பேட்டி-னு சொன்னதும் முதல் ஆளா, வந்து நின்ற, தன்மானச்சிங்கம், ஆருயிர் நண்பன் சின்ராசுக்கு , காலைவணக்கம்.!!
யாரை பேட்டி எடுக்கப்போற பட்டு?.
நம்ம ராசாவத்தான் சின்ராசு. நம்ம முன்னணி பதிவர்.. அதாம்பா அவரு..... ”எல்லோரும் வாங்க.. தெளிவு பெறுங்க!”னு FaceBooks-ல சொன்னாரு.. அன்னைக்குஎன்னால முடியலே,... அதான் நேராப்போய்....
'இரு..இரு வண்டியை நிறுத்து. எனக்கு இது சரிப்பட்டு வராது. பெரிய இடத்து பிரச்சனை. டீவி வாங்கினமா!, பணத்துக்கு, ஓட்டு போட்டமா!, சரக்கு அடிச்சமானு!, வாழும் தன்மானத்தமிழன் நானு. அதுவுமில்லாம அங்க போனா, என் வாய் சும்மா இருக்காது.'-சின்ராசு.
'நீ சும்மா வந்து நில்லு மச்சி. நான் பதமா இதமா பேசி, பேட்டி எடுக்கிறேன். முடிஞ்சதும் டீ வாங்கித்தரேன்.'- நான்
அப்ப சரி..
இடம் : ராசா பட்டறை.
கேட்டில் எங்கள் கார், காவல்துறையால் (வாட்ச்மேன் –யா..) மறிக்கப்படுகிறது.

'"சின்னவரை" பார்க்கும்முன், செல்போன்... பர்ஸ்..... கேமரா......எல்லாம் கொடுத்திட்டு டோக்கன் வாங்கிக்குங்க.'.- வாட்ச்மேன் ஆறுமுகம்.
'என்னாது?. செல்போனை கொடுத்திட்டுதான் உள்ள போகனுமா?.. அப்படியெல்லாம் முடியாது. அதிலே எவ்வளவு, ’ரஞ்சிதாக்கள் மற்றும் நித்திகள்’ பற்றிய வீடியோ ஆவணங்கள். இது மட்டும் வெளியாச்சு.. தக்காளி... நக்கீரன், என்னை 'காப்புரிமை சட்டத்தில' உள்ள போட்டாலும் போடுவாரு. நான் மாட்டேன்.' - சின்ராசு அடம் பிடிக்க, நான் காரை விட்டு இறங்க...
'அட.. ஆறுமுகம். நல்லாயிருக்கியா?. என்னையா இங்க வேலை செஞ்சுக்கிட்டு இருக்கே?. பையன் கம்யூட்டர்ல வேலை செய்றான். கை நிறைய சம்பளம் வாங்குறான். கஷ்டமெல்லாம் விலகிருச்சுனு சொல்லிக்கிட்டு இருந்தே. இப்ப, யூனிபார்ம் போட்டுக்கிட்டு கேட் தொறந்துவிட்டுட்டு இருக்கே.!!'
'அட. போ தம்பி. ஒரு வாரம் உக்காரவெச்சு சோறு போட்டான். நான் பெத்த பிள்ளையாச்சேனு , ’PF’ காசையெல்லாம் வழிச்சு, அவனுக்கு கொடுத்துட்டேன். அப்பால , 'நாய் சாப்பிடதும்'தான், நீ சாப்பிடனுமுனு, அவனோட வீட்டுக்காரம்மா கண்டிஷன் போட்டிருச்சு. இது நமக்கு சரிவராது. இந்த காலத்து புள்ளைக எங்க பெரிசுகளை மதிக்குது?. கோவத்தில வீட்டவிட்டு வெளிய வந்து, கொஞ்ச நாளா இங்கதாம் வேலை செஞ்சு சாப்பிட்டுக்கிட்டு இருக்கேன்.'
