுயற்சியால்(?) உழைத்து, பணக்கார வர்கமாக வசிக்கின்றனர்.  நமது தமிழகத்தை எடுத்துக்கொள்ளுங்கள்.  ஒரு தலைவனுக்கே, நடுத்தரவர்கத்தில் இருந்து பணக்கார வர்கமாக,  பதவி உயர்வு பெற,  சற்றேரக்குறைய 40 ஆண்டுகள் பிடித்தன.  அப்படியென்றால். சாதாரண மக்களின் கதி?. 

பணக்கார வர்க்கம்
    இவர்கள்தான் நாட்டின் முதுகெலும்பென்றால் மிகையாகாது.  அரசியலிலும், ஆளுமையிலும், வர்த்தகத்திலும் கொடி கட்டிப்பறக்கும் அவர்களின் இன்றைய தலையாலப் பிரச்சனை ‘வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு’ உதவி செய்யசெய்வதுதான்.  ’என்ன ம%$#@ரு உதவி?’ என்று உங்கள் மனதில் தோன்றினால், சாரி..பாஸ்..  நீங்க பாகிஸ்தான் உளவாளியா இருக்க வாய்ப்புள்ளது எனக்கருதி, தேசிய சட்டப்படி உங்களுக்கு விளக்கமுடியாது.

நடுத்தர வர்க்கம்

     இது வேறயாருமில்ல பாஸ்...  ’நானும் நீங்களும்தான்’.  கஷ்டப்பட்டு சம்பாரிப்பது, மனதை கடினமாக்கி செலவளிப்பது, சட்ட திட்டங்களை முடிந்தவரை(?0 பின்பற்றுவது, இலவசங்களுக்காக சிலசமயம்(?) கை ஏந்துவது, பெரும்பாலான நேரங்களில், மனச்சாட்சிப்படி நடக்கும் கேணப்பயலுக.
சரியாச்சொல்லனுமுனா தலையாட்டி பொம்மைகள்.  நம்முடைய உயர்ந்தபட்ச நோக்கமே, ‘இன்னைக்கு நமக்கு என்ன ஆதாயம்?’. அவ்வளவுதான்.  இப்படிபட்டவர்களுக்கு அரசாங்கம் என்ன செய்கிறது என்று நினைத்துப்பார்த்திருக்கிறீர்களா?.  கவலையை விடுங்க மக்களே.  உங்களை வறுமைக்கோட்டுக்கு கீழே கொண்டு செல்லும் காலம் வெகு அருகில்.


ஏழை வர்க்கம்
     காந்தி சொன்னாரே ‘கிராமங்கள்தான் நாட்டின் முதுகெலும்பு’ என்று...... உண்மைதான்..... விவசாயி, அன்றாடங்காச்சி, அடுத்த நேரச்சோற்றுக்கு வழி தெரியாமல் இருக்கும் மக்கள், இவர்களை எல்லாம் இதில் அடக்கிவிடலாம்.  பல வருடங்களாக , இவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த, அரசியல்வாதிகளும், அரசாங்கமும் பாடுபடுவதை கண்கூடாகப் பார்த்திருப்பீர்கள்.  நீங்களே சொல்லுங்க பாஸ்.. இலவசமா பல்பொடி, செருப்பு, பிரியாணி, காண்டம், டீவி, கரண்ட், குடிசை , அன்னதானம், சரக்கு,  இவ்வளவும் கொடுத்து இன்னும் முன்னேறவில்லையென்றால், யாருடைய பிரச்சனை இது?..  விடுங்க..  தேவையில்லாம சொல்லிட்டிருக்கோம்... பார்ப்போம் சார்..  கிரகநிலை சரியாயிருந்து, ராகுல் காந்தியின் பையன் ஆட்சிக்கு வந்ததும், எதாவது நல்வழி கிடைக்காமலா போயிடும்?.





