அய்யா பட்டாபட்டியாரே..
நான் கல்லூரியில் , முதலாம் ஆண்டு படித்துவருகிறேன்..எனது சீனியர் மாணவர்கள், 'அலட்டல்' என்ற பெயரில் நடத்தும் 'லொள்ளை' தாளமுடியவில்லை..
அன்று ஒரு நாள் , பூச்செடிகளை நடலாம் என் நினைத்து ,( ஏதோ இந்த செமஸ்டரில் , கொஞ்சம் படம் காண்பித்து 'Internal Marks'
வாங்கலாமென...ஹி..ஹி ) எங்கள் வகுப்பு மாணவர்கள் , கஷ்டப்பட்டு குழி தோண்டினோம்..
நல்ல கரடு முரடான பூமி.. ஒரு அடி தோண்டிவிட்டு ,முடியாததால்... தண்ணீரை ஊற்றிவிட்டு, மறு நாள் தோண்டலாம் என நாங்கள்
ஹாஸ்டலுக்குப் போய்விட்டோம்..
மறு நாள் வந்துபார்த்தால் , எங்களுக்கு ஆச்சரியம்..
இந்த சீனியர்கள் , விடியக் காலை வந்து , அந்த ஈரமணலை ஈசியாக அகற்றிவிட்டு , பூச்செடிகளை நட்டுவிட்டனர்.
அதுமட்டுமா.. அருகில் 'இரண்டாமாண்டு மாணவர்களின் சமூகத்தொண்டு ' என்ற போர்ட் எங்களைப் பார்த்து பல்லிளிக்கிறது..
எப்படியிருக்கும் சார் எங்களுக்கு..
நேரா போயி, மூஞ்சியில குத்தலாம் என்றால், தடி தடியாக நிற்கிறார்கள்.. நாங்கள் என்ன சார் செய்வது...?
-இப்படிக்கு ஜுனியர் பயலுக..
யோவ்.. நல்லா வருது வாயில...
படிக்க அனுப்பினா , படிக்கறத தவிர , மற்றதெல்லாம் பண்றீங்க..
என்னயா நினச்சுகிட்டு இருக்கீங்க மனசுல...
மார்க் வாங்கனுமுனா , சனி ஞாயிரு , வாத்தியாருவீட்டுக்குப் போயி மாடு , கன்னு கழுவு.. இல்லாட்டி , அவங்க காரு, பைக்க கழுவு.. அத விட்டுட்டு , பூச்செடி வைக்கரானுகலாமா..
என்னய உடுங்க வெளியூர்காரரே.. ஒரு கை பாத்துக்கறேன்..
ஏய்யா.. செடி கொடியெல்லாம் வெச்சு 'போட்டா' புடிச்சு , இப்பதான் அரசியல் பண்ணிட்டு இருக்கோம்.. நடுவுல வந்து குறுக்கு ஒழவு ஓட்டுட்டு இருக்கானுக...
நீ படிக்கறப்போ வந்து நாங்க ஏதாவது மார்க் வேணுமுனு பிரச்சனை பண்ணினமா?. அப்புறம் எதுக்கையா , எங்க தொழிலுக்கு ஆப்பு வக்கிறீங்க..
சின்னப் புள்ளத்தனமா பண்ணிகிட்டு..சரி.. சரி.. அழுவாத..கண்ணத் தொடச்சுக்க....
இப்ப சொல்றேன் கேட்டுக்கோ..இந்த கேங்க் சேர்த்துட்டு , செடி நட்டரது ,
சமூக சேவையினு ஊர் கூட்டரது.. கோலம் போடரது.. இதெல்லாம் நாங்க பார்த்துக்கிறோம்.. மீறி ஆசையினா , எங்க கட்சி பேனர்ல செய்யி..... உன்னைய வேண்டாங்கல...
சரி.. உங்க பிரச்சனைக்கு வரேன்..தேன் எடுக்கறவன் ஒருத்தன்.. ந%#$# போறவன் இன்னோருத்தன்.. அடுத்த தடவை என்ன பண்ணு.!!!.....காலேஸ்-ல கொடிய நடப்போறோம்னு மைதானத்துல, நட்ட நடு சென்டரல ,
ஒரு குழியத்தோண்டு ..
எப்போ மாறி , கொஞ்சம் தண்ணி ஊத்திட்டு , 'ரூம்' -க்கு போயிடுங்க..
ஆனா, காலையிலே 4 மணிக்கு அலாரம் வெச்சுட்டு , ஒரு நாலு பய புள்ளைக மட்டும் எந்திருச்சு, இந்த குழில , ஒண்ணு, ரெண்டு முடிஞ்சா மூணு எல்லாம இருந்துட்டு , நிம்மதியா போயி பட்டாபட்டிய நினைச்சுட்டு தூங்குங்க...
அந்த சீனியரு நாறப் பயளுக , காலையில வந்து மண்ண வெளிய எடுத்து போட்டு நாறட்டும் ...
நல்லா விடிந்த பிறகு , ' பட்டாபட்டி வாழ்க ' ஒரு போர்ட பக்கத்தில வெச்சு ஒரு மாலையப் போட்டு பத்திரிக்கைக்கு நியூஸ்-க் குடு....
இதுக்குப் போயி...
.
.
.
unnga lollu thangalanna
ReplyDeleteயோவ்..என்னடா.. பட்டாபட்டி திருந்திட்டானு பாத்தேன்..
ReplyDeleteஊகும்..
படிக்கற பய புள்ளைகள கெடுக்கிறீர்.. தேறாது..
//pakkathu veetukaran said...
ReplyDeleteunnga lollu thangalanna
//
என்னா பக்கத்து வீட்டுக்காரன் சார்.. உண்மையச்சொன்னா லொள்ளுங்கிறீங்க..
//manithan said...
ReplyDeleteயோவ்..என்னடா.. பட்டாபட்டி திருந்திட்டானு பாத்தேன்..
ஊகும்..
படிக்கற பய புள்ளைகள கெடுக்கிறீர்.. தேறாது..
//
என்னாது... காந்திய சுட்டுடாங்களா?
யோவ் பட்டாபட்டி...பொதுக்குழுவுல அவனை நம்பாத...ஒரு லெமன் ஜூஸுக்காக நாட்டையே காட்டிக் குடுப்பான். உள்துறையாவது குடுங்கைய்யா..கை அரிக்குது!
ReplyDeleteஅரசமரம்....இல்ல அரசியல் மரம் இன்னா தேதி வரைக்கும் எத்தனைங்கண்ணா முளைச்சிருக்குது?
ReplyDeleteஅப்புறம்,உங்களுக்கும்,வெள்ளைக்கார....சீ...வெளியூருக்காரனுக்கும் ஏதாவது இடுகை கொடுக்கல் வாங்கலுங்களா?ரெண்டு பேரும் செம தாளி தாளிக்கிறீங்க:)
அய்யா மாண்புமிகு பட்டாபட்டி அவர்களே நான் கட்சியில் பதவி கேட்டியிருந்தனே என்ன ஆச்சு?
