.
.
.

வணக்கம் பிரதர். எனக்கு ரொம்பநாளா ஒரு டவுட். இந்த பணபுழக்கம்..பணப்புழக்கமுனு சொல்லிக்கிட்டு இருக்கானுகளே. அப்படீனா என்னாப்பா?. ஏன்னா...எவனக்கேட்டாலும்,காசு இல்லேங்கரான். ’பங்கு’ங்குரான்.. ’வர்த்தகம்’னு கூவரான். ஒருநாளு ஏறுதுன்னு சொல்றான்.. அப்பால .இறங்குதுனு சொல்றான்.. . பிஸ்னஸ் டல்லுங்குரான்.
எனக்கு ஒரு மண்ணும் புர்லே. டெய்லி ஆட்டோ எடுத்துகினு வந்து வேலை வாய்ப்பு குடுக்கிறானுகோ. அதாம்பா.. காந்தி பேரச் சொல்லிக்கினு கடப்பாறை எடுத்துக்கினு போனா 200 ரூபா குடுக்கிரானுகோ. அதுல அவனுக பங்கு போக, எனக்கு ஒரு குவாட்டரு.. கோழி..கூட ஆப்பாயில்.. எனக்கு என்னா கவலை?..
இப்ப மேட்டருக்கு வரேன். என்னோட ஆளு பத்தாங்கிளாசு பெயிலு..நாலு விசயத்தை தெரிஞ்சிகினு, அதுகிட்ட பிட்டப் போடலாமேனு நார்வேக்காரரை கேட்டேன். அவரு ரீசெண்டா, ”அதப்பற்றி இப்ப பேச முடியாது. நானு ரொம்ப பிஸி. பெண் பதிவருக்கு சுதந்திரம் வாங்கித்தரவே, நாளு கிழமை பார்க்காம சுத்திகினு இருக்கேன். வேட்டியக்கட்டிக்கினு வந்துட்டானுக..தூ....” -ன்னு துப்பிக்கினு அப்பீட் ஆயிட்டாரு. ( ஏஞ்சாமி..அவருக்கு வேட்டிக்கட்டிக்கினு கேள்வி கேட்டா புடிக்காதா?. என்னா பேச்சு பேசராரு?. ஒருகோடி குடுத்தாலும் , நான் ஆப்ரேசன் பன்ணிகமாட்டேன் )
அப்பால, எட்டு பாஷை பேசுவேனு சொல்லிக்கினு இருக்குமே. அதையும் கேட்டேன். அது என்னமோ டீவீ பொட்டிக்கு பேச்சுக்குடுக்க போகனும். ஆறு மணிக்கு அது காந்திசிலையாண்ட வந்திருமுனு தோள்ல பையும், கால்ல சுடுதண்ணியுமா தவிச்சிக்கிட்டு இருக்கு.. எது வருமுனு எனக்கும் தெர்லே. என்னொட தோஸ்துக்கு தெர்லே.
சரி..பெரிய மனுஷனுக சாகவாசம் நமக்கெதுக்குனு, குவாட்டர் எத்திக்கினு கடவீதியாண்ட போனேன். நம்ம மங்குனி சார், டீ-ய ஆத்தி ஆத்தி குடிச்சிக்கினு இருந்தாரு. நல்ல வெள்ள வேட்டி, வெள்ள சட்ட. ரியல் எஸ்டேட் பிஸ்னஸ்ல சரி காசு போல(?). அவரை கேட்டா, ”ஒரு கிரவுண்ட் வாங்கு. அப்பால பதில் சொல்றே”-னு சிலுப்பறாரு.
இது என்ன, அவ்வளவு பெரிய ராணுவ ரகசியமா பிரதர்?. கடசியா நம்ம காளி கோயில் பூசாரிதான் உங்களப் பார்க்கச் சொன்னாரு. சரி. பதில் சொல்லு..?
- குவாட்டர் கோயிந்தன்
-----------------------------------------------------
வாய்யா கோயிந்து..நல்லாக்கீறியா?. நீ எதுக்கு நார்வேகாரரை கண்டுக்கினு வந்தே.. அவரு குஷ்பு பத்தி சொன்னாமட்டும், ”டாண்”ணு வருவாரு.. இல்லாங்காட்டி பொண்ணு விடுதலை.. பேராளி.. துப்பாக்கி.. தோட்டா.. சைபரு.. கிரைமு .. சொல்லிக்கினு இருப்பாரு.. ஆனாலும் உனக்கு மகா நெஞ்சழுத்தையா...வேட்டி கட்டிக்கினு அங்கன போயிருக்கே..
