Pages

Saturday, February 6, 2010

வாசன் டூவீலரில் பயணம்...( நூசு..)


செய்தியா வந்தது
திருச்சி : திருச்சியில் போக்குவரத்து நெரிசலில் சிக்கியதால், மத்திய அமைச்சர் வாசன், டூவீலரில் "லிப்ட்' கேட்டு விமான நிலையம் சென்றார். தொட்டியம் தொகுதி காங்., எம்.எல்.ஏ., ராஜசேகரனின் மகள் திருமணம், திருச்சியில் நேற்று நடந்தது. 

திருமணத்தில், மத்திய கப்பல் துறை அமைச்சர் வாசன் பங்கேற்றார். பின், சென்னை செல்ல காலை 11.45 மணிக்கு, சென்னை பை-பாஸ் சாலை வழியாக விமான நிலையத்துக்கு காரில் புறப்பட்டார். பால் பண்ணை ரவுண்டானா பகுதிக்கு வந்த போது, கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

போக்குவரத்து போலீசார் மற்றும் வாசனின் பாதுகாப்பு போலீசார் இணைந்து, பகீரத முயற்சி மேற்கொண்டும், போக்குவரத்தை உடனடியாக ஒழுங்குபடுத்த முடியவில்லை. நீண்ட நேரம் அங்கு இருந்தால் விமானத்தைப் பிடிக்க முடியாது என கருதிய அமைச்சர் வாசன், காரில் இருந்து இறங்கி, அவ்வழியாக வந்த அரிசி வியாபாரி சுப்ரமணியன்    ஓட்டி வந்த டி.வி.எஸ்., ஸ்டார் சிட்டி டூவீலரை நிறுத்தி, விமான நிலையத்தில் இறக்கி விடுமாறு லிப்ட் கேட்டார். 

சுப்ரமணியன் சம்மதம் தெரிவிக்கவே, டூவீலரில் ஏற வாசன் தயாரானார். அதற்குள் ஓடி வந்த திருச்சி மாவட்ட இளைஞர் காங்., முன்னாள் தலைவர் ராஜராஜசோழன், டூவீலரை வாங்கி ஸ்டார்ட் செய்ய, அவருடன் வாசன் விமான நிலையத்துக்கு சென்றார். 

போக்குவரத்து நெரிசலில் சிக்கிய அமைச்சரின் கார் மற்றும் பாதுகாப்பு போலீசார், நெரிசலில் இருந்து வெளியேறி விமான நிலையம் வந்தடைந்தனர்.

--------------------------------------------------------------------------------------------------------------
இடம்  :மன்னாரு டீ கடை..

என்னா மன்னாரு.. வாசன் டூ- விலர்ல போயி படம் போடறாரு..அவங்க  தலைவன் மும்பையிலே ட்ரெய்ன் ஏறி படம் போடறாரு..  என்னப்பா நடக்குது ?..

ஆமா.. தலிவா.. வாசன் அய்யா, எம்.எல்.ஏ., ராஜசேகரனின் மகள்  திருமணம் வரும்போது ,  போக்குவரத்து நெரிசலாகி , ரொம்ப மெர்சாயிட்டாருங்க..


சரியா சொன்ன மன்னாரு...போக்குவரத்து போலீசாரை சிறையில் போட்டு நொங்கெடுக்கனும்..அவரு யாரு..?   மூப்பனாரு மகன்.. அவர அவதிபட உட்டவனுகளுக்கு புழல் ...இல்ல..இல்ல , திகார்ல உள்ள போடனும்..
அப்புறம் எம்.எல்.ஏ., ராஜசேகரன் , பண்ற லொல்ளு வேற.. எதுக்கையா போக்குவரத்து நெரிசலாயிருக்கர  இடத்தில கல்யாணம் வைக்கனும்...

அத உடு தல.. கடவுள் மாறி வந்த நம்ம அரிசி வியாபாரி சுப்ரமணியன்யன பாராட்டனும்.. சரிங்களா?.