ReplyDeleteநல்லா வயிறு வலிக்க சிரிக்கும் பதிவு.
// நீ படிக்கறப்போ வந்து நாங்க ஏதாவது மார்க் வேணுமுனு பிரச்சனை பண்ணினமா?. அப்புறம் எதுக்கையா , எங்க தொழிலுக்கு ஆப்பு வக்கிறீங்க.. //
அதானே அது எப்படி நம்ம லைனில் கிராஸ் பண்ணலாம். இவனுக எல்லாம் ஆரம்பத்திலேயே வெட்டி விடனும். இல்லைன்னா நம்ம கழுத்த அறுப்பானுக. நன்றி.
டாக்டர் பரிந்துரை:பி.பி. மாத்திரைக்குப்பதில் பட்டாபட்டியைப் படிககலாம.
ReplyDeleteமார்க் வாங்கனுமுனா , சனி ஞாயிரு , வாத்தியாருவீட்டுக்குப் போயி மாடு , கன்னு கழுவு.. இல்லாட்டி , அவங்க காரு, பைக்க கழுவு.. அத விட்டுட்டு , பூச்செடி வைக்கரானுகலாமா..
எப்போ மாறி , கொஞ்சம் தண்ணி ஊத்திட்டு , 'ரூம்' -க்கு போயிடுங்க..
ஆனா, காலையிலே 4 மணிக்கு அலாரம் வெச்சுட்டு , ஒரு நாலு பய புள்ளைக மட்டும் எந்திருச்சு, இந்த குழில , ஒண்ணு, ரெண்டு முடிஞ்சா மூணு எல்லாம இருந்துட்டு , நிம்மதியா போயி பட்டாபட்டிய நினைச்சுட்டு தூங்குங்க...
அந்த சீனியரு நாறப் பயளுக , காலையில வந்து மண்ண வெளிய எடுத்து போட்டு நாறட்டும் ..
தாங்க முடியலடா ராசா.ஹ.....ஹா.ஹா...ஹ்க்...ஹ்க்...முடியல...
தினம் ஒரு தகவல் இன்னிக்கு நல்லா இருக்கு..
ReplyDelete// நீ படிக்கறப்போ வந்து நாங்க ஏதாவது மார்க் வேணுமுனு பிரச்சனை பண்ணினமா?. அப்புறம் எதுக்கையா , எங்க தொழிலுக்கு ஆப்பு வக்கிறீங்க.. //
ReplyDeleteGood one buddy... :)
//ரெட்டைவால் ' ஸ் said...
ReplyDeleteயோவ் பட்டாபட்டி...பொதுக்குழுவுல அவனை நம்பாத...ஒரு லெமன் ஜூஸுக்காக நாட்டையே காட்டிக் குடுப்பான். உள்துறையாவது குடுங்கைய்யா..கை அரிக்குது!
//
அண்ணா.. உடுங்க.. லெமன் ஜூஸ்ல ஒரு மாத்திரையப் போட்டு 'வெளி நடப்பு ' பண்ற மாறி,
ஏற்பாடு பண்ணிடலாம்.. நாம பண்ணாத அரசியலா?..
//ராஜ நடராஜன் said...
ReplyDeleteஅரசமரம்....இல்ல அரசியல் மரம் இன்னா தேதி வரைக்கும் எத்தனைங்கண்ணா முளைச்சிருக்குது?
அப்புறம்,உங்களுக்கும்,வெள்ளைக்கார....சீ...வெளியூருக்காரனுக்கும் ஏதாவது இடுகை கொடுக்கல் வாங்கலுங்களா?ரெண்டு பேரும் செம தாளி தாளிக்கிறீங்க:)
//
யாரு ப.மு.க தலைவராவது என்று உள் நாட்டுப்( அட.. நம்ம சிங்கப்பூர் ) பிரச்சனைங்கண்ணா..
இதில வேற ரெட்டைவால் ஒரு சூப்பர் பீஸா , அவருக்கே தெரியாம சொல்லிட்டாரு..
அதுதாங்க .... வெளியூர்காரனுக்கு லெமன் ஜூஸ் புடிக்குமாமே...
இது தெரியாம...நான் கண்முழிச்சு என்னனென்னமோ ப்ளான் பண்ணி, சே...... டைம வேஸ்ட் பண்ணிட்டேன்...
//பித்தனின் வாக்கு said...
ReplyDeleteஅய்யா மாண்புமிகு பட்டாபட்டி அவர்களே நான் கட்சியில் பதவி கேட்டியிருந்தனே என்ன ஆச்சு?
நல்லா வயிறு வலிக்க சிரிக்கும் பதிவு.
அதானே அது எப்படி நம்ம லைனில் கிராஸ் பண்ணலாம். இவனுக எல்லாம் ஆரம்பத்திலேயே வெட்டி விடனும். இல்லைன்னா நம்ம கழுத்த அறுப்பானுக. நன்றி.
//
அண்ணா.. எல்லாம் பொதுக்குழுக்கு வந்து சேருங்க.. லெமன் ஜுஸ்-ச குடிச்சுகிட்டே முடிவு பண்ணிடலாம்
ரெட்டைவால் ' ஸ் said...@யோவ் பட்டாபட்டி...பொதுக்குழுவுல அவனை நம்பாத...ஒரு லெமன் ஜூஸுக்காக நாட்டையே காட்டிக் குடுப்பான். உள்துறையாவது குடுங்கைய்யா..கை அரிக்குது!///
ReplyDeleteஇத நான் வன்மையாக கண்டிக்கறேன்...அரசியல் நாகரீகம் இல்லாம ஒரு கட்சியோட மாநில தலைவர லெமன் சூசுக்காக நாட்ட காட்டி குடுப்பான்னு அபாண்டமா பழி சுமத்தறது மிகவும் கேவலமான செயல்...எனதருமை எதிர்க்கட்சி தலைவர் ரெட்டைவால்சை பார்த்து நான் ஒன்று கேட்கிறேன்...அண்ணா நகர்ல பாலம் கட்ற டெண்டர பட்டாபட்டியோட மச்சினனுக்கு குடுப்பதற்கு நான் எவளவு சி வாங்கினேன் என்று தங்களால் சொல்லமுடியுமா..கொடிகளில் புரளும் ஒரு தலைவனை பொய் லெமன் சூசுக்கு அலைபவன் என்று சொல்லி அசிங்கபடுத்த வேண்டாம் என்று ரெட்டைவால்சை எச்சரிக்கிறேன்.....யோவ் பட்டாபட்டி..உள்துறை மட்டும் எனக்கு வரலை...ஏன்னா நடக்கும்னு உனக்கே தெரியும்.(உள்துறை தர்றேன்னு சொல்லி விளாத்திகுளம் MP கிட்ட காசு வாங்கிட்டன்யா...இப்ப குடுக்கலைனா என் CD ஒன்னு அவன்ட்ட இருக்கு..அத ரிலீஸ் பண்ணிடுவான்யா...பார்த்து போட்டுகுடுயா...வேணா ரெட்டைவால்ச்க்கு Home Ministrya குடுத்துரு...உள்துறைய நான் வெச்சுக்கறேன்.. .)