'அட.. கஷ்டகாலமே. படிச்சவனும் இப்படித்தான் இருக்கானுகளா?. சரி.. விடு ஆறுமுகம். இந்த பேட்டிய முடிச்சதும், அடுத்து உன் பிரச்சனைய பற்றி எழுதரேன். ஆமா.. 'சின்ன அய்யா' உள்ள இருக்காரா?.'
'நீ போ தம்பி.. அவரு உள்ளதான் இருக்காரு. ஆனா, அந்த இடதுபக்கத்து ரூம்-க்கு மட்டும் போகாதே. சின்னம்மா கோவிச்சுக்குவாங்க!. உம்.. இந்த கையுறைய மாட்டிக்கிட்டுதான் உள்ள வரனுமுனு, சின்னய்யா உத்தரவு போட்டிருக்காரு. தப்பா நினச்சுக்காதீங்க தம்பி..'- ஆறுமுகம்
ஓ.. அது எப்ப இருந்து ஆறுமுகம்?.
அய்யா டெல்லில இருந்து எப்ப வந்தாரோ. அன்னக்கே சட்டத்தை போட்டுட்டாரு
'நல்லவேளை, ஆணுறையும் மாட்டிக்கிட்டுத்தான் போகனுமுனு, சொல்லாம விட்டாரே. அதுவரை சந்தோசம்.' ( இது நான் சொல்லலே மக்கா. நம்ம சின்ராசு உதித்தது.)
கார் உள்ளே நுழைகிறது.
அது யாருய்யா சின்னம்மா?, ராசாவோட சம்சாரமா?.
அட விடுய்யா.. இது வேற சாமாச்சாரம்...
வரவேற்பரை
'வணக்கம்.. வணக்கம்.. உக்காருங்க பட்டாபட்டி. ஏர்போர்ட் வருவீங்கனு நினச்சேன். வராம விட்டுட்டீங்க..!!'
'ஹி..ஹி.. வேணும்-னு பண்ணலே சார். பாவம். உங்களுக்கு மனசு கஷ்டமா இருந்திருக்கும். நானும் வந்து, பெட்ரொலை ஊத்தனுமானு நினச்சுட்டு,' - பல்லிளிக்க,
'அட.. இதெல்லாம் ஒரு பிரச்சனையா?. இதெல்லாம் சகஜம்னு எடுத்துக்கிட்டாத்தான், கட்சியில இருக்கமுடியும். உம்.. கூலா, ஐஸ்கீரிம் சாப்பிடுங்க.. டெல்லில இருந்து வாங்கிட்டு வந்தது.'
என்ன சார். ஐஸ்கீரிம்.. ரொம்பத்தான் மாறீட்டிங்க.. ஹி..ஹி
இது வந்து.. நம்ம 'சின்னம்மா'-கு ஐஸ்கீர்ம்னா உயிரு. ஹி..ஹி.. அதான்..நீங்க சாப்பிடுங்க, பார்த்து சிந்தாம சாப்பிடுங்க. இல்லாட்டி 'கறை' பிடிச்சுடும்.
'ஹி..ஹி கறை பிடிச்சா, பயப்பட நான் என்ன கிளிண்டனா!!!?' - சின்ராசு
'என்னாது கிளிண்டன், கறைனு.. ஒண்ணுமே புரியலே. ஆமா, இது யாரு .. புதுசா இருக்கு' - ராசா வினவ
'நம்ம கூட்டாளி சின்ராசுங்க சும்மாத்தான் இருக்கான். அதான் இழுத்துக்கிட்டு வந்தேன்.' – நான்
'அப்புறம் சார். பிரச்சனை பெரிசா போயிடுச்சு போல. எப்படி சமாளிக்கிறீங்க?.' – நான் வினவ
இதெல்லாம் ஒரு பிரச்சனையா?. நாங்கதான் அதுக்கு ஒரு விளக்ககூட்டம் போட்டமே. பதிவுலகில் கூட அதைப்பற்றி ஒரு பதிவப்போட்டு இருப்பாரே நம்ம கொள்கைப் பரப்பு செயலாளர். ஏதோ, அந்த மாறி நல்ல உள்ளம் கொண்டவர்கள் இருப்பதால்தான், நாடு வளமையாக இருக்கிறது.