ஆமாய்யா.. கண்டிப்பா பாரட்டனும்.  அதுல வேற,  'வாசன் அய்யா ஏறத் தாயாரானார்' -னு நியூஸ் சொல்லுது...  டூ-வீலர்ல கு%$#டிய வெச்சு போறது ஒரு சாதாரான விசயம்,  ஆனா உங்க அய்யா , 'ஏறத் தாயாரானார்' சொன்னா.....
இந்த அரிசி , அந்த வண்டிய எவ்வளவு லட்சணத்தில வெச்சிருக்குமுனு நினைக்கிற?...  ஆனா இந்த 'முன்னாள் தலைவர் ராஜராஜசோழன்' கில்லாடியா...உள்ள பூந்து அரிசி வண்டிய வாங்கி  பிரச்சனைய ஒரு வழியா சமாளிச்சுடுச்சே..

காலையிலே, அரிசிய வித்து பெத்ததுகளுக்கு சோறு போடனுமே கவலையிருந்தாலும்,  இதையெல்லாம் விட்டுட்டு... அய்யா கேட்டாருனு , பல்லக் காமிச்சுட்டு வண்டிய கொடுத்தாரே,   அதுக்கே இந்த தேசிய  கட்சிக்காரனுக , 'அரிசி சுப்புக்கு'' ஒரு டாக்டர் பட்டம் கொடுக்கனுமையா..

போங்க தல.. நக்கல் பண்ணிகிட்டு.. எப்படியோ,  முன்னாள் தலைவர் ராஜராஜசோழன், சுப்ரமணியன் கஷ்டப்படக்கூடாதுனு
அவரு வண்டிய எடுத்துட்டு போயி வாசனை  ட்ராப் செஞ்சுட்டாரே....


அடப் போய்யா.. கட்சிக்காரன் கிட்டயே.... வண்டியக் குடுத்திருக்கு இந்த லூசு..
அது திரும்பி வருமாலே ?..மடையனுக...  அந்த  'முன்னாள் தலைவர் ராஜராஜசோழன்' லைசென்ஸ் வெச்சுருக்கும்னு நினைக்கிறயா நீ?... இது எங்கயாவது போயி முட்டுச்சுனா,   நாளைக்கு பேப்பர்ல "வாசன் சென்ற வாகனம் விபத்து " ஒரு செய்தி மட்டுதான் வரும்.

முன்னாள் தலைவர் ராஜராஜசோழன் , கலைஞர் காப்புறுதி வெச்சிருபாயா...
ஆனா,   எல்லோரும் அரிசியோட  டூ- வீலர,  மறந்துடிவாங்களே..
அப்புறம் , அரிசி,   அரிசிய விட்டுட்டு ,  டூ- வீலருக்கு டோக்கன் கொடுக்குற வேலைதான் போகனும்..

சரி தலை.. அரிசி  , வண்டிய கொடுத்திருக்க கூடாதுனு சொல்றீங்களா?.


யோவ்.. வண்டிய மட்டும் அரிசி கொடுக்க முடியாதுனு சொல்லியிருந்தா,
ங்கொய்யா.. அன்னைக்கே , வாயில அரிசியப் போட்டிருப்பானுக, நம்ம  தேசிய தொண்டனுக...  பாவம்யா இந்த அரிசி...அன்னக்கு , ' சனி சைரன் போட்டுட்டு வந்திருக்கு '....  எப்படியும் ,  ஒரு மாசமாயிடும் மன்னாரு..

எதுக்கு தல.. டாக்டர் பட்டம் கொடுக்கறதுக்கா?

யோவ்.. வண்டி திருப்ப கிடைக்கிரதுக்கு..இனி அரிசி,  போலீஸ் ஸ்டேசன் , கட்சி ஆபிஸ்.-னு  கிரிவலம் வந்தா , ஏதோ ஒரு வீலவாவது திருப்பி குடுப்பானுகோ..

அட சாமி.. இந்த செய்தில இவ்வளவு விசயம் இருக்கா.. நமக்கு புரியாம போச்சே..

மன்னாரு.. உனக்கு புரியலேனுதான் நீ டீ ஆத்துற........... புரிஞ்சதாலேதான் நான் தலைவனாயிருக்கேன்..

சரி.. டீ -ய கணக்குல வச்சுக்கோ..
அப்புறம்...... வாசன் அய்யா மட்டும் ஹெல்மெட் போடாம , டூ-வீலர்ல போறாரே..  நீயும் போகலாமுனு , ரோட்டுக்கு போயிடாதே..
போலிஸ் புடிச்சா , ங்கொய்யாலே , டீ-கடைய வித்துதாண்ட மாமூல் கொடுக்கனும்..   பதனமா  நடந்துக்க...
வரட்டா..
.
.
.

