ரொம்ப நாள் கழிச்சு நண்பர் ஒருவரை, 'லிட்டில் இந்தியாவில்' பார்க்க நேர்ந்தது.. பீர் சாப்பிட்டுட்டுதான் போகனுமுனு ஒரே அடம் சார்..
"யோவ்.. நான் நல்ல பையனாயிட்டேன்", சொன்னாலும் கேட்காம சீனக் கடைக்கு கூட்டிட்டு போயிட்டான்.
( நண்பர் பேரு வேண்டாமே சார்.. பின்னாடி என்னைய யாருனு தெரியாது சொல்லிட்டா, மனசு கஷ்டமாயிடும்.. அதனால மிஸ்டர் எக்ஸ் -னு நினச்சுக்கோங்க .....ப்ளிஸ்....)
அப்போது ஒரு சீனர்.. தாத்தா வயசு இருக்கும் சார்.. நல்லா பேண்ட் , சர்ட் போட்டுட்டு ரீஜண்டா, பீர் குடுச்சுட்டு இருந்தார் ..
நாங்க போயி பக்கத்து டேபிள்ல உக்கார்ந்து பீர் ஆர்டர் செஞ்சுட்டு, எப்போதும்போல
- அடுத்தவன் காலை வாரிவிடுவது நல்லதா/கெட்டதா?,
- விஜய்/அஜீத் யாரோடது படம் ஹிட்,
- ஏறிப்போற ஏணியா?, இல்ல... எட்டி மிதிக்கிற சாணியா இருக்கணுமா?
அப்படினு தலையால பிரச்சனைய பற்றி பேசிட்டு இருந்தோம்..
கொஞ்ச நேரம் ஆயிருக்கும் சார்..தண்ணி உள்ள போயிட்டா , எல்லோருமே சொந்தக்காரங்கதானே..
( சீனனாவது , மலாய்காரனாவது )
சன்னமா, பக்கத்திருந்த பெருசப் பார்த்து சிரித்தோம்..
அவரும் எங்களைப் பார்த்து சிரிச்சுகிட்டே சீன பாஷையிலே என்னமோ சொன்னார்.. நமக்கு தான் எல்லா பாஷையும் தெரியுமே.......
நாய் வாய் வெச்சமாறி சார்.........
( எல்லாமே அரைகுறை........ இன்னும் .புரியாதவங்க, என்னோட மெயில் ஐடீக்கு , தட்டிவிடுங்க... சொல்றேன் .)
அப்படியே பேச்சு கொடுத்தேன்.
.( சீன பாஷையில தான் .. ஹி..ஹி )
பார்த்தா, பெருசு சீன ஆயுர்வேதிக் டாக்டராம்..
என்னடா, டாக்டராயிருந்துட்டு , தண்ணி அடிக்கிறீங்கனு கேட்டா பெருசு நக்கலா சிரிக்குது..
நண்பருக்கு
டர்ர்ர்ர்ர் ஆயிடுச்சு..... அவசரமா என்னைய சொறிஞ்சு , அவரை கலாயிக்கலாமானு கேக்கிறான்.. என்ன பிரச்சனைனா ,
நண்பருக்கு சீனம் தெரியாது.. பெருசுக்கு ஆங்கிலம் அவ்வளவா வராது..
நண்பர் உணர்சிவசப்பட்டு , நான்
உங்கிட்ட ஆங்கிலத்திலே சொல்றேன்..
நீ அதை அவர்கிட்ட சீனத்தில கேட்டு பதில் சொல்லுனு சொன்னான்..
ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்பது அப்பதான் சார் புரிஞ்சது...
அவனுக்கும் தமிழ் தெரியும்.. எனக்கும் தமிழ் தெரியும்..
நாதாரி..ஆங்கிலத்திலே கேட்கிறானாமா.. ஆங்கிலத்தில....
அப்புறம் நடந்த உரையாடலை தமிழ்படுத்தி கொடுத்துள்ளேன்..நீங்களே பாருங்க...
