கோவை பூ மார்க்கெட்..
பரபரப்பான காலை நேரம்.. பிஸியான பூ மார்க்கெட் ஏரியாவில,
உதித்த சூரியன், மக்களின் மண்டையை பிளக்கிறான்.. மரத்தினடியில், உடைந்த
பம்பரத்துடன் ஒரு ஏழைச்சிறுவன்..
இலைக்கள் உதிர்கின்றன..
டீ சாப்பிடாவிட்டால், தமிழனா பிறந்ததற்க்கு அர்த்தம் இல்லாம் போய்விடும் என்ற காரணத்தால், எனது கால்கள் மன்னாரின் டீக்கடையை நோக்கிப் பயணிக்கிறது.. அருகில் பூக்கடை.. பூக்காரி என்னைப்பார்த்து சைகை செய்கிறாள்..
பூக்காரி என்றாலே பிரச்சனை என ஒதுங்கிச்செல்கிறேன்..
சத்தமாக அழைக்கிறாள்..
சத்தியமாக ஓடினேன் மன்னார் கடையை நோக்கி..
இடம் : டீ கடை..
மாஸ்டர்..ஸ்டார்ர்ர்ர்ர்ர்ர்ங்கா ஒரு டீ...
இருங்க பாஸ்.. எல்லாப் பாலையும் செம்மொழி மாநாட்டுக்கு வழிச்சுக்கிட்டு போயிட்டானுக.. இனி பால்காரன் வந்தாத்தான் என் பொழப்பு ஓடும்...
அட..அப்ப அடுத்தவாரம்,
கோவையில தமிழ்பால் ஓடப்போகுதுனு சொல்ற?
நக்கல் பண்ணாதீங்க தல...க
ட்டின கோமணத்தை உருவாம இருக்க நான் பட்ட கஷ்டம் எனக்குத்தான் தெரியும்... என்னமோ அலங்காரம் பண்ண துணி பத்தலேனு, தலைவர் முரசொலில சொன்னாலும் சொன்னாரு..வீட்ல இருந்த பழைய துணியெல்லாம்
கட்சிக்காரனுக அள்ளிட்டுப்போயிட்டானுக..
அதுவேறயா?...ஆமா, உன்னோட மேல்மாடிக்கடையை, யாரோ டாக்டருக்கு வாடகைக்கு விட்டுட்டேனு சின்ராசு சொன்னான்.. யாருப்பா அது?..
யாரோ
மெட்ராஸ்காரராம்..பேரு ராகவனாம்..கொஞ்சம் பெருவயசுதான்..
கருகலைப்பு பண்றதுல
ஸ்பெஷலிஸ்டாம்..
ஏன்..இதுக்கு முன்னாடி காது ரிப்பேர் பண்ற டாக்டர் இருந்தாரே..அவருக்கு எனன ஆச்சு?..
அதை ஏன் கேக்குறீங்க..அவரை அம்மா கட்சியில இருந்து தாத்தா கட்சிக்கு, காசு கொடுத்து வாங்கிட்டானுக.. இனி மேல டாக்டர் தொழில் பண்றதுக்குபதில்,
பேசாம குஷ்பு பின்னாடியே போனா காசு பார்க்கலாமுனு , அங்க போயி ஐக்கியமாயிட்டாரு..
ஓ..குஷ்பு வந்ததும்,
கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சினமாறி இருக்குமே?... ஆமா...புது டாக்டருக்கு தொழில் எப்படி போயிட்டு இருக்கு?...
அது ஜோரா ஓடுது தல.
கலைக்கிறவங்களுக்குத்தான் காலம். அதுவுமில்லாம, நம்ம குஷ்பு மேடம் இருக்கும்போது அவருக்கு என்னா கவலை?...
யோவ்.. அதுக்கும், டாக்டர் தொழிலுக்கும் என்னையா சம்பந்தம்?
தலைவா.. விவரமில்லாமா பேசாதீங்க.. குஷ்பு அக்கா வந்ததும் , இளந்தாரிகள் தறிகெட்டு திரியுதே.. டாக்டருக்கு நல்ல வரும்படி..
