.
.
ஆணி-னு போர்ட் போட்டாலும், தொந்தரவு சுத்தி சுத்தி வரும் என்பது கலைஞர் மூலமாக கற்றுணர்ந்த உண்மை.
வேலையிடத்தில ஆணி.. சரி.. ஏதாவது பதிவ படிக்கலாம்னு போனால்...
போனேனா!!!.. அங்கதான் சனி சம்மணம் போட்டு உட்கார்ந்து இருந்தது......
நமது அண்ணன், அஞ்சா சிங்கம், திருவருச்செல்வன், சிந்தனைச்சிற்பி, படத்தைப்பற்றி அருமையா விமர்சனம் எழுதி, பார்க்காதவன் பைத்தியக்காரன் என்ற ரேஞ்சில விளாசி விளாசி எழுதியிருந்தார்...ஆமா.. இப்ப நான் எழுதியிருந்தாருனா சொன்னேன்.. சே..சே வரைந்திருந்தார்..
அண்ணன் சொன்னா.. ஆண்டவரு(?) சொன்னமாறினு நினச்சுக்கிட்டு, அப்பவே கிளம்பி தியேட்டருக்கு போனேன்.
ங்க்கொய்யா.. படமாய்யா அது.. சூப்ப்பரு... நான் கமல் ரசிகன்னு சொல்வதைவிட, வெறியன்னு சொல்லலாம். அப்பேர்பட்ட வெறியன், இப்பதான் சமீபமா..( ஹி..ஹி.. இங்கே சமீபம் என குறிப்பிட்டால், ரெண்டு அல்லது மூணு வாரம் என அர்த்தம் கொள்க.. மீறி, 1948 க்கு சென்றால்... சென்றால்....போய் தொலைங்கப்பா.. நான் சொல்ல வந்ததை சொல்லிட்டு, கிளம்பறேன்.. -பதிவர்)
சே...பார்த்தீங்களா?.. இதுதான் சார், எங்கிட்ட பிரச்சனை. இப்ப என்ன சொல்லிக்கிட்டு இருந்தேன்.. ஆங்.. சினிமா பற்றி... அதாவது, படம் சூப்பருங்க.. குடும்பத்தோட பாருங்க. முடிஞ்சா ப்ளாக்ல டிக்கெட்
வாங்கிப்பாருங்க.. காதலர்களுக்கு அருமையான படம். அட்டகாசமான லைட்டிங்.. தியேட்டரை சொன்னேன் . ( நல்லா இருட்டாத்தான் இருக்கு..பிரச்சனை வர வாய்ப்பில்லை.)
அதுல எனக்கு மிகவும் பிடிச்ச காட்சி என்னானா?.. பையன் காசை வாயில
போட்டுறுவான்.. கூடியுள்ள கூட்டம் பதைபதைக்குது. அடுத்து என்ன ஆகமோ-னு சீட் நுனியில ஒவ்வொருத்தையும் உட்காரவைத்த, ரவிக்குமாரை ( அதாம்பா.. படத்தோட டைரக்டராமாம்..) பாராட்ட வார்த்தைகளே இல்லை...
எனக்கோ, கண்ணுல தண்ணியா கொட்டுது. அடுத்து அந்த காசு வெளிய வரும்... தவறி த்ரிஷா வாயில விழும். கமல் சீறி பாய்ந்து, தலைகீழா புரட்டி(?), த்ரிஷா வாயில இருந்து காசை எடுப்பாருனு நினச்சுக்கிட்டு இருந்தனா.. ஹி..ஹி தூங்கிட்டேன் போல.
படம் முடிஞ்சு, மந்திரிச்சு விட்டமாறி வெளிய வந்தா ஒரே வெயில்.
ஆகவே மக்களே. மீதி படத்தை பார்த்து, புளங்காகிதம் அடைய, பதிவர்கள் சார்பில் வாழ்த்துக்குறேன்.
இப்படிக்கு
வெறுப்புடன் கமல் ரசிகன்.
டிஸ்கி 0..
எங்கப்பா..நான் பள்ளியில படிக்கிற காலத்தில, ’ஒழுக்கமா படிச்சு வாழ்க்கையில முன்னேற பாரு’ன்னு பிடரியிலே, அவ்வப்போது போடுவாரு. ஆனா, எங்கப்பனையும் மிஞ்சி, ஒரே போடா போட்டு, என் வாழ்க்கையில தீபம் ஏற்றிய ’அண்ணன் ரவிக்குமாருக்கு’ என் இரு கரம் கூப்பி நன்றியை தெரிவித்துக்கொண்டு, பொழப்ப பார்க்க ஆபீஸ் போகிறேன்..
நன்னி தலிவா..
இதேமாறி அடுத்த படத்தை சீக்கிரமா எடுத்து விடுங்க.. புண்ணியமா போகும்.. ஆங்.. எங்களுக்குத்தான்..
சிங்கப்பூர் டீவீயில், ”கமல், ரவிக்குமார், த்ரிஷா மற்றும் மாதவனு”க்கு, சிவப்பு கம்பள வரவேற்ப்பு கொடுத்ததை காட்டி( படத்தில் நடித்தற்க்கு.!!), என்னை மனிதனாக்கிய டீவி நிலையத்துக்கும் என் நன்னி.
”கண்ணால் காண்பதும் பொய்..
காதால் கேட்பதும் பொய்..
தீரவிசாரிப்பதும் பொய்தான்..”மறக்காம் படத்தை பாருங்க.. நாட்டை முன்னேற்றிச்செல்லுங்க...
டிஸ்கி 2.
ஆங்.. என்னா படம்னு சொல்லமறந்துட்டேன்.. ”மன்மத அம்பாம்”..
டிஸ்கி 3.
மார்க்கெட் போன நடிகனுக, நடிக்கவேண்டிய படத்தில்.. கமல்.. இதுல, வசனமும் அவரேதானாம்.. உம்...
”ஊறுகாய வெச்சு உண்டக்கட்டி சாப்பிட்டு
.
.
![]() |
விடு தலைவா !!!.. இப்ப எங்க மூஞ்சியும் இப்படிதான் இருக்கு.... |
.
.