வணக்கம்..வணக்கம்.. வணக்கம்...
ஏன் இவ்வளவு நாளாக எழுதாமல், தீடீரென?...
கேள்வி கேட்பது சகஜம்ண்ணே.. ஆனா.. யோசனை பண்ணி பதில் சொல்வது அம்பூட்டு ஈஸியில்லை.
ஆகவே.. அந்த கேள்வியையை சாய்ஸ்-ல் விட்டுப்புட்டு.. பதிவுக்குப்போறேன்...
ஆமா... இதுவரை எழுதியெல்லாம் எலக்கணமாக்கும்!னு யாராவது மனசுக்குள்ள நெனச்சா!!...
ஏலேய்....நீ....கிளம்பு தொரை..
எவனாவது இங்கிலீஸுல.. இலக்கியம் பேசிக்கிட்டு திரிவான்.. அவன்கிட்டப்போய் பேசிக்கினு இரு... உனக்கும் எனக்கும் சரிப்பட்டு வராது...ஆங்..
மேட்டருக்கு வரேன்.. என்னமோ தெர்ல.. திடீர்னு.. பிரியங்கா.. ராகுலு.. சோனியா ஆங்.. நம்ம ஞானதேசிகன்னு ஏகப்பட்டபேரு, கனவுல வந்து...
”காங்கிரஸ் வாழ்க.. காந்தி வாழ்க!!”னு கூப்பாடு போட்டுக்கிட்டு இருக்காங்க. சே..சே.. இது கனவுனு நினைச்சு..கிள்ளிப்பார்த்தேன்.. நிசமாவே வலிக்குது பாஸ்...
சரி... ’வாழ்க வாழ்க’னு கூவரானுகளே.. யார் வாழ(?)னு யோசனை பண்ணிப்பார்த்தேன்.. பகீர்ங்குது. பச்சமண்ணு.. பஞ்சம் பொழைக்க வந்தவங்களை.. இப்படியா சார் பரிதவிக்க வைக்கிறது..
முடிவு பண்ணீட்டேன்..
இனிமேல காங்கிரஸ்தான் என் ஒரே கட்சி.. சோனியாதான் ஒரே தலவீ.. அவரு பையன் தான் அடுத்த தலீவரு. அதற்காக... நம்ம நாராயணசாமி.. அதாம்ப்பா.. அணு உலையில பொங்க வைக்கிறது எப்படின்னு இங்கிலீஸுல பேசிக்கிட்டு இருக்கே,, அது. அப்பால... அவரோட வாரிசு.. அதான்யா.. அரசியல் வாரிசு.. நம்ம யுவராசு.. அப்பால.. மாண்பிமிகு தங்கபாலு, நம்ம செட்டியாருகாரு. இவங்ககூட சேர்ந்து.. இந்தியாவ ஓகோனு கொண்டு வர.. என்னாலான உதவி செய்யலாம்னு முடிவு பண்ணியிருக்கேன்...
காங்கிரஸ்காரனுக தீர்க்கதரிசிக.. அதை நீங்க புரிஞ்சுக்கிட்டா... சோனியாவ, உங்க குல தெய்வமா கும்பிடுவீங்க...இன்னா அறிவு.. இன்னா தொலைநோக்குப்பார்வை!!!!..
இதெல்லாம் புரிய, தீவீரமா, குத்த வெச்சு உக்காந்து, யோசனை பண்ணனும்.
ஒரு காங்கிரஸ்காரனா.. எனக்கு ஒரே ஒரு சின்ன ஆசைதான்..
ராகுல் காண்டி பிரதமர் ஆகனும்..
செட்டியாரு பையன், அது பேரு கூட என்னமோ சொன்னாங்களே.. அதாம்ப்பா தொழிலதிபரு.. ஆங்.. கார்த்திக்..
அவரு நிதியமைச்சர் ஆகனும்.. ( இன்னாது வாரிசு அரசியலா... நோ..நோ.. அவரு வேற.. இவரு வேற.. தனி தனி ரேஷன் கார்ட் வெச்சிருக்காங்க.. செக் பண்ணிட்டோம்..ஆங்..)
அவங்களுக்கு கீழ, மொத்த இந்தியாவும் இருக்கனும்... அது போதும்யா எனக்கு...
வாழ்க காங்கிரஸ்..
வாழ்க காந்தி..
வாழ்க சோனியா...
வாழ்க எங்கள் அணு விஞ்ஞானி நாராயணசாமி...
இன்னாது.. ரெண்டாவது சின்ன ஆசையையும் சொல்லனுமா...
ஹிஹி..
எங்கள் விவசாயிகளும், சிறு தொழில் அதிபர்களும்.... கலர்கலரா, பெர்முடாஸ் + Roundneck T-Shirt போட்டுக்கிட்டு,
கிராமம் கிராமமா போய், எங்கள் அன்னை சோனியாவுக்கு கோயில் கட்டி, ரெண்டு கை(!)யையும் கூப்பி, வழிபட்டு நிற்பதை... கண்குளிரப்பார்க்கனும்... அம்புட்டுதேன்...
அதுவுமில்லாம....... இன்னும் ரெண்டு வருசத்திலே.. இந்தியாவுல வேற கட்சியே இருக்ககூடாது,,,
எங்கும் காங்கிரஸ்... எதிலும் காங்கிரஸ்...எப்படியும் காங்கிரஸ்..!!
மேலும்......
- அணு உலை ஏன்?
- சில்லறை வர்த்தகர்களை , கோடீஸ்வராக்கும் திட்டம்..
- பெட்ரோல் விலையெல்லாம் ஒரு உயர்வா?..
- நிலக்கரியா?.. அச்..
- ஸ்பெக்ரமும், பேதைப்பெண்களும்...
-இவன்
தீவிர காங்கிரஸ் தொண்டன்...
![]() | |
நீ தலையில ’கை’ வைக்காதே தல... | சீக்கிரமே.. எல்லாப்பயலையும்...!!!!! |