(போன் அடிக்கிறது. 'சின்னவர்' , புரியாதபாஷையில் பேச ஆரம்பித்துவிட்டார்.)
சின்ராசு கிசுகிசுப்பாக, 'யாருய்யா, அந்த பதிவர்?. இப்படியெல்லாம் இருக்காங்களா?. சொல்லு.. சொல்லு.. மண்டை வெடிச்சுடும் போலிருக்கு..ப்ளீஸ்..'
அட.. நம்ம பழைய பதிவருய்யா.. நல்ல lucky-யான look-ல இருப்பாரு. நல்ல மனுஷன் தான். என்ன....., உடம்புல கழக ரத்தத்தை ஏத்திவிட்டுட்டாங்க. அதான், மந்திரிச்ச ஆடு மாறி இருக்காரு. கழக விசயத்தை தவிர மற்ற விசயங்களில், பின்னி பெடலெடுப்பாரு.
அப்பறம். யாரு சார் போன் -ல. என்னென்னவோ பாஷைல பேசறீங்க?.
இல்லைப்பா.. ஆங்கிலத்தில பேசினா, ரிக்கார்ட் பண்ணி மானத்த வாங்குராங்க. அதான் சின்னம்மா இந்த ஐடியா கொடுத்துச்சு. 'என்னையவே' ஏமாத்தி, என்னுடைய பேச்சை ரிக்கார்ட் பண்ணியிருக்காங்கனா, எவ்வளவு வன்மத்துடன் இருக்காங்க, இந்த வட நாட்டுக்காரனுக.
அட நானும் கேட்டேன் சார். என்னுடைய பாராட்டை உங்களுக்கு தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.
"அட.. நீங்களும் பாராட்டினா, வேண்டாங்க...எனக்கு வெக்கம் வெக்கமா வருது. ஆமா எதுக்கு திடீர்னு பாராட்டு?" –ராசா நெளிய
முதல்வரின் மகளைவிட, உங்க ஆங்கிலம் சூப்பராயிருந்து சார். நீங்க "The Great" சார்... என்ன ஒரே குறைதான். ஆடியோவுக்கு பதில் வீடியோ எடுத்து விட்டுருக்கலாம்.. அழகா இருந்திருக்கும்..ஹி..ஹி – நான் பதில் சொல்ல
'சே..சே. எனக்கு பெருமை பிடிக்காது.. விசயத்துக்கு வாங்க. எதுக்கு திடீனு பேட்டி.?' என அவர் நெளிய, ஐஸ்கீரிம் உருக....... இதோ பேட்டி.............
பேட்டி.
இல்லை. இவ்வளவு பணத்தை சம்பாரிச்சுட்டாங்கனு, எல்லாப்பயலும் கூவிக்கிட்டு இருக்கானுகளே. அப்படி என்னதான் தான் சார் பண்ணுனீங்க இந்த பணத்தை.?.
தம்பி. கட்சி நடத்துவது அவ்வளவு சாதாரணமா?. 'இலவச டீவீ, ஆங்.. வரும் தேர்தலுக்கு வாசிங் மெஷின் , 1 ரூபா அரிசி.'. இதுக்கெல்லாம் யார் காசு கொடுப்பானுக.?பாடுபட்டு, மக்களுக்கு பணம் சேர்த்த என்னை, ஏதோ ஊழல் பன்ணியவன் போல சித்தரித்தால், இந்த நாடு விளங்குமா?. சே. பேசாம ஸ்விஸ்-ல செட்டில் ஆயிடலாமுனு நினைக்கிறேன்.