50 comments:

  1. ஆகா.. பட்டாபட்டி,
    நீரு லாயாராயிருந்திருக்க வேண்டியது..
    இந்த செய்தியில இவ்வளவு பிரச்சனையுருக்கா?..
    சபாஸ் செல்லம்.. ஏங்க அறிவுக்கண்ண திறந்திட்ட..

    ReplyDelete
  2. இதுவே ஜெயலலிதாவாக இருந்து இருந்தால் காரில் விமான நிலையம் பொய் சேரும் வரை விமானத்தை கொக்கி போட்டு நிறுத்தி இருப்பார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்.

    ReplyDelete
  3. எதுக்கு சாமி கொக்கி ( ஆயுதத்தப் பேசராங்கனு யாராவது உண்னாவிரதம் ஆரம்பிசுடப்போறாங்க..)
    ரத்ததின் ரத்தம் , ஏரோப்ளேன் முன்னாடி படுத்து மறியல் பண்ணியிருப்பாங்க..

    ReplyDelete
  4. அய்யா, நாங்க திருச்சியிலே தினந்தோரும் இப்படித்தான் டிராபிக்லே சிக்கி தவிக்கிறோம்.அமைச்சர் வந்தப்போ யாராவது ஹெல்மெட் போடாம வராங்கலான்னு பார்த்துகிட்டு இருந்துருப்பாங்க.அதான்.வேறு ஒன்னுமில்லை.

    ReplyDelete
  5. அட.. திருச்சி.. நம்ம பக்கத்தூரு..
    என்ன சார்.. வாசன் டூ-வீலரல ஏறினதும் ,கட்சி
    தொண்டர்களும் , அவர விமான நிலையம் வரை பாலோ பண்ணிணாங்களாமா?.
    அப்பவும் ட்ராபிக் ஜாம் ஆச்சா?..

    ReplyDelete
  6. வண்டி ஒட்டறவர் ஹெல்மட் போடல போலிருக்கிறதே பட்டி, இதெல்லாம் அரசியலில் சாதாரணமா?? ..:)

    ReplyDelete
  7. // ஷங்கர்.. said...
    வண்டி ஒட்டறவர் ஹெல்மட் போடல போலிருக்கிறதே பட்டி, இதெல்லாம் அரசியலில் சாதாரணமா?? ..:)
    //

    சார்... அரசியல் வாதிகளுக்கு(தெய்வப்பிறவி) எப்படி சார் அடிபடும்..?

    ReplyDelete
  8. ஏனுங்க பட்டாப்பட்டி காங்கிரஸ் நியூஸ் வந்தா, ஊறுகாய் போடாம விடறதா இல்ல போல. இனிமே பட்டாப்பட்டிக்கு பயந்துகிட்டு நியூஸ் கொடுக்கமாட்டாங்க காங்கிரஸ் பன்னாடைங்க!!! sorry பார்டிங்க....

    அப்பறம் இன்னைக்கு வாழும் வள்ளுவருக்கு பாராட்டு விழாவாமே. நீர் போகலையா?

    ReplyDelete
  9. //ariyaluraan said...
    ஏனுங்க பட்டாப்பட்டி காங்கிரஸ் நியூஸ் வந்தா, ஊறுகாய் போடாம விடறதா இல்ல போல. இனிமே பட்டாப்பட்டிக்கு பயந்துகிட்டு நியூஸ் கொடுக்கமாட்டாங்க காங்கிரஸ் பன்னாடைங்க!!! sorry பார்டிங்க....
    அப்பறம் இன்னைக்கு வாழும் வள்ளுவருக்கு பாராட்டு விழாவாமே. நீர் போகலையா?
    //
    என்ன சார் பண்றது.. நானும் டிராபிக் ராமாசாமிகிட்ட, சொல்லலாமானு பாட்க்கிறேன்..
    அமைச்சராயிருந்தாலும், சட்டத்த மதிக்கனுமுல்ல சார்..

    அந்தாளுக்கு S$ 500 செலவு பண்ணனுமானுதான் வரலை சார்..
    எப்படியியும் சன் , அப்புறம் கலைஞர் டீவீ-ல போட்டு உயிர வாங்கத்தான் போறாங்க..
    அதுலயே பார்க்கலாமுனு..