யோவ்.. வாயில நல்லாவருது... சரித்திரத்தை மாத்திச்சொல்லாதே..
அந்தம்மா, பாதுகாப்பா வெச்சுக்கோங்கனுதானே சொல்லுச்சு.. அதுக்கும் கருகலைப்புக்கும் என்ன சம்பந்தம்?
போங்க தலைவா.. நேரா விளக்கமா செஞ்சு காமிச்சாவே, மண்டையில ஏறாது.. இதுல அந்தம்மாவோட அறிக்கைய வெச்சுக்கிட்டு பலபேர் ஆட ஆரம்பிச்சுட்டானுக.. அப்புறம் டாக்டரே கதினு வந்து க்யூல உக்காந்துட்டு இருக்காளுக...
விளங்குமய்யா.. ஆமா எதுக்கு அந்த பொண்ணு காதில கைய வெச்சுக்கிட்டு ஓடுது? . நீ சொன்னமாறி, இந்த காலத்து பொண்ணுகளுக்கு எல்லாமே அவசரம்தான்..
( டாக்டர் வருகிறார்..)
மன்னாரு.. ஒரு டீ போடுப்பா..ஒரே தலைவலி..
சார்.. வாங்க சார்.. கருங்காப்பி குடிங்க..தலைவலிக்கு நல்லது...
(தக்காளி..பால் இல்லாட்டியும், காரியத்தில கண்ணாயிருக்கானுக...)
வணக்கம் டாக்டர்.. நான் பட்டாபட்டி..எப்படியிருக்கீங்க?..
வணக்கம்..வணக்கம்.. சீக்கிரம் தலையில துண்டு போட வெச்சுருவானுக போல...
என்ன டாக்டர்.. நான் என்ன சொல்லீட்டேனு இப்படி பேசறீங்க.?..
சாரி..சார்.. நான் உங்களை சொல்லலே.. இப்ப போச்சே ஒரு பொண்ணு.. கண்றாவி சார்.. கண்ட கருமத்துக்கு நான் வைத்தியம் பார்க்க வேண்டியிருக்கு...
என்ன சார்.. ரொம்ப வெறுத்துப்போயி பேசறீங்க...என்னாச்சு?..
பின்ன என்ன சார்?.. வேர்த்து பூத்து என்னைய பார்க்க வந்துச்சு..’வாம்மா உக்காரு’னு சொன்னேன்.. நாற்காலி முனையில உட்கார்ந்துகொண்டு, நகத்தை கடிக்குது.. ’ஏம்மா..பதைபதைப்பா இருக்கே.. வீட்டுக்காரரு வரலையா?’னு கேட்டேன்..
அவரு வெளிநாடு போயி 2 வருஷம் ஆச்சாம்..கண்றாவி சார்...
ஆசுவாசப்படுத்தி, ’சொல்லும்மா’னு சொன்னேன். அதுக்கு கண்ணு கலங்கி, மெதுவா,
’வலிக்குமா?’னு கேட்டுச்சு.. இல்லை..
லைட்டா கொஞ்ச நாளைக்கு வலிக்குமுனு சொன்னேன்.. ஓ-னு அழுதுக்கிட்டு சொல்லுது,
’டாக்டர்..இதை எடுக்க வீட்ல முயற்சிபண்ணினேன்..ஆனா முடியலே’
எனக்கு பயங்கர ஷாக் ஆயிடுச்சு.. பாருங்க பாஸ்.. படிச்சவங்களே இப்படி இருந்தா என்ன பண்றது? அதுவுமில்லாம,
’ மேல கீழ ‘ குதிச்சுக்கிட்டே இருந்தா அதுவா வெளிய வந்திருமுனு, ஏதோ பாட்டி சொல்லுச்சாம்..
அதையும் முயற்சி பண்ணியிருக்கு, இந்த படிச்ச முட்டாள்..