ஆமா அடுத்த பார்ட்டி... அதுகூட பேசவே முடியாதே. உனக்கு ஒரு மண்ணும் தெரியாதுனு சொல்லியிருக்குமே. அது எப்பவும் அப்படித்தான்.. ஊருல எல்லாப் பயலும் புண்ணாக்கு மு$#%#.. அதுக்குமட்டும்தான் எல்லாம் தெர்யுமுனு ஆட்டிக்கினு இருக்கும்.
உனக்கு என்னா?..பணப்புழக்கம்னா என்னா?-னு தெர்யனும்.. காதை தொறந்துவெச்சுக்க.. கத சொல்றேன்..
ஒரு ஊரு. மொத்தமா ஒரு நூறுவீடு இருக்கும். ஏதோ ஒரு பஞ்சாயத்துல இருக்கு.. அப்பப்ப மினி பஸ் வரும். இல்லாட்டி எலெக்ஷன் நேரத்தில கட்சிக்காரனுக வருவானுக...
( வெள்ள வேட்டி கட்டிக்கினு, பிளஷர் கார் எடுத்துக்கினு, உன்னோட நல்னை தூக்கி நிறுத்தரது தான் எங்களோட குறிக்கோள்னு , போற வரவனையெல்லாம் கையெடுத்து கும்பிடுவானுக..அவங்களைத்தான் சொல்றேன்...)
அந்த ஊர்ல, கள்ளுக்கடை.பக்கதில சால்னா கடை.. ரெண்டுவீதி தள்ளிப்போனா முடிவெட்ற கடை.. அருகில், கறிக்கடை பாய்.. ஒதுக்குபுறமா ஆறு..அங்க வேல வெட்டி இல்லாப் பயலுக எருமை மேய்ச்சிக்கினு இருக்கானுக. பக்கத்தில ஏழைபாளைக, துணி துவச்சுகினு இருகானுக.. சந்துல டீக்கடை... அதுல வெட்டிப்பயலுக நாலு பேரு..
( நான் மங்குனிய சொல்லலே... போட்டுக்குடுத்துராத சாமி..)
அங்க ”
ஹெலிக்காப்டர் இறங்க, எலிபேட்டோ”, அல்லது ”
ஆயிரம் ஓட்டோ” இருந்திருந்தா,
அம்மா....... அங்கனையும் வந்து ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கும். நூறு வீடு.. மொத்தமா நாற்பது ஓட்டு..நாக்கா வழிக்கமுடியும்?.. அதனால..அந்த கிராமம.. “
அம்மா, அய்யா, அண்ணன் , தம்பி “ யார்கண்ணுல படாமா அப்படியே இருக்கு..
இதுவரைக்கும் புரிஞ்சுதா?..( புரியாதவங்க..... ஏதாவது கவிதை..கதைனு, பக்கத்தில..... கல்லா கட்டிட்டிக்குனு இருப்பானுக..அங்க போய்
- நெஞ்சை நக்கிவிட்டீர்கள்..
- இதுபோன்ற பதிவை, வாழ்க்கையில படிச்சதில்லை..
- என் அறிவுக்கண்ணை திறந்துவிட்டீர்கள்..
அப்ப்டி சொல்லிக்கிட்டு .....போயிட்டேயிருங்க..
சத்தியமா....இது உங்களுக்கான பதிவேயில்லை.. )
மத்தவங்க....
ஓ.கே..
கள்ளுக்கடைகாரன் , கறிக்கடைகாரன்கிட்ட கடன் வெச்சுருக்கான்..
கறிக்கடைகாரன், கோழி சப்ளைபண்றவன்கிட்ட கடன்..
கோழிபண்ணைக்காரன், ஊர் குஷ்$%#க்கு கடன் வெச்சுருக்கான்..
( அட.அந்த விசயத்துக்குமா?....ஆமாய்யா..ஆமாம்...)
குஷ்^$%#, முடிவெட்டரவ்ன்கிட்ட கடன்.
.( ப்யூட்டி பார்லர் பாஸ்.. மேலும் முடிவெட்டறவன் கொஞ்சம் வயசானவன்)
முடிவெட்டறவன், கள்ளுக்கரான்கிட்ட கடன் சொல்லி குடிச்சிருக்கான்.
