Pages

Tuesday, May 4, 2010

கிராமம்தோறும் கட்சி போர்ட்..கலக்குங்க பாஸு..

சுறா பார்த்துவிட்டு, வந்து, எதைப்பார்த்தாலும் நாலு,நாலாத் தெரியுது சார்.
நேற்று எந்திருச்சதும் கொஞ்சமா பரவாயில்லமாறி ஒரு பீலிங்..( ரெண்டு ரெண்டா தெரிஞ்சா, நல்லாயிட்டுவரேன்னுதானே அர்த்தம்..)
இன்னைக்கு, காலையில, கண்ணு பளீர்னு டால் அடிச்சது... ஆகா.. சுறாவில இருந்து முழுசும் வெளிய வந்திட்டோம்..   போதுண்டா சாமி... இனி நமக்கு சினிமாவே வேணாமனு நினைச்சுகிட்டு, காலையில மன்னாரு டீ-கடைக்கு போறேன்..  அங்க சின்ராசு டீ குடிச்சிகிட்டு இருக்கான்..

லைட்டா, பேஸ்மெண்ட் ஒரு ஆட்டம் ஆடுச்சு..தக்காளி.. மாட்டியாச்சு.. இனி சாண் போனா என்ன முழம் போனா என்னனு , ஒரு   வணக்கம் வெச்சேன்..

‘மன்னாரு.. பட்டாபட்டிக்கு ஒரு ஏலக்காயி டீ போடு’-சின்ராசு..

’இல்ல சின்ராசு.. நான் இப்பத்தான் டீ குடிச்சுட்டு..’ முடிக்குமுன், முறைக்கிறான் சார்.  விதியேனு, பெஞ்சில உக்காந்தேன்..

அப்புறம்..என்ன விசேசம் பட்டாபட்டி...? மூஞ்சி பளீர்னு இருக்கு..


இல்லப்பா.. ராகுல், கட்சிக்கு இளரத்தம் பாய்ச்சுறாரு பார்த்தியா?..

ஆமாய்யா.. எப்படியோ, தமிழக் இளைஞர் காங்கிரஸுக்கு, யுவராசை தேர்ந்தெடுத்திட்டீங்க?...  கலக்கராங்கப்பா காங்கிரஸ்காரனூக...

ஆமா.. சின்ராசு..யுவராசுக்கு சின்ன வயசுதான்.. வாசன் சார் புண்ணியத்தில, இப்பவே ஒரு போஸ்ட்க்கு போயிட்டாரு..  அதுவுமில்லாம, அவரது குடும்பமும், ஏதோ, பாரம்பரிய கட்சி குடும்பமாம்...

ஆமாமா.  பேப்பர்ல பார்த்தேன்..ஆனா, பதவியேறதும் அறிக்கை விட்டாரு பாரு..தக்காளி..

ஏன்?.. என்ன சொன்னாரு.. எல்லா தலைவனும் சொல்றமாறிதான் சொல்லியிருப்பாரு?..

போடா புண்ணாக்கு..
கிராமத்தில, வேலைவாய்ப்பை உருவாக்கலாம்..
குழந்தை தொழிலார்களை இல்லாமல் செய்யலாம்..
சுற்றுப்புர சூழ்நிலையைப்பற்றி விழிப்புணர்வு உருவாக்கலாம்..
கிராமம் தோறும், மரம் நடலாம்...
அப்படியே கட்சிய வளர்கலாமுனு சொல்லாம..... போட்டாரு பாரு ஒரு போடு..
காங்கிரஸ்காரன் அழிக்க வெளியயிருந்து எவனும் வரவேண்டாம்..

அப்படி என்ன சொல்லிப்புட்டாரு?..

சொன்னாரு.. சொன்னாரு.. சூ%$#@ல சுண்ணாம்பு வெக்கச்சொல்லி...
எல்லா கிராமத்துக்கும் போயி ’போர்ட்’ வெக்கப்போறாராமா உங்க தலைவரு...
வட நாட்டு காங்கிரஸ்காரனுக, நெடுஞ்சாலையில, ஒவ்வொரு கி.மீ க்கும் அன்னையோட போட்டோ வைக்கனுமுனு சொன்னாங்க..

இவரு..ஒருபடி மேலபோயி, ஒவ்வொரு கிராமத்திலையும், ’கட்சி போர்ட்’ வெக்கறாராம்.. உருப்படுமய்யா நாடு...   ஆனா ஒண்ணுயா.. போர்ட் வெச்சா, நடுவுல ஓட்டையப்போட்டு வெக்கச்சொல்லு..

ஏன்..

இல்லாடி வெயிலுக்கு, மக்கள், நிழழாயிருக்குனு போர்ட்க்கு கீழ நிப்பானுக..
அப்புறம் பாரம்பரிய கட்சிக்கு என்ன பெருமை..?

போ சின்ராசு.. புது ரத்தம் பாய்சறப்ப, இப்படி எடக்கு மடக்கா பேசாதே..
குஷ்புகூட, கட்சியில சேரப்போறதா கேள்விப்பட்டேன்..

யாருய்யா அது..ஓ.. நம்ம விஜய்ல, ’அழகிய ஆண் மகனை’ செலக்ட் பண்ணப்போறேனு சொல்லிகிட்டு இருக்கே.....  அதுவா?..

யோவ்.. சின்ராசு.. உனக்கு ஓவர் குசும்மாயிடுச்சி..அந்தம்மா என்ன பேமஸ் தெரியுமா?..


ஆமாய்யா..திருமணத்துக்கு முன்னாடி பாதுகாப்பா,  உடலுறவு கொள்ளலாமுனு பினாத்துச்சே அதுவா?..  இல்ல.. கல்யாணத்துகு முன்னாடி, ராஜீவ் போட்டாவை, படுக்கயறையில ,மாட்டியிருந்தேனு பெருமையா அறிக்கை விட்டுச்சே..  அந்தம்மாதானே?..பயங்கர பேமஸ் ஆச்சே அவங்க...
ஆனானும் நாட்ட முன்னேறற, இவங்களைவிட்டா, எவனுக் கிடையாது..
இத்தாலி கலாச்சாரம், இந்தியாவுக்கு வந்தாச்சு..
இப்ப குஷ்பு மூலமா, வெளிநாட்டு பண்பாடு..வரப்போகுது..
சீக்கிரம் யாரும் சேலை கட்டக்கூடாதுனு அறிக்கை வந்தாலும் வரும் பாரு..   என்னமோ பண்ணுங்க..ஆனா எங்கூர்ல சீக்கிரம் ஒரு ’போர்ட்’ வெக்கப்போறோம்..

என்னது திரும்பவும் போர்டா?..

ஆமாய்யா.. பன்னியும் , அரசியல்வாதியும் உள்ளே வரக்கூடாதுனு..
ஆனா.. பன்னிக்கு ரோசம் அதிகம்..படிக்கலேனாலும், வீறாப்பா உள்ள வராது.. ஆனா.. இந்த பன்னாடைக..??
.
.
.
.