'ஆமாமாம். கடைசியா, அங்கதான் போய் ஆகனும். கூடவே அந்தம்மாவையும் கூட்டிக்கிட்டுப்போயிடுங்க.. கிளைமேட் நல்லா இருக்குமாம். பதிவர்கள் பலபேர் சொல்லியிருக்காங்க'.- சின்ராசு
உங்க நண்பர் என்னா சொல்றாரு.. புரியலையே..
ஹி..ஹி.. அவனை விடுங்க.. இப்படித்தான் எடக்குமடக்கா பேசுவான். வாங்க பேட்டிக்கு போவோம்.
இல்ல பட்டாபட்டி. மனசு சரியில்லை.. இன்னொரு நாள் பேட்டிய வெச்சுக்கலாம். அர்ஜெண்டா வரச்சொல்லி, அவங்க
"உங்க பதிவ பார்த்துட்டுத்தான் சின்னம்மா, 'ஐஸ்கீர்மா?.. இல்லை அதுவா(?)னு ' முடிவு பண்ணுவாங்க.. பார்த்து சூதனமா எழுதுங்க. வரட்டுமா" ராசா செல்ல , நாங்களும் புறப்பட, "அட.. நீங்க இன்னுமா படிச்சிட்டு இருக்கீங்க..போய் அடுத்த எலெக்ஷன், சீக்கிரம் வரனுமுனு கடவுளை வேண்டுங்க பாஸ்... பை..பை.
சின்ராசு, "ஏண்டா பட்டாபட்டி. பேட்டி எடுக்காமலே போறோமே. அப்புறம் எப்படி பதிவ போடுவ?"
அட.. விடுய்யா.. மேட்டர் கிடைக்காட்டி, டோமர்(?)மாறி வாசகர் கடிதம்போட்டு ஒப்பேத்தலாம்.
பதிவு... வாசகர் கடிதம்
@பட்டாபட்டி (நாந்தான்)
- குழந்தைக்கடத்தலில் ஈடுபட்டவர்களை, சுட்ட அதிகாரிகளை பாராட்டிய பதிவுலகம், ஏன் இவ்வளவு சுட்ட சின்னவரை பாராட்டவில்லை?.
- வெள்ளச் சட்டை போட்டாலே, எல்லோரும் ஒரே ஜாதிதான். இதில் ஏன் 'தலீத், உயர்சாதி, தாழ்ந்தசாதி' என்ற பாகுபாடு?
@உண்மைத்தம்பி
.............அய்யா.. என் பழைய பதிவை கிண்டல் பண்ணி எழுதியதால், உங்கள் மீது வருத்தம் இருந்தது. இப்பொழுதாவது உங்களுக்கு புரிந்ததே!. அந்த புரிதலுக்கு நன்றி. ( நம் பணம், நம் மக்கள். இதை இலவசபடமாகப் பார்த்து, ஒரு தமிழனாக, என் கடமையை நிறைவேற்றினேன். அது இத்துடம் முடிந்துவிடக்கூடாது என்ற சீரிய நோக்கத்துடன், பதிவுலகை அழைக்க, சிலர் பார்வையில் தவறாக புரியப்பட்டு விட்டது. எல்லாம் அவன் செயல்.)
@டோமர்
...........................இனிமேல் அமைச்சர்கள், ஜெர்மன் பாஷையில்தான் தொலைபேசவேண்டும் என்பது, நண்பர் சோ-வின் கூற்று. அதுதான் , இந்த பிரச்சனைக்கு ஒரே தீர்வு. எனது புரிதலை மாற்றிக்கொள்ள சொல்லும் உரிமை , எந்த ஜாட்டானுக்கும் இல்லை.
எனக்கு பல பாஷைகள், மற்றும், சைபர் கிரைம், சைபர் கணவாய் பற்றி தெரியும். உலகில் எனக்கு புரியாத ஒரே விசயம், "எப்படி டை கட்டுவது என்பதுதான். அதற்கு நீரா ராடியா உதவினால், அவருக்குமுன்,
@கும்மீஸ் டீம்
............................தக்காளி.. பதிவ போடுனு சொன்னா, மாசத்துக்கு ஒரு பதிவு போடுவான். இதில் ஒரு மாதத்தை, ஒரே பதிவில் அமுக்கியதற்காக என் கண்டனங்கள்.