(அது பிரச்சனையாயி..கள்ளுக்காரன் பொண்டாட்டி, விளக்குமாற்றுல, புருஷனை அடிச்சது தனிக்கதை..)
இப்படி எல்லாரும் கடன்காரனாயிருங்காங்க..
அங்க ஒரு படிச்சவன். என்னையமாறி(!).. மக்கள் காசுபணம் இல்லாம, கஷ்டப்படரானுகளே!.. இவனுகளுக்கு, ஏதாவது பண்ணலாமுனு முடிவு பண்ணி, அம்பானி பையனுக்குக்கு கடிதாசு போட்டுச்சு.. அதாவது, அங்கன கம்மா கரையில, பெட்ரோல் நாத்தம் அடிக்குது..குழி
தோண்டி , பைப் வெச்சு உறிஞ்சா, பெட்ரோல வந்தாலும் வரலாம்.. முட்டாப்பயலுக மூளைய யூஸ் பண்றதுக்குள்ள, சீக்கிரம் வந்து பாருனு...
அம்பானி பையனும், அரை டிராயார் மாட்டிக்கினு, கண்ணுக்கு கருப்பு கண்ணாடி போட்டுக்கினு, பெரிய ஜீப் எடுத்துகினு வந்தாரு.. வந்தவரு தண்ணி பாட்டில எடுக்காம வந்துட்டார்.. நாக்கு வறலுது..அப்படியே சைட்ல கள்ளுக்கடைகுள்ள நுழைஞ்சாரு..
இந்தாப்பா 100 ரூபா.. நல்ல ஒரு மரத்து கள்ளா எடுத்து வை.. சீக்கிரம் வாரேனு , பெட்ரோல் பாக்க போயிட்டாரு.. கள்ளுக்கடைக்காரன் பார்த்தான்.. ஆகா..100 ரூபா..
அப்படியே, கறிக்கடை பாய்க்கு, செட்டில் பண்ணி சால்னா கடை ஓட ரெடி பண்ணிட்டாரு.
பாய்..அதை எடுத்து, கோழி மீனு சப்ளை பன்ணினவனுக்கு பைசல் பண்ணிட்டாரு
கோழிக்காரன், குலதெய்வம் குஷ்&%^% க்கு, கொடுத்து செஞ்சோற்றுக்கடனை(?) அடைச்சுட்டார்(?)..
குலதெய்வம், முடிவெட்டறவனுக்கு...
முடிவெட்டறவன்..பணத்தை எடுத்துக்கிட்டுப்போய்..கள்ளுக்கடைகாரன் மூஞ்சில வீசிட்டான்..
இப்ப கள்ளுக்கடை கல்லால, 100 ரூபா இருக்கு.. அம்பானி பையன் கோபமா உள்ள வராரு..
“எவனோ ஒரு பன்னாடை..பெட்ரோல்க்கும், ஆட்டுப்புழக்கைக்கும் வித்தியாசம் தெரியாம, லெட்டர் போட்டு.. சே.. கர்மமடா சாமி.. இந்நேரம், 10 கோடி சம்பாரிச்சிருக்கலாம்” னு. பணத்தை எடுத்துக்கிட்டு வெளிய போயிட்டான்.
இப்ப..
பணம் சேரவேண்டிய இடத்தில சேர்ந்திடுச்சு..
யாருக்கும் கடன் இல்லை.. எல்லாம் அழகா, செட்டில் பண்ணிட்டானுக..
அம்பானி பொழப்ப பார்க்க டெல்லி போயிட்டாரு..
இதுக்கு பேர்தான் பணப்புழக்கம்..
( ”நாட்டை, விரைவில வல்லரசாக்கப்போகின்றோம்”, என்று வெள்ள சட்டை அணிந்த பெருமக்கள் வருவார்கள்.. அவர்களுக்கு உங்கள் பொன்னான வாக்கை இட்,டு வெற்றிபெறச்செய்யுமாறு தாழ்மையுடம் கேட்டுக்கொள்கிறேன்..
அவர்கள் நினைத்தால், ஆயிரம் அம்பானிகளை உருவாக்கமுடியும்..
நாமும் கடன்களை அடைத்துவிட்டு, நெஞ்சு நிமிர்த்தி..பீடு நடை போடும் காலம் வெகு தொலைவில் இல்லை.....நன்றி..)
.
.
.