    ReplyDelete
  10. இருந்தாலும் நீங்க தானியங்கி இயந்திரத்தில் பணம் எடுத்து டிக்கெட் வாங்கி ரயிலில் பயனம் செய்த தலைவர் மாதிரி வராது

    ReplyDelete
  11. அண்ணே பட்டாபட்டி... இன்னைக்கு வந்த
    //
    தினம் ஒரு தகவல் !!
    ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்
    //

    என்னமோ இவருக்காகவே வந்தது மாதிரி இருக்கு... எப்புடீண்ணே??

    ReplyDelete
  12. இதுக்கு இவங்களோட பழைய சின்னம் சைக்கிள்ள போயிருந்தா, அவரு க்ரூப்புக்கு ஆளு சேக்குறார்னு... மத்த காங்கிரஸ் தலைங்க கிளப்பி விட்டிருக்கும்... வடை போச்சே....

    இவங்க எல்லாம் லேட்டா வந்தா ட்ரெயின மட்டும் தான் வெயிட் பண்ணுமா?? பிளைட் பண்ணாதா...??

    ReplyDelete
  13. //Nanda said...
    இருந்தாலும் நீங்க தானியங்கி இயந்திரத்தில் பணம் எடுத்து டிக்கெட் வாங்கி ரயிலில் பயனம் செய்த தலைவர் மாதிரி வராது
    //

    அதை பற்றி விரிவா எழுதனும் சார் விரைவில்

    ReplyDelete
  14. //ரோஸ்விக் said...
    இதுக்கு இவங்களோட பழைய சின்னம் சைக்கிள்ள போயிருந்தா, அவரு க்ரூப்புக்கு ஆளு சேக்குறார்னு... மத்த காங்கிரஸ் தலைங்க கிளப்பி விட்டிருக்கும்... வடை போச்சே....
    இவங்க எல்லாம் லேட்டா வந்தா ட்ரெயின மட்டும் தான் வெயிட் பண்ணுமா?? பிளைட் பண்ணாதா...??
    //
    நிசமாவே வடை போச்சு அப்பு.. சைக்கிள சுத்தமா மறந்துவிட்டேன்
    அட.. உடுங்க.. மாட்டாமலா போவாங்க..

    ReplyDelete
  15. தலைவரே நீங்க எப்ப பா.ஜ..வுல சேந்தீங்க??? அன்னிக்கு தங்கவாலு, இன்னிக்கு..............

    ReplyDelete
  16. //க.பாலாசி said...
    தலைவரே நீங்க எப்ப பா.ஜ..வுல சேந்தீங்க??? அன்னிக்கு தங்கவாலு, இன்னிக்கு..............
    //
    நான் எங்கெங்க சேர்ந்தேன்..
    காலையில நியூஸ் பார்த்ததும் , மனசுல பட்டதை
    எழுதியாச்சு சார்..

    ReplyDelete
  17. //ஸ்ரீராம். said...
    :))
    //

    சார் .. வண்டியோட்டும் போது ஹெல்மெட் போட்டுக்கோங்க சார்..

    ReplyDelete
  18. தாராளமா தல......இது நம்ம ப்ளாக் ......
    என்ன நம்ம தல வெளியூரு மெர்சளாகி கமெண்ட்ஸ்ல கைய வச்சு moderate பண்ணி இருக்கார் போல தெரியுது.....

    ReplyDelete
  19. sari ponathu poninga....
    en blogum,eluthum epdi irukkunnu sollidunga...
    do mail me.

    ReplyDelete
  20. நம்ம ப்ளாக் எப்டின்னு சொல்லவே இல்லையே நீங்க...
    பய மனசு கஷ்டப்படுமேன்னு பீல் பண்ணாதீங்க.நாங்கல்லாம் வெக்கம் கிலோ எவ்ளோன்னு கேக்குற பயலுக......சும்மா சொல்லுங்க பாஸு........

    ReplyDelete
  21. செய்தியும் விமரிசனமும் சூப்பரா இருக்கு. வாழ்த்துக்கள் பட்டா

    ReplyDelete
  22. பைக் மேட்டர்க்கு பின்னே இவ்வளவு விஷயம் இருக்கா!!!!!!!!!

