
பட்டாபட்டி ஆபிஸ்..
ஒரு வழியா , போன பதிவோட , தாக்கதிலிருந்து மீண்டு ,
" நானாகவே சாப்பாடு சாப்பிடும்" அளவுக்கு ரெடியாயிட்டேன்...
திடீர்-னு என்னோட போன் கத்தியது.. யாரு-னு பார்த்தா "Unknown Person"..
இன்னும், இது மாறி பய புள்ளைக ஊருக்குள்ள இருக்காங்களே-னு நொந்துகிட்டு போனை ஆன் பண்ணினால் " நான் தங்கபாலு.. தமிழக காங்கிரஸ் தலை......................"...
.
.
டொக்.. சே.. விடாது கருப்பு போல.. ( ஆகா.. தலைப்ப கோத்திட்டேன் )..
பேசாம ஆபிஸ்க்கு ரெண்டு நாள் லீவு விட்டுவிடலாமுனு ,
நம்ம கஸினக் ( அதாங்க அஸின்-கஸின்) கூப்பிடலாமுனு போனா ,
நம்ம ப.சி ( புரியாதவங்க.. இதைப் படிச்சுட்டு வாங்க)
போனைக் கையில வெச்சுட்டு வாசலிலே பரிதாபமா நிக்கிறாரு..
என்னப்பா.. வேலை நேரத்திலே இங்கே நிக்கக்கூடாது.. போ.. போ..போயி வேலைப் பாரு....
.
சார்.. தங்கபாலு லைன இருக்காரு.. உங்ககூடப் பேசனுமாம்..
.
சே.. காலக்காத்தால சனி, சங்கோட.....சரி..சரி.. போனைக் கொடுத்துட்டு வேலையப் பாரு..
.
என்னா வேணுங்க உங்களுக்கு.. சாகவாசமே வேண்டாமுனுதான் வந்துட்டுமே.. இன்னும் எதுக்கு போன்?
.
.
நானும் ஒரு கட்சி தலைவருனு தெரியாம பேசிட்டீங்களா.. மன்னிச்சு , திரும்பவும் வரனுமா?...
இங்க பாரு..நான் கவரிமான் ஜாதி.. உங்க ஆபிஸ்க்கு அடியெடுத்து வைப்பதில்லையினு சத்தியம் பண்ணியிருக்கேன்..
அதனால.....
.
.
என்னாது.. வெளிய எங்காவது பார்க்கலாமா..?..என்னைய்யா.. காத்து போன பலூன் மாறி பேசறிங்க.. என்னாச்சு..
.
.
சரி.. சரி.. ..ஆனா என்னோட ஷு-வும் , பக்கிரியோட செருப்பும் இங்க வந்து சேரனும்.. புரிஞ்சதா?... ஓ.கே.. நாளைக்கு காலையிலே தெருமுக்கு டீ-கடையில பார்க்கலாம்..
.
.
சரிப்பா.. ஒரு டீ- தானே...வேனுனா வடையும் வாங்கித்தரேன்..
.
அட.. உடப்பா.. ரொம்ப புகழ்ந்துகிட்டு...சரி..சரி..
டொக்..
சே... எத்தனை மணிக்குனு கேக்காம சந்தோசமா போன வெச்சுருச்சே .உங்க. கட்சி வெளங்குமய்யா...
.
.
அடுத்த நாள்
நேரம் :காலை 9 மணி..
இடம் : தெருமுக்கு டீ-கடை..
தலைவா.. வாங்க தலை.. நானே உங்களை கூப்பிடனுமுனு நினைச்சேன்..
ஏன் மன்னாரு.. என்னாச்சு..?
பாருங்க தலை.. விடியகாலை 4மணியில இருத்து கடைக்கு முன்னாடியே உக்காந்திருக்காரு.. போ.. போ.. சொன்னாலும் போக மாட்டேங்கிறாரு....
.
அட.. தங்கபாலு.. எப்ப வந்தீங்க?...
.
தங்கபாலு , மன்னாருவை பார்த்து.."பார்த்தயா.. நானு சொல்லலே..பட்டாபட்டி தங்கம் -னு "-
.
.
மன்னாரு.. அவருக்கு டீ-யும் , ரெண்டு வடையும் என்னோட கணக்கில கொடுத்துடுங்க..