//கண்ணகி said...
ReplyDeleteடாக்டர் பரிந்துரை:பி.பி. மாத்திரைக்குப்பதில் பட்டாபட்டியைப் படிககலாம.
தாங்க முடியலடா ராசா.ஹ.....ஹா.ஹா...ஹ்க்...ஹ்க்...முடியல...
தினம் ஒரு தகவல் இன்னிக்கு நல்லா இருக்கு..
//
அடுத்த பதிவு வந்ததும் பாருங்க..( முனியனுக்கு ஒரு சூப்பர் டிப்ஸ் சொல்லியிருக்கேன்..)
அப்புறமா சொல்லுங்க..
//Veliyoorkaran said...
ReplyDeleteGood one buddy... :)
//
ஆகா.. நூறூ ஆயுசுயா உமக்கு...
இப்பதான் உம்மை பற்றி ரெட்டை வால்
பெருமையா பேசிட்டிருந்தாரு...
பங்காளி உன் CD ய சன் பிக்ச்சர்ஸ்ல போட்டு காமிச்சேன்...ஒரு நல்ல ரேட் சொல்லிருக்காங்க..சட்டுபுட்டுன்னு சீக்கிரம் முடிவ சொல்லு..ரொம்ப இழுத்தா அப்பறம் நான் லட்சிய தி மு க ல போய் சேர்ந்துடுவேன்..உள்துறை எனக்கா....இல்ல ரெட்டைவால்ச்க்கா....???
ReplyDelete//Veliyoorkaran said...
ReplyDeleteஇத நான் வன்மையாக கண்டிக்கறேன்...அரசியல் நாகரீகம் இல்லாம ஒரு கட்சியோட மாநில தலைவர லெமன் சூசுக்காக நாட்ட காட்டி குடுப்பான்னு அபாண்டமா பழி சுமத்தறது மிகவும் கேவலமான செயல்...எனதருமை எதிர்க்கட்சி தலைவர் ரெட்டைவால்சை பார்த்து நான் ஒன்று கேட்கிறேன்...அண்ணா நகர்ல பாலம் கட்ற டெண்டர பட்டாபட்டியோட மச்சினனுக்கு குடுப்பதற்கு நான் எவளவு சி வாங்கினேன் என்று தங்களால் சொல்லமுடியுமா..கொடிகளில் புரளும் ஒரு தலைவனை பொய் லெமன் சூசுக்கு அலைபவன் என்று சொல்லி அசிங்கபடுத்த வேண்டாம் என்று ரெட்டைவால்சை எச்சரிக்கிறேன்.....யோவ் பட்டாபட்டி..உள்துறை மட்டும் எனக்கு வரலை...ஏன்னா நடக்கும்னு உனக்கே தெரியும்.(உள்துறை தர்றேன்னு சொல்லி விளாத்திகுளம் MP கிட்ட காசு வாங்கிட்டன்யா...இப்ப குடுக்கலைனா என் CD ஒன்னு அவன்ட்ட இருக்கு..அத ரிலீஸ் பண்ணிடுவான்யா...பார்த்து போட்டுகுடுயா...வேணா ரெட்டைவால்ச்க்கு Home Ministrya குடுத்துரு...உள்துறைய நான் வெச்சுக்கறேன்.. .)
யோவ்.. வெளியூரு..
உம்ம பதில படிச்சுட்டு கண்ல தண்ணிவர மாறி சிரிச்சுக்கிட்டு இருந்தேனய்யா..
அப்போ ஒரு சீனப் பிஸு , என்னமோ அவங்க பாஷையில என்னைய ' மாமா'-னு சொல்லுட்டு வந்தது..
நான் சிரிச்சுட்டு இருக்கறதப் பார்த்து பின்னங்கால் பிடரில பட ஓடிப்போயிடுச்சு அப்பு.. ஓடிப்போயிடுச்சு
//Veliyoorkaran said...
ReplyDeleteபங்காளி உன் CD ய சன் பிக்ச்சர்ஸ்ல போட்டு காமிச்சேன்...ஒரு நல்ல ரேட் சொல்லிருக்காங்க..சட்டுபுட்டுன்னு சீக்கிரம் முடிவ சொல்லு..ரொம்ப இழுத்தா அப்பறம் நான் லட்சிய தி மு க ல போய் சேர்ந்துடுவேன்..உள்துறை எனக்கா....இல்ல ரெட்டைவால்ச்க்கா....???
//
யோவ்.. அந்த சீ.டி ய Sunday மட்டும், போட வேண்டாமுனு சொல்லுமய்யா..
மற்ற நாளுன ஏதாவது சொல்லி சமாளிச்சுக்கலாம்..
எதுக்கு சண்டை பங்காளி...பக்கதில இருக்கற அமெரிக்கா , ஓ.கே வா..
பொன் முடி கிட்ட சொல்லி , ஸ்பெசல் பஸ் வேணா, ஒரு நாளைக்கு ரெண்டு தடவ உடச்சொல்ரேன்..
//மார்க் வாங்கனுமுனா , சனி ஞாயிரு , வாத்தியாருவீட்டுக்குப் போயி மாடு , கன்னு கழுவு.. இல்லாட்டி , அவங்க காரு, பைக்க கழுவு.. அத விட்டுட்டு , பூச்செடி வைக்கரானுகலாமா..
ReplyDeleteஎப்போ மாறி , கொஞ்சம் தண்ணி ஊத்திட்டு , 'ரூம்' -க்கு போயிடுங்க..
ஆனா, காலையிலே 4 மணிக்கு அலாரம் வெச்சுட்டு , ஒரு நாலு பய புள்ளைக மட்டும் எந்திருச்சு, இந்த குழில , ஒண்ணு, ரெண்டு முடிஞ்சா மூணு எல்லாம இருந்துட்டு , நிம்மதியா போயி பட்டாபட்டிய நினைச்சுட்டு தூங்குங்க...
அந்த சீனியரு நாறப் பயளுக , காலையில வந்து மண்ண வெளிய எடுத்து போட்டு நாறட்டும் ..//
:-)))
யப்பே.... முடியல....
தலைவரே ,,
ReplyDeleteஎன்னே உங்க பொது அறிவு ?!!
மரம் வைக்கறதுக்கு முன்னாடி உரம் வைக்கனும்னு சொன்னீங்க பார்த்தீங்களா அங்க காண்பிக்கறீங்க உங்க பொது அறிவை !!
//அகல்விளக்கு said...
ReplyDeleteயப்பே.... முடியல...