சார்.. குடிப்பது, அசைவம் , சைவம் பற்றி என்ன நினைக்கிறீகள்.. குடி உடம்புக்கு கெடுதலா..?
வெஜிடேரியன் உடம்புக்கு நல்லதுதான்.. உடம்பை ஈஸியா வைத்திருக்க உதவும்.. அதனாலதான் டெய்லி பீர் குடிக்கிறேன்...
ஆல்கஹால்தான் உடம்புக்கு கெடுதல்தானே சார்.
இல்லை..இல்லை.. வைன் எதுல இருந்து தயாரிக்கறாங்க.. பழங்கள்தானே..
பிராண்டி, சுத்திகரிக்கப்பட்ட வைன்ல இருந்து வருவது..
பியர் பார்லியிலிருந்து தயாரிக்கப்படுகிறது.. அப்புறம் என்ன கெடுதல்? ...
சார்.. இதய ஆரோக்கியப் பயிற்சிகளால், வாழ் நாள் அதிகரிக்கும் என்கிறார்களே.. அது உண்மையா ?.
ஒரு கார் -னு எடுத்துகிட்டா , அதில இஞ்சின் என்பது இதயம்..
கார் தயாரித்தவங்க என்ன சொல்றாங்க?..நார்மல் கண்டிஷன்ல , இஞ்சின் 100,000 கி.மீ.. பிரச்சனியில்லாமல் ஓடும்..
உடற்பயிற்சி என்பது, இதயத்துடிப்பை அதிகரிப்பது....
உதாரணத்துக்கு , உங்கள் கார் இஞ்சின் வேகமாக ஓடினால் , இஞ்சின் ஆயுட்காலம் நீடிக்குமா அல்லது
குறையுமா?.
100,000 கி.மீ நீங்க 20 வருசத்திலையும் ஓட்டலாம்.. அல்லது 40 வருடம் வரையும் ஓட்டலாம்..
எது என முடிவு செய்ய வேண்டியது நீங்கதான்..
அதனால் , நேரம் கிடைக்கும்போது நிம்மதியாகத் குட்டி தூக்கம் போடுங்கள்..
இந்த Body / Fat ratio .. அதைபற்றி விளக்கமுடியுமா?
இப்போ உங்களுக்கு ஒரு Body , அதில் FAT இருந்தால் 1:1
அப்படியில்லாம , ரெண்டு Body இருந்தால் 2:1.. etc..
சார். இந்த பொறித்த (பிரை) பண்ணிய உணவுகளை சாப்பிடக்கூடாதுனு சொல்றாங்களே..
தம்பி....பிரை, எதில் பண்றாங்க?.. வெஜிடபிள் ஆயில்ல..
அப்படினா நீங்க ரொம்ப வெஜிடபிள் சாப்பிடுகிறீர்கள்...அது நல்லதுதானே....
Sit-Ups செய்தால் வயிறு குறையும் என்ற கருத்து....
தவறான கருத்து..
உடற்பயிற்சி செய்தால் உங்கள் தசை பெரிதாகும் என்பது எல்லோருக்கும் தெரியும்..
உங்களுக்கு வயிறு வேண்டுமென்றால் Sit-Ups செய்யலாம்.. தவறில்லை..
சாக்லெட் கெடுதலா?
சாக்லெட் ..ம்.. "Cocoa Beans"ல இருந்து சாக்லெட் செய்யறாங்க .. அதுவும் ஒரு வெஜிடபிள்.. எனக்கு தெரிந்து,
உலகத்திலேயே சிறந்த உணவு சாக்லெட்தான்..
உடம்பை அழகாக வைத்திருக்க நீச்சல் நல்ல உடற்பயிற்சியா டாக்டர்?..
சரி.. நீச்சல் உடம்பை அழகாக வைத்திருக்க உதவுமெனில் , திமிங்கலத்தின் உடம்பை பற்றி எனக்கு கூறுங்களேன்...
உடம்பை Shape - ஆக வைத்திருப்பது , வாழ்க்கைக்கு உதவுமா?
Round-ம் ஒரு
Shape தானே தம்பி...