    ReplyDelete
  23. @ ILLUMINATI said...
    தாராளமா தல......இது நம்ம ப்ளாக் ..என்ன நம்ம தல வெளியூரு மெர்சளாகி கமெண்ட்ஸ்ல கைய வச்சு moderate பண்ணி இருக்கார் போல தெரியுது....//
    யோவ் இலுமு ...இதெல்லாம் சகஜம்யா அஜித் விஜய் பான்ஸ்குள்ள...சப்ப ஜிகிரிதொசு.ஆர்குட் போய் பாருயா.மானாவாரியா அடி வாங்குவானுக.....என்ன நான் இருந்துருன்தனா அந்த டோமர திரும்ப கலாசிருப்பேன்..கெட்ட வார்த்தைல..இல்லாம போயிட்டேன்...ஆனா தளபதி மெர்சலைட்டான்னு கேப்ல என்னையே கலாசிட்ட பார்த்தியா...உன் சேவை எங்க கட்சிக்கு தேவை ராஜா..உடனே வந்து சேர்ந்துக்க...உன்ன மன்னர் பெட்ரோலிய துறை அமைச்சரா அறிவிச்சிருக்கான்.. வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  24. //இதெல்லாம் சகஜம்யா அஜித் விஜய் பான்ஸ்குள்ள...சப்ப ஜிகிரிதொசு.ஆர்குட் போய் பாருயா.மானாவாரியா அடி வாங்குவானுக.....//

    இந்த பொழப்பு பொழைக்குரதுக்கு.......

    //ஆனா தளபதி மெர்சலைட்டான்னு கேப்ல என்னையே கலாசிட்ட பார்த்தியா...//
    என்ன பண்றது?பொரந்ததுல இருந்தே இப்டி தான்....
    ப்ரீயா உடுங்க....இதென்ன உங்களுக்கு புதுசா?
    //உன் சேவை எங்க கட்சிக்கு தேவை ராஜா..உடனே வந்து சேர்ந்துக்க...//

    என்னத்த சேவை கட்சிக்கு தேவை?ரைமிங் நல்லா தான் இருக்கு....கமெண்ட் போட விட மாட்டேன்றிங்களே .....
    இந்த புண்ணாக்கு மன்னன் இத தட்டி கூட கேக்க மாட்டேன்குறாரே.....

    ReplyDelete
  25. //நாலு வரியியில கமெண்ட் அடிக்கிறது
    எங்க குடும்ப வழக்கமே இல்லைங்க..

    படிச்சுட்டு இருக்கேன்.. விவரவமா கமென்ஸ் வெளியாகும் ... //

    எங்க ஒன்னத்தையும் காணோம்......

    ReplyDelete
  26. உடன் பிறப்புக்களே ! அன்பு பிரஜைகளே!

    நம்முடனே இருந்து கொண்டு நீ போகும் பைக்கில் பெட்ரோலுக்கு பதிலாக உன் வியர்வையை ஊற்றச் சொல்கிறார் பெட்ரோலிய அமைச்சர்! மேலும் மன்னரை புண்ணாக்கு என்று திட்டி மகிழ்கிறது அந்த வட்டமிடும் கழுகு , வாய்பிளக்கும் ஓணான், வண்டிச்சோலை சின்ராசு( சே! ஒரு ஃப்ளோ ல என்னவெல்லாம் வருது). நம் கூட்டம் அரை கிளாஸ் எச்ச பீருக்காக ஆளையே தூக்கும் கூட்டம் என்று அந்த சதி காரருக்குப் புரிய வில்லை.

    செல்...அந்த சதிகாரரின் திணவெடுத்த நாவை புண்ணாக்கு ... தோள்களை புண்ணாக்கு...

    அதற்கு முன் கஜானாவை நிரப்பி விட்டு செல்லுங்களடா என் கண்மனிகளே! ( வீக் எண்ட் டா வெங்காய பல்புங்களா)

    ReplyDelete
  27. ரெட்டைவால் ' ஸ் said...
    உடன் பிறப்புக்களே ! அன்பு பிரஜைகளே!
    நம் கூட்டம் அரை கிளாஸ் எச்ச பீருக்காக ஆளையே தூக்கும் கூட்டம் என்று அந்த சதி காரருக்குப் புரிய வில்லை. செல்...அந்த சதிகாரரின் திணவெடுத்த நாவை புண்ணாக்கு ... தோள்களை புண்ணாக்கு...அதற்கு முன் கஜானாவை நிரப்பி விட்டு செல்லுங்களடா என் கண்மனிகளே! ( வீக் எண்ட் டா வெங்காய பல்புங்களா)
    ///
    மன்த் என்ட் கேள்விபற்றுக்கேன்.கைல காசு இல்லாம ஒரே சிகரெட்ட அணைச்சு அணைச்சு மூணு நாளைக்கு அடிக்கறது..அது என்ன மன்ன வீக் எண்டு...புதுசா இருக்கு...??