//
இப்பதான தொடங்கியிருக்கோம்.. வருவமில்ல...
//யூர்கன் க்ருகியர் said...
ReplyDeleteதலைவரே ,,
என்னே உங்க பொது அறிவு ?!!
மரம் வைக்கறதுக்கு முன்னாடி உரம் வைக்கனும்னு சொன்னீங்க பார்த்தீங்களா அங்க காண்பிக்கறீங்க உங்க பொது அறிவை !!
//
அப்பு.. நம்ம R & D -ல சேர்ந்துக்குக்கோங்க அப்பு..
நல்ல நல்ல டிப்ஸ் கொடுக்கிறீங்க
அது R&D இல்லைய்யா பொலிட் பீரோ...பொலிட் பீரோல என்ன பண்ணுவோம்னு கேக்கறீங்களா...அடிச்ச துட்டெல்லாம் பதுக்கிட்டு கூடி உக்காந்து தண்ணியப் போட்டு எல்லாருக்கும் பிம்பிலிக்கி பிலாப்பி...யோவ் சபாநாயகர் போஸ்டாவது குடுங்கைய்யா..இந்நேரத்துக்கு அம்மாக்கிட்ட துட்டை வெட்டிருந்தா ஒரு மாவட்ட செயலாளர் போஸ்டாவது உஷார் பண்ணிருக்கலாம்..சே!
ReplyDelete//ரெட்டைவால் ' ஸ் said...
ReplyDeleteஅது R&D இல்லைய்யா பொலிட் பீரோ...பொலிட் பீரோல என்ன பண்ணுவோம்னு கேக்கறீங்களா...அடிச்ச துட்டெல்லாம் பதுக்கிட்டு கூடி உக்காந்து தண்ணியப் போட்டு எல்லாருக்கும் பிம்பிலிக்கி பிலாப்பி...யோவ் சபாநாயகர் போஸ்டாவது குடுங்கைய்யா..இந்நேரத்துக்கு அம்மாக்கிட்ட துட்டை வெட்டிருந்தா ஒரு மாவட்ட செயலாளர் போஸ்டாவது உஷார் பண்ணிருக்கலாம்..சே!
//
யோவ்..
சபா நாயகர்ன சும்மாவா..
யாரப் பாத்தாலும் வணக்கம் சொல்லனுமய்யா..
நீரு கையக் கட்டிட்டு இருக்கற ஸ்டைலப் பார்த்த ,
சாப்பிட மட்டும் தான் கைய எடுப்பீர் போலிருக்கு..
இன்னக்கு நைட்டு முடிவு பண்ணீடலாமய்யா...
அட்றா சக்கை.....அட்றா சக்கை.....
ReplyDeleteரவுசு தாங்கலப்பா ..:))
ReplyDeleteரெட்டைவால் ' ஸ் said...@///
ReplyDeleteரெட்டைவால்ஸ் சொல்றத பார்த்தா பொலிட் பீரோல்ளையும் நெறைய காசு சம்பாரிக்கலாம் போலருக்கு...யோவ் பட்டாப்பட்டி இன்னிக்கு நைட் பொதுகுழுவுல அந்த பீரோவ என் நாத்தனார் பேர்ல எழுதி வெக்கற...அப்டியே உன் கட்சிகாரங்கள விட்டு அத என் மாமியார் வீட்ல டோர் டெலிவரி பண்ண சொல்லிடு....ரெட்டைவால்ஸ் கூட்டனிய விட்டு வெளில போய்டுவாரு போல தெரியுது..விட்றாத..மனுஷனுக்கு மூளை ஜாஸ்தி..எதிர்கட்சில சேர்ந்து நம்மள காலி பண்ணிடுவான்..அதனால உள்துறைய ரெட்டைவால்ஸ்க்கு குடுத்துரு...அதுக்கு பதிலா இந்தியன் ஆர்மிய என் பேர்ல எழுதி குடுத்துரு..என்னா சொல்ற..இந்த டீல் ஓகேவா....?
உமக்கு சாமர்த்தியம் பத்தல ஒய்..தேர்தல் சமயத்துல இவ்ளோ ஸ்லோவா இருந்தா அப்பறம் எதிர்கட்சிகாரன் நம்ம வாய்ல வடை சுட்டுட்டு போய்டுவான்...இன்னிக்கு நைட் வரைக்கும்தான் உமக்கு டைம்..நம்ம கூட்டணில தொகுதி உடன்பாட்டுக்கு வரல..அப்பறம் நான் ரெட்டைவால்சுக்கு ஒரு ஐட்டம் சாங் அர்ரெஞ் வெச்சு, நெறைய சரக்கு வாங்கி குடுத்து மூன்றாம் அணி அமைச்சிடுவேன்....அப்பறம் உங்க இஷ்டம்...?
ReplyDeleteஹையா ஜாலி...மூன்றாவது அணி ஆட்சி அமைக்கப்போகுது,,,,நான் தான் பிரதமர்! யோவ் பட்டாபட்டி நீ சோனியா மாதிரி ..கட்சியை பாத்துக்க...வெளியூர்காரா...நீ தான் ரகுல் காந்தி மாதிரி..கிராமம் கிராமமா போய் உண்டக்கட்டி வாங்கி சாப்பிட்டு ப.மு.கவை வளர்த்துக்கிட்டு இரு. பிரதமரா நான் கொபன் ஹேகன் உச்சி மாநாட்டுக்கு டூர் போய்ட்டு வரேன்... பை பை....ஹி ஹி...!
ReplyDeleteரெட்டைவால் ' ஸ் said...@///அடிச்ச துட்டெல்லாம் பதுக்கிட்டு கூடி உக்காந்து தண்ணியப் போட்டு எல்லாருக்கும் பிம்பிலிக்கி பிலாப்பி..///
ReplyDeleteஆமாம், இந்த பிம்பில்லிக்கா ப்பில்லாபி என்றால் என்ன திரு.ரெட்டைவால்ஸ் அவர்களே..எங்கள் கழகத்தில் உட்டாலக்கடி கிரிகிரி என்று ஒரு முறை தற்போது அமுலில் உள்ளது..ஆனால் உங்கள் முறை காசை ஆட்டைய போடுவதில் எதோ ஒரு புது தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது போல எமக்கும் எம் உடன்பிறப்புகளுக்கும் தோன்றுகிறது..தாங்கள் இதை விளக்கினால் ஒரு கட்டிங்கும் கோழி கால் பிரியாணியும் வாங்கி தந்து உங்களை குஷி படுத்துவோம் என பட்டபட்டியாரின் மேல் ஆணையிட்டு கூறுகிறோம்...தாங்கள் விரும்பினால் பெசன்ட் நகர்ல ஒரு தெருவுக்கு தங்கள் பெயர் வைக்கப்பட்டு அடுத்த வருஷம் உங்களுக்கு கலைமாமணி அவார்டும் குடுக்க அரசுக்கு பரிந்துரைப்போம்..(இப்போ எல்லா நாய்க்கும் நாங்க ரெக்கமண்டேசன்லதான் குடுதுட்ருக்கோம்....)..சொல்லு வாத்யாரே...இவனுக அடிச்சத கரெக்டா பிரிக்க மாட்ராணுக...ரொம்ப பேஜாரா இருக்கு...இந்த கஸ்மாலன்களோட..!