@வெண்ணிற ராவுகள்.
.......................பேசாம, மனித நேயம், மயிரு நேயமுனு ஒரு பதிவ தேத்தலாம்..எவனாவது, சண்டைக்கு வந்தா, "வீட்டுல ஆடு கன்னுக்குட்டி போட்டிருக்கு. அம்மாவுக்கு உடம்புக்கு முடியலே"னு ஏதாவது சொல்லிட்டா, எல்லாப்பயலும் மறந்துடுவானுக.. ஷூட்.. கமென்ஸ் மாட்ரேஷன், ஆன் பண்ணனும்.
@கரு(நான்)நிதி
..................எனக்கு "கடைசியாக ஒரே ஒரு முறை வாக்களிக்ககூடாதா?" என்று, நான் கூறிய கூற்றை ஏற்று, ஜனநாயக கடமை ஆற்றிய, தமிழ் உள்ளங்களுக்கு, என் நன்றியினை தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன். "என் கடன் பணி செய்து கிடப்பதே" என்ற அண்ணாவின் அறிவுறைப்படி , தமிழகத்தை வளமாக்க, என்னுடன் தோள் கொடுங்க, வரும் தேர்தலில்
@கான்வெண்ட் மாமி
..............எனக்கு டமில் கொஞ்சம்..கொஞ்சம் வரும். என்னுடைய சகோதரி ஒருவர்தான். கிளைகள் எங்கும் கிடையாது. மக்கள் சிந்திக்கவேண்டும். இந்த ஆட்சீயை தூக்கி எறிந்துவிட்டு , பதவி ஏற்க நான் தயார்.. அன்னை தயாரா?.
எனது ஆங்கிலப்புலமை அறிந்த எம்.ஜீ.ஆர், என்னை கட்சியின் வாரிசாக நியமித்ததை, நானோ தோழியோ, யாருக்கும் நிரூபிக்க தேவையில்லை.
எங்களுக்கு காலம் வரும். காலம் வந்தால் ஓய்வு வரும்..
ஓய்வு வந்தாலும், ஓடிபோயி, ஓய்வெடுப்போமே” ............லா..லா..லா....
எல்லாம் முடிந்ததும் , நமது ஆட்சிதான். ” ஒன்றே தோழி.. ஒருவனே எதிரி..”.
அதுவரை நானும் தோழியும், ஓய்வு எடுத்துக்கொள்கிறோம். ஆடிட்டர் .. அதை எடு..
யோவ்.. செருப்பை இல்லை.. காரை சொன்னேன்..
@கன்னிமொழி
..........இவரிடம், கேட்டால் கிடைக்குமா? இன்று தொலைபேசியில் கேட்க வேண்டும்.
@சக பதிவர்கள்
................இப்படி எழுதறானே. ஒருவேளை உப்பு, கிப்பு போட்டு சாப்பிடுவானோ?
@ நக்கீரன் கேவாலு.
.................வாழ்க்கையில எனக்கு ரெண்டே குறிக்கோள்தான். ஒண்ணு வீரப்பனை பேட்டி எடுக்கனும். பணம் கிடைத்ததும் போட்டு தள்..( உஷ்...நாக்கை கடிக்கும் சத்தம்.). அடுத்து, இந்த பதிவரின் பட்டாபட்டியை, துவைத்து, இஸ்திரி போட்டு, பாராட்டு விழா நடத்தி, மக்கள் முன்னிலையில் , அவரிடம் திருப்பி தந்து என் கடமையை ஆற்றிவிடனும்.