அதக்கூட விட்டுடலாம்.. பக்கத்து வீட்டுக்காரன் கைய விட்டு எடுக்கப்பார்த்திருக்கான்...ஓட்டை சின்னதா இருந்ததாலே, முடியலையாம்...
ஹேர்பின் வெச்சு எடுக்கப் பார்த்தானாம்.. அதுவும் முடியலையாம்.. கடைசியா அவங்க
அம்மா, ’தீக்குச்சு’யை வெச்சு எடுக்கலாமுனு ஐடியா கொடுத்திருக்கு.. இதைக்கேட்டதும், டாக்டரான என்க்கே ப்ளட்பிரஷர் ஏறிடுச்சு..காச்சு மூச்சுனு கத்திட்டேன்..
.
.
மன்னாரு..காபி என்னாச்சு?.
.
.
பட்டாபட்டி..நீங்க கேளுங்க..நடந்தது இதுதான்....
நான் அந்தப்பொண்ணுகிட்ட ’இப்படியெல்லாம் நீங்க முயற்சி பண்ணக்கூடாது.. அதுக்குத்தான் படிச்சுட்டு இந்த தொழிலுக்கு வந்திருக்கோமு’னு சொல்ல, டாக்டர்..
இந்தமாறி குப்பையெல்லாம் உள்ளேபோகாம இருக்க ஏதாவது வழியிருக்கா?னு, என்னைப்பார்த்து கேட்குது.
சார்...குப்பையாம்.. என்னா லொள்லுனு பார்த்தீங்களா?..வரவர படிச்சவனைப் பார்த்தா யாரும் மதிக்கிறதில்லை.. நானும் கோவத்தை அடக்கிட்டு,
‘அதுக்குத்தான் மாத்திரை இருக்கே..இல்ல...இரவுல பாதுகாப்பு சாதனத்தை உபயோகப்ப்டுத்தின, பிரச்சனை வர சான்ஸ்சே இல்லை..’ னு சொன்னேன்..
“ஓ..நைட்டு மட்டும் உபயோகப்படுத்தினா போதுமா சார்?’- என்னைப்பார்த்து கேள்வி..
‘பாருங்க மேடம்...அப்படினு குறிப்பிட்டு சொல்லமுடியாது..உங்களுக்கு
எப்பப்போ மூடு வருதோ. அப்ப உபயோகப்படுத்துங்க’னு சொன்னேன்.
’
ஓ..என்னோட மூடுதான் காரணம்னு சொல்றீங்களா?’- பெண்
’இதுக்கு, உங்க மூடுமட்டும் காரணம்னு சொல்லமுடியாது..
உங்க பாஷையில, குப்பை உருவாக பல காரணங்கள் இருக்கு மேடம்..’
’சரி டாக்டர்..என்னோட பக்கத்து வீட்டுக்காரன் சொன்னான்.. சில கிராமத்தில, செலவு குறைச்சலா, இதுக்கு வைத்தியம் இருக்காமே..?..
நல்லா சூடா எண்ணெய் காய்ச்சி ஊற்றினா, அடுத்தநாள் வெளிய வந்திடுமாம்..அவரு சொன்னதுமாறி பண்ணியும், அது வெளிய வரலே..’
’கர்மம்..இப்படிவேற சொல்லிக்கிட்டு திரியறானுகளா?.
.உங்களுக்கு, ’ஒன்வே டிக்கெட்’ எடுக்க, அவன் ஐடியா கொடுத்திருக்கான்...முதல்ல, போலீஸ்க்கு போன் பண்ணி, அவனை தூக்கி உள்ள போடுங்க..எப்படியோ..
சீக்கிரமா என்னைய பார்க்க வந்தீங்களே..அதுவே சந்தோசம்...’
’
இல்ல சார்.. நேற்று நைட்டே வரலாமுனு பார்த்தேன்..அதுக்குள்ள வீட்டுக்காரர், வெளிநாட்ல இருந்து போன் பன்ணீட்டார்...’
’ஓ..உங்க வீட்டுக்காரருக்கு சொல்லீட்டீங்களா?..ஒண்ணும் பிரச்சனையில்லையே?’