கலைமாமணி யாருக்கு வேணும்..அதை சிவாஜி கணேசன் ல இருந்து சிம்பு சினி ஆர்ட்ஸ் வரைக்கும் எல்லா டுபுக்கும் வாங்கிட்டானுக...இப்போ இந்த ரஹ்மான் பய வாங்கின அவர்டுகள் ல ரெண்டை இந்தப் பக்கம் ஒதுக்கு..!
ReplyDeleteரெட்டைவால்ஸ் நீங்க சொல்றத பார்த்த மன்மோகன் சிங்க எதுக்கும் பிரோஜனம் இல்லாத வெத்து டோமர்னு சொல்றீங்களா..இல்ல ராகுல் காந்திய உண்டக்கட்டி வாங்கிதிங்கதான் லாயக்குன்னு சொல்றீங்களா..ராகுல் காந்திக்கு பார்லிமேன்ட்லதான் சரியா பேச வராது..வாய் உலரும்...கலாவதி கலாவதினு ...அதுக்கு மேல வார்த்தை வராது...எதிர்க்கட்சி எல்லாம் கேவலமா கலாய்பாங்கே.ப.சிதம்பரம் வந்து காப்பாத்துவாரு ...ஆனா உண்டக்கட்டி எப்டி வாங்கி தின்பாறு தெரியுமா.அவுக்கு அவுக்குன்னு...உங்களால கூட முடியாது...சோனியா எடத்துல நம்ம ஜெயந்தி நடராசன இருந்தாலும் அவங்க இத விட நல்ல பார்த்துப்பாங்க கட்சியங்கறது வேற...அத பத்தி நாம பேச வேணாம்...அப்பறம் இத்தாலி நாடு பொண்ண ஈவ் டீசிங் பண்றான் வெளியூர்காரன்னு ராஜ்நாத் சிங் நாளைக்கு அறிக்கை விடுவாரு..நமக்கு என் சாமி பெரிய எடத்து பொல்லாப்பு..நாம ப்ளாக் எழுதறதோட நிறுத்திக்குவோம்.....
ReplyDeleteயோவ்..
ReplyDeleteமூணுபேரும் சேர்த்து, கலக்குன கலக்குல ,
உண்டகட்டி வெளய வந்துரும் போல இருக்கையா...
ரெட்டைவால் ' ஸ் said..இப்போ இந்த ரஹ்மான் பய வாங்கின அவர்டுகள் ல ரெண்டை இந்தப் பக்கம் ஒதுக்கு..!..@//
ReplyDeleteஅவ்ளோதான..நாளைக்கே அந்த அவார்ட்ல ரெண்ட உங்களுக்கு குடுக்க சொல்லி போக்குவரத்து துறை அமைச்சருக்கு கடிதம் எழுதிடறேன்..ரெண்டு போதும்ல..இல்ல இன்னும் உங்க நண்பர்கள் யாருக்காச்சும் வேணுமா...வேனும்ன சொல்லுங்க..கழுதய குடுக்க சொல்லுவோம்..ஆட்சில இருந்துக்கிட்டு ஒரு அவார்டு கூட குடுத்துகலைனா எப்டி..(ஆமாம்...அந்த ஆஸ்கார் அவார்ட போக்குவரத்து துறைல தான குடுக்கறாங்க..இல்ல பொதுப்பணி துறையா..அது வேற ஒன்னும் இல்ல ஆபிஸ் போய் ரொம்ப நாள் ஆகுதா..அதான் டிபார்ட்மென்ட் மறந்துடுச்சு..கழக பணிகள்ல அம்புட்டு பிசி.. .)
ஓ.கே..
ReplyDeleteவெளியூர்காரன் & ரெட்டை வால்ஸ்..
பேசாம நாம மூவேந்தர் முன்னேற்றக் கழகம் ஆரம்பிச்சிடலாம்..
நீரு சென்னைய எடுத்துகிடும்..
நானு கோயமுத்தூர எடுத்துகிறேன்...
வெளியூர்காரனுக்கு மதுரைய கொடுத்திடலாம்...
டீலா...
என்னது.. ராகுல் காந்தியா..
சரி சரி.. ஆப்பீஸ்க்கு டீ சப்ளை பண்ணச்சொல்லலாம்..
என்னாது அவங்க அம்மாவா..
யோவ்.. சும்மாயிருக்கற நேரத்திலெ வடை சுட சொல்லலாம் அப்பு..
ஆமா.. எந்த நாதாரியாவது ,முன்னாடியே 'மூவேந்தர் முன்னேற்றக் கழகம் '
ஆரம்பிச்சிருந்தா , அட... காச வீசி பேர வாங்கிடலாமையா....
மூணே ஆளுக!ஆனா முப்பத்தி மூணு பேரு வந்த மாதிரி கட்சிக் கணக்கு காண்பிக்கிறீங்க.அதெப்படி?
ReplyDeleteஇன்னிக்கு இரவு கூடுற பொதுகுழுல அய்யா ரெட்டைவால்ஸ் அவர்கள் பெரிய மனது பண்ணி அந்த உள்துறைய எனக்கு பெருந்தன்மையோடும் பேரன்புடனும் விட்டுகொடுத்தால் என் காலம் காலத்திற்கும் அவர் காலடியில் நானும் எனது கழகமும் விசுவாசமாய் நாய் போல மண்டியிட்டு கிடப்போம் என்று இங்கு அறிவித்து கொள்கிறேன்...(...டேய் நாயே ரெட்டைவால்சு..நீ மட்டும் உள்ள பொதுகுழுல ராங் காட்டினு வெளியூர்காரனுக்கு குடுக்கமாட்டேன்னு சொல்லி எதாச்சும் மெர்சல் பண்ண , வெளியே வந்த உடனே பமுக ஆபீஸ் வாசல்லையே வெச்சு போடரண்டா உன்ன இன்னிக்கு.பார்த்தர்லாம்டா இன்னிக்கு நீனா நானான்னு....)
ReplyDeleteயோவ்.. கட்சித் தலைவன் நானே அமைதியா இருக்கேன்..
ReplyDeleteஎன்ன மீறி எப்படியா அவார்ட் கொடுப்பே...
( ஒரு வீடுனா தெரியாதய்யா..எதுக்கும் ஒரு வார்த்தை துணைவிகள் கிட்ட
கேட்டுகிட்டு , நாளைக்கு அறிக்கை விடலாமய்யா..அதுவரைக்கும் ஏதாவது டாஸ்மார்க் பக்கம் போங்கப்பு..)