அப்புறம், சொல்லுங்க பாலு.. என்ன விசயம்.. இவ்வளவு சீக்கிரமா?..
சார்.. நேற்று நடந்ததுக்கு நான் மன்னிப்பு கேக்கலாமுனு...........
நேற்றே புறப்பட்டுவிட்டேன்..... ரொம்ப நாளா , கட்சி ஆபிஸ்-னே காவலுக்கு இருந்ததாலே , ரோடு எல்லாம் மறந்துபோச்சு..ஹி..ஹி
அப்புறம் வேலூர்-ல ஒருத்தரு வழி சொன்னாருங்க..எப்படியோ சென்னை வந்துசேர்ந்திட்டேங்க..
பக்கத்தில 5 கி.மீ இருக்கற கட்சி ஆபிஸுக்கு 150 கி.மீ சுற்றி வந்திருக்கீங்க..
சொல்லுங்க.. என்ன விசயம்?
நீங்க எப்படிங்க , கட்சிக்கு ஆளச்சேர்க்கிறீங்க.. ஏதோ எங்களுக்கு சொன்னா
நாங்களும் ரெடியாயிடுவோமில்ல..
..
பாலு..முதல நான் கேக்கறதுக்கு பதில் சொல்லுங்க..
நீங்க சொல்லும் பதிலைப்பார்த்துதான் என்ன பண்ணலாமுனு சொல்வேன்.. ஆனா அப்புறமா ,Consultant Fees-ய எங்க ஆபிஸ்ல கட்டிடனும்.. சரியா?..
சரிங்க.. அப்படியே செய்துடுவோம்..
ஓ.கே..
Q1...உங்க அன்னையப்பற்றி முதல்ல....
அவர்கள் வெளி நாட்டுக்காரங்க..
எப்படி நிழல் பிரதமராயிருக்காங்கனு ஒரு பிரச்சனை வந்ததே..
அதுக்கு உங்க கட்சிக்காரங்க எப்படி எதிர்கொண்டீங்க?..
அதுங்களா..நாங்கதான் பக்கம் பக்கமா அறிக்கை விட்டோமே..
அவங்கதான் எங்க அன்னை.. மற்றவங்கெல்லாம் நொண்ணையினு..
இதுபோக , தீக்குளிக்க ரெண்டுபேர ரெடி செய்தோம்..
அப்புறம் .( யோசனை செய்கிறார்...).. ஆங்க்.. இந்தப் பிரச்சனைக்குதான்,
எல்லா தமிழக காங்கிரஸ் தலைவர்களும் ஒற்றுமையா சேர்த்து அறிக்கை விட்டோமே.. அது கூட "மாபெரும் சரித்திரம் மற்றுமொரு அதிசயம் " -னு தினமலர்-ல நீயூஸ் வந்ததே.. அப்புறம்...
சரி.. சரி.. ரொம்ப யோசனை பண்ணாதீங்க..அப்புறம் பட்டாபட்டி சதி பண்ணுனதாலதான் தலை முடி கொட்டிருச்சுன்னு அறிக்கை விடுவீங்க..
அடுத்த கேள்வி..
சார். முதல் கேள்விக்கே பதில் சொல்லலீங்க..
பாலு..எல்லாவற்றுக்கும் சேர்ந்து கடைசியா பதில் சொல்லுகிறேன்
நடுவல , நடுவுல பேசக் கூடாது.. அப்புறம் டீ-க்கு காசு கொடுக்கமாட்டேன்.என்னா?..
சாரி சார்.. சாரி சார்..
இப்ப
Q2..
தாத்தா திவாரி பிரச்சனைய எப்படி ஹேண்டில் பண்ணுனீங்க ?
அது வந்து.. அது வந்து..
ஆங்க்.. "கட்சியில் சில கருப்பு ஆடுகள்"...கட்சியவிட்டு நீக்குவோம்...
கண்டனம் தெரிவித்துக் கொள்கிறோம்..அப்படி.. இப்படினு..
ஓ.கே பாலு.. போதும்... போதும்..இப்ப சொல்றேன்.. உங்க கட்சி.... கஷ்டம்தான்..
என்ன சார். இப்படி சொல்லீட்டிங்க...
அப்புறம் என்னையா.. சும்மா உப்பு சப்பில்லாம பேசுனா, எவன் கட்சியில சேருவான்?..