’சே..சே. அவரு ரொம்ப
நல்லவரு.. பக்கத்து வீட்டுக்காரனை கூட்டிக்கிட்டு , உங்களை போயி பார்க்கச்சொன்னாரு..’
சத்தியமா நல்ல மனுசன் போலிருக்கு...
நானும் கொஞ்சமா சுதாரிச்சுக்கிட்டு, ‘
கொஞ்ச நாள் ஆனா, அது உள்ள நகர ஆரம்பிச்சுடும்..அப்புறம் வெளிய எடுப்பது கஷ்டம்...சரி..சரி.. பயப்படாதே.. ஆப்ரேஷன் முடிஞ்சதும், 1 வாரம்
லைட்டா ரத்தப்போக்கு இருக்கும்..அப்புறம் அதுவே நின்றுவிடும்..’னு ஆறுதலா சொல்ல அந்தப்பொண்ணுக்கு, கண்ணுல தண்ணி தளும்பிக்கிட்டு வருது சார்..
பண்றதை பண்ணிப்புட்டு..இப்ப அழுது என்ன பிரயோசனம்..சரி..சரி..
டிரஸ்ச லூஸ் பண்ணிக்கிட்டு , அந்த டேபிள்ல் ஏறிப்படு’னு சொன்னதுதான் மாயம்.. கிளினிக்க விட்டு ஓடிப்போயிடுச்சு சார்...என்ற கண்றாவியோ..போங்க சார்..
பூக்கடை பக்கத்தில வாஸ்து சரியில்லையோ என்னமோ?
இல்ல டாக்டர் சார்..
எதுக்கும் பங்காருவை கூப்பிட்டு பாதபூசை பன்ணிப்பாருங்களேன்..- நான்
இனி அதுதான் பண்ணனும்..
( டாக்டர் தளர்ந்துபோய் திரும்பிப்போகிறார்..)
இதுவரை படிச்சுக்கிட்டு, ’பட்டாபட்டி ஒரு நாதாரி’னு நினைச்சவங்க, அப்படியே ஓடிப்போயிடுங்க..
Bye..Bye..
.
.
.
.
உரையாடல் தொடர்கிறது..
(வாங்க நல்லவங்களே.. இது உங்களுக்கு மட்டும்...)
.
.
.
.
.
ஓய் மன்னாரு..இதுக்கு காரணம் என்னவாயிருக்குமுனு நினைக்கிறே?...
தெரியலே தலைவா?..ஆனாலும் பாவம் அந்த பொண்ணு..
யோவ்..பன்னாடை..நாதாரி..முட்டாப்பயலே..மொள்ளமாறி..முடிச்சவுக்கி..முதல்ல உன்னோட கடைக்கு மேல,
“கண்,காது..மூக்கு நிபுணர்”னு தொங்கற, பழைய போர்டை தூக்கி வீசுயா..
இந்த பிரச்சனையே, மூலகாரணமே இதுதான்.. வெயிலை மறைக்க உனக்கு வேற வழியா இல்லை...
பாவம்.. காது வலினு வந்த பொண்ண கருகலைப்பு பண்ற இடத்துக்கு அனுப்பிச்சுட்டையே. .ங்கொய்யாலே...
.
.
’
தலைவா.. மன்னிச்சிரு தலைவா..அறியாம பண்ணிட்டே’னு மன்னாரு என்னோட கால்லவிழ ஓடிவர................ எனக்குதான் கால்ல விழந்து, கு@#$ண்டி காட்ற பயலுகனாவே அலர்ஜி ஆச்சே...நானும் ஓட ரெடியாக...
.
.
.
மக்கா.. நான் சொன்னது கரெக்ட்தானே...
.
.
.

டிஸ்கி..
என்னாது?....
தலைப்புக்கும் பதிவுக்கும் சம்பந்தமேயில்லையா..?
சார்..பூக்காரி மட்டும் என்னைப்பார்த்து கை காட்டாம இருந்திருந்தால்.. இது நடக்க வாய்ப்பேயில்லை சார்.. அவ்..
.
.
.