உடுங்கய்யா.. தமிழகத்தின் தலைவிதி இதுதான் என்ன செய்யமுடியும்..
ReplyDeleteசரி.. இன்னைக்கு நைட்டு , சீட்டு குலுக்கிப் பார்த்தலாமையா..
ஐய்யோ ..குழந்தையா கீரியேப்பா பட்டாபட்டி..பிரிக்கரதுதான் பிரிக்கற..இந்தியாவ மூணு துண்ட பிரியா...டெல்லிய ரெட்டைவால்ஸ்க்கு குடுத்துரு..மும்பையா நீ வெச்சுக்க..மிச்சம் இருக்கற இந்த துண்டு துக்கடா மாநிலங்கள் 25 ஐயும் நான் பெருந்தன்மையோட ஏத்துகிட்டு வழிநடத்தறேன் ..என்னா சொல்ற...ஓகே வா..அதையும் இன்னிக்கே முடிவேடுதர்லாம்..
ReplyDeleteமக்களே.. இது உள் நாட்டுப் பிரச்சனை..
ReplyDeleteஉங்களுக்கு , டாஸ்மார்க் , 1 ரூபா அரிசி , டீ.வி
இலவச செருப்பு , பல்பொடி , அந்த 1 ஏக்கர்...... எப்பவும் போல கிடைக்கும் என்பதை
அறிவித்துக் கொள்கிறோம்..
பட்டாபட்டி.. said...@//
ReplyDeleteசீட்டுகுளுக்கியா..யோவ் எந்த காலத்துலய இருக்க..இதுக்கு ரெட்டைவால்ஸ் ஒத்துக்க மாட்டான்யா..அவன் படிச்சவன்..பொலிட் பீரோ பத்தியெல்லாம் பேசுறான்.நம்மள மாதிரி இல்லேன்னா நெனைக்கறேன்...புத்திசாலியா கீறான்....நீ ஒத்திக்க நைனா..நான் ரெட்டைவால்சுக்கு காபரே டான்ஸ் அர்ரெஞ் பண்ணி இன்னிக்கு கவுதட்ரேன்..மேற்கு வங்காளம் உனக்கு...தென் இந்தியா எனக்கு...இன்னிக்கு சைன் பண்றோம் ஒப்பந்தத்த..
யோவ்.. நான் இந்தி பேசினா , வெள்ளக்காரன் திருப்பி வந்துருவானையா..?
ReplyDeleteதமிழ்தான் தேசிய மொழினு சட்டம் போட்டுட்டு, அப்புறம் பிரிக்கலாம்.
யோவ் என்னையா சீரியசா பிசினஸ் பேசும்போது மக்களை பத்தியெல்லாம் பேசி காமெடி பண்ற...ஆளுக்கு ஒரு விண்டோஸ் 07 அப்க்ரேட் கிட் குடுபோம்யா...தேர்தல் பிரசாரத்துல கம்ப்யூட்டர் குடுத்ததா விளம்பரம் பண்ணுவோம்..ஏமாந்து போய் வோட்ட போட்ருவாணுக..அத விடு..மக்களை ஏமாத்தறது சப்ப மேட்டரு...நீ இப்போ கூட்டணிய பத்தி முடிவெடு...
ReplyDeleteயோவ் வெளியூரு.. நீர் சொன்ன மாறி( ரெட்டை வாலு) , பய படிச்ச புள்ள மாறிதான் தெரியுது..
ReplyDeleteஅவரு ப்ளாக்க வாஸ்துக்காக மாத்தி வெச்சுட்டார்..
கூப்பிடையா அந்த வாஸ்துக்காரனை..........
விண்டோஸ வாஸ்துக்காக மாத்தி , மக்களுக்கு இலவசமா குடுக்கலாம்..
ReplyDelete( Screen மஞ்சக் கலர்தான் )
என்ன பட்டு...குழந்த சாமி நீங்க..தென் இந்தியா என்கிட்ட இருக்கும்போது நீ எப்டி ஒய் டெல்லிலேர்ந்து ஆட்சி பண்ணுவ..இந்தியாவோட தலைநகரம் தஞ்சாவூர்ல ஒய்...எல்லா தீவிரவாதிக்கும் ஹிந்தி தெரியுதுங்கர காரனத்த காட்டி ஹிந்திய தீவிரவாத மொழியா அறிவிச்சிடுவோம்..அதுக்கப்றம் நமக்கு ஏன்யா பிரச்சனை...நம்மளால அவனுகளுக்குதான் பிரச்சன...
ReplyDeleteவெளியூர்காரனை விட்டா அவன் பாட்டுக்கு பேசிக்கிட்டே ஒபாமாட்ட இந்தியாவை வித்துடுவான்.. நான் சபா நாயகர் ஆவாட்டியும் பரவாயில்லை..அவனுக்கு உள்துறையைக் கொடுத்தீன்னா மவனே ஜட்டி கூட மிஞ்சாது...அவன் உள்துறைன்னா வேற என்னமோ நினைச்சிட்டு இருக்கான்யா...
ReplyDeleteநீ நல்ல முடிவா சொல்லலை...3 பேரு இன்னிக்கு Fire Bath எடுப்பானுங்க...அப்புறம் மறுமலர்ச்சி ப.மு.க ஆரம்பிக்க வேண்டியிருக்கும்.
அட ஆமா..
ReplyDeleteநாளைக்குப் பேப்பர்ல , 'சிக்கன நடவடிக்கை எடுத்த சிந்தாமணி செல்வனே'
என ஒரு பட்டம் கொடுத்திட்டு ( அட எனக்குத்தான்...
. இனி டெல்லிக்கு போக வேண்டியதில்லை பாரு..எவ்வளவு பெட் ரோல் மீதியாகும்..1 ரூபா குறைத்த பட்டாபட்டியார் வாழ்க 18 * 18 போர்ட் வையுங்கப்பா... அப்படியே அள்ளுங்கப்பா ஓட்ட..)
என்னாது ஒபாமா இந்தியாவ வாங்கற ஐடியால இருக்காரா...அட கழக கம்மனாட்டிங்களா இத ஏன்டா என்கிட்டே முன்னாடியே சொல்லல..போன வருசமே நல்ல ரேட்டுக்கு முடிச்சிட்டு இந்நேரம் ஸ்வீடன்ல செட்டில் ஆய்ருப்பனே...(yov pangaali..commentsla fifty potathu intha veliyoorkaaranthaan..manasula vechukka oi...)
ReplyDelete'சிக்கன நடவடிக்கை எடுத்த சிந்தாமணி செல்வனே'
ReplyDeleteஎன ஒரு பட்டம் கொடுத்திட்டு ///
சிக்கன் சாப்பிட்டு நடவடிக்கைய எடுக்கப் போறியா..யோவ்! பேசாம ஃப்ரீயா எல்லாருக்கும் வின்டோஸ் 7க்கு பதிலா சிக்கன் 65 குடுத்துருவோம் யா...