உரிமை vs கடமை
     சமீபத்தில், பழைய ஆனந்தவிகடனை படிக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.  அதில் ஒரு கருத்து பசக்-னு மனசுல ஒட்டிக்கிச்சு சார்..  நேரு பிரதமராயிருந்தபோது நடந்த சம்பவம்.  ஒரு நாள் ஏதோ கூட்டத்துக்கு நேரு வந்தபோது, ஒருவன் அவரது காரை மறித்தானாம்.  நாடு சுதந்திரம் அடைந்திருச்சுனு எல்லோரும் சொல்றாங்களே..பட்டதாரி ஆகியும் வேலை கிடைக்காமல் இருக்கிறேன். சுதந்திரம் வாங்கி என்ன பலன்? என்று.
   
     அதற்கு அவர் சொன்னாராம். ”இப்படி பொது இடத்தில, பிரதமரை நிறுத்தி கேள்விகேட்கும் உரிமை கிடைத்துள்ளதே.. அதுதான் சுதந்திரம்”.    மேலோட்டமாக பார்த்தால், நேரு கடமை தவறா கண்ணியமானவர் போல தோற்றமளிக்கும் ஒரு செய்திதான் இது.   இந்த பதிலை பார்த்தால், அதில் பொதிந்துள்ள ஆணவம்தான் எங்களுக்கு தெரிகிறதே தவிர, ஒரு தலைவனின் கடமை குழிதோண்டிப் புதைக்கப்பட்டுவிட்டது.    ’உரிமைக்கும் , கடமைக்கும் என்னய்யா வித்தியாசம்?’.
ஒரு நல்ல தலைவன் தொண்டர்களின் குரலை பிரதிபலிக்கும் ஆற்றல் கொண்டவனாக இருக்கவேண்டும்”.   அதைவிடுத்து,  மொத்தகூட்டமும், அவனது சொல்பேச்சு கேட்டு ஆடும், ஆட்டுமந்தைகளாக நினைத்தால் அந்த கூட்டத்தின் கதி அதோ கதிதான்..   ஆனால், கடமையை செய்யாமல், உரிமை பற்றி பேசும் தலைவர்களைத்தான் நாம் பெற்றிருக்கிறோம்.

     சரி..வறுமைக்கோடு பிரச்சனைக்கு வருவோம்.  இதையெல்லாம் ஒழிக்க ஒரே வழி..  நல்ல வழி... “நடுத்தர மக்களை, ஏழை மக்களாக்குவதுதான்”.  ஏணியில ஏறுவதை விட , இறங்குவது சுலபம் சார்.  அதற்கான முயற்சியாகத்தான்

  • மின்சார வெட்டு,
  • குழந்தை தொழிலாளர்கள்,
  • போலி மருந்துகள்,
  • கலப்பட உணவு,
  • அயல்நாட்டுக்கு நிதியுதவி,
  • கல்விக்கூடங்களில் பகற்கொள்ளை

என பல சிறந்த திட்டங்களை நடைமுறையில் செயல்படுத்திக்கொண்டுள்ளோம். எனவே அன்பு உள்ளங்களே..விரைவில் உங்களை நல்ல குடிமகனாக்கி, நாட்டை செழிப்பாக்கும் வரை, ஊண் உறக்கமின்றி பாடுபடும் நம் தலைவர்களுக்கு , உங்கள் உடல், உயிர் மற்றும் மயிர் கொடுக்க தயாராகுங்கள்... நாளை நமதே... நாளை சந்திப்போம்...

போகும்முன் சில சந்தேகங்கள்.

1. கோட்ஷேயின் வாக்குமூலத்தை, பல வருடங்களாக வெளியிடாமல் வைத்திருந்ததின் மர்மம் என்ன?

2. நாட்டின் பாதுக்காப்புக்கு வாங்கிய பீரங்கியில் ஊழல் செய்யத்துணிந்த ஜென்மங்களை, தியாகி என அழைப்பது ஏன்?

3. நாட்டுக்காக பாடுபட்டவர்கள் காந்தியும் நேருவும் (வரலாறுப்புத்தகத்தில் சொல்வது). சுதந்திரத்துக்காக, போராடிய மற்ற தியாகிகளின் சரித்திரத்தை மறைத்தது யார்? ஏன்?

இதைப்பற்றி அறிய, பல புத்தங்களை படிக்கவேண்டியுள்ளது.. வரும் பதிவுகளில் துவைத்து அலசவேண்டும்

.
.
.