    ReplyDelete
  28. வீக் எண்ட் என்றால் சான்ஸ் கிடைச்சா ஓ.சி ல கல்ப் அடிப்பதும் ...அப்புறமா வாங்கிகுடுத்தவனை சலம்புவது தளபதியாரே! இன்று இரவே உற்சாக பானம் அரேஞ்ச் பண்ணுபவர்களுக்கு தொழில் துறை கொடுக்கப்படும் என்று அண்டை நாடான பொலிவியாவில் பேசிக்கொள்வதாக செய்தி !

    ReplyDelete
  29. மன்னர் , ராணுவத்தளபதி , சட்ட அமைச்சர் , மற்றும் பெட்ரோலியத்துறை
    அமைச்சருக்கு வணக்கம்...

    சனி நீராட முடியாததால் , ஞாயிறு நீராடி
    இப்போதுதான் எழுந்தேன்..

    நீங்கள் இன்னும் ஆட்சியில் இருக்கிறீர்கள் என நினைக்கிறேன்..
    ராணுவ தள பதி, புது விமானங்கள் வாங்கிவிட்டாரா?
    வாங்கி இருந்தால் , மகளிர் அணிக்கு ஒரு சொகுசு விமானத்தை ஒதுக்கும்படி
    கேட்டுக் கொள்கிறேன்...

    ReplyDelete
  30. யோவ் பட்டாபட்டி...அவனவன் திங்கறதுக்கு சோறில்லைங்கறான்..இன்ஃப்லேஷன்றான்.. மைக்ரோ எகானமிங்கறான்.. உனக்கு சொகுசு விமானமா..யாரங்கே..! இவனுக்கு கொஞ்ச நேரம் மெகா டி.வி.யும் வசந்த் டி.வி.யும் அப்புறம் ரொம்ப நேரம் மக்கள் டி.வி.யும் காட்டு!

    ReplyDelete
  31. மன்னரே..

    கழகத்துக்கு மொக்கை டீவீ ஆரம்பிக்கும் ஐடி யா உள்ளதா?..
    மகளிட் அணியை துச்சமென துக்கியெறிந்துவிட்டு ,
    டீ.வீ க்கு வரத் தயாராக உள்ளான் இந்த பட்டாபட்டி
    ( யோவ்.. வேற யாருக்காவது குடுத்த, மகனே , அப்புறம் உனக்கு சங்குதான்
    என்பதையும் இந்த நேரத்தில் நினைவூட்ட விரும்பிகிரறேன்)

    ReplyDelete
  32. மன்னரவர்களின் உத்தரவிற்கு இணங்க template மாற்றப்பட்டு விட்டது.
    //யாரங்கே..! இவனுக்கு கொஞ்ச நேரம் மெகா டி.வி.யும் வசந்த் டி.வி.யும் அப்புறம் ரொம்ப நேரம் மக்கள் டி.வி.யும் காட்டு!//
    அப்டியே கொஞ்ச நேரம் பொதிகை டிவியும் காட்ட சொல்லுங்க...சத்தமில்லாம கொல்ல அது தான் சிறந்த வழி....

    // சே! ஒரு ஃப்ளோ ல என்னவெல்லாம் வருது//
    மன்னரே!கள்ள சாராயம் அடித்தால் அப்டி தான் நாக்கு கண்டது கழுதைய எல்லாம் உளரும்னு கேள்வி பட்டு இருக்கேன்.இப்போ தான் பாக்குறேன்...

    //நம் கூட்டம் அரை கிளாஸ் எச்ச பீருக்காக ஆளையே தூக்கும் கூட்டம் என்று அந்த சதி காரருக்குப் புரிய வில்லை//
    ஆகா!என்ன ஒரு உயர்ந்த கொள்கை?கட்சி கொள்கையே இது தானா?இல்ல வேற முத்தான கொள்கைகள் எல்லாம் இருக்கா?