அப்புறம் பார்த்தீங்கனா, வீரப்பன், தண்ணி கிடைக்காம இலையில் துடைத்தார்னு ஒரு சிறப்பான பேட்டி நம்ம பத்திரிக்கையில வந்துச்சே. மக்கள் மறந்திருக்க வாய்ப்பேயில்லை. ஏன்னா. அதை நேரடியா எடுத்தது எங்க டீம். அதோட வீடியோ பார்க்கனுமுனு காசு கட்டுங்க.. லிங்க கொடுக்கிறேன். இப்ப அந்த இலை, இன்றுவரை, நம்ம ஆபீஸ்ல அலங்காரமா வெச்சிருப்பதை பற்றி பெருமையா இருக்கு. அதற்க்குப் பக்கத்திலேயே, நம்ம நயன் தாரா பொண்ணு இருக்கே.. அது ஒருநாள் பேட்டி கொடுத்தபோது , மூக்கில சளி வந்துச்சு. அதை கைகுட்டையில் சீந்தி வீச போனபோது, நான் உயிர் பயமே இல்லாம, பாஞ்சு அதை பிடிச்சு, அதையும் ஆபீஸ்ல வெச்சிருக்கேன்.
பட்டாபட்டி அண்ணனின், பட்டாபட்டி வரும்வரை, "என்னை மோசம் செய்துவிட்டீர்கள்" என்று அழும் நயன் தாராவின், உயர்தர பேட்டியை, மக்களிடம் கொண்டு செல்லும், அரிய வாய்ப்பை கொடுத்த வாசக பெருமக்களுக்கு என் குழுவினரின் சார்பாக, நன்றியினை தெரிவித்துக்கொண்டு , இன்றுமுதல், எங்கள் பத்திரிக்கையை, இரண்டாக வாங்குங்கள். ஒன்று துடைப்பதற்கு.. மற்றது, எங்கள் குடும்பம் நன்றாக இருப்பதற்கு. நன்றி. “ எனக்கூறி விடை பெறுகிறேன்.
@லக்கி அண்ண்ண்னன்.
.......................என்னையவே கலாய்க்கிறானா?. இருயா.. இரு.. பதிவப் போட்டதும் பப்ளீஸ் பண்ணிட்டு, டெலிட் பண்ணலே.. நான் கட்சிக்காரன் கிடையாது. இருடி... மாப்ளே ( அண்ணே.. கோச்சுக்காதீங்க.......ராசா பண்ணியது தப்பேயில்லைனு, நீங்க faceBooks போட்ட படத்தை பார்த்துதான், நானே அரசியலுக்கு வந்தேன்.ஹி..ஹி - ஆசிரியர்)
@பொதுசனம்.
....................அய்யா.. டீவி குடுத்தாரு. சரக்கு குடுத்தாரு. 1 ரூபாக்கு அரிசி கொடுத்தாரு. சுயதொழில் வேலை வாய்ப்பு மூலமா, வேலை செய்யாட்டியும், தினசரி பணம் கொடுத்தாரு. அடுத்தமுறை, அவருக்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்கனும்.. ( சே.. அதுக்குள்ள எங்கப்பனை போட்டுத்தள்ளனும்பா.. தினமும், சோறு போடு, கொசு கடிக்குதுனு சொல்லிக்கிட்டு, வீட்டுத்திண்ணையில மூடிட்டு உட்காராமல்....)
======================================================================
டிஸ்கி 1..
"ஆண்டியப்பன் அன்று சினிமாவுக்கு போயிருந்தால்" என்ற பதிவுக்காக சவுக்குக்கு என் வன்மையான கண்டனங்கள்..
( "ஆண்டியப்பன், அன்று கோமணத்தை, அவிழ்க்காம இருந்திருந்தால்", என்று சொல்லாமல் விட்டதால் )
======================================================================.
இது யார் மனதையும் புண்படுத்த எழுத்தப்பட்டதல்ல,.. அப்படி புண்பட்டிருந்தால், உங்களுக்கு என் இரங்கல்கள்...
.
.