பொது அறிவு இல்லாமல் என்னை அசிங்கபடுத்த நினைக்கும் ரெட்டைவால்சுக்கு ஒன்று சொல்லிக்கொள்ள கடமைபட்டிரிகிறேன்...இந்திய மக்களுக்கு ஜட்டி மிஞ்சவில்லை எனில்...கழக கண்மணிகளின் சார்பில் அனைவருக்கும் பட்டாப்பட்டி டிராயர் வழங்கப்படும் என மனமகிழ்ச்சியோடு அறிவித்து கொள்கிறேன்...(டேய் மகனே..உன் கட்சில மூணு பேரு எரிஞ்சா,எனக்காக இன்னிக்கு பட்டபட்டியாரே தீக்குளிபாருடா..யாருப்பா அது...பெட்ரோல் கேன ரெடி பன்னுபா..தக்காளி இன்னிக்கு பீசு மிஸ் ஆக கூடாது...)
ReplyDeleteயோவ்.. ங்கொய்யாலே..
ReplyDeleteமூணூ பேரு முட்டிகிட்டதுக்கே 50 கமெண்சுனா,
நீங்க நிசமாவே ஆட்சிக்கு வந்தா எங்க கதி?...
பேசியே எங்களை பிச்சைக்காரன் ஆக்கிடுவீங்களே..
யோவ் .. சந்தடி சாக்கில என்னையே போட்டு தள்ள முடிவு பண்ணீட்டிரு இல்ல..
ReplyDeleteகளத்தில நேரே மோதுவோம்..
பட்டாபட்டி...இதுவரைக்கும் தொண்டனுங்க தீ குளிச்சுதான் பார்த்திருக்கேன்...ஒரு கட்சி தலைவன் தீ குளிச்சு பார்த்ததே இல்லை.ப்ளீஸ்...தலைவரே நீ இந்த நாட்டுக்கு முன்னுதாரணமா இருக்க வேணாமா...Take the Fire Bath
ReplyDeleteரெட்டைவால்ஸ் பட்டாபட்டியார் நம்மள எதிர்க்க முடிவு பண்ணிட்டாரு...இனிமே இவர உயிரோட வெளில விடறது அரசியல் நாகரீகம் கெடயாது...நீங்க உம்னு ஒரு வார்த்த சொல்லுங்க..பொதுகுழு கூட்டம் முடிஞ்சோன்ன ஆள என் பசங்க தூக்கிருவாணுக...எதிர்க்கட்சி மேல பழிய போட்டு அனுதாப வோட்டுல நாம ஆட்சிய புடிச்சர்லாம்..நீங்க விருப்பட்ட மாதிரியே உள்துறைய நீங்க வெச்சுகோங்க...நீங்களா பார்த்து எனக்கு எதாச்சும் செஞ்சா போதும்..என்ன சொல்றீங்க..பட்டாபட்டிய அவுத்தர்லாமா..
ReplyDeleteரெட்டைவால்ஸ் உங்களுக்கு பட்டாபட்டிய எப்டி கொளுத்துனா புடிக்கும்..உடனே கொளுத்திர்லாமா...இல்ல கொஞ்ச நேரம் பயம் காமிச்சு ஓட விட்டு மனசார ஆசை ஆசையா கொளுத்துவோம...எப்டி கொளுதட்டும்னு என் பசங்க போன்ல கேக்கராணுக...சீக்கிரம் முடிவெடுத்து சொல்லுங்க..நான் கூட்டணி கட்சி தலைவர்களுக்கு முழு மரியாதை குடுக்கறவன்..கொளுதரதுக்கு முன்னாடி பாடில கத்தி வெக்கணும்னு ஆசைப்பட்டீங்கனா கூட பிரச்சன இல்ல..வெச்சிடுவோம்...
ReplyDeleteநம்ம போட்டு தள்ளினா அது வொர்க் அவுட் ஆவாது வெளியூரு...நாளைக்கே விசாரணை கமிஷன் அது இதுனு எவன் அலையறது...பட்டாபட்டி நமக்கு அந்த கஷ்டத்தை வைக்க மாட்டார்...
ReplyDeleteஅப்டியெல்லாம் பொறுப்பில்லாம விட்ற முடியாது மச்சி..இது எனக்கு வாழ்க்கை..இப்ப விட்ட அடுத்த எலெக்சனுக்கு இன்னும் அஞ்சு வருஷம் வெயிட் பண்ணனும்..நீ சும்மா இரு..இன்னிக்கே போட்டு தள்ளிரலாம்..அவரு மனசு மாறிட்டா நமக்கு ஆப்பாயடும் ...விசாரணை கமிசன் வந்தா நாம பேஸ் பண்ணிப்போம்..பட்டாபட்டி எனக்கு உடன்பிறவா மாமான்னு CBI ல வாக்குமூலம் குடுப்போம்.சேர்ந்து எடுத்துக்கிட்ட போட்டோவ காமிப்போம்..விட்ருவாணுக......
ReplyDeleteயோவ்.. வெளியூரு.. இப்படி பண்ணுனா என்ன..
ReplyDeleteபேசாம ரெட்டை யப் போட்டுருவோம்.. ( ஏன்னா,,, நாம ஒரே ஊருல
குப்பை கொட்டுறோம்..)
அப்புறம் தியாகி , யோகி-னு போட்டோ வச்சு சாக்லெட் குடுக்கலாம்.
ரைட்டா...
யோவ்,, எப்படியோ போங்க..
ReplyDeleteநான் கட்சிப் பணில இருந்து ஓய்வு எடுக்கப் போறேன்..
அந்த மகளிர் அணி மட்டும் என் பார்வையில் இருக்கட்டும்..
யோவ்,, எப்படியோ போங்க..
ReplyDeleteநான் கட்சிப் பணில இருந்து ஓய்வு எடுக்கப் போறேன்..
அந்த மகளிர் அணி மட்டும் என் பார்வையில் இருக்கட்டும்..
அப்புறம், நான் எப்படி கட்சிய நடத்திட்டு வந்தேனோ, அதே மாதிரி
வளர்க்க பாடுபடுங்க..
யோவ் சண்முகம் , வாய்யா போலாம்...
இத நான் முன்னாடியே யோசிச்சேன்..ஆனா ஆட்சிக்கு வந்தப்பறம் துட்டு அடிக்கறது எப்டின்னு ரெட்டைக்குதான் நம்மள விட அதிகமா தெரிஞ்சிருக்கு...அதனால அவன பக்கத்துல வெச்சுகரதுதான் என்னோட எதிர்கால சந்ததிகளுக்கு வருமானம்...அதனால எனக்கு வேற வழி தெரில பட்டு...என்ன மன்னிச்சிடு..உன் ஆத்மா சாந்தி அடையட்டும்...