    ReplyDelete
  33. @ILLUMINATI said...
    கட்சினு இருந்தா கொள்கையுனு இருக்கும் சாரே..
    ஆனா என்னனு பறந்து போச்சு.. ஹி..ஹி

    ReplyDelete
  34. அந்த முத்தான கொள்கைகள எல்லாம் கொஞ்சம் செப்புறீங்களா?கட்சிக்காரன் நானும் கொஞ்சம் தெரிஞ்சுக்குறேன்.....

    ReplyDelete
  35. ஐந்தாண்டு திட்டங்களை செயல்படுத்த உத்தேசித்திருக்கும்போது எவனவன் கொள்கைகளைப் பற்றிக் கேட்பது...? இல்லுமினாட்டி நீயா? சரி கேட்டுக்கொள்!

    முதலில் மன்னராட்சி என்பதை நினைவில் கொள்ளவும்.

    இந்த நாதாரிகளை கஷ்டப்பட்டு கண்காணித்து கண்ட கருமத்தையும் அனுசரித்து நான் இன்னும் மன்னராக இருக்கிறேன் என்பதையும் நினைவில் கொள்ளவும்

    எந்தவொரு வளர்ச்சித் திட்டமும் எங்களை வளர்த்துக் கொள்ளவே என்பதையும் நினைவில் கொள்ளவும்.


    அரசாங்க தண்டனைகள்


    முதலில் ரைட்டு! மீ த ஃபர்ஸ்ட்டு ! ஓட்டு போட்டாச்சு என்ற ஃபார்மாலிட்டி செய்கிறவர்களுக்கு சிம்பு படம் காண்பிக்கப்படும்.

    அவ்வ்வ்வ் என்று பின்னூட்டமிடுபவர்களுக்கு வேட்டைக்காரனும் அசலும் விளம்பர இடைவேளை இல்லாமல் காண்பிக்கப்படும்.

    இந்த மாதிரி கொள்கை என்ன என்று கேட்பவர்களுக்கு (இல்லுமினாட்டி நீதான்!) "வீராசாமி" தனியாக காண்பிக்கப்படும்

    ReplyDelete
  36. ஐந்தாண்டு திட்டங்களை செயல்படுத்த உத்தேசித்திருக்கும்போது எவனவன் கொள்கைகளைப் பற்றிக் கேட்பது...? இல்லுமினாட்டி நீயா? சரி கேட்டுக்கொள்!

    முதலில் மன்னராட்சி என்பதை நினைவில் கொள்ளவும்.

    இந்த நாதாரிகளை கஷ்டப்பட்டு கண்காணித்து கண்ட கருமத்தையும் அனுசரித்து நான் இன்னும் மன்னராக இருக்கிறேன் என்பதையும் நினைவில் கொள்ளவும்

    எந்தவொரு வளர்ச்சித் திட்டமும் எங்களை வளர்த்துக் கொள்ளவே என்பதையும் நினைவில் கொள்ளவும்.


    அரசாங்க தண்டனைகள்


    முதலில் ரைட்டு! மீ த ஃபர்ஸ்ட்டு ! ஓட்டு போட்டாச்சு என்ற ஃபார்மாலிட்டி செய்கிறவர்களுக்கு சிம்பு படம் காண்பிக்கப்படும்.

    அவ்வ்வ்வ் என்று பின்னூட்டமிடுபவர்களுக்கு வேட்டைக்காரனும் அசலும் விளம்பர இடைவேளை இல்லாமல் காண்பிக்கப்படும்.

    இந்த மாதிரி கொள்கை என்ன என்று கேட்பவர்களுக்கு (இல்லுமினாட்டி நீதான்!) "வீராசாமி" தனியாக காண்பிக்கப்படும்

    ReplyDelete
  37. புதுசா ஒரு போஸ்ட் சேத்து இருக்கேன் தல....
    வந்து பாத்துபுட்டு போங்க........

    ReplyDelete
  38. எலேய் பட்டு...எங்களே போன.?.எங்கள அனாதையா விட்டுபுட்டு...நீ இல்லாம விழா கல்லா கட்டலலே...சீக்கிரம் வந்து சேரும்...!!

    ReplyDelete
  39. I Am Back - க்கு எனத் தெரிவித்துக் கொள்கிறான்
    இந்த பட்டாபட்டி...