இதுல வேற என்னையே பிடிச்சுப் போட " ப்ளான் பண்றாங்களாமா.. ப்ளான்-னு.."
சார். அதுதான் மன்னித்துவிடுங்கள் என அறிக்கை .. சாரி சார்..போன்-ல சொன்னேனே...
சரி..சரி. நோட் பண்ணிக்க...
முதல்ல Q1-க்கு.....
நீங்க எதுக்கையா மற்றவங்க " வெளி நாடு"-னு சொன்னா, ஒத்துகிட்டு பதில் அறிக்கை கொடுக்கிறீங்க..
இந்தியா - முதல் எழுத்து "இ".... மொத்த எழுத்து " 4 "
இத்தாலி - முதல் எழுத்து "இ".... மொத்த எழுத்து " 4 "
அப்புறம் எப்படியா வெளி நாடுனு சொல்லுவீங்க? சொல்லி பதிலுக்கு கிழிப்பீங்களா.....அத விட்டுட்டு...
அடுத்து Q2
திவாரியப் பத்தி தப்பாவே எல்லோரும் சொல்றாங்க.. அவரு சுதந்திர போராட்டத்தில எல்லாம் கலந்துகிட்ட... எவ்வளவு பெரிய ஆளு..அவரப் போயி கொச்சப் படுத்திக்கிட்டு....
அவரு என்ன அவருக்காவா பண்ணினாரு..உங்க கட்சிக்கு ஆள் சேர்க்க அந்த வயசிலும் , அயராது வேலை செஞ்சிருக்காரு..
ஏதோ பொறந்தா........... கட்சிக்கு நிதியா கொடுக்கலாமுனு அவர் நினைத்து பண்ண, நீங்க என்னமோ "கருப்பு ஆடு.. வெள்ளை பூனை"-னு அறிக்கை உட்டு .......அவர் மனச நோகடிச்சிட்டீங்க...
அப்புறம் எப்படியா கட்சிக்கு ஆள் சேர்வாங்க..?
அட.. ஆமா சார்.. நான் இந்த கோணத்தில பார்க்கவேயில்ல..
இதைப் புரிஞ்சுக்காம, நானே "எங்கள் அன்னை"-க்கு ஒரு கடிதம் போட்டுட்டேனே.. முருகா...
மன்னிச்சுக்குங்க..நான் இப்பவே ஒரு அறிக்கை...
நிறுத்து.. நிறுத்து...அறிக்கையப் பத்தி இந்த டீ-கடையில பேசக் கூடாது..
அப்புறம் மன்னாரு என்ன பண்ணுவானு அவனுக்கே தெரியாது..
.
சார். இவ்வளவு நல்லா சொல்றீங்க.. அப்படியே , ஒரு சின்ன கையெழுத்து போட்டீங்கனா...
ஆகா.. தொழிலில கரெக்டாதான் இருக்காங்க...இப்படியே உட்டா நமக்கே ஆப்படிச்சாலும் அடிச்சுடுவாங்க...
சரிப்பா.. உங்க திவாரி எப்படியிருக்காரு?.. .
அய்யோ.. நான் தாத்தா திவாரிக்கு ஏதாவது பண்ணனுமே?..அவரு இப்ப எங்கிருக்காரு சார்...?
(எப்படியிருக்காருனு கேட்ட.... எங்கிருக்காருனு என்னையே கேக்கறாங்க.)
இப்ப சொன்னீங்களே.. அது..சரி.. நேரா தெற்கு நோக்கி போயிட்டேயிருங்க..
கடைசியா கடல் வரும்..ஆமாமா. நீலக் கலருதான்..
அடையாளத்துக்கு ஒரு பெரிய வள்ளுவர் சிலையிருக்கும்.. அதுக்கு இடது பக்கத்திலே கடலுக்குள்ள வண்டிய உட்டீங்கணா நேராப் போயிடலாம்..
முக்கியமா , கரையில இருந்து கத்துவானுக..உகூம்.. காதில விழப்படாது.. நேரா உடுங்க..
சார்.. நம்ம காரு கடலுக்குள்ள ஓட்டுனது இல்ல சார்..
அட.. இது ஒரு பிரச்சனையா...
பம்பர்ல ஒரு சின்ன மஞ்சத்துணிய கட்டிடுங்க.. ஒண்ணுமாகாது..
வரட்டா..
.
.