ReplyDeleteயோவ்,, ஒரு வருசத்துக்கான பதிவுகள,
ReplyDelete1 மணி நேரத்தில போட்டு தாளிச்சிட்டீங்களே..படுபாவி மக்கா...
அண்ணா நாமம் வாழ்க...பட்டாபட்டிக்குப் போட்ட நாமம் வாழ்க! உடன் பிறப்பே வெளியூர்காரா...பொதுக்குழுவின் ஏகோபித்த ஆதரவில் (நீயும் நானும் மட்டும் தான்) நாம் ஆட்சியை பிடித்திட்டோம்...வா! இனி ரேஷன் கடையில் ஒரு ரூபாய்க்கு பீர் குடுக்க வழி செய்யும் முதல் கோப்பில் கையெழுத்திடுவோம்..
ReplyDeleteபாலிடிக்ஸ்ன்னா என்னன்னு உங்க மூணு பேரு கிட்டதான் கத்துக்கணும் ..
ReplyDelete(அன்பா பேசிகிட்டே அடிக்கடி ஆப்பு வைக்கிராங்கைய்யா )
என் கண்மணிகள் கலங்குகின்றன எனதருமை கழக கண்மணிகளே..ஆட்சி நமதாய் போன மகிழ்ச்சியில் நீங்கள்.,என் இதயத்தை இழந்திட்ட வலியில் நான்.,எதிர்கட்சிகளின் சூழ்ச்சி வலையில் சிக்கி தீக்கு தன்னை தின்ன கொடுத்த எனதருமை சகோதரன் காலஞ்சென்ற என் உயிர் தம்பி பட்டாப்பட்டி அவர்களின் பெயரை உச்சரிக்கும்போது என் நா நடுங்குகிறது..இதயம் பதறுகிறது...நமது பிரதமர் ஐயா திரு ரெட்டைவால்ஸ் அவர்களிடம் தமிழ் மக்களின் சார்பில் ஒரு விண்ணப்பத்தை தாழ்மையுடன் வேண்டி வணங்கி வைத்துள்ளேன்..காஸ்மீர் மாகாணத்துக்கு நமது பட்டாபட்டியாரின் பெயரை சூட்ட சொல்லி...ஒரு ரூவாய்க்கு பீரை வார்த்து நமது நெஞ்சையும், கு...டலையும் குளிர்வித்த தன்னிகரில்லா தலைவர் இந்தியாவின் நிரந்தர பிரதமர் திரு.ஐயா ரெட்டைவால்ஸ் அவர்கள் இதற்கும் செவிசாய்ப்பார் என உறுதியாக நம்பி விடைபெறுகிறேன்..நன்றி வணக்கம்..தியாகி பட்டாபட்டி வாழ்க.அவரோடு சேர்ந்து எரிஞ்சு போன அவரோட பழைய பட்டாபட்டியும் வாழ்க... :)
ReplyDeleteஉடன் பிறப்பே
ReplyDeleteப.மு.க நிறுவனர் பெயரை காஷ்மீருக்கு என்ன...தமிழ்நாட்டுக்கே வைத்து விடலாம் என்றுதான் மனம் விழைகிறது...ஆனால் காஷ்மீருக்கு ஏற்கெனெவே என் ஃபிகர் பெயரை யோசித்து விட்டதால் தனி தெலுங்கானா அமைந்தால் அதற்கு பட்டாபட்டியின் பெயரை முன் மொழிந்து நான் அதன் புதிய தலமைக்குக் கடிதம் எழுதுவதாக இருக்கிறேன்.அதோடு பட்டாபட்டி உக்காந்திருக்கும் ஸ்டைலிலேயே பாராளுமன்றத்தில் ஒரு சிலை அமைக்கவும் ஏற்பாடு செய்திருக்கிறேன். வெளியூர்காரரே! நாம் இனி புதிய சட்டசபை கட்டிக்கொண்டு மொழி மாநாடெல்லாம் நடத்தி அப்பப்போ கொடநாட்டில் ஓய்வெடுத்துக் கொண்டு ஏழ்மையை ஒழிக்கப் பாடுபட வேண்டும்.
யோவ்.. போதுமைய்யா..
ReplyDelete3 படம் முழுசா பார்த்த எபெக்ட்..
அடுத்த பதிவில் உங்கள ( போட்டாச்சு...)
.
ReplyDelete.
வெளியூரு..
உம்..
ரெட்டை.
வெளியூரு..
உம்..
டீ சாப்பிடரையா கண்ணா..
ஊகும்..குசஜக்க்ஞ்சா.... குமாஸ்டி..
.
.
சார் என்ன சொல்லாருங்க..சொந்தக்காரப் பயளுகளா?.
பாவம் மப்பு இன்னும் தெளியலே...
.
.
இல்ல சார்.. இந்த் ரெண்டு பேரும் சென்னையிலெ ஏறினாங்க..
ஒரு குவாட்டர் வாங்கிட்டு வந்துட்டு அலம்பல் பண்ணீட்டுருந்தாங்க..
.
.
என்ன சார் .. ஒரு குவாட்டருக்கா?..
.
.
அய்யோ.. இல்ல சார்.. பாருங்க.. பாட்டில மட்டும் தொறந்தாங்க..
வாசம் வந்துச்சுங்களா.... மப்பு ஏறிடுச்சு...
இந்தப் பையன்(வெளியூர்காரன்) நான் யாரு.. என்ன பண்ரேனு கேட்டாரு..
சரி.. நல்ல பயளுகளா தெரியாருகளேனு என்னப் பற்றிச் சொன்னேன்..
.
.
அப்படிங்களா.. அப்ப நீங்கதாம் ப.மு.க தலைவரு பட்டாபட்டியாரா?.
சார். சார். ஒரு ஆட்டோகிராப் போடுங்க சார்...
.
.
அப்புறம் சென்னையில இருந்து இங்க வரைக்கும் பேசிகிடே வந்தாங்க..
நான் தலைவரு, எனக்கு டெல்லி, உனக்கு சென்னையினு..
போட்டுத்தள்ளிடலாம்.. என்னென்னமொ பேசிட்டு வந்தாங்க..
சரி.. என்னமோ பண்ணுங்கப்புனு நான் ஒரு பதிவப் போட ஆரம்பிச்சுட்டேன்..
முடிச்சுட்டு பார்த்தா, இன்னும் மப்பு தெளியாம இருக்காங்க..
.
.
சார்.. ஒரு ஹெல்ப் பண்றிங்களா?.
தஞ்சாவூர் பெரிய கோயில் வந்ததும் இந்த பயலுகளை
இறக்கிவிட்டுடுங்க..
நான் வரட்டுங்களா..
( சே.. பெரிய மனுசன் .. பெரிய மனுசந்தான்யா.. என்னா எளிமை..தலைவருனு
ஒரு பந்தாயில்லாம பஸ்-ல வரதப் பாரேன்..
அடுத்த தடவை இவருக்குத்தான்ட ஓட்டு போடனும்) ..