    ReplyDelete
  40. @வெளியூரு
    @ரோஸ்விக்
    @ரெட்டைவால்
    @இலுப்பு


    நாளைக்கு அம்மா சேலத்தில உண்ணாவிரதம் இருக்க போறாங்களாமா..
    போலாமா?..
    பிரியாணி சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு மாம்ஸ்..

    ReplyDelete
  41. ஓய்..வேணும்னா சொல்லும்.லிங்க் அனுப்பறேன்.
    ஆனாலும் புரியலைங்கரத எவ்ளோ நேக்கா சொல்லுது பார் பட்டாபட்டி......

    ReplyDelete
  42. இதஎல்லாம் பாத்து கத்துகய்யா வெளியூரு...
    நீயும் தான் உளறுனியே......

    ReplyDelete
  43. @பட்டாபட்டி.. said...
    @வெளியூரு
    @ரோஸ்விக்
    @ரெட்டைவால்
    @இலுப்பு
    நாளைக்கு அம்மா சேலத்தில உண்ணாவிரதம் இருக்க போறாங்களாமா..போலாமா?..பிரியாணி சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு மாம்ஸ்..//
    உயிரே போனாலும் அதிமுக கட்சியின் தண்ணியை கூட குடிக்க மாட்டான் வெளியூர்காரன் என்பதை தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன்..எனக்கு பிரியாணியை விட மானம் பெரிது என்பதையும் தெரிவித்து கொள்ள கடமைபட்டிருக்கிறேன்..(யோவ் பட்டு...என்ன பிரியாணியா..சிக்கனா இல்ல மட்டனா..இப்ப போன சேலத்துக்கு டிக்கட் கெடைக்குமா...??)

    ReplyDelete
  44. பட்டா பட்டி பதிவு,”தோட்டா தட்டி”[நல்லா இருக்குன்னு அர்த்தம்]
    அதாவது துப்பாக்கி வீரரின் லாவகம் மாதிரி சொல்ல வந்த விஷயத்தை ஏம் பார்த்து தோட்டாவைத் தட்டியிருக்கிறீர்கள்.
    அப்பாடி பிழைச்சேன்

    ReplyDelete
  45. //goma said...
    பட்டா பட்டி பதிவு,”தோட்டா தட்டி”[நல்லா இருக்குன்னு அர்த்தம்]
    அதாவது துப்பாக்கி வீரரின் லாவகம் மாதிரி சொல்ல வந்த விஷயத்தை ஏம் பார்த்து தோட்டாவைத் தட்டியிருக்கிறீர்கள்.
    அப்பாடி பிழைச்சேன்
    //
    வருகைக்கு நன்றி மேடம்..

    ReplyDelete
  46. அன்புள்ள ப.ப.,

    ஒரே நாளில் காலை மாலை என்று பதிவிட்டு கலக்கிக் கொண்டிருந்து விட்டு, இப்போது இந்த இடைவெளிக்குக் காரணம் எதிர்க் கட்சிகளின் சதியா என்று தெரிந்து கொள்ள ஆசைப் படுகிறேன்...

    ReplyDelete
  47. அட.. ஆமா சார்..
    ( சமாளி பட்டாபட்டி.....)
    தலைக்கு மேல வேலை சார்..அப்படினு சொன்னா எனக்கே வெக்கமாயிருக்கு சார்..

    நான் எழுதுவதப் பார்த்து , கம்யூட்டருக்கே புடிக்கலை போலிருக்கு..
    புடிங்கிருச்சு சார்.. புடிங்கிருச்சு ..
    ஏதோ இப்பதான் ரெடி பண்ணியிருக்கேன்..
    இன்னைக்கே ஒரு பதிவப் போட்டுடறேன் சார்...

    ReplyDelete
  48. இப்ப புரியுதுயா... நீ எதுக்கு மகளிர் அணியை உன்வசம் வச்சிருக்காய்னு...
    நல்லா ஆலோசனை சொல்றீகளே அப்பு... குடும்பம் குட்டையில விழுகுறமாதிரி...

    அந்த சின்ன கவர வேண்ணா நான் வச்சுக்கிறேன் சாமி.. (ஒரு லட்சத்தோட சேர்த்து தான் சொல்லுறேன்)

    ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!