அந்தகாலத்து ஆளுக எல்லாம் உங்கள கெடுத்து வைத்திருக்கிறார்கள்..
பிறந்து , வளர்ந்து , கடைசியில் இறப்பது வரை , அது ஒரு நெடிய, வாழ்க்கை பயணம்..
ரோலர் கோஸ்டரில்,
' A , B ' ரெண்டுபேரு பயணம் செய்கிறர்கள் என வைத்துக்கொள்வோம்..
பயண முடிவுல
A- தலை கலையாமல், சட்டை கசங்காமல் , பயணத்தை முடிக்கிறார்.
B- தலை கலைந்து , சட்டை மேலேறி.. அட....,ஒரு பைத்தியகாரன் போல
இறங்குகிறான்..
யார் பயணத்தை அனுபவித்தது ...
A-யா B-யா ?..யோசனை பண்ணுங்க...
நல்ல உடம்பை மெயின்டெயின் பண்ணி , அழகாக சுடுகாட்டுக்கு செல்வதா?
இல்லை
நல்லா தண்ணியாடிச்சுட்டு ,கை, கால்ல காயம் பண்ணிகிட்டு, தலையிலே பாதி முடி காணாம போயி, வாழ்க்கைய அனுபவிச்சுட்டு ,
வெற்றி , வெற்றி கத்திகிட்டு சுடுகாட்டுக்கு செல்வதா?
சிந்தியுங்கள் மக்களே..
அப்பாடா..
பெருசு ஒரு வழியா பேசி முடிக்கவும் , எங்க பியர் முடியவும் சரியாயிருந்தது..
ஆனா ஒண்ணு பட்டும் சார்..
கடைசியா சொன்னாரு பாருங்க...
- ஜப்பாங்காரங்க குறைவான FAT எடுத்துக்கிறாங்க..அதனால ஹார்ட் அட்டாக் வருவது, அமெரிக்கனைவிட கம்மி..
- மெக்சிகன் அதிகமான FAT எடுத்துக்கிறாங்க..ஆனாலும் ஹார்ட் அட்டாக் வருவது, அமெரிக்கனைவிட கம்மி..
- சீனனுக குறைவான Wine குடிக்கிறாங்க..அதனால ஹார்ட் அட்டாக் வருவது, அமெரிக்கனைவிட கம்மி..
- இத்தாலிகாரனுக அதிகமான Wine எடுத்துக்கிறாங்க..ஆனாலும் ஹார்ட் அட்டாக் வருவது, அமெரிக்கனைவிட கம்மி..
- ஜெர்மங்காரனுக அதிகமான BEER எடுத்துக்கிறாங்க..ஆனாலும் ஹார்ட் அட்டாக் வருவது, அமெரிக்கனைவிட கம்மி
இதிலிருந்து என்ன தெரியுது?.. பெருசு எங்களை கேட்குது..
எங்களுக்கு Confuss ஆயிடுச்சு.
எங்க மூஞ்சி இஞ்சி தின்ன குரங்கு மாறி மாறுனதாலே , பெருசே பதிலையும் சொல்லிடுச்சு..
என்னவா ?
நல்லா குடி.. நல்லா தின்னு..
ஆனா ஆங்கிலம் பேசுனா ஹார்ட் அட்டாக் வருவதற்க்கு சான்ஸ் அதிகமாம்..
அய்யோ சாமி...
தல கிர்னு சுத்திடுச்சு...
முக்கியமான மேட்டரை விட்டுவிட்டேன்..
மேல சொன்னதெல்லாம் தாத்தாவோட கருத்து..
பின்பற்றுவதும் , துடைத்துப் போட்டுவிட்டு அடுத்த பதிவைப் படிக்கப்போவதும் உங்கள் விருப்பம்...
என்னைய குறை சொல்லாதீங்க அப்புகளா..........
.
.
.
அந்த சீனக்கிழவனாரை பார்க்கனுமா?..
கீழ இருக்காறே.. அவர்தான்.. ......
...ம்..ம்.....நல்ல டாக்டர் சார்.... .
.
.
.
.